ATM Tamil Romantic Novels

உயிர் வரை பாயாதே பைங்கிளி

உயிர் வரை பாயாதே பைங்கிளி – யது நந்தினி

 

 

1.

 

 வெண் முகிலை கொண்டு திரை நெய்து நிலமகளை பதுக்கி வைக்க நினைத்தானோ அந்த மூடுபனி… அவன் எண்ணங்களை அறிந்தே தன் காதல் பெண்ணை மீட்டெடுக்க தீப்பந்தாய் மேலெழுந்த ஆதவனோ தன் மெய் கதிர்களால் மூடுபனியை விரட்டியப்படி தன் இளம் சூடான கரங்களால் நிலமகளை அணைக்க வந்து விட்டான் ஆருயிர் காதலன்…

 

நுனிபுற்களில் ஆடும் பனித் துளியும்,மேனியை சிலிர்க்க வைக்கும் நளிர் குளுமையும்,வாசலில் இட்ட வண்ணக் கோலங்களும் மாதத்தில் மார்கழிக்கு மட்டுமே உரித்தான மேன்மைகளாகும்…

 

கடையம்பட்டி எனும் ஊரில் வீடுகள் தோறும் கன்னி பெண்களின் விரல்களில் வண்ணங்கள் வர்ணஜாலமிட அதில் வேரின்றி,கொடியின்றி பூசணி பூ பூத்தது தான் என்ன மாயமோ???

 

மார்கழியில் பரங்கி மலர் வைக்க,தை மாதத்தில் திருமணம் கைகூடிவரும் என்னும் வழக்கு இன்றளவிலும் நம் ஊரில் உண்டே… நவீனத்தோடு பழமையும் மாறாமல் கடைபிடிப்பதில் நம் தமிழர்கள் என்றும் மேன்மையானவர்களே!!(அப்பப்ப இப்படி அடிச்சி விடுவேன் கண்டுக்க கூடாது ஹோகே)

 

இதோ அதிகாலையே குளித்து தன் அழகிய மயிர் தோகையை அள்ளி முடித்து டவல் சுற்றி தலையில் கொண்டையிட்ட வண்ணம் குனிந்து அமர்ந்தபடி வாசலில் கோலமிட்டன தந்த விரல்கள் மார்கழி குளிரில் துடிக்கும் செவ்விதழும் கருந்தேனி போன்ற அலைபாயும் கண்களும் அவள் பால்மேனியும் அதிகாலை கதிரவனின் ஒளியும் கலந்து தங்கமென என ஜொலித்தாள் அவள் மேனகை… வேதியியல் ஆசிரியை பெண்கள் உயர் நிலை பள்ளி கடையம்பட்டி…  

 

அடியே மேனகா நேரம் ஆச்சு இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க அங்க??நாலு கம்பி இழுத்து விடுறதுக்கு நாலு மணி நேரமா??வேலைக்கு கிளம்ப எண்ணம் இல்லையா என தன் ஓங்கார குரலில் அங்கலாயித்தப் படி முற்றம் தாண்டி வாசல் வந்தார் தையல்நாயகி…

 

இதோ ஆச்சுமா இந்த கிளிக்கு மூக்கு மட்டும் வரஞ்சா முடிஞ்சது… என கூறிவிட்டு மூக்கையும் வரைந்து முடித்தவள் அம்மா என் கோலம் எப்படிமா இருக்கு???என ஆசையாக கேட்ட மகளை எங்கே அவர் கவனித்தார் அவர் கவனம் முழுவதும் எதிர் வீட்டு வாசலில் அல்லவா குவிந்து இருந்தது…

 

அங்கோ தலைக்கு குளித்து தளர பின்னலிட்ட ஜாடை கரு நாகம் போல் முன்னால் ஆட அல்லி விழிகள் அலைமோத முல்லை கரங்கள் இரண்டும் கோலமிட பிறை முகத்துடன் எதிர்பாட்டாள் எதிர் வீட்டு மைனா திலோத்தமா அவள் கணித ஆசிரியை சேம் பெண்கள் உயர் நிலை பள்ளி கடையம்பட்டி…  

 

நறுக்கென்று மகள் தலையில் கொட்டி விட்டு“ஏண்டி உனக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா உன்னை இதுக்கா சீமையில் இல்லாத படிப்ப படிக்க வச்சேன் இப்படி என் கௌரவத்தை சிதைச்சு புட்டியேடி உருப்புடாத பைய மவளே இதுக்கு தான் பொட்ட புள்ளைய நம்பாத அவளை படிக்க வச்சது போதும் கட்டி கொடுத்திடுனு உங்க அண்ணன் கிட்ட சொன்னேன் கேட்டானா அந்த கிறுக்கு பைய மகன் என தையல் நாயகி தாம்தூம் என குதிக்க..  

