ATM Tamil Romantic Novels

என்னை உனக்குள் தொலைத்தேனடி

 

 

என்னை உனக்குள் தொலைத்தேனடி -2

 

 

 

 

 

தாய் தந்தை இருவரையும் இழந்த வள்ளியின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தாலும் அவளை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொள்ள பரமு விரும்பி தான் முன்னே வந்தான். 

 

 

அதற்கு அவளது தற்போதைய நிலை ஒரு காரணம் என்றாலும் அவளை சிறுவயதில் இருந்து தனக்குள்ளையே பொத்தி பாதுகாத்து வைத்துக் கொள்ளும் ஆசையும் அவனுக்கு உண்டு.

 

 

பரமுவின் இந்த ஆசையை பற்றி தெரிந்து கொண்ட அவனது அன்னையோ இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவர் இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். 

 

 

இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த அமலா டீச்சர் வள்ளியை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக்கொண்டு கூட்டி செல்வதாக கூற அதற்கு ஊர் மக்கள் யாரும் அனுமதிக்கவில்லை. 

 

 

தங்களுடைய இனப்பெண் எங்களுடன் தான் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் தீர்க்கமாக இருந்தார்கள் அதை அமலா டீச்சர் ஏற்றுக்கொள்ள முடியாமல் வாக்குவாதம் நடைபெற இதற்கு ஒரு முடிவை ஊர் தலைவர் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்தார்.

 

 

பின் அவர் வள்ளி தனது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டு எங்களது பொறுப்பில் இருக்கட்டும் என்று தனது முடிவை கூற அதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.

 

 

அமலா டீச்சரின் வேண்டுகோளிற்கு இணங்க காலையில் பள்ளி செல்லும் வள்ளி மீண்டும் மாலையில் தலைவர் வீட்டில் வேலைகளை முடித்துக் கொண்டு தனது குடிசையில் அடைக்கலம் ஆகி விடுவாள்.

 

 

இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த அமலா டீச்சருக்கு நேரம் போனது தெரியாமல் இருந்தவரை வள்ளி தான் உலுக்கி சாப்பிட வருமாறு அழைத்தாள்.

 

 

இன்றைய நாளை பற்றி ஹெட் மாஸ்டரும் டீச்சரும் கலந்து பேசி ஊர் தலைவரிடம் வந்து “வள்ளிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு அவள படிக்க வைக்கணும் என்ன பண்ணலாம்” என்று கேட்க

 

 

“எங்களுக்கு படிப்ப பத்தி எதுவும் தெரியாது டீச்சர் அம்மா நீங்க எது சொல்றீங்களோ அதன்படி பார்த்துக்கொள்ளலாம் எங்களோட மலை கிராமத்தில் இருந்து ஒரு புள்ள நல்லா படிச்சு டிவில எல்லாம் வருதுன்னா சும்மாவா” 

 

“நாளைக்கு இந்த புள்ளைய பார்த்து எங்க கிராமத்துல இருக்க மத்த பிள்ளைகளும் படிச்சு முன்னுக்கு வரணும்னு நினைக்கறேங்க அதுக்காகவாவது அந்த பிள்ளைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கணும்னு நினைக்கிறேன்” என்று வெள்ளந்தியாக கூறினார்.

 

 

இது அனைத்தும் பேசிக் கொண்டிருக்கும்போது வள்ளியும் அவளது மாமனும் , சின்னுவும் அனைவரும் அருகிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.

 

 

“வள்ளி எடுத்திருக்கிற மார்க்குக்கு கண்டிப்பா ஸ்காலர்ஷிப் கிடைக்கும் மீதி பணம் நான் போட்டு கட்டிடலாம்னு பார்க்கிறேன்” என்ற அமலா டீச்சர் கூறிவிட

 

 

“நல்ல முடிவு அமலா நானும் அவளோட படிப்புக்கு பாதி பணம் போட்டு விடுறேன்” என்றார் ஹெட் மாஸ்டர்.

