அத்தியாயம் 15
ராயனின் முரட்டு முத்தத்தில் துவண்டு போனாள் பூஞ்சை பெண் முல்லைக்கொடி. அவனுக்கோ அவளது இதழ் குழந்தை சப்பி சாப்பிடும் குச்சி ஐஸ் போல பெண்ணவளின் இதழை விழுங்கிக்கொண்டிருந்தான்.
அவளது கண்களின் சோர்வை கண்டு விலக மனமில்லாமல் அவளது இதழை விட்டு விலகினான் காளையவன்.
பட்டு இளங்குருத்தின் இதழில் ரத்தம் கசிந்ததை கண்டு தவித்துப்போன ராயனோ “சாரி புள்ள கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு உன் உதட்டை லேசாய் கடிச்சிட்டேன்” என்று மன்னிப்பு கேட்டு அவளது இதழின் ஓரம் கசிந்த குருதியை விரல்கொண்டு துடைக்கவும்
“ஸ்ஸ்ஆஆ” என்றவளை அணைத்துக்கொண்டு “சாரி புள்ள என்னை மன்னிச்சிடு” என்று அவளது இதழில் கசிந்த குருதியை இதழ் வழியே உறிஞ்சி அவளுக்கு மருந்தாக மாறினான்.
அவளோ இம்முறை அவனது இதழை கடித்துவிட்டாள். அவனோ இதழ்களுக்குள் சிரித்துக்கொண்டவனோ அவளது இதழை விட்டு பிரிந்தவன் “இப்படித்தான் இருக்கணும் படுக்கையறைக்குள்ள நீயா நானா போட்டி போட்டு விளையாடணும் இந்த கட்டில் விளையாட்டுல நம்ம ரெண்டு பேரும் தோற்க கூடாது” என அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
“ம.மச்சான் சும்மா சும்மா முத்தம் மட்டும் கொடுக்குறீங்க மத்தது எப்போ?” என்றவளோ அவன் விழிகள் பெரிதாக விரித்து உதடு கடித்து மார்க்கமாக பார்த்ததும் முகத்தை கைகொண்டு மூடிக்கொண்டாள் வெட்கத்தில்.
“ஹான் எ.என்ன சொன்ன புள்ள?” என்று அவளது கையை முகத்திலிருந்து எடுத்து விட
அவளோ “போங்க மச்சான் எனக்கு வெட்கமா வருது” என்று தலையணைக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டாள்.
“கொடி இன்னிக்கு உனக்கு மூணுநாள் தான்னு பாவம் பார்த்து விடுறேன்டி” என்று அவள் பக்கம் நெருங்கிப்படுத்தவன் அவளது டாப்பை விலக்கிவிட்டு அவளது வயிற்றை தடவி “வலி இருக்கா புள்ள?” என்றான் அவளது கன்னத்தோடு கன்னம் உரசிக்கொண்டு.
“வலி இ.இல்ல கூ.கூசுது மச்சான் கையை எடுங்க” என்று சிணுங்கினாள்.
அவனது ஆண்மை அவளை ஆளத்துடித்தாலும் பெண்மைக்கு மரியாதை கொடுத்து “இன்னும் ரெண்டு நாளு காத்திருக்கேன்டி அப்புறம் கூசுதுனு சொன்னாலும் விடமாட்டேன்” என்றவனோ அவளது கழுத்து வளைவில் மீசையால் கூசினான்.
“ம்ம் மச்சான் கூசுது” என்று அவனது நெஞ்சுக்கூட்டுக்குள் முகத்தை அணைத்துக்கொண்டாள். இருவரும் அணைத்தபடியே உறங்கினர்.
இரண்டு நாட்கள் எப்போது போகும் என்று காத்திருந்தான் வல்லவராயன்.
ராயன் பால்பண்ணைக்கு கிளம்பிச் செல்லும் முன் “ராயா கண்ணனுக்கு பொண்ணு பார்க்க போகும்போது பூங்கொடி வீட்டுக்கும் அழைப்பு சொல்லணும்” என்றார் தெய்வநாயகம்.
