ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி

9

 

விடிந்தால் திருமணம் என்ற நிலையில் திலோத்தமாவின் முகத்தில்     புது பெண்ணிற்கான பொலிவோ,களையோ எதுவும் இல்லை அதற்கு பதில் குழப்பத்தின் ரேகை மட்டுமே தென்பட்டது…

 

 நாளைய திருமணத்தைப் பற்றியும் அதற்குப் பின்பான வாழ்க்கையை பற்றியும் வெகு தீவிரமாக யோசித்ததன் அடையாளமாக அவள் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது… எதிர்காலத்தை பற்றிய தெளிவு இல்லாமல் குழப்பத்துடன் திரிந்து கொண்டிருந்தவளின்  எண்ணுக்கு  தொலைபேசியில் அழைத்தான் பரத் நாளைய நாயகன்…அவளின் மணமகன்…

 

 நிச்சயம் முடிந்த பின்பு இளம் ஜோடிகள் பேசிக் கொள்வது இப்போது சகஜமாகினாலும்… ஏனோ திலோத்தமாவால் அதை ஒப்பி உடன் பட முடியவில்லை… திருமணத்திற்கு முன்பே பேசி பழகினால் பின்னால் வாழ்க்கை சுவாரஸ்யம் அற்று விடும் என்று கூறுவாள்…அத்தோடு அவள் திருமணம் செய்ய போகும் பரத் ஒன்றும் அவளுக்கு அறிமுகம் இல்லாதவன் அல்லவே…

 

அதற்காக திருமணத்திற்கு முந்திய செல்ஃபோன் தொடர்பை அவள் முற்றிலும் தவிர்த்தாளா என்றால் அதுவும் இல்லை அவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் உரையாடல் மிக சொற்பமே…அவ்வபோது பரத் ஃபோன் செய்து அவள் நலன் விசாரிப்பான் பின் திருமண வேலைகள் குறித்து அவளிடம் கருத்தும் ஆலோசனையும் பெற்று கொள்வான் அவ்வளவே…  

 

இன்று ஏனோ அவளது மனம் பரத்தின் அழைப்பை பெரிதும் எதிர்பார்த்தது… கிரிதரனின் வரவே அதற்கு காரணம் என்று கூறினாலும்… அவள் மனம்  கண்டதையும் போட்டு குழம்பிய குட்டையாகி போனது என்பது தான் உண்மை…

 

அவள் என்ன நினைக்கிறாள்??என்ன செய்ய வேண்டும்??? எப்படி செய்ய வேண்டும்??? என முடிவு செய்ய முடியாது தவித்தாள் திலோத்தமா… இதற்கு முன்பு இப்படி ஒரு நிலை ஏற்பட்ட போது செய்வதறியது அவள் தவித்த வேளையில் அவளுக்கு துணையாக நின்றவர் பஞ்சாட்சரம்…மீண்டும் அப்படி ஒரு நிலை ஏற்படும் என்று அவள் எண்ணியதே இல்லை… இன்று ஏனோ மனம் விட்டு யாரிடமும் பேசினால் தேவலாம் என்ற நிலையில், அதுவும் தன்னை புரிந்துக் கொள்ள கூடிய ஒருவரிடம் பேச நினைத்தவளின் நினைவுக்கு வந்தவன் பரத் மட்டுமே…

 

அவளே அவனுக்கு அழைத்து பேசலாம் என அவள் நினைக்கையிலே அவளுக்கு அழைத்து இருந்தான் பரத்…

 

“ஹாய் திலோமா என்ன பண்றிங்க, எனக்கு நாளைக்கு கல்யாணத்தை நினைச்சி கொஞ்சம் நெர்வஸா இருக்கு எதுவும் சொதப்பிடுவேனோன்னு சின்னதா பயம்… உனக்கு எப்படி இருக்கு என் அளவுக்கெல்லாம் நெர்வஸாக மாட்டேன்னு தெரியும் நீ தான் போல்ட் கேர்ள் ஆச்சே… சப்போஸ் நாளைக்கு நான் சொதப்பினா கூட  நீ சமாளிச்சுக்குவ தான?? என்ன ஹெலோ திலோ லைன்ல இருக்கியா ஹெலோ…!!” என புது மாப்பிள்ளை படபடப்பில் அவன் பேசிக் கொண்டிருக்க… இந்த பக்கம் திலோ அதற்க்கு எந்த வித பிரதிபலிப்பும் காட்டாது இருக்க…

