ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

 

 

கண்ணை கவ்வாதே 

கள்வா -12

 

தனியாக கிரகப்பிரவேசம் செய்து வந்த தர்ஷினியை பார்த்து அனைத்து உறவினர்களும் தங்களுக்குள் ஒரு மாதிரி பேசிக் கொண்டாலும் அதை கவனிக்கும் சூழ்நிலையில் அங்கு யாரும் இருக்கவில்லை. 

 

 

உள்ளே வந்த தர்ஷினிக்கு பாலும் பழமும் கமலா கொண்டு வந்து கொடுக்க வீட்டின் மருமகளாக பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்றி பூஜை செய்யும் முறைகளை சொல்லி குடுத்து அவளையே பூஜை செய்ய வைத்து கற்பூர ஆரத்தியை அனைவருக்கும் கொடுக்கும் படி கூறினார்.

 

 

குடும்பத்தார்கள் அனைவரும் பூஜை அறைக்கே வந்து கற்பூர ஆரத்தியை எடுத்துக்கொண்டனர்.

இதை பார்த்துக்கொண்டு இருந்த மகாவிற்கு தன் பெண் அனைத்து சடங்குகளையும் தனியாகவே செய்வதை நினைத்து மனதுக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது.

 

 

அவரின் முகம் வாட்டமாகவே இருக்கவும் சொந்தங்களிடம் பேசிக்கொண்டு இருந்த அப்பத்தா தன் மகளிடம் மகா விடம் பேசுமாறு கண் ஜாடை காட்டினார் அதை புரிந்துக்கொண்டு பத்மாவும் மகாவின் அருகில் வந்து அமர்ந்து பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார் அதற்கு பதில் அளித்துக் கொண்டு இருந்த மகா விடம் தெளிவு இல்லை.

 

 

பேசிக்கொண்டு இருந்தவரிடம் பேச்சை முடித்துக்கொண்டு வந்தவர் தனது மகளின் அருகில் வந்து அமர்ந்தார். “ என்ன ஆத்தா ஏன் உன் முகம் எல்லாம் ஒரே வாட்டமாக இருக்கு” என்று கேட்டார்.

 

 

“அம்மா இதை நான் எப்படி சொல்றதுன்னு தெரியலை பாப்பா எல்லா சடங்கையும் தனியா செய்வதை பாத்தாலே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா” என்றார்.

 

“ நீ ஒன்னும் வருத்தப்படாத மகா எல்லாம் நல்லதுக்கே நடக்குதுன்னு நினைச்சுக்கோ ரெண்டு நாளைக்கு முன்னாடி நம்ம வீட்ல கல்யாணம் நடக்கும்னு நம்ம நினைத்து பார்த்தோமா சொல்லு இதோ இப்ப நல்லபடியா கல்யாணம் முடிஞ்சுருச்சு பாரு” என்றார்.

 

 

அதுக்கு பத்மாவோ “ஆமாம்மா ஒரே நாள்ல நம்மளால முடிஞ்ச அளவுக்கு சிறப்பா கல்யாணத்தை கோயில்ல வச்சு நடத்திட்டோமா ரொம்ப சிறப்பா இருந்தது” என்றார்.

 

 

“ பின்ன இல்லையா நம்ப வீட்டு கடைசி கல்யாணம் அதான் உங்க அண்ணன்கள் கிட்ட எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்து கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்லிட்டேன்” 

 

 

“எங்கம்மா இன்னும் மாப்பிள்ளையை காணோம் எங்க போய்ட்டாருன்னு தெரியுமா” என்றார் மகா.

 

“வந்த உடனேயே பார்த்துட்டேன் மகா மித்ரன் அவனோட ரூம்ல தான் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கான் நீயும் போ தர்ஷினியை கூட்டிக்கிட்டு அந்த ரூமில் ரெஸ்ட் எடு” என்றார்.

 

பத்மினி அவர்களே கூட கூப்பிட்டுக் கொண்டு ஒரு அறையில் தாங்க சொல்லி காட்டிவிட்டு சென்றார் அவர்கள் உள்ளே சென்று நுழைகே இல்லையே பின்னோடு வந்த கமலாவோ “ அண்ணி மத்தியான சாப்பாடு ரெடி ஆகிடுச்சு எல்லாரும் வந்தா சாப்டுட்டு அப்புறம் நீங்க இங்க வந்து ரெஸ்ட் எடுங்க” என்று கூறினார்.