 

 

“என்னால மித்த வேலையெல்லாம் பார்க்க வர முடியாது ஸ்கூல்ல கொஞ்சம் இன்ஸ்பெக்ஷன் வராங்க வேலை இருக்கு அதனால அவளை கொண்டு கூட்டிட்டு போயி கவுன்சிலிங் காலேஜ்ல சேர்க்கிறது மற்ற வேளை எல்லாம் நீ பாத்துக அமலா உனக்கு லீவு நான் அப்ரூவ் பண்ணிடுறேன்” என்று கூறினார்.

 

 

“ டீச்சர் அம்மா குறுகால பேசுறதுக்கு என்ன மன்னிக்கணும் வள்ளிக்கு தேவையான மித்த செலவு நான் பார்த்துக்கிறேன் உங்ககிட்ட கொடுத்துடறேன் நீங்க அவகிட்ட கொடுத்து இருக்கீங்களா” என்று கேட்க 

 

 

“என்ன மாமா பேசுற எனக்கு அதெல்லாம் வேண்டாம் டீச்சர் என்ன காலேஜ்ல மட்டும் சேர்த்து விடுங்கள் மற்ற செலவை நான் பார்த்துக்கிறேன்” என்று வள்ளி தைரியமாக பேச

 

 

“நீ சும்மா இரு புள்ள காசுக்கு என்ன பண்ணுவ படிப்பியா இல்ல காசுக்கு ரெடி பண்ணுவியா அதெல்லாம் சரிப்பட்டு வராது நான் சொல்றதெல்லாம் இந்த விஷயத்தை ஆவது கேளு உன்னை இப்படியே என்னால விட முடியாது நீ படிக்கிற வேலையை மட்டும் பாரு மித்தத நான் பாத்துக்குறேன்” என்று கோவமாக கூறினான்.

 

 

‘ அதுக்கு இல்ல மாமா நா என்ன சொல்லுறேனா” என்று கூற வர சின்னு களத்தில் இறங்கி விட்டாள்.

 

 

அவளை அங்கிருந்து வேறுபக்கம் இழுத்துச் சென்றவள் “ ஏ புள்ள வள்ளி பெரியவங்க பேசும்போது நீ ஏன் இடையில் பேசுற அவங்களுக்கு உன்ன எப்படி பாத்துக்கணும்னு தெரியும் உனக்கு தேவையான படிப்பை கொடுப்பாங்க அதை கெட்டியா புடிச்சுகிட்டு வாழ்க்கையில் முன்னேறுற வழிய பாரு புள்ள”

 

 

“ எல்லாத்துக்கும் மேல உனக்கு நம்பிக்கையா அமலா டீச்சர் இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க அவங்க சொல்றத அப்படியே கேளு மித்தத உங்க அம்மாவும் அப்பாவும் சாமியா இருந்து காப்பாத்துவாங்க” என்று ஆறுதல் கூறினாள்.

 

 

 

சின்னு கூறுவதும் அவளுக்கு சரியாக பட அதன் பிறகு வேறு எதுவும் வள்ளி பேசவில்லை மற்ற முடிவுகளை அனைவரும் கலந்து ஆலோசித்து வள்ளியிடம் கூற

 

 

அவர்கள் கூறிய அனைத்திற்கும் தனது தலை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

 

 

“அடுத்த மாதம் நடக்கும் கவுன்சிலிங் இருக்கு ரெடியாக இருக்கும் படியும் அதுவரை இங்கிருக்கும் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தர தனக்கு உதவும் மாறு கேட்டுக்கொண்டார்” டீச்சர்.

 

 

பரமு விற்கும் சந்தோஷமே எங்க தன்னால் வள்ளிக்கு எந்த உதவியும் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று உள்ளுக்குள்ளே மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவனை இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. 

 

 

இதனால் முன்பை விடவும் அதிகமாக வள்ளியின் மேல் தனக்கு ஆசையும் இப்போது உரிமையும் சேர்ந்து கொண்டதாக மனதினுள் நினைத்துக் கொண்டவன் இனி உழைப்பை அதிகபடுத்திக் கொள்ளவேண்டும்.