 

“ஹே திலோ என்ன ஆச்சு ஏன் மா எதுவும் பேசாமல் அமைதியா இருக்க என்ன ஆச்சு என்கிட்ட சொல்லு… என்ன பிரச்சனை… எதுவா இருந்தாலும்  பார்த்துக்கலாம் சொல்லு திலோ…!!” என்றவன் பதட்டமாகினான்… அவள் அப்படி ஒன்றும் அவனோடு சிரித்து பேசும் ரகம் இல்லை என்றாலும் அவன் கேட்ட கேள்விக்கு நிச்சயம் பதில் சொல்லி விடுவாள் இப்படி பேசாது இருந்ததில்லை…

 

அந்த பக்கம் பரத்தின் பதட்டம் உணர்ந்து “கிரிதரன் ஊருக்கு திரும்பி வந்துட்டார்…!!” என அவள் ரத்தின சுருக்கமாக சொல்ல… இப்போது அமைதியாகி போகும் முறை பரத்திற்கானது…

 

கூடவே அவர் மனைவி குழந்தையையும் கூட்டி வந்து இருக்கார்… என இவள் இடைவெளி விட்டு சொல்ல…

 

நீண்ட நெடிய மௌனத்திற்கு பிறகு…

 

“இங்க பாரு திலோ என்ன பொறுத்த வரைக்கும் முடிஞ்சு போனது முடிஞ்சு போனது தான்… நீ சொல்றத வச்சு பார்த்தா அவனும் பழசை மறந்து விட்டான் நினைக்கிறேன்… அதே போல நாமளும் பழசை மறந்துட்டு  எந்த குற்ற உணர்வும் இல்லாம நம்ம புது வாழக்கையை இனிதே ஆரம்பிக்கலாம்… உனக்கு பக்க பலமா நான் இருக்கேன்…!!”

 

“கிரி  பழசை மறந்து இருப்பார் என நீங்கள் நம்புறீங்களா…??” அவனோடு பழகியது சொற்ப காலமே என்றாலும் கிரியை பற்றி நன்கு அறிவான் பரத்… பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல…

 

 கிரிதரன் எதையும் பொறுத்துக் கொள்வான் ஆனால் அவமானத்தை மட்டும் பொறுத்து கொள்ள மாட்டான் எத்தனை வருடங்கள் ஆனாலும் கரம் வைத்து பழி வாங்க கூடியவன் அவன்…  அப்படி பட்டவன் அவர்களை மறந்து மன்னித்து விட்டு விடுவானா என்ன…?? 

 

  “ அவன் மறந்தால் என்ன ?? மறக்காமல் போனால் நமக்கு  என்ன??அவனுக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடி கிட்டான்… இதுக்கு மேல  நம்ம வாழ்க்கையில குறுக்கிட  அவனுக்கு எந்த  உரிமையும் இல்லை…?? அதனால அவன பத்தி நீ கவலைப் படாத திலோ… அப்படியே அவன் பழசை மறக்காமல் ஏதாவது செய்ய நினைச்சாலும் அவனால முடியாது ஏன்னா நம்ம பக்கம் நியாயம் இருக்கு… அதுக்கும் மேல பஞ்சாட்சரம் அங்கிள்  நம்ம கூட தான்  இருக்காரு… அவரை மீறி அவனால ஒன்னும் செஞ்சிட முடியாது…  சோ நீ ஃபீல் ஃப்ரீ  மா ஓகே… எனக்கு கொஞ்சம் மண்டபத்துல  கல்யாண வேலை எல்லாம் இருக்கு சோ நான் அதை பார்க்க போறேன்… கல்யாண பொண்ணா லட்சணமா  தூங்கி எழுந்து ரிலாக்ஸா கிளம்பி வா… சரியா வைக்கிறேன் திலோ மா…என கூறி வைத்து விட்டான்…

