ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 11

அத்தியாயம் 11 

இன்று காலையிலேயே சுந்தர  மூர்த்தியிடம் பேசிக் கொண்டிருந் தாள் வஞ்சி, சுந்தரம், என்னம்மா அவ்வளவு தூரம் தனியா எப்படி உன்னை அனுப்புறது வேண்டாம் வரலன்னு.. சொல்லிடு என்றார். 

 வஞ்சி,மாமா..நான் அங்கெல்லாம் போனதே இல்லை.. பிள்ளைங்க கூட தானே மாமா, போறேன். ஒரு நாள்ல திரும்ப வந்துருவேன் என்றாள். 

அதே நேரம் ஈஸ்வர் வந்து அமர்ந் தான். தன் தந்தையை பார்த்தான். குற்றாலம் கூட்டிட்டு போறாங்க ளாம் பா ஞ்சி ஸ்கூல்ல. ஒரு நாள் போய்ட்டு வரவானு பர்மிஷன் கேட்கிறா என்றவர், 

 நான்தான், போக வேணாம்னு.. சொல்லிட்டு இருக்கேன் என்றார். வஞ்சி அமைதியாக இருந்தாள்.

 தர்ஷிகா, வந்தவள் யார் இவளுக் கு, தண்ட செலவு அழுறது. என் ஈஸ்வர்தான் கொடுக்கணும். அதனால, வேணாம்னு சொல்லுங் க ஈஸ்வர் என்றாள்.

உடனே வஞ்சி அவளுக்கு பதில் சொல்லாமல் மாமா எனக்கு யாரும் காசு எல்லாம் தர வேணாம் என் கிட்டயே இருக்கு போக அனுமதி மட்டும் தந்தால் போதும் என்றாள் அவர்கள் பக்கம் திரும்பாமல், 

 அவள், தன் காசை வேண்டாம் என்றதும், ஈஸ்வருக்கு இன்னும் கோபத்தை கொடுத்தது வஞ்சி மேல்,

சுந்தரமூர்த்தி,  சரிமா பார்த்து பத்திரமா போயிட்டு வா என்றார். வஞ்சி, அவரை லேசாக அணைத் து,தோள் சாய்ந்து ரொம்ப தேங்க்ஸ் மாமா என்றாள்.

சுந்தரம் சிரித்தவர் இன்னும் சின்ன பொண்ணாவே இருக்குடா நீ என்றார். 

ஈஸ்வர், மனதில் என்ன?!.., அவ சின்ன பொண்ணா! என்றவன் பார்வை அவளில் எங்கெங்கோ சென்றது இதுவரை தர்ஷிகாவிடம் கூட, அவன் பார்வை எல்லை மீறியது இல்லை. ஆனால், வஞ்சி யிடம், கண்கள் தாராளமாக உலா வந்தது அவள் உடலில். 

 ஆனாலும், சிறு கோபம் தன்னிடம் அவள் அனுமதி கேட்கவில்லை என, ( அவன் மனசாட்சி ஏம்பா நீ பீல் பண்ற? உனக்கு தான் அவளை பிடிக்காதுல, அப்புறம் ஏன்பா அனுமதி கேட்கணும்னு எதிர்பார்க்கிற என்றது )

தன் மனசாட்சியை, அதட்டியவன் வேலைக்கு சென்று விட்டான். அவள் ஊருக்கு கிளம்பி வெளியே வரும்போது, தர்ஷிகா அவன் தோளில் தொங்கிக் கொண்டு ஏதோ கேட்டுக் கொண்டிருந்தாள்.

வஞ்சியை, பார்த்ததும் இன்னும் நெருக்கமாக நின்று கொண்டு, ஈஸ்வர் என்னை பாரிஸ்க்கு கூட்டிட்டு போங்க. அப்புறம் நான் பிரண்ட்ஸ், கூட  ஷாப்பிங் போறே ன். கேஷ் அக்கவுண்ட்ல போட்டு விடுங்க,… என குழைந்தாள்.

ஈஸ்வர்,ம்ம்..மட்டும் கொட்டியவன், பெட்டியோடு வரும் வஞ்சியை பார்த்தான்.

தர்ஷி பேசுவது, வஞ்சி காதில் விழத்தான் செய்தது. ஆனால் எதையும் கண்டுகொள்ளவில்லை 

வஞ்சி தன் மாமனிடம் வந்து நின்றவள், மாமா கிளம்புறேன் என்றாள்.சுந்தரம் பணம் இருக்கா வஞ்சி, மாமா கிட்ட பொய் சொல்ல ல இல்ல என்றார்.

அதில் சிரித்தவள், அச்சோ! மாமா.. பணம் இல்லனா.. என் மாமா கிட்ட உரிமையா வாங்கிக்க போறேன். தேவைக்கு இருக்கு மாமா.. என்றவள் விடை பெற்று சென்று விட்டாள். 

