ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

 

 

 

கண்ணை கவ்வாதே 

கள்வா – 9

 

சேது தாத்தா தன்னை புரிந்து கொண்டதில் மிகவும் திருப்தியாக புன்னகைத்த மகாவுக்கு அது மட்டும் போதவில்லை ஏன் என்றால் இதில் தனது மகளின் வாழ்க்கையும் அடங்கி உள்ளது அல்லவா அந்த பயத்துடனே நின்று இருந்தார்.

 

அதை பார்த்த மாதவனோ மிகவும் ஆறுதலுடன் தனது மனைவியின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டார். அதில் தைரியம் வர பெற்றவராக மனதில் இருந்து மெல்லிய புன்னகையை அவருக்கு பரிசளித்தார் மகா.

 

 

மகா கேட்க நினைத்த மனதில் உள்ள அனைத்து கேள்விகளும் புரிந்தார் போல் மாதவனே தனது புது மாமாவை பார்த்து கேட்க தொடங்கினார் இவர்களின் புரிதலை பார்த்துக்கொண்டு இருந்த அவரோ மாதவனின் கேள்வியில் தான் நினைவிற்கு வந்தார்.

 

“மாமா நான் கேட்குறேன் தப்பா நினைக்காதிங்க என்று ஆரம்பித்தவர் தனது கேள்வியையும் ஆரம்பித்தார்”

 

“ அம்மா கேட்டாங்க என்ற காரணத்திற்காக இதற்கு எப்படி உடனை ஒத்துக்கிட்டிங்க உங்கள் அளவிற்கு வசதி எங்களுக்கு இல்லையே ?”

 

“ காசு பணம் நம்மகிட்ட தாராளமாக இருக்கு மாதவா என் தங்கச்சியோட உறவு தான் இப்ப எனக்கு முதன்மையா படுது அதுவும் இது அவளோட கடைசி ஆசை வேற அதான்” என்றார்.

 

“ இரண்டாவது எங்களை பத்தி உனக்கு இப்ப தான் தெரியும் அதனால் விசாரிக்கிறது என்றால் நீயும் விசாரிச்சுக்க அதை பத்தின டீடெயில்ஸ் எல்லாத்தையும் கோபால் கிட்ட கேட்டுக்கோ மாதவா” என்றார்.

 

 

“ஐயோ மாமா உங்கள பத்தி நான் விசாரிக்கிறதா அதான் தொழில் முறையில இருக்கவங்க எல்லாருக்குமே உங்கள பத்தி நல்லா தெரியுமே நீங்க சொந்தக்காரங்க அப்படிங்றது மட்டும் தான் இப்ப எனக்கு தெரியும் ஆனா உங்கள பத்தி எனக்கு எல்லாமே தெரியும் மாமா ” என்றார்.

 

 

“சந்தோஷம் மாதவா அப்பறம் மித்ரன் தான் உங்களோட மாப்பிள்ளை அவன பத்தி தெரியணும்னா அவன் எங்களோட வளர்ப்பு விசா சொன்ன மாதிரி கொஞ்சம் கோபம் வரும் மித்தப்படி குடும்பமும் வந்துட்டா ரொம்ப பாசமா இருப்பான்.

 

 

 படிப்பு முடிச்சுட்டு கம்பெனியில் சேர்ந்த இரண்டே வருஷத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கம்பெனி வளர்ச்சி அடைந்திருப்பதாகவும், அவனுக்கு எல்லாத்தையும் கரெக்டா இருக்கணும் அவ்வளவு தான் அவனுடைய எதிர்பார்ப்பு” என்றார்.

 

 

இதை கேட்டவுடன் மகாவும் மனதில் ‘அய்யய்யோ பையன் எல்லாத்துலையும் பர்ஃபெக்ட்டா இருப்பானா நான் பெத்த பெருசு எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்கிறது பெரிய விஷயம் ஆச்சே’ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

 

 

“ மாமா எங்க பொண்ணு இப்பதான் காலேஜ் செகண்ட் இயர் தான் படிக்கிறா அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் பண்ணனும்னு நாங்க யோசிக்கவே இல்ல அதான் திடீர்னு கல்யாணம் பண்ணனும்னு சொன்னவுடன் எங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்றார்.

