ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 2

அத்தியாயம் 2

 வஞ்சி, இவள் கம்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள். பத்தாம் வகுப்பு பிள்ளைகளுக்கு சிறப்பு பாடம் எடுப்பதற்காக கடந்து சில தினங்களாகவே தாமதமாக பள்ளியில் இருந்து கிளம்புவாள் கூடவே அவள் தோழி பொன்னியு ம் வருவாள். 

இன்றும், அதேபோல் சிறப்பு வகுப் பை முடித்தவர்கள் பஸ்ஸில் ஏறி ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

பொன்னி, அடியே!.. இன்னைக்கு உன் மாமாவ பாக்கலயா டி ரொம்ப சோகமா… இருக்க… என்றாள்.

 வஞ்சி,ம்ச்… அதெல்லாம் ஒன்னும் இல்லடி டென்த் எக்ஸாம் வருது இல்ல, அதனால தான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு வேற ஒன்னும் இல்லை என்றாள்.

அடியே…, என்கிட்டேயே பொய் சொல்ற, பாத்தியா… நீ எதுக்காக சோகமா இருப்ப எதுக்கு சந்தோஷ மா இருப்பேன்னு, எனக்கு தெரியா ம இருக்குமா என்ன இன்னைக்கு காலையில இருந்து உங்க மாமாவ பாக்கல, அதனால.. வந்த சோகம் தானே.. இது என்றால் சிரித்துக் கொண்டே,

வஞ்சி, அடியே நீ அடி வாங்க போற ஒழுங்கா வந்துரு டைம் ஆச்சு என்றாள்.

வஞ்சி தினமும் தன் சுந்தரமூர்த்தி மாமாவோடு, தன் மாமன் மகன் ஈஸ்வரை தினமும் பார்ப்பாள். அவனைப் பார்த்ததும் வஞ்சி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியும்.

அவன் பேசுகிறான், திட்டுகிறான் இல்லை என்பதை மீறி அவளுக்கு அவனை பிடிக்கும். அவள் பார்க் கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டே திரிவான் ஈஸ்வர். 

 பஸ் ஸ்டாப் ஓட்டினாற் போல் டீக்கடை. இறங்கி பேசிக்கொண்டே டீ குடித்தவர்கள், வஞ்சி ஏய்.., பொன்னி இந்த சனிக்கிழமை பாடம் எடுக்க என்னால வர முடி யாதுடி என் அக்கா பையன் தினேஷ்க்கு இரண்டாவது பிறந்தநாள் 

 அதனால, நீயே.. என் வகுப்பு பிள்ளைகளையும் கொஞ்சம் பாத்துக்கடி என்றாள்.

பொன்னி, சரிடி அவனுக்கு என்னோட வாழ்த்துகளையும் சொல்லிடு என பேசிக்கொண்டே நடந்தனர். சிறிது தூரம் சென்றது ம்,பொன்னி விடை பெற்று பக்கத் தில் உள்ள கடைக்கு சென்று விட்டாள். 

இவள் மட்டும், நடந்து வந்து கொண்டிருந்தாள். லேசாக இருட்ட தொடங்கி இருந்தது.கொஞ்ச தூரம் வந்ததும் பேச்சு குரல் மரத்தின் பின்னாக இருந்து, 

 இன்னைக்கு நைட், அந்த ஈஸ்வர எப்படியாவது போட்டு தள்ளனும் டா.., ரெண்டு மூணு தடவை மிஸ் ஆயிடுச்சு..

 இந்த தடவை, விடக்கூடாதுடா.. என்றான். மற்றொருவன், ஆமாடா போன தடவை மிஸ் ஆனதுக்கே முதலாளி திட்டிட்டார். வெட்கமா போச்சு.., அதனால இந்த தடவை கண்டிப்பா சம்பவம் பண்றோம் என்றான்.

இதையெல்லாம் கேட்ட வஞ்சிக்கு உடல் நடுங்கி விட்டது பயத்தில்,  வாயை மூடி மூச்சை உள்ள இழுத்து கொண்டாள். 

வஞ்சி இல்ல… இல்ல…என் மாமாவு க்கு ஏதும் நடக்க விடமாட்டேன், என எண்ணியவள் அவன் தன்னை திட்டுவது, கேவலமாக பேசியது என எதையும் மனதில் கொள்ளாமல், முதலில் அவனை தேடி மில்லுக்கு ஓடினாள். 

 அங்கே அவன் இல்லை என்றதும் நெஞ்சை இறுக்கமாக பற்றி கொண்டவள், தோட்டத்து வீட்டை நோக்கி ஓடினாள் 

அவள் கணித்தது போல் தோட்டத் து வீட்டில் அவன் சத்தம் கேட்டது. வஞ்சியின் இதழில் சிரிப்பு. வேகமாக மூச்சு வாங்கியது. வரும் போதே தோட்டத்து வேலியில் அவள் ரவிக்கை, முனை பட்டு லேசாக கிழிந்து விட்டது. ஓடி வரும்போது இருமுறை விழுந்து விட்டிருந்தாள்.காற்றில் தலைமுடி கலைந்து ஓடி வந்து இருந்தாள்.

 யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டதும் சத்தம், கேட்ட திசை நோக்கி நடந்து வந்தவன் வஞ்சியை கண்டவன், ச் ச.. இவளா இந்த நேரத்துல எதுக்கு இப்படி ஓடிவரா என எண்ணிக் கொண்டே வீட்டு வாசலுக்கு வந்து விட்டான். 

