ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ 3

கடுவன் சூடிய பிச்சிப்பூ 3
 
இருவீட்டிலும் கல்யாண மண்டபத்திற்கு சென்றிருந்தனர். மாப்பிள்ளை அழைப்பு என ஆரம்பித்து கல்யாணம் விழா வெகு விமர்சையாக தொடங்கியிருந்தது. 
 
அழகம்மை எதிலும் கலந்து கொள்ளவில்லை பேத்தி தியாவை கொஞ்சுவதிலேயே நேரம் அவருக்கு போதுமானதாக இருந்தது. 
 
தெய்வநாயகமும் நீலகண்டனும் பங்காளிகளுடன் வரவேற்பில் ஒரு பக்கம் நின்றிருந்தனர் தையல்நாயகியோ என் மகன் கல்யாணம் இந்த முறை எந்த தடங்கலும் இல்லாம நடக்கோணும் சிவபெருமானே என்று மனதிற்குள்ளேயே கடவுளை வேண்டிக்கொண்டு நின்றிருந்தார்.
 
கோமளமோ கையளவு பார்டர் வைத்த காஞ்சிபுர பட்டுடன் கழுத்தில் வைர அட்டிகை மின்ன கல்யாணத்திற்கு வரும் சொந்தகாரங்களை வாயெல்லாம் பல் தெரிய சிரித்து வரவேற்றுக்கொண்டிருந்தார்.
 
“அடுத்து கண்ணன் கல்யாணம்தானே கோமளம்” என்று கோமளத்திற்கு சித்தி முறையானவர் கேட்க. 
 
“ஆமா சித்தி பொண்ணு மெத்த படிச்ச பொண்ணா பார்த்துகிட்டு இருக்கேன் நல்ல இடமா கிடச்சா அடுத்த மாசமே கல்யாணம்” என்றார் கர்வச்சிரிப்புடன்
 
மணப்பெண் அறையில் கார்த்திகாவிற்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் நதியா. ப்யூட்டியூசனுக்கு வெட்டி செலவு நானும் முல்லைக்கொடியும் கார்த்திகாவை அலங்காரம் செய்து விடுவோமென்று கார்த்திகாவிற்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர் இருவரும்
 
‘எனக்கு சின்னய்யா கிடைக்க மாட்டாரா’ என்று முல்லைக்கொடிக்கோ மனதிற்குள் அழுது கொண்டிருந்தாள் . 
 
நதியாவோ “முல்லை அந்த பூவை எடு” என்றதும் 
 
பட்டு சேலைக்கு மேட்சா தாங்களே கைவேலைப்பாடு கொண்டு செய்த பூவை எடுத்து நதியாவிடம் கொடுத்தாள் முல்லைக்கொடி. 
 
மனதிற்குள் வேதனையுடன் இருந்தாலும் வெளியே வரவழைக்கப்பட்ட சிரிப்புடன்தான் மணப்பெண்ணுக்கு அலங்காரத்திற்கு உதவி செய்து கொண்டிருந்தாள் முல்லை 
 
கல்யாணப்பொண்ணுக்கான கலகலப்பு அவளது முகத்தில் மருந்துக்கும் இல்லை கார்த்திகாவின் முகத்தில் . ராயன் வீட்டு சொந்தங்கள் மணப்பெண் அறைக்கு வந்தவர்கள் சும்மா இருப்பார்களா என்ன! “பொண்ணு முகத்துல சிரிப்பையே காணோமே இந்த கல்யாணத்துல விரும்பம் இல்லையா என்ன?” என்று ஒரு பெண் வாய் விட்டு கேட்டுவிட்டார்
 
கார்த்திகாவின் அம்மா சரசுவோ “என் பொண்ணுக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் அவ இயல்பாவே இப்படித்தான் இருப்பா.. கல்யாணத்துல விரும்பம்தான் ராயன் தம்பியை கல்யாணம் பண்ணிக்க எங்க பொண்ணு ஏழு ஜென்மம் புண்ணியம் பண்ணியிருக்கணும்” என்று சமாளித்து வைத்திருந்தனர்.
 
முல்லைக்கொடியின் மண்டையில் மணி ஒலித்தது அவளும் வந்ததிலிருந்து கார்த்திகாவை உன்னிப்பாக பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். அவள் ஒரு முறை கூட சிரிக்கவில்லை. சரி பணக்கார வீட்டு பொண்ணு நம்மகிட்ட சிரிச்சு பேசுவாளா என்ன? எல்லாரும் என்னோட நண்பி நதியா போல சகஜமா பேசுவாங்களா! என்று மெத்தனமாக இருந்துவிட்டாள்.
 
பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பம் இருக்கா என்று கேட்டவுடன் ஒருவேளை கார்த்திகாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனா கல்யாணம் நின்னுடும் என்று குஷியானாள் முல்லை.
 
பண்ணைவீட்டில் டிரைவராக வேலை செய்யும் ராஜாவும் கார்த்திகாவும் காதலித்த விசயம் பண்ணையார் காதிற்கு போகவும் அவர் மகளுக்கு அவரசமாக மாப்பிள்ளை பார்க்க தொடங்கிய சமயம்தான் வல்லவராயனுக்கு பொண்ணு பார்க்கும் விசயம் தெரிந்தது பண்ணையாருக்கு ஜாக்பாட் அடித்த சந்தோசம் அவருக்கு
 
உடனே மகளின் மூளையை சலவை செய்து கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்கச் செய்திருந்தனர் ராஜபூபதி .
 
கார்த்திக்காவிற்கு மேக்கப் முடிந்த பிறகு “முல்லை நான் குளிச்சிட்டு வந்துடறேன் நீ கார்த்திகாகூட பேசிகிட்டு இரு” என்று சென்று விட்டாள் நதியா
 
நதியா ரெஸ்ட்ரூமிற்குள் சென்றதும் “ஏங்க அக்கா  நீங்க யாராவது லவ் பண்ணுறியா” என்று கார்த்திகாவை பார்த்து முகத்திற்கு நேராகவே பட்டென்று கேட்டுவிட்டாள் முல்லைக்கொடி
 
“அ.அது எப்படி உனக்கு  தெரியும் ” என்று அதிர்ச்சியானாள் கார்த்திகா
 
“எ.எனக்கு ஜோசியம் எல்லாம் தெரியும் கொஞ்ச நேரம் முன்னே உங்க  விரலுக்கு நெயில்பாலீஸ் போட்டுவிட்டேன்ல அப்போ உங்க  கை ரேகையை பார்த்தேன் உங்களுக்கு  காதல் கல்யாணம்தான் நடக்கும்னு கை  ரேகை சொல்லுச்சு” என சும்மா அடித்துவிட்டாள் முல்லை
 
கார்த்திகாவோ “ஆமா  நா.நான் எங்க பண்ணையில வேலை பார்க்குற டிராக்டர் டிரைவர் ராஜாவை லவ் பண்ணுறேன் எங்க லவ் மேட்டர் அப்பாவுக்கு தெரிஞ்சு கேவலம் நம்ம பண்ணையில வேலை பார்க்குற டிரைவரை லவ் பண்ணுறியானு என்னையும் ராஜாவையும் அடி வெளுத்துட்டாரு பாவம் ராஜா என்னால அடிவாங்குனாரு” என்று விசும்பினாள்
 
அச்சோ அக்கா  அழாதீங்க  மேக்கப் கலையுது பாருங்க  உண்மையா ராஜாவை லவ் பண்ணுறீங்களா அவங்க நல்ல பையனா. அவங்க  குடும்பம் எப்படினு உங்களுக்கு  தெரியுமா உங்களை கடைசி வரை வச்சு பார்த்துப்பாங்களானு நம்பிக்கை இருந்தா ராஜாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே அதைவிட்டு எங்க வீட்டு வல்லவராயன் சின்னய்யாவை கல்யாணம் பண்ணிக்க எதுக்கு ஒப்புகிட்ட எங்க சின்னய்யாவுக்கு துரோகம் பண்ண பார்க்குறீங்களா  என்றாள் கண்ணை உருட்டி மிரட்டலாக
 
“டிரைவரை எல்லாம் நான் கல்யாணம் பண்ணக்கூடாதாம் கௌரவ குறைச்சல் வந்துடுமாம் எங்கப்பாவுக்கு” என்று வாயில் கை வைத்து தேம்பிய கார்த்திகாவோ “எனக்கு உங்க சின்னய்யாவை கல்யாணம் பிடிக்கல அந்தஸ்து கௌரவம் என்னை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிட்டாங்க” என்று கண்கலங்கினாள்
 
“அப்போ நீ எங்க சின்னய்யாவை கல்யாணம் பண்ணிக்கவேண்டாம் ரிசப்சன் முடிச்சு நீ லவ் பண்ணுற ராஜாவுக்கு போன் வரச்சொல்லி அவனோட போய் காலையில கல்யாணம் பண்ணிக்கோங்க உன் கழுத்துல தாலி ஏறிடுச்சுனா யாரும் ஒன்னும் பண்ண முடியாது” என்றாள் கிசுகிசுப்பாக
 
