ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

கண்ணை கவ்வாதே 

கள்வா – 2

பேருந்தில் சிந்துவிடம் பேசிக்கொண்டே திரும்பியவள் சிக்னலில் புல்லட்டில் அமர்ந்திருந்த அந்த ஆறடி உயரம் மனிதனை கண்டவுடன் தானாகவே தனது கனவில் வந்தவனுடன் ஒப்பிட்டு பார்த்தாள். 

 

அவள் பார்த்து கொண்டு இருக்கும் போதே சிந்து ‘அப்படி என்ன வாயில் ஈ, கொசு எல்லாம் போற அளவுக்கு பாக்கறா அதுவும் நம்மள விட்டுட்டு’ என்ற யோசனையுடன் அவள் பார்வை சென்ற இடத்தில் இவளும் பார்க்க அங்கே ஒன்றுமே இல்லை, அதில் மிகவும் கடுப்புடன் அவளின் கையை கிள்ளி வைத்து விட்டால் 

“ அம்மா” என்று கத்திக்கொண்டே தர்ஷினி திரும்பி பார்க்க அங்கே சிந்து அவளை முறைத்துக் கொண்டு இருந்தாள்.

 

“ என் கூட தான பேசிட்டு இருந்த திடீர்னு அங்கேயே வெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு இருக்க அப்படி என்னதான் பார்க்கிறனு நானும் பார்த்தா அங்க ஒன்னுமே இல்ல நானும் உன்னை கூப்பிட்டு பார்த்தேன் நீ திரும்பலயா அதான் உன்னை கிள்ளி வச்சேன் ” என்றாள். தர்ஷினி அவளைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு “ அது ஒன்னும் இல்லடி அந்த சிக்னல்ல நின்னவரு காலையில் என் கனவுல பார்த்த மாதிரி இருந்தாரு அதான் யாருன்னு பாத்துட்டு இருந்தேன்” என்று திரும்ப தேட தொடங்கினாள்

பின்பு தனது கனவில் வந்த அனைத்தையும் மேலோட்டமாக அவளிடம் கூறினாள்.

 

அதைப் பார்த்த சிந்து நன்றாக அவளின் புறம் திரும்பி “ இப்படியா உனக்கு கனவு வந்துச்சு கனவே பயங்கர கில்மாவா இருக்கே நேத்து என்ன கே டிராமா பார்த்த சொல்லு நானும் இன்னைக்கு போய் அதையே பார்க்கிறேன்” என்று கூறிக் கொண்டிருந்தாள்.

 

மீண்டும் கனவு என்று கூறவும் தர்ஷினியின் முகம் செங்கொழுந்தாக மாறிவிட்டிருந்தது.

அதற்குள் பேருந்து கல்லூரிகுள் நுழைந்து விட அதை பார்த்த சிந்து “ போதும் நிறுத்து என்ன கனவா காலேஜ் வந்துடுச்சு எருமை இறங்குவோமா இல்ல நீ இப்படியே கனவுல இருக்க போறியா, எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல, காலையிலேயே முதல் பீரியட் அந்த சொட்டை தலையோடது தான் நேத்தே எல்லாரும் சேர்ந்து ஏதேதோ சொல்லி டெஸ்டுக்கு டிமிக்கி கொடுத்தாச்சு அவரும் போனா போகுதுனு விட்டுடாரு ஆனா இன்னைக்கு கண்டிப்பா வச்சே தீர்வேன்னு வேற சொல்லி இருக்காரு சீக்கிரம் கிளாஸ்கு போகணும் நம்ம படிக்க மாட்டோம்னு தெரியும் அட்லீஸ்ட் பிட்டு அடிக்காவாது ரெடி பண்ணலாம் சீக்கிரம் வந்து தொலைடி” என்று திட்டிக் கொண்டே சென்றாள்.

 

அவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும் போதே இடையில் அவர்களது தோழி காயத்ரி மூச்சு வாங்க வந்து இருவரையும் நிறுத்தினால் அதில் சிந்துவும், தர்ஷினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திரும்பி அவளை கண்டார்கள் (காயத்ரி மூச்சு வாங்கி கொண்டிருக்கும் போதே நாம் அவர்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.)

