ATM Tamil Romantic Novels

மெய் தீண்டும் முரடா 17

அத்தியாயம் 17

 

ரிச்சர்ட் வள்ளியை காண வேண்டும் என்ற வேகத்துடன் தன் காரை வேகமாக ஓட்டி கொண்டே வந்து கொண்டிருந்தான் வரும் வழியில் இருள் சூழ்ந்து இருந்தது அவன் வந்த பாதை முட்கள்,கற்கள், பாறைகள் என்று சற்று மோசமாக தான் இருந்தது ஒரு கட்டத்தில் அவனின் கார் வந்த வேகத்தில் டயரில் கூர்மையான கம்பி போன்ற ஒன்று குத்தி கிழித்து மாட்டிக் கொள்ள கார் பிரேக் அடித்ததை போல் நின்றது. 

 

ரிச்சர்ட் காரில் இருந்து கீழே இறங்கியவன் காரில் ஓரளவு தெரிந்த வெளிச்சத்தில் சுற்றி பார்க்க ஒரு டயர் மட்டும் பஞ்சராகி இருப்பதை பார்த்து அதிர்ந்தான் எப்படியும் கார் இதற்கு மேல் ஒரு அடி கூட நகராது என்று தெரிந்தது. 

 

ரிச்சர்ட் காரை விட்டு வெளியே வந்தவன் “ஷீட்” என்று கத்திவிட்டு அந்த காரின் டயரை எட்டி உதைத்தான் என்ன செய்வதென்று அறியாமல் ஒரு கணம் நின்றிருந்தான். 

 

இன்னும் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் வள்ளியின் ஊர் வந்துவிடும் நடந்தே செல்வோம் என்று நினைத்து நடந்து செல்ல ஆரம்பித்தான் ஏனோ அவனே அறியாமல் உள்ளுக்குள் பதட்டமாக இருக்க வேகமாக நடந்து சென்றான். 

 

ஊரின் எல்லைக்குள் வந்தவன்  பெருமூச்சு ஒன்றை வெளியே இழுத்துவிட்டு கொண்டு அந்த ஒற்றை அடி பாதையில் நடந்தான் ஆங்காங்கே இருந்த குடிசைகளில் வெளிச்சம் தெரிய அதன் வழி நடந்து சென்றான்.

 

அதே நேரம் நாச்சியப்பன் கொலை வெறியுடன் தன் மகன்களை அழைத்து கொண்டு இருட்டில் தீப்பந்தத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தார். 

 

வள்ளி தன் தாயின் புடவையை கையில் வைத்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தாள் 

எவ்வளவு நேரம் அழுக முடியும் காலையில் இருந்து சாப்பிடாதது தலை சுற்ற அப்படியே சுவற்றில் சாய்ந்து கண் அசந்தாள். 

 

அவளின் கனவில் வள்ளியின் தாய் சாரதா பக்கத்தில் இருந்த அடுப்பில் சோறு வடித்து கொண்டிருந்தார் 

அவரை பார்த்த வள்ளியின் கண்கள் கலங்கியது அழுகையுடன் தேம்பலும் சேர்ந்து கொள்ள தவிப்புடன் “அம்மா” என்று அழைத்தாள். 

 

சாரதா அவளின் குரல் கேட்டு திரும்பியவர் “ஏன் அழுகுற நான் என்ன செத்தா போய்ட்டேன் இங்கே தானே இருக்கேன்” என்று கூறினார். 

 

“அம்மா நான்.. நீ.. இல்லாம எப்படி” என்று தன் திக்கு குரலில் வள்ளி தடுமாறி கொண்டே கேட்க

“நான் இல்லாம இருந்து தான் ஆகனும் தைரியமா இரு” என்று அவளிடம் கூறிக் கொண்டே இருக்கும் போதே அவரின் உடல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது 

“என் கிட்ட வராத” என்று கூறிக் கொண்டு அந்த தீயில் சாரதா எரிந்து சாம்பலாக “அம்மா” என்று கத்திக் கொண்டே கண்விழித்தாள் வள்ளி. 

 

அவளின் முகமெல்லாம் வியர்த்து ஒழுகி இருக்க ஏதோ உண்மையாகவே தன் அருகில் இவை அனைத்தும் நடந்தை போல அவளுக்கு ஒரு உணர்வை கொடுத்தது அந்த கனவு 

யோசனையுடன் அமர்ந்து இருக்க அந்த ஓலை வீட்டின் ஒற்றை மரக்கதவு படார் படார் என தட்டப்பட்டது. 

 

அந்த சத்தத்தில் வள்ளியின் இதயம் தூக்கி வாரிப்போட்டது “யார் அது” என்று கேட்டாள் ஆனால் கதவு மட்டும் மீண்டும் மீண்டும் தட்டிக் கொண்டே இருக்க பயத்துடனே எழுந்து அந்த மரக்கதவின் தாழ்ப்பாளை திறந்தாள். 

