அத்தியாயம் 6
ராயனின் சலவைக்கல் மார்பில் சாய்ந்திருந்தவளின் மனது பந்தயக்குதிரை போல வேகமாக துடித்தது. முதன் முதலில் ஒரு ஆணின் நெருக்கத்தில் நிற்பது ஏதோ ஒரு அசௌகரியத்தை தாண்டிய நிலையில் நின்றவள் உடனே அவனிடமிருந்து பிரியவும் மனமில்லாமல் போனது. கணவனிடமிருந்து சட்டென விலகினால் அவனை பிடிக்கலையோனு நினைச்சிடுவானோ என்று தன் நாணத்தை மறைத்து ராயனின் அணைப்புக்குள் நின்றிருந்தாள் முல்லைக்கொடி.
பௌணர்மி நிலா வெளிச்சம் அந்த அறையில் ஜன்னலை தாண்டி ராயன் அறைக்குள் பரவியது அவனது அணைப்புக்குள் நின்றவளின் உடல் லேசாக நடுங்கிக்கொண்டிருந்ததை ராயனும் உணர்ந்தான்.
தனக்கு உரிமைப்பட்ட மனைவியைதானே அணைத்திருக்கிறோம் இருட்டுனா இந்த புள்ளைக்கு பயம் போல எங்கே தன் அணைப்பிலிருந்து விலக்கிவிட்டால் பயந்து அலறி ஊரை கூட்டி விடுவாளோவென்று அவனும் அவளை தன் அணைப்புக்குள்ளேயே வைத்துக்கொண்டான்.
இருவரும் பேசிக்கொள்ளவில்லைதான். மனைவியின் உணர்வுகளை புரிந்துக் கொண்டான். பயத்தில் ராயனை அணைத்திருந்தாலும் தனக்கு பிடித்தமானவனின் நெஞ்சில் சாயும் பாக்கியம் கிடைத்ததென்று இந்த நிமிடத்தை அவள் வாழ்வில் பொக்கிஷமாக எண்ணிக்கொண்டிருந்தாள் முல்லைக்கொடி.
இவர்களது மோனநிலை களைய கரண்ட் வந்துவிட்டது. அவள் சட்டென்று அவனிடமிருந்து விலகியவள் அவன் முகத்தை பார்க்க வெட்கப்பட்டு “எ.எனக்கு இ.இருட்டா இருந்தா மட்டும் ப.பயம் சின்னய்யா அ.அதான் உங்களை அணைச்சுக்கிட்டேன்” என்று அவள் வார்த்தைகள் துண்டு துண்டாக வந்தது.
“ஒருநாள் இருட்டு பார்த்து பயப்பட்டா வாழ்க்கையில இன்னும் பல இருட்டுகளை பார்த்து பழகணுமே” எதார்த்தமாக பேசிக் கொண்டே அவன் போட்டிருந்த வெள்ளை சட்டையின் பட்டன்களை கழட்டிக்கொண்டு அவள் பக்கம் நெருங்கவும் அவளோ தொண்டைக்குழிக்குள் எச்சிலை விழுங்கிக்கொண்டு நகர்ந்துக் கொண்டேச் சென்றவள் சுவற்றில் இடித்து நின்று “ப.பயமா இருக்கு சின்னய்யா” அவளது உதடுகள் தந்தி அடித்தது.
ராயனோ சட்டையை கழட்டி சுவற்றில் மாட்டியிருந்த ஹேங்கரில் மாட்டியதும் அவள் நிம்மதியாக மூச்சை விட்டுக்கொண்டாள்.
‘நான் கூட எனக்கு முத்தம் கொடுக்க வராருனு பயந்துட்டேன் என் சின்னய்யா நல்லவரு அப்படியெல்லாம் என்னோட விருப்பம் இல்லாம முத்தம் கொடுக்க மாட்டாரு’ ராயனின் மீது அதீத நம்பிக்கை முல்லைக்கு…
ராயன் சட்டையை மாட்டிவிட்டு அவள் புறம் வந்தவன் “நான் உனக்கு முத்தம் கொடுத்துருவேனு தானே பயந்து பின்னாடி போன சொல்லு” என்று அவளது தாடையை பிடித்தான்.
“இ.இல்ல உ.உங்க பக்கத்துல நிற்கவே பயப்படுவேன் இப்போ நீங்க என் பக்கத்துல நெருக்கமா நிற்கவும் கொஞ்சுண்டு பயந்துட்டேன்” என்றவளது கண் இமைகள் பட்டாம்பூச்சியாய் சிறகடித்தது.
