ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 1

அத்தியாயம் 1

இரும்புகேட்டு வாசலில் நந்தவனம் காலனி என பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது, காஞ்சிபுரம் மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஒரு ஊரில் இந்த பெரிய காலனி இருக்கிறது, 40 குடும்பங்கள் இங்கே வசித்து வருகின்றனர். 

இங்கே,  சொந்த வீட்டில் வசிப்பவர் களும் உண்டு, வாடகை வீட்டில் வசிப்பவர்களும் உண்டு. அழகான காலனி அது, காலனி உள்ளேயே சின்ன கோவில் உண்டு,  சுற்றி மரங்கள் விளையாடும் இடம் என ரம்மியமாக இருந்தது.

இதே, காலணியில் ஒரு வீட்டில் காலை பரபரப்பாக சமையல் நடந் து, கொண்டிருந்தது. அதே நேரம் ஹாலில் இருந்து, அம்மா… டைம்… ஆச்சுமா…., இன்னைக்கு ஆடிட்டிங் ஆபீஸ்ல இருந்து வராங்கமா,  லேட் ஆச்சுன்னா…சார்  கத்த  ஆரம்பிச்சி டுவாரு.

சாப்பாடு.. ரெடியா.. இல்ல… நான் போகட்டுமா…,ஆபீஸ்ல போய் சாப் பிட்டுகிறேன். என ஒருத்தி காட்டு கத்தி கொண்டு இருந்தாள். 

அப்போது உள்ளே இருந்து எட்டிப் பார்த்த, அவள் அம்மா, ஏண்டி இப் படி,காலையிலேயே கத்துற இன்னு ம், அஞ்சு நிமிஷத்துல ரெடியாயிடு ம், அப்படியே.. உன் தம்பியும் கூட்டி ட்டு போய்டு, என்றவர் உள்ளே சென்று விட்டார். 

இவள்தான் நம்நாயகி வண்ணமதி 21 வயது அழகு பெண். ஒரு டிகிரி முடித்தவள்,தனியார் கம்பெனியில் அக்கவுண்டண்டாக வேலை பார்க் கிறாள் இன்று அவள்  அலுவலகத் திற்கு, ஆடிட்டிங் வருகிறார்கள். அவள் கண்டிப்பாக..அங்கு இருக்க வேண்டும் அதனால் வந்த அலம்ப ல் இது.

அவள் அம்மா அப்படி சொன்னது ம், தொப்பன… சோபாவில், கோபத் துடன், கைகளை  கட்டி அமர்ந்து கொண்டாள். அப்போது தான் அவ ள் அப்பா குளித்துவிட்டு வெளியே வந்து, சோபாவில் அவன்  பக்கத்தி ல் அமர்ந்தார்.

அவள், அப்பா தாசில்தார் ஆபீஸி ல் கிளர்க்காக பணிபுரிகிறார், இன் னும்,  இரண்டு வருடத்தில் ஓய்வு பெற இருக்கிறார்.  அவர் பெயர் செந்தில்நாதன். தம்பி அகிலன் அம்மா அம்சவேணி 

செந்தில், என்ன மதிமா, இன்னைக் கு, ஆபீஸ்க்கு… சீக்கிரம் போகணும் னு சொன்ன இன்னும் கிளம்பலை யா…என கிச்சனை பார்த்தார். 

உடனே வண்ணமதி, ஆமாப்பா… அம்மா எப்பவும் போல லேட் பண் றாங்க…, கண்டிப்பா இன்னைக்கு நான் திட்டு வாங்க போறேன்… என் றால், முகத்தை உம்மென்று வைத் துக் கொண்டு 

அதில் சிரித்த,  செந்தில், வேணி…. பாப்பாவுக்கு,டைம் ஆச்சு… பாரு.. ரெடி ஆயிடுச்சா…,சாப்பாடு இல்ல.. னா இன்னைக்கு அவ வெளியே சாப்பிட்டுக்கட்டும் விடு, அகிலன  நான் போய் கொண்டு விடுறேன் என்றார் சமையலறையை பார்த்து 

உடனே வேணி சாப்பாட்டு பையுட ன், வெளியே வந்தவர், பொண்ணு  க்கு னா…  உடனே சப்போர்ட்டுக்கு வந்துவிடுவீங்களே.. கல்யாண வய சு வந்துருச்சு,… இன்னும் சமைக்க கத்துக்கல காலையிலேயே சீக்கிரம் எழுந்து,  கூட மாட.. ஒத்தாசையா.. இருந்தா, சமையல் வேலை சீக்கிரம் முடியும் இல்லங்க என்றார் கையில் கரண்டியுடன்,

 வேணி, அப்படி சொன்னதும் மதி அவர் கையில் இருந்த சாப்பாட்டு பையை, வாங்கியவள் அப்பா என க்கு, டைம் ஆச்சு,.. உங்க பொண்டா ட்டியை.. நீங்களே.. சமாளிச்சுக்கோ ங்க..என்றவள் தம்பி அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். 