 

 

அதைவிட முக்கியமாக இந்த விஷயம் எக்காரணத்தைக் கொண்டும் தனது அம்மாவிற்கு தெரியாத அளவிற்கு தான் நடந்து கொள்ள வேண்டும் என்று மனதினுள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டான். 

 

 

இன்றைய நாள் இப்படியே முடிந்து போக அனைவரும் அவரவர் இல்லம் நோக்கி சென்று விட்டனர். 

 

 

மறுநாளில் இருந்து வள்ளியின் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் மாற்றமில்லாமல் முன்பை போல் வேலை செய்து கொண்டு கொஞ்ச நேரம் பள்ளி குழந்தைகளுக்கு அமலா டீச்சர் உடன் உதவி செய்தவள் இரவு தனது வீட்டில் வந்து அடைந்து கொள்வாள் இப்படியே ஒரு மாதமும் சென்று விட்டது.

 

 

அன்றைய நாள் காலையில் மிகுந்த பதட்டத்துடனே வள்ளிக்கு ஆரம்பித்தது காலையில் சீக்கிரமாக எழுந்தவள் நேராக சென்று நின்றது என்னவோ அவள் எப்போதும் இருக்கும் அந்த முருகன் சந்நிதியில்.

 

 

அந்த முருகனைப் பார்த்து தனது மனதில் உள்ளதை எல்லாம் கூறினால் தனது அம்மா மடியில் தலை வைத்து அனைத்தையும் சொல்லுவது போல் ஒரு ஆத்ம திருப்தி வள்ளிக்கு மனதில் உண்டாகும் அதனாலேயே காலையில் எழுந்தவுடன் நேராக அங்கே சென்றுவிட்டாள்.

 

 

பின்னாடியே சின்னுவும் வரவும் இருவரும் முருகனை மனதார வேண்டிக்கொண்டு வெளியே வந்தார்கள். “ ஏன் புள்ள எனக்கு ஒரு சந்தேகம் நம்ம இந்த கிராமத்தை விட்டு வெளியில் போனதில்ல அங்க எல்லாம் எப்படி இருக்கும்” 

 

 

“ தெரியல புள்ள எனக்கும் அதை பத்தின யோசனையே இல்ல டீச்சர் கூட்டிட்டு போற வழியில போக வேண்டியது தான்”

 

 

“எனக்கும் ஆசையா தான் இருக்கு படிக்கணும்னு ஆனா என்ன பண்றது இந்த படிப்பு என் மண்டைக்குள்ள வரமாட்டேனு தான் சொல்லுது”

 

 

“ நீ எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிருப்ப என்கூட சேர்ந்து படி என்று சொன்னப்ப இங்கே இருக்க நண்டு சிண்டு கூட சேர்ந்துக்கிட்டு விளையாட தான் எனக்கு புடிச்சிருக்குன்னு சொன்ன தானே”

 

 

“இதை இப்ப நீ இவ்வளவு ஞாபகம்மாக சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல புள்ள எப்ப பார்த்தாலும் எங்க அம்மா வள்ளி கூட சேர்ந்தா மட்டும் போதாது அந்த புள்ள மாதிரி படிக்கணும் அப்படின்னு சொல்லி திட்டிக்கிட்டே இருக்கு”

 

 

“ சரி விடு வா போகலாம் டீச்சர் வந்துருவாங்க அப்புறம் லேட் ஆயிரும் முன்னாடி போயி எடுத்து வைக்க வேண்டியது எல்லாத்தையும் சரியா எடுத்து வைக்கணும் நேத்து டீச்சர் கரெக்டா எடுத்து வச்சுக்கோங்க சொல்லிட்டு போயிருக்காங்க” என்றாள்.

 

 

“அதுவும் சரிதான் நம்ம ஊரு கட்டுப்பாடு நியாபகத்துல இருக்கு இல்ல சீக்கிரமா வந்துரு உனக்காக தான் ஊர் தலைவரு எல்லார்கிட்டயும் பேசி இன்னைக்கு ஒரு நாள் வெளியில தங்குவதற்கு அனுமதி வாங்கி கொடுத்திருக்கிறார்” என்றாள்.