 

பின் மீண்டும் வந்து அனைவரும் மதிய உணவை முடித்துக் கொண்டு அவர்கள் தங்களது அறையை நோக்கி சென்றனர். உள்ளே சென்றவுடன் தர்ஷினி தனது அம்மாவிடம் “ அம்மா இன்னும் எவ்வளவு நேரம் இந்த புடவையை கட்டிட்டு இருக்கிறது என்னால முடியல மா டிரஸ் மாத்திக்கவா ?” என்று கேட்டாள்.

 

“இருடா நான் போய் அண்ணி கிட்ட கேட்டுட்டு வரேன்” என்று கூறி வெளியே சென்றார்.

அதுவரை அங்கே இருக்கும் ரூமில் உள்ள பொருட்களை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவள் அப்படியே அங்கு இருக்கும் கட்டிலில் உட்கார்ந்தாள்.

 

பின் அப்படியே சாய்ந்து உக்காந்தாள் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கம் வந்து கண்களை சொருகவும் அப்படியே கட்டிலில் படுத்து விட்டாள் ஏதோ கூறுவதற்காக ரூமில் உள்ளே வந்து பார்த்த ராஜி தர்ஷினி அசந்து தூங்குவதை கண்டு ஏசியை ஆன் செய்து விட்டு சத்தம் வராமல் ரூமை மூடிவிட்டு சென்றார்.

 

அங்கே மித்ரனின் ரூமில் கோவிலில் இருந்து மிகவும் கோபத்துடன் வந்தவன் நேராக தனது அறைக்குச் சென்று நீண்ட நேரம் ஷவரில் இருந்து தனது கோபத்தை தணிக்க முயன்றான் மீண்டும் மீண்டும் தர்ஷினி அடித்ததே நினைவுக்கு வரவும் அவனால் அவனையே கண்ட்ரோல் பண்ண முடியாமல் திணறினான்.

 

நீண்ட நேரம் நீருக்கு அடியில் நின்றதில் கோபம் கட்டுக்குள் வந்து அந்த இடத்தில் வன்மம் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. 

 

 

‘ நீ எங்க போய்டபோற என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டல இனிதான் வாழ்க்கயோட மறு பக்கத்தை பார்க்க போற இந்த மித்ரன் யாருனு தெரிஞ்சிக்கபோற’என்று மனதினில் கூறிக்கொண்டு தர்ஷினியை தனியாக சந்திக்கும் நேரத்திற்காக இப்போது இருந்தே காத்திருக்க ஆரம்பித்துவிட்டான்.

 

இங்கோ ஆழ்ந்த நித்திரையில் இருந்த தர்ஷினியை அவளது அம்மா எழுப்ப போராடிக் கொண்டிருந்தார். “ஏய் ஏழுந்திரி டி மணி ஐந்து ஆகப்போகுது” என்று அவளை போட்டு உலுக்கிக் கொண்டிருந்தார்.

 

 

அவளோ ஏதோ தாலாட்டு பாடுகிறார் என்று நினைப்பில் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று கொண்டிருந்தாள் ‘ இவள பெத்ததுக்கு நான் அமைதியா இருந்திருக்கலாம் எப்படித்தான் இப்படி ஒரு சூழ்நிலையில தூக்கம் வருதோ தெரியல எழுந்து இருக்குதா பாரு எருமை மாடு எவ்வளவு தான் எழுப்புறது கத்தவும் முடியல அடுத்த வீட்டில் வந்து’ என்று மனதினில் புலம்ப மட்டுமே முடிந்தது அவரால்.

 

 

“அம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிகுறேன்” என்று தூக்க கலகத்திலேயே அவள் உலறிக்கொண்டிருந்தாள் அதைக் கேட்டவர் ‘ இவளை இப்படி எழுப்பினால் சரிப்பட்டு வராது நம்ம எப்போதும் எழுப்புற மாதிரியே எழுப்பிடுவோம்’ என்று மனதில் நினைத்தவர். 