 

அடுத்த கணம் நாச்சியப்பன் தன் மகன்களுடன் அடவாடியாக அந்த வீட்டின் உள்ளே நுழைந்தார் அவர்களை பார்த்த வள்ளியின் இதயம் படபவென துடிக்க ஆரம்பித்தது அவளின் தம்பி தங்கைகள் உறங்கி கொண்டிருந்தனர். 

 

நாச்சியப்பன் அவளின் முடியை கொத்தாக பிடித்து இழுத்துச் “ஏன் டி மூதேவி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பொஞ்சாதியையே கை நீட்டி அடிப்ப நான் தூக்கி போடுற எச்சை சோத்தை திங்குற நாய் நீ அவ்வளவு திமிரு உனக்கு” என்று கூறிக் கொண்டே அவளின் முடியை பிடித்து இன்னும் இறுக்கமாக இழுக்க வலி தாங்க முடியாமல் வள்ளி முகம் சுளித்தாள் ஆனாலும் பல்லை கடித்து கொண்டு வலியை பொறுத்து கொண்டாள். 

 

“உன் பொஞ்சாதி என் அம்மாவையே அடிச்சா அதனால தான் அவளை அடிச்சேன் முடிஞ்சா உன்னையும் அடிப்பேன் டா உன்னால என்ன பண்ண முடியும்” என்று கேட்க நாச்சியப்பனின் மூத்த மகன் அவள் வயிற்றில் எட்டி ஒரு உதைவிட்டான் அதில் வள்ளி நிலைதடுமாறி அடுக்கி வைக்கப்பட்ட பாத்திரங்களின் மீது விழுந்தாள். 

 

அந்த சத்தத்தில் அவளின் தம்பி தங்கைகள் எழுந்து கொள்ள நாச்சியப்பனின் மகன் விடாமல் வள்ளியை அடிக்க வர அவர்கள் ஓடிவந்து அவனை தடுத்தனர் அந்த பிள்ளைகளை குழந்தைகள் என்றும் பாராமல் மூலைக்கு ஒன்றாக ஏதோ பொருளை தூக்கி எறிவதை போன்று இரக்கமே இல்லாமல் தூக்கி எறிந்தான். 

 

அதோடு விடாமல் வள்ளியின் அருகில் சென்று தன் செருப்பு காலுடன் அவள் முகத்தில் ஓங்கி மிதிக்க வள்ளி வலியில் சுருண்டு வயிற்றில் கை வைத்துக் கொண்டு விழுந்து கிடந்தாள். 

 

“டேய் டேய் போதும் விடுடா செத்துட போறா” என்று நாச்சியப்பன் கூற

“சாகட்டும்” என்று கூறிக் கொண்டே அவள் முகத்தில் ஓங்கி குத்தினான்

அவன் கையில் இருந்த புலி உருவத்தில் இருந்த மோதிரம் அவளின் கன்னத்தை கிழித்து பதம் பார்த்தது அதில் அவளின் ஒரு பக்க கன்னத்தில் இருந்து ரத்தம் ஒழுக ஆரம்பித்தது அவளின் தம்பி தங்கைகள் ரத்தத்தை பார்த்து இன்னும் அழுக ஆரம்பித்தனர். 

 

“இவளை இதோடு விடக்கூடாது பா” என்று கூறியவன் அந்த வீட்டின் வெளியே சென்று அங்கு ஒரு மூலையில் இருந்த தீப்பந்தத்தை எடுத்து வந்து வீட்டின் கூரையின் மீது தூக்கி எறிந்தான். 

 

“எல்லாரும் வாங்க வெளியே” என்று தன் தந்தை தம்பிகளிடம் கூறியனான் வீட்டின் உள்ளே வள்ளியின் பக்கத்தில் அவளின் தம்பி தங்கைகள் “அக்கா அக்கா” என்று அழுது கொண்டே இருக்க இருந்து  அந்த வீட்டின் கதவை வெளியே இருந்து மூடி தாழிட்டான். 

 

“குடும்பத்தோடு செத்து தொலையட்டும் நம்ம மேலே கையை வைச்சா என்ன நடக்கும்ன்னு இந்த ஊர்ல இருக்க எல்லாருக்கும் தெரியனும்” என்று வன்மத்துடன் கூறியவன் அனைவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். 

 

வள்ளி வலியில் சுருண்டு கிடந்தவள் நெருப்பில் ஏதோ கருகுவதை போன்று மணம் என்னவென்று சுற்றி முற்றி பார்த்தாள் கூரையின் மீது தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்க 

பதட்டத்துடன் எழுந்தாள் தன் தம்பி தங்கைகளை அழைத்து கொண்டு கதவை திறக்க முயல கதவு வெளி பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. 

 

“யாராவது காப்பத்துங்களேன் நாங்க உள்ளே இருக்கோம்” என்று கத்த ஒருவர் கூட அங்கே வரவேயில்லை. 

