அத்தியாயம் 22
ஆதவன் மறுநாள் சீக்கிரமே எழுந் தவன் கடைக்கு சென்று விட்டான் காலை எழுந்த தனம் ஆதவனை தேடினார். அவன் இல்லை ஃபோன் பண்ணிப் பார்த்தார் அவன் எடுக் கவும் இல்லை
உதயனிடம் ஏம்பா உதயா ஆதவன பார்த்த காலையிலேயே என்கிட்ட சொல்லாம,எங்கேயும் போக மாட் டான். நேத்து நைட்டும் என் கையா ல சாப்பிடவும் இல்ல
இன்னைக்கும் காலைல எதுவும் சொல்லிக்காம போயிட்டான் உன் கிட்ட ஏதாச்சும் சொன்னானா என கேட்டார்
உதயன் இல்லம்மா என்கிட்ட எது வும் சொல்லலையே காலையிலிரு ந்து நானும் அவன பாக்கலையே என அவனும் சென்று விட்டான்
இங்கே கடைக்கு வந்த ஆதவன் தி ருவை அழைத்து எல்லாவற்றையு ம் கூறினான் தெருவுக்கு மிகவும் ம கிழ்ச்சி. திரு மச்சான் ரொம்ப சந் தோஷமா இருக்கு மச்சான் நீ சொல் றத கேக்குறப்ப, சரி வா இப்ப வீடு தேட ஆரம்பிச்சா தான் நாளைக்கு ள்ள கிடைக்கும்
என்றவன், இருவரும் சேர்ந்து வாட கைக்கு வீடு தேட ஆரம்பித்தனர் ஆனால் லீசுக்கே வீடு கிடைத்துவி ட்டது. வீடும் பிடித்திருந்தது. உட னே பணத்தை கொடுத்து விட்டா ன் ஆதவன்
அன்று மாலை தேனு மின் வீட்டுக் கு சென்றவன் வீடு கிடைத்து விட் டது என்ற செய்தியை கூறியவன் நாளைக்கு கிளம்பலாம் என கூறி விட்டு வீடு வந்து சேர்ந்தான்
வீடு, புதிதாக வாங்கியிருக்கும் க டைக்கு பின்புறமே கிடைத்து விட் டதால் மிகவும் சந்தோஷம் அடைந் தான்
அன்று, வெள்ளிக்கிழமை என்ப தால் காலையிலேயே வீட்டில் குடும் பமாக சேர்ந்து பால் காய்ச்சி விட்ட னர்.ரவி, ஆரா,திரு,கனகா வந்திரு ந்தனர் பின் வீட்டில் போய் எல்லா பொருட்களையும் எடுத்துக்கொ ண்டு மொத்தமாக இங்கு வந்து விட் டனர்
ஆதவன் மற்ற வீட்டு உபயோகப் பொருட்களை வேண்டாம் என்று மறுத்தான். ஆனால் ரவியும் ஆரா வும், என் தங்கைக்காக நாங்கள் கொடுத்த சீராக இருக்கட்டும் என அதையும் வீட்டில் இறக்கினர்
இங்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்ட து ஆதவன் கடை வேலை முடித்து மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்து வி டுவான். வந்ததும் குழந்தையை தூ க்கி கொள்வான் எத்தனை நாள் ஆசை அவனுக்கு
கடையில் இருந்து வரும்போது தே னுவுக்கும் குழந்தைக்கும் ஏதாவது வாங்காமல் வீட்டிற்கு வர மாட்டா ன்
ஒரு மாதம் கடந்திருந்தது தேவை க்கு பேசிக்கொள்வார்களே தவிர்த் து பெரிதாக ஒரு மாற்றமும் இல் லை அவர்களுக்கிடையே
ஆதவனும் சிறிது நாள் போகட்டும் என விட்டு விட்டான் அவளை தொந்தரவு செய்யவில்லை