“நான் சிங்கமோ புலியோ கிடையாது என்னை பார்த்து பயப்பட நாம ரெண்டு பேரும் புருசன் பொஞ்சாதியா வாழத்தான் போறோம். இப்போ நீ பயந்து நடுங்கறது போல எதுவும் நடக்காது உன் படிப்புல கவனத்தை காட்டு சரியா” என்று அவளது சிவந்திருந்த கன்னத்தை லேசாய் வருடி விட்டு குளியலறைக்குள் சென்றான்.
“அச்சோ சிவபெருமானே என்னோட சின்னய்யா தங்கக்கட்டி” என்றவளோ அடுத்தநாள் எக்ஸாமிற்கு படிக்க புக்கை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தவளுக்கு அவன் தாலிகட்டும் நேரம் இனிமேதான் புள்ள உனக்கு இருக்குனு பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வரவும் “குளிச்சிட்டு வந்து நம்மளை ஏதும் பண்ணுவாரோ” என்ற பயம் அவளை கவ்வியது.
ராயன் குளித்து விட்டு தலையை துவட்டிக்கொண்டு வந்தவன் கையில் புத்தகத்தோடு உட்கார்ந்திருக்கும் முல்லையை பார்த்தவன் “என்ன தூங்குற நேரத்துல புக்கை எடுத்துட்டு உட்கார்ந்திருக்க” என்றபடியே தலையை துவட்டிய துண்டை சோபாவில் மேல் விரித்துவிட்டான்.
“அ.அது நாளைக்கு எக்ஸாம் இருக்கு படிக்கணும்”
“பதினொரு மணியாச்சு காலையில நாலு மணிக்கு எழுப்பி விடறேன் படிக்கலாம் இப்ப தூங்கலாம் வா” என்று அவளுக்கு கட்டிலில் இடம் விட்டு படுத்தான்.
“எ.எனக்கு கட்டில படுத்தா உறக்கம் வராது கீ.கீழ பாய்ல படுத்தாதான் உறக்கம் வரும்” என்றாள் தயங்கியபடியே.
“ரெண்டுநாள் மெத்தையில படுத்து பழகினா தூக்கம் வந்துடும் வந்து படுத்துக்கோ ஏன் என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா உன் மேல பாய்ஞ்சுடுவேனு உனக்கு பயம் அப்படித்தானே” என்று அவன் குரல் உயர்ந்து வந்தது.
“அ.அப்படியில்லை சின்னய்யா நான் தூக்கத்துல புரண்டு புரண்டு படுப்பேன் உங்க மேல கையை காலை போடுவேன் அதான்” என்று கண்ணைச்சுருக்கினாள்.
“புருசன் மேலதானே காலை போடுற தப்பில்லை வா” என்றவன் “அப்புறம் இந்த சேலையை கழட்டி வைச்சுட்டு” அவன் அடுத்த வார்த்தை பேசும் முன்
“ஆஆ சேலையை கழட்டணுமா நான் மாட்டேன் இப்போ கொஞ்சம் முன்னே தானே படிச்சு முடினு சொன்னீங்க இப்போ சேலையை கழட்ட சொல்லுறீங்க சின்னய்யா” என சின்னக்கோபத்துடன் இடுப்பில் கையை வைத்து முறைத்து நின்றாள்.
“சரியான அவசரக்குடுக்கையா இருக்க சேலையை கழட்டிட்டு ஃப்ரீயா நைட்டி ஏதாவது போட்டுக்கலாம்லனு சொல்ல வந்தேன்டி” என்றான் முதல் முறை உரிமையாக அழைப்புடன்.
“என்கிட்ட நைட்டி எல்லாம் இல்லைங்க சின்னய்யா சுடிதார்ல அப்படியே தூங்கிடுவேன் எனக்கும் இப்போ இந்த சேலையை கட்டிக்கிட்டு சிரமமாத்தான் இருக்கு” என்று முகத்தை சுளித்தாள்.
“அப்போ என்னோட சட்டை எடுத்து போட்டுக்கிட்டு வந்து படுத்துக்கோ” என்றான் இயல்பாய் இருவரும் பழநாள் பழகியவர்கள் போல பேசிக்கொண்டனர் தாலி கட்டியதும் மனைவி என்று உரிமையை அவன் எடுத்துக்கொண்டான். முல்லை மட்டுமல்ல வேறு எந்த பெண்ணை மணந்திருந்தாலும் ராயன் இதுபோலத்தான் நடந்திருப்பானோவென்று அவனுக்கே சந்தேகம் வந்தது.
