அத்தியாயம் 13
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன…
அஜய் அன்று மருத்துவர் வேல் முருகனை பார்க்க வந்திருந்தான்
அவனை பார்த்த வேல்முருகன்
“என்ன அஜய் இப்படி பண்ணிட்டியே நீ மூணு மாசமா வீட்டு பக்கமே போறது இல்லையாமே மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா” என்று கேட்டார்.
“இல்லை அங்கிள் தொடர்ந்து ஷூட் இருந்துச்சு அதனால தான் போக முடியலை” என்றான் சமாளிக்க எண்ணி “நீ வீட்டுக்கே வர்றது இல்லைன்னு உங்க அம்மாவும் அப்பாவும் எனக்கு கால் பண்ணி கேட்டுட்டே இருக்காங்க நீ இப்போ ஓகே வா” என்றார்.
“நான் இப்போ ஓகே தான் அங்கிள்
முன்னாடிக்கு இப்போ பரவாயில்லை சீக்கிரமே வீட்டுக்கு போகனும்” என்று இன்னும் நாலு வார்த்தைகள் அவரிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
காரில் சென்று கொண்டிருந்த அஜய்க்கு மீண்டும் பழைய நினைவுகள் அனைத்தும் வந்தது
ஷில்பாவை அஜய்க்கு சிறு வயதில் இருந்தே தெரியும் கடந்த சில வருடங்களில் அது காதலாக மலர்ந்தது.
ஒரு நாள் அஜய்க்கு ஷூட்டிங் இருந்தால் வெளியே சென்றிருந்தான் அவனின் தாய் தந்தை இருவரும் உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு சென்றிருந்தனர்.
அஜய் காரில் சென்று கொண்டிருந்தவன் தன் பர்ஸ்சை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவு வர மீண்டும் அதை எடுக்க வீட்டிற்க்கு வந்தான் அவன் வீடே அனாமத்தாக திறந்து கிடக்க முழுதாக இருட்டாக இருந்தது.
அஜய் அவசரத்துடன் உள்ளே வந்தவன் லைட்டை ஆன் செய்து விட
சோபாவில் அறைகுறை ஆடையுடன் அவன் தம்பி கீழே படுத்திருக்க அவன் மேலே ஷில்பா படுத்திருந்தாள் இருவரும் மேலே மட்டுமே ஆடை அணிந்திருக்க கீழே ஆடையே இல்லை அதை பார்த்தவனின் முகம் கோபத்தில் சிவந்து போனது அதன் பின் பெரிய பிரச்சனையாகி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டனர்.
அதையெல்லாம் நினைத்து கொண்டே வந்தவன் எதிரே வந்த லாரியில் மோதி விட அது மிகப்பெரிய விபத்தில் முடிந்து போனது அஜய்யின் கையில் ரத்தம் வடிய கார் கண்ணாடியின் உடைந்த துகள்கள் அனைத்தும் கிழித்திருந்தது கீழே விழுந்து கிடந்தான் அது நெடுஞ்சாலை பகுதி இரவு நேரம் என்பதால் எந்த கூட்டமும் இல்லை.
அஜய் ரத்தம் வடிய காரிலிருந்து வெளியே வந்தவன் பிரதாப்புக்கு அழைத்தான் அடுத்த பத்து நிமிடத்தில் அவனும் அங்கே வந்து சேர்ந்தான் அஜய்யை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவன் காயங்களுக்கு கட்டுப்போட்டு அப்பார்மென்ட்டுக்கு அழைத்து வந்தான்.
அவன் எப்போது வருவான் என்று நகத்தை கடித்து கொண்டு வாசலையே வழக்கம் போல் பார்த்து கொண்டு இருந்தாள் மல்லிகா
பிரதாப் அவனை அழைத்து கொண்டு உள்ளே வர அஜய் கை மற்றும் நெற்றியில் கட்டுடன் அங்கே வந்தான்.
அவனை பார்த்த மல்லிகா பதட்டத்துடனே அவன் அருகில் ஓடினாள் அவளின் கண்கள் உடனே கலங்க ஆரம்பித்தது பிரதாப்புக்கு மல்லிகாவை பார்க்க பாவமாக இருந்தது “மேடம் சார் கார்ல வரும் போது ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆகிருச்சு அவ்வளவு தான்” என்றான்.
