அத்தியாயம் 13
“எத்தனை புடவை எடுத்து வச்சிருக்கீங்க?” அவளது கோபம் புடவையை பார்த்ததும் கொஞ்சம் குறைந்துவிட்டது. ராயன் பொண்டாட்டியை சமாதானப்படுத்தும் தாரக மந்திரத்தை அறிந்திருப்பான் போலும்.
“எனக்கு வேண்டியவங்க புது பட்டுப்புடவை ஷோரூம்க்கு அழைப்பு கொடுத்திருந்தாங்க அவங்க கடைக்கு போயிருந்தேன் உனக்கு எடுக்கணும்னு தோணுச்சு எடுத்துட்டேன் அவங்களே ப்ளவுசஸும் தைச்சு கொடுக்குறேன்னு சொன்னாங்க ஓ.கேனு சொல்லி நான் சொன்ன அளவுல இரண்டு மணிநேரத்துல ப்ளவுஸும் தைச்சு கொடுத்துட்டாங்க… நான் புடவை எடுத்தது வீட்டுல யாருக்கும் தெரியாது உனக்கு சர்பிரைஸா கொடுக்கணும்னு தோணுச்சுடி கட்டிட்டு வா” என்று அவளது கையில் பட்டுப்புடவையை கொடுத்துவிட்டு சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான்.
ராயனின் முரட்டுக் காதலில் திக்குமுக்காடிப்போனாள் முல்லைக்கொடி பேச வார்த்தைகள் அவளிடம் இல்லை. ராயன் மேல் காதல் வெள்ளம் பொங்கி வழிந்தது முல்லைக்கொடிக்கு.
“நீங்க முதல் முறை எடுத்துக்கொடுத்த புடவையை கொஞ்ச நேரம்தான் கட்டிக்க முடிஞ்சது தைல எண்ணெய் பட்டு வீணாகிடுச்சு” என்றாள் கவலையான குரலில்.
“இப்ப கட்டுற புடவையில மதியம் வரை என்கூடதான் இருக்கப்போற புடவையை கட்டுமா லேட் ஆகுது” என்றான் மணிக்கட்டை திருப்பி பார்த்தபடியே.
“நீ.நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க நா.நான் புடவை மாத்தணும்ல” என்றாள் கதவை நோக்கி கையை நீட்டி.
“நான் எதுக்கு வெளியே போகணும் உன் புருசன் முன்னாடிதானே புடவை மாத்துற என்கிட்ட என்ன வெட்கம் உனக்கு மாத்துடி” என்றவனோ ஜம்பமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் கன்னத்தில் கைகொடுத்து அவளையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தான்.
“எ.எனக்கு வெட்கமா இருக்கு ப்ளீஸ் பால்கனிக்காவது போங்களேன்” என்று கண்ணைச்சுருக்கி கெஞ்சினாள்.
“இந்த ராயன் முடிவெடுத்துட்டா அந்த முடிவுலயிருந்து மாறமாட்டான் கொடி நீ சேலைய மாத்துமா” என்றான் தலைக்கு மேல் நெட்டி முறித்தபடி.
இப்போதைக்கு அவன் பார்வையை திருப்பமாட்டான் என்று தெரிந்து கண்ணை மூடி திறந்து முதுகுகாட்டி நின்று அவளது ஆடைகளை களைந்து அவசர அவசரமாக ப்ளவுஸின் பட்டன்களை போடவும் “மெதுவாடி பார்த்து பத்திரம் எனக்கு சொந்தமானதுக்கு சேதாரம் ஆகிடப்போகுது” என்றான் ரகசிய குரலில்.
“ரொம்ப கெட்ட பையன் நீங்க சின்னய்யா” என்று சிணுங்கிக் கொண்டு மாராப்பு பின் குத்தும் போது”நான்தான் பின் குத்திவிடுவேன்” என்று அவளது முதுகு பக்கம் வந்து நின்றதும் அவளுக்கு அய்யோடா என்றிருந்தது.
அவனது அனல் மூச்சுக்காற்று அவளது வெற்று முதுகில் பட்டதும் அவளது பூனைமுடிகள் கூட சிலிர்த்து நின்றது. அவளால் இயல்பாக மூச்சே விடமுடியவில்லை.
