4
இவரா…..??
இவன்… இவராக்கியது திலோவின் பண்பட்ட மனம்…
அந்த அவர் யார் என்ற கேள்விக்கு பதில்…
பரத் கேசவ் தி கிரேட் ஆதி கேசவின் மகன்… ஆதி குரூப் ஆப் கம்பெனியை தெரியாத தேனி மக்களே இருக்க முடியாது… ஆதி கேசவன் சாம்ராஜ்யத்தின் முடி இளவரசன் தி கிரேட் பரத்தா அவளை மணக்கப் போவது…???
இது என்ன கேலிக் கூத்து…?? இவளை கண்டாலே இளக்காரமாக பார்க்கும் கண்கள்… இகழ்ச்சியாக வளையும் உதடுகள்… இவள் ஏழ்மையை ஏளனமாக எள்ளி நகையாடும் நாக்கு… அவன் சைட் அடிக்கும் தகுதிக் கூட இல்லாதவள் என்று அன்று ஒருநாள் சொன்னவனா இன்று இவளை மணக்கப் போவது… மாமாவுக்கு ஆசை முற்றி விட்டதோ…?? மயிர் நுனி முதல் அடி வரை பகட்டும் பந்தாவையும் காட்டிக் கொள்ளும் மேல் தட்டு மனப்பான்மை கொண்ட இவன் எங்கே…?? சற்றும் அவனுக்கு எந்த வகையிலுமே பொருந்தாத நான் எங்கே??? என்னையாவது இவனாவது மணக்க கேட்பதாவது…??
“இது தேறாது??? பாவம் மாமா வீணான கற்பனை வளர்த்துக்கிட்டு இருப்பார்…இப்போவே போய் இந்த கல்யாணம் கைக் கூடாதுன்னு சொல்லிடணும்…கொஞ்சம் வருத்தப் படுவார் ஆனால் காரணத்தை சொன்னா கட்டாயம் புரிஞ்சிப்பார்…பாவம் அவர் எதிர்பார்த்த போல இந்த சம்பந்தமும் அமையல…இந்த தள்ளாடும் வயசுல திரும்பவும் எனக்கு மாப்பிளை தேட போறேன்னு கிளம்பிடுவார்… சொன்னாலும் கேக்க மாட்டார்…!!”என பஞ்சாட்சரத்தை நினைத்து பார்த்தவளுக்கு அவர்பால் கழிவிரக்கம் தோன்றிய நொடி பெரு மூச்சாக வெளிப் பட்டது… எனவே எதுவும் பேசாமல் திலோத்தமா அங்கிருந்து திரும்பி போக எத்தனிக்க…
“போகாத திலோ ப்ளீஸ்… போகாதமா நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் ப்ளீஸ்… நான் சொல்ல வருவதை ஒரு முறை கேட்டுட்டு அப்புறம் உன் முடிவை சொல்லு… அதுக்கு மேல உனக்கு பிடிக்கல என்றால் நிச்சயம் உன்னை தொந்திரவு பண்ண மாட்டேன்…!!”என கெஞ்சல் மொழியில் பேசியவனைக் கண்டு ஆச்சரியத்தில் விழி விரித்து நின்றாள் பேதை…
“இவனுக்கு இப்படி எல்லாம் கூடக் கெஞ்ச தெரியுமா…ஏய் ஒய் என்று அவளிடத்தில் அதிகாரம் செய்தே பழக்கப் பட்டவன் இன்று அவளிடம் கெஞ்சி நிற்கிறானா இது என்ன மாயம்…?? என பிரமிப்புடன் திலோ பார்த்து நிற்க…
“நீ உன் மனசுக்குள்ள என்ன நினைக்கிறன்னு எனக்கு புரியுது திலோ…திலோ.!த்தமா… திலோன்னு கூப்பிடலாமா…?? “
கழுதைக்கு கண்ணுக் குட்டின்னு பேராம் என கிண்டல் அடித்த அதே வாய் இன்று அவள் பெயரை அழைக்க அனுமதி கேட்டு நிற்கிறது…என என்ன முயன்றும் அவளால் கடந்தக் காலத்தை இணைத்து பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை…
“கூப்பிடுங்க…!” என அனுமதி தந்தாள் அவன் காத்திருப்பது புரிந்து…
முன்னே உன்கிட்ட நடந்து கிட்ட முறையே சரியில்ல என கூற வந்தவன் திலோவின் பார்வை மாற்றத்தை உணர்ந்து “இல்லை நான் ரொம்பவே மோசமா நடந்துக் கிட்டேன் அதுக்காக நான் உன்கிட்ட மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன் திலோமா…!!”
