ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 29

அத்தியாயம் 29

 இரண்டு, நாட்கள் ஓடியிருந்தது ஈஸ்வர் தொழிலை கவனிக்க ஆர ம்பித்திருந்தான். அன்று ஆகாஷ் பொன்னியும், ஈஸ்வரர் வீட்டுக்கு வந்திருந்தனர். ஆகாஷ் அப்பா.. என பிரதன்யா அவனை ஓடிபோய் கட்டிக் கொண்டாள்.அவனும் அவ ளை,கட்டிப்பிடித்துமுத்தமிட்டான் 

அவளும் அவனுக்கு முத்தமிட்டா ள், பொன்னி உடனே அப்ப நானு என்றாள், உடனே பிரதன்யா அவ ளுக்கும் கன்னத்தில் முத்தமிட்டா ள்

 ஆகாஷ் சுந்தரம் ஹாலில் அமர்ந் து பேசிக் கொண்டிருந்தனர் கனகா அமர்ந்திருந்தார் பேத்தியுடன்,

வஞ்சியும் பொன்னியும் சமையல் வேலையை கவனித்துக் கொண்டி ருந்தனர். 

வஞ்சி,பொன்னி எப்படிடி இருக்க, ஆகாஷ் உன்ன நல்லா பாத்துக்கு றாரா…, புவனா அம்மா, எப்படி? நடந்துக்கிறாங்க.. உன்கிட்ட

பொன்னி,ஆகாஷ் பேரை.. சொன் னதும் வெட்கப்பட்டவள்,  அவர் என்னை நல்லா பார்த்துக்கிறார் டி அத்தமாவும், என்கிட்ட நல்லா பேசு றாங்க, அவங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடி என்றாள் வெட்கத்துடன், 

வஞ்சி அடியேய்… ரொம்ப வெட்கப் படாத டி , நீ வெட்கப்படும்போது எனக்கே பயமா இருக்கு.. என்றாள் 

பொன்னி,அடியே என இடுப்பில் கை வைத்தவள், நான் வெட்கப்ப டுறது, உனக்கு அவ்வளவு காமெடி யா இருக்கா… என்றாள் 

 வஞ்சி, சிரித்தவள் சரி விடுடி எப்ப என்ன பெரியம்மாவா ஆக்க போற சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க  ரெண்டு பேரும் சேர்ந்து என்றாள் 

பொன்னி, அவள் அப்படி கேட்டது ம் அமைதியாகி விட்டாள்.

 வஞ்சி என்னடி அமைதி ஆகிட்ட ஏதாவது, தப்பா கேட்டுட்டேனா.. என்றாள். 

பொன்னி, இல்லடி…. அம்மாவும் போன மாசம் இத தான் கேட்டுச்சு, அத்தம்மா கூட,  இந்த மாசமும் தலைக்கு ஊத்திக்கிட்டியான்னு.. கேட்டாங்க, எனக்கு தான் என்ன சொல்றதுன்னு தெரியல என்றாள், சோகமாய்

வஞ்சி சற்று பதறியவளாய் என்ன டி,என்ன ஆச்சு இப்பதான் ஆகாஷ் உன்னை நல்லா பாத்துக்குறாருனு சொன்ன..அப்புறம் என்னடி,  ஏதா வது,பிரச்சனையா எனக்கேட்டாள் 

பொன்னி, லேசாக கண் கலங்கிய வள்,அது.. அது…  அவர் என்கிட்ட நல்லா தான் பேசுறார் டி, ஆனால்.. அதுக்குமேல, எப்படி..சொல்றதுனு எனக்கு தெரியல.. வஞ்சி என அவ ளை அணைத்துக் கொண்டாள். 

வஞ்சி, ஏய், பொன்னி அதெல்லாம் ஒன்னும் இல்ல, நீ ஆகாஷ் கிட்ட இத பத்தி பேசினீயா…,

பொன்னி அவளை நிமிர்ந்து பார் த்தவள், இதெல்லாம்.., எப்படி.,. டி அவர்கிட்ட பேச முடியும்.  அவருக் கு என் மேல இஷ்டம் இல்ல போல அவங்க, அம்மாவுக்காக…. தான் என்னை கட்டிக்கிட்டாருனு நினை க்கிறேன் என்று சொன்னவள் கண் கலங்கினாள். 