 

இவர்களின் குழுவில் மொத்தம் ஐந்து பேர் சிந்து, தர்ஷனா, காயத்ரி, வேணி, கார்த்திகா. இதில் கார்த்திகா கிளாஸ் டாப்பர் அதனால் மற்ற நால்வரும் அவளிடம் இருந்து நோட்ஸ் வாங்கி இறுதி நேரத்தில் படித்து ஏதோ பாஸ் ஆகி கொண்டு இருக்கிறார்கள். மற்ற நான்குபேரும் மக்கு இல்லை என்றாலும் காலேஜ் லைஃப்யை நன்றாக என்ஜாய் பண்ணவேண்டும் என்று நினைப்பவர்கள் அதன்படியே காலேஜ் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள் இதில் மூன்று பேர் வீட்டில் இருந்து வருகிறார்கள். மத்த இரண்டு பேர் காலேஜ் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் அனைவரையும் காலேஜ் முதல் நாளிலேயே திக் பிரண்ட்ஸாக மாற்றிய பெருமை கொரியன் டிராமாவை தான் சேரும் ஐவரும் கொரியன் டிராமா ஆர்மி அமைக்கும் அளவுக்கு தீவிர ரசிகைகள்.

 

மூச்சு வாங்க வந்த காயத்ரியிடம், தர்ஷினி சிந்துவிடம் வாங்கும் திட்டில் இருந்து தப்பிக்கும் எண்ணத்துடன் காயத்ரியிடம் “ ஏன் டி எதிர்த்துதாப்ல வந்து மூக்குல காத்தடிச்சிட்டு இருக்க அந்த சைடுகா போய் காத்தடிப் போ” என்று நக்களுடன் கூற அவளை பார்த்த காயத்ரியோ முறையோ முறை என்று முறைத்துக்கொண்டிருந்தாள்.

அதைக் கூட இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

 

அதை கண்ட காயத்ரி “போடி இதோட நம்ம நட்பை முடிச்சுக்கலாம்” என்று வீர சபதம் விட்டாள்.

அதற்கும் தர்ஷினி “ இது ஆயிரத்து ஒன்றாவது டைம் டி இன்னும் எத்தனை முறை இதையே சொல்லுவ” என்று அதற்கும் ஒன்று கூற, காயத்ரி “ நீங்க இப்படியே என்னை காலாய்சிக்கிட்டு இருங்க நான் முக்கியமான விஷயம் சொல்ல தான் வேகமாக வந்தேன் இப்போ நான் கோபமாக போறேன்” என்று சொல்லி கோபித்து கொண்டு சென்றாள். பின் இருவரும் அவளை சமாதனபடுத்தி என்ன விஷயம் என்று கேட்க அவளோ கொஞ்சம் பிகு பண்ணிகொண்டு பிறகு தான் விஷயத்தை கூற ஆரம்பித்தாள் அதாவது “ இதுவரைக்கும் நமக்கு டேட்டா சயின்ஸ் பேப்பர் எடுத்துக்கொண்டு இருந்த பாலா மேம் வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகி போக போறாங்களாம் அதனால் அந்த பேப்பருக்கு புது ப்ரொபசர் வராரு அந்த அனௌன்ஸ்மென்ட்யை நமக்கு சொல்றதுக்கும், புதுசா வர ப்ரோபசரயை நமக்கு இன்ட்ரடியூஸ் பண்றதுக்கும், பாலா மேம்க்கு செண்டாப் பண்றதுக்கும் சேர்த்து ஒரே பங்சனா காலையில் வைத்து விடுவோம் என்று எச்.ஓ.டி. சொல்றாராம் அதனால் இன்னைக்கு மார்னிங் சி.எஸ் எல்லாரையும் ஏ.ஒ. ஹால்ல அசம்பல் ஆக சொல்லி டிபார்ட்மெண்ட்ல சொல்லி இருக்க தா நம்ம காத்து கருப்பு வந்து கிளாஸ்ல சொல்லிட்டு இருந்தான். அதனால “ இன்னைக்கும் நம்ம சொட்டையோட டெஸ்ட் ஓகையா ஓகையா அந்த நல்ல விஷயம் சொல்ல தான் வேகமாக வந்தேன் “ என்று கூறிக் கொண்டே மூன்று பேரும் வகுப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.