 

ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்து விட்ட திலோ நீண்ட நேரம் சிந்தனைக்கு பின்பே தெளிவுற்றாள்… “எனக்கான வாழ்க்கையை நான் வாழ்வதில் தவறு ஒன்றும் இல்லையே… நானும் வாழ போகிறேன் இனி எனக்காக மட்டும் நான் வாழ போகிறேன்…!!” என தீர்க்கமாக முடிவு எடுத்து விட்டு தான் தூங்க சென்றாள் திலோத்தமா…

 

இங்கு தையல் நாயகி வீட்டில்  கிரிதரன் வெள்ளைக்கார பொண்ணை அழைத்து வந்ததை கேள்வி பட்டு மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் குழுமி இருந்தனர்… 

 

எடுத்ததும் ஏக களேபரம் கலைக்  கட்டியது… பொண்ணு கொடுத்து பெண் எடுக்க போவதாக கூறிவிட்டு இப்படி வேற ஒரு பொண்ணை  கூட்டிட்டு வந்து நின்னா என்ன அர்த்தம் கூடவே மகன் வேற இருக்கானாம் ல்ல… இன்னும் என்னத்தை எல்லாம் மறைச்சி வச்சி இருக்கீங்க எல்லாத்தையும் போட்டு உடைங்க அப்புறம் நாங்க முடிவு பண்ணிக்கிறோம் என மாப்பிளை அப்பா தாம் தூம் என்று குதித்தார்… பின்னே வசதியான குடும்பத்து பையன் வெளிநாட்டில் தொழில் செய்கிறான் பலே சாமர்த்தியசாலி என்பதால் தானே பருவக் கோளாறில் செய்த தப்பையும் மன்னித்து அவனுக்கு அவர் தம்பி பெண்ணை பேசி முடித்தது… 

 

பெண் எடுக்கும் இடத்திலே பெண்ணை கொடுத்தால் நாளைக்கு தொழில் ரீதியாக அவர் மகனுக்கு உதவி தேவை பட்டாலும் கிரிதரன் செய்வான் என நம்பி தானே பெண்ணை எடுக்கவும் கொடுக்கவும் சம்மதித்தது… இப்படி அவர் எண்ணத்தில் மண்ணை போட்டு ஒரு வெள்ளைக்காரிய இழுத்து வந்துட்டானே என குமுறிக் கொண்டு இருந்தார்…

 

இந்தாபா இவ்ளோ தூரம் சொல்லிக்கிட்டு இருக்கேன் உன் பாட்டுக்கு உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம் இப்போ முடிவா என்ன சொல்ல வர நாங்க சொன்ன மாதிரி அந்த புள்ளைக்கு காசைக் கொடுத்து அனுப்பி விட்டு எங்க புள்ள கழுத்துல தாலி கட்டுவியா மாட்டியா… ??என்றவர்க்கு கிரிதரனை விட மனமில்லை   அதாவது பொன் முட்டையிடும் வாத்தை விட்டு விட மனமில்லை… எப்படியாவது அமுக்கியே ஆக வேண்டும்…

 

இதற்கு எல்லாம் அசைந்தால் நான் கிரிதரன் இல்லடா என்னும் ரேஞ்சில் அவன் தெனாவெட்டாக அமர்ந்து இருக்க… தையல் நாயகியோ  நெருப்பு மேல் நிற்பது போல் தவித்து கொண்டு இருந்தார்… 

 

என்னமா எங்கள கூப்பிட்டு வச்சி அவமானப் படுத்துறீங்களா… சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தான் ஆண்டிங்கிற மாதிரி எங்களை வர சொல்லிட்டு எங்க வாயை புடுங்கி பார்க்கிறீங்களா இதெல்லாம் நல்லதுக்கு இல்லை சொல்லிப்புட்டேன்…என மாப்பிளையின்  தகப்பன் தையல் நாயகியை மிரட்டினார் அவரின் மிரட்டல் தான் கிரிதரனிடம் எடுபடவில்லையே…

 

