ATM Tamil Romantic Novels

என்னை உனக்குள் தொலைத்தேனடி

 

அத்தியாயம் – 13

 

நடுஇரவின் நிசப்தமான சூழ்நிலையில் காரில் இருவரும் பேசிக்கொண்டே என்பதைவிட தங்கள் வாழ்க்கையில் அடுத்து நடக்கப் போகும் நிகழ்வுகளை பட்டியலிட்டு கொண்டு சென்றனர். 

 

கல்யாணத்தைப் பற்றி பேசி ஒரு முடிவு எடுத்துக் கொண்ட பின்னர் தான் இவருக்கும் சற்று நிம்மதியாக இருந்தது அதுவரை தப்பு பண்ணிவிட்டோமே என்ற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.

 

அனைத்தையும் பேசி முடித்த பின்னர் அமைதியாக சென்று கொண்டிருந்த கார் பயணத்தில் அதுவரை மனதை உறுத்திக் கொண்டு இருந்த விஷயமாக எங்கே தன்னை தப்பாக நினைத்து விட்டாரோ என்ற எண்ணத்தில் இருந்தவள்.

 

இப்பொழுது அப்படி இல்லை என்ற எண்ணத்திலும் காரில் இருந்த அமைதியும், காற்றும் சேர்ந்து கொள்ள சற்று நேரத்தில் நேற்று உழைத்த உழைப்பிற்கு உடல் சோர்வும் சேர்ந்து கொள்ள நன்றாக காரில் சீட்டில் சாய்ந்து தூங்க ஆரம்பித்து விட்டாள். 

 

அழகர் தனது யோசனையிலும் தான் இப்போது எடுக்க போகும் முடிவிலும் எவ்வளவு தூரம் உறுதியாக இருக்க முடியுமோ அவ்வளவு தூரம் இருக்க வேண்டும் என்ற தனக்குள் மன தைரியத்தை கூறிக் கொண்டும் அவளின் மீதமுள்ள படிப்பிற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

 

என்றும் அடுத்த கட்ட நடவடிக்கையாக தான் இதுவரை செய்து கொண்டு வந்திருந்த வட்டி தொழிலும் கட்டப்பஞ்சாயத்தையும் நெறிமுறையாக மாற்ற வேண்டும் என்று பலதரப்பட்ட சிந்தனையில் காரை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான்.

 

அடுத்த கட்டமாக ராகேஷ் அவனுக்கு பெரிய விஷயம் கிடையாது என்றாலும் வள்ளியை அவன் ஏதாவது செய்வதற்கு முன்பு தான் அவளை பாதுகாக்க வேண்டும் என்ற யோசனையும் அவனுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

 

இப்படியே யோசித்துக் கொண்டே எவ்வளவு தூரம் சென்றானோ தெரியவில்லை அவள் என்ன செய்கிறாள் என்று திடீர் என்று நினைப்பில் திரும்பி பார்க்க அவளோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

 

அதைப் பார்த்தவன் இன்னும் வாகாக அவள் இருக்கும் சீட்டை கொஞ்சம் இறக்கிவிட்டு நன்றாக படுக்க வசதி செய்து கொடுத்தான். 

 

பின் அப்படியே நீண்ட தூரம் காரை செலுத்திக்கொண்டு வந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் சோர்வு அவனையும் தாக்க அதற்கு மேல் தன்னால் முடியாது என்பது போல் நினைத்து அருகில் வந்த ஒரு ஊரில் காரை நிப்பாட்டி அங்கிருந்த டீக்கடையில் டீ வாங்கி குடிக்க ஆரம்பித்தான்.

 

அவளையும் டீ குடிக்க எழுப்பி பார்க்க ஆனால் அவள் திரும்பி படுத்து தூங்கிவிட்டாள்.

 

அவளை காரில் அப்படியே தனியாக விட்டு செல்ல மனம் இல்லாமல் டீயை வாங்கிக் கொண்டு காரின் அருகிலேயே இருந்து குடித்துக் கொண்டிருந்தான்.