 

அங்கே வகுப்பில் இதை பற்றி தான் அனைவரும் அங்கே அங்கே குரூப் குரூப்பாக பேசிக்கொண்டு இருந்தார்கள். மூவரும் அவர்கள் முதல் நாள் சண்டை போட்டு வாங்கிய கடைசி பெஞ்சு தான் கெத்து என்கிற பழமொழிக்கு ஏற்ப கடைசி பெஞ்சில் கார்த்திகா படித்து கொண்டும், வேணி வேடிக்கை பார்த்து கொண்டும் இருந்தார்கள் இருவரையும் இடித்து கொண்டு மூவரும் ஒரே பெஞ்சில் ஒன்றாக அமர்ந்தார்கள். அதே சமயத்தில் வகுப்பிற்கான மணியும் அடிக்கவும், அப்பொழுது காத்து கருப்பு வந்து அனைவரையும் ஹாலிற்கு போகுமாறு சொல்லிக்கொண்டு இருந்தான்.

 

காத்து கருப்பு என்பவன் வேறு யாறும் இல்லிங்கோ அவர்களின் கிளாஸ் ரெப்தான் அவனது திருநாமம் கருப்பசாமி ரொம்ப வருஷம் குழந்தை இல்லாமல் வேண்டிக்கொண்டு பிறந்ததாள் அவனுக்கு அவன் பெற்றோர்கள் இந்த பெயரை வைத்தார்களாம், அதைத்தான் நம் தேவியர்கள் காத்து கருப்பு என்று கூப்பிட்டு அது அப்படியே கிளாஸ் ரூம்மிலும் பரவி அனைவரும் அவனை காத்து கருப்பு என்ற கூப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

 

இதை கிளாஸில் வந்து சொன்ன அடுத்த நொடி முதலில் கிளம்பியது என்னவோ இந்த ஐவரும் தான் . அப்போது தானே அந்த செமினார் ஹாலின் கடைசி இருக்கைகளை கைப்பற்ற முடியும் வேக வேகமாக அங்கே சென்று இருக்கைகளை கைப்பற்றிய பின்பு தான் நிம்மதி பெரு மூச்சு விட்டு அமர்ந்தார்கள்.கார்திகா “ இந்த கடைசி சீட் புடிக்குறதுல என்ன ஒரு சுகம்” என்றாள் அதை அனுபவித்தபடி அனைவரும் ஆமா என்றார்கள். இவர்களுக்குள் இப்படி பேசிக் கொண்டு இருக்கையிலே மாணவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வர தொடங்கினர்.

 

அதற்குள் இங்கே ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது. கார்த்திகா “ பாலா மேம் போறது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு டி அவங்க நல்லா புரியறமாதிரி சொல்லி கொடுப்பாங்க” என்று சோகமாக சொன்னாள். வேணி “ உனக்கு புரிந்தாள் தானே நாங்க எல்லாம் இந்த பேப்பரில் பாஸ் பண்ண முடியும் “ என்றாள். கார்த்திகா “ புதுசா வர போறவர் எப்படினு தெரியலையே” என்றுபுலம்பிக் கொண்டிருந்தாள். தர்ஷினி “ நீயே இப்படி சொன்னா எப்படி எங்க பொழப்புலாம் சிரிப்பா சிரிச்சுரும் இந்த செமஸ்டர்லயும் அரியர் வச்சா எங்க அம்மா வேற விளக்கமாத்தாலே அடிப்பாங்க டி ஒழுங்கா படிச்சு பாஸ் ஆகுற வேலைய பாரு” என்று மிரட்டி கொண்டிருந்தாள். அவள் சொன்ன முறையில் கார்த்திகா முறைக்க மறு பக்கத்தில் இருந்த சிந்துவோ “ஐய்யோ அவளுக்காவது அவ அம்மா சொன்னாங்க எங்க அம்மா அதையே செயல்ல காட்டு வாங்களே” என்று நண்பிகளிடம் கூறி கொண்டிருந்தாள். 