வஞ்சி, பொன்னி அழாதே எல்லாம் சீக்கிரம் சரியாயிடும், நான் சொல்ற மாதிரி பண்ணு, என்றவள் அவள் காதில் சில பல ரகசியங்களை கூறினாள்.

பொன்னி அவள் கூறியதில் ஐயோ ச்சீ.. இதெல்லாம் நான் பண்ண மாட்டேன் பா.எனக்கு வெட்கமா இருக்கு என்றாள் முகத்தை மூடி,

 வஞ்சி அவள் தலையில் கொட்டிய வள்,நான் சொல்றத செய் அதுக்க ப்புறம் பாரு என்ன நடக்குதுன்னு என்றாள் குறும்பாய் 

வஞ்சியும் பொன்னியும் சிரித்துக் கொண்டே சமையலை முடித்தவர் கள், உணவை கொண்டு வந்து அனைவருக்கும் பரிமாறினார்கள் 

பொன்னி மடியில் பிரதன்யா அமர் ந்து கதை பேசி கொண்டிருந்தாள் ஆகாஷ் வஞ்சியிடம் பேசி கொண் டிருந்தான். வெகு நாட்களுக்கு பிறகு இருவரும் சிரித்து பேசினார் கள். 

 வஞ்சி, இப்ப நா ரொம்ப சந்தோஷ மா இருக்கேன். ஆகாஷ், உன்னால தான் நான் சந்தோஷமா இருக்கே ன், உன்ன மாதிரி பொண்ணு கேட்டேன். 

 பட் உனக்கு ஆப்போசிட் கேரக்டரி ல், ஒரு பொண்ணு தேடி கட்டி வச்சு ட்டீங்க..,நீ அமைதி அவ சூறாவளி அம்மாவுக்கு நல்லா பொழுது போகுது என்றான். 

வஞ்சி அப்ப… அவள…. உனக்கு… பிடிக்கலையா…. என்றாள் 

ஆகாஷ்,பிடிச்சிருக்கு வஞ்சி  உன் ன போல ரொம்ப பொறுப்பா இருக் கா, ஆனா உன்ன போல வராது தானே…என்றான். 

வஞ்சி, அவன் தலையில் கொட்டி, எல்லா சரியா வரும். பொன்னி ய அவளா பாருங்க.., என்னை வச்சு அவளை பார்க்காதீங்க… சரியா? தெரிஞ்சா மனசு கஷ்டப்படுவா என்றாள்.

ஆகாஷ் அவளுக்கு எல்லாம் தெரி யும், உன் விஷயம் முதற்கொண்டு சொல்லிட்டேன் என்றான் அவள் காதில்,

வஞ்சி, அடப்பாவி என்ற விதமாய் அவனைப் பார்த்தாள் வாயில் கை வைத்து,

ஆகாஷ் தோளை உலுக்கி சிரித்து க் கொண்டான் 

அதேநேரம் ஈஸ்வர் உள்ளே நுழை ந்தான்,அவனை பார்த்து ஆகாஷ் ஹாய், மச்சான் வாடா நல்லா இரு க்கியா.. இப்பதான் வேலை முடிஞ் சுதா என்றான். 

ஈஸ்வரும் ஆமாண்டா இப்பதான் என்றவன் என்னடா திடீர் விஜயம் ஃபேமிலியோட என்றான்.

 வஞ்சி,அவன் கையில் இருந்த பேக்கை வாங்கிக்கொண்டு அவன் கையில் காபியை கொடுத்தவள் ஆகாஷ், இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சி,இல்லையா,கல்யாணத்துக் கு,அப்புறம், வீட்டுக்கு வரல..  அத னால இப்ப வந்திருக்காரு என்றா ள்.

 அதன் பிறகு, சிறிது நேரம் இருந்து விட்டு வீட்டிற்கு கிளம்பி சென்றன ர். 

 இங்கே, வீட்டிற்கு வந்த பொன்னி வஞ்சி சொன்னதை யோசித்துப் பார்த்தாள் அவள் சொன்னது ஒரு பக்கம் வெட்கமாக இருந்தாலும்,

 அவர், என் புருஷன் தானே அவர் கிட்ட  நான் ஏன் வெட்கப்படனும்   என நினைத்தவள், சமையலறை புகுந்து கொண்டாள்.

