அத்தியாயம் 4
அவள் முடியை பிடித்து தூக்கியவ ன் “ஓ ” அன்னகாவடிக்கு என்ன கல்யாணம் பண்ற எண்ணமெல் லாம்… வேற வருமோ? என்றான் நக்கலாய்,
வஞ்சி உடனே வலிக்குது.. மாமா… விடுங்க.., அந்த மாதிரி நினைப்பு எனக்கு என்னைக்குமே இருந்ததி ல்லை என்றாள்.அவள் கூறியதில் சிறிது ஏமாற்றம் ஏற்பட்டாலும்,
அப்புறம், ஏண்டி.., என் தாலியை வாங்கின என்றான்.
எல்லாம் என் கெட்ட நேரம் மாமா உங்களுக்கு கல்யாணம்னு தெரிஞ் சு…, யாராச்சும் இப்படி.. பண்ணு வாங்களா? எனக்கு அந்த கெட்ட புத்தி இல்ல.., என்ன அப்படி வளர்க்கவும் இல்லை, என முழங்காலில் முகம் புதைத்து அழுதாள்.
அவள் பேசியதை கேட்டவன் என்னடி.., நடிக்கிற இங்க நின்னா உன்ன கொலையே பண்ணிடுவே ன்…, என வெளியே செல்லும்போது கதவை ‘டமார்’ என உடையும் அளவிற்கு சாத்திவிட்டு சென்றான்.
வஞ்சி தன் இரு காதையும் இறுக மூடி கொண்டாள்.அதன் பிறகு ஈஸ்வர் வீட்டிற்கு வரவில்லை.
அவன் குணம் தெரிந்த சுந்தர மூர்த்தி தான் வஞ்சிக்கு எல்லாம் செய்தார். வீட்டில் யாரும் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு விருந்தாளியாக கூட அவனை அங்கீகரிக்கவில்லை.
மறுநாள் காலைப் பொழுது, குயில்கள் கான இசையுடன் காலை பொழுது அழகாக விடிந்தது.
காலை முழிப்பு தட்டிய வஞ்சி அறையை சுத்தம் செய்தவள் அடுத்து, என்ன செய்வதென்று தெரியாமல் அறைகுள்ளயே இருந்தாள்.
மணி பதினொன்றை தொட்டிருந்த து காலை உணவை சுந்தரமூர்த்தி அவள் இருக்கும் அறைக்கு கொண்டு சென்றார் .
உடனே மாதங்கி, அண்ணி இது எங்கயாச்சும் நடக்குமா? வந்தவ என்னவோ பெரிய மகாராணியாட் டம், மேலயே இருக்கா உன் புருஷ ன் அவளுக்கு சோறு கொண்டு போறாரு. என்னதான் இருந்தாலும் சொந்த ரத்தம் ஆச்சே, ம்ம்… விட்டுக் கொடுப்பாரா என ஏத்தி விட்டார்
கனகா சொல்லவே வேண்டாம். எத்தனை நாளைக்கு நானும் பார்க்கிறேன். தனியா மாட்டாளா போயிடுவா.. என்றவள் சமையல் கட்டுக்கு சென்று விட்டார்.
அறையில் ஆள் வரவே சோபாவி ல் கால்களை குறுக்கி அமர்ந்திரு ந்தவள் சுந்தரமூர்த்தி பார்த்ததும் மாமா.. என சோபாவில் இருந்து இறங்கி நின்று கொண்டாள்.
சுந்தரம், வஞ்சி என்னம்மா… சாப்பிட கீழே வரல.. நேரமாச்சுனு நானே கொண்டு வந்துட்டேன் என்றார்
வஞ்சி, உங்களுக்கு எதுக்கு மாமா சிரமம் என்றாள்.
சுந்தரம், ஒரு சிரமமும் இல்லமா சாப்பிடுமா.. என அவள் கையில் உணவை கொடுத்தார். அவர் கொண்டு வந்த உணவை பார்த்தவள்,
அது வந்து, மாமா…, கீழ வந்து யார்கிட்ட, கேட்கிறதுன்னே…., தெரியல மாமா…, தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது என கூறினாள்.
சுந்தரம் அவள் தலையை வருடிய வர் இது உன் வீடு மா… உனக்கு எல்லா உரிமை இருக்கு எவ்ளோ நாள் ரூம்க்குள்ளவே இருப்ப வெளிய வந்து, எல்லாத்தையும் பொறுத்து, இந்த குடும்பத்தை வழிநடத்து. தப்பா இருந்தா கேளு இப்ப சாப்பிடு என்றார்.