அவள் செல்லும்போது ஈஸ்வரரை திரும்பி கூட பார்க்கவில்லை. அதில் கடுப்பாகி,போகிற அவளை யே…,பல்லை கடித்து பார்த்து இருந்தான். ( நீ ஏம்பா டென்ஷாகுற உனக்கு தான் அவளை பிடிக்காதே அவ ஏன் உன் கிட்ட சொல்லிட்டு போகணும் என்றது அவன் மனசாட்சி)

போடி போ இங்கதானே திரும்ப வந்தாகணும் அப்ப பார்த்துக்கிறே ன் உன்னை என மனதில் சொல்லி க் கொண்டான்.

அவள் போன இரண்டு மணி நேரத்தில், அவன் நண்பன் ஆகாஷ் வீட்டுக்கு வந்திருந்தான். 

 ஆகாஷ், ஈஸ்வரோடு பேசிக் கொண்டிருந்தாலும், கண்கள் சமையலறையில் தான் இருந்தது. பேசுவதும், அடிக்கடி திரும்பி பார்ப்பதுமாக இருந்தான். 

 ஈஸ்வர், என்னடா? யாரையோ தேடுறனு தெரியுது. எல்லாரும் இங்கதான் இருக்கோம் பின்ன யாரு தேடற? என்றான்.

அப்படி கேட்டதும், ஆகாஷ் அசடு வழிந்தவன், அது இல்ல மச்சான். ஒரு சின்ன பொண்ணு, இங்க இருந்தாலே அவளுக்கு கூட கல்யாணம் ஆகி.., புருஷன் விட்டு போய்ட்டான்னு சொன்னீங்களே? 

 அந்தப் பொண்ண தான், மச்சான் காணலைனு, தேடினேன் என்றான் வெட்கத்துடன்,

 ஈஸ்வர், அவன் அப்படி கூறியதும் பல்லை கடித்தவன், டேய்.. ஆகாஷ் அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு தெரியுமில்ல…என்றான். 

ஆகாஷ், ஆனா புருஷன் தான் விட்டுட்டு போயிட்டானே!?… அதனால?…

 ஈஸ்வர், அதனால?…

ஆகாஷ், அம்மா கிட்ட சொல்லி பேசலாம்னு இருக்கேன்டா என்றா ன், திரும்ப சமையல் அறையை பார்த்து.

ஈஸ்வர் தன் கையை இறுக மூடித் திறந்தவன், அவ அவளோட புருஷனோட ஊருக்கே போயிட்டா என்றான் அழுத்தமாய்.

ஆகாஷ், அதிர்ச்சியுடன், என்ன? ஊருக்கு போய்ட்டாளா? என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல என்றான்.  

 ஈஸ்வர் டேய்! அவ ஏண்டா உன் கிட்ட சொல்லணும்,  இடியட் என்றான்.

ஆகாஷ் வஞ்சிக்கு விசிட்டிங் கார் டு, கொடுத்தது இங்கு யாருக்கும் தெரியாது. 

 ஆகாஷ், ஆமால சாரி மச்சான் அந்த பொண்ணு எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு.. அதான் கொஞ் சம், எமோஷனல் ஆகிட்டேன். என்றவன் கிளம்பி விட்டான்.

இங்கே,  ஈஸ்வருக்கு இருப்பு கொள்ளவில்லை. கோபத்தை தொடையில் குத்தி  குறைத்துக் கொண்டான். இதையெல்லாம் கவனித்த மாதங்கி,ஈஸ்வர் புதிதாக வஞ்சிக்காக கோவப்படுவதை பார்த்தவர்,இதை வளர விடக்கூடா து, என எண்ணியவர், ஒரு திட்டம் தீட்டினார்.

 இரண்டு நாள் கழித்து, வீடு வந்து சேர்ந்தாள் வஞ்சி, வந்து எல்லா வேலைகளையும் முடித்தவள் அப்போதுதான் சென்று படுத்தாள் 10:30 மணி அளவில் வீடு வந்து சேர்ந்தான் ஈஸ்வர். கீழே, அவள் அறையில், வெளிச்சம் இருப்பதை பார்த்தவன், வாட்சில் மணியை பார்த்துக்கொண்டான். 

இங்கே தர்ஷி, அறையில் மாதங்கி தர்ஷி, இப்படியே விட்டா நம்ம ஒன்னும் இல்லாம போயிடுவோம். இந்த வீட்ல… நம்மளால வாழ முடியாது. இந்த பால்ல வசிய மருந்து கலந்திருக்கேன்.போய் ஈஸ்வர்க்கு கொடு. அப்புறம், பாரு அவளை விரட்டிட்டு உன்னைத் தான் கட்டிக்குவாரு….மாப்ள.இதை காட்டியே பாதி சொத்தை எழுதி வாங்கிடுவேன் என்றார். குரூரமாய்..  