“வீட்டு பெரியவங்க எல்லாரும் சேர்ந்து போய் கண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோம்னு சொல்லிடுங்க இல்லைனா பூங்கொடியை நொடிச்சுக்கிட்டே இருப்பாங்க அந்த வீட்டு பெரிய மனுசன் ராஜமாணிக்கம்” என்றார் அசட்டைக்குரலில்.
“நீ சொல்றது சரிதான் தம்பி” என்றார் தையல்நாயகியும்.
கோமளமோ “நமக்கு மரியாதை கொடுக்காதவன் வீட்டுக்கு போகணுமா நாயகி எனக்கு ராஜமாணிக்கம் வீட்டுக்கு போக கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை” என முகத்தை சுளித்தார்.
“அக்கா என்ன பேசுறீங்க நம்ம வீட்டுப் பொண்ணு பூங்கொடியை தென்னரசுவுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்திருக்கோம் நம்ம பொண்ணுக்காக அந்த குடும்பத்துக்கு மரியாதை கொடுத்துத்தான் ஆகணும்” என்றவுடன்
“க்கும் நீயும் தெய்வநாயகமும் போய்ட்டு வாங்க என்னை ஏன் வரலைனு கேட்டா எனக்கு முட்டி வலி நடக்க முடியலைனு சொல்லிடுங்க” என்றார் வெடுப்பாக.
அழகம்மையும் நீலகண்டனும் கோமளம் பேசுவதை காதில் கேட்டபடியே தான் அறையில் இருந்து வெளியே வந்தனர்.
“பெரிய அண்ணி சொல்றது சரிதானே அண்ணா! நான் பெண்ணை பெத்தவ என்னை மதிக்கலனாலும் போய்தான் ஆகணும் இப்போ பொண்ணுதானே பார்க்கப்போறோம் பூங்கொடியை அழைக்கணும்னு அவசியமில்லை மதினி கல்யாணத்துக்கு கூப்பிட்டுக்கலாம்” என்றார் இயல்பாகத்தான்
ஆனால் ஒத்தை பொண்ணை பெத்து வச்சிருக்கேன் அவளுக்கு சொல்லாம எப்படி என்று ஆதங்கப்பட்டார் அழகம்மை.
“நீங்க சும்மா இருங்க அத்தை நம்ம வீட்டு விஷேசத்துல பூங்கொடி இல்லாம எப்படி
அப்பாவையும் அம்மாவையும் அழைச்சிட்டு போய்ட்டு வாங்க” என கண்டிப்புடன் கூறிய ராயனோ பால்பண்ணைக்கு கிளம்பி விட்டான்.
இறுதியாக ராயனின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பைநிறைய பழமும் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் தோட்டத்தில் காய்த்த மல்கோவா மாம்பழத்தை கூடையில் அடுக்கியும் காரில் கிளம்பினார்கள். போகமாட்டேன் என்று கூறிய கோமளமும் பூங்கொடி வீட்டுக்கு அழைப்பு கொடுக்கச் சென்றார்.
காரில் போகும்போது “பெரிய அண்ணி உங்களுக்குத்தான் முட்டி வலிக்குனு சொன்னீங்கல்ல எதுக்கு கஷ்டப்பட்டு வரீங்க?” என்றார் அழகம்மை.
“அ.அது என் பெரிய மகன் ராயன் பூங்கொடிக்கு அழைப்பு சொல்ல சொன்ன பிறகு மதிக்காத வீடாக இருந்தாலும் நான் போவேன்” என்றார் அழுத்தமாக.
“சும்மா இரு அழகு” என்று தையல்நாயகி அழகம்மையின் கையை பற்றினார்.
“கண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோம் உனக்கு அழைப்பு சொல்ல வரோம் பூங்கொடி” என்று மகளுக்கு கொஞ்ச நேரம் முன்பு போன் போட்டிருந்தார் அழகம்மை.