 

“ஏன்மா நான் அப்படி என்ன பண்ணிட்டேன் என்னை இப்படி கொட்டுற??என அன்னையின் கோபம் எதற்கு என்று தெரியாமலே முணுக்கு என்று கண் கலங்கி விட்டது மேனகைக்கு அன்னையின் திட்டு அவளுக்கு ஒன்றும் புதுசு இல்லைதான் ஆனால் ஒரு தப்பும் செய்யாமல் திட்டு வாங்குவதும் கொட்டு வாங்குவதும் கூடவே அவளை படிக்க வைத்ததே தப்பு என்பது போல் பேசும் அன்னையால் அவளின் உள்ளம் சற்று வலிக்க தான் செய்தது…  

 

“என்னது என்ன பண்ணியா அரைஞ்சேன்னா பாரு அங்க பாரு எதிர்த்த வீட்டுக்காரிய அவள் பத்து புள்ளி வச்சி கோலம் போட்டு இருக்கா நீ வெறும் எட்டு புள்ளில கோலம் தான் போட்டு என் மானத்தையே வாங்கி புட்ட அந்த எதிர்த்த வீட்டுக்காரி என்னை பத்தி என்ன நினைப்பா …இனி இந்த ஊருக்குள்ள எப்படி நான் தலை காட்ட முடியும்..,இப்படி பண்ணிட்டியேடி என தையல்நாயகி (ரவுசு கொஞ்சம் ஓவரா தான் இருக்கு)அழுது புலம்ப …   

 

நீ என்ன பண்ற இந்த கோலத்தை இப்போவே அழிச்சிட்டு பதினாறு புள்ளி கோலம் ம்ஹூம் வேணாம் ஒரு நூற்றி எட்டு புள்ளி கோலம் போடுற என தையல் நாயகி மேனகையை பிடித்து தள்ள

 

எதே நூற்றி எட்டு புள்ளியா அம்மா என்ன நினைச்சிட்டு இருக்க நீ இப்போ குனிஞ்சி புள்ளி வைக்க ஆரம்பிச்சா இராவே வந்துடும் கூடவே சேந்து எனக்கு முதுகு கூன் விழுந்துடும் அப்புறம் வர மாப்பிளை எல்லாம் கூன் விழுந்த பொண்ணை கட்ட,கூட சேர்த்து அறுவது பவுன் வரதட்சணை கேட்ப்பான் பரவாயில்லையா என மேனகை இதுக்கா என்னை திட்டுன என்கிற தோரணையில் கேட்க

 

எதே கூட அறுவதா???என வாய் பிளக்க நின்றார் நாயகி…

 

எவன் வீட்டு சொத்த எவன் அள்ளி திங்குறது என் மவன் கண் காணாத தேசத்துல இராப்பகலா கண்ணு முழிச்சி கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை அள்ளி கொடுக்க எனக்கு என்ன பைத்தியமாடி என எதோ யாரோ நிஜமாகவே வந்து நேரிலே கேட்டது போல் ஆத்திரம் அடைந்தார்… ஐய என்றானது மேனகைக்கு…

 

யம்மோய் எங்க ஆரம்பிச்சி எங்க போய் நிறுத்துற நீ… நான் ஒரு பேச்சிக்கு தான் சொன்னேன்.. உனக்கு என்ன அவங்க வீட்டை விட நம்ம வீட்டு கோலம் பெருசா இருக்கணும் அவ்வளோ தான நாளைக்கு பாரு பெரிய கோலம் நம்ம வாசல்ல இருக்கும் இப்போ நீ போய் சமையலை கவனி எனக்கு ஸ்கூல்க்கு நேரமாகுது பார் நான் இதெல்லாம் எடுத்து வச்சிட்டு வரேன் வாசலில் கிடந்த பொருட்களை எடுக்க“பத்து புள்ளி கோலம் போடுறாளாம் இது என்ன பிஸ்கோத் நாளைக்கு நாங்களும் போடுவோம் பத்தாயிரம் புள்ளி கோலம் என எதிர் வீட்டுக்கு கேட்கும்படியே சத்தமாகவே நாயகி புலம்பி விட்டு உள்ளே போக

 

“நாளைக்கு புள்ளி வச்சா தான இருக்கிறதுலே ஈஸியா ஒரு ரங்கோலிய போட்டு எஸ் ஆகிட வேண்டியது தான் …எதுக்கு வம்பு அந்த புள்ளை எல்லாத்தையும் கேட்டு இருக்குமோ என தனக்குள்ளே முனகிக் கொண்டவள் எழும் போது தற்செயலாக எதிர் விட்டு பெண்ணை பார்க்க அவளும் இவளை தான் புன்னகை முகம் மாறாமல் பார்த்தள்…“ஐயோ கேட்டுடுச்சி போலயே”இவள் என்ன சொல்வது என தெரியாமல் தலை குனிந்தப் படி உள்ளே சென்று விட்டாள்… கோலத்துக்கே கொட்டு விழுது இதுல பேசி இருந்தா வேற வினையே வேணாம் என்று தான் அமைதியாக சென்று விட்டாள் மேனகை( பிள்ளை உஷாரா தான் இருக்குது )

 

 

 

