கண்ணை கவ்வாதே
கள்வா -20
ஹாலில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தர்ஷணியே தனது அலாரம் எங்கேயோ அடிப்பதை கேட்டு திரும்பி படுக்க முயன்றவள்
பட்டென்று சோபாவில் இருந்து கீழே விழுந்தால் அப்பொழுதுதான் தான் இரவு சோபாவிலேயே படுத்து தூங்கியது நினைவுக்கு வந்தது.
மீண்டும் அலாரம் அடிக்க ஆரம்பிக்கவும் கீழே விழுந்த கடுப்பில் இருந்தவள் தனது போன் எங்கே என்று தேடினால் அதுவும் நேற்று தர்ஷினி கொண்டு வந்திருந்த சூட்கேஸ் உடன் சேர்ந்த பேக்கில் உள்ளே இருந்து அடித்துக் கொண்டிருந்தது.
இடுப்பை பிடித்துக் கொண்டு தவழ்ந்து தவழ்ந்து அதன் அருகில் சென்றவள் அங்கிருந்த பேக்கில் தனது போனை எடுக்கும் முயற்சியில் இருந்தால் அதுவோ சூட்கேசின் ஹேண்டிலில் மாட்டிக் கொண்டு வருவேனா என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது.
வலியுடன் சேர்ந்து எழுந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள் அவள் இழுத்த இழுப்பில் பேக் தலைகீழாக கொட்டி உள்ளிருந்த அவளது பொருட்களும் காலேஜ் புக்கும் கீழே சிதறி விழுந்தது.
அதில் இன்னும் காண்டானவள் அதை எடுத்து வைக்க சென்றவள் பின்னே கேட்ட ஷூ சத்தத்தில் திரும்பிப் பார்த்தால் அங்கு மித்ரன் பிளாக் கலர் பேண்ட்டும் ப்ளூ கலர் சட்டையும் அணிந்து டிக் டாப்பாக கிளம்பி கீழே வந்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் வாயை பிளந்து கொண்டு அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் அருகில் வந்தவன் சொடக்கிட்டு “ ஏய் உன் வாய்க்குள்ள ஈ போயிர போது டோரா க்ளோஸ் பண்ணு” என்று நக்கல் அடித்தான்.
அதில் கடுப்பானவள்’உன்னை போய் நான் சைட் அடிச்சேன் பாரு என் கண்ணை ஆசிட் ஊத்தி தான் கழுவனும் என் டொமேட்டோ’என்று கேவலமாக திட்டியவள் அவனைப் பார்த்து சிரித்து வைத்தாள்.
அதைப் பார்த்தவன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு “அம்மா தாயே எனக்கு வேற தண்டனை கூட தா ஆனா இப்படி சிரிக்காத” என்று அவளை கழுவி ஊற்றியவன்
“நான் வெளில போறேன் லேட்டா தான் வருவேன் டோரை லாக் பண்ணிக்கோ” என்று கூறி திரும்பியவன் அதற்குள் வீட்டின் காலிங் பெல் அடிக்கவும் சென்று திறந்தான்.
கதவை திறந்தவன் முகத்தில் அடுத்த நொடி தக்ஷனாவால் சோப்பு ஸ்ப்ரே அடிக்கப்பட்டு அவனது முகம், நெஞ்சம் வயிறு என முழுவதும் வெள்ளையாக இருந்தது அதில் சிறிது கண்ணிலும் பட கண் எரிச்சலுடன் சேர்ந்த கோபமும் மூக்கின் நுனியில் வந்து ஒட்டிக்கொண்டது.
“ஸ்ஸ்அஅஅ யாரு இப்படி பண்ணினது இடியட் கொஞ்சம் கூட அறிவு இல்ல டோர ஓபன் பண்ணா இப்படித்தான் முகத்துல அடிப்பாங்களா” என்று வசை மொழி பாட தொடங்கி விட்டான்.
அதில் தக்ஷனாவின் முகம் தொங்கி போக “ சாரி அத்தான் நான் தர்ஷினி என்று நினைத்து ஸ்பிரேவை முகத்தில் அடித்துவிட்டேன் என்றாள்.
