ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

பரமசிவம் குடும்பம்  ராயனின் குடும்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தது  
 
தீபாவோ  பிரனேஷிடம்  நதியாவின் போட்டோவை காட்டி “இந்த பொண்ணு கண்ணனோட தங்கச்சி நதியா அப்பா உனக்கு கல்யாணம் பண்ண பேசலாம்னு இருக்காருடா உனக்கு பொண்ணை  பிடிச்சிருக்கானு  சொல்லு”  என்றாள் 
 
பிரனேஷோ “வாவ் அக்கா பொண்ணு அழகா இருக்கா கிராமத்து அழகி என்று கண்ணை விரித்தவன் “பட் அவளுக்கு பிடிச்சிருந்தா எனக்கு ஓ.கேதான்க்கா” என்றான் தோளைக்குலுக்கி 
 
பிரனேஷ் சாக்லேட் பாய்.. ஜாலியான பேர்வழி அப்பா பார்த்து வைக்கும் பெண்ணை கல்யாணம் பண்ணி கொள்வேனென்று  தன்னிடம் லவ் சொல்லிய பெண்களை ரிஜெக்ட் செய்துவிட்டான் 
 
ஹோம்லி லுக்கில் இருந்த நதியாவை பார்த்தது பிடித்து விட்டது பிரனேஷக்கு 
 
“கண்ணா நாங்க சென்னை வந்துட்டோம் எங்க இருக்க” என்ற ராயனிடம் அவன் இருக்கும் இடத்தை சொல்லவும் கண்ணணை கூட்டிக்கொண்டு தீபாவின் வீட்டுக்குச் சென்றனர்.
 
நதியாவோ பூங்கொடியும் தியாவும் வந்திருந்தா இன்னும் ஜாலியா இருக்கும் அத்தை என சோகமாய் பேசியதும் 
 
“தியாவுக்கு காய்ச்சல் வரமுடியாதுனு போன் பண்ணிட்டா கல்யாணத்துக்கு ஒருவாரம் வந்து இருக்குறேன் சொல்லிட்டா நதி” என்றார் அழகம்மை 
 
தீபாவோ பட்டுபுடவையில் கழுத்து நிறைய நகைகளை  அள்ளிப்போட்டுக்கொண்டு முகத்தில் ஓவர் மேக்கப் போட்டு கண்ணனுக்கு போனில் விடியோ கால் செய்தாள்
 
கண்ணனனோ ராயன் பக்கம் அமர்ந்திருந்திருக்கவும் தீபாவின் போனை கட் செய்து விட்டான்
 
‘ என்னோட மேக்கப்பை கட்டலாம்னு போன் பண்ணினா என்ன இவன் போனை எடுக்காம இருக்கான்” என்ற கடுப்பில்   மீண்டும் போன் அடித்தாள் தீபா 
 
” பத்து நிமிசத்துல வந்துடுவோம் அண்ணா பக்கத்துல இருக்காரு” என்று மெசேஜ் போட்டு விட்டான் 
 
“அண்ணா இருந்தா போன் பேசக்கூடாதா என்ன அநியாயமா இருக்கு  வரட்டும் பார்த்துக்குறேன்” என்றாள் கோபத்துடன்
 
கண்ணன் தீபாவின் வீட்டிற்கு வழித்தடத்தை பாலாஜியிடம் சொல்லிக்கொண்டிருந்தான். பாலாஜியை  பெண் பார்க்கும் நிகழ்விற்கு கண்டிப்பாக நீ வந்தேயாக வேண்டுமென்று கட்டயப்படுத்தி  அழைத்துவந்துவிட்டான் ராயன்.
 
கோமளத்திற்கு பாலாஜி வருவது பிடிக்கவில்லையென்றாலும் ட்ராவல்ஸ் டிரைவராக வந்ததும் சற்று அமைதியாக இருந்துக்கொண்டார்
 
ராயன் வீட்டு ட்ராவல்ஸ் தீபாவின்  வீட்டின் கேட்டின் உள்ளே சென்றது.
 
ராயனின் வீடு அளவிற்கு இல்லாமல் போனாலும் ஓரளவு பெரிய வீடாகதான்  இருந்தது..கோமளம்  வேனை விட்டு இறங்கும் போது “ராயா நம்ம வீட்டு வசதியை விட குறைஞ்சவங்களா இருக்காங்களேப்பா வீடும் சின்னதா இருக்கேப்பா இவங்க கூட நாம சம்பந்தம் வைச்சிகிட்டா சரியாய் வருமா வேற இடம் பார்ப்போமா” என்று முகத்தில் மருந்துக்கும் புன்னைகை இல்லாமல் 
 
கோமளத்தின் பேச்சை கேட்டு அதிர்ந்த கண்ணனனோ ராயனை பாவமாய் பார்த்து வைத்தான். 
 
