கடுவன் சூடிய பிச்சிப்பூ 1
அதிகாலை நான்கு மணிக்கு சிவன்கோவில் முன்னேபெரிய வண்ண பூக்கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் முல்லைக்கொடி.
ஐந்து மணிக்கு கோவில் பூக்கடைகள் திறக்கப்பட்டு மக்கள் ஓரிருவர் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். கோவில் முன்னே வல்லவராயன் கார் நின்றதும் “சின்னய்யா கார் வந்துடுச்சு” என்று துள்ளிக்குதித்து கோவில் பூக்கடைக்கு ஓடியவள் “கண்ணம்மா அக்கா ரோஜா மாலை கொடுங்க சின்னயா வந்துடாக” என்றாள் படபடப்பாக
“இரு பொண்ணு தரேன்” என்று கண்ணம்மா மாலை எடுத்து தருவதற்குள் அவளாகவே மாலையை எடுத்துக்கொண்டு வல்லவராயன் காருக்கு பக்கம் ஓடினாள்.
வெள்ளை வேஷ்டி சட்டையுடன் காரிலிருந்து இறங்கி கம்பீரமாக நடந்து வருபவனை கையெடுத்து கும்பிட்டனர் அங்கே நிற்கும் ஊர் மக்கள். அந்த ஊரில் பெரிய பால் பண்ணை நடத்தி வருகிறான் ராயன் ஊர் மக்கள் பிழைப்பு தேடி வெளியூருக்கு போக வேண்டிய அவசியமில்லாமல் போனது.
பால்பண்ணையிலிருந்து பால்கோவா, வெண்ணெய் தயிர் இன்னும் இத்யாதி பால் பொருட்கள் தயாரித்து வெளியூர்களுக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறான்.
தினந்தோறும் சிவனை கும்பிடாமல் இருந்ததில்லை வல்லவராயன். இவனுக்கு வயது 37 சொன்னால் யாரும் நம்ம மாட்டார்கள் 30 வயது வாலிபன் போன்ற தோற்றத்தை கொண்டவன் வல்லவராயன் அவனது வெள்ளைச்சட்டைக்கு மேல் அவனது திண்ணிய புஜங்கள் புடைத்து நிற்கும் திராவிட நிறம் நெற்றயில் வீபூதியுடன் மீசை முறுக்கி விட்டு அவன் நடந்து வரும் அழகே தனி.
ரோஜா மாலையோடு வந்து மூச்சிறைக்க வந்து நின்ற முல்லைக்கொடியை பார்த்தவன் “என்னத்துக்கு இப்படி தஸ் புஸ்னு ஓடிவரா சாமி எங்கயும் விழுந்து வைச்சிட்டாதே” என்று கைகாப்பை ஏத்தி விட்டு அவளிடமிருந்த ரோஜா மாலையை வாங்கினான் வல்லவராயன்.
ராயன் தன்னிடம் பேசியதே அவளுக்கு மனம் முழுக்க சந்தோசத்தில் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தவாளின் முன்னே சொடுக்கு போட்டவும் “சரிங்க சின்னய்யா இனிமே ஓடிவரல” என்று தலையை ஆட்டினாள் நல்ல பிள்ளை போல
வல்லவராயன் கோவிலுக்குள் சென்றதும் யாரும் தன்னை பார்க்கிறார்களாவென்று ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு அவன் நின்றிருந்த மண்ணை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டாள். வல்லவராயன் என்றாள் அவளுக்கு உயிர். ஒருதலையாக வல்லவராயனை காதலும் செய்கிறாள் பெண்ணவள். அவனை சாமியாக கும்பிடும் பக்தை என்றும் கூட கூறலாம்.
ராயன் வீட்டுக்கு பின் புற கதவு வழியாக ஓடிவந்தவளை “எங்கடி போன வீடுமுழுக்க சல்லடை போட்டு உன்னை தேட வேண்டியதாய் இருக்கு.. இந்த பாத்திரத்தை எல்லாம் கழுவி வச்சிட்டு காலேஜ்க்கு கிளம்ப பாரு அப்புறம் இந்த வீட்டு பெரியம்மா ஒரு வேலையும் பார்க்கலனு உன்னை கரிச்சு கொட்டுவாங்க” என்றாள் அவளது தாய் அமுதா
ஆம் முல்லைக்கொடி வல்லவராயன் வீட்டில் சமையல் வேலை பார்க்கும் அமுதாவின் பெண்.
சமையல் வேலை பார்க்கும் பெண்கள் கூட முன் வாசல் வழியே விடமாட்டார் கோமளம் வல்லவராயனின் பெரியம்மா.
