ATM Tamil Romantic Novels

எனக்கு என்ன வந்த தேவதையே 20

அத்தியாயம் 20

அன்று ஆகாஷ் வீட்டில் தான் இருந்தான் புவனா அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். வஞ்சி அனைவருக்கும் சமைத்துக் கொண்டு இருந்தாள்.

 ஆகாஷ் டிவியில் செய்தியை பார்த்துக் கொண்டு கீழே அமர்ந்து விளையாடும் பிரதன்யாவையும் பார்த்துக் கொண்டு இருந்தான். 

 குழந்தை,விளையாடிக் கொண்டி ருந்தபோது, அவள் பொம்மை ஒன்று, ஆகாஷின் காலடியில் விழுந்து விட்டது. பிரதன்யா தட்டி தவறி, தத்தி நடந்து வந்து 

 ப்பா… மும்மா.. த்தா.. என முதல் முறை கேட்டாள், டிவியில் கவன மாய் இருந்த ஆகாஷ் அவள் கூப் பிட்ட வார்த்தை என்னவென்று கவனிக்கவில்லை. 

 இரண்டாம், முறை பிரதன்யா தட்டியதும் தான் அவளைப் பார்த்தான். குழந்தை திரும்பவும் .

ப்பா மு…ம்மா.. த்தா என தலையை மேலும் கீழும் ஆட்டி கையை அசைத்து கீழே காட்டினாள். 

 அவள், ஆகாஷை அப்பா என்று அழைத்தது அதிர்ந்து நின்று  விட் டான். அந்த உணர்வை என்னவெ ன்று, சொல்வது.. கண்களில்  கண் ணீர். அவளை தூக்கி முகம் முழு தும்… முத்தமிட்டவன், 

 அப்பா.. தான்டா, அப்பா தான் என்றான். சந்தோஷமாய் 

 அதேநேரம், சாப்பிட அழைக்க வந்த வஞ்சி இதைக் கேட்டு ஷாக் அடித்ததை போல் நின்று விட்டாள் பிரதன்யா அவன் கன்னத்தில் தட்டி, ப்பா.. அம்மா… த்தொ..என அவன், முகத்தை திருப்பினாள்

 அப்படி சொன்னதும், ஆகாஷ் அங்கே அதிர்ந்து நிற்கும், வஞ்சி யை பார்த்தான். அப்போதுதான் புரிந்தது, அவள் எதற்காக இப்படி நிற்கிறாள், என்று. ஆகாஷ் வஞ்சி என அழைத்தவுடன்,,

வாய்பொத்தி,அழுதவள்அறைக்கு ஓடிவிட்டாள். குழந்தையை தன் தாயிடம் விட்டவன், வஞ்சியை தேடி அறைக்கு சென்றான். 

 அறையில் வஞ்சி, முழங்காலில் முகம் புதைத்து, அழுது கொண்டு இருந்தாள். ஆகாஷ்.. பெருமூச்சு விட்டவன், வஞ்சி..என்ன பாரு என்றான்.

அவள் அழுது கொண்டே இருந்தா ள். வஞ்சி என அவளிடம் வந்து அமர்ந்து, அவ என்னை அப்படி கூப்பிட்டது,உனக்கு பிடிக்கலையா இல்ல, இவனுக்கு என்ன உரிமை இருக்குன்னு.. நினைக்கிறியா? என்றான்.

 வஞ்சி, இல்லை என்னும் படியாக தலையாட்டியவள், உங்களுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு ஆகாஷ் என்னாலோ உங்க வாழ்க்கை வீணாக வேண்டாம். ப்ளீஸ் நாங்க இதுக்கு மேல இங்க இருந்தா நீங்க தான் பாதிக்கப்படுவீங்க அதனால இன்னைக்கு நாங்க கிளம்புறோம் என்றாள்.

 ஆகாஷ் எழுந்து நின்ற கைகளை கட்டியவன், ஓ அப்ப போறதுன்னு முடிவு  பண்ணிட்டீங்க… எங்க போவீங்க? என்றான் கோபமாய் முதல்முறை, ஆகாஷின்  கோபத் தை, பார்க்கிறாள் 

சற்று பயந்தவள் இல்ல எங்கேயாச் சும், ஹாஸ்டல், என இழுத்தவள் அவனைப் பார்த்தாள்.

ஆகாஷ் அப்ப அம்மணி  ஹாஸ்ட ல், போறீங்க…,தைரியம் வந்துடுச்சு ம்ம்.. என்றவன் கோபத்துடன்  

 இத பாரு, வஞ்சி உன் புருஷன் யாருன்னு நீ சொல்றவர உன்னை இங்கிருந்து அனுப்ப போறதும் இல்ல,நான் கல்யாணம் பண்ணிக் க,போறதும் இல்ல. ரெண்டுமே உன் கையில தான் இருக்கு. நீயே முடிவு பண்ணிக்கோ… என போனவன் திரும்பி,

 அதுவரை, பிரதன்யாவுக்கு நான் தான் அப்பா. முதன்முதலாய் என் பொண்ணு என்ன அப்பான்னு கூப்பிட்டு இருக்கா… 

இதுக்குபிறகு, எனக்கு கல்யாணம் கட்டி பிள்ளை வந்தாலும் என் முத பொண்ணு பிரதன்யா தான். என்ற வன் சென்று விட்டான். வஞ்சிக்கு  என்ன செய்வதென்றே தெரியாமல் அழுதபடி இருந்தாள்.

இங்கே கம்பத்தில்,  உதயன்பன் வீட்டில், அறையில் தர்ஷி, அமர்ந் திருந்தாள்.அந்த நிகழ்வுக்குப் பிற கு மொத்தமாக மாறி இருந்தாள்.