மதியம் இறங்கி வந்து சாப்பிடுமா மாமாவுக்கு வயசாயிடுச்சு இல்லை யா மாடிஏற முடியாதுடா என்றவர் அவள் கையைப் பிடித்து ஒரு இனிப்பை வைத்தார்.
அவர் வைத்ததும் கைகளில் உள்ளதை பார்த்தவள் ஆச்சிரியத் தில் கண்களை விரித்து மாமா… என்றாள்.
சுந்தரம் என்னடா…, மாமா.., மறந்துட்டேன்னு நினைச்சிட்டியா என் குட்டி பொண்ணுக்கு வாங்க என்னைக்குமே.., மறந்தது இல்ல சரியா சாப்பிடு நான் வரேன் என்றவர் கீழே இறங்கினார்.
வஞ்சி கையில் இருந்த இனிப்பை வாயில் போட்டாள் அதன் சுவை யில் மயங்கியவள் ம்ம்… கொட்டி தின்றாள். அது வேறு ஒன்றும் இல்லை தேன் மிட்டாய் தான்.
அவளுக்கு பிடித்தமான ஒன்று எப்போதும் தேன்மிட்டை அவள் வாயில் இருக்கும்.
அதேநேரம் இரண்டு நாட்களாக ஈஸ்வர் வீட்டிற்கு வரவில்லை, கனகா ஒரே புலம்பல், ஒரே புள்ள கொத்தமல்லி கட்டு.., என் ராஜா.., இன்னும் வீட்டுக்கே வரலையே சாப்பிட்டானானு கூட தெரியலை யே.. என சத்தமாய் பேசிக்கொண்டு இருந்தார்.
சுந்தரமூர்த்தி இதையெல்லாம் கேட்டாலும் எதுவும் சொல்லவில் லை. இவ்வளவு நாள் இல்லாமல் வஞ்சியும், கீழே இறங்கி சுந்தர மூர்த்தி சொன்னதன், பெயரில் அன்றுதான் சமையலறை வந்து சுந்தரத்திற்கு தோசை சுட்டு போட்டுக் கொண்டிருந்தாள்.
கனகாவிற்கு இதை பார்க்க பார்க்க வஞ்சி மேல் வெறி வந்தது அங்கே உணவு மேடையில் தர்ஷிகா அவள் அம்மா அப்பா என அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
சுந்தரம் சாப்பிட்டதும் வஞ்சியிடம் நீயும் உட்கார்ந்து சாப்பிடுமா என்றார். அவர் சொன்னதும் அத்தனை பேரும் அவளை ஒரு பார்வை பார்த்தனர்.
வஞ்சி இல்ல.. மாமா நான் ரூமுக்கு போய் சாப்பிட்டுகிறேன் என அவள் உணவு எடுத்துக் கொண்டு மாடி ஏறினாள்
கனகா, உடனே ஒன்னும் இல்லாத வ, எல்லாம் என் வீட்ல ராஜாத்தி மாதிரி, உட்கார்ந்து ராஜ விருந்து சாப்பிடுகிறாளே.., என் பிள்ளை எங்கிருந்து கஷ்டப்படுதுன்னு தெரியலையே…, அந்த சோறு செமிக்குமா இவளுக்கு என நெட்டி பேசினார்.
அவர் அப்படி பேசியதில் வஞ்சி கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது கைகள் நடுங்கியது
தர்ஷிகாவும் அவள் அம்மா மாதங்கியும் சிரித்துக் கொண்டனர் கீழே குனிந்து, தர்ஷினி அப்பா ஏதும் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தார்.
சுந்தரமூர்த்தி, ஏய்.., கனகா அறிவு இல்ல உனக்கு, இவ்வளவு நேரம் நீ சாப்டியே.., அப்போ உனக்கு உன் பிள்ளை ஞாபகம் வரலையா, இல்ல கட்டுகிறேன்னு சொன்ன தர்ஷிக்கு ஞாபகம்…, வரலையா? அவள மட்டும் சொல்ற, பசின்றது எல்லாருக்கும் வரும்.சும்மா குத்தம் சொல்லிட்டு இருக்காத வஞ்சியை என்றவர்,
வஞ்சி நீ போம்மா போய் சாப்பிடு என்று அனுப்பிவிட்டார். அவர் கேட்டதில் இருவரும் திருதிருவன விழித்தனர்.
உண்மை தானே அக்கறை இருந்து இருந்தால் உணவு இறங்கி இருக்கா து அல்லவா வஞ்சி தன் நிலையை எண்ணி நொந்து கொண்டவள் அழுது கொண்டே மேலே சென்று விட்டாள்.
தொடரும்
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