ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 25

அத்தியாயம் 25

 தேனுவின் மீது ஆத்திரம் கொண்ட தனம் கொண்டையை தூக்கி போ ட்டுக் கொண்டவர் கோபத்துடன் ப ங்கஜம் சொன்ன இடத்திற்கு விரை ந்தார். 

 முதலில் நேராக மெயின் மார்க்கெ ட், இடத்திற்கு சென்று செழியன் பெ யரை சொல்லி விசாரித்தார்.

அங்குள்ள ஆட்கள் செழியனின் புதுக்கடையை காட்டினார்கள். அ ங்கு சென்று பார்த்தார் தனம் 

 அவர், எதிர்பார்த்ததை விட இந்த கடை பெரிதாக இருந்தது விழி விரி த்தார். பங்கஜம், சொன்னது உண் மையாகி விட்டது கடைக்கு அவன் பெயரை பார்த்ததும் கோபம் இன் னும் அதிகமானது 

 கடையில் வேலை நடந்து கொண் டிருந்தது.  நான்கு  ஐந்து பேர் வே லை செய்து கொண்டிருந்தனர். தனத்திற்கு பொறுக்கவில்லை பின் கோபமாக அந்த தெருவில் தே னு ஆதவன் பேரை சொல்லி விசா ரித்தார் அங்கிருந்த ஒரு கடைக்கா ரர் 

 ஓ தேனுமா வீடா இதோ அந்த பச்ச கலர்  கேட் டு வீடுதான் நீங்க யாரு என்றார் 

 தனம் அந்த கடைக்காரருக்கு பதி ல் சொல்லாமல் விறுவிறுவென நே ரே அந்த பச்சை கேட்டை வேகமாக திறந்து வீட்டில் உள்ளே போனார்

வீடு மிகவும் அழகாக இருந்தது. ஆ னால் தனத்திற்கு அதை பார்க்க க டுப்பாக இருந்தது. கதவு திறந்திரு  ந்தது, உள்ளே சென்றார் 

 குழந்தையின் மழலை சத்தம் கேட் டது கண்ணை சுருக்கி காதை கூர் மையாக்கினார் தனம் 

ஆம், பிள்ளையின் சத்தம் தான் எ ப்படி சாத்தியம் என அதிர்ந்து போ னார். அதில் இன்னும், கோபமான தனம் ஏய்.., வீட்ல யாரு டி வெளிய வாடி என கத்தினார் 

 வீட்டின் பின்பக்கம் ஆதவன் போ ன் பேசிக் கொண்டிருந்தான்.  அத னால் தனத்திற்கு அவன் இருப்பது தெரியாமல் போனது 

 தேனு,  அறையில் பாப்பா துணிக ளை மடித்து வைத்து க்கொண்டு அமர்ந்திருந்தாள். தேனு சத்தம் கே ட்டு யார் கத்துறது என வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.தனம் தா ன் நின்று கொண்டு இருந்தாள் உக் கிரமாய் 

 தேனு  அவரைப் பார்த்து அதிர்ந்த வள் வா.. வாங்க என்றாள் திணறி 

தனம், ஏய்.., வாடி ஒன்னும் இல்லா  தவளே எவ்ளோ தைரியம் இருந்தா என் பிள்ளையை மயக்கி என்கிட் ட இருந்து பிரிச்சு தனி குடித்தனம் வந்து இருப்ப, யாரு டி உனக்கு இவ் வளவு தைரியம் கொடுத்தது யாரக் கேட்டு இப்படி பண்ண?

அம்மா.., அம்மானு என் பின்னாடி சுத்திட்டு இருந்த பிள்ளைய மயக் கி கைக்குள்ள போட்டுக்கிட்டியாடி என்னத்த காட்டி டி மயக்கின என் பிள்ளையை,  இன்னைக்கு ரெண் டுல,  ஒன்னு தெரியாம இங்க இருந் து போக மாட்டேன்டி  என்றார் ஆங்காரமாய் 

தேனு அது, நான் இல்ல அவர்தான் என்ன..

