ATM Tamil Romantic Novels

என்னை உனக்குள் தொலைத்தேனடி

 

 

அத்தியாயம் – 5

 

 

வள்ளியை காரில் ஏற்றி செல்வதை பார்த்த கலை அதிர்ச்சியில் இருந்து சட்டென்று தெளிந்து நேராக சென்று நின்றது அவளது டிபார்ட்மெண்ட் ஹச்.ஓ.டி யை தான் தேடி சென்றாள்.

 

 

வேகமாக மூச்சு வாங்க வந்து தன் முன்னால் நிற்கும் மாணவியை பார்த்து ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டார்.

 

 

“என்னம்மா ஆச்சு ஏன் இப்படி ஓடி வர” என்று கேட்க

 

 

“சார் சார் நான் சி.எஸ் இரண்டாவது வருஷம் படிக்கிறேன் சார் என்னோட பேரு கலையரசி என்னோட பிரண்டு பெயர் வள்ளி நானும் என்னோட பிரண்டும் காலேஜ் ஹாஸ்டல் போயிட்டு இருக்கும் போது கிரவுண்டில் அங்க எம்பி ஓட பையன் ராக்கேஷ் வந்து என் பிரண்டை பிடித்து காருக்குள்ள இழுத்து போட்டுட்டு போயிட்டான் சார் என்ன பண்றதுன்னு தெரியல அதான் உங்களை பார்க்க வந்தேன்” என்று பதட்டமாக கூறினாள்.

 

 

“ என்னம்மா சொல்ற எப்ப நடந்துச்சு” 

 

“இப்பதான் சார் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி நேரா உங்கள பாத்து சொல்லலாம்னு தான் வந்தேன்” 

 

“சரிம்மா, இப்ப பேச டைம் இல்ல சீக்கிரம் வா நாம பிரின்ஸ்பால் பார்த்து சொல்லுவோம்” என்று வேகமாக அவரை பார்க்க கூட்டிக் கொண்டு சென்றார். 

 

 

பிரின்ஸ்பால் ரூமிற்கு சென்று அவரிடம் அனைத்து தகவல்களையும் கூற கேட்டுக்கொண்டவர் நேரடியாக எம்.பி கே அழைத்து விட்டார்.

 

 

“ சார் நான் உங்க பையன் படிக்கிற காலேஜ் பிரின்சிபால் பேசுறேன் உங்க பையன் காலேஜ்ல வைச்சு ஒரு பொண்ணை கூட்டிட்டு போயிட்டான் சார்

 

 

அந்த பொண்ணு மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பொண்ணு இப்ப அந்த பொண்ணோட பிரண்டும் எச்.ஓ.டியும் வந்து கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க சூழ்நிலை சரியில்லை சார்” என்று கூறவும்

 

 

அந்தப் பக்கம் என்ன கூறப்பட்டதோ பிரின்ஸ்பால் சரி என்று கூறி உடனே போனை வைத்து விட்டார். 

 

 

என்னவென்று பார்த்துக் கொண்டிருந்த ஹெச் ஓ டி யும் கலையும் ஒன்றும் புரியாமல் பார்க்க அதைப் பார்த்தவர் இவர்கள் இருவரிடமும் கூற ஆரம்பித்தார்.

 

 

“சார் வரவர அந்த ராகேஷ் ஓட தொல்லை ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு அது இப்ப பொண்ணா காலேஜ்ல வச்சு கூட்டிட்டு போற அளவுக்கு ஆயிட்டதனால நான் நேரா அவங்க அப்பாக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் அவர் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிட்டாரு அரை மணி நேரத்துல அந்த பொண்ணு ஹாஸ்டலுக்கு வந்துடும் நீங்க கவலைப்படாம போங்க சார்” என்று கூறினார்.

 

 

“சார் நான் கேட்கிறேன் என்ன தப்பா நினைச்சுக்காதீங்க இதுக்கு ஒரு முடிவே இல்லையா இந்த மாதிரி அக்கிரமம் பண்றான்”

 

 

“என்ன சார் பண்றது காசு இருக்கு காலேஜும் அவங்க அப்பாவோட ஷேர் தான் அதிகமா இருக்கு அதனால அவங்க சொல்றத தான் நாம கேட்கிற மாதிரி ஆயிடுது” என்று வருத்துடன் கூறினார்.

 

 

“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார் அவங்க அப்பா பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாரு எலக்சன் வேற வருது ஏதும் தப்பா நடக்காது என்று நம்புகிறேன்”

 

 

“எனக்கு புரியுது சார் அவனை காலேஜ் விட்டு அனுப்ப முடியாதா” என்று ஹெச் ஓ டி கேட்க

 

“அவங்க அப்பா ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுக்குறாரு இந்த ஒரு டிகிரியை மட்டும் அவன் முடிச்சுட்டு வெளியில் வந்துரட்டும் என்று என்னாலையும் ஒன்னும் பண்ண முடியல சார்”

 

 

“சரி சார் இப்ப அந்த பொண்ணு வந்துரும் இல்ல வேற எந்த பிரச்சனையும் வராது இல்ல” என்று கொஞ்சம் கோபத்துடன் கேட்க 

 

 

“ஒன்னும் ஆகாது சார் தைரியமா போங்க அரை மணி நேரத்துல வரலனா நீ வந்து என்கிட்ட சொல்லு மா நான் உடனே உன்னையும் கூப்பிட்டுக்கிட்டே அவங்க வீட்டுக்கு போய் விடுவோம்” என்று நம்பிக்கை அளித்து அனுப்பிவைத்தார்.

