ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

 

 

கண்ணை கவ்வாதே 

கள்வா -17

 

தாத்தாவும் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருக்க சட்டென்று வெளியே ஹாலிற்கு வந்தவன் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேலையாளை அழைத்து அப்பாவையும் பெரியப்பாவையும் அண்ணன் குடும்பத்தையும் அழைத்து வருமாறு கூறியவன். 

 

“அம்மா” என்று அழைத்துக் கொண்டு கிச்சனுக்கு சென்றான் அங்கு மிகவும் பரபரப்பாக காலை வேளையில் உணவுக்காக தயார்

 செய்து கொண்டிருந்த தனது அம்மாவையும் பெரியம்மாவையும் ஆளுக்கு ஒரு கையை பிடித்துக் அழைத்து சென்றான்.

 

 

“என்னடா என்ன விஷயம் எதுக்கு இப்ப காலையிலேயே எங்க ரெண்டு பேத்து கையையும் புடிச்சுகிட்டு இழுத்து கிட்டு வர எங்களுக்கு கிச்சன்ல வேலை இருக்கு இன்னும் டிபன் ரெடி பண்ணல தாத்தா டேப்லெட் போடுறவரு சீக்கிரம் கொடுக்கணும் விடுடா” என்று கூறிக்கொண்ட அவன் இருப்பிற்கு சென்றனர்.

 

அனைவரும் வரவும் இவர்களையும் மித்ரன் அழைத்து வரவும் சரியாக இருக்க அனைவரும் ஹாலில் கூடினர் என்னவென்ற குழம்பத்துடன் வந்தவர்கள் மித்ரன் கூறிய “நான் இந்த வீட்டை விட்டு போகிறேன்” என்ற செய்தியை அதிர்ச்சியில் நின்று விட்டனர்

 

உடனே அவனது அப்பா அவனை அடிக்கவே வர அதை தடுத்த கார்த்திக் “ சித்தப்பா என்ன இது” என்று அவரை நிறுத்தினான்.

 

அவனது அம்மாவும் அப்போதே கண்ணீரில் கரைய ஆரம்பித்து விட்டார்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மித்திரனும் இறுகிய படியே நின்றுவிட்டான்.

 

அனைவரும் என்னை ஏது என்று கேட்டதற்கு ஒரு பதிலும் கூறாமல் நேராக தனது ரூமிற்கு சென்றவன் தனக்கு தேவைப்படும் லக்கேஜை எடுத்துக் கொண்டு கீழே வந்தவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு தனது ப்ளாக் ஆடியை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.

 

செய்து தாத்தா வீட்டில் அனைவருக்கும் ஸ்தம்பித்த நிலை தான் பிரியா சென்று தாத்தாவையும் அப்பத்தாவையும் அவர்கள் ரூமில் இருந்து அழைத்து வர கோபாலனோ அவரை கேள்வியுடன் பார்த்தார்.

 

அனைவரது பார்வையில் புரிந்தார் போன்று கமலாவை பார்த்தவர் “மா நீ அழுகாத அவன் இன்னும் கொஞ்ச நாள்ல வந்துருவான் இப்ப அவனை அவன் போக்குல விட்டுடுங்க” என்று கூறி சமாதானப்படுத்தி விட்டு உடனே தன்னறையை நோக்கி சென்று விட்டார்.

 

தனது மாமியாரிடம் ராஜியும், கமலாவும் அழுது கொண்டே கேள்விகள் கேட்க இன்று நடந்ததை மட்டும் சுருக்கமாக கூறியவர் தனது கணவர் கூறியது போலவே எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்”என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

 

 

அவன் சென்றதும் அவனது பின்னோடையே சென்ற கார்த்திக் மித்ரன் தங்களது அப்பார்ட்மெண்டில் உள்ள அவன் எப்போதும் தங்கும் அதே வீட்டில் இருப்பதை பார்த்து குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தகவல் கூறினான்.