முதலில் அவள் வாங்கி கொடுப்ப தை வேண்டாம் என்று மறுத்தவள் ஒரு சில நாட்களுக்கு பிறகு அவன் ஏக்கமான பார்வையிலும் காதல் பார்வையிலும், அவன் வாங்கி கொடுத்ததை வாங்கிக் கொ ண்டா ள் ஆதவனுக்கு சந்தோஷம்
தன் வீட்டிலிருந்து தன் உடைமை களை சிறிது சிறிதாக கொண்டு வ ந்து இங்கேயே வைத்து விட்டான். வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அவன் கடையிலி ருந்து வந்து விடும்
அவளையும் பிள்ளையும் நன்றா க கவனித்துக் கொண்டான். வாரத் தில் இருமுறை வெளியே கூட்டி செ ன்றான். கோவில் பார்க் , சினிமா என அழைத்து சென்று வந்தான்
மதியம் சாப்பாட்டிற்கு இங்கு வந்து விடுவான். தனம் கால் செய்து கேட் டால் கடையிலேயே சாப்பிட்டுவிட் டேன். இரவு வருகிறேன் என்று சொ ல்லி வைத்து விடுவான்
மனம் நிறைவாக இருந்தது ஆதவ னுக்கு அன்று கடையிலிருந்து வந் தவன் குழந்தையோடு விளையாடி க்கொண்டிருந்தான். இவள் குனிந் து ஏதோ ஒரு பொருளை எடுத்தா ள்
அப்போது அவள் அணிந்திருந்த தாலி வெளியே வந்து விழுந்தது அதை பார்த்து ஆதவன் என் பொ ண்டாட்டி என சிரித்துக் கொண்டா ன். ஆனால் அவள் மஞ்சள் கயிற் றில் தாலியை கோர்த்திருந்தாள்
அன்று தன் தாய் சொன்னதை ஏன் எதிர்த்து, கேட்கவில்லை என தோ ன்றியது அவளுக்கு தங்கத் தாலி வாங்கி போட ஆசைப்பட்டான்
இரண்டு வாரங்கள் சென்றிருந்த து. அன்று அவன் குடிபோன வீட்டி ல் அவனின் இது அண்ணன்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர் அவ ர்களை வரவேற்று உபசரித்தாள்.
நந்தினி கோமதி தேனுவிடும் சக ஜமாக பேசினார்கள் இத்தனை நா ள் பேசாமல் இருந்ததற்கு மன்னிப் பு கேட்டார்கள் தேனும் பெருந்தன் மையுடன் அதை ஏற்றுக் கொண் டாள்
தேன்மதுரா சிறிதுநேரத்தில் திருவு ம் கனகாவும் வந்தனர் அவர்களை அடுத்து, ஆராவும் ரவியும் கை நி றைய பொருட்களுடன் உள்ளே நுழைந்தனர்
ஏனோ இவர்களைப் பார்த்து ஆச் சரியப்பட்டவள் என்ன எல்லாரும் ஒன்னா வந்திருக்காங்க யாருக்கா ச்சும் பர்த்டேவா இல்லன்னா கல் யாண நாளா என்ன விசேஷங்க எ ன கேட்டால் அனைவரும் சிரித்த னர்
ரவி ஆரு நீ போய் அவ கிட்ட பேசி ட்டு ரெடி பண்ணி கூட்டிட்டு வா எ ன்றான். ஆருவும், சரி என தலை யாட்டியவள் தேனுவை அழைத்து க் கொண்டு அறைக்குச் சென்றா ள்
அதற்குள் மற்ற மூன்று பெண்களு ம் மற்ற வேலைகளை பார்த்தனர் அறையில் தேனு அண்ணி என்ன விஷயம் எல்லாரும் எதுக்கு வந்து இருக்கீங்க என்ன மட்டும் ஏன் அழ ச்சிட்டு வந்து இருக்கீங்க என கேட் டாள்
ஆரா சிரித்துக்கொண்டே அவள் வாயைப் பொத்தியவள் கேள்வி கேட்டு முடிச்சாச்சா பதில் வெளியே போனா தெரிஞ்சிடும் சரியா இப்ப போய் முகம் கழுவிட்டு வா இல்ல இல்ல குளிச்சிட்டு வந்துடு என்றா ள்