“நான் பார்த்துக்குறேன்” என்று கண்ணை முடித்திறந்ததும் கண்ணன் நிம்மதி பெரும்மூச்சு விட்டான்.
 
“சென்னைக்குள்ள இந்த வீடு பல லட்சம் மதிப்பு இருக்கும் பெரியம்மா இரும்பு கம்பி தயாரிக்கும் கம்பெனி வச்சிருக்காங்க கண்ணனோட மாமனாரு.. நம்ம அளவுக்கு பெரிய ஆளுதான் நான் எல்லாம் விசாரிச்சிட்டேன்  என கோமளத்திற்கு நம்பிக்கையை கொடுத்தான் ராயன்
 
“நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் பொண்ணை பார்த்துட்டு மேற்கொண்டு பேசலாம்” என்றாலும்  தீபாவின் வீட்டை சுற்றிப்பார்த்துக்கொண்டே நடந்தார் 
 
வாசலில் நின்ற பரமசிவம் மங்களம் பிரனேஷ் மூவரும் “வாங்க வாங்க” என்று மலர்ந்த முகத்துடன் அனைவரையும் வரவேற்றனர்.
 
கோமளத்தின் கண்களோ மங்களத்தின் கழுத்தில் பதித்தது எத்தனை நகை பேர்ட்டிருக்கிறாரென்றுதான்.
 
கோமளம் எதிர்பார்த்த மங்களம் பெரிய கொடியும் ரெட்டைவடச்செயினும்  வைர அட்டிகையும் போட்டிருப்பதை கண்டு ஒரளவு திருப்தி அடைந்தார்.
 
பெரிய ஹாலில் ராயன் பக்கத்தில் தெய்வநாயகமும் நீலகண்டனும் அமர்ந்திருந்தனர் கோமளம், தையல்நாயகி, அழகம்மையும் தனி சோபாவில் அமர்ந்துக்கொண்டு வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தனர்
 
பரமசிவம் ராயனிடம் அவனது தொழில் சம்பந்தமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். 
 
கோமளோ “பொண்ணை வரச் சொல்லுங்க மத்ததெல்லாம் பேசணும்ல” என்றவரின் குரல் உயர்ந்து வந்தது
 
அழகம்மையோ “சின்ன அண்ணி பெரிய அண்ணிக்கு ஆசை நிறைய இருக்கு பொண்ணு வீட்டுக்குள்ள வரும்போது பொண்ணோட அம்மா கழுத்தையே உத்து பார்த்துட்டு வராங்க நம்மகிட்ட இல்லாத நகையா பணமா” என்று நொடித்துக்கொண்டார் அழகம்மை
 
“ராயன் கோமளம் அக்காவை பேசவிடமாட்டான் நீ அமைதியா இரு” என்று அழகம்மையின் கையை பிடித்தார் தையல் நாயகி 
 
முல்லையும் நதியாவும் அழகம்மையின் பக்கம் நின்றிருந்தனர். பிரனேஷின் கண்கள் நதியாவை மொய்த்துக்கொண்டிருந்தது..
 
பிரனேஷை ஏதேச்சையாக பார்த்த நதியாவோ “இவன் எதுக்கு நம்மை குறுகுறுனு பார்க்குறான்” என்று அவனை முறைத்து விட்டு தலையை குனிந்து கொண்டாள்
 
பாலாஜி ட்ராவல்ஸ் பக்கம் நின்றுகொண்டான். 
 
ராயனோ “பாலாஜி எங்க இருக்க வீட்டுக்குள்ள வாடா” என்று போனில் கூப்பிடவும் “போன் பேசிட்டு வரேன்டா” என்று சமாளித்து வீட்டுக்குள் போகாமல் நின்றுவிட்டான்.
 
மங்களம் தீபாவின் கையில் காபி ட்ரேயை கொடுத்து அழைத்துக்கொண்டு வந்தார். ஓவர் மேக்கப்பில் வந்த தீபாவை கோமளத்திற்கு பிடித்துவிட்டது. 
 