செத்த பொறுங்க சம்மந்தி அவன் கிட்ட நான் பேசி பார்க்கிறேன்…

“ஏய்யா ராசா  அம்மா சொல்றத கொஞ்சம் கேளு ராசா…பெண் பாவம் பொல்லாதது ராசா ஊரறிய உனக்கு நிச்சயம் பண்ணிட்டு நாளைக்கு கல்யாணம் நடக்காம  போனா அந்த பொண்ணுக்கு அவமானம் இல்லையா நாளைக்கு ஊர் அந்த பொண்ணை பற்றி தப்பா பேசாதா???என சென்டிமெண்ட் போட்டு தாக்க 

 

“அப்போ இவ உங்க கண்ணுக்கு பொண்ணா தெரியலையா… ஏன்மா  என்னை நம்பி ஊறி விட்டு உறவு விட்டு ஏன் நாடு விட்டு  வந்துட்டாள்…ஒரு பிள்ளையும் பெத்துட்டா… இப்போ இவளை மட்டும் ஏமாத்தலாமா… அது உங்களுக்கு பாவமா தெரியலையா… ??  ena கிரிதரன் நாயகியின் பிளேட்டை அவருக்கே திருப்பி போட்டு தாக்க… 

 

அவனின் நேர் பார்வைக்கு பதில் சொல்ல முடியவில்லை தையல்நாயகியால்…

 

“அ  அதுக்கு தான் அவங்க சொன்ன மாதிரி அந்த பிள்ளை கையில காசு கொடுத்து அனுப்பிவிடலாம்யா… உன் தங்கச்சி வாழ்க்கையையும் கொஞ்சம் நினைச்சு பாரு ராசா…உன்னை நம்பி தான எல்லாம் ஏற்படும் பண்ணினேன் இப்போ இந்த கல்யாணம் நின்னா யாருக்கு அசிங்கம் சொல்லு என நாயகி நைஸ் பண்ண…

 

“இதுல என்ன சந்தேகம் உனக்கு தான் அசிங்கம்…  பின்ன யாரை கேட்டு நீ எனக்கு கல்யாணம்  நிச்சயம் பண்ண… நான் உன்னை கேட்டேனா…  நீயா ஒரு முடிவு எடுத்தா அதுக்கு நான் கட்டுப்படணுமா என்ன???  நீயே பதில் சொல்லு … என அசால்டாக கூறிவிட…

 

இந்த பக்கம் மாப்பிளை வீட்டார் அனைவரும் கடுப்பாகி ரகளையில் இறங்கினர்… 

 

ஏய்யா ராசா உன் தங்கச்சி வாழ்க்கை உன் கையில தான் அப்பு இருக்கு கொஞ்சம் மனசு வை ராசா என தையல்நாயகி மன்றாடிட… அவரை தலை கீழ் நின்று தண்ணி குடிக்க வைத்தான் அவர் மகன்… மகள் வாழ்க்கை எண்ணி கலங்கி போனார்…

 

கெட்டதிலும் ஒரு நல்லதாக மேனகையை தான், நான் மணப்பேன் என மாப்பிளை உறுதியாக நின்றது அவருக்கு சற்று ஆறுதலாக இருந்தது… அதற்கும் சேர்த்து மாப்பிளையின் தகப்பன் தடி எடுத்து ஆட தொடங்கி விட… நிலைமை கை மீறி போவதை உணர்ந்தவர்… கையாலாகா தனத்துடன் மகனை பார்க்க அவனோ எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் காதை குடைந்தப் படி இருக்க… நானே என் மகள் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்டுட்டேனே என புலம்ப மட்டுமே அவரால் முடிந்தது… கோபத்தில் மாப்பிளையின் அப்பா கத்திக் கொண்டே இந்த திருமணம் நடக்கவே நடக்காது என்னை  மீறி இவன் எப்படி தாலி கட்டுவான்னு நானும் பார்க்கிறேன் என தன் மகனை இழுத்து கொண்டு கிளம்ப…அவரை மற்றவர்கள் சமாதானம் செய்ய முயல…

 