 தனம், ச்சீ.. வாய மூடுடி நாயே என் றார் 

 அவர் அப்படி கூறியதும்  தேனும் ஏன் அத்தை இப்படி எல்லாம் பேசு றீங்க என்றாள் கண்கலங்கி 

 தனம், அடியே! நீலி கண்ணீர் வடி க்காதடி, இப்படி அழுது தான் அவ னை என்கிட்டே இருந்து பிரிச்சியா எங்க இருந்தியோ? அங்கேயே ஓடிப் போயிடு ஒழுங்கு மரியாதையா. இ ல்ல உன்ன கொலை பண்ணிடுவே ன் என்றார் கையை நீட்டி 

 அதே நேரம் சத்தம் கேட்டு ஆதவன் போனை அணைத்துவிட்டு வேக மாக முன்னறைக்கு வந்தான் 

 தேனு, நான் ஏன் போகணும் இது என் புருஷன் வீடு. இங்க தான் இரு ப்பேன் எதுவா இருந்தாலும் அவர் வந்ததும் அவர்கிட்ட பேசிக்கோங்க என்றாள். 

 அதில்  கோபம் கொண்ட தனம் எ ட்டி அவள் முடியை பிடித்தவர் ஏன் டி பிச்சைக்கார நாயே,… உனக்கு எ ன்னை,  எதிர்த்து பேசுற அளவுக்கு தைரியம் வந்துருச்சா. இந்த வாழ்க் கை நான் உனக்கு போட்ட பிச்சை உன்ன இரண்டரை லட்சம் கொடுத் து அடிமையா வாங்கிட்டு வந்தேன் டி 

 என்கிட்டயும் எதிர்த்து பேசுறியா? போக்கத்தவளுக்கு எவ்வளவு தை  ரியம் இருக்கணும், என் முன்னாடி கை நீட்டி பேச,, இனி இந்த வீட்ல ஒ  ரு நிமிஷம் கூட நீ இருக்கக் கூடாது போடி வெளியே என தள்ள வந்தவ ரை ஆதவன் குரல் தடுத்தது.

 அம்மா.!, அவ மேல இருந்து கைய எடுங்க என்றான் ரௌத்திரத்துட ன் 

ஆனாலும் தனம் கையை எடுக்க வில்லை.. தேனு, அழுகையுடனும் வலியுடனும் ஆதவனை பார்த்தா  ள்.

அதை பார்த்த, ஆதவன் கண்களி ல் சிவப்புடன், இப்ப அவ மேல இரு ந்து கையை எடுக்க போறீங்களா? இல்லையா? என கத்தினான் சத்த மாய் 

 அவன், அப்படி கூறியதும் தனம் தேனுவை முறைத்தபடி மூச்சு வா ங்க கையை எடுத்தார்.

ஆதவன்  தேனுவின்,  அருகில் செ ன்றவன், அவளை தன்னோடு அ ணைத்துக்கொண்டு தலையை வ ருடி கொடுத்து. அழாதடி, நான் பார் த்துக்கிறேன் என்றான் அவள் நெ ற்றியில் முத்தமிட்டு 

 இதைப் பார்த்த தனத்திற்கு வயிறு எரிந்தது. தனம் ஆதவா என்ன நட க்குது இங்க எவ்ளோ நாளா இப்படி இவ கூட கள்ளக்குடித்தனம் பண்  ணிட்டு இருக்க 

இவ என்ன சொல்லி உன்ன மயக்கு னா.., சொல்லு..ஆதவா என்றார். அ வன் கையை பிடித்துக் கொண்டு,

 ஆதவன் அவர் கையில் இருந்து தன் கையை பிரித்தவன், 

  யாரைக் கேட்டு அவ மேல கைய வச்ச்சீங்க,அந்த உரிமை யாரு உங் களுக்கு கொடுத்தது. இனி அவ மே ல கை பட்டது அவ்ளோதான் பாத் துக்கோங்க,

அப்புறம் என்ன கேட்டீங்க கள்ளக் குடித்தனமா? என் பொண்டாட்டி கூட, நான் நல்ல குடித்தனம் தான் பண்ணிட்டு இருக்கேன். நல்லாவும் இருக்கேன் குடும்பத்தோட.

