ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 18

அத்தியாயம் 18

 கதிரவனும் உதயனும் பேசி விட்டு சென்ற பின் ஆதவன் இருதலைக் கொல்லியாய் தவித்தான் ஆனால் தேனோடு வாழ ஆசை நிறையவே இருந்தது. ஆயுத பூஜை கடையில் சாமி கும்பிட்டான் ஆதவன் 

 அதே நேரம் புதுக்கடைக்கு பூஜை போட்டு விட்டான்.  பெயர் மட்டும் வைக்கவில்லை. முதல் முறை தன த்திடம்,  கடை வாங்கிய விஷயத் தை கூறவில்லை.

விஜயதசமி அன்று தனம் கேட்ட த ன் பெயரில் பக்கத்தில் உள்ள கோ விலுக்கு அழைத்து சென்றான் ஆ தவன் அன்று கடைக்கு விடுமுறை விட்டிருந்தான்.

 காலை 11:00 மணிக்கு அதே கோவி லுக்கு சாமி கும்பிட தேனுவும் ஆரா வும் ரவி கோகுலுடன் வந்திருந்தா ன்

 சாமி கும்பிட்டு சிறிது நேரம் கோவி லில் அமர்ந்து பேசிக் கொண்டிருந் தனர். அப்போது ஆதவன் அங்கு அமர்ந்திருந்த, தேனையும்  பிள்ள யையும் பார்த்துவிட்டான். அவன் உள்ள மகிழ்ந்தது அவளிடம் சென் று பேச வேண்டும் போல் இருந்தது.

குழந்தை பெற்று இன்னும் அழகா  ய் இருந்தாள் மதுரா. அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் ஆதவ ன் 

 ஆதவனை, தனம் வந்து சத்தமா ஆதவா போலாமா டைம் ஆச்சு பா சின்ன குட்டி வெயிட் பண்ணு வா என அழைத்தார். சத்தம் கேட்டு தே னு நிமிர்த்தாள். அங்கே ஆதவன் அவளைத்தான் பார்த்து இருந்தா ன் 

அனைவரும் தூணுக்கு இந்த பக்க ம் அமர்ந்து இருந்ததால், அவன் நி ற்பது யாருக்கும் தெரியவில்லை. தேனும் ஒரு நொடி அவனை பார்த் தவள், அவள் பார்வை வேறு இடத் தை வெறிக்க ஆரம்பித்தது. அவள் பார்வை போகும் இடத்தை ஆதவ ன் பார்த்தான்.

அது தனம் கட்டி இருந்த புடவையி ல் அவள் பார்வை நிலைத்திருந்த து. கண்களில் ஏதோ ஒன்று தெரிந் தது. முதலில் ஆதவனுக்கு புரியவி ல்லை 

பின் ஞாபகம் வந்தவனாக அதை  ப் பார்த்தான். அது அன்று அவன் பொங்கலுக்கு அவளுக்குகென ஆ சையாக எடுத்து கொடுத்த புடவை அதை தனம் இன்று கட்டியிருந்தா ர்.

 ஆதவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட் டது. நிமிர்ந்து தேனுவை பார்த்தா ன் சங்கடத்துடன், கண்கள் கலங்கி இருந்தது. 

 அவனும் ஆசையாக தான் அவள் நிறத்திற்கு, எடுப்பாக எடுத்து வந் தான். அவள் எவ்வளவு சந்தோஷ ப்பட்டால்,  அந்த புடவை பார்த்து என்று அவனுக்கு மட்டும் தான் தெ ரியும். அவள் கண்கள் கலங்குவ தை பார்த்தவன்,  அம்மா வா எனக் கு வேலை இருக்கு. எப்ப இந்த கட்டி ன இதை நான் உனக்கு எடுக்கவே இல்லையே என்றான் கோபமாய்

 தனம் என்னடா யாருக்கு எடுத்தா என்ன ஆதவா அம்மாக்கு பிடிச்சு இருந்தது கட்டிகிட்டேன்.அவளாம் இதை கட்ட தகுதியே இல்லாதவடா எனக்கு எடுப்பா இருக்கு பாரு என் றார் ஆதவன். அம்மா.. என தலை யில் அடித்தவன் 

வயசாச்சே தவிர புத்தி இல்லை உ னக்கு.யாரையும் அப்படி பேசாதமா குறிப்பா அவள அப்படி பேசாதமா என்றான் ஒருமையில், 

 இதைக் கேட்ட தேனு  கண்களை துடைத்தவள், வெறுமையாக சிரித் துக் கொண்டாள். என்னடா ஆத வா, என்ன ஆச்சு உனக்கு திடீர்னு அவளை பத்தி  பேசினா கோபம் எ ல்லாம் வருது. இன்னும் அந்த ஒன் னுக்கும் உதவாதவள தான் நினை ச்சுட்டு இருக்கியா ஆதவா 

 அம்மா உனக்கு பெரிய இடத்துல பொண்ணு பார்த்து கட்டி வைக்க லாம்னு இருக்கேன் டா. அவளை மறந்துடு ஆதவா. நீ நல்லா இருக்க ணும்னு தானே அம்மா அவளை வீட்டை விட்டு அனுப்பினேன். 

 அம்மா பேச்சை மீற மாட்டல ஆத வா? அம்மாவ எப்படி எல்லாம் பே சினா தெரியுமா?கொடுமைபடுத்தி னா தெரியுமா? நீ வேணா பங்கஜ கிட்ட கேட்டு பாரு என பேசிக் கொ ண்டே வந்தார் ஆதவனுக்கு அவர் பேச்சில் கோபம் வந்துவிட்டது 

 அம்மா.., இப்ப நீங்க வாயை மூட போறீங்களா இல்லையா? இல்ல இங்கனவே  உங்களை விட்டுட்டு போகட்டுமா என்றான் சத்தமாய்

அதில் அவர் அமைதியாக பைக்கி  ல் ஏறிக்கொண்டார். தேனுவை திட் டி கொண்டே வந்தார், வழி எல்லா ம். பாதி வழியில் தனத்தை இறக்கி ஆட்டோ ஏற்றி விட்டு திருவை பார் க்க சென்றான் 

 திரு ஊரில் இல்லை என்று தெரிந் தது ம் பின்வாசல் வழியாக வீட்டு க்கு வந்தவன் கட்டிலில் மறுபக்கம் பாய் போட்டு கீழே படித்துக் கொ  ண்டான் நல்ல உறக்கம் 

 திடீரென,  பேச்சு குரல் கேட்கவே யார் என்று கவனித்தான். தாயும் பங்கஜமும் கட்டிலில் அந்த பக்கம் அமர்ந்து துணி மடித்துக் கொண் டே ஆதவன் காலை தன்னிடம் நட ந்து, கொண்டதை பங்கஜத்திடம் கோபத்துடன் சொல்லிக் கொண்டி ருந்தார் 

 பங்கஜம், என்ன தனம் புலம்பிட்டு இருக்க விடு என் சொந்தத்தில் ஒரு பொண்ணு,  இருக்குன்னு சொன் னேனே பார்த்து முடிச்சிடலாம் என் றாள். தனம் இல்ல பங்கஜம் இவ னும் என் கையை விட்டு போயிடு வானோனு பயமா இருக்கு. 

அவர் போகும் போது கூட எனக்கு இந்த கடையை மட்டும் தான் விட் டுட்டு போனாரு,, கடையை சின்ன வன் பேர்ல எழுதி இருக்காரு. இந்த விஷயம் சின்னவனுக்கு தெரியாது மத்த ரெண்டு பேரும் பத்திரத்தை படிச்சு பார்த்தானுங்க ஆனா ஆத வன் இந்தாப்பா உனக்குன்னு சொ ன்னதும் சரிமா னு ஏத்துக்கிட்டா ன். ஏன்னு கேட்கல 

 பங்கஜம் சரிதானே தனம் அப்படி ப்பட்ட புள்ள தானே நீ எதிர்பார்த் த அவனும் உன் கைக்குள்ள தா னே இருக்கான் விலகி போயிடல யே  என்றார் 

 ஆமா, நீ சொல்றது சரிதான்  பங்க ஜம், ஆனா கொஞ்ச நாளா அவன் போக்கே சரியில்ல எதையோ என் கிட்ட மறைக்கிறான் மத்த ரெண்டு பேரும் அவனவன் அவன் குடும்ப ம் தான் முக்கியம்னு, இருக்கானுங் க..

அவனுங்க எண்ணி  எண்ணி தா ன்,பணத்தையே கொடுக்கிறானுங் க. இவன் மட்டும் தான்,  மொத்தத் தையும் என்கிட்ட கொடுக்கிறான். இவன் என் கைக்குள்ள இருக்குற வரைக்கும் தான் என் ராஜ்ஜியம் இ ந்த வீட்ல, மத்த ரெண்டு மருமகள் களும் என்ன மதிக்கவே மாட்டேங் குறாளுங்க

அதனாலதான் அந்த சரசு வந்து கேட்டப்ப உடனே அந்த பொண்ண கண்டிஷனோட ஆதவனுக்கு கல் யாணம் பண்ணி வச்சேன் ஆனா அவ என் புள்ளைய முந்தானைல முடிச்சுக்க பாத்தா விடுவேனா நா ன் பிடிச்சு ஏறிட்டேன்ல.

 இவனும் அவ பின்னாடியே ஏதோ பெரிய உலக அழகி மாதிரி தேனு தேனு சுத்திட்டு இருந்தா இருக்கான்.

 பங்கஜம் கரெக்டா சொன்ன  தனம் என ஒத்து ஓதினார் 

 என் புள்ள கிட்ட உரிமையா ஏதும் கேட்க கூடாதுன்னு சொல்லி வச்சே ன், ரொம்ப நெருக்கமா இருக்காத னு சொல்லி வச்சேன். ஒன்னும் இல் லாதவன்னு, சொல்லி அடக்கி வெ ச்சேன்.

அதையும் மீறி ஆயிரம் ரூபாய் எடு த்தான் பாரு, அவளுக்கு செலவு ப ண்ண, செம்ம ஆத்திரம் வந்துடுச்சு பங்கஜம் எனக்கு. ஏதோதேதோ சொ ல்லி, அவன தடுக்கிறதுக்குள்ள அப்பப்ப, ஏதோ அம்மா அம்மான் னு என் பின்னாடி வால் புடிச்சு சுத் துறதால எல்லாத்தையும் அனுபவி க்கிறேன்

 பங்கஜம், அது சரி இதெல்லாம் தே னுக்கு புள்ள  நின்னதும் கலைக்க என் கிட்ட மருந்து வாங்கிட்டு போ னியே ரெண்டு தடவை அது இதுவ ரைக்கும் யாருக்கும் தெரியாதுல்ல தனம் என கேட்டார் 

 ஆமாம், பங்கஜம் தெரியாது ஆதவ ன் வந்து என் பொண்டாட்டிக்கு நா ள் தள்ளி போயிருக்குன்னு சொன் ன ரெண்டே நாளிலேயே அந்த மரு ந்த அவளுக்கு பால் ல கலக்கி கொ டுத்தேன் நல்லா தான் வேலை செ ஞ்சது என்றார் சிரித்துக் கொண் டே 

 இதைக் கேட்ட ஆதவன் அதிர்ந்து விட்டான், என் பிள்ளைமா அது எப்படிமா மனசு வந்துச்சு உங்களு  க்கு அதை கலைக்க.அவன் கண்க ளில் கண் ணீர். வெறுத்து விட்டா ன் தன் தாயை,

இவ்வளவு மோசமானவங்களா?  எ ன் அம்மா என்று மனம் நொந்து அ ப்படியே விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் 

அதுக்கு பிறகு ஏதாவது சாக்கு சொ ல்லி, அவங்க ரூம்ல நானே போய் படுத்துக்குவேன் இல்ல பிரிச்சு படு க்க வைத்து விடுவேன். கேட்டா சா மி பேர சொல்லி சமாளிச்சிடுவேன் அன்னைக்கு கூட அவளா என்ன தள்ளி விடல நானா தான் போய் விழுந்தேன். ஆதவன பார்த்ததும் கத்த ஆரம்பிச்சேன் பாரு அவனும் நம்பிட்டான்.

இதைக் கேட்ட,  ஆதவனுக்கு இன் னும் அதிர்ச்சி  அப்ப அம்மா என் கிட்ட பொய் தான், சொன்னாங்க ளா அப்ப உதயன் சொன்னது போ ல அம்மா தான் முதல்ல பிரச்சனய ஆரம்பிச்சாங்களோ? தெளிவா கே ட்காம தப்பு பண்ணிட்டேனோ என தலையை பிடித்துக் கொண்டான் 

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

4 thoughts on “என் உயிரே நீ விலகாதே 18”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top