 

இப்படியே ஒரு மாதமும் சென்று இருக்க அவனை தொடர்ந்து வீட்டிற்கு வர சொல்லி குடும்பத்தார் அனைவரும் அவன் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று வரவைக்க முயற்சி செய்து பார்த்தும் அது தோல்வியிலேயே முடிந்தது.

 

இப்படியே இவனது 10 மாத காலமும் சென்று இருக்க அங்கு தர்ஷினி தனது கல்லூரி வாழ்க்கையை எப்போதும் போல் அனுபவித்துக் கொண்டிருந்தாள். 

 

தனது வாழ்க்கையில் இந்த பத்து மாதமும் நடந்ததை நினைத்து தற்போது தனது வீட்டில் அவனுடைய ரூமில் கீழே படுத்து விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவன்.

 

 தான் மட்டும் இப்படி கஷ்டப்பட அவள் சந்தோஷமாக இருப்பதை கண்டவன் அவளை பழிவாங்க நினைத்து தான் 

அவளது காலேஜிலேயே ப்ரொபஷராக சேர்ந்தது.

 

 ஆனால் அதுவே தனக்கு இப்படி ஒரு ஆப்பாக அமையும் என்று அவன் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை 10 மாதங்கள் கடந்தம் இன்னைக்கு அவளை பார்த்ததும் தனக்குள் ஏற்பட்ட உணர்வுகள் அதை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. 

 

இருக்கட்டும் தாளிகோர்ப்பு பங்க்ஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் என்கூட தான் இருக்கணும் அப்புறம் உன்னை கவனித்துக் கொள்கிறேன் என்று நினைத்துக்கொண்டான்.

 

அவனுக்கு தெரியவில்லை அவள் தான் இவனை வைத்து செய்யப் போகிறாள் என்று விதி அவனை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தது.

 

மறுநாள் காலை விடிந்ததும் மித்ரனை தவிர அனைவரும் கிளம்பி தர்ஷினியும் வீட்டிற்கு சென்றார்கள் தாலி கோர்கும் பங்க்ஷனை பற்றி பேசவும் அன்றைக்கு அவர்கள் வீட்டில் வைக்கும் விருந்திற்கும் முறைப்படி அழைப்பதற்காக வந்ததாக கூறினார்கள்.

 

“ மகா குலதெய்வ கோவிலுக்கு நெருங்கின சொந்தக்காரங்க எல்லாத்தையும் கூட்டிட்டு போயிருவோம் இங்க வந்து மித்த எல்லாருக்கும் விருந்து வைத்துருவோம்” வீட்டில் பெரிய மனுசியாக அப்பத்தா கூறிக் கொண்டிருந்தார்.

 

மாதவனும் “ ஆமா அத்தை மகாவோட அண்ணா வீட்டுக்கும் தங்கச்சி வீட்டுக்கும் சொல்லணும் என்னோட பெரியப்பா வீட்டுக்கு சொல்லனும் அத்தை” என்று கூறினார். 

 

 

“அப்ப சரி மாதவா எத்தனை பேர் வராங்க என்னன்னு லிஸ்ட் எடுத்து சொல்லிரு எல்லாரும் வேன் புடிச்சு கோயிலுக்கு போயிட்டு வந்துரலாம் நல்ல நேரம் காலைல 7:30 மணிக்கு தானாம் அதனால சீக்கிரம் கிளம்பினா சரியா இருக்கும்” என்று தாத்தா கூறவும். 

 

 

“அப்பா அப்போ நானும் மாதவனும் சேர்ந்து வேனுக்கு பேசிடுறோம் சுவாமிக்கு தேவைபடுவதை லிஸ்ட் எடுத்து கார்த்திக் கிட்ட குடுத்துடு ராஜி அவன் பார்த்து வாங்கிட்டு வந்துடுவான்.