“நாயகி பொண்ணு அழகா இருக்காளா ஓவரா பெயிண்ட் அடிச்சிருக்களோ நான் இன்னிக்கு கண்ணாடியை போட்டு வரலை உன் கண்ணுக்கு எப்படி தெரியுறா” என்றவரிடம் “அக்கா பொண்ணு மகாலஷ்மியாட்டம் இருக்கா கண்ணனுக்கு ஏத்த ஜோடி” என்றார் மிளிர்ந்த சந்தோசத்துடன்
 
“உன் மருமக முல்லையை விட தீபா அழகா இருக்காளா” என்று கண்ணை அகல விரித்து  தீபாவை பார்த்தார் கோமளம் 
 
அழகம்மையோ “பொண்ணு அழகா இருக்கா பெரிய அண்ணி நம்ம மருமகள்களை அழகு போட்டிக்கா அனுப்ப போறோம்” என்றதும்தான் திருப்தியானார் கோமளம் 
 
தீபாவோ பெரியவர்களுக்கு காபியை கொடுத்து விட்டு வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாள் .
 
“எனக்கு வெட்கம் எல்லாம் படத்தெரியாது கண்ணா” என்று கண்ணனிடம் சண்டை போட்டது தனி விசயம்
 
“எனக்காக வெட்கப்படறது போல நடிடி” என்று கண்ணன் தீபாவிடம் கெஞ்சி இருந்ததற்காக தலைகுனிந்து கையை கட்டி நின்றிருந்தாள்
 
காபியை குடித்து விட்டு “எங்க வீட்டு பையன் உங்க பொண்ணை விரும்புறேனு சொன்னதால சம்பந்தம் பண்ண வந்திருக்கோம் ஆனா எங்க வீட்டு மருமகளா வரப்பொண்ணுக்கு  நீங்க” என்று கோமளம் பேச்சை ஆரம்பித்தார் 
 
“பெரியம்மா நான் எல்லாம் பேசிட்டேன்” என்று ஒற்றை வார்த்தையில் கோமளத்தை அமைதிப்படுத்திவிட்டான் வல்லவராயன்
 
தெய்வநாயகமோ “அடுத்த மாசம் 15ஆம் தேதி வளர்பிறை மூகூர்த்தம் அந்த நாளுல கல்யாணத்தை வச்சிக்கலாம் சம்பந்தி உங்களுக்கு சம்மதமா” என்றவரோ கோளமத்தையும் பார்த்தார்.
 
கோமளோ பேச வாயெடுத்தால் ராயன் “பெரியம்மா நான் பார்த்துக்குறேன்” என்று அவரை வாயை திறக்கவிட வில்லை. கோமளம் வீட்டில் அதிகாரம் செய்தாலும் வெளியே ஆண்கள் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசமாட்டார்.
 
தெய்வநாயகமும் பரமசிவமும் தாம்பூலத்தை மாற்றிக்கொண்டனர். தீபாவிற்கு பட்டுபுடவையும் பெரிய ஆரமும் வாங்கி வந்திருந்தான் ராயன் கோமளத்திடம் கூட எதுவும் கூறிவில்லை. பொண்ணுதானே பார்க்கப்போறோம் நிச்சயம் பண்ணும்போது நகை போட்டுக்கொள்ளலாம் என்று சொல்லவிடுவாரென்று அவரிடம் எதையும் கூறாமல் மறைத்துவிட்டான்.
 
தாம்பூலத்தில் நகையும் புடவையும் கண்டு என்கிட்ட ஒருவார்த்தை கூட கேட்காமல் நகை எடுத்துவந்திருக்கான் இவன் இஷ்டத்துக்கு முடிவு எடுத்து எல்லாம் பண்ணுறான் என்று கோபக்கொண்டாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
 
தீபாவை அவளது அறைக்குள் போகச் சொல்ல நதியாவும் முல்லையும் தீபாவின் அறைக்குச் சென்றவர்கள் “நான் கண்ணன் அண்ணாவோட தங்கச்சி இவங்க முல்லை அண்ணி ராயன் அண்ணா வொய்ப்” என்று தீபாவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள்;
 
“உன்னை கண்ணா போட்டோவுல பார்த்திருக்கேன்.. இவங்களை இப்பதான் பார்க்குறேன் என்ன படிச்சிருக்கீங்க” என்றாள் முல்லை கட்டியிருந்த பட்டுபுடவையை ஆராய்ந்து கொண்டே 
 
முல்லையோ “நான் பி.ஏ தமிழ் முடிச்சிருக்கேன் எம்.ஏ தமிழ் அட்மிஷன் போட்டிருக்கேன் அக்கா” என்றாள் புன்னகையுடன்
 