அதற்குள் உள்ளே இருந்து வந்த தர்ஷினியும் யார் என்று பார்க்க வெளியே வீட்டுப் பெண்கள் அனைவரும் நின்று கொண்டு இருந்தனர் இவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சிரிப்புடன் வெளியே வந்தவள் தனது தங்கையை கைபிடித்து உள்ளே அழைத்துக் கொண்டவள் மற்ற அனைவரையும் வரவேற்றாள்.
இதில் கமலா இடையில் வந்து தக்ஷனாவை திட்ட தொடங்கிய மித்ரன் இடம் “விடுப்பா சின்ன பொண்ணு தெரியாம செஞ்சிட்டா நீ போ போய் கண்ணை கழுவிட்டு அப்படியே எல்லாத்தையும் வாஷ் பண்ணிக்கோ” என்று சமாதானமாக கூறி தர்ஷினி இடம் “நீயும் போமா அவனுக்கு கண்ணுல பட்டிருக்கும் போல எரிச்சல்ல இருக்கான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு” என்று அவளையும் அவர்களது மாடியில் இருக்கும் ரூமிற்கு அழைத்து செல்ல சொன்னார்.
தர்ஷினி தயக்கத்துடன் மித்ரனை காண அவனும் கண்களில் பட்ட சோப்பு நுறையில் எரிச்சலில் இருந்தவன் வேகமாக தனது அறைக்கு சென்று கொண்டிருந்தான் அவனின் பின்னையே சிறிது யோசனை உடன் மாடியில் இருக்கும் மித்திரனின் ரூமிற்குள் கதவை தட்டாமலே நுழைந்தாள்.
அங்கு அவனோ வேகமாக வந்தவன் தனது சட்டையையும் உள்ளே அணிந்திருந்த பனியனையும் வேகமாக கழட்டி அங்கிருந்த கட்டிலில் எறிந்தவன் பாத்ரூமை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது கதவை தட்டாமல் திறப்பது யார் என்று கண்ணை கசக்கி கொண்டு ஒரு நொடி நின்று பார்த்தான்.
அங்கு தர்ஷனியை காணவும் “ உன்னை யார் இங்க வர சொன்னது சீக்கிரம் இங்கு இருந்து வெளில போ” என்று கூறியவன் தர்ஷினி என்ன சொல்ல வருகிறாள் என்று கேட்காமலே பாத்ரூமின் உள்ளே நுழைந்து கொண்டான்.
அவளோ ‘ நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேட்காம போறான் பாரு லூசு பய இவன பெத்ததுக்கு அத்தை பேசாம இருந்து இருக்கலாம் பொறக்கும் போது கால் கிலோ ஐ எஸ் ஓ முறுக்கு கம்பியை கரைச்சு குடிச்சுட்டு பொறந்திருப்பான் போல எப்ப பார்த்தாலும் இறுக்கமாகவே இருக்கான் இவன் எல்லாம் சிரிப்பான மாட்டானா’என்று யோசித்துக் கொண்டிருந்தவள்.
அப்படியே அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து ரூமை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள் ‘ என்ன ரூமை இவ்வளவு கிளீனா வச்சிருக்கான் நமக்கு அப்படியே ஆப்போசிட்டா இருப்பாங்க போல இருக்கு அதுவும் பெட்டு கொஞ்சம் கூட சுருக்கமே இல்லாம இருக்கு இவன் ஒருத்தனுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய பெட் அதிலும் பெட்ஷீட் எல்லாம் நீட்டா மடிச்சு வச்சிருக்கான் நாமெல்லாம் எந்த பொசிஷன்ல தூங்குவோமே தெரியாதே
அங்கிருந்த அனைத்து கபோர்டுகளும் பார்க்க பளிச்சென்று நீட்டாக இருந்தது ரீடிங் டேபிளில் லேப்டாப் பென் புக்ஸ் எல்லாம் ஒழுங்காக அடிக்கி வைக்கப்பட்டடு இருந்தது
ரூமில் ஒரு மூலையில் பால்கனி வியூவை பார்த்துக் கொண்டே எக்ஸர்சைஸ் செய்வதற்கு மிஷின்கள் அனைத்தும் அங்கேயே இருந்தது மற்றொரு மூலையில் பிரிட்ஜும் அதன் அருகில் இன்னொரு டோரும் இருப்பதை கண்டவள் அது என்னவாக இருக்கும்’ என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே பாத்ரூம் கதவை திறக்கும் சத்தம் கேட்டு பின் மித்திரன் வரும் அரவமும் கேட்டது.