“வயசு கோளாறுளையும் பணத்திமிர்லையும் உன்னை ரொம்பவே காயப்படுத்திட்டேன்… நான் சொல்றதை நீ நம்புவியான்னு தெரியல…ஆனால் நான் முன்ன மாதிரி இல்லை இப்போ நிறையவே மாறிட்டேன்… வெளிநாட்டு வாழ்க்கை என்னை மொத்தமா புரட்டி போட்ருச்சு… என்னோட ஆணவம் அகங்காரம் எல்லாத்துக்கும் ஒரு முற்றுப் புள்ளி வச்சிடுச்சு…பணத்தையும் தாண்டி சிலதும் இருக்குன்னு என்னை தேட வச்சிடுச்சு… அடுத்தவங்க மனசை காயப்படுத்தினா எப்படி வலிக்கும்ன்னு என்னோட காயப்பட்ட மனசு எனக்கு கத்துக் கொடுத்துடுச்சி… இப்போ உன் முன்னாடி பழைய ஆணவம் செருக்கு கொண்ட பரத்தா இல்லை மனம் திருந்தி இனி வரும் வாழ்க்கையாவது மன நிறைவோடவும் நிம்மதியாகவும் வாழனும் ஆசை படுறான்…இப்போ உன் முன்னாடி நிக்கிறது புது பரத்…!!”என உணர்ச்சிப் பிடியில் இருந்து அவன் பேசுவது நன்றாக புரிந்தது திலோவிற்கு…
அவன் மாறி இருக்கிறான் என்பதற்கு அடையாளமே அன்று இளக்காரமாக பார்த்த கண்கள் இன்று மரியாதையாக பார்த்தது, அன்று இகழ்ச்சியாக வளைந்த உதடு இன்று அழுந்த மூடி கெஞ்சி நிற்கிறது… அன்று எள்ளி நகையாடிய நாக்கு இன்று அவளிடம் மன்னிப்பை யாசிக்கிறது…தோற்றத்தில் கூட பழைய மிடுக்கு போய் பக்குவப் பட்ட தோரணை தெரிந்தது… பலே பெரிய மாற்றம் தான் ஆனாலும் இத்தனை பெரும் செல்வந்தன் இன்றைய கணக்கு படி ஒன்றுமே இல்லாத இவளை மணக்க காரணம் என்ன அங்கு தானே எதோ உதைக்கிறது…என எண்ணியவள் மௌனம் காத்தாள்…
“நீ ஏன் அப்படி பார்க்கிறன்னு எனக்கு நல்லாவே புரியுது … என்னடா இத்தனை நாள் இல்லாம தீடிர்னு தேடி வந்து மன்னிப்பு கேக்குறான், கல்யாணம் பண்ணிக்கிறேன் என்கிறான் ஒரு வேளை பழிவாங்கவானு நீ நினைக்கிற… அப்படி தான…??” என அவள் உள்ளம் படித்தவன் போல் கேட்க…
அவளும் ஆம் என்றே தலை ஆட்டி வைக்க… அவள் இப்படி டக்கென்று உண்மையை ஒத்து கொண்டதும் அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது என்பது அவன் முகம் மாற்றத்தில் இருந்தே அறிய முடிந்தது…
“தேங்க்ஸ் மனசு மறைக்காமல் உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு… உன்கிட்ட இருந்து மறைக்க எனக்கு ஒன்னும் இல்ல அதனால நான் பிராங்க்காவே எல்லாத்தையும் சொல்லிடுறேன்… என தொடங்கவியவன் தன் கடந்த காலம் பற்றி முழுமையாக அவளிடம் கூறியவன்… வாழ்க்கையில் நான் எடுத்த தப்பான முடிவால் பல விஷயத்தை நான் இழந்துட்டேன்… இதுக்கு மேல உண்மையை மறைத்து ஒன்னும் தெரியாத பொண்ணை ஏமாற்றி வாழ என் மனசு இடம் கொடுக்கல இதுவே என்னை பற்றி எல்லாம் தெரிந்த எல்லாம் புரிஞ்ச ஒரு பொண்ணை கட்டிக்கிட்டா லைப் பெட்டரா இருக்கும் நினைச்சேன்… அப்படி தேடி பார்த்தா நீ தான் என் நினைவுக்கு வந்த…யாருக்குமே தெரியாத என்னோட அந்தரங்க ரகசியம் கூட அறிஞ்சவளும் நீ தான்… என அதை கூறுபவன் முகத்தில் தான் அத்தனை அவமானத்தின் சிவப்பு… சோ என்னை பற்றி சர்வமும் அறிந்த நீயே எனக்கு வாழ்க்கை துணையாக வந்தால் என் வாழ்க்கை நிச்சயமா சீராகும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு… என் மன்னித்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பியா…!!” என எதையோ எதிர்பார்த்து அவன் இடைவெளி விட திலோவோ அவ்வளவு தானா என்பது போல் பார்க்க மீண்டும் தொடர்ந்தான்…