 

அப்பொழுது மிகவும் அசௌகரியமாக உணர்ந்தவள் சற்றென்று விழிப்பு தட்ட அங்கு கார் நின்று அதன் அருகில் அழகர் டீ குடித்துக் கொண்டிருப்பதை தான் கண்டாள்.

 

அவனிடம் எதுவும் கூறவும் முடியாமல் ஒரு மாதிரியாக நெளிந்து கொண்டே சீட்டில் அமர்ந்திருந்தவள் அழகர் டீ குடித்துவிட்டு வந்து அவனுடைய இருக்கையில் அமரவும் இவள் முழித்து கொண்டு இருப்பதை பார்த்தவன்.

 

“ எப்போ எந்திரிச்ச டீ குடிக்கிறியா” என்று கேட்டான் அதற்கு அவளோ வேண்டாம் என்று ஒரு மாதிரியாக தலையசைக்க அவளை பார்த்தவன் என்னவென்று ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

 

அவன் பார்ப்பது வேற சற்று சங்கடத்தை வள்ளிக்கு கொடுக்க தன்னுடைய அவசரமும் அவளுக்கு சேர்ந்து கொள்ள மிகவும் சங்கடமாக உணர்ந்தாள்.

 

அவன் சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டும் என்று வள்ளி நினைக்க அவனுக்கும் ஒன்றுமே புரியவில்லை இதற்கு மேல் தாங்காது என்பது போல் அவளே அவனிடம் கேட்டு விட்டாள்.

 

“அது பாத்ரூம் போகணும் இங்க எங்க போறதுன்னு தெரியலை” என்றே நெளிந்து கொண்டே சொல்ல 

 

அதைக்கேட்டவனுக்கும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது பின்பு “ நீ ஒரு நிமிஷம் இங்கேயே உட்கார்ந்து இரு நான் டீகடையில விசாரிச்சுட்டு வரேன்” என்று கூறி சென்றான்.

 

சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் வந்தவன் அவளது பக்கம் இருந்த காரின் கதவை திறந்து வெளியே வர சொன்னான் 

அவளும் வெளியே வர கடைக்கு அந்த பக்கம் இருந்த ஒரு இடத்தில் சென்று முடித்துக் கொண்டு வருமாறு கூறினான்.

 

அதில் இருட்டைப் பார்த்தவள் கொஞ்சம் தயக்கத்துடனே இருக்க சற்று என்று அவளது கையை பிடித்தவன் அந்த பக்கம் அழைத்து சென்று அனைத்தையும் முடித்துக் கொண்டு அவளை கையோடு கூட்டிக் கொண்டு வந்தான். 

 

அவன் செய்யும் சிறு சிறு செயல்களில் கூட அவனது அக்கறையை கண்டவள் அவன் மேல் உள்ளே தனக்குள் ஏதோ செய்வதை உணர்ந்தாள்.

 

இப்படியே இருவரும் மதுரை வந்து சேர மணி ஆறை தொட்டு இருக்க காலேஜ் உள்ளே சென்று காரை ஹாஸ்டல் வரை கொண்டு வந்து நிறுத்தினான்.

 

ஏன் என்று கேள்வியாக பார்த்தவளை கண்டவன் 

“ மணி என்ன தெரியுமா ஆறு மணி ஆகிடுச்சு காலேஜ்ல யாரும் இருக்க மாட்டாங்க அதனால் தான் உன்னை இங்க வரை கொண்டுவந்து விட்டேன் கவனமாக இரு” என்று கூறினான்.

 

“சரி” என்று கூறியவளை பார்த்தவன் “ என்னோட போன் நம்பர நோட் பண்ணிக்கோ என்ன எமர்ஜென்சி நாலும் உடனே எனக்கு கூப்பிடு” என்று கூறி தனது நம்பரை அவரிடம் கொடுத்து போக சொன்னான்.

