அத்தியாயம் 1
தேனி மாவட்டம் கம்பம் இயற்கை எழில் கொஞ்சும் ஊராட்சி ஒன்றியம்.. இங்கே விவசாயம் பிரதான தொழில், கரும்பு திராட்சை என விவசாயம் செய்து வந்தனர். அழகான ஊர்.
கம்பத்தில் ஜமீன் வீட்டில் காலை திருமணம் என்பதால், உறவினர் கள் சொந்தங்கள் என அனைவரு ம் அந்த வீட்டில் கூடியிருந்தனர் வீடே விழா கோலமாய் இருந்தது. ஒரு பக்கம் விருந்து நடந்து கொண்டிருந்தது.
அதேநேரம் காலை 8 மணி கிராமத் து பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து கூட்டப்பட்டு இருந்த து ஒரு புறம் பெரிய வீட்டு ஆட்கள் என்று இருந்தனர் கோபத்துடன், அவனும் நின்றிருந்தான் கண்க ளில் ரௌத்திரத்துடன்.
எதிரே ஒரு பெண் அழுதபடி நின்று இருந்தாள். அவள் அம்மா அப்பா உடனிருந்தனர். சற்று தள்ளி ஊர் மக்கள் அதே பகுதியை சேர்ந்தவ னும் நின்றிருந்தனர். வயதான ஒருவர், என்ன சுந்தர மூர்த்தி உன் புள்ள, ஆதீஸ்வர் மேல புகார் வந்திருக்கு, அதுவும் பொண்ணு விஷயமா.. இன்னைக்கு உன் பிள்ளைக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன். அதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சு என்றார்.
இவன் தான் நம் கதையின் நாயகன் ஆதீஸ்வர். வெளிநாட்டி ல் படிப்பை முடித்தவன், சொந்த ஊரில் தன் அப்பா வைத்து செய்து, கொண்டிருக்கும் தொழி லை தன் திறமையால், விரிவாக்கி பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆறடி உயரம், பணக்கார மிடுக்கு, கூர் நாசி, அழுத்தமான உதடு, திரண்ட உடற்கட்டு என ஆணழக னாய் நின்றிருந்தான். வயது 30.
அவன் பக்கத்தில் அவனை கல்யாணம் செய்து கொள்ள போகும் அவன் மாமன் மகள் தர்ஷிகா நின்றிருந்தாள். எதிரே நின்று கொண்டிருந்த பெண்ணை கண்களால் எரித்த படி,
எதிரே அழுது, கொண்டிருந்தவ ளை பார்த்து, பஞ்சாயத்து தலைவ ர், என்னமா.. இளவஞ்சி வந்ததுல இருந்து அழுதுகிட்டே இருக்கியே என்ன நடந்தது என்று சொன்னா தானே.. மேற்கொண்டு பேச முடியும் என்றார்.
இளவஞ்சி, இவள் யாருமல்ல ஈஸ்வருடைய அப்பாவின் தங்கை மகள். நல்ல அழகான பெண் டீச்சராக இருக்கிறாள். அவளுக்கு அக்கா இருக்கிறாள். அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவள் அம்மா அழகம்மை.அவள் அப்பா சந்தானம். டீச்சராக இருந்து ரிட் டையர்டு ஆகிவிட்டார். இப்போது மளிகை கடை வைத்திருக்கிறார் சுருளிப்பட்டியில் வசித்து வருகிறார்கள்.
உடனே எதிர்புறம் இருந்தவன் என்ன தலைவரே, இப்படி கேக்குறீ ங்க…அவ பாதிக்கப்பட்டு வந்திருக் கா அவளோட ஆடையை பாருங்க அவள் கோலத்தை பாருங்க என்ன நடந்து இருக்கும்னு நமக்கே தெரியு து,, நீங்க என்னன்னா…..கேள்வி கேட்டுட்டு…., என்றான்.
அவன் அப்படி சொன்னதும்…, கோபம் கொண்ட ஈஸ்வர், டேய்!அன்பா வந்தேன் வை, உன் உசுரு உன்கிட்ட இருக்காது, என்று எகிறி கொண்டு சென்றான். தர்ஷிகாவும் அவன் அம்மா கனகவள்ளியும் அவனைப் பிடித்துக் கொண்டனர்
அன்பன், ஈஸ்வரை பார்த்து நக்கலாக சிரித்தான்.
