ATM Tamil Romantic Novels

என் வினோதனே 22

அத்தியாயம் 22

 

மறுநாள் காலை வழக்கம் போல பிள்ளையை தூக்கி கொண்டு குளிரில் நடுங்கி கொண்டே அஜய்யின் வீட்டுக்கு நடந்து வந்தாள் மல்லிகா அஜய் அவளை பார்த்தவன் கீழே இறங்கி சென்றான் தன் மகனை அவள் கையில் இருந்து வெடுக்கென பிடுங்கினான். 

 

மல்லிகா அவனை முறைத்து பார்க்க

“என்ன டி முறைக்கிற இவன் எனக்கும் மகன் தான்” என்று கூறியவன் பிள்ளையை தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்றவன் அவனை தன் நெஞ்சில் போட்டு கொண்டு படுத்து உறங்க ஆரம்பித்தான். 

 

வாசலில் கோலம் போட்டு முடித்த மல்லிகா ஒவ்வொருக்கும் காபி கலந்து எடுத்து சென்று கொடுத்துவிட்டு வந்தாள் அஜய்யின் அறையின் கதவை தட்ட அவனும் தன் மகனை கையில் தூக்கி கொண்டு வந்து கதவை திறந்தான்.

 

மல்லிகா ஸ்வெட்டருடன் இருந்த தன் மகனை ஆச்சிரியமாக பார்த்தாள் ஆம் அஜய் தான் அவனுக்கு ஸ்வெட்டர் வாங்கி வந்திருந்தான் 

டிரெயில் இருந்த காபியை எடுத்து கொண்ட அஜய் ஹாலில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்து தன் மகனுடன் விளையாட ஆரம்பித்தான். 

 

ஷில்பா தூங்கி எழுந்து வந்தவள் அஜய்யையும் அவன் கையில் இருந்த குழந்தையையும் பார்த்தாள் அவள் ஒரு டிடெக்டிவ் வைத்து விசாரித்ததிலேயே தெரிந்து போனது அவனுடைய வரலாறுகள் அனைத்தும். 

 

‘இந்த அஜய்யை பாரு காலையிலேயே அவன் பையன் கூட எப்படி விளையாடுறான் இந்த தீபக்கும் தான் இருக்கானே குழந்தையை தூக்க கூட தெரியாம’ என்று மனதில் திட்டிக் கொண்டே தன் அறைக்கு சென்றாள். 

 

அதன் பின் ஒவ்வொருவராக எழுந்து வெளியே வர ஆரம்பித்தனர் அஜய்யின் தந்தை வாக்கிங் சென்று விட லதா அஜய்யின் அருகில் வந்து அமர்ந்தார் அவன் கையில் இருந்த குட்டி பையனை பார்த்தவர் “அடடே குட்டி கிருஷ்ணா இன்னைக்கு உன் கூட இருக்காரா அஜய்” என்று கேட்டு கொண்டே அவனை தூக்க போக அவன் தந்தையின் சட்டையை கெட்டியாக பிடித்து கொண்டு வர மாட்டேன் என்று அழுக ஆரம்பித்தது அந்த சின்ன சிட்டு. 

 

“டேய் குட்டி பையா இத்தனை நாளா இந்த பாட்டி தான் டா உன்னை தூக்கி வச்சிருந்தேன் இன்னைக்கு புதுசா வந்த அங்கிள் உனக்கு முக்கியமா போய்ட்டாரா” என்று கேட்க

அஜய் மனதில் அங்கிள் என்ற வார்த்தை முள்ளாக குத்தி கிழித்தது

இவன் என் மகன் என்று கத்தி கூற வேண்டும் என்று தோன்றியது.

 

அதுவரை அவன் முகத்தில் இருந்த சிரிப்பு எங்கோ காணாமல் போனது முகம் இறுகி போய் அமர்ந்திருக்க 

மல்லிகா அங்கே வந்தாள் “அம்மா குழந்தைக்கு பசியாத்தனும்” என்றாள் தயக்கத்துடனே

“அஜய் அஜய்” என்று லதா அழைக்க அவன் ஏதோ ஒரு யோசனையில் முகம் இறுகி போய் அமர்ந்திருந்தான் “டேய் அஜய் குழந்தையை கொடு டா” என்று அவன் தோளில் தட்ட அஜய் விழிப்பு வந்தவனை போல் திரும்பினான். 

 

லதா அவன் கையில் இருந்த குழந்தையை வாங்கி மல்லிகாவிடம் கொடுக்க குழந்தை வீல்லென்று அழுக ஆரம்பித்தது தந்தையை கைக் காட்டி அழுக லதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது தாயிடம் கூட செல்லாமல் குழந்தை அழுவதை பார்த்தவர்

“டேய் அஜய் அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு போல டா” என்றார் அஜய் பதிலுக்கு தன் முகத்தில் வராத புன்னகையை வரவழைத்து உதட்டை வளைத்து சிரித்தான்.