அப்போது, பக்கத்து வீட்டு சின்ன பெண் ஒருவள் என்னடி மதியக்கா ஆபீஸ் கிளம்பிட்டியா…? காலையி லேயே… உன் வீட்ல, ஒரே… சத்தமா இருக்கு, என்னால படிக்கவே முடிய ல, உன்னால.. என்றாள் இடுப்பில் கை வைத்து, 

மதி உடனே,  ஆமா… இவ… பெரிய.. கலெக்டருக்கு, படிக்கிறா… ,நாங்க வந்து சத்தம் போட்டு… கெடுத்துட் டோம் போடி, அங்குட்டு.. அப்படிதா ன்டி, கத்துவேன்… .என்னடி? பண் ணுவ, என்றவள் அவள் தலையில் லேசாக கொட்டி விட்டு ஓடினாள். 

அந்த சின்னவள்,யேய்.. மதி என்ன அடிச்சிட்டல்ல.. என் அண்ணன்  கிட்ட சொல்லி… உன்னை… என்ன பண்றேன் பாருடி… என்றாள் சத்த மாய்…

மதி போடி…நான் அவனுக்கு குல்பி வாங்கி கொடுத்து… கரெக்ட் பண் ணிடு வேண்டி… போடி என்றவள் வேலைக்கு சென்று விட்டாள். 

அந்த காலனியில் நிறைய குட்டி வண்டுகள் இருக்கிறார்கள். அதில் பலர் மதியுடன்தான் சுற்றி கொண் டிருப்பர். இங்கே,  வண்ணமதி சரி யான,நேரத்துக்கு அடித்துப்  பிடித் து அலுவலகத்திற்கு வந்திருந்தா ள்.

வியர்த்து விறுவிறுக்க வந்தவள் அஞ்சு, என்னடி சார் வந்துட்டாரா என்னை, ஏதாச்சும் கேட்டாரா….டி என்றால் பதட்டமாய் 

 அஞ்சு, ஏய் மதி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் முதல்ல இந்த தண்ணிய,  குடி சார் இன்னும் வரல,  சரியா.., நீ முதல்ல தண்ணியை குடிச்சிட்டு அப்புறமா உன் ஃபைல் எல்லாம் எடுத்து வை என்றாள்.

 மதி, அப்பா இப்பதான்டி… நிம்மதி யா இருக்கு, பயந்துட்டே வந்தேன், என்றவள், எல்லாவற்றையும், எடு த்துவைத்தாள். சிறிது நேரம் கழித் து, அவள் எம்டியும் ஆடிட்டிங் ஆபீ ஸிலிருந்தும், வந்திருந்தனர்.

    ஒருமணி,நேரம் மீட்டிங் நடந்தது மதி எல்லாவற்றையும்…, சரியாக வைத்திருந்ததால், எந்த  பிரச்சன யும், இல்லாமல் இருந்தது.  அவர் போனதும், தான் மூச்சே வந்தது. அவள் எம்டியும் அவளை கூப்பிட் டு பாராட்டினார். 

மதி, அஞ்சு எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதுடி.. இப்பதான் நிம்மதியா இருக்கு…. என்றவள் அவளோடு கேண்டின் சென்றாள். அஞ்சு வும் அவளும் இரண்டு வருடங்களாக அலுவலகத்தில் வேலை செய்கிறா ர்கள், நிறைய பெண்கள் வேலை செய்தாலும் மதிக்கு, அஞ்சுவை பிடித்து போனது. நல்ல தோழிகளா க மாறி இருந்தனர். 

இங்கே காஞ்சிபுரத்தில் பெரிய கேட் டின் முன் ‘தில்லை நாச்சியார் இல் லம்’  என்று பெயர் பதிக்கப்பட்ட ஒரு பெரிய பெயர் பலகை வைக்க ப்பட்டிருந்தது, வாசலில் இருந்து வீட்டிற்கு செல்ல ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும். வாசலில் இரண் டு செக்யூரிட்டி, தோட்டத்தை… பரா மரிக்க, ஆட்கள்,  என அந்த மாளி கை, பார்க்கவே பிரம்மாண்டமாக இருந்தது

ஆனால் வீட்டின் உள்ளே அமைதி யாக இருந்தது. என்றைக்கு அவர் படுத்த படுக்கையானாரோ… அன் றைக்கே வீடு களை இழந்து போய் விட்டது.  வீட்டின் ஒரு அறையில் பெரிய படுக்கையில் படுத்து கண் மூடி இருந்தார். தில்லை நாச்சியார் அவர்தான் இந்த வீட்டுக்கு சொந்த க்காரி பெரிய ஜமீன் பரம்பரை வழி வழியாக கோடீஸ்வரர்களாக வாழ்ந்து வருகின்றனர்

அம்மையப்பன், காமாட்சி இவர்க ளின் தவப்புதல்வி. ஒரே மகள் தில் லை நாச்சியார். நன்றாக படித்தவர் திறமைசாலி தந்தையோடு சேர்ந்து தொழிலை கவனிக்கும் அளவிற்கு அறிவும் புத்திக்கூர்மையும் உதவி உடையவர் 