முல்லைக்கொடிக்கோ அந்த வீட்டின் பெரிய ஹாலை பார்க்கணும்.. வல்லவராயனின் அறைக்கு ஒரு முறையாவது போகணும் என்பது அவளது கனவு
வல்லராயன் தொழிலை பார்க்க ஆரம்பித்ததும் பெரியவர்களை யாரையும் பால்பண்ணை பக்கம் கூட வரவேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
முத்துவேல் தெய்வநாயகம் அண்ணன் தம்பிகள்.. முத்துவேல் சில வருடங்கள் முன்னே நோய்வாய்பட்டு இறந்து விட்டார்.. முத்து வேலின் மனைவி கோமளம் தான் இந்த வீட்டின் ராஜாமாதா. இவர்களுக்கு கண்ணன் என்ற மகன் அவனுக்கு விவசாயம் பால்பண்ணையில் வேலை பார்க்க விரும்பும் இல்லை சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை கிடைக்கவும் ராயன் முன்னே நின்றான் கண்ணன்
நாமளே ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்குறோம்! நீ அடுத்தவன் கம்பனிக்கு வேலைக்கு போறேன்னு வந்து நிற்கிற என்று தம்பியை கண்ணை உருட்டி முறைத்தான் ராயன்
அண்ணே நான் படிச்சா படிப்புக்கு ஏத்த வேலை என்று மென்று விழுங்கினான் கண்ணன்
நெற்றியை தேய்த்த ராயனோ சரி போ பழக்க வழக்கம் ஒழுக்கமா இருக்கனும் எனக்கு ஆளுங்க நாளா பக்கமும் இருக்காங்க தொலைச்சு போடுவேன் பார்த்துக்கோ என்று எச்சரித்து தான் சென்னைக்கு அனுப்பினான்
சின்னவள் நதியா முல்லைகொடியுடன் இரண்டாம் வருடம் பி.ஏ தமிழ் படித்துக்கொண்டிருக்கிறாள்..
முல்லைக்கொடியுடன் அளவாக பழகவேண்டும் சொல்லி வைத்திருக்கிறார் கோமளம்.
ஆனால் முல்லைக்கொடியும் நந்தினியும் நல்ல நண்பர்கள்.
தெய்வநாயகத்தின் மனைவி தையல்நாயகி அமைதியின் உருவம் இவர்கள் தவம் இருந்த பெற்ற மகன் வல்லவராயன்,
தெய்வநாயகத்தின் தங்கை அழகம்மை அவரது கணவன் நீலகண்டன் இவர்களுக்கு மகள் பூங்கொடி. ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்றிருந்தாள்.
பூங்கொடிக்கும் வல்லவராயனுக்கும்தான் திருமணம் நடக்க விருந்தது. பூங்கொடியை கல்யாணம் செய்துகொள்ள வல்லவராயன் விரும்பினான்.
ஆனால் கடைசி நேரத்தில் மாமா எனக்கு தென்னரசு மாமாவைத்தான் பிடிச்சிருக்கு என்று கல்யாணம் முடிவு பண்ணிய நேரத்தில் பெரியவர்களிடம் கூறாமல் வல்லவராயனிடம் அழுது கண்ணீர் விட்டாள் பூங்கொடி.
தன் காதலை மனதில் போட்டு புதைத்துக்கொண்டவன் பெரியவர்களிடம் கலந்து கொள்ளாமல் தானாகவே முடிவு எடுத்து அவர்களுக்கு கோவிலில் திருமணம் செய்து வைத்துவிட்டான்.
தன் அண்ணன் மகனுக்கு மகளை திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்று அழகம்மைக்குத்தான் வருத்தம்தான் கூட்டுக்குடும்பம் தான் ராயன் குடும்பம்
சிவன் கோவிலுக்கு சென்று வந்தவனின் ஆடிக்கார் அவர்களது வீட்டின் காம்பவுன்ட்டிற்குள் சர்ரென்று வந்ததும் பாத்திரம் விலக்கி கொண்டிருந்த முல்லைக்கொடியின் கண்கள் விரிந்தது.
“அமுதாவோவேடிக்கை பார்க்காம பாத்திரத்தை கழுவுடி” என்று அவளது முதுகில் லேசாய் தட்டியதும்
“க்கும் சும்மா அடிக்காதம்மா வலிக்குது” என்று சிணுங்கியவளின் மனமோ சின்னய்யா வீட்டுக்குள்ள வந்திருப்பாங்களா சாப்பிட உட்கார்ந்திருப்பாங்களா நான் செய்த பன்னீர் குருமாவோடு பூரியை சாப்பிட்டிருப்பாங்களாவென்று கற்பனையையோடு பாத்திரத்தை விலக்கி முடித்தாள்.
ஆண்கள் சாப்பிட்ட பிறகுதான் அந்த வீட்டு பெண்கள் சாப்பிடும் பழக்கம்.