 

 

“ சரி” என்று கூறி இருவரும் வெளியே சென்றனர்.

 

 

“ நீ ஒன்னும் கவலைப்படாதம்மா என்னோட நம்பர் தரேன் வச்சுக்கோ வள்ளி காலேஜுக்கு வந்த உடனே எனக்கு போன் பண்ணு வரலைன்னாலும் எனக்கு உடனே தகவல் சொல்லுமா அடுத்து என்னன்றத நம்ம பார்ப்போம்” என்று கூறி சென்றார்.

 

 

கலையரசியும் மிகுந்த வருத்தத்துடன் வள்ளி இல்லாமல் ஹாஸ்டல் செல்ல விருப்பம் இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தவள் அங்கிருந்த கிரவுண்டில் கல்பெஞ்சில் அப்படியே சோர்வுடன் அமர்ந்து விட்டாள். 

 

 

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தால் என்று தெரியவில்லை சுத்தியும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்க திடீரென்று எங்கிருந்தோ வந்த கார் சற்றென்று நின்று ஒரு நிமிடத்தில் வள்ளியை இழுத்து கீழே தள்ளிவிட்டு அதே வேகத்தில் சென்று விட்டது.

 

 

வள்ளி கீழே விழுந்த சத்தத்தில் அங்கேயே கல்பெஞ்சில் அமர்ந்திருந்த கலையரசி தனது யோசனையிலிருந்து கலைந்தவள்.

 

 

சத்தம் வந்த இடத்தை பார்க்க அங்கே வள்ளி கீழே விழுந்து கிடந்தாள் உடனே எழுந்து வேகமாக அவளிடம் சென்று என்னவென்று பார்க்க அங்கே மயங்கிய நிலையிலேயே வள்ளி கீழே கிடந்தாள்.

 

 

சற்றென்று அங்கிருந்து ஓடி தனது பேக்கில் வைத்திருந்த வாட்டர் பாட்டில் எடுத்து அவளது முகத்தில் நன்றாக தண்ணீர் அடித்து எழுப்பினாள்.

 

 

தண்ணீர் தெளித்ததில் சுயநினைவிற்கு வந்த வள்ளி சிறிது நேரத்தில் எழுந்து அமர்ந்தாள்.

 

 

அவள் எழுந்து அமரவும் சிறிது ஆஸ்வாசமடைந்த கலை கண்கள் எல்லாம் கலங்கி கண்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது. 

 

 

எழுந்து அமர்ந்தவள் என்ன நினைத்தாலோ எதிரே அமர்ந்து இருந்த கலையை கட்டிக்கொண்டு அப்படி ஒரு அழுகை அழுக ஆரம்பித்து விட்டாள் இருவரும் அழுது ஓய்ந்து தங்களை தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தனர்.

 

 

அப்பொழுதுதான் கலையரசிக்கு என்ன நடந்தது என்று கேட்கவே இல்லையே என்று தோணியவுடன் வள்ளியை பார்த்து 

 

“ என்னாச்சு வள்ளி என் கூட தானே நடந்து வந்துட்டு இருந்தே திடீர்னு ராகேஷ் ஏன் அப்படி கார்ல இழுத்துட்டு போனான் என்ன நடந்துச்சு திடீர்னு இங்க வந்து கீழ தூக்கி போட்டுட்டு போறாங்க?” என்றாள் கேள்வியாக

 

 

கலை கேட்கவும் மீண்டும் அதை நினைத்துப் பார்த்தவள் உதடுகள் துடிக்க உடம்பு நடுங்க கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் சுரக்க ஆரம்பித்து விட்டது.

 

 

 அதை துடைத்துக் கொண்டே “எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியல கலை திடீர்னு என்ன காருக்குள்ள புடிச்சு இழுத்து போட்ட அந்த ராகேஷ் நான் கத்த ஆரம்பிக்கிறதுக்குள்ள என்னோட முகத்துல ஒரு ஸ்பிரேய அடிச்சிட்டான் அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல என் முகத்தில் தண்ணீர் தெளித்ததற்கு அப்புறம் தான் எனக்கு சுயநினைவே வந்தது” என்றாள்.