 

 

நேராக பாத்ரூமிற்கு சென்றவர் அங்கிருந்த கப்பில் கொஞ்சம் தண்ணி எடுத்துக் கொண்டு வந்து தர்ஷனியின் முகத்திலேயே தெளித்து விட்டார் அதில் பதறி கொண்டு எழுந்தவள் “ஏன் மா என்னை இப்படி எழுப்புறீங்க” என்று கேட்டாள் அவள் பேசுவதை கேட்டவர் அமைதியாக முறைக்கவும் கொஞ்சமாக கண்ணை திறந்து பார்த்தவள் இருக்கும் சூழ்நிலை புரிய ‘ஐயோ மகா காண்டாகிடுச்சு இனி நம்மளை வச்சு செய்யும்’ என்று மனதினுள் அலறியவள் வெளியே சமாளிப்பாக சிரித்து வைத்தாள்.

 

“அம்மா” என்று ராகம் இழுக்க “எந்திரி எருமை இன்னைக்கு கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியா இருக்க எங்க படுத்தாலும் அப்படியே தூங்கிட்டு” என்று திட்டிக் கொண்டிருந்தார் அந்த சமயத்தில் அறை கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள் பிரியா.

 

 

“ என்ன தர்ஷினி நல்ல தூக்கமா டிரஸ் கூட மாத்தவே இல்லையா” என்றாள். அதற்கு அவளது அம்மா மீண்டும் முறைக்கவும் ‘ஐய்யயோ’ என்று மீண்டும் மனதினில் அலறியவள் “ இல்ல அக்கா கொஞ்சம் டயர்டா இருந்தது எப்படி தூங்கிட்டுடேனு தெரியலை” என்று சமாளித்தாள்.

 

அவரோ எனக்கு மட்டும்தானே தெரியும் அவ ஒரு சோம்பேறி என்று எண்ணிக்கொண்டு இருந்தவரை பிரியா காபி கொண்டு வந்து இருப்பதாக கூறவும் “ உனக்கு ஏன்மா சிரமம் நான் வெளியே வந்து எடுத்துக் கொள்வேனே” என்றார்.

 

 

“ இதில் என்ன இருக்கு சித்தி என்று கூறியவளோ அத்தை தர்ஷினி ரெடி ஆகிட்டானா சாயங்காலம் வீட்ல அவள் தான் விளக்கு ஏற்ற கூப்பிடுறாங்க” என்றாள்.

 

 

“சரிமா இதோ பத்து நிமிஷத்துல நான் கூட்டிக் கொண்டு வரேன்” என்று கூறியவர் தர்ஷினி யின் தலை அலங்காரத்தை கலைக்க உதவிக்கொண்டு இருந்தார் உதவிக்கு வந்த பிரியாவை அவளது அம்மா கூப்பிடும் சத்தம் கேட்கவும் தான் பார்த்துக் கொள்வதாக கூறினார்.

 

 

பின் இருவரும் கிளம்பி வெளியே சென்றனர் அங்கு அவளுக்காக அனைவரும் காத்திருப்பதை கண்டவர்கள் வேகமாக செல்ல உடனடியாக அடுத்தடுத்த சடங்குகளை நடத்த ஆரம்பித்து விட்டனர்.

 

ஆதவன் மறைய ஆரம்பித்த பொழுது ஆரம்பித்த சடங்குகள் வெண்ணிலவு வலம் வரும் வேளையிலே முக்கிய சடங்காக சாந்தி மூகூர்த்ததில் வந்து முடிந்தது அதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போதே இப்போது உள்ள சூழ்நிலையில் இது தேவையா என்று தாத்தா ஆரம்பிக்கும் போதே அவரது சரிபாதியிடம் இருந்து மறுப்பு வந்தது.

 

 

“ என்ன பேசுரிங்க நீங்க கல்யாணம் அவசரமாக பண்ணாலும் இன்னைக்கு நாள் நல்லா இருக்கு நான் ஜோசியர் கிட்ட சாந்தி முகூர்த்தத்துக்கு சேர்த்து தான் நாள் குறித்த அதனால இன்னைக்கு வச்சிருவோம் இந்த மாதிரி விஷயத்தை தள்ளி போட கூடாது” என்றார்.