அவளது செய்கைகளை இரசித்துக்கொண்டே சேலையில் பின்னை குத்தி விட்டு ப்ளவுஸின் நாட்டை மெதுவாய் அவளது முதுகை வருடியபடியே போட்டுவிட்டு அவளது வெற்று முதுகில் அவனது இதழ்களை பதித்தான்.
அவளோ மென்மையான குரலில் “நாம இப்போ வெளியே போறோம் சீக்கிரம்னு என்னை அவசரப்படுத்துனீங்க இப்போ சும்மா சும்மா முத்தம் கொடுக்குறீங்க எ.எனக்கு என்ன என்னமோ பண்ணுது சின்னய்யா” என்று சிணுங்கியவளின் கன்னம் தாங்கியவன்
“கொடி இந்த சின்னய்யா சின்னய்யானு கூப்பிடாதடி ஒரு மாதிரி எனக்கு பிடிக்கவே இல்லை” என்றான் அவளது முகத்தில் விரலால் கோலம் போட்டபடியே.
“வே.வேற எப்படி கூப்பிடறது?” என்றாள் அவனது தொடுகையில் உடலை நெளித்துக்கொண்டு.
“அத்தான், மாமா, மச்சான் எத்தனையோ இருக்கு உனக்கு பிடிச்சதை கூப்பிடுடி” என்றான் அவளது கன்னத்தை லேசாய் கிள்ளிவைத்து.
“அத்தான் வேணாம் மாமாவும் வேணாம் மச்சான் நல்லாயிருக்கு நான் மச்சான்னு கூப்பிடவா?” என கண்ணை அகல விரித்தவள் அவளது உதடு நோக்கிச் சென்ற விரலை பிடித்துக்கொண்டாள்.
“மச்சான் கிக்காத்தான் இருக்கு அப்படியே கூப்பிடு” என்று தலையை ஆட்டியவன்
“இந்த புடவை கலர் உனக்கு செமையா இருக்கு புள்ள” அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
“ஆனா ப்ளவுஸ்தான் கொஞ்சம் லூசா இருக்கு” என்று இதழ் பிதுக்கினாள்.
“இன்னும் பத்து நாளுல கிரிப்பா இருக்கும்” என்றான் இரட்டை அர்த்தத்துடன்.
அவளோ அவனது அந்தரங்க வார்த்தைகள் புரியாது “அது எப்படி பத்து நாளுல கிரிப்பா வரும்?” என்றாள் கண்ணை உருட்டியபடியே.
“ம்ம் நாளைக்கு சொல்லுறேன்” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்துக்கொண்டு.
“மச்சான் சொல்லுங்க” என்றாள் அவனது சட்டைபட்டனை திருகிக் கொண்டு.
அவனோ “சொல்லட்டுமா இல்ல பண்ணிக்காட்டவா?” என்றான் புருவம் தூக்கி குறும்பான பார்வையுடன்.
அவனது வார்த்தையில் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று புரிந்தவள் “இ.ப்போ எதுவும் வேணாம் நாம வெளியே போய்ட்டு வந்து சொல்லுங்க பண்ணுங்க நான் வேண்டாம்னு சொல்லமாட்டேன்” என்று அவனை விட்டு விலகி நின்றாள்.
அவனோ கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லையே என்று வருத்தத்தில் ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டான்.
இருவரும் ஜோடியாய் மாடிப்படிகளில் இறங்கி வருவதை கண்ட கோமளத்தை தவிர வீட்டு பெரியவர்கள் அனைவரின் முகத்திலும் புன்னகை அரும்பி இருந்தது.
தெய்வநாயகமும் நீலகண்டனும் சாப்பிட்டு எழுந்து வந்தனர். கோமளமோ அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்தார்.
“அப்பா நாங்க வெளியே போய்ட்டு வந்துடறோம்” என்றான் ராயன்.
“சந்தோசமா போய்ட்டு வாங்கப்பா” என்றார் தெய்வநாயகம்.