 

 

வள்ளி கூறியதை கேட்டவுடன் கலைக்கு பக் என்று ஆகிவிட்டது பின் அவளை காரில் இழுத்து செல்லவும் தான் ஹச் .ஓ.டி பார்த்ததும் அவர் தன்னை பிரின்சிபால் பார்க்க அழைத்து சென்றது அதன் பின் நடந்தது என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினாள்.

 

 

அதைக் கேட்ட வள்ளிக்கு எப்படி இதை எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை ஆனால் இந்த சம்பவத்திலிருந்து கலை ஒரு தீர்கமான முடிவை எடுத்து இருந்தாள் அதை அவளிடம் கூறவும் செய்தாள்.

 

 

“ வள்ளி நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத உனக்கு கார்டியனாக இருக்க அமலா டீச்சர் ஐயும் உன்னோட மாமா பரமுவையும் உடனே போன் பண்ணி கூப்பிட்டு இப்ப நடந்ததை சொல்லிடு அதுதான் நாளைக்கு உனக்கு சேப்டியா இருக்கும்” என்று கூறினாள்.

 

 

“ இல்ல கலை அதை மட்டும் நான் செய்யமாட்டேன் உனக்கு தான் நான் நடந்த கதை எல்லாத்தையுமே சொன்னேன்ல அதையும் மீறி எப்படி நான் அவுங்களை கஷ்டப்படுத்த முடியும் நான் கூப்பிட்டா உடனே வந்துருவாங்க தான் எவ்வளவு தான் அவங்களையும் நான் தொந்தரவு செய்ய முடியும் இந்த விஷயத்தை நானேதான் சமாளிச்சு ஆகணும் வேற வழியும் எனக்கு இல்ல எனக்கு தான் யாரும் இல்லையே” என்று கண்ணீருடன் சொல்ல 

 

 

இதைப்பற்றி கலைக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை ஆனால் அவளிடம் கட்டாயபடுத்தியாவது சொல்லி இருக்கலாம் இல்லை என்றாள் தானாவது அவர்களது போன் நம்பரை கண்டுபிடித்து சொல்லியிருக்க வேண்டும் என்று பின்னாளில் வருந்த போவது தெரியாமல் இப்போது அவள் கூறுவதற்கு அமைதியாக இருந்தாள்.

 

 

பின் இருவரும் தங்களை தேற்றிக்கொண்டு ஹாஸ்டலுக்கு சென்றனர் அங்கு சென்றதும் முதல் வேலையாக கலை தனது ஃபோனில் இருந்து ஹெச்.டிக்கு அழைத்து வள்ளி வந்து விட்டாதாக கூறினாள்.

 

 

அவரும் இனி மிகவும் கவனமாக இருக்குமாறு வள்ளியிடமும் கூறி கலையரசியிடமும் அவளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறியே போனை வைத்தார்.

 

 

இந்த பயத்திலேயே வள்ளிக்கு மறுநாளே நன்கு காய்ச்சல் கண்டுவிட ஒரு வாரம் காலேஜ் இருக்கு செல்லாமல் ஹாஸ்டலில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டாள்.

 

 

காய்ச்சலால் எடுத்துக்கொண்ட லீவு முடியவும் அன்றைய நாள் பயந்து கொண்டே கல்லூரிக்கு செல்ல அங்கு அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறாமல் இருக்க கொஞ்சம் தைரியம் வரப்பெற்றவள் இருந்தாலும் தானும் கவனமாக இருக்கும் பொருட்டு அவள் ஹாஸ்டல் விட்டால் நேராக கிளாஸ்சுக்கு வருவதும் காலேஜ் முடிந்த உடனே முதல் நாளாக ஹாஸ்டல் ரூமில் சென்று அடைந்து கொள்வதுமாக இருந்து கொண்டிருந்தாள்.

 

 

 ஒரு மாதம் இப்படியே செல்ல அடுத்த கொஞ்ச நாட்களிலே இரண்டாம் வருட செமஸ்டர் வருவதால் அதை அப்படியே முடித்துக் கொண்டு இந்த வருடம் லீவுக்கு ஊருக்கு செல்லும் முடிவை எடுத்துக் கொண்டாள்.

 

 

அப்படியே சென்று இருந்தால் வள்ளிக்கும் பெரிதும் பாதிப்பு ஏற்படாமல் இருந்திருக்குமோ என்னவோ ? ஆனால் விதி வள்ளியை இன்னும் கொஞ்சம் கஷ்டத்தை வைத்து செய்ய நினைத்து விட்டதவோ? 

 

 

கிரவுண்டில் அழகருக்கும் ராகேஷுக்கும் நடுவில் நடக்கும் சண்டையில் அனாவசியமாக வள்ளி சென்று சிக்கி கொண்டாள்.

 

 

கலையரசி தனது தோழிக்கு நல்ல முடிவை

எடுக்கும் பொருட்டு ஒரு செயல் செய்ய அது வள்ளியை பெரும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்படி ஆக்கிவிட்டது.

 

கமெண்ட் பீளிஸ் நட்புகளே

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “என்னை உனக்குள் தொலைத்தேனடி”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top