 

அதன் பின் ஷூட்டிங் கிளம்பி சென்றுவிட்டான் அஜய் மாலை கொஞ்சம் சீக்கிரமாக வீட்டுக்கு வரும்போது அஜய்யின் மகன் கிச்சனில் எப்போதும் போல் விளையாடி கொண்டு இருந்தான் அவனை பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்ற அஜய் குளித்துவிட்டு வந்து தூக்கி கொள்ளலாம் என்று நினைத்தான். 

 

அஜய் குளித்துவிட்டு கீழே வரும் போது வீடே பரபரப்பாக இருந்தது அனைவரும் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டு இருந்தனர் அஜய் சாதரணமாக கீழே நடந்து வந்தவன் 

“என்னாச்சு மா” என்று லதாவிடம் கேட்க “நம்ம வீட்ல வேலை செய்யுறாளே மல்லிகா அவள் பையன் கீழே கிடந்த மூடியை எடுத்து முழிங்கிட்டான் டா” என்று பதட்டத்துடனே கூறினார். 

 

அவர் கூறியதை கேட்ட அஜய் பதறி அடித்து கொண்டு சமயலறையின் உள்ளே ஓடினான் அங்கே மல்லிகா அழுது கொண்டே குழந்தையின் வாயில் இருந்த மூடியை எடுக்க முயற்சி செய்து கொண்டு இருக்க குழந்தையின் வாயில் இருந்து ரத்தம் வடிந்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தது. 

 

அஜய் உள்ளே ஓடி வந்தவன் குழந்தையை தூக்கி கொண்டு வெளியே ஓட ஆரம்பித்தான் அவன் பின்னே வந்த மல்லிகா “என் குழந்தையை கொடுங்க” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள். 

 

குழந்தையுடன் காரில் ஏறி அமர்ந்தவன் காரை ஸ்டார்ட் செய்ய அவனுடன் மல்லிகாவும் வந்து காரில் அமர்ந்தாள் அடுத்த கணம் கார் அந்த இடத்தை விட்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றது. 

 

தீபக் இதையெல்லாம் பார்த்தவன்

“வேலைக்காரி குழந்தை மேல இவனுக்கு என்ன இவ்வளவு அக்கறை என் பொண்ணை கூட ஒரு நாள் தூக்கினது கிடையாது” என்று ஷில்பாவிடம் கூற 

“உன் குழந்தையை நீயே தூக்கினது இல்லை” என்று கூறிவிட்டு அவனை பார்த்து முறைத்தாள். 

 

கார் அடுத்த பத்து நிமிடத்தில் மின்னல் வேகத்தில் பறந்து சென்று பிரபல தனியார் மருத்துவமனையின் வாசலில் வந்து நின்றது அவன் குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே ஓடி வர அங்கிருந்த குழந்தை மருத்துவன் கௌசிக் “டேய் அஜய் யார் இந்த குழந்தை” என்று கேட்க 

“என் மகன் தான் டா மூடியை முழிங்கிட்டான் டா என்னன்னு பாரு டா கொஞ்சம் வாயில இருந்து ரத்தம் வருது” என்று கண்கள் கலங்கி அழுதேவிட்டான். 

 

“சரி டா நீ வெளியே இரு நான் என்னன்னு பார்க்குறேன்” என்று அவனை வெளியே அனுப்பி வைத்தான். 

 

அஜய் வெளியே வந்தவன் அழுது கொண்டிருந்த மல்லிகாவின் அருகில் சென்றவன் 

“ஏன் டி இருக்க ஒரு குழந்தையை உன்னால ஒழுங்கா பார்த்துக்க முடியாதா என் குழந்தைக்கு மட்டும் எதாவது ஆகட்டும் உனக்கு இருக்கு” என்று கத்திக் கொண்டே பதட்டத்துடனே இங்கும் அங்கும் நடந்து கொண்டு இருந்தான். 

 

அடுத்த அரை மணிநேரத்தில் கெளசிக் வெளியே வந்தான் 

“என்ன டா அவன் எப்படி இருக்கான் கெளசிக்” என்று அஜய் அவன் அருகில் பதட்டத்துடனே சென்று கேட்க அவன் கண்கள் கலங்கி இருந்தது “நல்ல வேளை அஜய் குழந்தை முழிங்கின மூடி தொண்டையிலேயே இருந்தது சோ உடனே வெளியே எடுத்தாச்சு மூடியை உள்ளே முழுங்கும் போது அதோட முனை வாயில கிழிச்சு இருக்கு அதனால தான் ரத்தம் வந்துருக்கு இனி குழந்தைக்கு ஒன்னும் இல்லை நல்லா இருக்கான் இன்னும் ஒரு மணி நேரத்துல குழந்தை கண் முழிச்சிடுவான் டிரிப்ஸ் போட்டு இருக்கேன் அப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்றான். 