பூங்கொடிக்கு சந்தோசம் தாளவில்லை தியாவை உறங்க வைத்துவிட்டு தோட்டத்துக்கு கிளம்பி நின்ற தென்னரசுவிடம் “மாமா கண்ணன் மாமாவுக்கு பொண்ணு பார்க்க அழைப்பு சொல்ல வராங்க அம்மா வீட்ல இருந்து கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்க” என்றவளை
“இப்பதான் உன் புருசன் கண்ணுக்கு தெரியுறேனாடி உன் மாமனை மண்டபத்துல அவமரியாதை பண்ணிட்டு வந்துட்டோம்னு என்கிட்ட பலநாளா பேசாம மௌன விரதம் இருந்த… கையை தொட்டா கையை தட்டிவிட்ட இப்போ வந்து மாமா மச்சான்னு கொஞ்சி பேசுறீயா நீ எங்கயும் போககூடாது அப்படி என் பேச்சை மீறி பொண்ணு பார்க்க குழந்தையோட போனா நீ உன் மாமன் வீட்டோட இருந்துக்க வேண்டியதுதான்” என்று கோபத்தில் கொப்பளித்தான்.
“மண்டபத்துல ராயன் மாமா கல்யாணம் நின்னுடுச்சு அவரை அவமதிப்பா பேசி பரிகாசம் செய்து சிரிக்குற நீயெல்லாம் மனுசனாயா உன்னை போய் விழுந்து விழுந்து காதலிச்சேன் என்னைய செருப்பால அடிச்சுக்கணும். என் மாமாகிட்ட நான் தென்னரசு மாமாவை லவ் பண்ணுறேன்னு சொன்ன ஒத்த வார்த்தையை கேட்டு உன்னை நம்பி கல்யாணம் பண்ணிக்கொடுத்தாரு இப்பவும் நீ பண்ணுற கூத்தை அவர்கிட்ட சொன்னேன்னு வை உன்னை உப்புக் கண்டம் பண்ணிடுவாரு தெரியும்ல” என கண்ணகியாய் மாறினாள் பூங்கொடி.
“என்னடி வாய் நீளுது வாயை உடைச்சிடுவேன் பார்த்துக்கோ உன்னை கல்யாணம் பண்ணிட்டு வந்து என்ன கொடுமை பண்ணிட்டேன் ராயன் பால்பண்ணையில என்னையும் கூட்டு சேர்த்துக்க சொல்லி உன்னை கேட்க சொன்னேன் நீ முடியாதுனு சொல்லிட்ட… என்னைய உண்மையா லவ் பண்ணியிருந்தா உன் மாமன் ராயன்கிட்ட என் வீட்டுக்காரரையும் உங்க தொழிலில் கூட்டு சேர்த்துக்கோங்கனு கேட்டு வந்திருப்ப நீ என்னைய லவ் பண்ணுனியானு சந்தேகமா இருக்கு” என்றான் நாக்கு கூசாமல்.
“அடப்பாவி உன்னை லவ்பண்ணாமலா உனக்கு முந்தானை விரித்து நம்ம பிள்ளை தியாவை பெத்துப்போட்டேன் நீ பேசறது உனக்கு கொஞ்சம் கூட உறுத்தலையா அடுத்தவன் சொத்துக்கு ஏன் அலையுற? உனக்கு என்ன சொத்துக்கா பஞ்சம் ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடறதுக்கு சொத்துக்கிடக்குதே புதுசா பால் பண்ணை போட வேண்டியதுதானே” என்றாள் இடுப்பில் கைவைத்து கணவனிடம் சண்டைக்குச் சென்றாள் பூங்கொடி.
“ரொம்ப பேசாத கன்னம் பழுத்திடும் பூங்கொடி உன் மாமன் பால்பண்ணைக்கு எதிரா என்னால போட முடியாதுனு நினைக்காதே எவனும் என்கிட்ட வேலைக்கு வரமாட்டேன்கிறான் சின்னதா பால்பண்ணை போட்டு என் காசு விரையம் ஆனதுதான் மிச்சம். உன் மாமனோட பார்ட்னராக சேர்ந்துட்டா எனக்கு தொழில் பண்ணின மாறி இருக்கும்ல நீ என்ன பண்ற இந்த முறை கண்ணனுக்கு பொண்ணு பார்க்க போய்ட்டு வரும்போது என்னையும் ராயன் பால்பண்ணையில பார்ட்னராக சேர்த்துக்க உன் மாமன் ராயன்கிட்ட கேட்டுட்டு வரணும்” என்றான் விரலை நீட்டி அதிகாரமாக.