 

 

 கமலா நீயும் பிரியாவும் வீட்டுக்கு தேவையானதை பார்த்து பண்ணிடுங்கமா தனது தம்பி செல்வாவிடம் திரும்பி நீயும் மச்சானும் போயி காலையில சாப்பாட்டுக்கு மத்தியானம் விருந்துக்கும் உண்டான ஏற்பாட்டை எல்லாம் பார்த்துக்கோங்க என்று வரிசையாக வேலைகளை பிரித்து கொடுத்தவர் தனது தந்தையிடமும் சரியாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டார்.

 

 எல்லோரும் வருவதால் தர்ஷினியே அன்று காலேஜுக்கு லீவு எடுத்துக் கொள்ளுமாறு மகா கூறி சென்றார் அதனால் அவளும் தனது அறையில் இருந்து அவர்கள் பேசுவது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

அன்றைய பொழுது சூரியன் மறைந்து வெண்ணிலவு வானில் உலா வரும் நேரத்தில் தான் அனைவரும் கிளம்பி வீட்டிற்கு சென்றனர் காலையில் அங்கு சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிடுமாறும் அங்கிருந்தே அனைவரும் ஒன்றாக கிளம்பி குலதெய்வகோவிலுக்கு சென்று வருவோம் என்று கூறி சென்றனர்.

 

தர்ஷினிக்கு அந்த ஒரு இரவு எப்படி சென்றது என்றே தெரியாத அளவுக்கு தற்பொழுது அனைவருடனும் சேர்ந்து அந்த வேனில் சென்றுக்கொண்டிருந்தாள்.

 

காலேஜிலில் இருக்கும் தனது கணவனுக்கும் இப்போது தனக்கு முன்னாடி அமர்ந்து இருக்கும் கணவனுக்கும் ஆயிரம் வித்யாசம் கண்டாள்.

 

அங்கு பார்மல் லுக்கில் வேறு விதமாக இருந்தான் என்றால் இங்கு அப்படியே அதற்கு நேர்மாராக வேஷ்டி சட்டையில் அதே இறுக்கமான முகத்தில் தற்பொழுது மீசையின் நுனியில் லேசாக முறுக்கி விட்டு கோவிலுக்கு செல்வதால் அப்பத்தா சாமி ரூமில் வைத்து விட்ட சிறிது சந்தனத்துடனும் சட்டையையும் மீறி தெரியும் கைபுஜங்களுடன் ஆண்மையின் இலக்கணமாக

கண்களை மூடிய நிலையில் அமர்ந்து இருந்தான்.

 

 

அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த தர்ஷினியை அருகில் உட்கார்ந்திருந்த அவளது தங்கச்சி “என்ன அக்கா மாமாவையே விடாம பார்த்துக்கிட்டு இருக்க என்ன சைட் அடிக்கிறியா கூப்பிட்டு சொல்லவா மாமா கிட்ட” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லாட்டி தர்ஷனா நான் எங்க அவரை பார்த்தேன் நான் சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன்” என்று மழுப்பி கூறும்போதே 

 

“ நீ சைட் அடிச்சத நான் பார்த்தேன் என்னை ஏமாத்த பாக்காத சரியா நீ உண்மையா சொல்லலாமா இப்ப நான் மாமாவ கூப்பிடு உண்மையா சொல்லிடுவேன் உனக்கு எப்படி வசதி” என்று மிரட்டினாள்.

 

 

“இப்ப என்னடி ஆமா நான் அவர தான் பார்த்தேன் என்னோட கண்ணு என் சைட்டு என் புருஷன் நான் அப்படித்தான் பார்ப்பேன் நீ சொல்லி பாரு அதுக்கு அப்புறம் நீ வந்து உயிரோட இருக்க மாட்ட” என்று இப்போது மிரட்டுவது இவளது முறையானது.

