ATM Tamil Romantic Novels

என் வினோதனே 15

அத்தியாயம் 15 

 

பிரதாப் செல்வி கூறியதை கேட்டவன் மணமேடையில் நின்றிருந்த அஜய்யின் அருகில் தயங்கி தயங்கி நடந்து சென்றான் அவன் காதில் சென்று மல்லிகா மயங்கி விழுந்த விஷயத்தை கூறினான். 

 

“என்ன சொல்ற பிரதாப்” என்று அஜய் கேட்க 

“ஆமா சார் இப்போ தான் செல்வி அக்கா கால் பண்ணுனாங்க” என்று கூற அடுத்த கணம் அஜய் தன் மாலையை கழட்டி வைத்துவிட்டு கீழே இறங்கி பிரதாப்புடன் செல்ல கூட்டத்தில் ஒரே சலசலப்பு ஏற்ப்பட்டது. 

 

அஜய்யின் தாய் அவனை வந்து தடுத்து நிறுத்தி “எங்கே டா போற” என்று கேட்க “அம்மா ஒரு அவசர வேலை நீங்க பார்த்துக்கங்க நான் போயே ஆகனும்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். 

 

அஜய் தன் காரை எடுத்து கொண்டு கிளம்ப போக பிரதாப் அவருடன் காரில் ஏற வர “பிரதாப் நீ இங்கேயே இருந்து எல்லாத்தையும் கவனி நான் மட்டும் போய்ட்டு வரேன்” என்றவன் காரை வேகமாக ஒட்டி சென்றான் 

ஏனோ அவனின் மனம் படபடவென அடித்துக் கொண்டது பதட்டத்துடன் காரை ஓட்டிச் சென்றவன் எதிரே வந்த பைக்கில் மோதி விட அந்த பைக்காரன் அவனை வாய்க்கு வந்தபடி திட்ட அதை காதில் கூட வாங்காமல் அவசரமாக அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்றான். 

 

அவன் காரிலிருந்து கீழே இறங்கி லிப்டின் வழியாக மேலே வந்தவன் தன் வீட்டின் கதவை திறந்து செல்ல சோர்வுடன் சோபாவில் அமர்ந்து இருந்தாள் மல்லிகா. 

 

அவளின் பக்கத்தில் செல்வி நின்றிருந்தார் அஜய் உள்ளே ஓடி வந்தவன் மல்லிகாவை பார்த்தவுடன் ஓடி வந்து அவளை இறுக அணைத்து கொண்டான். 

 

செல்வி அதற்க்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தயங்கி அங்கிருந்து தன் பையை எடுத்து கொண்டு வெளியே சென்றுவிட்டார். 

 

அஜய் அவளை விடாமல் இன்னும் இன்னும் இறுக அணைத்து கொண்டே இருந்தவன் “பார்த்து கவனமா இருக்க வேண்டாமா டி” என்று கூற மல்லிகா அவனை அணைக்கவேயில்லை கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தாள். 

 

அஜய் அவள் உடல் அழுகையில் குலுங்குவதை பார்த்து அவளிடமிருந்து விலகியவன் 

அவள் அழுவதை பார்த்து அவளின் கண்ணீரை துடைத்தான் 

“அழாத அதான் நான் வந்துட்டனே” என்க “என்ன வந்துட்டனே நல்லா என்னை ஏமாத்திட்டு நல்லவரு மாதிரி நடிக்காதிங்க” என்றாள் முகத்தை திருப்பி கொண்டு. 

 

“வாட் நான் நடிக்கிறேனா நீ என்ன சொல்ற” என்று அஜய் அதிர்ச்சியுடனே கேட்க

“ஆமா நீங்க நடிக்கிறிங்க தான் எனக்கு துரோகம் பண்ணிட்டு இப்போ வேற ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணிட்டு வந்துருக்கிங்க” என்றாள் அழுகையுடனே. 

 

“ஏய் உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு நான் என்ன உன்னை ஏமாத்துனேன் நான் இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணினா உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்டான். 

 

“நான் உங்களை காதலிக்கிறேன் எனக்கு நீங்க வேணும் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்” என்று அவள் கூறி முடிக்கும் முன்னே அவளின் கன்னத்தில் ஓங்கி பளார் என ஒரு அறைவிட்டான் அஜய். 

 

“யாரு யாரை கல்யாணம் பண்ணிக்கிறது என்னை கல்யாணம் பண்ண உனக்கு என்ன டி தகுதி இருக்கு கேவலம் ஒரு விபச்சாரி நீ என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறியா என்னை சொல்லனும் நாயை குளிப்பாட்டி நடு வீட்ல வச்சா அதோட புத்தி இப்படி தான போகும்” என்றான் கோபத்துடன். 