“எங்கப்பா ரொம்ப கெட்டவரு என்னோட ராஜா என் கழுத்துல தாலி கட்டினானா அவனை வெட்டி போட்டு என் கழுத்துல உள்ள தாலியை அறுத்து எறிஞ்சுடுவாரு” என்றாள் கவலை கண்ணீருடன்
 
“அக்கா மேக்கப் கலையுது பாருங்க அழாதீங்க யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது! என்று கார்த்திகாவின் கண்ணீரை கர்சீப்பால் துடைத்து விட்டவள் 
 
“உங்கப்பா பண்ணையார் வேணா கெட்டவரா இருக்கலாம் எங்க சின்னய்யா ரொம்ப ரொம்ப நல்லவரு நீ ராஜாவோட கல்யாணம் பண்ணிட்டு மண்டபத்துக்கு வந்து எங்க வல்லராயன் சின்னய்யா காலுல விழுந்துடுங்க  உங்கப்பாவால ஒன்னும் பண்ணமுடியாது நான் சொல்றது சத்தியம் என்னை நீங்க  நம்பலாம்” என்று கார்த்திகாவின் கையை பிடித்து சத்தியம் செய்தாள் முல்லைக்கொடி
 
“என் ராஜா ரொம்ப நல்லவன் ராஜாவோட அம்மாவும் அப்பாவும் பட்டுசேலை நெய்து தராங்க ரொம்ப நல்லவங்க” என்றாள் யாராவது அறைக்குள் வருகிறார்களாவென்று பார்த்தபடியே
 
முல்லைக்கொடி மணப்பெண் அறையின் கதவை லாக் போட்டுவிட்டு ” நீங்க  இப்பவே ராஜாவுக்கு போன் போட்டு உங்களை அழைச்சுட்டு போக சொல்லுங்க”  என்று தன் போனை கார்த்திகாவிடம் கொடுத்திருந்தாள்
 
கார்த்திகாவுக்கு தன் காதல் திரும்ப கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் முல்லைக்கொடியின் போனை வாங்கி ராஜாவிற்கு போன் போட்டாள் 
 
ராஜாவோ இரண்டு மூன்று ரிங்கில் போனை எடுத்து “ஹலோ”  என்றதும் 
 
“ரா.ராஜா நா.நான் கார்த்திகா பே.பேசுறேன் என்னால உன்னை மறக்க முடியாதுடா நீ நீ வந்து எ.என்னை அழைச்சிட்டு போயிடு நான் உனக்காக மண்டபத்துல பின்கேட்டு பக்கம் தப்பிச்சு ஓடி வந்துடறேன்” என்றாள்  அழுகையுடன் 
 
ராஜாவோ “உன்னால என்னை மறக்க முடியாது எனக்கு போன் பண்ணுவேனு தெரியும்டி நான் கண்டிப்பா நைட் 1 மணிக்கு மேல மண்டபத்து பின்னால வந்துடறேன் நீ எப்படியாவது தப்பிச்சு வந்துடு” என்றான் பரபரப்பான குரலில்
 
“நான் கண்டிப்பா வந்துடறேன் எனக்கு இந்த போன் வச்சிருக்க முல்லைக்கொடிதான்  ஹெல்ப் பண்ணுறாங்க “என்றாள் பதட்டத்துடன்
 
“அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிடு என் சார்பா” என்று போனை துண்டித்த ராஜாவோ தன் நண்பர்களுக்கு போன் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்வது பற்றி பேச ஆரம்பித்தான்.
 
என்னோட காதல் நிறைவேறாது கவலையா இருந்தேன் நீங்கதான் எங்க காதல் கல்யாணத்து முடிய உதவி செய்திருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ் என்று முல்லைக்கொடியின் கையை பிடித்துக்கொண்டாள் கார்த்திகா
 
நதியா குளித்து விட்டு வந்ததும் “நீ எந்த காலேஜ்ல படிக்குற” என்று கார்த்திகாவிடம் எதார்த்தமாக பேசிக்கொண்டிருந்தாள் முல்லை.
 