 

அனைத்து பெண்களை பெற்றவர்களின் மனதில் இருப்பது போலவே இன்னும் சிறு பிள்ளையாகவே நினைத்துக் கொண்டு இருந்த அவருக்கு மகளுக்கு உடனே கல்யாணம் என்றவுடன் பிரிவு தந்த பெரும் வருத்தம் அவரை சூழ்ந்து கொண்டது.

 

 

அதை கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவும் “நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம் மாதவா பாப்பா இப்ப கல்யாணத்தை பண்ணிட்டு காலேஜுக்கு போய் படிக்கட்டும் அவளை நாம யாரும் தடுக்க போறது இல்லையே அதனால் போற உயிர் சந்தோஷமா போகட்டுமே” என்றார் கண்ணில் நீருடன் கூறினார்.

 

 

“அப்படின்னா அப்பா தர்ஷினி காலேஜ் முடிக்கிற வரைக்கும் எங்க வீட்ல இருந்து போகட்டும் அதுக்குள்ள அவளுக்கு கொஞ்சம் சொல்லித் தர வேண்டியது எல்லாம் சொல்லிக் கொடுத்து முடிச்சிடலாம் என்று நினைக்கிறேன் நீங்க என்னப்பா சொல்றீங்க” என்றார்.

 

“அதுக்கு என்னம்மா தாராளமாக தர்ஷினி படிப்பு முடியும் வரை உங்களது வீட்டிலேயே இருக்கட்டும்” என்றார் பெருந்தன்மையாக இங்கு மாதவன் தம்பதியிடம் பேசி திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றுக் கொண்டார்.

 

இரு குடும்பமும் திருமணத்தைப் பற்றிய ஒரு மித்த கருத்துக்கு வந்திருந்தார்கள் மேலும் இப்பொழுது பெரியவர்கள் அனைவரும் கூடி பேசி திருமணத்தை எவ்வாறு எங்கு வைப்பது போன்ற திட்டமிடல்களும் ஹாஸ்பிடலையே ஆரம்பிக்கப்பட்டது

 

 

மித்ரனுக்கும், தர்ஷினிக்கு மட்டும் இன்னும் விஷயம் தெரிவிக்கப்படவில்லை அதை பற்றிய விவாதத்தில் தான் குடும்பத்தினர் ஈடுபட்டு இருந்தனர்.

 

 

மித்ரனிடம் சொல்வதற்கு அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பின்வாங்கி விட பொறுப்பு தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது அதேபோல் தர்ஷனியிடம் சொல்வதற்கு மகாவே பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

 

பின் மிகவும் நெருங்கிய சொந்தங்களை மற்றும் கல்யாணத்திற்கு அழைப்பதை பற்றியும் நாளை மறு நாள் நாள் நன்றாக இருப்பதாக அப்பத்தா கூறவும் அன்றே எளிமையாக கோவில் கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று அனைவரும் பேசி முடிவெடுத்துக் கொண்டனர்.

 

 

அப்பொழுது அப்பத்தா அனைத்து வேலைகளையும் தனது கையில் எடுத்துக் கொண்டார் பின் யார் யாருக்கு என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று ஒவ்வொன்றாக பிரித்துக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

 

 

“இன்னைக்கு இப்பேவே லேட் ஆகிடுச்சு அதனால் ரெஸ்ட் எடுத்துவிட்டு நாளை காலையில் முதல் வேளையாக ராஜி நீயும் கமலாவும் கிளம்பி நம்ம எப்பவும் எடுக்கற துணிக்கடையில போய் பொண்ணுக்கு பட்டு எடுத்துடுங்க”.