சட்டென்று பெட்டில் இருந்து எழுந்தவளை பார்த்தவன் “ நீ இன்னும் ரூம் விட்டு வெளியில் போகலையா” என்று கேட்க “இல்ல அத்தை தான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி அனுப்பி விட்டாங்க” என்றாள்.
“ நீ தான் லூசுனு நினைச்சேன் நான் உன் தங்கச்சி அதுக்கு மேல இருக்கா யாரு என்னன்னு பாக்காம அவ பாட்டுக்கு மேல ஸ்ப்ரே அடிச்சு விட்டுடா ரெண்டு பேருமே லூசுங்களா தான் இருப்பீங்களா” என்று அவளது தங்கையை கண்ட மேனிக்கு திட்ட ஆரம்பித்து விட்டான்.
அதில் சட்டென்று தர்ஷினிக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது இவ்வளவு நாள் தன்னை திட்டும் போது கோபம் வந்தாலும் மனதில் அவனை கவுண்டர் கொடுத்து திட்டி கொஞ்சம் கோபத்தை குறைத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் இன்று தனது தங்கை விளையாட்டுத்தனமாய் செய்த சிறு செயலை கூட இப்படி கேவலமாக திட்டுவதை கண்டு கோபத்தில் உச்சத்தில் இருந்தவள் “இங்க பாருங்க என் தங்கச்சியை பத்தி எல்லாம் பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க அப்புறம் நான் என்ன செய்வேன் எனக்கே தெரியாது” என்றாள்.
“ என்னடி செய்வ நீ என்னை என்ன செஞ்சுடுவ உண்மையை தானே சொன்னேன் இப்ப வரைக்கும் எனக்கு கண் எரிஞ்சுக்கிட்டே இருக்கு யாராவது அறிவு இருக்கிறவங்க இப்படி செய்வாங்களா” என்று மீண்டும் கத்த ஆரம்பித்தான்.
“போடா லூசு உனக்கு என்ன தெரியும் எப்ப பாத்தாலும் இப்படி மூஞ்ச இறுக்கமாக வச்சுக்கோ உன் கூட எல்லாம் மனுசி பேசுவாளா பைத்தியகாரன், உன்னை எல்லாம் எனக்கு இருக்க கடுப்புக்கு நல்ல பெரிய இரும்பு சட்டியில் ஒக்கார வைக்கணும்” என்று கோபத்தில் கண்டமேனிக்கு முகம் சிவந்து உதடு துடிக்க பேசிக்கொண்டு இருந்தாள்.
அவளது கோபமான முகத்தையும் கோபத்தில் உதடுகள் துடிக்க பேசிக் கொண்டிருந்ததையும் கண்டவன் தனது கோபத்தையும் மீறி அந்த துடிக்கும் உதடுகளை சாப்பிடும் எண்ணம் தலை தூக்க சற்றென்ற அவளின் அருகில் வந்தவன் அப்படியே கப்போர்ட்டில் சாய்த்து என்னை ஏது என்று அவள் உணரும் முன்பே அவளது உதடுகள் மித்திரனின் உதடுகளுடன் ஜோடி சேர்ந்திருந்தது..
தனது இதழ்களுடன் ஜோடி சேர்ந்திருந்தால் மித்திரனின் இறுகிய உதடுகளை உணர்ந்தவள் வசமாக சிக்கிக் கொண்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே மித்ரன் அவளது மேல் உதடை கவ்வி சுவைக்க ஆரம்பித்து விட்டான்.
அதன் மென்மையில் தனித்தனியாக சுவைத்து கொண்டிருந்தவன் பின் இரு ரோஜா இதழ்களையும் பன்னீரில் முக்கி எடுப்பது போல் தனது உமிழ்நீரினால் அவளது இதழ்களை நிரப்பினான் அதேபோல் அவளிடம் எதிர்பார்க்க அவளோ அமைதியாகவே நின்றிருந்தாள்.
அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் பெண்மையை தூண்டும் முயற்சியில் இறங்கினான் அதில் தானாகவே தர்ஷினி தனது இதழ்களை சற்று விரிக்க இதுதான் சமயம் என்று தனது நாவை உள்ளே செலுத்தி அவளது நாவோடு போர் புரிய துவங்கினான்.