அழகம்மையோ தோட்டத்தில் பறித்து கட்டிய குண்டு மல்லிச் சரத்தை முல்லையின் தலையில் வைத்துவிட்டு அவளது காதருகே “இனிமே தினமும் பூ கட்டி தரேன் வச்சிக்கோ ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கணும்” என்றதும் முல்லையின் முகம் செவ்வானமாய் சிவந்தது.
கோமளோ ‘பெத்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்ததோட சரி ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா போய் பார்த்துட்டு வரா இந்த வேலைக்கார சிறுக்கிய என்னமோ இவ பெத்த பொண்ணு மாதிரி பூ வச்சு விடறதும் சோறு ஊட்டி விடறதும் இவ அலப்பறை தாங்கலப்பா இந்த வீட்டுக்கு மூத்த மருமக நான் எனக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை இவளை தலையில தூக்கி வச்சு கொண்டாடுறாங்க இருக்கட்டும் ஒருநாள் வசமாக என்கிட்ட சிக்குவா கொத்துக்கறி போடுறேன்’ என்று பொருமிக்கொண்டு இராகி தோசையை சாப்பிட்டார்.
கோமளத்தை பார்த்தான் ராயன் அவரோ முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
“கொடி பெரியம்மாகிட்ட வெளியே போய்ட்டு வரேனு சொல்லிட்டு வா” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி ராயன்.
“பெரியம்மா நாங்க வெளியே போய்ட்டு வரோம்” என்றாள் மெல்லிய குரலில் தான்.
“எங்க போறீங்க?” என்றார் இங்கிதமே இல்லாமல்.
என்ன சொல்வது என்று முல்லை ராயனை அப்பாவியாய் பார்த்து வைத்தாள்.
“ம்க்கும்” தொண்டையை செருமிய ராயனோ
“என் பொண்டாட்டிக்கு நகை எடுத்துக்கொடுக்க போறேன் பெரியம்மா” என்றான் ஓங்கி உயர்ந்த குரலுடன் கை காப்பை திருகியபடியே.
“இப்போவே நகை எடுக்கணும்னு என்ன அவசியம் கண்ணன் கல்யாணக்கு நகை எடுப்போம்ல அப்போ எடுத்துட்டா போச்சு” என்றார் வெடுக்கென.
“பெரியம்மா என் பொண்டாட்டிக்கு நகை எடுக்க கண்ணன் கல்யாணம் வரை எதுக்கு காத்திருக்கணும் நீங்க அடிக்கடி நான் தான் இந்த வீட்டு மூத்த மருமகனு குரலை உசத்தி பேசுவீங்க உங்க கடமையை நீங்க சரியா செய்தீங்களா?” என்றான் அழுத்தமாய்.
“எ…என்ன என் கடமையை நான் சரியா பண்ணாம போய்ட்டேன் ராயா?” என்றார் கோபத்துடன்.
“வீட்டுக்கு வந்த மருமகளுக்கு தாலிக்கொடி போட்டதோட சரி அவளுக்கு நகை எடுத்துக்கொடுக்கணும்னு நீங்க தானே என்கிட்ட சொல்லணும் இதுவரைக்கும் என்கிட்ட பேசினீங்களா பெரியம்மா?” என பேசியபடியே கோமளம் அருகே சென்றுவிட்டான்.
“அ.அது எனக்கு இவளை நீ கல்யாணம் பண்ணியது பிடிக்கலை அதான் நானும் சொல்லாம விட்டேன்” என்று ராயன் முகத்தை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டார் கோமளம்.
“எனக்கு கொடியை பிடிச்சுதான் கல்யாணம் பண்ணியிருக்கேன் பெரியம்மா அப்போ நான் என் பொண்டாட்டிக்கு நகை எடுத்துக்கொடுக்கறது தப்பில்லையே” என்றான் கோமளம் முன்னே கையை கட்டி நின்றான்.
“ம்ம் நீ நினைக்கறதை நடத்துப்பா நான் எதுவும் கேட்கல” என சலிப்பாக தலையை ஆட்டியவாறு “அடுத்த வாரம் பொண்ணு பார்க்க போறோம்னு உன்கிட்ட சொன்ன நான் பெத்த அருமை மகன் இன்னும் எனக்கு ஒரு வார்த்தை போன் போட்டு சொல்லலை. இந்த வீட்டுல எனக்கு என்ன மரியாதை இருக்கு” என்று பேச்சை மாற்றி பேச ஆரம்பித்தார்.
