அத்தியாயம் 3
கனகவல்லி தன் கணவரிடம் சென்றவர் என்னங்க கொஞ்சம் இங்க வாங்க.. என்றாள். சுந்தர மூர்த்தி, என்ன? கனகு சொல்லு என்றவர் சற்று தள்ளி நடந்து போனார்.
கனகா, என்னங்க,மணி பத்துக்கு மேல ஆச்சு…, ஈஸ்வர இன்னும் காணோம் விடிஞ்சா கல்யாணம் எல்லாரும் அவன எங்க எங்கன்னு கேக்குறாங்க பதில் சொல்ல முடிய ல என்றார்
உடனே சுந்தரமூர்த்தி சரி இரு நான் போய் பாத்துட்டு வரேன் என்றவர் தன் ஆட்களை கூட்டிக் கொண்டு எல்லாஇடமும் தேடினார் இவர்கள் தோட்டத்து வீட்டுக்கு வரும்போது, அவர்களின் கெட்ட நேரம் என்னவோ, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. வந்தவர்கள் இருட்டைப் பார்த்து வந்த வழி திரும்பி விட்டனர் அவனை தேடாமல்
அதே சமயம், தோட்டத்து வீட்டின் உள்ளே மாமா.. மாமா.. எனக்கு பயமா இருக்கு. ப்ளீஸ்…ஏதாச்சும் பண்ணுங்களேன் என்றாள். அவன் கையைப் பிடித்துக் கொண்டு,
அவள் ஸ்பரிசம் பட்டதும் சில்லெ ன… உணர்ந்தவன் அதை தவிர்க் கும் பொருட்டு, சட்டென அவள் கையை உதறியவன், ஏய்.., இந்த தொட்டு பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம். போடி…,போய் தள்ளி நில்லு என்றவன் இருட்டில் தேடி மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தான்.
வஞ்சி அந்த மெழுகுவத்தி வெளிச் சத்தில் அழகாய் தேவதை போல் இருந்தாள்.ஒரு நிமிடம் அவளை யே, பார்த்தவன் சட்டுனு திரும்பிக் கொண்டான் தலைக்கோதி…, இருட்டில் இருமுறை இடித்துக் கொண்டதில், அவள் பொட்டும் கண் மையும் சட்டையில் ஒட்டிக் கொண்டு இருந்தது. அதை இருவ ரும் கவனிக்கவில்லை
வஞ்சி ஒரு ஓரமாக அமர்ந்தவள் அப்படியே உறங்கி விட்டாள். அவனும் வேறு வழி இல்லாத உறங்கி இருந்தான்.
காலை பொழுது விடிந்திருந்தது ஈஸ்வர் எழுந்தவன் கதவருகே போனான். சத்தம்கேட்டு வஞ்சியும் எழுந்து விட்டாள். ஈஸ்வர் கதவை திறந்த மாத்திரத்தில் கதவு உடனே திறந்து கொண்டது, அதை கண்ட வஞ்சி, அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.
ஈஸ்வர், என்ன அப்படி.. பாக்குற எனக்கு மட்டும் என்ன தெரியும். நைட்டு திறக்காத கதவை இப்ப திறக்கிறது, கோடி ரூபாய் கொடு த்தாலும், உன் கூட ஒரு நிமிஷம் கூட ஸ்டே, பண்ண மாட்டேன். அதுக்கெல்லாம் உனக்கு தகுதி தரா தரம் வேணும்.. என் கூட ஃப்ரெண்ட்ஷிப்.. வச்சுக்கறதுக்கே,
அது உன்கிட்ட கிடையாது, சோ அப்படி பாக்காம வீட்டுக்கு போய் சேரு என்றவன், விறு விறுவென நடக்க ஆரம்பித்து விட்டான். காலை தோட்டத்து வேலைக்கு வந்தவர்கள், இவர்கள் கோலத்தை பார்த்து, பெரிய வீட்டிற்கும் பஞ்சாயத்துக்கும் தகவல் சொல்லிவிட்டார்கள்.
இங்கே பஞ்சாயத்தில், அவளுக்கு தாலி கட்டியவன் யாருக்கு விருந் தோ என அவளை அங்கே விட்டு விட்டு சென்றிருந்தான். பஞ்சாயத்து கலைந்தது அனைவரும் சென்றிருந்தனர்
அழகம்மையும் சந்தானமும் வஞ்சியை பிடித்துக்கொண்டு அழுதபடி இருந்தனர் சுந்தரமூர்த்தி அவர்களிடம் வந்தவர், வஞ்சியின் தலையை வருடி கொடுத்தவர், அழகு…, நான் வஞ்சிய வீட்டுக்கு கூட்டிட்டு போறேன், இப்ப இவ என் வீட்டு மருமக என்றார்.
உடனே அழகு, அண்ணா.. அது… அண்ணி… என்றார்.
சுந்தரம் அதெல்லாம் நான் பாத்து க்கிறேன், பிரச்சனை பண்ணுவா தான். நான் எல்லாத்தையும் சரி பண்றேன். நீங்க இப்ப வீட்டுக்கு போங்க…., என்றவர், வஞ்சியை அழைத்துக் கொண்டு வீடு வந்தார்.
வீட்டினுள் நுழைந்ததும், கனகா ஆங்காரமாய், வந்துட்டா…., சீமை யிலே… இல்லாத சிறுக்கி… என் புள்ளையை, முந்தானைல முடிய, வக்கத்த சிறுக்கிக்கு .. என் புள்ள கேக்குதோ… எப்படி? என் புள்ள… உன் கூட வாழ்கிறானு…, நானும் பார்க்கிறேன்… என வஞ்சியை கரித்துக் கொட்டியவர், கோபமாய் அறைக்கு சென்று விட்டார்
தர்ஷிகாவும் அவள் அம்மாவும் வஞ்சியை முறைத்து விட்டு தங்கள் அறைக்கு சென்று விட்டனர்.