 

 

அப்புறம் நம்ம ஆசாரிக்கிட்ட சொல்லி பக்கத்துலயே இருந்து நம்ம குடும்பத்து தாலிய உடனே செஞ்சு சாயங்காலம் வைச்சி கொடுக்கணும் நான் சொன்னேன்னு சொல்லிடுங்க கார்த்திக் நீ போய் சாமிக்கு பூமாலை அப்புறம் கல்யாண மாலை எல்லாம் காலையில டைமுக்கு வந்துரனும்னு சொல்லிடு அந்த வேலையை நீ பார்த்துக்கோ 

 

 

செல்வம் நீ போயிட்டு சாப்பாட்டுக்கு சொல்லிடு கோயில்ல இருக்கிற எல்லாருக்கும் அன்னதானம் போடுற மாதிரி பாத்துக்கோ அப்புறம் நமக்கு வீட்டு ஆளுங்க சொந்தக்காரங்க எல்லாருக்கும் சேர்த்து சொல்லிவிடு. 

 

 

 சொந்தக்காரங்களுக்கு போன்ல கூப்பிட்டு அழைப்பு வச்சிடலாம் அதை நானும் தாத்தாவும் பார்த்துக் கொள்கிறோம். பிரியா தானே பாட்டி சென்று “ அப்பத்தா நான் தைக்கிற கடையிலேயே ஒரு மணி நேரத்துல பிளவுஸ்க்கு அரேஞ்ச் பண்ணி இருக்கேன்” என்று கூறினாள்.

 

 

அப்பா சரி டி நானும் தாத்தாவும் இங்கே இருந்து பார்த்துக்கிறோம் கார்த்திக் “ நீ போயி பூ வேலையை முடித்துவிட்டு பிரியாவை வந்து கூட்டிட்டு போய் அவள் சொல்ற டைலர் கடைக்கு போயிட்டு வந்துடறேன் சஷ்டியை நான் வச்சுக்கிறேன்” என்றார்.

 

 

“மகா நீயும் மாதவனும் உங்க சைடுல யார் யாருக்கு சொல்லணுமா அதை ஒரு லிஸ்ட் போட்டு போன்ல சொல்லிடுங்க அப்புறம் தர்ஷினிக்கு தேவையானதெல்லாம் நீ பாத்துக்கோ மகா ஏதாவது தேவைனா என்கிட்ட சொல்லு ஆளுங்கள விட்டு வாங்கிட்டு வர சொல்லிக்கலாம்” என்றார்.

 

 

அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி ஆளுக்கும் ஒன்றாக பிரித்துக் கொடுத்த பின் தாத்தாவோ கார்த்திகை அழைத்து “ மித்ரன் எங்கே” என்று கேட்டார்.

 

 

“ தாத்தா மித்ரன் கொஞ்சம் ஆபீஸ் வரை போயிட்டு வரேன் சொல்லி போனான் இன்னும் வரல நான் கால் பண்ணி என்னன்னு கேட்கிறேன்” என்று உடனடியாக மித்ரனுக்கு அழைப்பை ஏற்றான்.

 

அந்தப் பக்கம் “ ஹலோ” என்ற குரல் கேட்டவுடன் கார்த்திக் “ மித்ரா தாத்தா உன்கிட்ட முக்கியமா பேசணுமாம் உடனே உன்ன ஹாஸ்பிடல் கிளம்பி வர சொன்னார்” என்றான்.

 

“ அண்ணா நான் அங்க வந்து என்ன செய்யப் போறேன் அதான் ஆல்ரெடி வந்து பாட்டியை பாத்துட்டேனே எனக்கு ஆஃபீஸில் முக்கியமான வேலை இருக்கு இப்ப நீ போனை வை” என்றான் குரலில் அழுதத்தை கொண்டு.

 

“ இல்ல மித்ரா தாத்தா ரொம்ப அவசரமா பேசணும்ன்றாரு ஒரு நிமிஷம் இரு நான் போன தாத்தா கிட்ட கொடுக்கிறேன்” என்று அவசரமாக போனை கொண்டு போய் தாத்தாவிடம் கொடுத்தான். 