 

மல்லிகா தன் கன்னத்தில் கை வைத்து கொண்டு அழுது கொண்டே 

“நான் ஒன்னும் விபச்சாரி இல்லை உங்க கூட மட்டும் தான் அந்த மாதிரி இருந்துருக்கேன் இனிமேலும் நீங்க மட்டும் தான் உங்களுக்கும் என்னை பிடிக்கும் தான எனக்கு தெரியும்” என்றாள்

“எனக்கு இப்பவும் உன்னை பிடிக்கும் தான் இல்லைன்னு சொல்ல மாட்டேன் அதுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்னை பொறுத்த வரை ஒரு கோடி ரூபா கொடுத்து வாங்கிட்டு வந்து பொருள் நீ அவ்வளவு தான் ஜஸ்ட் செக்ஸ் டாய் அவ்வளவு தான்” என்றான். 

 

“அப்போ என் மேல பாசமா இருக்க மாதிரி நடிச்சிங்களா என் மேல காதலே இல்லாம தான் என்னை தொட்டிங்களா” என்று கேட்டாள் 

“காதல் வேற காமம் வேற நீ ரெண்டையும் தப்பா புரிஞ்சிட்டு இருக்க மல்லிகா 

ஒருத்தர் கூட ஒன்னா இருக்கனும்ன்னா காதல் இருக்கனும்ன்னு அவசியம் இல்லை நான் இந்த சொசைட்டில எவ்வளவு பெரிய இடத்துல இருக்கேன்னு தெரியுமா உனக்கு,

உனக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது நீ வேற நான் வேற” என்க. 

 

“எப்படி எட்டாது நான் உங்களை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் நீங்க இல்லைன்னா செத்துடுவேன்” என்றாள் அழுது கொண்டே

“உன்னை போய் பார்க்க வந்தேன் பாரு என்னை சொல்லனும்” என்று அங்கிருந்து எழுந்து போக மல்லிகா அவனின் கையை பிடித்து கொண்டாள். 

 

அஜய்க்கு அவளின் செயலில் தலையே வலித்தது என்ன செய்வது என்று புரியாமல் தவித்தவன் தான் புதிதாக வாங்கி இருந்த மொபைலை எடுத்து ரோசிக்கு அழைத்தான் “ஹலோ நான் அஜய் பேசுறேன் அக்ரிமென்ட்டை முடிச்சிக்கலாம் உங்க பொண்ணை கூட்டிட்டு வரேன்” என்று கூறியவன் அவள் கையில் இருந்த தன் கையை எடுத்துவிட்டு படுக்கை அறையின் உள்ளே இருந்த அக்ரிமென்ட் அவளின் பையை எடுத்து கொண்டு வெளியே வந்தான். 

 

மல்லிகாவின் அருகில் வந்தவன் 

“மல்லிகா உன் வயசு அப்படி உனக்கு இப்போ யாரை பார்த்தாலும் லவ் பண்ண தான் தோனும் உனக்கு என் மேல இருக்குறது ஜஸ்ட் அட்ராக்ஷன் தான், இந்தா இந்த பணத்தை வச்சிக்கோ இப்போ உங்க வீட்டுக்கு கிளம்பலாம்” என்று அவள் கையில் கொடுக்க. 

 

மல்லிகா அந்த பணத்தை தன் கையில் வாங்காமல் “நான் உங்க கூட காதலோட தான் இருந்தேன் எனக்கு உங்க கூட இருந்த அந்த கொஞ்ச நாட்களே போதும் பணமெல்லாம் வேண்டாம் கிளம்பலாம் நான் எங்க வீட்டுக்கு போறேன்” என்று கூறினாள் மனதை திடப்படுத்தி கொண்டு. 

 

“ஓகே” என்ற அஜய் அவளிடம் எதுவும் பேசவில்லை காரில் கூட மல்லிகா அழுதுகொண்டே தான் வந்தாள். 

 

அஜய்யின் மனதில் ‘சின்ன பொண்ணு போக போக வாழ்க்கை என்னன்னு புரிஞ்சிப்பா’ என்று நினைத்தான் மல்லிகாவின் மனதில் தன்னையே வேண்டாம் என்று கூறுபவன் தன் குழந்தையை மட்டும் ஏற்றுக்கொள்ளவா போகிறான் என்று நினைத்து அவனிடம் அதைப் பற்றி கூறவேயில்லை. 

 

ஒரு மணி நேர பயணத்துக்கு பின் இருவரும் நகரின் ஒதுக்கு புறத்தில் இருந்த ரோசியின் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தனர் அஜய் கீழே இறங்கி செல்ல அவனுடன் மல்லிகாவும் மனமே இல்லாமல் அழுத விழிகளுடன் இறங்கி வந்தாள். 

 

ரோசி அஜய்யை பார்த்தவுடன் வாயெல்லாம் பல்லாக “வாங்க சார் உள்ளே வாங்க” என்று அவனை அழைத்து சென்றார் அவனும் ஒரு சிறு தலை அசைப்புடன் அவருடன் சென்றான். 