மல்லிகா பதட்டத்தில் அவன் அடிப்பட்ட கையையே பிடித்துவிட
“ஆ வலிக்குது டி” என்று கத்தினான் அஜய் “அய்யய்யோ மன்னிசிடுங்க” என்ற மல்லிகா அவனை அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தாள்.
அஜய் சோர்வுடன் சோபாவில் அமர்ந்து இருந்தவன் “பிரதாப் அப்பா அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்” என்றான்.
“அது எப்படி சார் சொல்லாம இருக்க முடியும்” என்று அவன் கேட்க
“சொல்லதன்னா சொல்லாத அவ்வளவு தான்” என்றான் அஜய் கோபத்துடன் வலியில் கண்ணை சுருக்கி கொண்டே.
“சரி சார்” என்று பதிலுக்கு அவனும் தலையை ஆட்டினான் அதன் பின் அஜய்யை மல்லிகா தான் மனைவியை போல கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டாள் அவனை குளிக்க வைத்து சாப்பாடு ஊட்டி உடை கூட அவள் தான் மாற்றிவிட்டாள் அவனுக்கான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தாள்.
அன்று காலை மல்லிகா படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளும் போதே மிகவும் சிரமமாக இருந்தது உடல் எல்லாம் அடித்து போட்டதை போல வலித்தது எழுந்து நின்றாள் தலை சுற்றியது தடுமாற்றத்துடனே நடந்து சென்றாள்.
குளியலறை சென்று முகம் கழுவி முடித்து வெளியே வர அஜய் உறங்கி கொண்டு இருந்தான் அவனின் கை காயம் இப்போது நன்றாக குணமாகி இருந்தது மல்லிகா இங்கு வந்து இன்றோடு ஐந்து மாதங்கள் முடிவடைந்து இருந்தது.
சமையலறைக்கு செல்ல செல்வி சமைத்து கொண்டு இருந்தார் அடுப்பில் உலை கொதித்து கொண்டு இருந்தது அந்த வாசனையே மல்லிகாவுக்கு உமட்டி கொண்டு வர ஓடிச் சென்று வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.
அவள் மீண்டும் சமயலறைக்கு வர அவளுக்கு மீண்டும் உமட்டி கொண்டு வந்தது செல்வி அவள் அருகில் சென்று அவளின் தலையை பிடித்து கொண்டு “என்னாச்சு பாப்பா” என்று கேட்டார்.
“என்னன்னு தெரியலை அக்கா வாந்தி வருது” என்று கூறியவள் மீண்டும் வாந்தி எடுத்து கொண்டே இருக்க செல்விக்கு உடனே சந்தேகம் வந்தது “பாப்பா நாள் எதாவது தள்ளி போய் இருக்கா” என்று அவளிடம் கேட்க அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
செல்வி அவளுக்கு புரியம்படியாக அனைத்தையும் கேட்டு விசாரித்தவர் அவளின் நாடியை பிடித்து பார்த்து
“பாப்பா இரட்டை நாடி துடிக்குது நீ மாசமா இருக்க” என்று கூறினார் முகம் மலர அவர் கூறியதை கேட்ட மல்லிகா அவளின் வயிற்றில் கை வைத்தாள் அவளின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் கூட வந்தது.
அதன் பின் அறையின் உள்ளே சென்றவள் அங்கே உடை மாற்றி கிளம்பி கொண்டு இருந்த அஜய்யை ஏக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்தாள்.
அவளை கண்ணாடி வழியாக பார்த்த அஜய் “என்ன டி பார்வையெல்லாம் பலமா இருக்கு” என்று தன் ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி கேட்டான்.
“அது… அது…” என்று தயங்கி கொண்டே லேசாக வெட்கப்பட
“என்ன சீக்கிரமா சொல்லு ஷூட்டுக்கு டைம் ஆச்சு” என்று கேட்க “கோவிலுக்கு போலாமா” என்று தன் தயக்கத்தை உடைத்து கூறினாள்.
“ம்ம் இப்போ வேண்டாம் நைட் வரேன் அப்போ போலாம் இப்போ யாராவது பார்த்தா வீண் பிரச்சனை அப்படியே பீச் போய்ட்டு வரலாம்” என்றான்
அவளும் பதிலுக்கு சரியென தலையை ஆட்டினாள்.