ராயன் தெய்வநாயகம் பக்கம் உட்கார்ந்ததும் தையல் நாயகி பூரியை தட்டில் வைத்து குருமாவை ஊற்றினார்.
சாப்பிடும்போது யாரும் பேசிக்கொள்ளமாட்டார்கள் ராயனுக்கு பிடிக்காது.
பெரியவர்கள் ஏதாவது பேசினாலும் தன் கல்யாண பேச்சை எடுப்பார்களென்று தலையை குனிந்து சாப்பிட்டு விட்டு தெய்வநாயகம் ஏதாவது கேட்டால் பதில் கூறுவான் இல்லையென்றால் அவனது அறைக்குச் சென்றுவிடுவான்.
ராயனினிடம் தைரியமாக பேசுவது கோமளம் மட்டும்தான். தையல்நாயகியோ “அக்கா கல்யாணத்தை பத்தி பேசுங்க” என்று சாடைமாடையாக கையை காட்டினாள்.
“இரு! இரு! மகன் சாப்பிடட்டும்” என்று அவரும் சைகை காட்டவும் அமைதியாக இருந்துவிட்டார் தையல்நாயகி.
அழகம்மையோ இவர்கள் பேசும் சம்பாஷணையை பார்த்து “இவங்க என்ன தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் என் மருமகன் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கமாட்டான்” என்று இதழை கோணலாக்கினார்.
ராயன் சாப்பிட்டு எழுந்து கையை கழுவி தாயின் முகத்தை பார்த்தான். அவரோ கோமளத்திடம் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தார்
துண்டில் கையை துடைத்தவனோ “ம்க்கும்” என்று தொண்டையை செருமினான்
அனைவரும் ராயனை பார்த்தனர் “என்கிட்டஎன்ன பேசணும்” என்றான் நடுநாயகமாக நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தான் வல்லவராயன்
தெய்வநாயகமோ “எல்லாம் உன் கல்யாண விசயம் தான்பா” என்றதும் தயங்கியபடியே
“எனக்குத்தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேனே!” என்றான் பின்னங்கழுத்தை தேய்த்தபடியே
“நம்ம வம்சத்து மூத்த வாரிசு நீ கல்யாணம் வேண்டாம்னு பிடிவாதம் பிடிக்குற என்ன காரணம்னு கேட்டாலும் வாய் திறந்து பேசலையேப்பா நம்ம பங்காளி வீட்டு பயலுக வாய்க்கு வந்ததை பேசிகிட்டு இருக்கானுக இன்னிக்கு நீ ரெண்டுல ஒரு முடிவு சொல்லியே தீரணும்” என்று ராயன் முன்பு வந்து உட்கார்ந்து விட்டார் கோமளம்
சமையல்கட்டுக்குள் நின்று இட்லியை சாப்பிட்டுக்கொண்டிருந்த முல்லைகொடியோ கல்யாணம் இப்போ வேண்டாம்னு சொல்லுங்க சின்னய்யா” என்றவளுக்கு விக்கல் வந்தது
தண்ணீர் குடிடி என்று மகளுக்கு தண்ணீர் டம்ளரை நீட்டினார் அமுதா
தண்ணீரை குடித்தவளின் காதுகள் ஹாலில் பேசிக்கொண்டிருந்தவர்களின் பக்கம்தான் இருந்தது.
“நதியா படிப்பு முடிச்சதும் மாப்பிள்ளை பார்க்கலாம் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்” என்று ஒற்றை வார்த்தையில் எழுந்தவனின் கையை பிடித்துக்கொண்டார் தையல்நாயகி
“இந்த அம்மா உன்கிட்ட இதுவரை இதை பண்ணுனு கேட்டதில்லை ராசா! இப்போ முதன் முறை நீ கல்யாணம் பண்ணிக்கோனு கேட்குறேன் எங்க ஆசையை நிறை வேத்தி வைப்பியப்பா என்றார் கண்கள் கலங்க
ஒருநிமிடம் கண்ணை மூடித்திறந்தவன் “சரி பொண்ணு பாருங்க” என்றதும் சமையல்கட்டுக்குள் சாப்பிட்ட தட்டை கழுவி வைக்க போனவள் ராயன் பொண்ணு பாருங்க என்ற கூறியதை கேட்டு கையில் இருந்த தட்டை பொத்தென்று கீழே போட்டுவிட்டாள் முல்லைக்கொடி
“பார்த்து வேலைசெய்ங்கடி” என்று கோமளம் ஹாலிலிருந்தவாறே குரல் கொடுத்தார்
“ஏய் காலேஜ்க்கு கிளம்பு நீ இங்க இருந்தா எதையாவது போட்டு உடைச்சுகிட்டே இருப்ப” என்று மகளின் முதுகை பிடித்து தள்ளி தோட்டத்துபின்னால் இருக்கும் தன் ஓட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றார் அமுதா
ராயன் கல்யாணத்துக்கு சரியென்றதும் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்..