மறுநாள் காலை ஆகாஷுக்கு அவ ள்தான் காலை உணவை பரிமாறி னாள். அவனை நெருங்கி நின்று, என்றும் இல்லாத பொன்னி என்று காலையிலே குளித்து  இடை தெரி ய,சேலை கட்டி, அவன் பக்கத்தில் நின்று அவனுக்கு பரிமாறினாள் 

ஆகாஷின் பக்கத்தில் பொன்னி இவ்வளவு நெருக்கத்தில் நிற்கவும் ஆகாஷ், தன் பிடரியை தட்டிக் கொண்டான். தண்ணீரை எடுத்து மடமடவென குடித்தான்.

அவள், பரிமாறும்போது அவள்    இடை அவனுக்கு பளிச்சென, காட்சியளித்தது அவளிடம் ஆசை இருக்கிறது தான் ஆனாலும் ஒரு தயக்கம்.

 அவனையும் மீறி அவன் கண்கள் அவளிடையை ஆசையாய் வருடி யது.

பொன்னி அவன் சாப்பிட்டதும் எல்லாவற்றையும் எடுத்து கொண் டு சமையலறைக்கு சென்றாள்.

ஆகாஷும் அவள் பின்னாடி… யே சென்றவன், அவளை இழுத்து அணைத்தவன், அவள் இடையை அழுத்தி, அவள் சேலையை மேலே இழுத்துவிட்டவன்,அவள் உதட்டி ல், முத்தமிட்டு சேலையை இறக்கி கட்டாதடி..எனக்கு.. மட்டும்….காட்டி னா… போதும் என்றவன்,

சிரித்தபடி, வெளியே வந்து விட்டா ன். அவன் இப்படி அதிரடியாக செய்வான், என்று எதிர்பார்க்காத பொன்னி அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள். 

புவனா அம்மாவின் குரல் கேட்டது ம் தான், நினைவிற்கு வந்தவள் வெட்கப்பட்டு, தன்னை அறைக்கு ஓடிவிட்டாள்.

இரவு எல்லா வேலைகளையும் முடித்த வஞ்சி, தங்கள் அறைக்கு சென்றாள் அங்கே ஈஸ்வர் அருகே பிரதன்யா  உறங்கிக் கொண்டிருந் தாள்  இவன் போனை பார்த்துக் கொண்டிருந்தான், குழந்தை அரு கே,சென்று ஒரு முறை பார்த்தவள் நன்றாக உறங்கி விட்டாள் என்று தெரிந்ததும், 

நெற்றியில் முத்தமிட்டு இந்த பக்க ம், வந்து அமர்ந்தாள், அவள் அமர் ந்த,, அடுத்த நொடி  அவள் மடியில் படுத்து, அவள் வயிற்றில் முகம் புதைத்து முத்தமிட்டு கடித்தான் ஈஸ்வர் 

வஞ்சி ஸ்ஸ்.. ஆ என்னங்க.. வலிக் குது என்றாள். ஈஸ்வர் அவள் வயி ற்றில், மீண்டும் முத்தமிட்டு ஐ லவ் யூ டி,.. பொண்டாட்டி என்றான்.

வஞ்சியும் அவன் நெற்றியில் முத்த மிட்டு ஐ லவ் யூ சோ மச் ஆதி மாமா என்றாள் 

ஈஸ்வர்,அடியே நான் என்ன கை குழந்தையா? நெத்தில கொடுக்கிற உதட்டுல… கொடுடி, அதுவும் டீப் கிஸ் வேணும் என்றான்.

அதில் சிவந்தவள் அவன் தலையி ல், தட்டி முடியாது மாமா என்றாள். ஈஸ்வர், அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக வஞ்சி, நான் உள்ள வரும்போது,நீயும் ஆகாஷூம் என் ன, அப்படி பேசிட்டு.. இருந்தீங்க.. அன்னைக்கும் பீச்சுலயும் இப்படி தான் பேசி அப்புறம் காதுல ஏதோ சொன்னான்

உடனே நீ அவன் தலையில கொட்  டுன, என்ன விஷயம் பேசினீங்க ரெண்டு பேரும் என்றான். 