பதைப்பதைப்புடன் அமர்ந்து இருந்தார் தையல் நாயகி…அப்போது கூட்டத்தில் இருந்த மாப்பிள்ளையின் தந்தையின் தம்பி அதாவது மாப்பிளையின் சித்தப்பா  சற்று ஓங்கி குரல் கொடுக்க… அனைவரது கவனமும் அவரிடம் திரும்பியது…

 

“என்ன அண்ண உனக்கு கொஞ்சம் கூட பொறுமை என்கிறதே இல்லை… நான் என்ன சொல்ல வரேன்னு கேக்காம உன் பாட்டுக்கு சாமி ஆடிட்டு கிடக்க… அந்த தம்பி ஏற்கனவே ஃபோன் பண்ணி எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிடுச்சு… அது மட்டுமில்ல நம்ம பொண்ணுக்கு ஏத்த மாப்பிளையையும் அந்த தம்பியே  சேரத்துடுச்சி  நானும் அந்த பையனை பற்றி எல்லாம் விசாரித்து பிறகு தான் ஒத்துக்கிட்டேன்… குலம் கோத்திரம் மட்டும் இல்லை வசதிளையும் நம்மள விட நல்ல இடம் தான்…அதை நானும்  உன்கிட்ட அப்போ இருந்து  சொல்லி புரிய வைக்க முயற்சி பண்றேன் என்னைய பேசவே விட மாட்டிங்கிறியே அண்ணா…!!” என்றதும் தான் கூட்டமே அடங்கி அமைதியாகி போனது…அவர்களுக்குள் கலந்து பேசி ஒரு முடிவை எட்டுவதற்குள் விடிந்தே விட்டது…

ஏண்டா இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்லை என்பது போல் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு தையல் நாயகி கிரிதரனை பார்க்க 

 

“சும்மா..!! ஒரு கிக்க்கு என்று விட்டு போக நெஞ்சை நீவி கொண்டார் தையல் நாயகி இன்னும் என்ன எல்லாம் செய்ய போறானோ என்று தான்… 

 

ஒரு வழியாக எல்லாம் பேசி மேனகைக்கும் அதே மாப்பிளைக்கும் மாப்பிளையின் தங்கைக்கும் கிரிதரனின் ஆருயிர் நண்பன் விகாஸ்க்கும் திருமணம் நடத்துவதாக முடிவு செய்த பின்பே தையல் நாயகிக்கு நிம்மதி மூச்சு வந்தது… அவர் நினைத்த மாதிரி மகன் வாழ்வு தான் அமையவில்லை என்றாலும் பரவாயில்லை, மகள் வாழ்க்கையாவது அவர் நினைத்தப் படி அமைய போகுதே என்கிற சந்தோசத்துடன் அவர் இருக்க… அது எப்படி என ஆப்பு வைக்க ரைட்டர் இடம் தேடிக் கொண்டு இருக்கிறார்… என்பதை சொல்லிக் கொண்டு…

 

ஏம்மா இருமா நீ பாட்டுக்கு பொசுக்குன்னு முடிச்சா எப்படி அது இதுன்னு இந்த கிரிதரனை வில்லன் மாதிரி பில்டப் பண்ணிட்ட… அவன் வந்தா எதாவது நடக்கும் பார்த்தா ஒண்ணுமே நடக்கலை அப்போ அவன் டம்மி பீசா…

 

எதே அவன் டம்மி பீஸா…நாளைக்கு நடக்க போற திலோ கல்யாணத்துல தெரியும் கிரிதரன் டம்மி பீசா இல்ல டைம் பாம் பீஸான்னு அதுவரை பொறுத்திடுவோம் காத்திடுவோம் என சொல்லி கொண்டு எஸ் ஆகும் ரைட்டர்…

1 thought on “உயிர்வரை பாயாதே பைங்கிளி”

  1. Hi there, i rerad your blog from time to time aand i oown a similar one and i was
    just wondering if you get a lot of spam feedback?
    If so how do you prevent it, any plugin or anything you cann advise?

    I get so much lately it’s driving me mad so any help is very much appreciated.

    Here is my blog post … GSA and XRumer

Leave a Reply to GSA and XRumer Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top