“உங்க முன்னால எப்படி சேலையை மாத்துவேன் எனக்கு சங்கோஜமா இருக்கு நீங்கவேணா திரும்பி படுத்துக்கோங்களேன்” என தைரியத்தோடு ராயனிடம் பேச ஆரம்பித்தாள்.
“நான் உன்னோட கழுத்துல தாலி கட்டியிருக்கேன் ஞாபகம் இருக்கா உனக்கு. பொண்டாட்டி உடுப்பு மாத்தும்போது எதுக்கு திரும்பி படுக்கணும் உன்னை பார்க்க உரிமைப்பட்டவன் உனக்கு விருப்பம் இருந்தா ட்ரஸ் என் முன்னால மாத்து இல்ல என் முன்னாடி ட்ரஸ் மாத்த விருப்பம் இல்லனு தோணுச்சுனா இதே சேலையோட வந்து படுத்துக்கோ” என்று விறைப்பாய் பேசிவிட்டு கண்ணைமூடிக்கொண்டான்.
“என்னால இந்த சேலையை கட்டிக்கிட்டு தூங்கவே முடியாதுப்பா சின்னய்யா முன்னாலதானே ட்ரஸ் மாத்தப்போறோம் திரும்பி நின்னு மாத்திப்போம் எத்தனை முறை சின்னய்யா சட்டையை தொட்டு பார்க்க ஆசைப்பட்டோம் இப்ப சட்டையை நாம போட்டு பார்க்க சான்ஸ் கிடைச்சிருக்கு விடுவேனா” என்று ஹேங்கரில் துவைத்து மாட்டியிருந்த சட்டையை எடுத்து கையில் வைத்துக் கொண்டவள் ராயன் தன்னை பார்க்கிறானா என்று ஒரு முறை பார்த்துவிட்டு அவன் கண்ணை மூடிப்படுத்திருப்பதை உறுதிப்படுத்தி விட்டு சட்டையை முகர்ந்து பார்த்து விட்டு சேலையை களைந்து இரவிக்கை பாவாடையுடன் ராயனின் சட்டையை போட்டுக்கொண்டு கீழே கிடந்த புடவையை மடித்து வைத்துவிட்டு மெது மெதுவாய் ராயன் பக்கத்தில் வந்து படுத்துவிட்டவளுக்கு இதயம் படு வேகத்தில் எகிறிக்குதித்தது.
இதில் ராயன் அவள் பக்கம் நெருங்கி வரவும் “முருகா! முருகா! பயமாயிருக்கு” என்று கண்ணைமூடிக்கொண்டு முணகிக்கொண்டிருந்தாள்.
“ஏய் புள்ள என்னாச்சு?” என்று அவளது கையை தொட்டான்.
கண்ணை திறந்து பார்த்தவள் “நீங்க கட்டிபிடிக்க வரீங்கனு நினைச்சிட்டேன்” என்றாள் அப்பாவி போல கண்ணை உருட்டி.
“உன்னோட எண்ணம் கோக்கு மாக்கா இருக்கு ஒழுங்கா படுத்து தூங்கு” என்று அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான் ராயன்.
‘ம்ம் நான் கூட கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பாருனு நினைச்சேன் ஒருவேளை சின்னய்யாவுக்கு வயசாகிடுச்சோ அந்த விசயத்துல வீக்கா அதான் கட்டிபிடிக்கலையா’ அவளாக ஏதோ ஏதோ நினைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டாள். புது இடமாக இருக்க அவளுக்கு உறக்கம் வரவில்லை ராயனோ எந்த கவலையும் இல்லாமல் உறக்கத்தில் இருந்தான்.
“என் பக்கம் திரும்பி படுக்க மாட்டீங்களா சின்னய்யா இத்தனை நாள் தூர இருந்து சைட் அடிச்சேன் இப்போ இவ்ளோ பக்கத்துல நல்லா சைட் அடிக்கலாம்னு இருந்தேன் முதுகு காட்டி படுத்துக்கிட்டீங்க” என்று பெரும்மூச்சு விட்டு கண்ணைமூடிக்கொண்டாள்.