 வஞ்சி சிரித்தவள் அன்னைக்கு பீச்சுல நிறைய பொண்ண காட்டி இந்த பொண்ணு, புடிச்சிருக்கா… அந்த பொண்ணு, புடிச்சிருக்கானு என்று கேட்டேன். உடனே ஆகாஷ் யாரையும் பிடிக்கல, யாரும் உன்ன போல இல்லன்னு.சொன்னாரு என்றாள் அவன் முகம் பார்த்து, 

அதுக்கு தான் கொட்டினேன் என்றாள், இன்னைக்கு என்றான் ஈஸ்வர் அவள் கையில் முத்தமிட் டு,,

அதுவா பொன்னிய பிடிச்சிருக்கா  ம், நல்ல பொண்ணாம், நல்லா…. பாத்துக்கிறாளாம், ஆனா… எப்படி இருந்தாலும் உன்ன போல வராது இல்லன்னு…சொன்னார் மாமா. அதுக்கு தான் கொட்டினேன் என் றாள் சிரித்து

ஈஸ்வர் ஓ அவனுக்கு உன்ன மாதி ரி, வேணுமா மா, இந்த  வஞ்சி என க்கு மட்டும் தான், சொந்தம் வேற யாருக்கும் கிடையாது,என எழுந்து அவள் காது மடலில் முத்தமிட்டா ன்.

வஞ்சி, ஆதி மாமா சும்மா இருங்க என சினுங்கினாள்

 பின், மாமா.. என  இழுத்தாள் 

 ஈஸ்வர், என்னடி.. என்றான்

 வஞ்சி, தயங்கியவள் மாமா நான் கோவில்ல தர்ஷியை பார்த்தேன் குழந்தை பிறந்திருக்கிறது போல என்றாள், ஈஸ்வர் முகம்  அவள் சொன்னதும் மாறியது, 

ஈஸ்வர், அவ ஏதாச்சும் உன் கிட்ட சொன்னாளா என்றான் பற்களை கடித்து 

வஞ்சி அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா நான் உங்களுக்கு உடம்பு சரி ஆச்சுன்னா… அங்க பிரதஷணம் பண்றேன்னு வேண்டி இருந்தேன்.

ஈஸ்வர் உடனே அவளை முறைத் துப் பார்த்தான் 

மாமா.. முறைக்காதீங்க உங்களுக் காக தானே வேண்டினேன். அதனா ல வேண்டுதல் நிறைவேற்ற கோவி லுக்கு போயிருந்தேன். அங்கதான் தர்ஷிகாவை பார்த்தேன் ரெண்டு பேரும் என்கிட்ட,  மன்னிப்பு கேட்  டாங்க, உங்ககிட்டயும் மன்னிச்சிட சொல்லி சொன்னாங்க, உங்கள விசாரிச்சதா சொல்ல சொன்னாங் க என்றாள்

 ஈஸ்வர் ம்ம்.. மட்டும் கொட்டினான் வேறு எதுவும் பதில் சொல்லவில் லை. 

வஞ்சி, ஏன் மாமா அமைதி ஆகிட் டீங்க தப்பா ஏதாச்சும், சொல்லிட் டேனா…என்றாள் 

 ஈஸ்வர், இல்லடி நல்லவங்கன்னு நம்பின எல்லாரும்..கெட்டவங்க ளாகவும் கெட்டவங்கன்னு நினை ச்சு,  தள்ளி வச்ச நீங்க எல்லாரும் நல்ல நல்லவங்களாவும் இருந்திரு க்கீங்க, பணம் காசு முக்கியமில்ல உறவு தான் முக்கியம், நம்பி வந்த பொண்டாட்டி பிள்ளை தான் முக் கியம்னு உன்னால உணர்ந்துட்டே ன், கண்ணம்மா…. என்றான்.  அவ ளை அணைத்துக் கொண்டு,

இங்கே, ஆகாஷ் வீட்டில் பொன்னி எல்லாவற்றையும் எடுத்து வைத்த வள், ஆகாஷுக்கு ஒரு போன் கால் வரவே வெளியே சென்று  இருந்தா  ன். 

அவன், வருவதற்குள் புடவையை மாற்றி  விடலாம் என்று நினைத்து குளித்துவிட்டு,  வெளியே வந்து நின்று புடவை கட்டிக் கொண்டிரு ந்தாள்.