 

 

என்று இருவரும் பேசிக்கொண்டே வள்ளியின் குடிசையின் அருகில் செல்லும்போது அங்கே இவர்களுக்காக டீச்சர் காத்துக் கொண்டிருந்தார்கள் பின் அனைவரிடமும் கூறிக்கொண்டு வள்ளியை அழைத்துக்கொண்டு கவுன்சிலிங் நடக்கும் சென்னையை நோக்கி புறப்பட்டார்கள்.

 

 

இருவரும் அந்த மலை கிராமத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் கொடைக்கானல் செல்லும் பேருந்தில் ஏறி கொடைக்கானல் சென்று அங்கிருந்து சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்கள். 

 

 

இது அனைத்தையும் பார்ப்பதற்கு வள்ளிக்கு கொஞ்சம் வித்தியாசமாக தான் இருந்து யூனிபார்ம் தவிர வேறு எந்த உடையையும் அணிந்து இருக்காத வள்ளிக்கு அவளது டீச்சர் சுடிதார் வாங்கி கொடுத்து அதை இன்று அணிந்து வருமாறு கூறியே இன்று அழைத்து செல்கிறார்.

 

 

 

பேருந்து மதுரைக்குள் உள்ளே செல்லும் போது அங்கு ஒரே திருவிழா கூட்டமாக இருந்தது இன்று மீனாட்சி திருக்கல்யாணம் வழி நெடுக மீனாட்சி அம்மனை போன்ற வேடத்தில் குழந்தைகளிலிருந்து குமரி வரை அனைவரும் வேடம் அணிந்து வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

 

 

ஒரே பாட்டு கச்சேரியும் சத்தமும் ஆக ஜெஜெவென்று இருந்தது அதை பேருந்தில் அமர்ந்தபடி ஜன்னலில் வழியாகபார்த்துக் கொண்டிருந்த வள்ளிக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

 

 

மெல்ல மெல்ல பேருந்து ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் போதே திடீரென்று ஒரு குழுக்களில் நின்றது அதில் சற்றென்று முன்னாடி இருந்த இருக்கையில் முட்டி இடித்துக் கொண்டால் வள்ளி. 

 

 

தலையை தேய்த்துக் கொண்டே ஜன்னல் வழியாக பார்க்கையில் அங்கே ஒருவன் ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமான மாநிறத்தில் முறுக்கு மீசையுன் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் கையில் ஒரு கட்டையுடன் மற்றொருவனை போட்டு அடித்துக் கொண்டிருந்தான்.

 

 

அடி வாங்கிக் கொண்டிருந்தவனும் வலி தாங்க முடியாமல் கதறிக்கொண்டு இருந்தவன் அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான். 

 

 

இறுகிய முகத்துடன் நாக்கை மடித்து முறைத்துக் கொண்டு அவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டே மீண்டும் அடிக்க ஆரம்பிக்க அவனோ வெள்ளை வேஷ்டிக்காரனின் காலிலேயே விழுந்து விட்டான்.

 

 

அவனை அடித்துக் கொண்டிருக்கும் போதே சற்றென்று இழுத்து ஓரமாக போட்டவன் பின் பஸ்சை நகருமாறு சைகைகள் காமிக்க மீண்டும் பஸ் நகர தொடங்கியது அப்போது கரெக்டாக வள்ளியின் இருக்கை கடக்கும் போது ஒரு நொடி நிமிர்ந்து அவள் பார்ப்பதை பார்த்தவன் சற்றென்று அவனை இழுத்துக்கொண்டு செ

ல்லவும் பஸ் அவனை கடந்து செல்லவும் சரியாக இருந்தது. 

 

 

 இந்த சம்பவத்தினால் வள்ளியின் வாழ்க்கையில் ஏதேனும் திருப்பம் ஏற்படுமோ ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 thought on “என்னை உனக்குள் தொலைத்தேனடி”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top