“உங்களுக்கு கண்ணன் போன் போட்டிருக்கான் நீங்க அவன் போனை எடுக்கலையாமே நீங்க அவன் மேல கோபமா இருக்கீங்கனு நினைச்சு என்னை உங்ககிட்ட பேச சொன்னான் கல்யாணம் பண்ணுறதுக்கு இத்தனை வாக்குவாதம் பண்ணலாமா பெரியம்மா?” என்றான் ஆயாசமாக.
“என்னோட வைர அட்டிகையில கல்லு விழுந்துடுச்சு நானும் உங்ககூட வரேன் சரிபண்ணிட்டு வந்துடலாம் ஐஞ்சு நிமிசம் இருங்க வரேன்” என்று நகர்ந்தவரின் கையை பிடித்த அழகம்மையோ “அண்ணி நாம நாளைக்கு போகலாம் நாளைக்கு ஏதோ நகைக்கு ஆஃபர் இருக்குனு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்” என்றார் சின்னஞ்சிறுசுகள் தனியாக கடைத்தெருவுக்கு போகட்டுமென்று.
“அப்படியா நான் காலையில பேப்பர் படிச்சேன் என் கண்ணுல படலையே” என அழகம்மையை ஏற இறங்க பார்த்தார் கோமளம்.
“அண்ணி கல்யாணம் ஆகி முதன் முறையா வெளியே போறாங்க ராயனும் முல்லையும் அவங்க கூட நாம ஏன் கரடி போல போகணும்?” என்றார் அழகம்மை மெதுவான குரலில்.
“ம்ம் சந்தடி சாக்குல என்னை கரடினு சொல்லிட்டல்ல” என்று அழகம்மை முறைத்தார்.
“நாங்க கிளம்புறோம்” என்று ராயன் கார் கீயை எடுத்த சமயம் “ராயா ஒருநிமிடம்” என்று கையில் பணப்பையுடன் வந்து நின்றார் நீலகண்டன்.
“நா.நான் முல்லைக்கு நகை வாங்கிக்கொடுக்கணும்னு ஆசைப்படறேன் இந்த பணத்தை வாங்கிக்கோயேன்” என்று பணப்பையை ராயனிடம் நீட்டினார் நீலகண்டன்.
நீலகண்டன் நீட்டியை பணப்பையை புருவம் சுருக்கிப் பார்த்தான் பணப்பை பெரியதாக இருந்தது. ராயனோ தாடையை தடவிக்கொண்டு பணத்தை வாங்கியவன் முகத்தில் எந்த வித பாவனையும் காட்டவில்லை.
கிட்டத்தட்ட 25 லட்சம் பணம் இருக்கும் போலயே என்று நெஞ்சில் அடித்துக் கொண்ட கோமளமோ அவர்பக்கம் நின்ற அழகம்மையிடம் “ஏன் டி அழகு உன் புருசனுக்கு புத்திகித்தி கெட்டுப்போச்சா இவ்ளோ பணத்தை தூக்கி கொடுக்குறான் இந்த வேலைக்கார சிறுக்கிக்கு நகை வாங்கி கொடுக்க” என்றார் பொறாமை எண்ணத்துடன்.
“நான் தான் கொடுக்கச் சொன்னேன் அண்ணி முல்லை என்னோட ரெண்டாவது பொண்ணு அவளுக்கு நகை செய்து கொடுக்க எனக்கு விருப்பம்தான்” என்றார் சிரித்த முகத்துடன்.
சரிதான் பெரிய வள்ளல் பரம்பரை என்று சலித்துக்கொண்டார் கோமளம்.
“நாங்க கிளம்பறோம்” என்று அனைவரிடமும் சொல்லிவிட்டுச் சென்றனர் ராயனும் முல்லையும்.