 மேனகை என்னமோ மெல்லமா தான் பாஸ் முனகினா அது எப்படி அந்த அம்மா காதுல கேட்டுச்சோ

 

“அடியே மெத்த படிச்ச மேதாவி ரங்கோலினா என்னாடி…என உள்ளே வந்ததும் நாயகி கேட்க…

 

“ஆத்தி இன்னும் இந்த கோலம் மேட்டர் முடியலையா (இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு )அது அது வந்து ஆன் அது ரொம்ப சிக்கலான கோலம்மா எந்த புள்ளி எங்க வருதுனு யாருக்குமே தெரியாது ஏன் எனக்கே வருமான்னு தெரியாது… என சமாளிக்க

 

என்னது என்ன சொன்ன???நாயகிவிடாது கேட்க

 

“அவ்.. அது அவ்வளவு கஷ்டமான கோலம்மா ஊடு புள்ளி நேர் புள்ளி கோணல் புள்ளின்னு நிறைய வரும்மா அதெல்லாம் என்னை மாதிரி படிச்ச அறிவாளிங்க மட்டுமே போட முடிஞ்ச கோலம்மா என எப்படியாவது அன்னைய வாயை அடைத்தல் போதுமென மேனகை முட்டு கொடுக்க…

 

அப்படியா படிச்ச புள்ளைங்க மட்டும் போடுவாங்கனா அப்போ அந்த எதிர்த்த வீட்டுக்காரிக்கும் அந்த கோலம் தெரியுமா??அவளும் போட்டு விடுவாளோ போடுவாளா என்கிற ரீதியில் புருவம் சுருக்கி நாயகி கேள்வி கேட்க…

 

“ச்சே அதெல்லாம் ரொம்ப ரகசியமான கோலம்மா நான் தான் சொன்னேன்ல என்னை மாதிரி அதிகம் படிச்ச அறிவாளிங்களால் மட்டும் தான் போட முடியும்ன்னு வேற யாருக்கும் தெரியாது…!!”என அதி ரகசியம் போல் காட்டி கூறியவள் மனதிலோ

 

கடவுளே இந்த கோல பிரச்சனைல இருந்து என்னை எப்படியாவது காப்பாற்றி விட்டுடு அதுக்கு பரிக்காரமா அந்த ரைட்டர் கையில் சூடம் ஏத்துறேன் சாமி ( எதே!! மொத எபிலே என்னை முடிச்சி விட்டுருவா போலையே )என மானசீகமாக வேண்ட கடவுளுக்கே கேட்டு இருக்கும் போல என்ன நினைத்தாரோ நாயகி…

 

“அப்படினா சரி,சரி அசமந்தமா என் வாயை பார்த்து நிக்காம சீக்கிரம் பள்ளிக்கூடம் கிளம்பி போற வழியை பார் என கூறி விட்டு சென்ற நாயகிக்கும் எதிர் வீட்டுக்கும் அப்படி ஒரு பிடித்தம்…எந்த அளவுக்கு என்றால் எதிர் வீட்டில் என்ன நடந்தாலும் அதை விட ஒரு படி மேலாக அவர் வீடு நடக்க வேண்டும் என்கிற எண்ணம் ம்ஹூம் வெறி என்றே சொல்லலாம் உதாரணத்திற்கு எதிர் வீட்டு பெண்ணுக்கு அவர்கள் திலோத்தமா என்று பெயர் வைத்ததால் இவரது மகளுக்கு மேனகை என்று வைத்தார்… அவர்கள் மகளை படிக்க வைத்து ஆசிரியர் ஆக்கிய ஒரே காரணத்திற்காக தன் மகளையும் கட்டாயப் படுத்தி ஆசிரியர் ஆக்கி விட்டார்… இதே போல் தான் அங்கு அவர்கள் மகளுக்கு ஒன்று செய்தால் இங்கு இவர் தன் மகளுக்கு இரட்டிப்பாக செய்து விடுவார்… இந்த எண்ணம் நாயகியை கடைசியாக எங்கு கொண்டு போய் விட்டது என்றால் அவர்கள் மகளின் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் குறிக்க இவரும் வீம்புக்கு அவசரமாக ஒரு மாப்பிளையை பார்த்து அதே நாளில் தன் மகளுக்கு திருமணம் நடத்த பத்திரிக்கை அடிக்கும் வரை கொண்டு வந்து விட்டது…அதுவும் அவர் மக்களுக்கே தெரியாமல்…

 

நாயகியின் வீண் கெளரவத்தால் மேனகையின் வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகுமா???அப்படி என்ன வாய்க்க தகராறு அந்த எதிர் வீட்டோடு என்று தான கேக்குறிங்க அது வந்துஉஉஉ அது எப்படி நான் என் வாயல சொல்லுவேன்…(மக்கள் அதுக்காக வேற வாய வாங்க முடியும்)எதே…

 

 

6 thoughts on “உயிர் வரை பாயாதே பைங்கிளி”

Leave a Reply to Yadhu Nandhini Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top