“நான்… காலேஜ்” என்றதும் 
 
“இந்நேரம் வரை யார்கிட்டயும் வாய் திறந்து பேசலை உன்கிட்ட இப்போ எப்படி பேசுறா” என்று சந்தேகத்துடன் கேட்கவும்
 
“என்கிட்ட யாரும் பேசாம இருக்க முடியுமா நதி”  என்றாள் சிரித்தாள் முல்லை
 
ரிசப்பனில் கார்த்திகா வியர்த்த முகத்துடன் ராயன் பக்கத்தில் நின்றிருந்தாள். ராயனோ அவனது தொழில் வட்டார நண்பர்கள் வர அவர்களுடன் கைகுலுக்கி பேசிக்கொண்டிருந்தாலும் பயத்துடன் நிற்கும் கார்த்திகாவை பார்த்தவனுக்கு இந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்காவென்றுஐயம் வந்தது 
 
அவனது நண்பர்கள் சென்றதும் “ஏம்மா உனக்கு இந்த கல்யாணத்துல” என்று பேச ஆரம்பிக்கும்போது பண்ணையார் ராஜபூபதி மணமேடைக்கு வந்து விட்டார் 
 
“மாப்பிள்ளை என் மக பசி தாங்க மாட்டா ரெண்டு பேரையும் சாப்பிட அழைச்சிட்டு போலாம்னு வந்தேன்” என்றார் மகளை பார்த்து முறைத்தவாறே
 
ராயனோ “கார்த்திகா உனக்கு பசிக்குது என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல நான் உன்னை சாப்பிட அழைச்சிட்டு போயிருப்பேன்ல” என்றான் கரகரப்பு குரலில்
 
“அ.அது எனக்கு” என்று கார்த்திகாவுக்கு பேச்சே வரவில்லை ராயன் உயரத்தை பார்த்து
 
ஊர் பஞ்சாயத்து தலைவர்  வரவும் “மாமா கார்த்திகாவை சாப்பிட அழைச்சிட்டு போங்க நன் பின்னாடியே வந்துடறேன் ” என்று மெல்லிய இதழ் விரிப்புடன் கூறியவன் பஞ்சாயத்து தலைவர்  பேச ஆரம்பித்தான்
 
“மணமேடையில மாப்பிள்ளைகிட்ட ரெண்டு வார்த்தை சிரிச்சு பேசத்தெரியாதா உனக்கு.. எங்கப்பன் குதிருக்குள்ளனு நீயே காட்டி கொடுத்துடுவ போல என் மானத்தை கெடுக்கறது போல நடந்துக்கிட்ட பெத்த புள்ளைனு பார்க்கமாட்டேன் கொன்னு போடுவேன் ஜாக்கிரதை” என்று மகளை அரட்டி மிரட்டி சாப்பிடும் இடத்திற்கு அழைத்துச்சென்றார் ராஜபூபதி
 
மண்டபத்தை சுற்றி தன் ஆட்களை நிற்க வைத்திருந்தார் ராஜபூபதி. 
 
வல்லவராயனின் ஆஸ்தான நண்பனும் அவனது பி.ஏவுமான பாலாஜி   மண்டபத்திற்கு பக்கம் காரை நிறுத்தி இறங்க ராஜபூபதியின் ஆட்கள் அங்கங்கே நிற்பதை கண்டு புருவம் இடுக்கி எதுக்கு முக்கு முக்குக்கு இத்தனை பேர் நிற்குறானுங்க சம்திங் ராங் ராயன்கிட்ட சொல்லணுமே என்று போனை எடுத்தான்
 
“சொல்லு பாலாஜி   மண்படத்தை சுத்தி பண்ணையார் ஆளுங்க நிற்குறாங்களா!” அவனுக்கு முன்னே ராயன் கேட்கவும்
 
“பாஸ் நீங்க இன்னிக்கு மாப்பிள்ளை எதையும் கவனிச்சிருக்கமாட்டிங்கனு இருந்தேன்”
 
“இந்த ராயனுக்கு நாலாப்பக்கமும் கண்ணு இருக்கும் நான் சொல்றதை மட்டும் காதுகொடுத்து கேளு என்றவனோ நாளைக்கு விடியற்காலையில அந்த பையன் என்னோட ரூம்க்குள்ள இருக்கணும்” என்று போனை துண்டித்து விட்டான்
 
“கல்யாண சாப்பாடு சாப்பிடலாம்னு வந்தேன் இன்னிக்கும் என்னை ஹோட்டல் சாப்பாடு சாப்பிட வைக்குறான்” என்று சலித்துக்கொண்டு காரில் ஏறியவனோ அவன் சொன்ன வேலையை பார்க்க ஆரம்பித்தான்
 
மண்டபத்தில் அனைவரும் தூங்கிய பிறகு கார்த்திகாவோ உறங்குவது போல கண்ணைமூடிப்படுத்திருந்தாள் 
சொந்தக்காரங்களை ஏமாற்ற வேண்டுமே! 
 