அமுதாவிற்கு ஆனந்தம் தாங்கவில்லை தன் பெண்ணுக்கு எங்கே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொடுப்பது என்னை போல என் மகளும் வீட்டு வேலைக்கு போக வேண்டுமோ என்றெல்லாம் மனதில் பெரும் கவலையோடு இருந்தவருக்கு இப்படியொரு ராஜ வாழ்க்கை மகளுக்கு கிடைத்து விட்டதென ஆனந்தப்பட்டவருக்கு கண் கலங்கியது.
“ரொம்ப சந்தோசப்படாதடி பொண்டாட்டி சோக்குல இருக்கான் என் மகன் ராயன் ஆசை அறுபதுநாளு மோகம் முப்பது நாளுனு சொல்லுவாங்க என் மகன் வாயால உன் மகளை வீட்டை விட்டு அனுப்ப வைக்குறேன் பாரு” என்று எல்லா வில்லியும் பேசும் டயலாக்கை கோமளமும் பேசினார்.
அமுதாவிற்கு நெஞ்சில் ஒரு நெருடல் வந்ததுதான் ஆனால் அவர் வல்லவராயனை சிறுவயதிலிருந்து பார்க்கிறாரே நியாயத்திற்கு மட்டுமே தலை வணங்குபவன் தாலி கட்டிய பொண்டாட்டியை எக்காலத்துக்கும் வீட்டை விட்டு அனுப்ப மாட்டான் அதுமட்டுமல்ல தன் மகளும் என்ன தவறு செய்துவிடப்போகிறாள் என்று மகள் மருமகன் மேல் நம்பிக்கை வைத்து கோமளம் பேசியதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை அவர்.
முல்லையின் கையை பிடித்துக் கொண்டு முதலில் பட்டுப்புடவைக் கடைக்கு அழைத்துச் சென்ற ராயனோ லட்சக்கணக்கில் இருக்கும் புடவை செக்ஷனுக்குத்தான் அழைத்துச் சென்றான்.
“எல்லா கலரிலும் எடுத்துப்போடுங்க” என்றான் இடுப்பில் கைகொடுத்தவாறே கடையில் வேலை பார்க்கும் பெண்கள் புடவை எடுத்து அடுக்கி வைத்து விட்டனர்.
ஒவ்வொரு புடவையாக எடுத்து முல்லைக்கொடியின் மேல் வைத்து பார்த்தான்.
முல்லைக்கோ அச்சோ என்றிருந்தது அனைவர் முன்னாடியும் தன் மேல் புடவையை வைத்து பார்ப்பது அவளுக்கு வெட்கத்தை கொடுத்தது.
“மச்சான் எல்லாரும் பார்க்குறாங்க” என்று ராயன் காதோரம் மெதுவாய் பேசினாள்.
“என் பொண்டாட்டி மேல தானே வைச்சு பார்க்குறேன் சும்மா இருடி உனக்கு ஒண்ணும் தெரியாது” என்று செல்லமாய் அதட்டியவன் பட்டுப்புடவை மட்டும் முப்பது எடுத்து விட்டு சில்க்காட்டன், பனாரஸ் என புடவைகளை வாங்கிக்குவித்துவிட்டான். கடைக்கு கணவனுடன் வந்த மனைவிமார்கள் கண்ணும் ராயன் மேல்தான் இருந்தது.
“இந்த பொண்ணு எத்தனை ஜென்மம் புண்ணியம் பண்ணுச்சோ தெரியலை புடவையா வாங்கி கொடுக்குறாரு ராயன் அண்ணா, நீங்களும் இருக்கீங்களே ஒரு ஆயிரம் ரூவாயில ஒரு புடவை எடுத்துச் தரச்சொன்னா பஞ்ச பாட்டு பாடுறீங்க” என்று கணவனின் தோளில் இடித்தாள் அந்த பெண்.
புடவைகளை வீட்டுக்கு கொண்டு வரச் சொல்லிவிட்டு அடுத்து சென்றது நகைக்கடைக்குத்தான். ஒவ்வொரு ஆரத்தையும் சரி நெக்லசையும் சரி ராயனாக முல்லையில் கழுத்தில் போட்டு போட்டு பார்த்து வாங்கினான்.