 

 

இப்படியே இவர்கள் வழக்காடிக் கொண்டிருக்க பெரியவர்கள் அடுத்து செய்யப்போகும் ஏற்பாட்டுகளை பற்றி பேசிக் கொண்டிருக்க கண்ணை மூடி அமர்ந்திருந்த மித்திரனின் நினைவுகளிலும் காலையில் கண்ட தர்ஷினியின் உருவமே நின்றது.

 

 

காலையில் அனைவரும் கோவிலுக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டு பரப்பரபுடன் சுற்றி கொண்டிருக்க இவன் அங்கு இருந்த ஹாலில் சஷ்டியுடன் அமர்ந்திருந்தவன் சட்டென்று ஏற்பட்ட சத்ததில் நிமிர்ந்து பார்க்கவும் தர்ஷினி தனது தாயின் கையை பற்றி கொண்டு வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.

 

ஒரு நொடி இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் தலை முதல் பாதம் வரை அவளை ஒவ்வொன்றாக ரசிக்க ஆரம்பித்து விட்டான்.

 

 

 தலையில் வைத்திருந்த சிறிய நெற்றி சுட்டியும் கன்னத்தை வந்து தொட்டு தொட்டு ரகசியமாக பேசிக் கொண்டிருந்த ஜிமிக்கியும் எப்போதும் தன்னை கூடுதலாக ஒரு நொடி பார்க்க வைக்கும் அந்த வைர மூக்குத்தியும் பிரம்மன் அளவு எடுத்து வடித்த உதடுகளும் மாம்பழ கலரில் பச்சைக் கரை வைத்த பட்டு புடவையும் அதற்கு மேட்சாக அணிந்திருந்த பச்சை கலர் பிளவுசும் அங்கே தன் கைகளால் தொட்டு உணர்ந்த மென்மைகளை இப்பொழுது தொடமுடியாத ஏக்கத்தை பார்வையிலே தீர்த்துக்கொண்டவன்.

 

பின் புடவையை நேர்த்தியாக கட்டி இருந்த விதமும் அவளை சரியாக பார்ப்பதற்கு முன்பிருந்தே எப்போதும் அவனை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் சிறு இடையும் அதற்கு மெல்லிய ஒட்டியானமும் என்று அலங்கார தேவதையாக வந்திருந்தாள்.

 

அவள் சென்ற பின்பும் அவன் அங்கேயே பார்த்துக்கொண்டு இருக்க அவனது அருகில் அமர்ந்த அவனது மாமனார் கேட்ட கேள்வியிலேயே சுயம் உணர்ந்தான்.

 

“ என்ன மாமா கேட்டிங்க” என்று திரும்பி கேட்க “ எப்படி இருக்கிகுறிங்க மாப்பிள்ளை” என்று அவர் வினவினார்.

“நான் நல்லா இருக்கேன் மாமா நீங்க எப்படி இருக்கீங்க அப்புறம் இன்னொரு விஷயம் மாப்பிள்ளை எல்லாம் நீங்க கூப்பிட வேண்டாம் சாதாரணமா மித்ரனே கூப்பிடுங்க” என்று கோரிக்கை வைத்தான்.

 

 

அது எப்படி என்று தயங்கிய வரை மித்ரன் தான் மிகவும் வற்புறுத்தி கூப்பிட வைத்தான்” சரி மித்ரா வா கிளம்பலாம் டைம் ஆயிடுச்சு” என்று கூற இருவரும் சென்று வேனில் ஏறினர் இதை பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் வாயை பிளந்து கொண்டு நின்று விட்டனர்.

 

 

ஏனென்றால் மித்ரன் இவ்வளவு பேசுவான் என்றே அவனது திருமணத்திற்கு அப்புறம் தான் அவர்களது குடும்பத்திற்கே தெரிய வந்தது. அவனது குடும்பம் அவனை ஆச்சரியமாக பார்ப்பதை கண்டும் காணாமல் தனது மாமனாருடம் சென்றான்.