பக்கத்து ஊர் பண்ணையார் மகள் ரேணுகாவை பெண் பார்க்க போகலாமென்று ராயனிடம் கூற
அவனோ “வீட்டுப்பெரியவங்க பார்த்து சொன்னா தாலி கட்ட நான் ரெடி நீங்க மட்டும் பொண்ணு பார்க்க போய்ட்டு வாங்க இன்னிக்கு கம்பெனியில ஆடிட்டிங் இருக்கு” என்று கம்பெனிக்கு சென்று விட்டான் ராயன்.
அவனுக்கு இந்த கல்யாணத்தில் துளிகூட விருப்பம் கிடையாது பெரியவர்களுக்காக கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டான்
பத்திரிக்கைகள் தடபுடலாக அடித்து ஊரெல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தனர்.. ஒரு பக்கம் கோமளமும் தையல்நாயகியும் மற்றொரு பக்கம் தெய்வநாயகமும், நீலகண்டனும். ஆழகம்மை வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தார்.
“ஏன் சின்னய்யா கல்யாணத்துக்கு ஒப்புக்கீட்டீங்க” என்று இரவில் தலையை நனைத்துக்கொண்டிருந்தாள் முல்லைக்கொடி.
நதியாவோ “எங்க அண்ணா கல்யாணத்துக்கு நம்ம ரெண்டு பெருகும் ஒரே போல பட்டு பாவாடை தாவணி நீலகண்டன் மாமா எடுத்துக்கொடுத்துருக்காரு செமயா இருக்குடி பாரேன்” என்று அவள் கையில் பட்டு பாவாடை தாவணியை கொடுத்தாள் நதியா சந்தோசத்துடன்
“எ.எனக்கு பட்டுபாவாடை வேண்டாம்டி என்கிட்ட இருக்கறதயே போட்டுக்குறேன்.. அம்மா பெரிய வீட்ல கொடுக்கறதை வாங்கிக்க வேணாம்னு சொல்லியிருக்கு” என்றாள் முகத்தை உம்மென்று வைத்து
“நான் சொல்றேன் உங்கம்மாகிட்ட பட்டு பாவாடை தாவணியை வாங்கிக்கோங்க” என்று அங்கே வந்து நின்றார் நீலகண்டன்
“இ.இல்லங்கய்யா அம்மா வாங்கவேண்டாம்னு சொல்லியிருக்காங்க” என்று அங்கிருந்து ஓடிவிட்டவள் கட்டிலில் குப்புறப்படுத்து அழுது கொண்டிருந்தாள்.
“ஏய் எதுக்கு இப்ப நீ அழற சின்னய்யா கோவில் கோபுரம் அனாந்து பார்த்து கும்பிடத்தான் முடியும் பக்கத்துல போக முடியாது” என்று அவளது மனச்சாட்சி அவளை நிந்தனை செய்தது.
அமுதாவையும் முல்லைகொடியையும் வீட்டை சுத்தம் செய்வதற்கு மட்டும் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
“ஏய் முல்லைக்கொடி ராயன் அறையை ஓட்டடை அடிச்சு சுத்தம் பண்ணி முடிச்சு எனக்கு மூட்டு வலி கொஞ்சம் காலை அமுக்கி விடு” என்றார் கோமளம் அதிகாரமாக
“சின்னய்யா கல்யாணம் பண்ணிக்க நீதான் காரணம் காலை சட்டக்குனு உடைச்சி விடறேன்” என்று இதழை கோணியவள் ராயன் அறைக்குள் சென்றாள்
கிங் சைஸ் கட்டிலையும் கையை வைத்தால் ஒரு அரையடி உள் போகும் மெத்தையையும் அவனது அறையில் இருக்கும் குட்டி புத்தக அலமாரியையும் கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே நின்றாள். ஒரு தூசி இல்லாமல் அறையை சுத்தமாக வைத்திருந்தான் ராயன். தரை மட்டும் லேசாக அழுக்காக இருக்க தரையை துடைத்து விட்டு மெத்தையை தொட்டுப்பார்த்தாள் அரையடிக்கு உள்யே சென்றது.
நீ பண்றது சரியில்லைடி முடவன் கொம்புத்தேனு ஆசைப்படக்கூடாது என்று ராயனை கல்யாணம் பண்ணிக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தத்தில் அவளது கண்கள் கலங்கியும் போனது.
கண்ணீரை துடைத்துக்கொண்டு அந்த அறையை வெளியே வந்தவள் ராயன் மீது மோத ஏதோ இரும்பு குண்டு மேல் மோதியது போல இருக்க பயத்தில் அவள் கீழே விழப்போக அவளது இடுப்பில் கைப்போட்டு பிடித்தான் ராயன்.
👍🏻
super sis