ராயனின் காதலில் திகைத்துப்போய் விட்டாள் பெண்ணவள். “இத்தனை நகை எனக்கு வேணாம் மச்சான்” என்றவளை ஒரு பார்வை பார்க்கவும் அவளோ வாய் திறக்கவில்லை. நகைப்பெட்டிகளை காரில் வைத்தனர் கடையில் வேலை பார்க்கும் பெண்கள்.
நகைக்கடையில் வேலைபார்க்கும் நடுத்தரவயது பெண்மணி ஒருவர் “பாப்பா இன்னிக்கு நைட் உங்க வீட்டு பெரியவங்ககிட்ட சொல்லி உங்க ரெண்டு பேருக்கும் சுத்திப்போடச் சொல்லுங்க இந்த ஒரு மணிநேரமா கடைக்கு வந்தவங்க கண்ணு முழுக்க உங்க மேலதான் இருந்துச்சு” என மலர்ந்த சிரிப்புடன் முல்லைக்கு நெட்டி எடுத்தார்.
“சரிங்க அக்கா” என்று மெல்லிய புன்முறுவலுடன் ராயனின் கையை பிடித்துக்கொண்டு நடந்து வந்தாள் முல்லைக்கொடி.
மதியம் ஆகியிருக்க பெரிய ஹோட்டல் முன்பு நிறுத்தினான் ராயன்.
“ஹோட்டல் சாப்பாடு எனக்கு ஒத்துக்காது மச்சான் நாம வீட்டுக்கு போய் சாப்பிடலாம்” என்றவளை முறைத்தவன்
“வீட்டு சாப்பாடு தினமும் சாப்பிடுற ஒருநாள் வெளியே சாப்பிட்டா ஒண்ணும் ஆகாது வா” என்று அந்த ஹோட்டலுக்குள் அவளின் கை பிடித்தே கூட்டிச் சென்றான். இதுவரை அவள் வெளியே எங்கேயும் சென்றதில்லை அதுவும் தனக்கு பிடித்தமானவனின் கைபிடித்து தரையில்தான் நடந்துச் சென்றாள். ஆனால் கனவில் வானத்தில் மிதந்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.
ஹோட்டலின் உள் அமைப்பு கிராமத்து வீடு போல இருந்தது தண்ணீர் குவளை முதல் உப்பு ஜாடி வரை மண்பானையில் இருந்தது.
ராயனை கண்ட ஹோட்டல் முதலாளியோ “வாங்க சார்” என்று மரியாதையுடன் எழுந்து நின்று தனி கேபின் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
கணவனுக்கு கிடைக்கும் மரியாதையை கண்டு பெருமையாக பார்த்துக்கொண்டே வந்தாள் முல்லை.
மர டேபிளில் உட்கார்ந்ததும் பவ்யமாய் கையை கட்டி நின்ற கடைமுதலாளியோ
“சார் என்ன சாப்பிடுறீங்க சொல்லுங்க பசங்களை கொண்டு வரச் சொல்லுறேன்” என்றார்.
“உனக்கு என்ன பிடிக்கும் புள்ள சொல்லு” என மெனுகார்ட்டை அவளது கையில் கொடுத்தான் ராயன்.
“நீங்க என்ன சாப்பிடுறீங்களோ அதையே நானும் சாப்பிடறேன்” என்றாள் தயங்கியபடியே.
கடை முதலாளி “சார் நீங்க மேடம் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லுங்க பசங்களை அனுப்புறேன்” அங்கே நிற்க சங்கடப்பட்டு நகர்ந்து விட்டார்.
“உனக்கு பிடிச்சது சொல்லு கொடி” என்றான் அழுத்தமாய்.
அவளோ “இப்படி கோபமா பேசினா எப்படி சொல்றது” என்று முணுமுணுத்தாலும் மெனு கார்டை வாங்கி “எனக்கு சிக்கன் பிரியாணி மட்டும் போதும்” என்றவளிடம்
மெனுகார்டை வாங்கியவனோ அவளை முறைத்துவிட்டு சற்று தள்ளி நின்றிருந்த பேரரை வரச்சொல்லியவன் “மட்டன் பிரியாணி, வறுவல் சுக்கா, நாட்டுக்கோழி பிரியாணி, சிக்கன் 65, மீன் குழம்பு, மீன் வறுவல், ரைஸ் ரெண்டு பேர் சாப்பிடற அளவு கொண்டு வாங்க” என்று பேரரிடம் சொல்லி விட்டு முல்லையை பார்த்தவன் “நல்லா சாப்பிட்டாத்தானே என்னை தாங்க வலுவு இருக்கும்” என்றான் அதிரடியாக.