 

அவள் செல்லவும் அதே நேரம் அழகருக்கும் அவன் தொழில்

சம்பந்தமாக முக்கியமான போன் வர அங்கேயே நின்று பேச ஆரம்பித்தான்.

 

இவனும் அவனிடம் சொல்லிக் கொண்டு நேராக ஹாஸ்டலில் உள்ள செல்லும்போது இவளை பார்த்து அனைவரும் ஒரு மாதிரியாக பேசுவதை கண்டால்.

 

ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் நேராக உள்ளே செல்ல வாசலிலேயே இவள் வந்த தகவலை வார்டனிடம் சொல்லி மற்ற மாணவிகள் அழைத்து வந்திருந்தனர். 

 

இவளைப் பார்த்ததும் அவர் 

“ எங்கம்மா போய்ட்டு வர நேத்து காலையில காலேஜுக்கு போன பொண்ணு இன்னைக்கு சாயங்காலம் வர இது என்ன ஹோட்டலா” என்று திட்ட ஆரம்பிக்க.

 

“இல்ல மேம் என்ன நடந்துச்சுன்னு நான் கண்டிப்பா உங்களுக்கு சொல்றேன் வாங்க உள்ள போய் பேசுவோம்” என்று கூற 

 

“இல்லம்மா இப்படி எல்லாம் வந்தா சரிப்பட்டு வராது நீ யார் கூடவோ ஓடிப் போயிட்டேன்னு சொல்லி ஹாஸ்டல் முழுவதும் பரவி உன்னை திரும்ப உள்ளே விடக்கூடாதுனு மேனேஜ்மென்ட் சொல்லிடுச்சு.

 

உன்ன நான் இப்ப உள்ள விட்டேனா ஹாஸ்டலுக்கும் காலேஜுக்கும் தான் கெட்ட பேரு தான் வரும் அதனால நீ இனிமே இங்க தங்க முடியாது” என்று கூறினார்.

 

“மேம் திடீர்னு நீங்க இப்படி சொன்னா நான் என்ன பண்றது நான் கண்டிப்பா யார் கூடயும் ஓடி எல்லாம் போகல மேம் என்ன இங்க காலேஜ்ல இருந்து கடத்திட்டு போயிட்டாங்க வேற ஒருத்தர் தான் என்ன காப்பாத்தி கூட்டிட்டு வந்தாங்க” என்றாள்.

 

அதற்குள் அனைவரும் அங்கே கூடிவிட விஷயம் கேள்வி பட்டு கலையரசியும் அங்கே வந்து விட்டாள்.

 

வள்ளி எவ்வளவு கூறியும் அவளது பேச்சு அங்கு எடுபடாமல் போனது அதுவரை அங்கு நடப்பதை பார்த்தாலும் போனில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த அழகர் சட்டென்று தான் பேசிய பேச்சை முடித்துக் கொண்டு அவ்விடம் வந்தான். 

 

என்ன விஷயம் என்று வள்ளியிடம் கேட்க அவளும் அனைத்தையும் கூறினாள்.

 

அழகரும் விஷயத்தை எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவனால் ஹாஸ்டல் வார்டனை சம்மதிக்க வைக்க முடியவில்லை.

 

மீண்டும் ஒரு முயற்சியாக அவரை பார்த்து “ மேம் அந்த பொண்ணு கடத்திட்டு தான் போயிட்டாங்க நான் தான் பார்த்து கூட்டிட்டு வந்தேன் இதுதான் உங்க ஹாஸ்டல்ல பாத்துக்குற லட்சணமா” என்று கேட்க

 

வள்ளியிடம் அதுவரை முடியாது என்று தைரியமாக பேசிக் கொண்டிருந்தவர் அழகரிடம் அது போல் பேச முடியாமல் அவனது பேச்சு வார்த்தை சற்று பயத்தையே கொடுத்தது. 