வஞ்சி, அழுதுக் கொண்டே இருந் தாள். சுந்தரமூர்த்தி அவ அப்படி தான். நான் பார்த்துக்கிறேன். நீ மேல போ…மா.. என்றார்.
வஞ்சி, பயந்தவள் மா..மா அவரு நீ போம்மா போய் பேசு நான் வரேன், என்றவரின் பேச்சைக் கேட்டு மாடிப்படியில் காலை வைத்தாள்.
மாடியில் ஈஸ்வர் அறையில் பொருட்கள் உடையும் சத்தம் பயங்கரமாக…, கேட்டது. வஞ்சி பயந்துவிட்டாள்.
வஞ்சி மாமா.. நான் போகல, அவர் ரொம்ப கோபமா இருக்காருன்னு நினைக்கிறேன். நான் என் வீட்டுக் கே… போறேன் என அழுதாள். சுந்தரம் பெருமூச்சு விட்டவர், சரி வா.. பாட்டி ரூம்ல கொஞ்ச நேரம் இரும்மா.., அப்புறம்,அவனுக்கு கோவம் குறைந்ததும் போலாம் என்றார்.
வஞ்சி, ஆசுவாசப்படுத்தியவள் இல்ல.. மாமா.. எப்ப போனாலும் அவரை பார்த்து தானே, ஆகணும். நான் மேல போறேன் என்றவள் சுந்தரமூர்த்தி எவ்வளவு சொல்லி யும் மேலே சென்றாள்.
அதற்கு முன் பாட்டி அறைக்கு அவளை அழைத்துச் சென்றவர் முகம் கழுவி உடைமாற்றி அனுப்பி வைத்தார்.
வஞ்சி பயந்தபடி மாடி ஏறினாள் கதவின் மேல் கை வைத்தாள். கதவு தானாக திறந்து கொண்டது உள்ளே எல்லா பொருட்களும் சிதறி உடைந்து இருந்தது. நடுக்க த்துடன் உள்ளே சென்றாள்..
அங்கே, ஈஸ்வர் கட்டிலில் அமர்ந்து இரு கைகளையும், ஊனி மூச்சு வாங்க அமர்ந்திருந்தான். அவனிடத்தில் உஷ்ணம் மூச்சு வெளிப்பட்டது.
தயங்கி.. தயங்கி.. உள்ளே அடி எடுத்து வைத்தாள்.ஈஸ்வர் அங்கே நில்லு….டி, இன்னும் ஒரு அடி…. எடுத்து வச்சாலும்.. உன்ன கொன்னுடுவேண்டி.என்றான்
அவன் அப்படி சொன்னதும் வஞ்சி பயத்தில் நடுங்கி அவனை பார்த்தாள். அவன், கண்கள்… சிவந்து வேட்டையாடும், ஓநாயின் கண்களைப் போல அவளை கொல்லும் வெறியில்,பளபளத்த து.
ஈஸ்வர்,மெதுவாக எழுந்தவன், கண்களில் வெறியுடன், அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக நடந்து வந்தான். வஞ்சி கண்களி ல், மிரட்சியுடன், அது மா…மா நான் என்றபடி பின்னாலே நகர்ந்து சென்றாள்.
ஒரு கட்டத்தில் சுவற்றில் மோதி கலக்கத்துடன் அவனை ஏறிட்டா ள். வந்தவன் ஏன்..? இப்படி!?… பண்ணின.. யார்? சொல்லி இப்படி பண்ணின.. சொல்லு.. சொல்லு.. என்றான் ஆங்காரமாய்…
வஞ்சி, மாமா.. உங்கள காப்பாத்த என சொன்ன அடுத்த நொடி அவள் கழுத்தைப் பிடித்து சுவற்றோடு தூக்கி இருந்தான்.
ஈஸ்வர் ஏய்! பொய்…. சொல்லாத பொய்… சொல்லாத…. என்றவன் இன்னும் அவளை தூக்கினான்.
வஞ்சி, மா…மா என்ன.. விடு..ங்க விடு…ங்க என கண்கள் சொருக ஆரம்பித்தாள்.
போன் அடிக்கும் சத்தம் கேட்டு சுயநினைவு வந்தவன், அவளை அப்படியே தொப்பென கீழே விட்டான். கீழே.. விழுந்தவள் தொண்டையை செருமியவள் லொக்.. லொக் என இரும்பினாள்.
அங்கிருந்த பொருளை காலால் எத்தியவன், ஏய்! எனக்கு உன்ன பிடிக்காதுன்னு தெரியும்ல.. உன்னையும் பிடிக்காது உன் குடும்பத்தையும் பிடிக்காது. என் அப்பாக்காக.. தான், அங்க உன் வீட்டுக்கு வெளியில் வந்துட்டு போவேன்.
வஞ்சி குரலை, செருமியவள் எனக்கும்.. உங்களை கல்யாண கட்டிக்கணும்னு எண்ணமெல்லா ம், இல்ல. உங்கள காப்பாற்ற தான் வந்தேன். இப்படி நடக்கும்னு…., நானும் எதிர்பார்க்கல.. என இரும்பினாள்.தொண்டை பிடித்து க்கொண்டு…
அதில் கோபம் கொண்டவன் அவள் முடியை பிடித்து தூக்கினான்.
தொடரும்
அய்யோ பாவம் வஞ்சி🙁💝💝💝💝💝
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