 

இவர்களுக்கு தெரியவில்லை பாஸ் மட்டும் இல்லை நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணவும் இவர்களை டார்ச்சர் பண்ணி ஓட விடவும் ஒருத்தன் வந்து விட்டான் என்று.

 

 தர்ஷினி ஏதையோ பார்த்துகொண்டிருந்த சிந்துவை பார்த்து “ என்னடி அமைதியாக இருக்க என்று கேட்டுக் கொண்டிருக்கையிலே மாணவர்களின் சத்தம் குறைந்து அமைதியாகவும் மேடையில் அனைவரும் வந்து அமரவும் சரியாக இருந்தது. பின்பு ஆசிரியர் ஒருவர் வந்து பேச ஆரம்பித்தவுடன் மாணவர்கள் இன்னும் அமைதியாகிவிட்டனர். இருந்த அமைதியில் சற்று நேரத்தில் தர்ஷினி காலையில் கண்ட கனவின் விளைவாக தூங்க ஆரம்பித்து விட்டாள். 

 

மேடையில் அனைத்து ஆசிரியர்களின் பாராட்டு மழையில் நனைந்த பாலா மேம் உடன் வேலை பார்த்த ஆசிரியர்களுக்கு நன்றியும், மாணவர்கள் அனைவருக்கும் அறிவுறையுடன் கூடிய வாழ்த்தையும் கூறி முடித்து கண்களில் கண்ணீரோடு விடைபெற்றார். அதன் பின் எச்.ஓ.டி. பாலா மேம் ன் பணியை பாராட்டியும், அவர் செல்வது கல்லூரிக்கு மிக பெரிய நஷ்டம் என்றும், மேலும் அவரது வருங்காலத்திற்கு வாழ்த்தி முடித்ததும் அவர் புது ப்ரொபசர் மித்ரன் பற்றியும், அவரது கல்வி தகுதிகளான பி.இ மற்றும் எம். இ கம்ப்யூட்டர் சயின்ஸ் இல் யுனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட் என்றும் தற்சமயம் நமது கல்லூரியில் முனைவர் படிப்புக்கு சேர்ந்து உள்ளதாகவும் அவரது கல்வித் தகுதியின் அடிப்படையில் நமது காலேஜில் ப்ரொபசராக தேர்ந்து எடுத்ததாக கூறினார்

பின்பு மித்ரனை மேடைக்கு அழைத்தார் .

 

அதுவரை கீழே இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தவன் எழுந்து நின்று அனைவரையும் பார்த்தான். அவனின் ஆறடி உயரத்திற்கும், அகன்ற மார்பும், ஒட்டிய வயிறுமாக இருப்பவனுக்கு ஒயிட் ஃபார்மல் ஷர்ட் மற்றும் பிளாக் பேண்டும் கச்சிதமாக பொருந்தி இருந்தது முகத்தில் இரண்டு வார தாடியுடன் கூடிய மீசையும், கண்களின் கூர்மையுடன் கூடிய தீட்சண்யமும் அதனை எடுத்து காட்டும் வகையில் பிரேம்லஸ் கண்ணாடியும், படிகளில் ஏறும் போது அவனுடன் சேர்ந்து அவனது தலையில் ஜெல் வைத்தும் அடங்காத முடியும் சேர்ந்து அசைந்ததில் கவர்ச்சியாகவும் அதே சமயத்தில் முகத்தில் இருந்த இறுக்கமும், அறிவு களையும் அவனை பேரழகாக காட்டியது. மாணவ மாணவிகள் அவனையே வாயை திறந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள், அதிலும் இந்த நான்கு பேரை பற்றி கேட்கவே வேண்டாம். 

