அத்தியாயம் 21
அரை மணி நேர பயணத்தில் அரு ண் தாரணியை அழைத்துக் கொ ண்டு வீடு வந்து சேர்ந்தான்
பெரிய கேட்டை, பார்த்ததும் தார ணி மிரண்டு முழித்தாள். பின் கேட் திறக்கப்பட்டு கார் உள்ளே நுழைந் தது, அருண் தான் முதலில் இறங் கினான்
பின், கதவை திறந்து கொண்டு தா ரணி மிரண்ட விழிகளோடு பிள்ள யை அணைத்தபடி இறங்கினாள்
அருண் அவளை திரும்பிப் பார்த் து வா.. என்று கண்களால் அழைத் தபடி முன்னே நடந்தான்
தாரணி, சற்று பயந்தபடியே அரு ணின் பின்னால் மெதுவாக நடந் து சென்றாள்.
அருண் உள்ளே நுழையும் போதே மிர்ணா, டார்லிங்… என அவனை ஓடிவந்து அணைத்தாள்.
அருண் உடனே அவளை கை நீட் டி தடுத்தவன், வந்த விஷயத்தை சொல்லு என்றான் கோபத்துடன்
மிர்ணா வுக்கு அதில் மூக்கு உடை பட்டாலும் அருண்…, என்ன விட்டு டாதீங்க…, அருண், உங்கள நான் ரொம்ப லவ் பண்றேன். இப்ப நீ இல்லாம என்னால வாழ முடியாது உனக்காக என்னெல்லாம் பண்ணி இருக்கேன்
நான் இல்லாம உங்களால இருக்க முடியுமா? உங்கள ஹாப்பியா வச் சிக்க என்னால மட்டும்தான் முடியு ம், டார்லிங் என அவனிடம் குழை ந்தாள்
அருண் அவளைப் பார்த்து ஏளன மாக சிரித்தவன், என்ன மிர்ணா ம ன்னார் டெக்ஸ்டைல்ஸ் ஓனர் கூட லிவிங் ரிலேஷன்ல இருந்தியே என் ன ஆச்சி…, அவன் உன்னை இப்ப கழட்டி விட்டுட்டானா…. என்றான் நக்கலாய் பாக்கெட்டில் கைவிட்ட படி
மிர்ணா அவன் கூற்றில் சற்று அதி ர்ந்தாலும், என்ன சொல்ற அருண்! யாரோ என்ன பத்தி தப்பா உங்கிட் ட சொல்லி இருக்காங்க என்றாள் போலியாய் நடித்து
உடனே அருண் அவளை, கண்க ள் சுருக்கி பார்த்தவன் அப்படி னா அப்ப இதுக்கு என்ன சொல்ல போ ற, என்று ஒரு வீடியோவை காட்டி னான்
அதில் மன்னார் டெக்டைல்ஸ் ஓன ருடன் மிர்ணா நெருக்கமாக இருக் கும் வீடியோ ஓடியது அதை பார்த் து மாட்டிக்கொண்டதில் முழித்தவ ள்
ஐயோ! டார்லிங் அது நான் இல்ல அது, வேற யாரோ… என சொல்ல வந்தவளை இடை நிறுத்தியவன் ஸ்டாப் இட் மிர்ணா
நானும் கெட்டவன், தான் ஆனா… உன்ன போல, கேடு கெட்டவன் இ ல்ல, அவன் நல்லா இருக்கக் கூடா துன்னுதான், அவன் கிட்ட இருந்து உன்ன பிரிச்சுட்டு வந்தேன். ஆனா உன் மேல பெருசா எனக்கு அபிப்பி ராயம் அப்போது இருந்து எனக்கு இல்ல
அம்மா சொல்லி, தான் இதுக்கெல் லாம் நான் சம்மதிச்சேன். ஆனா நீ என்றவன் பணத்துக்காக கேவல மான வேலையை பார்த்து இருக்க என கூறியவன்
தனக்கு பின்னால் நின்று கொண் டிருந்த தாராணியை இழுத்து தன் பக்கத்தில், நிறுத்தியவன் இவள தான் நான் கல்யாணம் பண்ணிக் க போறேன் இப்ப நீ வெளியே போ கலாம் என்றான்.
மிர்ணா உடனே சாரி அருண் ஏதோ தெரியாம பண்ணிட்டேன், என்ன மன்னிச்சிடு நீ இந்த தப்புநடக்காது நீயும் நானும் எப்பவும் போல இருக் கலாம் என்ன கல்யாணம் பண்ணி க்கோ என கெஞ்சினாள்
அருண், நக்கலாய் என்ன இவ்வள வு நடந்து பிறகும் நான் உன்ன கல் யாணம் பண்ணிக்கணுமா, அதுக் கு வேற யாராவது இளிச்சவாயன் கிடைப்பான் , போடி…, வெளியே என்றான்.
