ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 8

அத்தியாயம் 8

ஈஸ்வர் வஞ்சி திருமணம் முடிந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. ஈஸ்வரி பார்க்க அவன் நண்பன் ஆகாஷ் வீட்டிற்கு வந்திருந்தான். அவனும் தொழிலதிபர் தான் கோடீஸ்வரன். மாநிறம் 

ஈஸ்வரை பார்த்ததும் ஆகாஷ் கட்டிப்பிடித்து  தன் அன்பை  வெளிப்படுத்தினான். ஆகாஷ் சென்னையில் இருக்கிறான். ஆகாஷ்க்கு ஈஸ்வர் திருமண விஷயம் தெரியாது. 

அன்று சுந்தரமூர்த்தி வெளியே சென்றிருந்தார். ஆகாஷ் என்னடா மச்சான், எப்ப கல்யாணம் பண்ண போற., ஏதோ பிரச்சனைன்னு சொன்னியே, solve பண்ணி ஆச்சா என்றான்.

 ஈஸ்வர் சால்வ் பண்ணிடலாம் மச்சான். உனக்கு எப்ப மச்சான் கல்யாணம் என்றான்.

ஆகாஷ் அம்மா பொண்ணு பாத்து ட்டு, இருக்காங்க டா. அம்மா.. கொஞ்சம் டிரெடிஷனலா பொண் ணு எதிர்பார்க்கிறாங்க, அதனால அவங்க இஷ்டமா பண்ணட்டும்னு விட்டுட்டேன், மச்சான் என்றான்.

அப்படியா மச்சான் சீக்கிரமா நல்ல விஷயத்தை சொல்லு என்றவன் அதன்பிறகு, இருவரும் பிசினஸ் விஷயமாக பேசிக் கொண்டனர்.

ஈஸ்வர், வா மச்சான் சாப்பிடலாம் என, ஆகாஷை அழைத்துக்கொ ண்டு, உணவு மேடை சென்றான். அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். அதே நேரம், வஞ்சியும் உணவைக் கொண்டு வந்து வைத்தாள்.

அவள் தான் அனைவருக்கும் உணவை பரிமாறினாள்.ஆகாஷ், அவனுக்கு பரிமாற வரும்போது தான், அவளை நிமிர்ந்து பார்த்தா ன், பார்த்தவன் ‘வாவ்’ வாட்ட பியூட்டிஃபுல் கேர்ள் என்றான் சத்தமாக, அனைவரும் அவனை பார்த்தனர். 

 ஆகாஷ், மச்சான்! யாருடா? அந்த சின்ன பொண்ணு அழகா இருக்கா நான் இவள உங்க வீட்ல இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே? நான் இவள ஒரு போட்டோ எடுத்து க்கிறேன். அம்மாகிட்ட சொல்லி இந்த மாதிரி பொண்ண பாருங்க னு, சொல்லப் போறேன் என்றவன் தன் போனை கையில் எடுத்தான்.

உடனே தர்ஷிகா அவளை மட்டம் தட்ட நினைத்தவள். ஏ ‘ஹாய்’ ஆகாஷ், உன் டேஸ்ட் ஏன் இவ்ளோ மட்டமா இருக்கு.  போயும் போயும் ஒரு  வேலைக்காரியை போய், இப்படி புகழ்ற, அவளே ஒன்னும் இல்லாதவ, அவளை கட்டி நீ என்ன பண்ண போற, உன் ஸ்டேட் டஸ் என்னன்னு தெரிஞ்சு தான் பேசுறியா? என்றாள்.

 ஈஸ்வரும், கனகாவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக யாருக்கு, விருந்தோ… என சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 

ஆகாஷ் ஏன் அவர்களை இப்படி பேசுறீங்க என்றவன் அப்போது தான் அவள்,கழுத்தைப்பார்த்தா  ன். மஞ்சள் தாலி, ஓ கல்யாணம் ஆயிடுச்சா… இந்த சின்ன பொண் ணுக்கு என்றான். 