“அக்கானு கூப்பிடவேணாம் பேரு சொல்லி கூப்பிடு உன்னை விட ரெண்டு வயசு மட்டும் மூத்தவ” என்றதும் முல்லையோ “சரி” என்றவாறு தலை அசைத்தாள் 
 
நதியாவோ “யார் பர்ஸ்ட் லவ் புரோபோஸ் பண்ணியது அண்ணி என்று தீபாவிடம் கேட்கவும்
 
“உங்க அண்ணாதான் என்கிட்டே பர்ஸ்ட் லவ் சொன்னாரு நான்  ஓ.கே பண்ணல.. ரெண்டு மாசம் கழிச்சுதான் ஓ.கே பண்ணினேன்” என பெருமிதமாக சிரித்தாள் 
 
“சாப்பிடலாம் வாங்க” என்று பரமசிவம் எழுந்து நின்றார்
 
பாலாஜி இன்னும் வீட்டுக்குள் வராமல் இருக்க “நீங்க சாப்பிட போங்க நான் வந்துடறேன்” என கூறிவிட்டு  வீட்டுக்கு வெளியே சென்றவன் போன் பேசிக்கொண்டிருந்த பாலாஜியின் போனை பிடுங்கி காதில் வைக்க போனில் யாரும் பேசாதது தெரிந்து பாலாஜியை முறைத்தவன் “எதுக்குடா என்கிட்ட பொய்யா நடிக்குற உன்னை வீட்டுக்குள்ள வரச்சொல்லியிருந்தேன்ல” என்று முகத்தில் கடுமையை காண்பித்தான் 
 
“நான் உனக்கு பேமலி ப்ரண்ட் கிடையாதுடா உனக்கு மட்டும்தான் பிரண்ட்” என்றான் அழுத்தமாக
 
“நீ என்னோட குடும்பத்துல ஒரு ஆளுதான் வாடா” என்று நண்பன் கையை பிடித்து கூட்டிச்சென்றான் ராயன். 
 
இப்படி என்மேல பாசமா அக்கறையா இருக்கறவனுக்கு என்னால எப்படி துரோகம் பண்ண முடியும்” என்றது அவனின் ஆழ்மனது
 
“இவன் என்னோட நண்பன் என்னோட கம்பெனியில எனக்கு அடுத்து இவன்தான் பொறுப்பு” என்றான் பரமசிவத்திடம்
 
“வணக்கம் தம்பி ” என்று கையெடுத்து கும்பிட்டார் பரமசிவம்
 
கோமளமோ பாலாஜியை முறைத்தவர் “இவன் இங்க வரலைனு யார் அழுதாங்க வேலைக்கார நாயை நடுவீட்டுக்குள்ள கூட்டிட்டு வாரான் இவனை என்னால எதிர்த்து பேசவும் முடியல” என்று அங்கலாய்த்துக்கொள்ள மட்டுமே முடித்தது
 
கண்ணனையும் தீபாவையும் ஒன்றாக சாப்பிடஉட்கார வைத்தனர். தீபாவோ “கண்ணா உங்க அம்மா ரொம்ப டெரர் பீஸ் போல முகத்துல சிரிப்பே பார்க்க முடியலையே  என்னை அவங்களுக்கு பிடிக்கலையோ” என்றவளிடம் “அம்மா நேச்சரே அப்படித்தான் தீபு அவங்க முன்னாடி அடக்கமா இருக்கறது போல காண்பிச்சிக்கோ அவங்க காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்க மறந்துடாதே” என்றான் 
 
“கல்யாணம் முடிச்சு ஆசிர்வாதம் வாங்குறேன் இப்போவெல்லாம் நான் ஆசிர்வாதம் வாங்கமாட்டேன்” என்று இதழை சுளித்தாள் 
 
“ப்ளீஸ்டி எனக்காக” என்று கண்ணன் கெஞ்சவும் “சரி சரி விழுந்து தொலைக்குறேன் என்று சலித்துக்கொண்டாள் தீபா.
 