மிர்ணா வாள் எதுவும் பேச முடிய வில்லை தாரணியை முறைத்துக் கொண்டே சென்று விட்டாள்
கல்பனா உடனே என்னடா அரு ண் பாக்கவே, பஞ்ச பரதேசி மாதிரி இருக்கா, எத்தனை தடவை சொல் லி இருக்கேன் அருண் நம்ம ஸ்டே ட்டஸ்க்கு ஏத்த மாதிரி பொண்ணா பார்த்து பழகுனு
இவள போய் என் வீட்டு மருமக னு சொல்ற என்றார் முகம் சுளித்து
உடனே அருண் மாம் முதல்ல நாம எங்கிருந்து வந்தோம்னு நினைச்சு பாத்துட்டு அப்புறம் மத்தவங்கள பேசுங்க மாம் என்றவன்,
தாரணி போலாம் எனகூறி மேலே தன்னறைக்கு அழைத்து சென்று விட்டான்
அவன், அப்படி கூறியதும் கல்ப னாவின் முகம் கருத்து விட்டது ஜெய் பிரதாப் இதை பார்த்தாரே த விர எதுவும் பேசவில்லை
உடனே கல்பனா என்னங்க பாத்தீ ங்களா…, அவன் எப்படி பேசிட்டு போறான்னு என்றான்
ஜெய் பிரதாப், உண்மையை தான சொல்லிட்டு போறான் கல்பனா என்றவர் அவரை தாண்டி அறைக் கு சென்று விட்டார்
கல்பனா அப்படியே நின்று விட்டா ர் அவர் கூற்றில்
இங்க தாரணியை தன் அறைக்கு கூட்டி வந்தவன், கொஞ்ச நாள் இ ங்க தங்கிக்க, எந்த பிரச்சனையும் உன் மாமா வால வராது
எல்லாத்தையும் முடிச்சிட்டு உன்ன நல்ல இடத்துல சேர்த்து விடுறேன் என்றான், அவளும் ரொம்ப நன்றி சார், இந்த உதவியை நான் என்ன க்கும் மறக்க மாட்டேன் என அறை யை ஒருமுறை சுற்றி பார்த்தாள்
எங்கும் பிரம்மாண்டம் எல்லாவற் றிலும் பணத்தின் செழுமை தெரிந் தது, வியந்துபோனாள்.
சொன்னது போல அரை மணி நேர த்தில் பக்க த்து அறையை அவளு க்கு சரி செய்து கொடுத்தவன், அங் கே அவளை தங்குமாறு சொன்னா ன்.
இங்கே விஜய் வீட்டில் சின்ன சின் ன சீண்டல்களுடன் விஜய் மதி உற வு போனதே தவிர பெரிதாக ஒன்று ம் நடக்கவில்லை அவர்களுக்குள்
அவனுக்கு தேவையான எல்லாவ ற்றையும் மதி தான் செய்வாள். கா லை உணவு பரிமாறிவது, முதல் கு ளிக்கும்போது அவனுக்கு தேவை யான எல்லாவற்றையும் எடுத்து வைப்பது முதல் அவள்தான் செய்தாள்
ஒவ்வொரு விஷயத்திற்கும் வண் ணமதியை தான் அழைத்தான் விஜயேந்திரன்
அவன் அவளை ஏக்கப்பார்வை பார்க்கிறான் மதிக்கும் அது தெரிகி றது, ஆனால், அவளால் அடுத்த க ட்ட உறவில் அவனோடு ஒன்றமுடி யவில்லை
விஜய் அவளை இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்தவில்லை ஒரு மாத ம் அப்படியே சென்று இருந்தது
மதியும் அவனுக்கு எல்லாம் செய் பவள் அவன் நெருங்கி வரும் போ து மட்டும் விலகி நின்று விடுகிறா ள்
இரவு உறங்கும் போது கூட அவன் அணைப்பில்லாமல் உறங்குவதில் லை. அவனுடைய சின்ன சின்ன சீண்டல்கள் இல்லாமல் அந்த நாள் முடிவதில்லை
நாச்சியும் இதெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். அவன் வேலைக்கு சென்றதும் மதியை அழைத்து தன் பக்கத்தில் அமர்த் திக் கொண்டவர்
மதிமா இப்படி உட்காரு, அப்புறம் நீயும் என் பிள்ளையை சந்தோஷ மா,இருக்கீங்களா என்றார்
மதியும் உடனே ஆமாம்…மா நல்லா தானே இருக்கோம் என்றாள் தடுமாறி,
நாச்சி நீங்க ரெண்டு பேரும் சந்தோ ஷமா, சிரிச்சு பேசுறத கேட்கலமா.. ரெண்டு பேரும் புருஷன் பொஞ்சா திய வாழ ஆரம்பிச்சிட்டீங்களான் னு கேட்டேன் என்றார்
அவர் அப்படி கேட்டதும், மதி திரு திருவென முழித்தாள் அதை கண் ட நாச்சி சிரித்தாலும் மதிமா என் புள்ளைய உனக்கு பிடிக்கலையா
பிடிக்காம, தான் அவனை கல்யா ணம் பண்ணிக்கிட்டியா?