அஜய் அவளின் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் மல்லிகா அவனை ஏக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்தாள்.
இரவு ஒரு எழு மணி போல் அஜய் வீட்டுக்கு வர மல்லிகா ஒரு பாவடை சட்டை ஒன்றை மாட்டிக் கொண்டு அவனுக்காக அமர்ந்திருந்தாள்.
அவன் வந்தவுடன் ஆர்வமாக அவனுடன் கோவிலுக்கு செல்ல வர
“ஏய் நில்லு இதே டிஸ்சோட வா கோவிலுக்கு வர” என்று அவளிடம் கேட்க மல்லிகா “ஆமாம்” என்று ஒரு முறை தன் ஆடையை கீழே குனிந்து பார்த்தாள்.
“போய் புடவை கட்டிட்டு வா நான் வெயிட் பண்றேன்” என்றவன் தன் மொபைலை பார்தது கொண்டு சோபாவில் அமர்ந்தான்.
மல்லிகா அறையின் உள்ளே சென்று
பாவடை மற்றும் மேலாடை ஒன்றை அணிந்தவள் புடவையை எந்த பக்கத்தில் இருந்து எப்படி கட்ட என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தாள்.
அவள் சென்று அரை மணி நேரமாகியும் அவள் வராததால் எழுந்து கதவை திறந்துவிட்டு உள்ளே சென்றான் அஜய் அங்கே மல்லிகா புடவையை கட்ட தெரியாமல் தன் மேலே சுற்றிக் கொண்டு நிற்க “என்ன டி இப்படி நிக்குற” என்று கேட்டான்.
“எனக்கு புடவை கட்ட தெரியாதுங்க” என்றாள் அவள் முகத்தை பாவமாக வைத்து கொண்டு “அன்னைக்கு அழகா கட்டியிருந்தியே” என்று அஜய் மீண்டும் கேள்வி கேட்க
“அன்னைக்கு செல்வி அக்கா கட்டிவிட்டாங்க” என்றாள்.
அவள் அருகில் சென்றவன் “கொடு நானே கட்டிவிடுறேன்” என்று அவள் கையில் இருந்து புடவையை வாங்கியவன் யூடிப்பில் புடவை கட்டும் வீடியோ ஒன்றை ஆன் செய்து வைத்தான்.
அதை பார்த்துக் கொண்டே கட்டிவிட்டவன் கொசுவத்தை உள்ளே நுழைக்கும் போது அவளின் பள்ளத்தாக்கில் வேண்டுமென்றே கையை நுழைத்து தடவி பார்க்க
மல்லிகா வெட்கத்துடனே அவன் கையை பிடித்து கொண்டு தன் கீழ் உதட்டை கடித்தாள் அவள் முகமெல்லாம் ரத்த நிறத்தில் மாறியது.
அவளை பார்த்து சிரித்து கொண்டே தன் கையை வெளியே எடுத்தவன்
தன் விரலை நாவால் கவ்வி அவளை பார்த்து கொண்டே சுவைத்தான்.
மல்லிகாவுக்கு வெட்கம் பிடுங்கி திண்ண தன் முகத்தை கையால் மூடி கொண்டாள் அப்போது அவளின் வயிற்றை பார்த்த அஜய் அவளின் வயிற்றில் கை வைத்து “நல்லா தொப்பை போட்டுட்ட டி” என்றான்.
மல்லிகாவின் கைகள் அவன் கையை அங்கேயே பிடித்து கொண்டது சிறிதாக மேடிட்ட வயிற்றில் வைத்து பிடித்து கொள்ள “கோவிலுக்கு போக வேண்டாமா” என்று கேட்டான் அஜய்.
மல்லிகா அவன் கையை விடுவிக்க அவளுக்கு ஒருவழியாக புடவையை கட்டி முடித்து இருவரும் வெளியே கிளம்பினர்.
அஜய் நேரே கோவிலுக்கு அழைத்து செல்லாமல் கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தான் “கோவில்ல ஒரே கூட்டம் டி யாராவது என்னையும் உன்னையும் பார்த்துட்டா என்ன பண்றது” என்றவன்.