“பொது இடத்துல வந்து என்ன பேசுறீங்க மச்சான்” என இதழை சுளித்தாள்.
“உன்கிட்டதானே டி கேட்க முடியும்” என்றான் விஷமச் சிரிப்புடன்.
அவள் அவனை போலியாக முறைத்துக்கொண்டிருந்த நேரத்தில் ராயன் கேட்டதை கொண்டு வந்து அடுக்கி வைத்து விட்டு “வேற எதுவும் வேணுமாங்க சார்?” என்றதும் “நான் தேவைனா கூப்பிடறேன்” என்றான் சிறு சிரிப்புடன்.
“ஓ.கே சார்” என்று அவர்கள் சென்றதும்
டேபிளில் அடுக்கி வைத்திருந்த அசைவ பதார்த்தங்களை கண்ணை அகல விரித்து பார்த்து “மச்சான் இத்தனையும் நாம தான் சாப்பிட போறோமா!” என்றாள் அதிர்ச்சியாக முட்டை கண்ணை விரித்து.
“ஏய் புள்ள கண்ணை விரிக்காத உன்னால எவ்ளோ சாப்பிட முடியுமோ சாப்பிடு மீதியை நான் சாப்பிட்டுக்குறேன்” என்றான் கண்ணைச்சிமிட்டி.
இருவருக்கும் ஒரே இலை பெரியதாக போட்டிருந்தார்கள் ராயன் அமர்ந்த கேபினை சுற்றி ஸ்கீரின் போட்டிருந்தனர். விஐபிக்களுக்கு மட்டும் அந்த டேபிள் பிரத்யேகமாக போடப்பட்டிருந்தது.
மட்டன் குழம்பை ஒரு வாய் சாப்பாட்டோடு சாப்பிடதும் “வாவ் சூப்பரா இருக்கு மச்சான் என்ன கொஞ்சம் காரமா இருக்கு” என்றாள் கண்ணைச்சுருக்கி.
“என்னது காரமா இருக்கா இந்த காரம் கூட சாப்பிடலைனா எப்படி சாப்பிட்டு பழகு” என்று குழம்பு கொஞ்சமாய் ஊற்றி பிசைந்து அவளுக்கு ஊட்டி விட்டான்.
“இப்படியே எனக்கு ஊட்டி விடுங்க மச்சான் காரமா இல்லை நான் என் சாப்பாட்டுல குழம்பு நிறைய ஊத்திட்டேன்” என்றாள் சிணுங்கலாக.
சாப்பாடு ஊட்டிவிட்டவன் முள் எடுத்து மீனையும் ஊட்டிவிட்டான் அவனது செல்லக்கொடிக்கு.
அவளோ “நான்தான் உங்களுக்கு ஊட்டிவிடுவேன்” என்று அவள் குழம்போடு பிசைந்து வைத்த சாப்பாட்டை ராயனுக்கு ஊட்டிவிட்டாள்.
அவள் எச்சில்பட்ட சாப்பாடு இவனுக்கு தேவாமிர்தம் போல இருந்ததோ என்னவோ அவளது விரலையும் சேர்த்து ருசி பார்த்தான்.
“மச்சான்” என்று சிணுங்கிக் கொண்டே உணவை ஊட்டி முடித்தாள். இறுதியாக முல்லைக்கு பிடித்த வெண்ணிலா ஜஸ்கீரிம் வந்தது டேபிளுக்கு.
முல்லைக்கொடியின் இதழ் வழிந்த ஐஸ்கீரிமை விரலால் துடைத்துவிடுகிறேன் என்ற பெயரில் அவளது இதழ் ரேகையை அளந்தான் தன் விரல்கொண்டு.
Wow very interesting story
Fast rental of economy vehicles
best car hire paphos [url=https://rent-car-airport.com/]https://rent-car-airport.com/[/url] .
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Semma super