“ இன்னும் ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லி விடுகிறேன் திலோமா… எனக்கு நீ லைப் பார்ட்னரா வரணும்னு எதிர்பார்க்கிறத விட உனக்கு உற்ற தோழனா ஒரு நல்ல பாதுகாவலனா வரணும் தான் மனசார ஆசைப் படுறேன்… இப்போ முடிவு உன்னோட கைல உன் விருப்பத்தை நீ தாராளமா சொல்லலாம்… உனக்கு பிடிக்காட்டியும் சொல்லிடு நான் கட்டாயப் படுத்த மாட்டேன் அதே சமையம் உனக்கு ஒரு நல்ல தோழனா வாழ்க்கை முழுக்க வர எனக்கு யாரோட அனுமதியும் தேவையில்லை என்பதையும் சொல்லிக்கிறேன்…!!”என்றவனை ஆழமாக பார்த்தவள்…
“என்னை இன்னும் அதே விவரம் இல்லாத பழைய தத்தி திலோத்தமா நினைச்சிட்டிங்களா பரத்…??இப்போ இருக்குற திலோத்தமாவே வேற வாழ்க்கையில் அடிபட்டு படிப்படியாக முன்னுக்கு வந்தவள்… இப்போ அவளுக்கு அத்தனையும் அத்துப்படி… சரி தப்பு பற்றி நல்லாவே புரியும்,யாரும் சொல்லி கொடுக்க தேவை இல்லை… என்னோட வாழ்க்கையில சுதந்திரமான முடிவு எடுக்கிற அளவுக்கு தைரியமும் துணிச்சலும் இருக்கு… எடுத்த முடிவை சரியானதாக மாற்ற தன்னம்பிக்கையும் என்கிட்ட நிறையவே இருக்கு…முன்ன போல யாராலும் என்னோட முடிவை கட்டுப்படுத்த முடியாது என்பதையும் தெரிஞ்சி இருப்பிங்கன்னு நம்புறேன்…!!”என்றவள் வார்த்தைகளில் தன்னை நிராகரித்தேவிட்டாள் என்றே நம்பிய பரத்… வேதனையுடன் தோல்வியை ஒப்புக் கொண்டவன் போல் சோர்ந்து போய் திரும்பிய சமையம்…
“இருங்க நான் சொல்றதையும் முழுசா கேட்டு போங்க பரத்… என்ன பத்தி நான் உங்களுக்கு எல்லாத்தையும் சொல்லிட்டேன் நினைக்கிறேன்… அதுனால என் முடிவு என்ன என்றால் எனக்கும் சம்மதம் அதாவது உங்களை திருமண செய்ய மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன் என கடைசி வரியை குறும்பாக சொல்லி விட்டு அவள் சிரிக்க…
அதுவரை தேமே என நின்றவனுக்கு அவள் வார்த்தைகள் புரியவே சில நொடிகள் எடுத்தது…
“ஹேய் திலோஓஓ… என அதிர்ச்சியை கூச்சலாக வெளிப் படுத்தினான்…அடுத்தடுத்து இருவரும் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்…நீண்ட நாள் கழித்து அவனும் அவளும் மனதை திறந்து பரிமாறிக் கொண்டதில் இருவருக்கும் இடையில் அழகான ஒரு உறவு பூத்தது அவர்கள் அறியாமலே… இருவரின் நகையொலியும் சங்கீத ஸ்வரங்களாக எதிரொலிக்க வெளியே இருந்த பஞ்சாட்சரம் காதிலும் அது விழுந்தது… அதில் தானே அவருக்கு பரிபூரண திருப்தியும் உண்டு…இனி அவளது வாழ்வு நேராகி விடும் என்கிற நம்பிக்கை அவரிடத்தில் உதயமானது… பாவம் அவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை… அவரின் இந்த மன அமைதியை கெடுக்கவே ஒருவன் வருகிறான் என்று… மேலே தங்கள் எதிர்காலத்தை நினைத்து மன நிறைவாக சிரிக்கும் இருவருக்கும் தெரிந்து இருக்காது அவர்கள் சிரிப்பை சிதைக்கவென்றே ஒருவன் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வஞ்சனை புரிய வருகிறான் என்று… அவன் திலோவின் திடத்தை அழித்து அவளது புன்னகையைப் பறித்து தன்னம்பிக்கையை தகர்க்கவென்றே பறந்து வருகிறான்… அவனால் அவளது வாழ்வே கேள்விக் குறியாகும் என கனவில் கூட அவள் நினைத்து இருக்க மாட்டாள்…
super sis
நன்றி சகிமா 🙂
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