அவளின் கைப்பிடித்து கடல் அலை அருகில் அழைத்து சென்றான் இருவரும் அந்த அலைகளில் காலை நனைத்து கொண்டு நின்றிருந்தனர்.
தன் வாழ்வில் முதல் முறையாக மல்லிகா கடற்கரையை பார்க்கிறாள் அவளுக்கு சந்தோஷம் தாளவில்லை சிறு குழந்தை தண்ணீரில் ஆட்டம் போட ஆரம்பித்தாள்.
அஜய் அவள் விளையாடுவதை கரையில் இருந்து பார்த்து கொண்டு இருந்தான் மல்லிகா அவனின் கையை பிடித்து தண்ணீருக்கு இழுத்து செல்ல இருவரும் ஆட்டம் போட்டனர் அந்த கடல் அலைகளில் விளையாடி முடித்து ஓய்ந்து போய் வந்து காரில் ஏறினர்.
இருவரும் ஒன்றாக வீட்டிற்க்குள் வர
மல்லிகா அஜய்யிடம் “என்னங்க நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசுனும்” என்க அஜய் அவளின் இடையில் கைக் கொடுத்து தன் அருகில் இழுத்து அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தமிட ஆரம்பித்தான்.
“எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்” என்று அவளிடம் கூறிவிட்டு தன் கையில் அவளை தூக்கி சென்றான் குழந்தைக்கு எதாவது ஆகிவிடுமோ என்ற பயத்துடன் அவள் அவனுடன் இருந்தாள்.
மறுநாள் காலை அஜய் எழுந்து வந்தவன் அன்றைய செய்தித்தாளை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது அதில் அன்று மல்லிகா அஜய் சாப்பிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இருந்தது மல்லிகா திரும்பி அமர்ந்திருந்தால் அவள் முகம் தெரியவில்லை.
ஆனால் அஜய்யின் முகம் தெளிவாக இருந்தது “பிரபல நடிகர் ரகசிய காதலா?” என்று இருந்தது.
அத்தியாயம் 14
தன் கையில் இருந்த செய்தி தாளை பார்த்த அஜய்க்கு தலைக்கு மேல் கோபம் ஏறியது இந்த செய்தியை வெளியிட்டவனை கொன்றுவிடும் அளவுக்கு ஆத்திரம் எழுந்தது.
தன் கையில் இருந்த செய்தித்தாளை கசக்கி எறிந்துவிட்டு கோபத்துடன் நின்றிருந்தான் அப்போது அவனின் ஐபோனில் இருந்து அழைப்பு வர அதை எடுத்து காதில் வைத்தான் அவனின் தாய் லதா தான் அழைத்திருந்தார்.
“ஹலோ” என்று அஜய் கூற
மறுமுனையில் இருந்து “அஜய் என்ன டா நியூஸ் பேப்பர்ல் என்ன என்னவோ போட்டுருக்காங்க அது எல்லாம் உண்மையா நீ ஒரு தடவை ஏமார்ந்து போனது பத்தாது திரும்பவும் ஏமாறனுமா யார் அந்த பொண்ணு” என்று கோபத்துடன் கத்தி கொண்டு இருக்க அஜய் அவர் பேசிக் கொண்டே இருக்கும் போதே அழைப்பை துண்டித்தான் “ஷீட்” என்று கத்தி கொண்டே தனது ஐபோனை கோபத்துடன் தூக்கி எறிந்தான் அது சுவரில் மோதி உடைந்து சிதறி கீழே விழுந்தது.
பிரதாப் வீட்டின் உள்ளே வந்தவன்
“என்ன சார் ஆச்சு” என்று கேட்க
“இன்னும் என்ன ஆகனும்” என்று கத்திக் கொண்டே அவன் முன் அந்த கசக்கி போட்ட நியூஸ் பேப்பரை தூக்கி எறிந்தான்.
பிரதாப் அந்த நியூஸ் பேப்பரை கையில் எடுத்து பார்த்தவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது இருப்பினும் “நீங்களும் மேடமும் லவ் பண்ணுறிங்க தான சார்” என்று கேட்க “வாட் நான் அவளை லவ் பண்றேனா நான் எப்போ உன் கிட்ட அப்படி சொன்னேன்” என்றான் அதிர்ச்சியுடன்.
“இல்லை சார் லவ் பண்ணிட்டு இப்போ லிவ் இன்ல இருக்கிங்கன்னு நினைச்சேன்” என்றான் பிரதாப்
“ஓ காட்” என்று தலையில் கை வைத்து கொண்டவன்
“அவள் ஒரு பிராஸ்டியூட் பிரதாப் எனக்கு சில மன ரீதயான பிராப்ளம் இருக்கறதால அவளை அக்ரீமென்ட் போட்டு இங்கே கூட்டிட்டு வந்தேன் இப்போ கான்ட்ராக்ட் முடிய போகுது,
இப்போ தான் நான் கொஞ்சமே கொஞ்சம் மேல வந்துருக்கேன் இப்போ போய் இந்த மாதிரி நியூஸ் வந்தா என்னோட கேரியர் என்ன ஆகும்” என்றான் அஜய்.
அனைத்தையும் கேட்டு முடித்த
பிரதாப் “சாரி சார்” என்றான்
“இட்ஸ் ஓகே பிரதாப் இந்த நியூஸ் பப்ளிஷ் பண்ணினது யாருன்னு விசாரிச்சு சீக்கிரமா இதை மூடி மறைக்கனும்” என்றான்.
“ஓகே சார் நான் போய் விசாரிக்கிறேன்” என்று பிரதாப் அங்கிருந்து கிளம்பினான்.
அஜய் கோபத்துடன் அமர்ந்திருக்க
அப்போது தான் தூங்கி எழுந்தாள்
மல்லிகா இப்போதெல்லாம் உடல் அடித்து போட்டதை வலி எடுத்தது நேற்று இரவு அவனுடன் நேரத்தை கழித்தது வேறு இன்னும் உடல் வலிக்க தட்டுத்தடுமாறி எழுந்து சென்று குளித்துவிட்டு வந்தாள் அஜய்யின் அருகில் வந்தவள் அவன் கோபத்துடன் அமர்ந்து இருப்பதை கவனிக்கவில்லை.
“என்னங்க நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றவள் இப்போதாவது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறிவிடலாம் என்று நினைத்து அவனிடம் வந்து பேசினாள்.
“என்ன சொல்லனும்” என்க செல்வி அப்போது தான் வீட்டுக்கு வந்திருந்தவர் காபியுடன் அவன் அருகில் வந்தார் “சார் காபி” என்க
அஜய்யும் அதை கையில் வாங்கி குடிக்க ஆரம்பித்தான்.
“நான்…நான்…” என்று அவள் அவனிடம் எப்படி கூறுவது என்று தடுமாற அஜய் அவள் என்ன கூற வருகிறாள் என்பதை காதில் கூட வாங்காமல் ஏதோ ஒரு நினைப்பில் அமர்ந்து இருந்தான் அப்போதும் மல்லிகா அவனை பார்க்காமல்
“என்னங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் அதை எப்படி சொல்றதுன்னு தான் தெரியலை” என்றாள் வெட்கத்துடன்.
அஜய் கோபத்துடன் எழுந்து நின்றவன் தன் கையில் இருந்த காபி கப்பை சுவற்றில் வீசி எறிந்தான் “உனக்கு என்ன தான் டி பிரச்சனை என்ன சொல்லனும் சொல்லி தொல” என்று கோபத்துடன் அவள் முன் நின்று கேட்டான்.
மல்லிகா பயத்துடன் நின்றிருந்தவளுக்கு அவனின் கோபத்தை பார்த்து வியர்த்து வடிய ஆரம்பித்தது பதட்டத்தில் அழுகவே ஆரம்பித்துவிட்டாள் செல்வி அங்கே சத்தம் கேட்டு பதட்டத்துடன் ஓடி வந்தவர் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றிருந்தார்.
“ச்சை மனுஷன நிம்மதியா இருக்க விடாம எப்ப பாரு தொல்லை பண்ணிக்கிட்டே” என்று கோபத்துடன் கூறிவிட்டு அஜய் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான்.
செல்வி அவளருகில் வந்து அவளை சமாதானம் செய்தார்.
அன்று இரவு அஜய் வீட்டிற்க்கு வராமல் பார்க்கு சென்று மூச்சு முட்டும் அளவுக்கு குடித்தவன் இரவு அவன் தாய் தந்தை இருக்கும் வீட்டுக்கு சென்று படுத்துக் கொண்டான்.
மல்லிகா இரவு அவன் வருவான் என்று வாசலிலேயே காத்திருந்து சேர்ந்து போனவள் சோபாவில் சென்று படுத்துக் கொண்டாள் ஆனால் அவன் காலை கூட அங்கு வரவில்லை.
காலை தன் படுக்கையறையில் இருந்து கண் விழித்தான் அஜய் அவன் எழுந்து வருவதற்க்காக அவன் தாய் தந்தை இருவரும் காத்திருந்தனர்.
கீழே ஷூட்டிங்க்கிற்க்காக கிளம்பி வந்தவன் ஹாலில் இருந்த சோபாவில் அமர அவன் பக்கத்தில் இருந்து அவனை பார்த்து கொண்டு இருந்தனர் அவனின் பெற்றோர்.
அஜய் தன் கையில் வாட்ச்சை சரியாக கட்டிக்கொண்டவன் அங்கிருந்து எழுந்து செல்ல போக
“அஜய் ஒரு நிமிசம் நில்லு” என்றார் அவனின் தந்தை அஜய் அவரின் பக்கம் திருப்பியவன் “வாட் பா எனக்கு டைம் ஆச்சு எதுவா இருந்தாலும் சீக்கிரமா சொல்லுங்க எனக்கு நேரமில்லை” என்றான் தன் மணிக்கட்டை பார்த்து கொண்டே.
“அஜய் நானும் உங்க அம்மாவும் உனக்கு பொண்ணு பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கோம் பா” என்றார்
“யாரை கேட்டு முடிவு பண்ணுனிங்க
எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்” என்று அஜய் அந்த வீடே அதிரும்படி கத்தினான்.
“அஜய் உன் அம்மா ரொம்ப பாவம் டா ஏற்கனவே உன் தம்பி பண்ணின தப்புல இருந்து மீள முடியாம தவிச்சிட்டு இருக்கா அவளை நீயும் துன்புறுத்தாத பாவம் அவள்” என்றார் அவனின் தந்தை.
“அப்பா பிளீஸ் நீங்களாவது புரிஞ்சிக்கங்க இன்னும் கொஞ்ச நாள் போகட்டு நான் ஒரு பொண்ணை ஏத்துக்குற மனநிலையில் இல்லை” என்றான் அஜய்.
“டேய் அஜய் உனக்கு 31 வயசு ஆகிடுச்சு டா இன்னும் எத்தனை நாள் எங்களை பொறுமையா இருக்க சொல்ற நான் கண்ணை மூடுறதுக்குள்ள உன் கல்யாணத்தை பார்க்கனும்ன்னு எனக்கு ஆசை இருக்காதா” என்று கேட்டார் அழுது கொண்டே லதா.
“அம்மா” என்று அஜய் ஏதோ கூற வர
“நீ இனி என்னை அம்மான்னு கூப்பிடனும்ன்னா தயவு செஞ்சு கல்யாணத்துக்கு ஒத்துக்கோ உன் கால்ல வேணும்னாலும் விழுறேன் டா” என்று அழுது கொண்டே அவன் காலில் விழ போக “அம்மா என்ன பண்ணுறிங்க” என்று அஜய் அதிர்ந்து போய் நகர்ந்து நின்றான்.
“எனக்கு வேற வழி தெரியலை டி ஊர்ல எல்லாரும் உன்னை பத்தி என்னவெல்லாம் பேசிக்கிறாங்க தெரியுமா நீ நல்லா வாழ்ந்து அதை நாங்க பாத்தா போதும்” என்றார்
அஜய்க்கு அவன் தாய் அழுவதை பார்த்து மனம் கலங்கியது சொல்ல முடியாத அளவுக்கு அவனின் மனம் வலித்தது.
“சரி என்னவோ பண்ணி தொலைங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென நடந்து சென்றுவிட்டான்.
அடுத்து வந்த நாட்களில் அஜய் மல்லிகாவை பார்க்க செல்லவேயில்லை தொடர்ந்து அவனுக்கு படப்பிடிப்பு இருந்தது அதனால் எப்போதும் அவன் வீட்டிற்க்கே சென்றுவிடுவான்.
இப்படி இருக்க மல்லிகா சாப்பிடமால் தூங்காமல் அவனுக்காக காத்திருக்க செல்வி அவளை திட்டி சாப்பிட வைத்தார் நாட்கள் அதன் போக்கில் சென்றது.
அஜய்யின் வீட்டில் அவனுக்காக பெண் பார்த்து முடிவு செய்து விட்டு அவனிடம் ஒரு வார்த்தை கேட்க்கலாம் அவனுக்கு போன் செய்தனர் அவன் எண் ஸ்வீட்ச் ஆப்பில் இருந்தது அவன் போன் உடைந்ததில் இருந்து அதை சரி செய்யவில்லை.
ஒரு நாள் இரவு அஜய் ஷூட்டிங் முடித்து வீடு வந்து சேர வண்ண வண்ண தோரணங்களாலும் சீரியல் லைட்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அவன் வீடு சந்தேகமாக பார்த்து கொண்டே உள்ளே வந்தவன்
“என்ன மா என்ன விசேஷம்” என்று அவன் தாயிடம் விசாரித்தான்.
“நாளைக்கு உனக்கு நிச்சயம் டா பொண்ணு வீட்ல இருந்து வராங்க” என்றவுடன் அவனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது “என்ன சொல்றிங்க என் கிட்ட ஏன் சொல்லவேயில்லை இவ்வளவு அவசரமா ஒரு கல்யாணம் தேவையா” என்று கேட்டான்.
“டேய் நேரம் கூடி வரும் போதே கல்யாணம் பண்ணினா தான் டா உனக்கு கல்யாணம் யோகம் வந்துருச்சுன்னு ஜோசியர் சொன்னாருஇப்போ பண்ணலன்னா திரும்ப உனக்கு கல்யாணம் பண்ண இரண்டு வருஷம் ஆகும் மா” என்றார் லதா.
“என்னவோ பண்ணுங்க” என்று கூறிவிட்டு மேலே தன் அறைக்கு சென்று படுத்த அஜய்க்கு தூக்கமே வரவேயில்லை புரண்டு புரண்டு படுத்தான் மனம் ஏனோ பாரமாக இருந்தது.
மறுநாள் காலை நிச்சயத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தது அஜய் அறையின் உள்ளே வந்த லதா “அஜய் சீக்கிரமா வா பொண்ணு வீட்ல இருந்து வந்துட்டாங்க” என்று கூறிவிட்டு செல்ல ஒரு மனதாக கிளம்பி கீழே சென்றான்.
புடவை கட்டி அவன் முன்னே வந்து நின்ற மணப்பெண்ணை பார்த்தவனுக்கு ஏனோ பிடிக்கவேயில்லை மிகவும் ஒல்லியாக இருந்தாள் அவனின் மனம் ஏனோ மல்லிகாவுடன் அவளை ஒப்பிட்டு பார்த்தது மல்லிகா கொஞ்சமே கொஞ்சம் பூசினார் போன்று உடல்வாகு உடையவள்.
விழா கோலாகலமாக நடைபெற உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர் அந்த பெண் அஜய்யை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள் அஜய் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை அவளின் தோழிகள் கூட அவள் அருகில் வந்து பேசி சிரித்து கொண்டு இருந்தனர்.
இருவரும் மோதிரம் மாற்றி ஜோடியாக நின்று போஸ் கொடுத்து கொண்டு இருந்தனர் அன்றைய ஹாட் நியூஸ்சாக அஜய்யின் திருமணம் தான் பிரபலமாகி கொண்டு இருந்தது.
மல்லிகா வீட்டில் இருந்தவள் வழக்கம் போல் டிவியை பார்த்து கொண்டு இருக்க அஜய்-அனிதாவின் நிச்சய புகைப்படம் செய்தியில் ஒளிப்பரப்பாகி கொண்டு இருந்தது அதை பார்த்து கொண்டு இருந்தவள் தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தாள்.
செல்வி அவள் அருகில் ஓடி வந்து தண்ணீர் தெளித்து எழுப்பி பிரதாப்புக்கு விஷயத்தை கூறினார்.
Waiting for next ud😊
super
Adapavi manusanada nee