அப்புறம் பொண் டாட்டி கிட்ட மய ங்கி போறதுல தப்பு ஒன்னும் இல் லையே? என்றான் 

 தனம் ஆதவா.., என்னடா இப்படி பேசுற அம்மாவ கேட்டு தானப் பா எல்லாத்தையும் இதுவரைக்கும் செ ஞ்சிட்டு இருந்த, எல்லாத்தையும் எ ன்ன கேட்டு தானப்பா முடிவெடுப் ப, இப்ப என்ன ஆச்சு உனக்கு ஆத வா, இவ என்ன பசப்பு வார்த்தை சொல்லி உன்னை ஏமாத்தினா 

 இவ சொல்றத எல்லாம் நம்பாதே அம்மாவ கொலை பண்ண பார்த்த வ, உனக்கே தெரியும் இல்ல அப்பு றம்,  ஏன்? வீட்டை விட்டு ஒழிஞ்சி போனவளை திரும்ப கூட்டிட்டு வந்துருக்க என்றார் 

ஆதவன், கையை கட்டியவன் யா  ரும் என்னை ஏமாத்தல, ஏமாற அ ளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல. அதே சமயம் உள்ளே குழந் தை அழும் சத்தம் கேட்டது.

உடனே, தனம் ஓ இப்பதான் புரியுது புள்ளைய காட்டி மயக்கி இருக்கா.

 அதை எவனுக்கு பெத்தாலோ ச்சீ.. அசிங்கம் புடிச்சவ, ஆதவா.. எவன் பிள்ளைக்கோ உன்னை அப்பனா க்க,பார்க்கிறா மூதேவி.

எவன் கிட்ட, போய் கெட்டுப்  போ னாளோ வெட்கங்கெட்டவ அனுப் புடா அவள என்றார் மூர்க்கமாய் 

 இதைக் கேட்ட தேனு ஓவென அழு தாள் முகத்தை மூடி 

 ஆதவன், அம்மா… அவ்வளவு தா ன் உங்களுக்கு மரியாதை அம்மா னு பாக்குறேன், இல்ல வேற மாதிரி கேட்டுடுவேன். யார பாத்து என்ன பேசுறீங்க என் தேனு சுத்தமானவ

அவ என் பிள்ளைய தான் சுமந்து பெத்தா, அவ மேல 100 சதவீதம் எ னக்கு நம்பிக்கை இருக்கு செழிய ன் என் புள்ள என்றான் மார்தட்டி 

 தேனு, கண்களை துடைத்தவள் தன் கணவனை மெச்சுதலாக பார் த்தாள் 

 தனம், ஆதவா நம்பாதே, அவ உன் னை ஏமா த்துறா… அம்மா கூட வந் துடுபா. அம்மா, உனக்கு நல்ல இட த்தில பொண்ணு பார்த்து வைக்கி றேன். இவ உனக்கு வேணாம்.., உன் னையும் ஏ தாவது பண்ணிடுவா. என்றார் தேனுவை பார்த்துக் கொ ண்டே 

 ஆதவன் தேனுவுக்கு அறையை காட்டி உள்ளே போக சொன்னான் அவளும் சரியான தலையாட்டி உ ள்ளே சென்று விட்டாள் 

 தனம், ஏய்.., ஏண்டி உள்ளார போற வெளிய போடி நடிப்புக்காரி என கத்தினார் 

 அம்மா இப்ப நீங்க வாய மூடுறீங்க ளா? இல்லையா? என வீடு அதிர க த்தினான்.  உடனே தனம் ஏம்பா ஆ தவா… அவளை நம்பாதே.. அவன் உ  ன்னை ஏமாத்துறா அம்மா கூட வீட்டுக்கு வந்துடு பா என்றார் 

 உடனே ஆதவன் கீழ்க்கண்ணால் தனத்தை பார்த்தவன் எப்படி நீங்க என்ன கடை விஷயத்துல ஏமாத்தி னீங்களே அது மாதிரியா என்றான் கைகட்டி,,

 தனம் அவன் அப்படி கேட்டதில் அதிர்ந்து அவன் முகம் பார்த்தார் 

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

6 thoughts on “என் உயிரே நீ விலகாதே 25”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top