அத்தியாயம் 2
இங்கே கோயம்புத்தூரில் பெரிய மளிகை கடை ஒன்று இருந்தது தனலட்சுமி மளிகை கடை பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள து
கடையில் கூட்டம் நிரம்பி வழிந்த து. விக்கி இவங்களுக்கு பொன்னி ல ரெண்டு கிலோ போடு அந்த மூட் டை காலியான ஆகப்போகுது, இவ ங்களுக்கு கொடுத்துட்டு, கூட்டம் குறைந்ததும் குடவுன்ல இருந்து மூ ட்டையை கொண்டு வந்து கடையி ல போடு என்றான் மீசையை முறு க்கி
விக்கியும் சரி அண்ணா என்றான்
இவன் தான் ஆதவன், தனலட்சுமி சாமி கண்ணுவின் கடைக்குட்டி கூ ட பிறந்தவர்கள் இருவர், முதலாம வன், உதயன் 34 வயது. ஜவுளி க டை வைத்திருக்கிறான் மாமனார் வைத்து கொடுத்தது மனைவி நந் தினி அவனுக்கு ஒரு பிள்ளை உண்டு நாலு வயதில்
இரண்டாமவன் கதிரவன் 32 வயது தனியார் கம்பெனியில், உதவி மே லாளராக இருக்கிறான். இவன் கா தலித்து திருமணம்செய்து கொண் டவன்,இவன் மனைவி கோமதி.
இருவரும் வேலைக்கு செல்கிறார்க ள். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் பிள்ளை உண்டு
இவர்கள் இருவரும் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என இருப்ப வர்கள். தங்கள் வருமானத்தில் ஒ ரு சிறு தொகையை வீட்டில் கொடு த்துவிட்டு, ஜம்பமாக உலா வருப வர்கள். ஆனால் மூன்றாம் பவன் அக்மார்க் அம்மா பிள்ளை
தனம் என்ன சொன்னாலும் தலை யாட்டுவான். அவர் சொன்னதை செய்யும் ஆண் பிள்ளை அவனுக் கும் கல்யாணம் ஆனது 29 வயதில். தாய் சொல்லி தட்டாது அவள் கழு த்தில் தாலி கட்டினான்.
அதேபோல் தாயை எதிர்த்து பேசிய தால் தாய், அழுததை கண்டு அவ ருக்காக கட்டின மனைவியை வீட் டை விட்டு மலடி பட்டம் கட்டி வெ ளியே அனுப்பி விட்டான் அவள் யாரோ?
மதியம் ஒரு மணி ஆதவன் போன் அடித்தது மீசையை முறுக்கி விட்ட வன் சொல்லுங்கமா என போனை காதில் வைத்தான். அந்த பக்கம் ஏ ய்யா, ஆதவா சாப்பாட்டுக்கு நேரம் ஆச்சுப்பா வீடு வரைக்கும் வந்துட் டு போயா என்றார் தனம்
ஆதவன் சரிமா கொஞ்சம் இங்கன வேல கிடக்கு வரேன் ரெண்டு மணி க்கா என்றான்
தனம், அப்படியாப்பா சரி வரும் போது, எனக்கு சுகர் மாத்திரை கா லி, கால் வலிக்குதய்யா வலி மருந் து வாங்கிட்டு வா, அப்புறம் கதிர் பொண்ணுக்கு பிஸ்கட்டும் பூஸ்ட் டும் காலி, கடையிலிருந்து எடுத்தா யா,என்றவர் போனை வைத்து விட்டார் ஒரு கவலையும் இல்லாது
என்னடா, இரண்டு பிள்ளைங்க குடும்பமா நிக்கிறாங்களே.. இவன் மட்டும் 30 வயசு ஆகியும் தனியா இருக்கானே என விசனப்படாமல்.
தனலட்சுமி கணவரை இழந்தவர் இரண்டு பிள்ளைகள் எப்படி போ னாலும் கேட்டுக் கொள்ள மாட்டா ர்
ஆனால், ஆதவனை தன் கைக்கு ள்ளேயே வைத்துக் கொள்ளுவார் சிறுவயதிலிருந்தே அவனும் அப்ப டியே வளர்ந்து விட்டான் ஆனால் வியாபாரத்தில் கில்லி
இவனின் நிமிர்வான பேச்சுக்கும் நியாயமான வியாபாரத்திற்கும் வாடிக்கையாளர்கள் அதிகம்
மாநிறம் உழைத்து உரமேறிய உட ம்பு கட்டையான மீசை 6 அடி உயர ம், அவனும் படித்தவன் தான். தன் தாய் சொன்னதை தட்டாதவன் ம ளிகை கடையை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான்.