ம்ஹும் உறக்கம் வரவில்லை ச்சே தூக்கமே வரமாட்டேங்குது என்று கண்விழித்த நேரம் அவள் முன்னே முகம் காட்டி உறங்கிக்கொண்டிருந்தான்.
நாம பேசினதை கேட்டிருப்பாரோ தூங்கறது போல நடிக்குறாரா என்று அவளுக்கு சந்தேகம் வரவும் “சி.சின்னய்யா” என்று ராயனை மெதுவாய் கூப்பிட்டு பார்த்தாள்.
“ஏய் இந்தா புள்ள நீ தூங்கமாட்டியா?” என்று அவன் கண்விழித்து கண்ணை உருட்டினான்.
“ஆத்தாடி இ.இதோ தூங்கிட்டேன்” என்று கண்ணைமூடிக்கொண்டாள் முல்லைக்கொடி.
ராயனோ ‘சரியான அறுந்த வாலா இருப்பா போல’ என சின்ன சிரிப்புடன் கண் உறங்கிவிட்டான்.
சரியாக நாலு மணிக்கு எழுந்துவிட்டான் ராயன். தன் கால் மேல் முல்லை அவளது காலைப்போட்டு இதழை மீன்குஞ்சு போல விரித்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தவளை கண்டு “அவசரப்பட்டு சின்ன பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டேன்” என்று சலித்துக்கொண்டவன்
“ஏய் புள்ள முல்லை எழுந்திரு” என்று அவளது கன்னத்தை தட்டினான்.
“சும்மா இருமா தூக்கம் வருது” என்று ராயனின் கையை தட்டிவிட்டாள் முல்லை.
“ம்ச் எங்க படுத்திருக்கோம்னு கூட இவளுக்கு மறந்து போச்சா” என்றான் சிறு கோபத்துடன்.
“ஏய் இந்தா புள்ள எக்ஸாம் இருக்குனு சொன்னியே எழுந்து படி” என்று அவளது கன்னத்தை பிடித்து கிள்ளிவிட்டான்.
அவளோ “ஆஆ” என்று அடித்து பிடித்து எழுந்து கன்னத்தை தேய்த்துக்கொண்டவள்
“எ.எதுக்கு என் கன்னத்தை கிள்ளுனீங்க சின்னய்யா?” என்று அவள் போட்டிருந்த சட்டை அவளது இடையை விட்டு மேல போனது கூட தெரியாமல் அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
“உன்னோட ட்ரஸை சரி பண்ணிட்டு குளிச்சிட்டு வந்து படிக்குற வழியை பாரு” என்று அவளது கண்ணை மட்டும் பார்த்து பேசிவிட்டு மெத்தையை விட்டு இறங்கி குளியலறைக்குள் சென்று விட்டான்.
ராயன் சென்ற பிறகுதான் தான் இருந்த நிலையை குனிந்து பார்த்தாள். அவள் போட்டிருந்த சட்டை பட்டன் கழண்டிருந்தது கெண்டை கால் தெரிய உள்பாவாடை மேலே ஏறியிருந்தது படுக்கும்போது போர்வையை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டுதான் படுத்தாள். ஆனால் அவள் தூங்கியபிறகு போர்வை ஒருபக்கம் கிடந்தது.
“அச்சோ சின்னய்யா என்னை பத்தி என்ன நினைச்சிருப்பாரு!” என்று தலையில் அடித்துக்கொண்டு மெத்தையிலிருந்து எழுந்து நின்று தன் சட்டை பட்டனை போட்டுக்கொண்டு தன் பேக்கிலிருந்து துண்டும் சுடிதாரையும் எடுத்து தோளில் போட்டுக்கொண்டு தூங்கி வழிந்து நின்றவள் கதவு திறக்கும் ஓசையில் கண் விழித்து நின்றாள்.
ராயன் வெளியே வந்ததும் அவன் முகம் பார்க்காமல் குளியலறைக்குள் சென்று விட்டாள்.
பால்கனியில் சென்று தண்டால் எடுக்க ஆரம்பித்தான் ராயன்.
குளித்து வந்தவள் இவரு எங்க போனாரு காணோமே என்று அறைக் கதவை பார்த்தாள் உள்ளே தாழ்ப்பாள் போட்டிருந்தது. வெளியேவும் போகலை என்று தலைக்கு கட்டியிருந்த துண்டுடன் பால்கனிப்பக்கம் சத்தம் கேட்கவும் பால்கனிக்குச் சென்றவள் கண்களை அகல விரித்தாள்.