பொன்னி புடவையை பாதி கட்டி ருந்த நிலையில் திடீரென கதவை திறந்து, கொண்டு ஆகாஷ் உள்ளே வந்து விட்டான். அதை எதிர்பாரா த, பொன்னி பதறி அச்சோ.. என்ன ங்க..நான்… நான் புடவை கட்டிட்டு இருக்கேன்.. என திரும்பி நின்று கொண்டாள் கூச்சத்துடன்,

பொன்னி, இப்படி நிற்பாள் என்று எதிர்பாராதவன், அவள் நிற்கும் நிலையை கண்டு தன் தலையைக் கோதி கொண்டான். 

காலையிலேயே  அவளில் தடுமாறி நின்றவன் திரும்பவும் அவளை இப்படிப் பார்த்ததும் தன்னை மீறி அவன் கண்கள் அவளை,  ஆசை யோடு வருடியது.

பொன்னி, புடவையை தன்    மார் போடு.. அணைத்தபடி நின்று இருந்தாள். 

ஆகாஷ், கதவை தாழிட்டவன் மெதுவாக நடந்து வந்தான் அவ ளிடம், அவள் அழகை ரசித்தபடி  அவன் தன்னிடம் வருவது தெரிந் ததும்,பொன்னியின் உடல் நடுக்க ம், கொண்டது.

பொன்னி, அது.. அது..வந்து..நீங்க வருவீங்கன்னு,தெரியாதுங்க நான் உள்ள போய்… மாத்திட்டு வரேன் என குளியலறை கதவில் கை வைத்தாள்.

ஆகாஷ் அவளை ஒரே இழாக இழுத்தவன், அவளை தாபமாக பார்த்துக் கொண்டே, இந்த ட்ரெஸ் ஸும்,  நல்லா இருக்கு… பொன்னி என குழைந்தவன், கைகள் அவள் இடையை அழுத்தியது.

அதில், பொன்னி அதிர்ந்து…  அவ னை, நிமிர்ந்து பார்த்து விடு..ங்க என்னை என்றாள் உள்ளே போன குரலில்

 ஆகாஷ், அவளை இன்னும் இறுக அணைத்தவன் முடியாது டி என்ன பண்ணுவடி, என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்தான். பொன்னிக்கு மூச்சு வாங்கியது அவன் செயலில்,

 பொன்னி, உங்..களுக்கு என்னை.. பிடிக்குமா? என்றாள். 

அவள் கேட்டதும், உன்னை பிடிக் காம தானா..டி,இப்படி உன்ன கட்டி பிடிச்சிட்டு நிக்குறேன், என்றவன், அவள் காது மடல் கடித்தான்.

அதில் நெளிந்தவள், அவன் அசந் த,, நேரம் ஓடிப்போய் சுவரொரம் திரும்பி நின்று கொண்டாள்.

ஆகாஷ் தாபத்துடன் அவளை நெருங்கி பின்னிருந்து, அவளை அணைத்தவன்,அவள் கழுத்தில் முத்தமிட்டு கடித்தவன், அவளை திருப்பி அவள் இதழோடு இதழ் பொருத்திக் கொண்டான். ஆழ்ந்த முத்தம் அவளை அப்படியே முத்த மிட்டு, தூக்கிக் கொண்டவன் படுக் கையில்,

 போட்டு தானும் அவள் மேல் தன் உடலை போட்டு  படர்ந்தவன், பொன்னி, இதுல உனக்கு சம்மதம் தானே.. என்றான். அவள்     கண்க  ளைப் பார்த்துக் கொண்டே

 அவளும் அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே ம்ம்.. என்றவ ள் எட்டி, அவன் கன்னத்தில் முத்த மிட்டு திரும்பிக்கொண்டாள், அவ்வளவுதான் 

ஆகாஷ், அவளை முத்தமிட்டு, கொள்ளையிட்டு ஆளுகை செய்ய ஆரம்பித்தான். முதலில் நடுங்கிய வள் பின், அவனுள், விரும்பியே.. மூழ்கி போனாள். விடியும் வரை கூடல் தொடர்ந்தது. அதிகாலையில் தான் இருவரும் உறங்கி இருந்தனர்.

 

தொடரும்… 

 

 

 

 

 

 

 

 

 

 

 

5 thoughts on “எனக்கென வந்த தேவதையே 29”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top