இதில் தர்ஷினியை நெருங்கி அணைப்பது போல் நின்று இருந்தவன் எப்போது அவளது அணைப்பிற்குள் சென்றான் என்று இருவருக்குமே தெரியவில்லை வெற்று உடம்பில் இருந்தவன் தர்ஷினியின் உடல்லோடு அழுத்தி நின்றுக்கொண்டு இருந்தான்.
அதில் இருவருக்கும் உணர்வுகள் தடுமாற தர்ஷினி அவனது பின் தலையின் முடியை பிடித்து இறுக்கவும் அதில் சற்று வலியை அவன் உணர்ந்தாலும் அவளது ஆரஞ்சு சுளைகளை விடும் எண்ணத்தில் இல்லை
அவனது சிறு வலியையும் தர்ஷினியிடம் காட்டி அவளது உமிழ்நீரை உறிந்து எடுப்பதில் தான் மும்முறமாக இருந்தான் நீர்வற்றி மூச்சுத் திணற தர்ஷினி சோர்வாக அவனது திண்ணிய மார்பின் மேலயே சாய்ந்து விட்டாள்.
அப்போதுதான் தர்ஷினியின் நிலை உணர்ந்து தனது இதழ்களை பிரித்துக் கொண்டவன் அவளை விளக்காமல் இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான்.
சிறிது நேரம் இருவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நின்று இருந்தார்கள் இன்னும் வேண்டும் என்று மித்திரனின் மனம் ஓலம் போட அவளை நிமிர்த்தி மீண்டும் மீண்டும் உதடுகளாலேயே யுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
தர்ஷினியும் தன்னையே அறியாமல் அவனது முத்த யுத்தத்திற்கு தயாராகி தானும் பங்கெடுக்க ஆரம்பித்து விட்டாள்.
இதில் யார் வென்றார்கள் யார் தோத்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை மேலும் முன்னேறும் முகமாக அவளது உடையில் கை வைக்கும் சமயம் அவனது ரூமில் இருக்கும் இன்டர் காமில் விடாது ஒலி எழுப்பி கொண்டே இருந்தது.
அதில் மோகத்தில் இருந்தவன் தெளியாமல் மீண்டும் தர்ஷனியிடம் முன்னேற ஆரம்பிக்க போனின் மொழியில் கொஞ்சம் நினைவிற்கு வந்த தர்ஷினி சற்றென்று அவனை தள்ளிவிட்டாள்.
அதில் அவன் முத்தம் கொடுக்கும் போது கொஞ்சம் இலகுவாக நின்று இருந்ததால் கொஞ்சம் பின்னே சென்றவன் பின் காலை கொஞ்சம் அழுத்தி தன்னை பேலன்ஸ் செய்து கொண்டு நின்றான்.
தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கோபத்துடன் அவன் பார்க்கவும் “தர்ஷினி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ரொம்ப நேரமா போன் அடிச்சுக்கிட்டே இருக்கு அதனால தான்” என்று பாவமாக இழுத்தாள்.
அதில் ஒரு குறுஞ்சிரிப்பு தன்னில் ஒட்டிக்கொள்ள லேசாக சிரித்தான் அதை பார்த்தவள் அவனை பார்த்து “ நீங்க சிரிக்கிறிங்களா?” என்று அவனை அதிசயமாக பார்த்து கேள்வி கேட்க அதை கண்டு கொள்ளாதவன் மீண்டும் ஒலி எழுப்பிய போன்னை மனதினுள் திட்டிக்கொண்டே சென்று அட்டன் செய்தான்.
அதில் அவனது அம்மாவோ “ மித்ரா டிபன் ரெடியா இருக்கு வந்து சாப்பிட வாங்க என்றவர் கீழே எல்லாரும் இருக்காங்க தர்ஷினிய கொஞ்சம் சீக்கிரம் அனுப்பிவிடு என்று எங்கே மகன் கோபித்துக் கொள்வானோ என்று தயக்கத்துடனே சொல்லி அவன் பேசுவதற்கு முன்பே போனை வைத்தார்.
அவர் கூறியதை கேட்டுக் கொண்டவன் போனை வைத்துவிட்டு திரும்பி பார்க்க அங்கே தர்ஷினியை கண்டவன் கண்கள் விரிய நின்று விட்டான்.
கதையின் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
SUPER SIS