அவன் அன்பன், உதயன்பன் தர்ஷிகாவின் அப்பா வழி தூரத்து சொந்தம் அவளுக்கு மாமன்முறை ஆனால் சொத்து பிரச்சனையில் பிரிந்தவர்கள் பகையாகி நிற்கிறா ர்கள். அவனுக்கும் சொத்துக்கு குறைவில்லை, கிராமத்து அழகன் தான்.
தலைவர், வஞ்சி.. என்னமா…., அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? வாயைத் திறந்து பேசு என்றார்.
வஞ்சி தேம்பியவள் ஐய்..யா நேத்து ராத்திரி வேலையை விட்டுட்டு வந்துட்டு இருந்தேன், யாரோ மாமா வை கொல்ல போறதா பேசிக்கிட் டாங்க.., நான் பயந்து போய் மாமா கிட்ட, விஷயத்தை சொல்லப் போ னேன். நான் அங்க போனதும், கதவை யாரோ.. வெளியே இருந்து பூட்டிட்டாங்க, ஐயா.. என அழுதவ ள், எவ்வளவு முயற்சி பண்ணியும் கதவை திறக்க முடியலைங்கயா …., காலையில, தான் வேலைக்கு வந்தவங்க கதவ திறந்து விட்டாங் க.., வேற ஒன்னும் நடக்கல, என கையெடுத்து கும்பிட்டாள் அழுது கொண்டே,
ஈஸ்வர் அவள் சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
தலைவர், என்னமா சொல்ற? யாராச்சு உன்ன மிரட்டினாங்களா இப்படி, பேச சொல்லி… என்றார்.
வஞ்சி ஐயோ!.. இல்ல… அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, ஐயா என்றாள்.
உதயன்பன் தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை இடித்தான். அவன் தலைவரே அந்த பொண் ணு தான், பெரிய குடும்பத்தை காப்பாத்த, என்னென்னவோ… சொல்லுதுனா, நீங்களும் சரியா விசாரிக்கலையே… இதோ இங்க நிக்கிறான் பாருங்க மாரி..
இவன் அவங்க ரெண்டு பேரும் தோட்டத்து வீட்டுக்கு போனதையு ம், தப்பு பண்ணதையும், அந்த பொண்ணு, அழுதுகிட்டே இருந்த தையும், பார்த்து இருக்கான். இவன் சுந்தரமூர்த்தி ஐயா தோட்டத் துல வேலை செய்றவன்,என்றவன் அவனுக்கு கண்காட்டினான்.
உடனே மாரி ஆமாங்கய்யா, ஆமா அவங்க ரெண்டு பேரும் தப்பு பண்ணத என் ரெண்டு கண்ணால பார்த்தேன். ஈஸ்வரய்யா அந்த பொண்ண மிரட்டின, சத்தம் கேட்டு ச்சு அந்த பொண்ணு வீட்டுக்கு போகணும்னு.. அழுததை என் காதல கேட்டேன், என்றான் தலை குனிந்து,
இதையெல்லாம் கேட்ட ஈஸ்வர் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான். கோவம் கண்ணை மறைத்து இருந்தது.
பஞ்சாயத்தில் ஒரே சலசலப்பு தலைவர், நீயே அங்க அந்த நேரத் துல இருந்த என்றனர். மாரி,ஐயா வாரம் ஒருத்தர்,தோட்டத்து வீட்ட காவல் காக்க போடுவாங்க, இந்த வாரம் என்னோட முறையா, நான் பொய் சொன்னா.., சுந்தரம் ஐயா கிட்டையே.., கேளுங்க, என்றான்.
தலைவர் என்னப்பா சுந்தரமூர்த்தி மாரி, சொல்றது உண்மையா.., என்றார்.
சுந்தரமூர்த்தி மௌனமாய் ஆம் என்றார்
அப்புறம், என்னப்பா… ஆதாரம் சாட்சி எல்லாம் ஈஸ்வருக்கு எதிரா இருக்கு. அந்த பொண்ணு நிக்கிற கோலத்தை பார்த்தாலே.., என்ன நடந்திருக்கும் என்று தெரியுது. அதனால பஞ்சாயத்து தீர்ப்பு என்னன்னா…, பாதிக்கப்பட்ட பொண்ணு கழுத்துல ஈஸ்வர் தாலி கட்டணும்.