தேனுவும் என்னவென்று புரியாம ல் குளித்து வந்தாள், பின் அவள் கொடுத்த புடவையை அணிந்து கொண்டாள்.பின் ஆதவன் கொடு த்ததாக சொல்லி, செயின் கம்மல் வளையல் என அவளிடம் கொடுத் து அணிய சொன்னாள் அவளும் அணிந்து கொண்டாள்
அதன் பிறகு ஆரா அவளுக்கு த லைவாரி பூ வைத்தாள்.. அவளை அலங்கரித்து வெளியே அழைத்து வந்தாள்.ஆதவனின் கண்கள் அ வளை மொய்த்தன அவள் அழகி ல் மயங்கி நின்றான் ஆதவன் யார் கூப்பிட்டும் கேட்கவில்லை
அவளை சாமி சன்னிதானத்திற்கு முன் அமர வைத்து தாலியை கயி றை மாற்றி தங்கத் தாலி ஆதவனி ன் கைகளால் அணிய வைத்தனர்
ஆதவன் அவள் கழுத்தில் தாலி அ ணிவித்தவன் தாலியிலும் நெற்றி வகுட்டிலும் குங்குமம் வைத்து விட் டான் தேன் மதுராவின் கண்கள் கலங்கிவிட்டது ஆதவன் அவள் கண்ணீரை துடைத்தவன் அழாத டி
இனி உன் கண்ணில் இருந்து கண் ணீரை, பார்க்க கூடாது சரியா தே னுமா என்றான். அவளும் சரி என சிரித்துக் கொண்டே தலையாட்டி னாள்
ஆதவன் அவன் நெற்றியில் ஆசை யுடன் முத்தமிட்டான்.தேனு மகிழ்ச் சியுடன் ஏற்றுக் கொண்டாள் பின் அனைவரும் சாப்பிட்டு மாலை தான் கிளம்பினார்கள்
அவர்கள் அனைவரும் போனதும் ஆதவன் அறையில் அமர்ந்திருந் தான். பிள்ளை உறங்கிக் கொண்டி ருந்தது. ஆதவன் செலவு கணக்கு களை பார்த்துக் கொண்டிருந்தான்
அவன் இங்கு வந்ததிலிருந்து தன் னையும் பிள்ளையும் எப்படி கவ னித்துக் கொள்கிறான் என்று பார் த்துக் கொண்டுதான் இருக்கிறாள்
தேவைக்கு முன்பாகவே வாங்கி குவித்து விடுகிறான். தன் தேவை யை அவளிடம் கேட்பதில்லை.
அவனே செய்து கொள்கிறான் அ தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள்
இன்று சோர்வுடன் அசதியாக கை காலை அசைத்து இடுப்பை பிடித் து நெட்டி முறிப்பதுமாக அமர்ந்தி ருந்தான் ஆதவன்.. ஏனோ அவளு க்கு உன்னை பார்க்க கஷ்டமாக இருந்தது.
அவனுக்கு என்ன வேணும் என கேட்டு உதவி செய்ய மனம் ஆவல் கொண்டது
தேனு அவன் அருகில் சென்றவள் ரொம்ப சோர்வா தெரியுறீங்க எடுத் து வச்சுட்டு நாளைக்கு பார்க்கலா ம் இல்ல என்றாள்
ஆதவன் இல்ல தேனு கொஞ்சம் தா ன் இருக்கு முடிஞ்சிடும் என தலை யை பிடித்தான்
தேனு என்னங்க தலை வலிக்குதா என்றாள். ஆதவன் ஆமா தேனு கா லையிலிருந்து வேலை ஜாஸ்தி அ தான் தலை மட்டும் இல்ல, உடம்பும் வலிக்குது என்றான் சோர்வாக
தேனு உடனே நான் வேணா தலை யை பிடித்து விடட்டுமா என்றாள். அவள் அப்படி கேட்டதும் ஆதவன் அதிர்ந்து அவள் முகம் பார்த்தான்
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Dhanam onnum sayilaya douta ah erukay?
super