“அடபோயா நான் என்ன சொன்னாலும் என் மாமா உன்னை பால்பண்ணைக்குள்ள சேர்த்துக்காது” என சிரித்தாள்.
அவனோ “கொழுப்பாடி உனக்கு” என்று பல்லைக்கடித்தவன் “உன் அம்மாவுக்கும் பால்பண்ணையில பங்கு இருக்குதானே உன் அம்மாகிட்ட கேட்டு ராயனை பண்ணையில பங்கு கொடுக்கச் சொல்லு” என வீம்புக்கு வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நின்றான் மனைவியிடம்.
இருவரும் போட்ட சத்தத்தில் தியா வீறிட்டு அழவும் “போயா இங்கிருந்து கஷ்டப்பட்டு புள்ளைய தூங்க வைச்சிருக்கேன் என்கிட்ட சண்டை போட்டு புள்ளையை அழவச்சிட்ட” என்று தென்னரசுவை முறைத்துவிட்டு அழும் தியாவை “என் தங்கப் பொண்ணு அழாதீங்க செல்லக்குட்டி தூங்குங்க மயிலு” என்று தொட்டிலை ஆட்டிக்கொண்டே சுவற்றில் சாய்ந்து நின்ற தென்னரசுவை பார்த்தவள் “அம்மாவீட்டு பெரியவங்க வரும்போது இருந்தீனா கொஞ்சமா சொத்து வாங்கிட்டு வந்து தருவேன் இல்ல என்வீட்டு சொத்து வேணாம்னா இப்பவே கிளம்பி போ” என வாசலை நோக்கி கை காட்டினாள்.
“ஏய் இப்ப என்னடி சொல்லிட்டேன் சும்மா வாய் வாய்க்காலை தாண்டி போகுது” என்று அவளை அடிக்க கையை ஓங்கியவன் அவளது கண்களை பார்த்து கையை சட்டென்று எடுத்துக்கொண்டவன் அடுத்த நொடி பூங்கொடியின் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.
அவளோ அவனது முதுகில் அடிப்போட்டதும் அவளது கையை தன் கையால் இறுக்கி பிடித்து வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருந்தான் தென்னரசு.
வீட்டின் காலிங் சத்தம் கேட்கவும் பூங்கொடியை விட்டு பிரிந்தான் தென்னரசு.
“அப்பா, அம்மா, மாமா, அத்தை, எல்லாரும் வந்திருப்பாங்க” என்று தென்னரசுவின் தோளில் இடித்து தள்ளிவிட்டு கதவை திறக்க ஓடினாள் பூங்கொடி.
“முத்தம் கொடுத்த புருசனை தள்ளிவிட்டு ஓடுறா இன்னிக்கு ராத்திரி இருக்குடி” என்று பல்லைக்கடித்தான் தென்னரசு.
தென்னரசு பூங்கொடியை ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் செய்துக் கொண்டான். ராஜமாணிக்கம் தெய்வநாயகம் ஒன்றுவிட்ட பங்காளிகள்.
ராஜமாணிக்கம் குடித்து கும்மாளம் போட்டு பெண்கள் விசயத்தில் சரியாக இல்லாமல் போக தெய்வநாயகம் “நீ சரியில்லை மாணிக்கம் இந்த பொம்பளை சகவாசத்தை நிறுத்தி விடு” என்று ராஜமாணிக்கத்தை எச்சரித்தார்.