ராயனோ புஜங்கள் புடைத்து நிற்க தண்டால் எடுத்துக்கொண்டிருந்தான்.
ராயனின் மீது ஏறி உட்கார ஆசைப்பட்டு தறி கெட்டு ஓடிய மனதை அணைப்போட்டு தடுக்க அரும்பாடு பட்டாள் முல்லைக்கொடி.
பெண்ணவளின் வளையல் ஓசை கேட்டு நிமிர்ந்து பார்த்தவன் “நீ படிக்காம இங்க என்ன வேடிக்கை பார்த்துட்டு நிற்குற போய் படி” என்று அவன் அதட்டல் போடவும்
புள்ளிமானாய் அறைக்குள் வந்து புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டவளுக்கு நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது.
கொஞ்ச நேரம் கூட சைட் அடிக்க விடலப்பா என்று சலித்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள்.
தண்டால் எடுத்து முடித்து உடல் முழுக்க வியர்வையுடன் நடந்து வந்த ராயனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
“அப்பாடி என்ன உடம்பு தேக்கு மரம் போல சும்மா கிண்ணுனு உடம்பை வைச்சிருக்காருப்பா” என்று கண்ணை உருட்டிக்கொண்டு படிப்பது போல பாவ்லா காட்டினாள்.
ராயனோ அவளது செய்கையை பார்த்துக்கொண்டேதான் குளிக்கச் சென்றான்.
குளித்து விட்டு இடுப்பில் துண்டுடன் வந்தவனை கண்டு எச்சில் விழுங்கிக்கொண்டு திரும்பி உட்கார்ந்துக் கொண்டாள். அவனது உரமேறிய கட்டுமர தேகத்தை காண அவளுக்கு பயமும் வெட்கமும் கலந்து வந்தது.
வேஷ்டி சட்டைக்கு மாறியவன் தலையை ஜெல் வைத்து அடக்கிக்கொண்டு திரும்ப புத்தகத்தை பேக்கில் வைத்துக்கொண்டிருந்தாள்.
“ஏன் படிக்காம புத்தகத்தை பேக்குல வைக்குற” என்று அவன் அவள் பக்கம் வந்து உட்கார்ந்தான்.
“வீட்டு வேலை பார்க்க வேணாமா பெரியம்மாவுக்கு நான்தான் டீ போட்டு அவங்க அறைக்கு கொண்டு போகணும் கொஞ்சம் நேரம் ஆனாலும் திட்டுவாங்க” என்றாள் கண்களை சுழட்டிக்கொண்டு.
“எக்ஸாம் இருக்க சமயம் நீ சமையல்கட்டு பக்கம் போகக்கூடாது பெரியம்மாகிட்ட நான் பேசுறேன்” என்றான் சட்டையை முழங்கை ஏத்திவிட்டபடியே.
“அச்சோ நீங்க எதுவும் சொல்லவேணாம் என் பெரிய மகன்கிட்ட ஏன் என்னை பத்தி சொன்னேனு திட்டுவாங்க” என்றாள் முகத்தை அப்பாவியாக.
“நீ இந்த வீட்டோட மூத்த மருமகள் யாருக்கும் பயப்படத்தேவையில்லை அதே சமயம் வீட்டுப்பெரியவங்கிட்ட மரியாதை குறைவாகவும் நடந்துக்க கூடாது. பெரியம்மா எதாவது சொன்னாங்கனா அவங்க கிட்ட ஏட்டிக்கு போட்டி சண்டை போடக்கூடாது என்கிட்ட சொல்லு நான் பார்த்துப்பேன் உன்னால இந்த வீட்டுல எந்த பிரச்சனையும் வரக்கூடாது. என்கிட்ட எந்த விசயத்தையும் மறைக்ககூடாது சரியா” என்று அவளது சிவந்த கன்னத்தை தொட்டவன் “நேத்து அடிச்சது ரொம்ப வலிச்சுதா” என்று அவளது கன்னத்தை தடவிவிட்டான்.
“ஆமா வலிச்சுது” என்று கண்களை அகல விரித்து தலையை ஆட்டினாள்.
“தப்பு பண்ணினா அடிக்கத்தான் செய்வேன் பார்த்து நடந்துக்கோ” என்று விரலை நீட்டி எச்சரிக்கவும் அவளது தலை தானாக ஆடியது.
Rayan role semma i like it
sema super 2 epi podugga sis