 

அஜய் அவன் கூறியதை கேட்டு நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் சோர்ந்து போய் அந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தான். 

 

கெளசிக் அங்கே அழுது கொண்டே நின்றிருந்த மல்லிகாவை பார்த்தவன் “குழந்தைக்கு நீங்க யாரு மா” என்று கேட்டான். 

 

“என்னோட மகன் சார்” என்றாள் மல்லிகா “உங்க வீட்டுக்காரர் பெயர்” என்று கெளசிக் கேட்க

அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க “அஜய்கிருஷ்ணா இப்போ என்ன தான் டா கௌசிக் உனக்கு பிரச்சனை இவள் என் பெண்டாட்டி அவன் என் குழந்தை” என்றான் அவனை முறைத்து கொண்டே. 

 

“எப்படி டா உனக்கு தான் இன்னும் கல்யாணமே ஆகலையே” என்று அவன் கேட்க “ஏன் கல்யாணம் பண்ணின தான் குழந்தை பிறக்குமா நீ டாக்டர் தான உனக்கு இது கூடவா தெரியாது” என்று அவனிடம் அஜய் கேட்க “ஓ இப்படி ஒன்னு இருக்குல்ல சாரி டா மச்சான் சாரி சிஸ்டர்” என்று வழிசலுடன் கூறிவிட்டு அங்கிருந்து உள்ளே சென்றுவிட்டான். 

 

அடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தை கண்விழித்து விட அஜய்யும் மல்லிகாவும் சென்று  குழந்தையை பார்த்தனர் கையில் ஊசி குத்தப்பட்டு டிரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க குழந்தை மெல்ல கண்ணை திறந்து அஜய்யை பார்த்து சிரித்தது அந்த ஒற்றை சிரிப்பை பார்த்து அஜய் உடைந்து போய் அழ ஆரம்பித்துவிட்டான் மல்லிகா அவனை சமாதானம் செய்தாள். 

 

அதன் பின் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து விட அஜய் தன் காரில் சென்று மல்லிகாவை இறக்கிவிட்டான் மல்லிகா குழந்தையுடன் இறங்க கார் அங்கிருந்து சென்றது. 

 

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தையை பார்க்க அவள் வீட்டுக்கு வந்தனர் மல்லிகா குழந்தையை மடியில் வைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள். 

 

அப்போது அஜய் இரண்டு பெரிய பைகளுடன் அங்கே வந்து நின்றான் அவனை பார்த்தவர்கள் எதுவும் பேசாமல் வெளியே சென்றனர். 

 

குழந்தைக்கு தேவையான உடை அவளுக்கு தேவையான உடை சாப்பிட சாப்பாடு என்று அனைத்தும் வாங்கி வந்திருந்தான் அஜய் 

“சாப்பிடு டி” என்றவன் அவளின் மடியில் இருந்த குழந்தையை தூக்கி சென்று தொட்டிலில் படுக்க வைத்தான். 

 

அடுத்த கணம் மல்லிகா ஓடி வந்து அவனை இறுக அணைத்து கொண்டு அழுக ஆரம்பித்தாள்

அஜய்யும் அவளை அணைத்து ஆறுதல் கூறினான் “அழாத டி நம்ம பையனுக்கும் எதுவும் ஆகாது” என்று கூறிக் கொண்டு இருக்க அந்த குடிசையின் தகர கதவு திறக்கப்பட்டது. 

 

பத்மா தான் வந்தாள் உடனே மல்லிகா அஜய்யின் அணைப்பில் இருந்து விலகி நின்றாள் “அது வந்து சார் என் போனு” என்று இளித்து கொண்டே கூறியவள் கீழே கிடந்த பட்டன் போனை எடுத்து கொண்டு அவர்களை சந்தேகமாக திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றாள். 

 

அஜய் அவளை மீண்டும் அணைத்து கொள்ள மல்லிகா அவனை தன் அணைப்பில் இருந்து வலுகட்டாயமாக பிரித்து விலக்கினாள் “என்ன டி” என்று அவளை ஏக்கமாக பார்த்து கொண்டே கேட்க “வெளியே போங்க யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க” என்க 

“யார் என்ன நினைச்சா எனக்கு என்ன” என்று அவளின் இடையில் நுழைத்து தன்னோடு சேர்த்து வளைக்க. 

 

“இங்கே எல்லாரும் ஏற்கனவே நான் உங்களை வச்சிக்கிட்டு இருக்கேன்னு பேசிக்கிறாங்க இங்கே இருந்து என் மானத்தை வாங்காதிங்க” என்று தலையை குனிந்து கொண்டே கூற கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினான் அஜய். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4 thoughts on “என் வினோதனே 22”

Leave a Reply to Babubuvana 1982@gmail.com Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top