ஆனால் ராஜமாணிக்கமோ பெண்களை வீட்டுக்கே வரவைத்து கும்மாளம் அடித்துக்கொண்டிருந்தார். ராஜமாணிக்கத்தின் மனைவி ராணி ராஜமாணிக்கத்தின் அட்டகாசத்தை பார்க்க முடியாமல் தெய்வநாயகத்திடம் சென்று “மாமா என்வீட்டுக்காரர் பண்ணறது சரியில்லை நான் இருக்கும்போதே பொண்ணுங்களை கூட்டிட்டு வந்து அராஜகம் பண்ணுறாரு நீங்க வந்து கேளுங்க” என்று தெய்வநாயகத்தை நியாயம் கேட்க அழைத்துச் சென்றார் ராணி.
ராஜமாணிக்கமோ எவன் வந்து என்னை கேள்வி கேட்கமுடியும் என்று இறுமாப்பாக பேசவும் ராஜமாணிக்கத்தை அடித்துவிட்டார் தெய்வநாயகம்.
அந்த இரவு ராணியிடம் “ஏன் டி என்னை அடிக்க ஆளகூட்டிட்டு வரியா?” என்று குடிபோதையில் ராணியை பிடித்து தள்ள ராணியோ வீட்டில் இருந்த அம்மிக்கல் மேல் விழுந்தவரின் தலையில் அடிப்பட்டு அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. பாத்திரம் விளக்குற இடத்துல வழுக்கி விழுந்து போய் சேர்ந்துட்டா என்று ஊரை நம்ப வைத்தார் ராஜமாணிக்கம். தென்னரசு சிறுவனாக இருக்க அவனை தன் பேச்சு கேட்க வைத்து வளர்த்தார் ராஜமாணிக்கம்.
தெய்வநாயகத்தின் குடும்பம் ராணியின் இறுதிகாரியத்திற்குச் சென்றவர்கள் தான் அதற்குபிறகு ராஜமாணிக்கத்திடம் உறவு வைத்துக்கொள்ளவில்லை.
ராஜமாணிக்கமோ தெய்வநாயகத்தின் குடும்பத்தை அவமானப்படுத்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்.
தென்னரசு மீசையை முறுக்கி ராயல் என்ஃபீல்டில் ஊரில் வலம் வந்தவனின் வலையில் சிக்கினாள் பூங்கொடி.
ராயனுக்கும் பூங்கொடிக்கும் திருமணம் முடிவு செய்த நேரத்தில் தந்திரமாக ராயனின் காலில் விழுந்து “எனக்கும் பூங்கொடிக்கும் கல்யாணம் பண்ணி வைங்க அண்ணா” என்று கேட்டான் தென்னரசு.
ராயனோ அவனை ஓங்கி ஒரு அறைவிட்டவன் “இவன் சொல்றது உண்மையா பூங்கொடி?” என்று அதட்டியதும்
“மா.மாமா நா.நான் தென்னரசு மாமாவை விரும்புறேன் என்னை அவருக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்துடுங்க” என்று ராயன் காலில் விழுந்து விட்டாள் பூங்கொடி.
“எழுந்துரு புள்ள” என்று பூங்கொடியை தூக்கிவிட்டவன் “என் அத்தை பொண்ணு கண்ணுல தண்ணி வரதை நான் பார்த்தேன் கொன்னே போடுவேன் ஜாக்கிரதை” என்று தென்னரசுவை மிரட்டிதான் பூங்கொடியை அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தான்.
“வாங்க மாமா, வாங்க பெரியம்மா, வாங்க அத்தை, வாங்கம்மா வாங்கப்பா” என்று தன் வீட்டு மக்களை கண்டதும் சந்தோசம் தாங்கமுடியவில்லை.
பைநிறைய பழங்களையும் இனிப்புகளையும் காய்கறிகளையும் வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்தனர் தையல்நாயகியும் அழகம்மையும்.
‘வீட்டுக்கு வந்தவங்களை வாங்கனு ஒருவார்த்தை கூப்பிடுறானா பாரு வாய்க்குள்ள கொழுக்கட்டையா வச்சிருக்கான்’ என்று தென்னரசுவை கரித்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தார் கோமளம்.
“வாங்க” என்று ஒப்புக்கு கேட்டு வைத்து அங்கிருந்த நாற்காலியில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தான்.