 

அவன் உள்ளே வருவதை பார்த்த பெண்கள் கூட்டம் மொத்தமும் அங்கே வந்து அவனை பார்த்து ரசித்தது அஜய் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருக்க மல்லிகா தன் அறைக்கு சென்றுவிட்டாள். 

 

அவளின் உதாசீனத்தில் கோபமடைந்தவன் எழுந்து நின்று “நான் வரேங்க” என்று கூற 

“அய்யோ அதுக்குள்ள கிளம்பும் காபி சாப்பிட்டு போங்க சார்” என்றார் ரோசி இளித்து கொண்டு. 

 

“இட்ஸ் ஓகே டைம் இல்லை” என்று அவன் அங்கிருந்து கிளம்பினான்

“அடிக்கடி வாங்க சார்” என்று ரோசி கத்தி கூற அவன் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து காரில் ஏறி சென்றுவிட்டான். 

 

மல்லிகா அவனை தன் அறையின் ஜன்னல் வழியாக பார்த்தவள் அழுது கொண்டே நின்றிருந்தாள். 

 

காரில் சென்று கொண்டிருந்த அஜய்க்கு அவ்வளவு கோபம் வந்தது 

“எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே கண்டுக்காம போவாள் காதாலாம் கத்திரிக்காயாம் இந்த பொண்ணுங்களையே நம்ப கூடாது” என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டே அங்கிருந்து சென்றான். 

 

அவன் வீட்டிற்க்கு வந்து சேர அவனின் தந்தை அஜய்யின் அருகில் வந்தவர் “அஜய் எங்க அவ்வளவு அவசரமா போன அந்த பொண்ணு முகமே வாடி போச்சு” என்றார். 

 

“ஒரு முக்கியமான வேலை பா” என்று எரிச்சலுடன் கூறியவன் தன் அறைக்கு சென்றுவிட்டான் அடுத்த வந்த நாட்களில் திருமண வேலைகள் அனைத்தும் தடபுடலாக நடைபெற ஆரம்பித்தது ஏனோ அந்த திருமணத்தில் அஜய்க்கு விருப்பமே இல்லை அவன் திருமணம் செய்ய போகும் பெண்ணிடம் பேச கூட அவனுக்கு தோன்றவில்லை நிம்மதியே இல்லாமல் அலைந்து கொண்டிருந்தான் முன்பு இருந்த அமைதி இப்போது அவன் மனதில் இல்லை. 

 

ஒருநாள் இரவு வேளையில் அவன் வீட்டுக்கு வரும் போது “அஜய் உனக்கு இந்த டிரஸ் ஓகேவான்னு பாரு” என்றார் அவனின் தாய் 

அஜய் அவரின் பக்கத்தில் சோர்வுடன் அமர்ந்தவன் “அம்மா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை பிளீஸ் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க” என்றான். 

 

அதை கேட்ட லதா அதிர்வுடன் அவனை பார்த்தவர் “ஊர்ல எல்லாருக்கும் பத்திரிகை வச்சாச்சு டா இப்போ போய் இப்படி சொன்னா என்ன பண்றது இந்த கல்யாணம் மட்டும் நின்னா வெளியே தலை காட்ட முடியாது டா” என்று அழுது கொண்டே கூற. 

 

அஜய் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன் எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டான் திருமண நாளும் வந்தது அஜய் மணமேடையில் அமர்ந்திருக்க அவன் பக்கத்தில் மணக்கோலத்தில் அனிதா அமர்ந்திருந்தாள். 

 

ஐயர் அஜய்யின் கையில் தாலியை எடுத்து கொடுத்தவர் “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று குரல் கொடுக்க 

அஜய் தாலியை பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தான் “கட்டுடா அஜய்” என்று அவன் தாய் குரல் கொடுக்க அஜய் தாலியை கட்டாமல் தன் கையில் இருந்த தாலியை தூக்கி எறிந்தான். 

 

“சாரி மா சாரி பா எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்லை எனக்கு கல்யாணமே வேண்டாம் நான் இப்படியே இருந்துக்குறேன்” என்றவன் அங்கிருந்த யாரையும் கண்டு கொள்ளாமல் விறுவிறுவென கீழே இறங்கி சென்றான். 

 

மணப்பெண் அழுக ஆரம்பிக்க அங்கிருந்து கூட்டத்தில் ஒரே சலசலப்பு ஏற்ப்பட்டது அஜய் தன் காரை எடுத்து கொண்டு சென்றவன் தன் அப்பார்ட்மென்ட்டுக்கு சென்று படுக்கையில் விழுந்தான். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

5 thoughts on “என் வினோதனே 15”

Leave a Reply to Babubuvana 1982@gmail.com Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top