 

வீட்டை சுற்றி பார்த்தவள் சமைக்கும் புகை வெளியே செல்வதற்க்காக வைக்கப்பட்டிருந்தது பெரிய ஓட்டையை தன் வீட்டில் இருந்த கடப்பாரையை வைத்து இடித்து தள்ளினாள் உடனே தம்பி தங்கைகளை வெளியேற்றிவள் சரியாக அவள் தப்பிக்க போக மேலிருந்து கீழே ஒரு கட்டை நெருப்புடன் விழுந்தது தரையில் இருந்த உடைகள் தீப்பிடித்து அந்த இடமே தீயில் மறைந்து போனது. 

 

வெளியே வள்ளியின் தம்பி தங்கைகள் “அக்கா அக்கா” என்று கத்தி கதற அந்த சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். 

 

ஆனால் தீ முழுதாக பரவி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது அந்த தீயை பார்த்து மக்கள் யாரும் உள்ளே செல்ல அஞ்சி வெளியே நின்று கொண்டு இருந்தனர். 

 

தங்கள் வீட்டில் இருந்த பானைகளை எடுத்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். 

 

வீட்டின் உள்ளே இருந்த வள்ளி கட்டியிருந்த நூல் புடவையில் தீப்பற்றியது எரிந்தது உடனே அவள் பதட்டத்துடனே தன் புடவையை அவிழ்த்து எறிந்தாள். 

 

வள்ளியின் மனதில் இன்று தான் கண்டிப்பாக இறக்க தான் போகிறோம் என்று நினைத்து கண்களை மூடி நின்றிருந்தாள். 

 

வீடு தீப்பற்றி எரிந்த செய்தி கேள்விப்பட்டு சிவநேசன் அங்கே ஓடி வந்திருந்தான் வள்ளியின் தம்பி தங்கைகள் வெளியே அழுது கொண்டிருக்க தீயின் உள்ளே சென்று கதவின் தாழை திறந்து நுழைந்தான் வள்ளி சுவற்றின் பின்னே ஓடி நின்று இருக்க “ஏன் மா வெளியே வா தீ வீடு முழுக்க பரவுது” என்க வள்ளி தான் உடை அணியாததால் வெளியே வரவேயில்லை. 

 

அப்போது அந்த வீட்டின் உள்ளே மின்னல் வேகத்தில் நுழைந்தான் ரிச்சர்ட் வள்ளி சுவற்றின் பின்னே நின்றிருக்க உரிமையாக உள்ளே ஓடினான் அவள் இருக்கும் நிலையை பார்த்து தான் அணிந்திருந்த சட்டையை அவளுக்கு அணிவித்து அவளை தோளில் தூக்கி போட்டு கொண்டு வெளியே வந்தான். 

 

அவனின் உரிமையான இந்த செய்கையை பார்த்த சிவநேசன் உடனே வெளியேறினான். 

 

“ஏய் இடியட் வெளியே வராம எதுக்கு உள்ளேயே நின்னுட்டு இருந்த” என்று அவளை இன்னும் நாலு ஆங்கில கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்தான் வள்ளி தன் மானத்தை மறைக்க மேலே இருபக்கமும் கை கை வைத்து கொண்டு இருந்தாள். 

 

அவள் குள்ளமாக இருந்ததால் ரிச்சர்ட்டின் மேல் சட்டை அவளின் முட்டிக்கு கீழே வரை இருந்தது ரிச்சர்ட் சட்டையில்லாமல் தன் கட்டுடல் மேனியை ஊருக்கே காட்டி கொண்டு அவளை திட்டிக் கொண்டு இருக்க ஊரே இதை ஆவென்று பார்த்தது. 

 

சிவநேசனின் தாய் அவன் அருகில் வந்து “டேய் சிவநேசா பார்த்தியா புரிஞ்சிக்கிட்டியா வா வீட்டுக்கு போலாம்” என்று அவனின் கைப்பிடித்து இழுத்து சென்றார். 

 

வள்ளியின் தம்பி தங்கைகள் ஓடி வந்து அவளின் காலை கட்டிக் கொண்டனர். 

 

ரிச்சர்ட் “உன் உடம்புல எங்கேயாவது அடிப்பட்டிருக்க” என்று உரிமையுடன் கேட்டு அவளின் தோளில் கை வைக்க அவளோ இல்லை என்று அவனின் கையை எடுக்க போக

“ஏய் வெயிட் பேபி இது என்ன காயம்” என்று அவளின் கன்னத்தில் இருந்த ரத்த காயத்தை தொட்டு கேட்க 

“அது… அது” என்று வள்ளி தடுமாறினாள். 

 

“இப்போ நீ சொல்ல சோறியா இல்லையா” என்று கோவப்பட

அவளின் தம்பி “ஜமீன்தாரும் அவரோட மகனும் அக்காவை வந்து அடிச்சாங்க குடிசையிலையும் தீ வைச்சு எங்களை வைச்சி பூட்டிட்டு போயிட்டாங்க” என்றான் தன் மழலை மொழியில். 

 

“இவங்க சொல்றது எல்லாம் உண்மையா” என்று ரிச்சர்ட் வள்ளியை பார்த்து கேட்க அவளோ பயத்துடன் நின்றிருந்தாள். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “மெய் தீண்டும் முரடா 17”

Leave a Reply to Vithya. V Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top