வஞ்சியும் அவனைப் பார்த்ததும் மா…மா, மாமா… உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றால் மூச்சு வாங்க, 

ஈஸ்வர் முகத்தை உடனே உர்ரென வைத்துக் கொண்டவன் என்ன? என்ன விஷயம்?… என்றான் 

 வஞ்சி, அது வந்து, மாமா… நம்ம ரோட்டு மேல, ரெண்டு மூணு பேர் இன்னைக்கு உங்கள கொல்றதா பேசிக்கிட்டாங்க… மாமா. ஜாக்கிரதையா, இருக்க சொல்லி சொல்லலாம்னு ஓடி வந்தேன் என்றாள்.

அவள் அப்படி கூறியதும் ஹா, ஹா, என்ன காமெடி பண்ற என்ன வெட்ட என் ஊருக்கே வந்து இருக்காங்களாம். அவ்வளவு தில்லு இந்த ஊர்ல எவனுக்குடி இருக்கு என்றான் ஆங்காரமாய், 

வஞ்சி இல்ல.. மாமா.. அவங்க பேசிக்கிட்டே தான் பார்த்ததும் பயம் வந்துருச்சு. அதான் வந்தேன் என்றவள், மாமா ஓடி வந்ததுல ரொம்ப தாகமா.. இருக்கு கொஞ்சம் தண்ணி தர முடியுமா? என்றாள் அவனைப் பார்த்து 

அவனும் உள்ள வா என்றான் சலிப்பாய், உள்ளே போனவள் அவன் கொடுத்த தண்ணீரை குடித்தவள், தேங்க்ஸ் மாமா பார்த்து, இருந்துக்கோங்க என்றா ள்.

 ஈஸ்வர் ரொம்பத்தான் அக்கறை என சலித்தான். அவர்கள் இருவரும் வீட்டில் உள்ளே இருந்து வெளியே வரும் நேரம், யாரோ வீட்டை பூட்டி இருந்தனர். வஞ்சி வெளியே பூட்டும் சத்தம் கேட்டதும் ஐயோ! மாமா.. வெளியே யாரோ கதவை பூட்டிட்டாங்க… என்றால் அதிர்ச்சியாய்!… 

அவனும் ஓடிவந்து யாருடா அது டேய்! யாருடா வெளிய பூட்டுனது கதவை தொரங்கடா என்றான்.

வஞ்சி மாமா ப்ளீஸ் எப்படியாச்சும் கதவை திறந்து விட்டுடுங்க நான் வீட்டுக்கு போகணும் போகலனா பெரிய பிரச்சனை பெருசாகிறும் ஏதாச்சும் பண்ணுங்க என்றாள்.

இரவு ஏற்றும் கடைசியில் தேங்காய் லோடு என்பதால்  போனில் சார்ஜ் இல்லாததால், மோட்டார் ரூமில் சார்ஜ் போட்டு வைத்திருந்தான். இவன் கையிலும் போன் இல்லை ஈஸ்வர், இப்ப ஏன் அழுது சீன் போடுற, 

உன்கிட்ட ஒரே தொல்லையா… போச்சு உன்னை யார்? இங்க வர சொன்னது..ஹான்,என்ன பாத்து எனக்கு தெரியாதா!? எனக்கு மட்டும் ஆசையா? என்ன உன் கூட நையிட்டு தங்க… என்றான் எரிச்சலுடன் 

 வஞ்சி, மாமா… அது உங்கள காப்பாத்த,. ச்சீ வாய மூடு வாயைத் திறக்காத, உன்கிட்ட போன் இருக் கா.. என்றான் அவள் இல்லை என தலையாட்டினாள். 

 ஈஸ்வர் ஒரு பட்டன் போன் கூட உன்கிட்ட இல்லையா? என்றான் நக்கலாய், 

வஞ்சி, இல்ல மாமா அது தேவைப் படல…, அதான் வாங்கல என்றாள் தலை குனிந்து

ஈஸ்வர் வாங்க தேவை இல்லையா இல்ல,.. வாங்க பணம் இல்லையா என்றான் எகத்தாளமாய் 

அதே நேரம், அவள் வீட்டில் அவள் அம்மா என்னங்க… என்ன இந்த பொண்ணு இந்த நேரம் வர காணோம். 6:30 மணிக்கு எல்லாம் வந்துருவா என்னன்னு தெரிய லையே, நீங்க போய் ஒரு எட்டு பாத்துட்டு வாங்க.. என்றார்.

சந்தானமும் பதட்டமாய் கிளம்பியவர், அவளை தேடி சென்றார். ஊர் முழுவதும் தேடி கிடைக்காததால், இருவரும் ஒரே அழுகை வெளியே சொல்ல முடியாத நிலை. 

 அதேபோல், பெரிய வீட்டில் கனகா என்ன, தர்ஷிகா ஈஸ்வர என்ன இன்னும் காணோம் மணி 9 ஆயிடு ச்சு விடிஞ்சா அவனுக்கும் உனக்கு கல்யாணம். 

கொஞ்சமாச்சும், பொறுப்புனு ஒன்னு இருக்கா அவனுக்கு,போன் போட்டு பார்த்தியா எடுத்தானா என அவளிடம் கேட்டார்..

தர்ஷிகா, இல்ல அத்தை ஈஸ்வர் எடுக்கல.. நிறைய தடவை போன் பண்ணிட்டேன். ரிங் மட்டும்தான் போகுது, என்றாள். கனகா யோசனை உடன் தன் கணவரை நோக்கி சென்றாள்.

தொடரும் 

 

 

 

 

 

 

4 thoughts on “எனக்கென வந்த தேவதையே 2”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top