 

 மேடை ஏறி வந்த அவனிடம் எச்ஓடி கைகுலுக்கி பின்பு அவனையும் ஓரிரு வார்த்தைகள் பேச சொல்லி அழைத்த போது மெலிதாக மறுத்து பின் மைக்கை வாங்கி “ வணக்கம் வருங்காலமே என்றதும் மாணவர்களிடையே ஏற்பட்ட பெரும் கூச்சலுக்கு பின் மித்ரனின் இறுக்கமான கூர் பார்வையிலும் கையசைத்து அமைதியாக இருக்க சொல்ல மாணவர்களின் பேர் அமைதியில் மீண்டும் பேச ஆரம்பித்தான். “நான் மித்ரன் என்ன பத்தி எச்ஓடி எல்லாமே சொன்னாரு மத்ததெல்லாம் என்ன கிளாஸ்ல நேர்ல பார்த்து தெரிஞ்சுக்கோங்க நன்றி என்று அத்துடன் ஷார்ட்டாக முடித்துக்கொண்டான்”. அதற்கும் மாணவர்கள் இடையே பலத்த கரகோஷம்துடன் அனைவரும் கலைந்துசென்றனர். 

 

கும்பல் கலைந்த பிறகு செல்லலாம் என அமர்ந்து கொண்ட தோழிகளுக்கு இடையில் மீண்டும் அரட்டை கச்சேரிஆரம்பமானது.

இங்கே தர்ஷினி சேரில் சாய்ந்து வேணியின் மேல் தலை வைத்து தூங்க ஆரம்பித்து விட்டாள்.

வேணி அருகில் உள்ள சிந்து விடம் “ என்னவாம் அவளுக்கு வந்த உடனே படுத்து தூங்க ஆரம்பிச்சிட்டா” என்று கேட்டாள்.

சிந்து காலையில் வந்த கனவை பற்றி கூறிக்கொண்டு இருக்கும் போதுதே மற்ற இருவரும் சேர்ந்து கொண்டனர். முதலில் ஆரம்பித்த கார்த்திகாவோ “ இவளுக்கு மட்டும் ஏப்படி வித்தியாசம் வித்தியாசமா கனவு வருது”. அதற்கு காயத்ரி “கொரியன் சீரியலில் மூழ்கிட்டா போல அதான் பலான பலான கனவு வருது”என்று கூறி சிரித்துக் கொண்டிருந்தனர். பின்பு பேச்சு இப்போது புது விரிவுரையாளருக்கு வந்தது அப்போது

சிந்து “ என்னடி இவ்ளோ அழகா இருக்காரு” ! கல்யாணம் ஆகியிருக்குமா ? முகம் வேற இவ்வளவு இறுக்கமா இருக்கு அதனால கல்யாணம் ஆகி இருக்குறதுக்கு வாய்ப்புகள் அதிகமா இருக்கு.

காயத்திரி “ ஏஜ்ம் கம்மியா இருக்குன்னு நினைக்கிறேன் ! கல்யாணம் ஆகி இருக்க வாய்ப்பு இல்ல, அழகா இருந்து மட்டும் என்ன பண்றது இவர்கிட்ட ஒரு சிரிப்புக்கு கூட பஞ்சமா இருக்கும் போல” என்றாள்.

வேணி “யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ தெரியல லட்டு மாதிரி இருக்காரு”? கல்யாணம் மட்டும் ஆகலனு தெரிஞ்சுச்சுன்னா இன்னைல இருந்து அவரு தான் என்னோட கிரஷ் இனிமே இவரு கிளாஸ் நான் மிஸ் பண்ணவே மாட்டேன்”.

கார்த்திகா “ ப்ரொபசர போய் சைட் அடிக்கிறீங்க அமைதியா வரப்போறீங்களா இல்லையா “ முதல்ல தூங்கிட்டு இருக்கவள எழுப்புங்க “தர்ஷினி ஏய் முதல்ல எழுந்திருடி எல்லாம் முடிந்துவிட்டது கிளாசுக்கு போகணும்” என்று எழுப்பி விட்டுக் கொண்டிருந்தாள்.

 

தர்ஷினி “என்னடி அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா” என்று கூறிக் கொண்டே எழுந்தாள். சிந்து”என்னது முடிஞ்சிருச்சா வா கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா ஓடுச்சுடி உனக்கு நல்ல தூக்கம் போல என்ன மறுபடியும் கனவுல அதானே ம்ம்ம் என்ஜாய் பண்ணுடி 

தர்ஷினி “செருப்பு” மனதில் ‘அய்யோ தெரியாத்தனமா இவ கிட்ட சொல்லிட்டேன் இத வச்சு ஒட்டுறாளே கடவுளே காப்பாத்துப்பா’என்று நினைத்துக் கொண்டாள். 

