ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 8

அத்தியாயம் 8

வீட்டிற்கு வந்த ஆதவனுக்கு எண்  ணமெல்லாம் தன்னவள் மீது தான் என்னவள் வீட்டை விட்டு விரட்ட ப்பட்டாளா.., அவள் என் பிள்ளை யை சுமந்து கொண்டிருந்தாளா 

 அம்மா ரெண்டு லட்சம் கொடுத்து தான் அவளை எனக்கு கல்யாண ம் பண்ணி வச்சாங்களா அதை பத் தி,  என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே,

அதனாலதான் தேனுவ ஒரு மாதிரி நடத்தினாங்க ளா?, அதனாலதான் அவளை,  ரொம்ப அதட்டினாங்க ளா.., என் கிட்ட ரொம்ப பேசவும் வி டலையா..,

அம்மா ஏன் இப்படி பண்ணாங்க…, என என்னவோ எண்ணங்கள் அ வன் எண்ணத்தில் வந்து போனது 

அப்பா இங்கிருந்து போகும்போது அவ என் புள்ளைய சுமந்துகிட்டு   போனாளா, அப்ப அம்மா அவள அப்படி சொன்னது  எல்லாம்.. பொய்யா…, 

இப்ப எப்படி, எங்கே இருப்பா, ஒரு வேலை அவர்கள் சொன்னது போ ல யாரும் எனக்கு இல்லையென இறந்து போய்விட்டாளோ.. என எண்ணம் கொண்டவன் 

 இல்ல.. இல்ல.. என் தேனு அப்படி எல்லாம் செய்ய மாட்டா. தேனு.. சா ரி டி  நான் உன்ன அடிச்சி இருக்க கூடாதுடி நான் மட்டும் என்ன நல் ல புருஷனாவா இருந்தேன்.

உன்ன பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியலடி, அந்த அளவுக்கு நான் உன் கூட குடும்பம் நடத்தி இருக்கே ன். உனக்கு என்ன பிடிக்கும்னு கூட எனக்கு தெரியலடி 

ஒருநாள் கூட உன்கிட்ட என்ன வே ணும் கேட்டது இல்லடி. நீயும் இது வேணும் அது வேணும்னு கேட்கல யேடி. அவங்க சொல்ற மாதிரி நான் உன்ன சரியா பாத்துக்கலடி ரொம் ப கஷ்டம் பட்டியாடி 

வார்த்தைக்கு வார்த்த மாமா மாமா ன்னு… கூப்பிட்டுடே இருப்பியேடி எங்கடி இருக்க, என்கிட்ட வந்துடு  என வாய்விட்டு கதறினான் 

இரவு சாப்பிடவும் வரவில்லை கத வு திறக்கப்படவில்லை தனம் வந் து பார்த்தவர் எழுப்பாமல் சென்று விட்டார். 

 காலையில் எழுந்தவன் , வெளியே வந்து சோபாவில் அமர்ந்தான், இர வு சாப்பிடாததால் சோர்வாக இருந் தது பசி வேறு எடுத்தது 

 அதே நேரம் உதயன் பொண்டாட்டி நந்தினி, உதயா இந்த முறை  சம்ப ளம் கொஞ்சம் குறைவாக குடுங்க வீட்டுக்கு. பையன் பெருசாகிட்டா ன்ல, எனக்கும் தேவைனு நிறைய இருக்கு என கூறியவளை 

 உடனே உதயன் ஏண்டி ஏற்கனவே 6000, 7000 தான் வீட்டுக்கு கொடுக் கிறேன்,  மீதியெல்லாம் நீதானே வா ங்குற அதுலயும் கை வச்சா அம்மா கேட்பாங்க டீ 

 அது இல்லாம சின்னவன் ஆதவ ன் பணம் எல்லாத்தையும் அம்மா கிட்ட தான் கொடுக்கிறான் அம்மா இதை சொல்லி கேப்பாங்கடி என் றான் 

 நந்தினி, உடனே என்னங்க நீங்க இப்படி பேசுறீங்க உங்க தம்பிக்கு என்ன குடும்பம், குழந்தை குட்டி யா இருக்கு. ஒண்டிக்கட்டை தானே அதுவும் இல்லாம அவர் தான் சேர் த்து வச்சுக்கத் திராணி இல்லாம அம்மா கிட்ட கொடுத்துட்டு கையே ந்தி நிற்கிறார் னா நானும் அப்படி யே உங்க அம்மாகிட்ட நிக்கணுமா 

 இல்ல நீங்க தான் என்ன நிக்க விட் டுடுவீங்களா.. என்ன என்றாள்

 இதையெல்லாம் கேட்டுக் கொண் டு சோபாவில் அமர்ந்திருந்த  ஆத வன் கோபமாய் உதயனை முறைத் தான் 

 ஆதவனைப் பார்த்ததும் நந்தினி வாய மூடியவள் பசிக்குது சாப்பிட போறேன் என்று விட்டு உள்ளே போய்விட்டாள்

 அது, இல்லடா ஆதவா குடும்பம் பெருசாகிடுச்சு இல்ல.., அதான் சேர் த்து வைக்க சொல்லிட்டு, போறா.. என்றவன் நாக்கை கடித்துக் கொ ண்டு தப்பித்தோம் என சென்று விட்டான் மனைவியின் பின்னால் அவன் அறைக்கு.

 அதன்பிறகு தான் ஆதவன் யோசி த்தான் அவர்கள் சொன்னது போ லவே தனக்கென்றும் தன் குடும்ப த்திற்கும்,  தான் எதுவும் சேர்த்து வைக்கவில்லையே.., என யோசித் தான்.

கொடைக்கானலில் மதுராவுக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்க ள் ஓடிவிட்டது. மைதி பாப்பா வை கையில் வைத்துக் கொண்டு இருந் தாள்.அவள் அம்மா, துணி துவை த்து காய வைத்துக் கொண்டிருந் தார் பின்பக்கமாய் 

 மதுர காலை உணவை சமைத்துக் கொண்டிருந்தாள்.  8 மணி அளவி ல்,  கதவு தட்டும் சத்தம் வெளியே கேட்டது. மதுரா, மைதி, வெளியே யாரோ கதவு தட்டுறாங்கடி என்றா  ள் 

மைத்தி இருடி பாக்குறேன் என்றவ ள் குழந்தையை கீழே இறக்கி படுக் க வைத்து விட்டு கதவை திறந்தா ள், அங்கே ரவிச்சந்திரனும் ஆராவு ம் நின்றிருந்தனர்.மைத்திக்கு யார் என்று தெரியவில்லை 

அதே நேரம் சமையல் முடித்த மது ரா, யாரு டி… வந்திருக்கா பக்கத்து வீட்டு அக்காவா என கேட்டுக் கொ ண்டே வந்து வாசலில் நிற்பவர்க ளை பார்த்தவள் அப்படியே ஷாக் அடித்தது போல் நின்று விட்டாள் 

 ரவி, நாங்க உள்ள வரலாமா என் றான் சத்தமாய் 

அதில் தெளிந்த மதுரா ஹான்  வா வாங்க அண்ணா வாங்க அண்ணி என்றவள், மைத்தி, ரவி அண்ணா அவங்க என் அண்ணி ஆராதனா என்றாள். ஆரா முகத்தில் புன்ன கை அவள் கூற்றில் 

 மைதிலி,  சாரி அண்ணா சரியா ஞாபகம் இல்ல உட்காருங்க வரேன் என்று உள்ளே சென்று டீ போட்டா ள் 

 உள்ளே வந்தவர்கள் சேரில் அமர் ந்தனர் சிறிய வீடு பெரியதான வச தி ஒன்றுமில்லை மைதி டீ போட்டு கொடுத்தவள் மதுரா நான் வேலை க்கு கிளம்புறேன்.

இன்னைக்கு நீ வீட்டுல இரு என்று விட்டு தன் தா யை அழைத்து இவ  ர்களை அறிமுகம் செய்து வைத்தா ள்

 ரவி ஏன் தேனுமா நான் அவ்வள வு சொல்லியும் இங்க வந்து கஷ்டப் படுற யாரும் இல்லாம,  உன்னை காணாமல்,  எவ்வளவு தேடி வேத னைப்பட்டேன் தெரியுமா 

ஆமா தேனு நீ போனதும் கல்யாண ம் வேணாம்னு சொல்லிட்டாரு உங் க அண்ணா என்னையும் வேணா ம்னு சொல்லிட்டாரு என்றாள் 

அவர்கள் பேசியதும் தேனு கண்க ளில் கண்ணீர்.பெத்த தாயும் கட்டி ய கணவனும் கூட பாசம் காட்டவி ல்லை. ஆனால் தகப்பன் ஸ்தானத் திலிருந்து ரவியும் தாய் ஸ்தானத்தி லிருந்து ஆராவும் அவளை அப்ப டி பாசம் காட்டினர் 

ஆரா, தேனு.. உனக்கு பாப்பா பிறந் திருக்கா என்றாள். தேனு ஆமா அ  ண்ணி என கண்ணீரை துடைத்த வள் சிரிப்புடன் குழந்தையை தூ க்கிக் கொண்டு வந்து அண்ணன் கைகளில் கொடுத்தாள். குழந்தை அழகா இருந்தது கொழுக் மொழுக் கென,

 ஆரா குழந்தையை கொஞ்சியவள் தேனு, பாப்பா ரொம்ப அழகா இரு க்கா நான் வேணா இவள எடுத்துட் டு போயிடட்டுமா… என் கூட,

 தேனு அவள் கூறியதில் சிரித்தவ ள் உங்களுக்கு விருப்பம்னா சந் தோஷமா..,எடுத்துட்டு போங்க அ ண்ணி என்றவள்,

தேனு,  இருங்க அண்ணி நான் போ ய் உங்களுக்கு சாப்பாடு ரெடி பண் றேன் நீங்க பாப்பாவை வச்சுக்கோ ங்க என உள்ளே சென்றாள் 

 ஆராவிற்கு குழந்தையை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை அதை பார்த்த ரவி என்னடி இப்படி பார்க்கிற பாப்பாவ,  நம்ப வேணா குழந்தை பெத்துட்டு கல்யாணம் பண்ணிக்கலாமா என்றான் அவ ள் காதில்

அதில் அதிர்ந்து வெட்கப்பட்ட ஆ ரா, போங்க ரவி என சினுங்கினாள் ரவி ரொம்ப சிணுங்காதடி, ஏற்கன வே கொடைக்கானல் குளிர் தாங்க முடியல நீ வேற இதுல சிணுங்கி மூடு ஏத்துற

 அப்புறம்,  இங்கிருந்து கிளம்பும் போது குழந்தையோட போற மாதிரி ஆகிட போகுது பாத்துக்க என்றா ன் கண்களை சிமிட்டி 

ஆரா, அச்சோ… போங்க என வெட் கப்பட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

 இப்படியே சிறிது நேரம் பேசிக் கொ ண்டிருந்தனர் இன் மதிய உணவை உண்டவர்கள், மதுரா விடம் பேசிக் கொண்டிருந்தனர் 

 மதுரா, எப்படி அண்ணா என்ன கண்டுபிடிச்சீங்க என்றாள் 

 ரவி, நான் எங்க கண்டுபிடிச்சேன் உன் அண்ணி தான்,  நீ இருக்குற இடத்தை கண்டுபிடிச்சா, உங்க அ ண்ணி youtube பார்க்கும்போது நீ வேலை செய்ற சாக்லேட் ஃபேக்டரி ய ஒரு யூட்யூபர் வீடியோ எடுத்து போட்டு இருக்கார் 

 அதுல நீ இருக்கிறத, ஆரா என்கிட் ட காட்டினா, அப்பதான் நீ இருக்கி ற இடம் தெரிந்தது. அப்புறம் அங்க போய் விசாரிச்சு தேடி கண்டுபிடிச் சு வந்துட்டேன் என்றவன்,

 சரிடா இப்பவே நீ எங்க கூட கிளம் பு, கோயம்புத்தூர் போயிட்டு அங்கி ருந்து ஃபிலைட்ல சென்னை போ யிடலாம் என்றான் 

 அவன் அப்படி கூறியதும் இவ்வ ளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த வள் அமைதியாகிவிட்டாள் 

 ரவி என்ன தேனு மா அமைதியாகி ட்ட அம்மாவ நினைச்சி பயப்படுறி யா என்றான் 

 தேனு,அவனை நிமிர்ந்து பார்த்த வள் தலை குனிந்து கொண்டாள் எதுவும் பேசாமல் 

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

 

3 thoughts on “என் உயிரே நீ விலகாதே 8”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top