 மாதங்கியின் வற்புறுத்தலின் பெயரில் தான் அன்பனை திருமணம் செய்து கொண்டாள்.

ஆசைப்பட்ட, ஈஸ்வர் கிடைக்காம லும்,  கிடைத்த வாழ்க்கையை ஏற் றுக்கொள்ள முடியாமலும் தவித்து நின்றாள். 

 உதயன்பனும் அவள் நிலையைப் பார்த்து தொந்தரவுசெய்யவில்லை மாதங்கி தான் எதை எப்படி ஆட்ட ய போடலாம் என யோசித்துக் கொண்டிருந்தார். 

அன்பன் அவளுக்காக எல்லாவற் றையும்,வாங்கி குவித்தான். எது பிடிக்கும் பிடிக்காது என கேட்டு செய்தான். தர்ஷிகாவிற்கு தான் இதை இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்ன பேசுவது எப்படி பேசுவது என தவித்து நின்றாள்.

ஈஸ்வர் வியாபார விஷயமாக சென்னைக்கு காரில் வந்திருந்தா ன்.தனியாகத்தான் வந்திருந்தான்   

தன்தொழில் விஷயமாக,ஒருவரை சென்னையில் பார்க்க வந்தவன், நீலாங்கரையை அவரை பார்த்து விட்டு பீச்சை பார்த்ததும் வண்டி யை, பாக்கிகிங் யில் விட்டு விட்டு இறங்கி சுத்தமான காற்றை சுவாசித்து நின்றான்.

அலைகளைப் போலவே அவன் மனமும் அலை பாய்ந்து கொண்டி ருந்தது..

 சிறிது நாட்கள், ஆகவே வஞ்சி அவனை கனவிலும் நினைவிலும் வந்து இம்சித்தபடி இருக்கிறாள். கண்களை மூடினால் மாமா.. என ஓடி வந்து அணைத்துக் கொள்கிறாள். 

 கண்களை மூடி ஏதேதோ சிந்தித்து கொண்டு இருந்தான். திடீரென.. மனதில் மனதில் அலைபுறுதலின் பெயரில், எதேச்சையாக திரும்பிப் பார்த்தான். 

 ஆகாஷ் வந்து கொண்டிருந்தான் அவன் கையில் ஒரு பெண் குழந் தை,ஆகாஷ் என அழைக்கப் போ னவன், பக்கத்தில் இருந்த வஞ்சி யை, கண்டு, அதிர்ச்சியில் விழி அகல நின்று விட்டான்.

 வஞ்சி, எங்கோ யாரையோ காட்டி அவன்காதில் எதையோகூறினாள் உடனே ஆகாஷ் அவள் தலையில், தட்டி அவள் காதில் ஏதோ கூறினா ன்..

இருவரும், சிரித்தபடி நடந்து வந்த னர். ஈஸ்வர் இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவர்களையே.. பார்த்த படி நின்று இருந்தான் 

முதலில், அவன் நிற்பதை பார்த்த து, வஞ்சி தான். அவனைப் பார்த் ததும்,சிலைபோல நின்றுவிட்டாள் அதிர்ச்சியில், 

ஆகாஷ்,எங்க இவள,என் பின்னா டி வந்தா, சத்தத்தையே.. காணும்    என தேடியவன், சிலை போல நின் றிருக்கும், வஞ்சியை.. பார்த்தவன் அவளை போய் உலுக்கி…  வஞ்சி என்ன ஆச்சு.. ஏன் இப்படி? பேய் அறைஞ்சது போல நிக்கிற என்றா ன்.

வஞ்சி எச்சில் விழுங்கியவள் அப் படியே…நின்று இருந்தாள் 

 ஆகாஷ், அவள் கண் பார்க்கும் இடத்தைப் பார்த்தவன் அப்போது தான், அங்கு ஈஸ்வர் நிற்பதை பார்த்தவன்,,

 ஹாய் மச்சான் வாட்ட சர்ப்ரைஸ் எப்படி இருக்க, கல்யாணம் எல்லா ம் எப்படி போச்சு? நியூஸ் பார்த்தே ன், மச்சான் ஆல் த பெஸ்ட், காங்கி ரட்ஸ், என்னால தான் வர முடியல என்றான்.

வஞ்சி தன்னை திடப்படுத்திக் கொண்டவள் ஆகாஷ் நான் கார்ல வெயிட் பண்றேன். நீங்க பேசிட்டு வாங்க…  என்றவள் வேகமாக நடந்தாள்.

ஈஸ்வர் போகும் அவளையே பார்த் து நின்றான். 

ஆகாஷ் நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லையே மச்சான் என்றான். 

  ஈஸ்வர், ஹான் இனி தாண்டா.. நல்லா இருக்கும் என்றான். 

ஈஸ்வர்,மச்சான் இது என் வீட்டில் இருந்த பொண்ணு தானே என்றா ன்.ஆகாஷ் ஆமா மச்சான் அவளே தான். பாவம்டா… அவ புருஷன் அவள விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்க போறேன்னு, இவகிட்ட காசு இல்லன்னு, இவள விரட்டி விட்டுட்டானாம்.. 

 யாருன்னு, கேட்டாலும் சொல்ல மாட்றா…அழுதுட்டே இருக்கா என் பொண்ணு பிறந்துதான் கொஞ்சம் மட்டும் சிரிக்கிறா மச்சான் என்றா ன்….

தொடரும்.

 

 

 

3 thoughts on “எனக்கு என்ன வந்த தேவதையே 20”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top