 

இவ்வாறு மித்திரன் யோசித்துக் கொண்டு கண்ணை மூடி அமர்ந்து இருக்கும் போதே அவர்களது வேன் கோயிலில் சென்று நின்றது அனைவரும் இறங்கும் சத்தத்தில் கண்களை திறந்தவன் பின் கடைசியாக தர்ஷி இறங்கவும் அவளுக்கு பின்னாடி மித்ரன் இறங்கினான்.

 

 

கோவிலில் அவர்களது பங்காளிகளும் நெருங்கிய உறவினர்களும் வந்து சேர்ந்து இருக்க அதன் பிறகு மற்ற அனைவருக்கும் நிற்க நேரமில்லாமல் சென்றது மித்திரனின் வயதுடைய அவனது கசின்கள் வந்திருக்கவும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

 

 

முகூர்த்த நேரம் வரவும் தாத்தா வந்து மித்ரனை அழைக்க அவருடன் சென்றவன் கோவிலில் உள்ள தனது குடும்பத்தார்கள் அனைவரும் அமர்ந்திருப்பதை கண்டவன் தனது அண்ணணுடன் இணைந்து கொண்டான்.

 

 

கோவில் பூசாரி சுவாமிக்கு அபிஷேகம் பண்ணி வஸ்திரம் சாந்தி அலங்காரம் செய்து பொங்கலிட்டு அடுக்கு தீபம் ஏற்றி முறையே தாத்தாவிற்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்ய அவர் தனது பேரனுக்கு இன்று முக்கியமான நாள் என்றும் அவனுக்கும் சேர்த்து கட்டுமாறு கூற பூசாரி மித்திரனையும் அழைத்து பரிவட்டம் கட்டி மரியாதை செய்து முடித்தனர்.

 

 

பின்னர் ஊர் பெண்களும் வீட்டுப் பெண்களும் சேர்ந்து தர்ஷினி அங்கிருந்த கோவில் மண்டபத்தில் அமர்த்தி அப்பத்தா தன் கையில் இருந்த தாலி செயினை மாங்கள்யத்துடன் கோர்த்து பின் அவர்கள் முறைப்படி ஒரு உருக்கள் சேர்த்து மித்ரனை அழைத்து அவனது கையில் தாலி செயினை கொடுத்து தர்ஷினியின் கழுத்தில் அணிவிக்குமாறு கூறினார்கள்.

 

 

அதை கையில் வாங்கியவன் கீழே அமர்ந்திருந்த தர்ஷினையே கண்ணோடு கண் நோக்கி ஒரு நொடி கலக்க விட்டவன் பின் தன் கையில் இருந்த தாலிச்செயினை அவளது கழுத்தில் போட்டு இரண்டாவது முறையாக கல்யாணம் செய்து கொண்டான்.

 

 

அந்த நொடிஇருவருக்கும் உடம்பில் ஒரு மின்சாரம் பாய்ந்தது பின் இருவரையும் அமர வைத்து நலங்கிட்டு சுவாமி பாதத்தில் வைத்து எடுத்த மாலையை மாற்றிக் கொள்ள செய்தனர்.

 

அப்படியே இருவரையும் சுவாமி தரிசனம் செய்து கொள்ள சொல்லி அழைத்துச் செல்லுமாறு பிரியாவை கூறினார். 

 

மூவரும் கிளம்பி சுவாமி தரிசனம் செய்ய செல்லும்போது இடையில் தர்ஷினிக்கு துணையாக அவளது தங்கை தர்ஷனா வந்து இணைந்து கொண்டாள்.

 

சன்னிதானத்திற்குள் சென்று தீபஜோதியில் சு

வாமியை வணங்கி தங்களது வாழ்க்கை நல்லபடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று தனித்தனியாக வேண்டிக் கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

5 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

    1. Srija aranganathan

      உங்களுக்காக இன்றே மற்றொரு அத்தியாயம்

Leave a Reply to Srija aranganathan Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top