 மாதங்கி, உடனே ஆமா தம்பி இந்த வேலைக்கார கழுதைக்கு கல்யா ணம், ஆகி புருஷன் விட்டுட்டு ஓடி போயிட்டான். நாங்க தான் இவளு க்கு, அடைக்கலம் கொடுத்து இருக் கோம் என்றார் வன்மத்துடன், 

மாதங்கி இப்படி சொன்னதும், ஈஸ்வர் மாதங்கியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான். மாதங்கி நடுங்கி விட்டார் அவன் பார்வை யில், பின் எப்போதும் போல் சாப்பிட ஆரம்பித்தான்.

சுந்தரமூர்த்தி வீட்டில் இல்லாதது இவர்களுக்கு வசதியாக போய்விட் டது. இவர்கள் இப்படி பேசியதும் வஞ்சிக்கு, அழுகை வந்துவிட்டது. 

கனகா ஏய்! என்ன மசமசனு நிக்கு ற,, போய் வேலையை பாரு, என இன்னும் தன் பங்கிற்கு கத்தினார் அதில் வஞ்சி அழுதேவிட்டாள். அழுது கொண்டே உள்ளே சென்று விட்டாள் தர்ஷி மாதங்கி சிரித்துக் கொண்டனர் நக்கலாய்,

ஆகாஷ், டேய், மச்சான் அந்த பொண்ணு அழுதுட்டே போகுதுடா என்றான்.  ஈஸ்வர், ம்ம்ச்.. அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற ஆகாஷ், அவ அழுதா சமாதானம் பண்ண சொல்றியா?

நீ சாப்டியா வா போகலாம் என்றா ன்.  இதையெல்லாம் உள்ளே இருந்து வஞ்சி கேட்டு ஓ வென அழுதாள். சுந்தரமூர்த்திக்காக செய்து சாப்பிட்டவள் தன்  அறைக்கு சென்றுவிட்டாள் ஒரு முடிவுடன்,

ஆகாஷ் கிளம்பும் போது அவளி டம் தன் விசிட்டிங் கார்டுயை கொடுத்தவன், உனக்கு உதவி தேவைபட்டால், எனக்கு கால் பண்ணு வஞ்சி என்றவன் சென்று விட்டான்.

மாலை சுந்தரமூர்த்தி வந்தார் அவரிடம் சிறிது நேரம் பேசியவள் தன் அறைக்குள் சென்று அடைந் து விட்டாள். சுந்தரமூர்த்தி இடம் வேலையால் ஒருவர் நடந்ததை கூறுனார் அதைக் கேட்டவர் கொதித்து எழுந்தார்.

 வஞ்சியிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை, இரண்டு நாள் கழித்து வஞ்சுக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி வைக்கப்பட் டது.

அதே நேரம், அறையில் தர்ஷிகா, ஈஸ்வர் என்னது இது? ஒருமுறை தாலி கட்டினா போதாதா அவளுக் கு, திரும்பவும் எதுக்கு புது தாலி போடுறீங்க? அவளுக்கு டிவோர்ஸ் கொடுக்கிறேன்னு சொன்னீங்க இல்ல…, அப்புறம் ஏன் இப்படி பண்றீங்க? உங்கள நம்பி இருக்க எனக்கு என்ன பதில், என நீலி கண்ணீர் வடித்திருந்தாள்.

மாதங்கியும் சேர்ந்து நடித்து அனைவரும் மூளை சலவை செய்து டிவோர்ஸ் பேப்பர் ரெடி செய்து விட்டனர். 

இன்று வஞ்சிக்கு ஒன்பது பவுனில் தாலி செய்யப்பட்டது. பெரியவர்க ளால் ஆசிர்வதிக்கப்பட்டு, ஈஸ்வர் மூலம்,அவளுக்கு தாலி போடப்ப ட்டது இரண்டாம் முறை. 

அவன் அவளை பார்க்கவே இல்லை. கனகா ஏன் இத்தனை பவுன் என்று கேட்டதற்கு, என் கடமை, அவள் உரிமை என்றதோ டு, முடித்துக் கொண்டார் சுந்தரம்.

நிகழ்ச்சி முடிந்த அனைவரும் சென்று விட்டனர்.ஈஸ்வரருக்கு கோபம் தீரவில்லை, வஞ்சி அவள் அறையில் அவள் கழுத்தில் போட்ட தாலியையே பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களில் கண்ணீர்.

ஈஸ்வர் அறையில் கோபமாக நடந்துகொண்டிருந்தான்.அடிக்கடி கோவத்தை அடக்க தலைக்கோதி, கொண்டு இருந்தான்.