 

ஆனால் ராகேஷிடம் அவர் வாங்கிய பணம் அவரை வள்ளியை உள்ளே சேர்க்க விடாமல் ஏதாவது சமாளித்து ஆக வேண்டிய சூழ்நிலையை கொண்டு வந்தது. 

 

ஆம் இது அனைத்திற்கும் காரணம் ராகேஷ் தான் அழகர் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு செல்லவுமே சற்று என்று யோசித்தவன் மீண்டும் காலேஜ் வந்து வள்ளி ஓடிப் போய்விட்டால் என்று அனைவரிடம் பரப்ப சொல்லிவிட்டான்.

 

ஹாஸ்டல் வார்டனிடம் காசை கொடுத்து வள்ளியை இனிமேல் ஹாஸ்டலில் அனுமதிக்க கூடாது என்று கூறிவிட்டான். 

 

முதலில் மறுத்தவர் பின்பு அவனது பணமும் காலேஜில் அவனது அப்பாவின் பதவியும் அவரை சம்மதிக்க வைத்தது. 

 

அதனால் அழகரிடம் முடியவே முடியாது என்று தீர்க்கமாக மறுத்துவிட்டார்.

 

“ சார் நான் என்னோட கடமையைத்தான் செய்கிறேன் இதுக்கு மேல என்னால ஒன்னும் பண்ண முடியாது உங்களுக்கு வேணும்னா நீங்க போய் நேரா மேனேஜ்மென்ட்ட பேசிக்கோங்க” என்ற பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டார். 

 

அழகர் அங்கு பேசிக்கொண்டு இருக்க வள்ளியும், கலையும் நின்றுக்கொண்டு இருந்தார்கள்

வள்ளிக்கு ஆறுதல் கூறி பேசிக்கொண்டு இருந்தவர்களை

அங்கு அங்கு கூடியிருந்த பெண்கள் அவளை பற்றி தவறாக பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

 

“ ஏய் இங்க பாருங்க டி யாரோ கடத்திட்டு போயிட்டாஙகளாம் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு” என்று ஒருவள் கேட்க

 

“ இவளே அவளோட பாய் பிரண்டு கூட ரூம் போட்டு தங்கிட்டு இப்ப வந்து என்ன கடத்திட்டாங்கன்னு ஒப்பாரி வைத்து ஏமாத்த பார்க்கிறா இதெல்லாம் நடக்கிற விஷயமா நாமெல்லாம் இங்க படிக்கலையா நம்ம எல்லாம் யாரையாவது கடத்தறாங்களா என்ன” அவளது வன்மத்தை கக்க 

 

இதை பின்னிருந்து கேட்டுக் கொண்டிருந்த கலையரசி சண்டைக்கு சென்று விட்டாள்

 

“ஏய் என்னங்க டி ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேசிக்கிட்டு இருக்கீங்க அவள நீ பார்த்தியா அவளுக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்காதா நீ பார்த்தியா தேவையில்லாத உருட்டலாம் உருட்டிட்டு இருந்தனு வச்சுக்கோ உன்ன இங்க இருந்து உருட்டி விட்ருவேன்” என்று செல்ல

 

“நீ என்ன கலையரசி எங்கள்ட்ட சண்டைக்கு வர நாங்க மட்டுமா இப்படி சொல்றோம் காலேஜும் ஹாஸ்டல்லும் எல்லாமே தான் சொல்லுது இவ யார் கூடவா ஓடிப் போயிட்டானு சும்மா வந்து எங்கள்ட்ட சண்டை போடாத” என்று கூற

 

இவர்கள் இங்கே இப்படி பேசிக் கொண்டிருக்க அதை கேட்டுக் கொண்டிருந்த வள்ளிக்கோ இப்படியே இந்த பூமியில் புதைந்து செத்துவிட மாட்டோமா என்று தோன்றி விட அங்கேயே மடங்கி கதறி அழ தொடங்கி விட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3 thoughts on “என்னை உனக்குள் தொலைத்தேனடி”

Leave a Reply to купить чиллер для охлаждения воды на производство Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top