இல்லன்னா, பஞ்சாயத்து வழக்குப் படி ஊரை விட்டு அவங்க குடும்ப த்தையே, 20 வருஷம் தள்ளி வைக் குறேன் .எந்த ஒரு நல்லது கெட்டது லையும், அவங்க குடும்பம் பங்கெ டுக்கக்கூடாது முக்கியமா குடும்ப சம்பந்தப்பட்ட எந்த தொழிலையும் நம்ம ஊர் மக்கள் வேலை செய்ய மாட்டாங்க, என தீர்ப்பு வழங்கப் பட்டது.
இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி.
கனகவள்ளி, உடனே கோவமாய் ச்சீ.. இவளா.., என் வீட்டு மருமக, இவளுக்கு, என்ன தகுதி இருக்கு என் பிள்ளையை கட்டிக்க. அன்னக்காவடி, குடும்பத்துக்கு ஜமீன் குடும்ப சம்மதம் கேக்குதோ! இதுக்கு நான் ஒருகாலம் சம்மதிக்க மாட்டேன் என்றார் ஆங்காரமாய்.
உடனே சுந்தரம் ஏய்! கனகா அமை தியா இரு, தப்பு பண்ணினது உன் புள்ள சும்மா எகிறிட்டு இருக்காத என்றவர்,
சுந்தரம் ஐயா, நான் பஞ்சாயத்துக் கு கட்டுப்படுறேன். என் புள்ள ஈஸ்வர், வஞ்சி கழுத்துல தாலி கட்டுவான், என்றவர் ஈஸ்வரை பார்த்தார்.
அவன் கண்கள் கோபத்தில் சிவந்து இருந்தது. கைகளை இறுக மூடியிருந்தான்
சுந்தரம் அவனிடத்தில் வந்தவர் ஈஸ்வரா!.. நீ என் மேல மரியாதை வச்சி இருக்கிறது உண்மைனா.. அந்த பொண்ணு கழுத்துல, இந்த தாலிய கட்டு, என்றவர் மஞ்சள் கோர்த்த தாலிக்கயிறை அவனிடம் நீட்டினார்.
அவனுக்கு, அவன் அப்பா மீது மிகுந்த மரியாதை உண்டு. அதை மனதில் வைத்து தாலிய கையில் வாங்கினான்.
கனகா, டேய்! ஈஸ்வரா வேணாம் டா… என்றார்.
தர்ஷிகா, ஈஸ்வர்… வேணாம்?… கட்டாதிங்க, எனக்கு நீங்க வேணும் என்றாள் அழுகையுடன்,
தாலியை வாங்கியவன் அவளை எரிக்கும் பார்வை பார்த்துக் கொ ண்டே அவளிடம் சென்றான்.
அவன் பார்வையில் பயந்த வஞ்சி இல்ல.. வேணாம்.. என கண்களால் கெஞ்சியபடி, பின்னால் நகர்ந்தா ள்.
அவள் பயத்துடன் பின்னால் நகர்வதை, கண்டவன் ஒற்றைக் கையால், அவளை பிடித்து நிறுத்தியவன், வேண்டா வெறுப் பாக தாலியை அவள் கழுத்தில் கட்டினான், முகத்தை வேறு பக்கம் திருப்பி.
உதயன்பனுக்கு உற்சாகம் தாளவி ல்லை. (எதுக்கு பயபுள்ள சந்தோ ஷப்படுது)
கனகா தன், நெஞ்சில் கை வைத்து க்கொண்டவர், ஈஸ்வரா…, நான் அவ்வளவு சொல்லியும், தாலிய கட்டிட்டல…, இனி, நீ எனக்கு புள்ளையே.. இல்ல நீ வாடி என தர்ஷிகாவை அழைத்துக் கொண் டு சென்று விட்டார்.
ஈஸ்வர் கல்லாய் இறுகி நின்றான். (என்ன நடந்தது நேற்று இரவு என்று பார்ப்போம் வாருங்கள்)
தொடரும்..
படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
super start sis
Thank you da❤️
Super sema super super super super super super super super super super super super super super super super
Thank you sis❤️
👌👌👌👌👌👌👌👌👌👌👌