 

 

அவர் “ ஹலோ ”என்று கூறுகையிலேயே மித்ரன் “ தாத்தா என்னால இப்ப எல்லாம் வர முடியாது” என்றான் அவரிடமும் அழுத்தமாக அதற்கு அவரும் “இன்னும் பத்து நிமிஷத்தில் நீ ஹாஸ்பிடல் இருக்கனும்” என்று கூறி அவனை விட அழுத்தமாக கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

 

 

அவரின் வார்த்தைகளை மீற முடியாமல் உடனடியாக ஆபிஸ் இருந்து கிளம்பியவன் ஹாஸ்பிடல் வந்து கொண்டிருக்கும் போது காலையில் நடந்த சம்பவத்தில் அந்த இடத்தை கடக்கும்போது ஒரு நொடி அவளின் முகம் வந்து சென்றது பின் தன் தலையை உதறிக் கொண்டவன் வேகமாக தாத்தாகூறியது போல் அடுத்த பத்தே நிமிடத்தில் ஹாஸ்பிடலில் இருந்தான்.

 

 

தாத்தாவை தேடிக்கொண்டு அங்கு வருகையில் அவனின் எதிரிலேயே தாத்தாவும் வந்து கொண்டிருந்தார்

“என்ன தாத்தா எதுக்கு இவ்வளவு அவசரமாக வர சொன்னீங்க” என்றான். 

 

“உன்கிட்ட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் பேசணும் மித்ரா வா இங்க இருக்க ரூம்ல போய் தனியா பேசிட்டு வருவோம்” என்றார்.

 

“என்ன விஷயம்” என்று கேட்டுக்கொண்டே அவர் அழைத்துச் சென்ற இடத்துக்கு சென்றவன் தாத்தா கூறிய செய்தியில் “ என்னால முடியவே முடியாது தாத்தா” என்று திட்டவட்டமாக கூறி முடித்தான்.

 

 

தாத்தா எவ்வளவு எடுத்துக் கூறியும் முடியவே முடியாது என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவனிடம் தாத்தா என்ன கூறினாரோ கோபத்தில் முகம் ஜிவ் ஜிவ் என்ற சிவந்து கிடக்க அவரைப் பார்த்து “சம்மதம்” என்ற ஒற்றை வார்த்தையுடன் அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.

 

 

இங்கு மகாவும் தர்ஷினியை தேடிக் கொண்டு சென்றவர் அங்கே தனது இளைய மகளுடன் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தவளை கண்டவர் அருகில் சென்று தனது பெரிய மகளை வாஞ்சையுடன் தலையை தடவினார்.

 

 

அதை கண்டவளோ “ என்னம்மா “ என்று பாசமாக கேட்டாள் அதற்கு அவரோ “ தங்கம் அம்மா ஒன்னு சொன்னா கேட்டுப்பியா என்று அன்பாக கேட்டார்.

 

 

 அதில் முன்பு எப்போதோ ஒரு வாட்டி தனது தாய் வாயிலிருந்து வரும் தங்கம் என்ற வார்த்தையில் உருகி பின்விளைவுகள் எதை பற்றியும் யோசிக்காமல் தனது அம்மாவிடம் வாக்கு கொடுத்தால் “நீங்க என்ன சொன்னாலும் அப்படியே கேட்பேன் அம்மா” என்று அதில் மிகவும் மனம் குளிர்ந்து போனவர் அடுத்து சொன்ன செய்தியில் தர்ஷினியின் தலையில் இடி ஒன்று விழுந்தது. 

 

 

அவளது தங்கையோ கேட்ட செய்தியில் மனதிற்குள் ‘நம்ம அக்கா தங்கோன்ற ஒரு வார்த்தையில் இப்படி போய் சிக்கிட்டாளே இது எங்க போய் முடியுமோ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

இதில் அடுத்த இடியாக மாப்பிள்ளை மித்ரன் என்று கூறிய செய்தியில் அக்கா தங்கை இருவரும் அது தந்த அதிர்ச்சியில் இந்த உலகத்திலேயே இல்லை இதில் தர்ஷினி ஒரு படி முன்னேற்றமாக மயக்கத்திற்கே சென்று விட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

9 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

Leave a Reply to Srija aranganathan Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top