தர்ஷி, மம்மி… இது ஒர்க்கவுட் ஆகுமா ? ஈஸ்வர், தானா… வந்து என்ன  ஹக் பண்ணது கூட இல்ல நானா தான் போய் ஈஸ்வர கட்டிக் குவேன் இப்ப.. இப்ப நான் போய் எப்படி என்றாள்.

 மாதங்கி, அடியே.. நீ போய் கொடு மத்ததெல்லாம் தானா நடக்கும் என்றவர், அவளிடம் பாலை கொடுத்து அனுப்பினார்.

 அதே நேரம், அவளுக்கு போனில் ஒரு வாய்ஸ் மெசேஜ். திறந்து யார் என்று பார்த்தாள்.அது அன்பன் தான். 

 ஹாய் ஜாங்கிரி, என்னடி..பண்ற தூங்கிட்டியா? மாமாவுக்கு உன் ஞாபகமாக இருக்கு,.. தினமும் கனவுல உன் கூட குடும்பம் நடத்தி ட்டு இருக்கேன் டி. எப்ப டி?  என் பக்கத்துல வரபோற பொண்டாட்டி யா ? என அனுப்பி இருந்தான். 

அதைப் பார்த்ததும் தர்ஷிகாவிற் கு, உடல் சிலிர்த்தாலும் மூளை இவனிடம், தப்பிக்க ஈஸ்வரை கவிழ்த்து,மனைவியாக வேண்டும் என்றவள் பாலை கொண்டு சென்று ஈஸ்வருக்கு கொடுத்தாள். 

ஈஸ்வர் தர்ஷிகாவை எதிர்பார்க் காதவன், அவளை கேள்வியாக பார்த்து, என்ன? தர்ஷி.. இந்த நேரத்தில என்றான் 

தர்ஷி, அது இல்லை ஈஸ்வர், நீங்க இப்பதான் வந்தத பார்த்தேன்.  சாப்டீங்களா இல்லையான்னு கூட தெரியல பாலையாவது குடிச்சிட்டு படுங்க என்றாள்.

ஈஸ்வர், வெச்சிட்டு…, போ நான் குடிசிக்குறேன் என்றான்.

உடனே, தர்ஷி மறுத்தவளாய் இல்லை… ஈஸ்வர் நீங்க குடிங்க கிளாஸ் எடுத்துட்டு போயிடுவேன் என்றாள்.

ஈஸ்வர்,  அவளை கண்களை சுருக்கி பார்த்தவாரே, அவளை பார்த்துக்கொண்டே ம்ம் என்றவன் பாலை குடித்துவிட்டு கிளாசை அவளிடம் நீட்டினான்.

 தர்ஷி அவன், பக்கத்தில் நெருங்கி அமர்ந்தவள், எப்படி?  ஈஸ்வர் இன்னைக்கு ஒர்க்எல்லாம் போச்சு புது பிசினஸ் ஆரம்பிக்கிறேன்னு சொன்னீங்க…,  இல்ல…, அதான் கேட்டேன்.. என்றாள் அவனை பார்த்துக்கொண்டே, மனம் அலை பாய்ந்து கொண்டே இருந்தது. 

சிறிது நேரத்தில் மருந்து வேலை செய்ய ஆரம்பித்தது. உடம்பு முறுக்கி நின்றது தலை வேறு வலித்தது. 

உடனே, தர்ஷி என்ன?  ஈஸ்வர்… என்ன பண்ணுது,என அவன் நெற்றியைத்தொட்டு பார்த்து அவன் அருகே சென்று நெருங்கி அமர்ந்தாள். 

 உடனே, ஈஸ்வர் எழுந்து அவளை நெருங்கி வந்தவன், பின் விலகி கதவருக்கு சென்று, திறந்து தூக்கம் வருது, தர்ஷி, நீ போ உன் ரூமுக்கு என அவள் வெளியே அனுப்பி கதவை சாற்றினான்.

 தர்ஷிக்கு ஏமாற்றமாக இருந்தாலு ம், ஏதாவது வேணும்னா என்ன கூப்பிடுங்க ஈஸ்வர்.கதவு திறந்து தான் இருக்கும் என்றாள். 

 ஒரு நேரத்திற்குப் பிறகு அவனால் நிலை கொள்ள முடியவில்லை. போதை தலைக்கேறி, உடல் முறுக் கி.., கண்கள் சிவந்து தலைபிடித்து கொண்டு அமர்ந்திருந்தான். 

 

தொடரும் 

 

 

 

 

 

 

4 thoughts on “எனக்கென வந்த தேவதையே 11”

  1. Рулонный экран для проектора – компактное решение для небольших помещений
    экран проектора [url=http://www.proekcionnye-ehkrany01.ru]http://www.proekcionnye-ehkrany01.ru[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top