மரியாதை தெரியாதவன் மரியாதையை எதிர்பார்க்கக்கூடாதென்று அமைதியாக உட்கார்ந்திருந்தனர் பெரியவர்கள்.
தியா அழுகவும் அழகம்மை தொட்டியிலிருந்து தியாவை எடுத்துக்கொண்டதும் குழந்தை அழகம்மையை கண்டு துள்ளி சிரித்தது.
“என் செல்லக்குட்டி” என்று தியாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார் அழகம்மை.
“அப்பாகிட்ட வா செல்லம்” என்று அழகம்மையிடமிருந்து வாங்கிக்கொண்டான் தென்னரசு.
அழகம்மையின் முகம் வாடிவிட்டது. வேண்டுமென்றேதான் குழந்தையை வாங்கிக்கொண்டான் தென்னரசு.
நீலகண்டனோ எதுவும் பேசக்கூடாதென அழகம்மையின் வாயை அடைத்துவிட்டார்.
அழகம்மை கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு தையல்நாயகி பக்கம் வந்து உட்கார்ந்துவிட்டார்.
பூங்கொடி பெரியவர்களுக்கு மோர் கொண்டு வந்து கொடுத்தவள் தாயின் முகம் பசையற்று போய் இருப்பதை கண்டும் தென்னரசுவின் கையில் தியா இருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தவள் தென்னரசுவை முறைத்துவிட்டு பெரியவர்களுக்கு மோரை கொடுத்துவிட்டு “அம்மாகிட்ட வாங்க தங்கம்” என்று தியாவை தூக்கி வந்து அழகம்மையிடம் கொடுத்துவிட்டாள்.
வெளியேச் சென்றிருந்த ராஜமாணிக்கம் வீட்டுக்குள் வந்தவர் “வராதவங்க எல்லாம் வீட்டுக்கு வந்திருக்காங்க கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தானே ஆகுது அதுக்குள்ள உங்க மருமக விஷேசமா யாரு கண்டா உன் மகன் வீட்டு வேலைக்காரிக்கிட்ட தப்பா நடந்து அவ வயித்துக்குள்ள ஏதோ இருக்குமோ பூசி மொழுகி கல்யாணத்தை நடத்தி வளைகாப்புக்கு செய்தி சொல்ல வந்திருக்கீங்களா?” என்று பரிகாச சிரிப்புடன்
கோமளத்திற்கு சுள்லென்று கோபம் வந்துவிட்டது.
“உன்னை போல பொம்பளை பொ…” என்று பேச ஆரம்பித்த கோமளத்திடம் “அண்ணி சும்மா இருங்க” என்று கண்ணை காட்டியவர் “ராஜமாணிக்கம் கண்ணனுக்கு பொண்ணுபார்க்க போறோம் நீ குடும்பமாய் வந்து நிற்கணும்” என்றார் கோபத்தை மறைத்து முகத்தில் சிரிப்புடன்.
பூங்கொடியோ தன்னால்தான் தன் குடும்பத்துக்கு இப்படி அவப்பேச்சு என்று மனதிற்குள் மருகினாள்.
“எங்களுக்கு வேலையிருக்கு வரமுடியாது உங்க மகளும் பேத்தியும் வருவாங்க” என்றவாறு அவரது அறைக்குள் சென்றவர் “தென்னரசு இங்க கொஞ்சம் வா” என்றதும் தென்னரசுவோ ராஜமாணிகத்தின் அறைக்குள் சென்றான்.
“உன் பொண்டாட்டிகிட்ட இந்த முறை விஷேஷத்திற்கு போய்ட்டு வரும்போது பால்பண்ணையில நாம கூட்டு வச்சிக்க கேட்டு வரச்சொல்லிடு” என்று மகனிடம் மகுடி வாசித்தார்.
“நான் சொல்லிடறேனுங்கப்பா” என்றான் கையை கட்டிக்கொண்டு.
நீலகண்டன் தான் செய்த பாவத்தால்தான் தன் பொண்ணுக்கு இப்படியொரு வாழ்க்கை அமைஞ்சிருச்சோவென்று மனதிற்குள் ஊமைக்கண்ணீர் வடித்தார்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis