ATM Tamil Romantic Novels

என்னை உனக்குள் தொலைத்தேனடி

 

 

என்னை உனக்குள் தொலைத்தேனடி -1 

 

 

கொடைக்கானல் அருகே சற்று உள்ளே இருக்கும் கிராமம் தான் சின்ன மலை கிராமம் இன்னும் அதிக அளவு மனித சுவடுகள் அங்கு படாமல் இருப்பதால் இயற்கை அங்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருந்தது.

 

 

அங்கு உள்ள மிதமான பனியும் ஈரப்பதமான காற்றும் எப்போதும் மரங்களின் தாலாட்டில் ஒளிக்கும் பறவைகளின் உன்னதமான குரலும் என்று அற்புதமான ஒரு கால சூழ்நிலை நிகழ்ந்தாலும் எதுவுமே அவளை கலைக்காமல் அங்கு உள்ள முருகன் கோவில் மண்டபத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தவளை கண்டாள் அவளது தோழி சின்னு.

 

 

 

மூச்சி வாங்க ஓடி வந்து அவளிடம் நின்றவளை கொஞ்சம் கூட கண்டுக் கொள்ளாமல் அமைதியாக அங்கிருந்த முருகனையே வெறித்துக் கொண்டிருந்தவளை கண்டு முதுகில் ஒன்று வைத்தாள்.

 

 

“என்னடி உன்னை ஊரே நான் தேடிக்கிட்டு இருக்கேன் நீ இங்க வந்து உட்கார்ந்து இருக்க சீக்கிரம் வா ரிசல்ட் பாக்கணும் இல்ல” என்று கூற

 

 

“இல்ல பிள்ளை நான் வரலை எங்க ஆத்தாவோட கடைசி ஆசை நான் நல்ல படிக்கனும்கிறது தான் என்னால முடிஞ்ச முயற்சியை போட்டு பரிட்சை எழுதிட்டு வந்து இருக்கேன் ஆனா அதோட ரிசல்ட் பார்க்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றாள்.

 

 

“விளையாடுறியா புள்ள உனக்காக அங்க டீச்சர் உக்காந்திருக்காங்க சீக்கிரம் வா அவங்களும் ரிசல்ட் பார்த்துட்டு வீட்டுக்கு போகணும் இல்ல உனக்காக தான் இம்புட்டு தூரம் வந்து இருக்காங்க”

 

 

 

“என்ன சொல்ற டீச்சர் வந்திருக்காங்களா எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது நான் காலையிலேயே இங்க வந்துட்டேன்” என்று கூறி வேகமாக எழுந்தவள் சின்னுவை கூட கண்டு கொள்ளாமல் அந்த ஒத்தை அடி பாதையை நோக்கி வேகமாக சென்றாள்.

 

 

அவள் போகும் வேகத்தை கண்டு  

 “ மெதுவா போ புள்ள” என்று கத்தியவள் தானும் அங்கு இருக்கும் முருகனிடம் தனது தோழிக்காக மனம் உருகி ‘ முருகா உனக்கு தெரியாதது ஒன்னும் இல்ல அவ இந்த பரிச்சைகாக ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கா அதுக்கு உண்டான பலன் நீ தான் பா அவளுக்கு கொடுக்கணும்’ என்று வேண்டிக் கொண்டு வேகமாக சென்றாள்.

 

 

வேகமாக சென்று ஊரின் மத்தியில் இருக்கும் தலைவர் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கும் தனது டீச்சர் முன்பு நின்றாள்.

 

 

“ வா வள்ளி உனக்காக தான் இவ்வளவு நேரம் காத்துக்கொண்டு இருந்தேன் எங்க போன “ என்று கேட்க

 

“ அந்தப் புள்ள எங்க போயிருக்க போகுது அவங்க அம்மா இறந்ததிலிருந்து அந்த கோயில் மண்டபமே தான் கதியா கிடக்குது” என்று ஊர் தலைவர் கூற 

 

 

அவர்கள் அம்மாவை பற்றி பேசவும் சற்றென்று கண்களில் கண்ணீர் தேங்கி நின்று விட்டது வள்ளிக்கு அதை கண்ட டீச்சர் அவளை தோளோடு அணைத்துக்கொண்டார்.

 

 

பின் தலைவரிடம் திரும்பி “சரிங்க ஐயா நாங்க போயி ஸ்கூல்ல ரிசல்ட் என்னன்னு பாத்துட்டு வறோம்” என்று கூறி செல்லும் போதே அங்கு வேகமாக ஓடி வந்தான் வள்ளியின் மாமன்.

 

 

“என்ன பரமு எதுக்கு இப்படி ஓடி வர” என்று கேட்க “ ஐயா நம்ம ஊருக்கு முன்னாடி நிறைய கார் வண்டி எல்லாம் வந்து நிக்குது உங்கள பாக்கணும்னு சொல்றாங்க” என்று கூற

 

 

 “ என்ன சொல்ற” என்று கேட்டுக்கொண்டே அவர் செல்ல பின்னோடு மற்ற அனைவரும் சென்றனர்.

 

 

அங்கு நின்றிருந்த அனைவரையும் பார்த்தவர் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று விட்டார் அதற்குள் அங்கு வந்த டீச்சர் கொஞ்சம் முன்னுரிமை எடுத்து அவர்களிடம் விசாரித்தார்.

 

 

ரிப்போர்ட்டர் அருகில் வந்த டீச்சர் “சொல்லுங்க என்ன விஷயம் இங்கே எல்லாரும் வந்து இருக்கீங்க” என்று கேட்க அவர்களும் அங்கு இருப்பவர்களையும் அவர்களின் உடைகளையும் பார்த்தவர்கள்.

 

 

 இவர்களுக்கும் இப்போது பேசிக் கொண்டு இருப்பவருக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்துவிட்டு அதில் ஒருவர் “ நீங்க யாருன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா மேடம்” என்று கேட்டார்.

 

 

“ என்னோட பேர் அமலா நான் இங்க இருக்க கவர்மெண்ட் ஸ்கூல்ல டீச்சரா ஒர்க் பண்றேன் இங்க இருக்க மலை கிராமங்களுக்கு வாலண்டியரா வந்து படிப்பு சொல்லிக் கொடுப்பேன்” என்று கூறினார்.

 

 

“ இப்ப நீங்க சொல்லுங்க எதுக்காக வந்து இருக்கின்றது நான் தெரிஞ்சுக்கலாமா” என்று கேட்க 

 

 

 

“ இல்ல மேடம் இங்க மலைவாழ் கிராமத்துல இருக்க வள்ளி என்ற பொண்ணு பிளஸ் டூ ல அதிக மார்க் எடுத்து ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்து இருக்காங்க அதனால அவங்கள பார்த்து பேட்டி எடுத்துட்டு போகலாம் என்று நாங்க வந்திருக்கோம்” என்று கூற 

 

 

அவர் கூறி செய்தியில் அனைவரும் ஒரு நொடி அதிர்வில் நின்று விட்டனர். அதற்குள் இவர்கள் வந்த செய்தி கேட்டு ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி விட்டனர்.

 

 

அனைவரும் அவர்களின் முறைப்படி கத்தி தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்க அதில் ஒரு முகம் மட்டும் தனது வன்மத்தை ஒரு நொடி முகத்தில் காண்பித்து சட்டென்று மாற்றிக் கொண்டது.

 

 

“என்ன சொல்றீங்க” என்று கேட்டுக்கொண்டே அங்கே நிற்கும் வள்ளியை அழைத்து தனக்கு பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டு அங்கே நிற்கும் பத்திரிக்கைகாரர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

 

 

“ இவ தான் வள்ளி” என்று கூறியவர் “நாங்க போய் ஸ்கூல்ல ஹெட்மாஸ்டரை பார்த்து விட்டு உங்களை வந்து பார்க்கிறோம்” என்று கூறி நகர பார்க்க அதே சமயத்தில் இவர்களை தேடிக்கொண்டு பள்ளியில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் ஹெட் மாஸ்டர் உடன் வந்து விட்டார்கள்.

 

 

 

பின் அனைவரும் வள்ளியை புகழ்ந்து பேசி பாராட்டு மழையில் நனைக்க இது எதுவும் காதில் வாங்காமல் வள்ளி தனக்குள் உழண்டு கொண்டே இருந்தாள்.

 

 

 

 இந்த மகிழ்ச்சியை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை தற்சமயம் தனது அம்மாவும் அப்பாவும் அருகில் இருந்திருந்தால் இந்த மகிழ்ச்சிக்கு விலைமதிப்பே கிடையாது என்று எண்ணமே முதன்மையாக வள்ளியின் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. 

 

 

 

அவள் மனதை அறிந்தாற் போன்று அவளுக்கு பக்க பலமாக அவளது உயிர் தோழி சின்னு அருகில் வந்து அவளது கையை இறுக்கமாக பற்றி கொண்டாள்.

 

 

இவ்வளவு நேரமும் பத்திரிக்கையாளர்கள் ஹெட் மாஸ்டர் இடமும் ஊர் தலைவரிடமும் கேள்வி கேட்டு பேசிக்கொண்டிருக்க தற்போது வள்ளியின் புறம் மைக்கை நீட்டினார்கள். 

 

 

“ எப்படி உங்களால இந்த ஒரு சின்ன கிராமத்துல இருந்து வந்து இவ்வளவு மார்க் எடுத்து ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்க முடிஞ்சது உங்களோட கருத்தை பகிர்ந்துக்க முடியுமா ? “என்று கேட்டார்கள்.

 

 

மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவளால் பேசமுடியாமல் திணற அப்பொழுது அருகில் வந்த அவளது மாமா பரமு அருகில் வந்து தோளோடு சேர்த்து அணைத்து ஆறுதல் படுத்தினான்.

 

 

ஒரு பக்கம் தனது மாமாவும் மற்றொரு பக்கம் தனது உயிர் தோழியும் தன்னை அரவணைத்தவாறு நிற்பதில் சற்று தெளிந்தவள் அவர்களிடம் பேச ஆரம்பித்தாள்.

 

 

“ வணக்கம் நான் வள்ளி இங்க இருக்க மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த பொண்ணு எனக்கு படிக்கணும்னா ரொம்ப பிடிக்கும் எங்க அம்மாவுக்கு நான் படிக்கணும்னு ரொம்ப ஆசை அதுதான் அவுங்களோட கடைசி ஆசையும்” என்று கூறும் போதே சட்டென்று கண் கலங்கி கண்ணீர் கன்னத்தில் இறங்கியது. 

 

 

 

பின் ஒரு நிமிடம் மௌனத்திற்கு பிறகு தனது பேச்சை தொடர்ந்தாள் “எங்க அம்மாவோட கடைசி ஆசையை நிறைவேத்தணுமா அதுக்கு நான் நல்லா படிக்கணும் அதை மட்டுமே குறிக்கோளா கொண்டு நான் படிச்சு பரிச்சை எழுதினேன் என்னோட முயற்சி என்னை முதலிடத்தில் கொண்டு வந்து சேர்த்துள்ளது”. என்று கூறி முடித்துக் கொண்டாள்.

 

 

இந்த பரபரப்பு அனைத்தும் முடியவே மதியத்திற்கு மேல் ஆக பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் கிளம்பி சென்றனர்.

 

 

தங்கள் ஊரை சேர்ந்த பெண் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் செய்ததற்காக ஊர் தலைவர் அவர்களால் அமலா டீச்சருக்கும் ஹெட் மாஸ்டருக்கும் தலைவர் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. 

 

 

அங்கு மத்தியில் உள்ள மண்டபத்தில் அனைவரும் அமர்ந்திருக்க வள்ளியும் சின்னு உடன் அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

 

 

 அப்போது அமலா டீச்சர் இன் பார்வை வள்ளியின் மேல் பட்டது அவருக்கு பழைய ஞாபகங்கள் அனைத்தும் வர ஆரம்பித்தது.

 

 

ஐந்து வருடங்களுக்கு முன்பு இங்கிருக்கும் கவர்மெண்ட் ஸ்கூலில் டீச்சராக ஜாயின் பண்ணியதும் அருகில் இருக்கும் மலை கிராம மக்களுக்கு வந்து இலவச கல்வி சேவை வழங்க வந்தார்.

 

 

அப்போது இவரை அவர்களது கிராமத்திற்கு வர வழிகாட்டியது வள்ளியுடைய அப்பா தான் தனது சோர்வை புரிந்து கொண்டு நேராக தனது குடிசைக்கு அழைத்துச் சென்று குடிக்க கூழ் கொடுத்த பின்பே ஊர் தலைவரை பார்க்க அழைத்துச் சென்றார். 

 

 

அங்கிருக்கும் குடிசையில் தனது அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஓரமாக நின்று கொண்டிருந்தாள் அன்று மலர்ந்த செண்பகப் பூவாக வள்ளி. 

 

 

இயற்கையான மலைவாச தளத்தின் பலனாக தனது அன்னையின் கோதுமை நிறக் கலரில் நீண்ட கூந்தலில் இறுகப்பிண்ணி காட்டுப் பூவை தலையில் வைத்திருந்தாள்.

 

 

அவர்களின் பாரம்பரிய உடையில் கையிலும் கழுத்திலும் மணிகள் அணிந்து காலில் தண்டை அணிவித்து தனது கோழி குண்டு கண்களால் அங்கும் மிங்கும் உருட்டி உருட்டி புதிதாக வந்திருந்த தன்னை பார்த்திருந்த அந்த அழகில் மொத்தமாக கவரப்பட்டார் அமலா.

 

 

அப்பொழுது அவளை அழைத்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்க மொத்தமாக வெட்கத்தில் சிவந்து நின்றிருந்தாள் இருவருக்கும் அப்பொழுதே கண்ணுக்கு தெரியாத ஒரு பிணைப்பு இறுக்கமாக பிணையப்பட்டது. 

 

 

அதுவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு வள்ளியின் தந்தை காட்டிற்கு கொம்பு தேன் எடுக்க சென்றவர் அங்கேயே பாம்பு கடித்து இறந்துவிட்டார்.

 

 

அதுவரை இனிமையாக சென்று கொண்டிருந்த வள்ளியின் குடும்பம் தேன் கூட்டில் பட்ட கல்லடியாக சிதறியது. 

 

 

வள்ளியின் தந்தை இறந்த ஆறு மாதத்தில் அவளது தாயும் அவரது நினைவாகவே இருந்தவர் மனதின் அழுத்தம் காரணமாக தீடிரென ஏற்பட்ட உடல்நிலை சீர்கேட்டால் மாரடைப்பில் இறந்துவிட்டார்.

 

 

கடைசியாக வள்ளியின் கைகளை பற்றியவர் “ நன்றாக படிக்க வேண்டும்” என்று கூறி தனது உயிர் கூட்டை விட்டு கணவனின் கை சேர்ந்துவிட்டார்.

 

 

அதில் ஒன்றும் புரியாமல் நின்று இருந்த வள்ளியை அவளது மாமன் மகன் பரமு கைப்பிடித்து ஆறுதல் அளிக்க அதற்கு முதல் எதிர்ப்பு அவனது அம்மாவிடம் இருந்து வந்தது.

 

 

 

அதை கண்டு பரமு அதிர்ந்து நிற்க அதை புரிந்து கொண்ட வள்ளியோ விலகி நின்றாள்.

 

 

இனி வள்ளியின் நிலை எப்படி இருக்குமோ ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “என்னை உனக்குள் தொலைத்தேனடி”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top