ஆனால்… அவரின் கல்யாண வாழ் வு பெரிதாக இனிக்கவில்லை. தங் கள், மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே… என மனம் நொந்த பெற்றவர்கள் சீக்கிரமே… மரணத் தை,  தழுவி இருந்தனர் 

நாச்சியின் ஒரே ஆறுதல், உலகம் எல்லாம் அவர்  மகன் விஜயேந்திர ன்,  மகள் கயல்விழி, மட்டும்தான் கல்யாண வயதில் இருக்கிறாள். விஜயேந்திரனுக்கு 29 வயது. ஆண் அழகன் 

 நாச்சியை போலவே அழகு, ஆறடி உயரம், கூர்நாசி,  அழுத்தமான உத டு, தொழில் ஜாம்பவான்.  தங்கள் பாரம்பரிய தொழிலான பட்டு தொ ழிலில், இன்னும் முன்னேறி பல நா டுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்து வருகிறான் தறி சார்ந்த பொருட்களை,

அதேபோல்,இப்போது உள்ள ஆண் களுக்கும், பெண்களுக்கும்,  ஏற்றா ர் போல் உடைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறான். வெளி நாடுகளுக்கும்… ஏற்று மதி செய்கிறான்.காஞ்சிபுரத்தில், டி நாச் சியார், பட்டு ஆலை என்றால் தெரி யாதவர்கள், யாரும் இருக்க முடியா து, அந்த அளவிற்கு தரமும் விலை யும் சரியாக இருக்கும். 

நாச்சியின் அருகில் ஒரு நர்ஸ் அவ ருக்கு,  பணிவிடை செய்து கொண் டிருந்தாள். கயல்விழி,அம்மா.. என ஓடி வந்து,அவரை அணைத்துக் கொண்டவள், சாப்டீங்களாமா…, எ ன்றாள், நாச்சியும் அவள் கன்னத் தில், முத்தமிட்டவர் சாப்பிட்டேன்.. டா… நீ இன்னும் கம்ப்யூட்டர்,  கிளா ஸ் போகலையா..  டிரைவர ரெடியா இருக்க சொன்னேனே.. என்றார். 

 கயல்விழி, உடனே அம்மா அதுக்கு தான் கிளம்பி வந்தேன், உங்ககிட்ட சொல்லிட்டு, போலாம்னு… என்றவ ள், அவள் சிட்டாக,  பறந்து விட்டா ள் நாச்சி சிரித்துக்கொண்டார். 

அதேநேரம் அவள் இப்படி போனது ம் அவர் அறையில், விஜயேந்திரன் நுழைந்தான். நாச்சி, வா.. விஜய்… கண்ணா.. கிளம்பிட்டியா ஆபீஸ்க் கு என்றார். 

விஜய் ஆமா…மா இப்பதான் கிளம் புறேன், என்றவன்,  நர்சிடம் இப்ப எப்படி இருக்கு, அம்மாவுக்கு டேப் லெட், எல்லாம் கொடுத்தாச்சா, டிப ன், சாப்பிட்டாங்களா…,  ஏதாவது முன்னேற்றம் இருக்கா… என்றான் 

அந்த நர்சுக்கு விஜய் என்றால் சிறி து, பயம். அவள் அது வந்து சார் சாப்பிட்டு.. மாத்திரை போட்டுட்டா ங்க கூடிய சீக்கிரம், குணமாயிடுவா ங்கன்னு.. எதிர்பார்க்கலாம் சார்… என்றாள் பயத்துடன் 

விஜய்,ம்ம்…என்று மட்டும் சொன்ன வன், தன் தாய் அருகே அமர்ந்து கொண்டு, அவர் கைகளைப் பிடித் துக் கொண்டான். நாச்சி, அவன் தலையை வாஞ்சியாக தடவியவர், கண்ணா..கயலுக்கு கல்யாண வய சு, ஆகிருச்சு…, என ஆரம்பித்தவர் நிறுத்தி, நர்சை  ஒரு பார்வை பார் த்தார்.உடனே, அந்த நர்ஸ் வெளி யே, சென்று விட்டார்.

நாச்சி, சீக்கிரமா அவர் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து முடிக்கணு ம்பா, அப்படியே… உனக்கும் என நிறுத்தியவர், அவன் முகம்  பார்த் தார். 

விஜய், ம்மா…நான் நிறைய தடவை சொல்லிட்டேன் எனக்கு கல்யாண த்துல, இன்ட்ரஸ்ட் இல்லன்னு கய ல்விழிக்கு, பார்க்க சொல்றேன், இப் ப, நான் வரேன்  என்றவன் சென்று விட்டான். போகும் அவனையே பெருமூச்சோடு பார்த்திருந்தார் நாச்சி…

 

தொடரும்…

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

4 thoughts on “வானவில் வரைந்த வண்ண நிலவே 1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top