ஏனெனில் இனி ஈஸ்வரும் வஞ்சி யும், ஒரே அறையில் தங்க வேண்டு ம், என்று சுந்தரத்தின் உத்தரவு வஞ்சிக்கு இதில் ஒரு துளியும் உடன்பாடு இல்லை. சுந்தரத்திற்கு ஒன்றாக இருந்தால் ஒரு பிணைப் பு வரும் என்ற எண்ணம்.

இரவு 9:00 மணி, வஞ்சி அவன் அறையில் நுழைந்தாள். அவள் உள்ளே நுழைவதை கண்டவன் அவளை பார்வையால் எரித்து விட்டு, பால்கனியில் போய் நின்று கொண்டான். 

வஞ்சி அவன் பார்வையில் பயந் தாலும், ஒரு முடிவெடுத்தவனாய் குரலை செருமியவளாய் உங்க கிட்ட,கொஞ்சம்பேசணும் என்றா ள்.

ஈஸ்வர் திரும்பவே இல்லை, வஞ்சி இல்ல,நாம.. பிரிவதை பத்தி பேச ணும் என்றாள். 

ஈஸ்வர்,உடனே திரும்பி கண்க ளை சுருக்கி, அவளை பார்த்தான். வஞ்சி தயங்கியவளாய் உங்களுக் கு, என்ன பிடிக்காதுன்னு தெரியும் இப்ப கூட, நான் உங்க கூட தங்க வரல. மாமா மனசு புண்படும்னு… தான் வந்தேன். நான் பேசுறது கூட உங்களுக்கு வெறுப்பா தான் இருக்கும். ஆனா… கொஞ்ச நேரம் மட்டும் பொறுத்துக்கோங்க… பேசி ட்டு போயிடுறேன் என்றாள்.

ஈஸ்வர், எதுவும் சொல்லவில்லை வஞ்சி, நான்.. நாம.. பிரிஞ்சிடலாம் டிவோர்ஸ் அப்ளை பண்ணிடுங்க. பிடிக்காத வாழ்க்கையை வாழ வேண்டாம். மியூச்சுவல் கன்செர்ன் ல போனா சீக்கிரம் கிடைச்சிடும் கேள்விப்பட்டேன். பேப்பர் ரெடி பண்ணிட்டு,வந்ததும் சொல்லுங்க  வந்து சைன் போடுறேன், என அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் கண்கள், என்ன கூறியதோ உடனே, இல்ல கண்டிப்பா இந்த விஷயம் மாமாவுக்கு தெரியாமல் பார்த்துக்குவேன். 

டிவோர்ஸ் கிடைச்சதும் மாமா கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சு ட்டு நானே போயிடுவேன் என்றவ ள், அதுவரைக்கும் நான் ஸ்கூல் வேலைக்கு போக அனுமதிக்கனும் என்னால உங்களுக்கு எந்த பிரச்ச னையும் வராது. நான் இங்கே தங்க ல, மாமா கிட்ட சொல்லிக்கிறேன் என்றவள், 

திரும்பியவள், அங்கு போடப்பட்ட டீப்பாயில் இடித்துக் கொண்டாள் அப்போதுதான் கவனித்தாள். அங்கே மேஜையில் டிவோர்ஸ் பேப்பர் இருந்தது. ஒரு நொடி கண்களில் அதிர்ச்சி, ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாதவள்,

ஒருமுறை இழுத்து பெருமூச்சு விட்டவள், டிவோர்ஸ் பேப்பரை திறந்தவள், தான்போட வேண்டிய அனைத்து இடத்திலும் மடமடவெ ன, கையெழுத்திட்டவள் கண்ணீ ருடன், எழுந்தாள். 

அவள் கையெழுத்து போடும்போ து, அவன் காலை அணிவித்த தாலி வெளியே வந்து விழுந்தது. ஒருமுறை அவளையும் தாலியை யும் பார்த்தவன் திரும்பிக் கொண் டான்.

 அவனை ஒரு முறை கண்களில் நிரப்பிக் கொண்டவள் அடுத்து போய் நின்றது, சுந்தரமூர்த்திடம்.

 

தொடரும் 

 

 

 

 

 

10 thoughts on “எனக்கென வந்த தேவதையே 8”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top