நதியாவோ “காலையில எனக்கு நீதான் சேலைக்கு மடிப்பு எடுத்துக் கொடுக்கணும் முல்லை” என்றாள் கொட்டாவி விட்டபடியே 
 
“நடக்காத கல்யாணத்துல நீ பட்டுப்புடவை கட்டி ஒரு பிரயோசனமும் இல்லைடி” என்றாள் முனகளாக 
 
“என்ன சொன்ன” என்று குரலை உயர்த்தவும் “எனக்கு தூக்கம் வருதுடி” என்று கொட்டாவி விட்டு திரும்பி படுத்துக்கொண்டாள் முல்லை.
 
கொஞ்சநேரம் மெல்ல கண்விழித்த முல்லைக்கொடியே கார்த்திகாவை தோளை கையை தட்டினாள். 
 
கார்த்திகாவோ எழுந்து உட்காந்தவள் “முல்லை எனக்கு பயமா இருக்கு அப்பா ஆளுங்க எப்படியும் வெளியே நிற்பாங்க மாட்டிக்கிட்டா அப்பா  கொன்னுடுவாரு என்னை மட்டும் எதாவது பண்ணினா பரவாயில்லை என்னால ராஜாவுக்கு ஆபத்து வரக்கூடாது முல்லை” என்றாள் கவலையாக
 
“உங்க  காதல் உண்மையானது எப்பவும் தோத்துப்போகாது உங்களுக்காக ராஜா அண்ணா மண்டபத்துக்கு வெளியே காத்திருப்பாரு வாங்கக்கா” என்று பயந்து விழித்த கார்த்திகாவின் கையை பிடித்து கொண்டு தங்களை யாராவது பார்க்கிறார்களாவென்று பார்த்து பார்த்துக்கொண்டே மண்டபத்தின் பின்னே அழைத்து சென்றாள். 
 
முல்லைக்கொடிக்கும் சற்றுபயம்தான் மாட்டிக்கொண்டால் கோமளத்திடம் ஏச்சு பேச்சு வாங்குவதை விடவும் தாய் அமுதாவிடம் முதுகில் அடிவாங்குவதை விடவும் வல்லவராயன் முன்னே தவறு செய்து தலைகுனிந்து நிற்கும் நிலை வந்துவிடக்கூடாதென திணறியபடியேதான் கார்த்திகாவை அழைத்துச் சென்றாள். 
 
நல்லவேளை அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்த நேரம் மண்டபத்தின் வெளியே சென்றுவிட்டனர்.
 
கார்த்திக்காவிற்கோ திக்திக் என்ற நிமிடங்களாக கழித்தது. எங்கே அப்பாவிடம் மாட்டிவிடுமென்ற பயத்தில் அவளுக்கு முகமெல்லாம் வியர்த்து கால்கள் நடக்க முடியாமல் தடுமாறியது.
 
ராஜா காருடன் நின்றிருந்தான் “யாரும் வரதுக்குள்ள யாருக்கு சீக்கிரம் போங்கக்கா” என்று கார்த்திகாவின் முதுகை பற்றி ராஜாவின் பக்கம் தள்ளி விட்டாள். 
 
ராஜாவின் கையை பிடித்துக்கொண்ட கார்த்திகாவோ “ரொம்ப தேங்க்ஸ் மா” என்று கையெடுத்துக்கும்பிட்டாள் 
 
“அச்சோ அக்கா நான் சின்ன பொண்ணு என்னை போய் கையெடுத்து கும்பிட்டு கிட்டு சீக்கிரம் கிளம்புங்க” என்ற பரபரப்பாக பேசினாள் கார்த்திகாவும் ராஜாவும் காருக்குள் ஏறியதும் கார் புயல் வேகத்தில் சென்றுவிட்டது.
 
அப்பாடா என் கடுவன் ராயன் மாமன் கல்யாணத்தை நிப்பாட்டியாச்சு என்று பெரும்மூச்சு விட்டு திரும்ப வல்லவராயன் மார்புக்கு குறுக்கே கையை கட்டி நின்றிருந்தான் அவர் பார்வையில் அல்லு விட்டது முல்லைக்கொடிக்கு 

2 thoughts on “கடுவன் சூடிய பிச்சிப்பூ 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top