 

“நான் அதுக்கு சொல்லலை விசா மித்ரன் ஏற்கனவே கல்யாணத்துக்கு சம்மதிக்கல இதுல இன்னைக்கு சடங்கு எதுலயும் கலந்துக்கல இப்ப போயி சாந்தி முகூர்த்தம் வச்சிருக்கோம்னு நம்ம சொன்னா ரொம்ப கோபப்படுவான் அதுக்கு தான் சொல்றேன்” என்றார்.

 

“இல்லங்க உங்களை விட பொம்பளைங்களுக்கு தான் குடும்பத்தோட எப்படி கொண்டு போகணும்னு தெரியும் அதனால இன்னைக்கு சாந்தி முகூர்த்தத்தை வச்சிடுவோம் இல்லன்னா அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வராது தள்ளியே இருந்தா தள்ளியே இருந்துருவாங்க”என்று கூற அவர் கூறுவது தாத்தாவுக்கு நியாயமாகப்பட்டது. 

 

அப்ப சரிங்க கோபால் உங்க அம்மா சொல்ற மாதிரியே பண்ணிடுவோம் நீ என்னப்பா சொல்ற மாதவா “இதுல நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல மாமா பெரியவங்க நீங்க முடிவெடுத்தா அதன் பிரகாரமே முடிச்சுக்கலாம்” என்றார்.

 

“அப்புறம் மாமா நான் போய் ஹாஸ்பிடலில் அம்மாவை இன்னைக்கு நான் பார்த்துகிறேன் அப்படியே போகும்போது மகாவையும் தர்ஷனாவையும் சேர்த்து கூட்டிட்டு போயிடறேன் நாளைக்கு எப்ப மறுவீடு அழைக்கிறது என்னன்னு எனக்கு போன் பண்ணி சொல்லுங்க” என்று கூறினார்.

 

 

“ மகாவும் சின்ன பாப்பாவும் நம்ம வீட்டிலேயே இருக்கட்டும் மாதவா நீ போயிட்டு காலையில் இங்க. வந்துரேன்” என்றார்.

 

அவர் கூறுவதற்கு முன்பே மகா “எங்க கொஞ்ச நேரம் இங்கிருந்து வேலையை முடிச்சுட்டு நம்ம கிளம்பலாம்” என்று கணவரிடம் கூறியவர் “அம்மா வீட்ல எல்லாமே போட்டது போட்டபடி வந்தாச்சு இப்ப போய் ஒதுங்க வச்சா தான் நாளைக்கு சரியா இருக்கும் அதனால நாங்க இப்ப கிளம்புறோம்” என்று கணவனிடம் தொடங்கி விசாலாட்சி அப்பத்தாவிடம் முடித்தார்.

 

 

அதன் பிறகு வேலைகள் விரு விரு என்று நடக்க தொடங்கியது தற்சமயம் மித்ரன் மேலே அறையில் இல்லாதது வசதியாக போனது கார்த்திக் உடன் வேலைக்காரர்களை வைத்துக் கொண்டு ரூமை ரெடி செய்து விட்டான்.

 

 

தர்ஷினிக்கு இரவு உணவை சீக்கிரம் உண்ண வைத்து அவள் தங்கி இருந்த அறைக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். இவ்வளவு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் போதும் அனைவருக்கும் மனதில் மித்ரன் என்ன சொல்வானோ என்ற உதறல் இருந்து கொண்டே இருந்தது.

 

 

நேரம் சென்று கொண்டே இருக்க பிரியாவிடம் இருந்து சஷ்டியை வாங்கிக் கொண்ட ராஜி தர்ஷினினையே ரெடி பண்ணி மித்ரன் அறைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்

“சரி” என்று கூறி கிளம்பியவளை சாப்பிட்டுவிட்டு பின்னர் போகுமாறு தடுத்து நிறுத்தி விட்டார் பின் தானே சென்ற ப்ரியாவை சாப்பிட வைத்தே ரூமிற்கு அனுப்பினார்.

 

 

அங்கு சென்ற பிரியாவும் தர்ஷினி தன

து தங்கையிடம் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் அதிர்ந்து நின்று விட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

Leave a Reply to Srija aranganathan Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top