நாங்க எல்லாம் உன்கிட்ட கேட்டதா ல, தான் அவன நீ கல்யாணம் பண்ணிக்கிட்டியா?
இல்ல.. கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த, அவனோட வாழ்க்கை நி னைச்,சு பயப்படுறியா?
மதி எதுவும் பேசாமல் அமைதியா க அமர்ந்திருந்தாள்
நாச்சி சொல்லு மதிமா எல்லார்கிட் டயும், நல்லா பேசுற ஆனா அவன் கிட்ட, விலகி நின்னு தான் எல்லா த்தையும் பண்ற,
அவன் உன்ன ஆசையா பார்க்கிற து உனக்கு புரியலையா.., மதிமா
எதுவா இருந்தாலும் என்கிட்ட ஓப் பனா, சொல்லு…,மதிமா
மதி, அது.. அது.. நாச்சிமா அவரை எனக்கு பிடிக்கும், அவரு எனக்கு நிறைய செஞ்சிருக்காங்க. என் குடு ம்பத்தை காப்பாத்தின கடவுள் அவரு
ஆனா அதை மீறி அவர்கிட்ட என் னால சகஜமா பேச முடியல, ஏதோ ஒன்னு தடுக்குது, நான் ஒரு வேல லவ் மேரேஜ் பண்ணி இருந்தா இப் படி இருந்திருக்காதோ என்னவோ
எல்லா பொண்ணுங்க மாதிரி என் கணவன், அப்படி இருக்கணும் இப் படி இருக்கணும்னு ஆசைப்பட்ட சாதாரண வீட்டு பொண்ணு நான்
ஆனா..நான் அவர பத்தி கேள்விப் பட்ட முதல் விஷயமே, அவர் கெட் டவர் பிளேபாய் அப்படின்னுதான்
போற,இடமெல்லாம் அவர நல்லப டியா பேசினாலும் அப்புறம் சொல் ற வார்த்தை, ப்ளே பாய்
இங்க வந்து நானும் நிறைய தடவ அவர் அந்த மாதிரி இடத்துக்கு உங் க முன்னாடியே சொல்லிட்டு போற த பாத்திருக்கேன்.
விஜய், சார் பணம் வச்சிருக்கவரு நாளைக்கு எனக்கும் அவருக்கும் சின்னதா சண்டை வந்தாலும் அவ ர் என்னை விட்டுட்டு யார்கிட்டயும் போயிடுவார்னு தான் எனக்கு தோ ணும்
நான் ரொம்ப எல்லாம் ஆசை படல நாச்சிமா, எனக்கே எனக்கான கண வன், என்னை மட்டுமே லவ் பண் ணனும், அவரோட காதல் எனக்கு மட்டும்தான் வேணும், என்னோட ஆசைகளை அவர்கிட்ட சொல்ல ணும்
அவருக்கு நான் மட்டுமே எல்லாத் துலயும் முதன்மையா இருக்கணு ம்
கடைசி வரை எனக்கு அவரும், அவருக்கு நானும் மட்டும் இருக்க ணும் எங்க ளுக்குன்னு ஒரு சின்ன குடும்பம், அவ்வளவுதான் ஆசைப் பட்டேன் நாச்சிமா,
நாச்சிக்கு அவள் பேசுவது சரியாக இருந்தாலும், அவன் அதையெல் லாம் விட்டு ரொம்ப மாசம் ஆச்சி மா என்கிட்டயும் சொல்லிட்டான் என்றார்
எனக்கு அவர்கிட்ட சகஜமா இருக்க கொஞ்சம் தயக்கமா இருக்கு நாச்சி ம்மா. அவர்கிட்ட இருந்து எனக்கு இந்த பயம் போனதுக்கு அப்புறம் நான் அவர் கூட சேர்ந்து வாழ்றேன் என்றவள் மன்னிச்சிடுங்க என்ன நிமிர்ந்தாள்
அங்கே நின்றிருந்த விஜயை பார் த்து அதிர்ந்து எழுந்து நின்று விட் டாள்
விஜய் கைகட்டி அவளையே பார் த்து நின்றான் மதி அய்யோ எல்லா த்தையும் கேட்டு இருப்பாரோ? என கண்களை உருட்டி அவனை பார் த்தாள் நாச்சியும் ஏதும் சொல்லவி ல்லை
விஜய், மதி என் ரூமுக்கு வா என்று விட்டு வேகமாக படி ஏறி சென்று விட்டான்
மதிக்கு சற்று பயமாக இருந்தாலும் மெதுவாக படி ஏறி அவனறைக்கு சென்றான்.
நாச்சியை பார்த்து பேசலாம் என்று வந்தவன் நாச்சியிடம் வண்ணமதி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அப்படியே கைகட்டி நின்று விட்டான்
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
super sis next epi plsss…….
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super vijay enna solla poran
Nice episode