பின்பு நால்வரும் வரும் ப்ரொபசர் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் இவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்கள் பேசுவதுஒன்றும் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். அதை உணர்ந்தார் போன்று காயத்ரி அவளை திரும்பிப் பார்த்தால் அவளே மற்ற தோழிகளுக்கும் சிக்னல் தந்தால் அதில் அனைவரும் தர்ஷனியை பார்த்து சிரித்துக் கொண்டனர் .

 

இதை கண்ட தர்ஷினி கடுப்பாகி நால்வரையும் முதுகில் அடி வைத்தால் அதில் அனைவரும் ஓட இவளும் பின்னே ஓடி சிந்து வை பிடித்து விட்டாள். அதில் மற்ற அனைவரும் தப்பித்து விட்டனர் 

சிந்து “ ப்ளீஸ் டி விடுடி வலிக்குது அழுதுடுவேன் பாத்துக்க” என்று கூறிக்கொண்டே அவளிடம் இருந்து தப்பிக்க பார்த்தாள். அதைப் பார்த்த தர்ஷினி இன்னும் இறுக்கமாக அவளின் கையை பிடித்துக் கொண்டாள் “ இப்ப நீ விஷயத்தை சொன்னா உன்னை நான் இதோட விட்டுடுவேன் இல்ல நீ என்கிட்ட இன்னைக்கு வகை தொகையா மாட்டிக்குவ உனக்கு எப்படி வசதி டி”மிரட்டி கொண்டிருந்தாள். உடனே சிந்து நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்து விட்டார் அதை கேட்ட தர்ஷினி அடிப்பாவி என் கனவு முதற்கொண்டும் எல்லாத்தையும் சொல்லி விளம்பரப்படுத்தி வச்சிருக்கியே உன்ன எல்லாம் என்ன பண்றேன் பாரு “ மனதில் ‘அய்யோ நானே எல்லாத்தையும் சொல்லி பல்பு வாங்கிக்கிட்டேனே என்ன பழைய பிஞ்ச செருப்பாலயே அடிச்சுக்கணும் சரி இப்ப கெத்த மெயின்டன்பண்ணுவோம் ‘ என்று யோசித்துக் கொண்டே அவளிடம் “இப்ப என்ன புதுசா ப்ரொபசர் வந்திருக்காரு அவரு அழகா இருக்காரு, யங்கா இருக்காரு அவ்வளவுதானே பாத்துக்கலாம் விடு இதுக்காக எல்லாம் என் தூக்கத்தை விட முடியாது” என்றாள்.

 

அதைப் பார்த்த சிந்து மனதில் ‘இது கேடி பயபுள்ளயா ல இருக்கு ‘ என்று நினைத்துக் கொண்டாள் இருவரும் பேசிக்கொண்ட வகுப்பறை நோக்கி சென்றார்கள் உள்ளே சென்ற பெஞ்சில் அமர்ந்ததும் மீண்டும் இவளை பார்த்து சிரித்தவர்களை அடித்தவள் அடிதடி ஆகிவிட்டதில் கிளாஸ் பெல் அடித்ததை கவனிக்காமல் விட்டு விட்டார்கள் அதில் வகுப்பிற்குள் மித்ரன் வந்ததையோ, இவர்களை பார்த்ததையோ அவர்கள் கவனிக்கவில்லை அவன் போட்ட “சைலன்ஸ் “ என்ற சத்தத்தில் அனைவரும் பேஸ்ட் அடித்தது போல் நின்று விட்டார்கள் ஐவரும் இதில் தர்ஷினிக்கு கூடுதல் அதிர்ச்சி காலையில் கனவில் கண்டவனை இப்பொழுது நேரில் கண்டதும் கண்கள் விரிய அதிர்ந்து நின்று விட்டாள்.

8 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

  1. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

Leave a Reply to Vithya. V Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top