மளிகை கடைக்கு அவனைப் பார் த்து வழி யவே நிறைய பெண்கள் வருவார் கள் இவன் கண்டு கொள் ளவே மாட்டான். சொன்னது போல இரண்டு மணிக்கு வீட்டுக்கு கிளம் பியவன், தன் தாயின் சொன்ன அ னைத்தையும் வாங்கி எடுத்து கொ ண்டவன் வீட்டிற்கு சென்றான்
வீட்டின் ஹாலில் கதிரவன் பெண் ணோடு அமர்ந்திருந்தார் தனம். அ ம்மா இந்தாங்க, நீங்க கேட்டது சீக் கிரம் சாப்பாடு போடுங்க கடைக்கு ப் போகணும். நாளைக்கு தமிழ் வ ருஷபிறப்பு இல்லையா கடையில் கூட்டம் ஜாஸ்தியா இருக்கு என்றா ன்
தனமும், சரிப்பா என்றவர் சாப்பா ட்டை எடுக்க உள்ளே போனார். ஆ தவன்,முகம் கழுவ அறைக்கு செ ன்றான். அறையில் அமைதி அவ னை ஏதோ செய்தது. அவன் உள் ளே நுழைந்ததும், ஆதவ் மாமா எ ன்ற அழைப்பு இல்லை முகத்தை அடித்து கழுவி வந்தவன் சாப்பிட அமர்ந்தான்
கண்கள், தானாக சமையலறை யை பார்த்தது அவன் தினமும் சா ப்பிடும் போது உணவை அவனுக் கு வைப்பவள் சமையலறை சென் று நின்று கொள்ளுவாள் அது இந் த வீட்டில் எழுதப்படாத சட்டம் அ வளுக்கு, தனம் தான் ஆதவனுக்கு பரிமாறுவார். அருகே நிற்க வேண் டாம் என்பார் அவளை. அவள் ஏக் கப்பார்வை அவனை தொடரும்.
ஆனால் அவன், தன் தாயை மீறி எதையும் செய்ய மாட்டான்
இருவரும் சிரித்து பேசிக்கொண் டே உண்பார்கள். இவள் தனியாக சாப்பிடுவாள். மற்றவர்கள் அறை க்கு கொண்டுபோய் சாப்பிடுவார்க ள் குடும்பமாய், ஆதவன் தலை யை இடவலமாக அசைத்தவன் உ ணவில் கவனம் ஆனான்
ஆனாலும் அவன் எண்ணங்களி ல் அவளின் நினைவுகள் சாப்பிட் டு முடித்தவன், கடைக்கு சென்று விட்டான். உளுந்து மூட்டை வரவே இறக்கி வைத்துக் கொண்டு இருந் தான்.
அப்போது அவனுக்கு தன் நண்ப னி டம் இருந்து போன் வந்தது ஆத வன் எடுத்து காதில் வைத்து, சொ ல்லு மச்சான் எப்படி இருக்க
கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு, திரு நல்லா போ யிட்டு இருக்கு மாப்பிள்ளை . உன் வீட்டுக்கு வரணும் டா.., இன்விடே ஷன் வைக்க என்றான்
ஆதவன், அப்படியா மச்சான் சந் தோஷம்டா நாளைக்கு மதியமா வீ ட்டுக்கு வந்துரு, வீட்ல தான் இருப் பேன் அம்மாவும் இருப்பாங்கடா என்றான்
திரு, சரிடா எல்லாரையும் குடும்பத் தோட, வாங்கனு சொல்லவேன் மச் சான் ஆனா உன்ன கூப்பிட ஆசை தான் என்றவன், உண்மையாவே தங்கச்சியை மறந்துட்டியா மச்சான் என்றான்
அந்தப் பக்கம் அமைதி நா.. நான் வைக்கிற மச்சான், கடையில ஆள் வந்துட்டாங்க என்றவன் போனை வைத்து விட்டான் பெரு மூச்சுடன்
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super next ud plz
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