அனைவரும் சாப்பிட்டு முடித்து கல்யாணத்தை பேசிக்கொண்டிருந்தனர். “அப்போ நாங்க கிளம்புறோம்” என்று ராயன் எழுந்து நின்றான்
 
பரமசிவமோ “சுத்தி வளைச்சு பேச விரும்பல உங்க பொண்ணு படிப்பு முடிச்சிட்டாங்கனு கேள்விபட்டேன் என் மகனுக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணித்தருவீங்களா” என்று பட்டென்று கேட்டு விட்டார்
 
கோமளோ “ஓ இவன் எமகாதக பயலா இருக்கானே ஆனா பையன் மூக்கும் முழியுமா இலட்சணமா நதியாவுக்கு பொருத்தமானவனாத்தான் இருக்கான் இருந்தாலும் நம்ம பொண்ணை இதை விட பெரிய வசதியான வீட்டுக்கு கொடுக்கலாம்னு இருந்தேன்” என்று நினைத்தவரோ ராயனை பார்த்தார்
 
ராயனோ “உங்களுக்கு விருப்பமா பெரியம்மா” என்றவனோ நதியாவையும் பார்க்கதவறவில்லை. 
நதியாவுக்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஏன் இங்கே வந்தோமென்று வருத்தம் அடைந்தாள். தன் அழுகை யாரும் பார்க்ககூடாதென தலையை குனிந்து கொண்டாள்
 
கோமளம் யோசிப்பதை கண்ட பரமசிவமோ சம்மந்தியம்மா என் மகன்தான் இப்போ என்னோட கம்பெனிகளை பார்த்துக்குறான். இந்த வருசம் டன்ஓவர் கோடிக்கணக்குல கொண்டு வந்திருக்கான் இன்னும் கொஞ்ச நாளுல உங்க மகன் ராயன் போல பெரிய ஆளா வந்துடுவான் என்றார் வர்ணஜால பேச்சோடு
 
பாலாஜியோ அமைதியாய் கையை கட்டிநின்ற பாலாஜியோ தலைகுனிந்து நின்ற நதியாவைத்தான் பார்த்தான்
 
 ப்ரனேஷ் கல்யாண பெண்ணின் சம்மதத்தை கேட்டதும் அவனின் குணம் ராயனுக்கு  பிடித்து விட்டது.. சிறுவயதில் கம்பெனியை பொறுப்பாக நடத்துகிறான் என்று அவனை நம்பி நதியாவை கல்யாணம் பண்ணிவைக்கலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டான் 
 
‘ராயன் போல வந்துடுவான் என்று பரமசிவம் சொன்னதும்  கோமளத்திற்கு ஆனந்தம் தாள முடியவில்லை உடனே எங்களுக்கு சம்மதம்தான்” என்றார் முகத்தில் பளீர் புன்னைகயுடன்
 
பிரேனேஷோ “பொண்ணுக்கு கல்யாணத்துல சம்மதமானு கேட்டுச் சொல்லுங்க” என்றான் நதியாவை பார்த்து கொண்டே 
 
கோமளமோ “என்பொண்ணு என் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசியது கிடையாது அவங்கிட்ட சம்மதம் கேட்கவேண்டியதில்லை” என்றார் தீர்க்கமாக மகள் மேல் இருந்த நம்பிக்கையில் 
 
நதியாவிற்கு அங்கே நிற்க பிடிக்கவில்லை கண்ணீரை துடைத்துக்கொண்டவள் அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியே ஓடிவிட்டாள்.
 
“பொண்ணுக்கு வெட்கம் வந்திருச்சு போல அதான் ஓடுறா” என்ற மங்களம் சிரித்தார். ராயன் குடும்பமும் மகளுக்கு வெட்கம் வந்துவிட்டது என்றுதான் நினைத்துக்கொண்டனர் 
 
“அப்போ ரெண்டு கல்யாணத்தையும் ஒரே நாளுல வச்சிடலாமா” என்ற பரமசிவத்திடம் “இல்லங்க எங்க வழக்கத்துல ரெண்டு கல்யாணமும் ஒரே நாளுல வைக்க மாட்டோம் அடுத்த முகூர்த்ததுல வச்சிடலாம்” என்றார் தெய்வநாயகம்
 
“சரிங்க அப்படியே வச்சிடலாம்” என்றார் பரம்சிவம் மகளுக்கு கொடுத்த சீர்வரிசை பணத்தை மறுபடியும் திரும்ப எடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் 
 
முல்லையின் முகத்தில் சிரிப்பு காணாமல் போனது இப்போ என்ன செய்வது பெரியவங்க எல்லாம் சேர்ந்து நதியாவுக்கு கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க ஆனா அவளுக்கு விருப்பம் இருக்கா இல்லையானு ஒரு வார்த்தை கேட்டிருக்கணும்ல எல்லா விஷயத்தையும்  சரியா முடிவு பண்ணுற மச்சான் இதுல மட்டும் ஏன் அவசரபட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாரு” என்று அவள் மனது  தவித்துக்கொண்டிருந்தது.
 
“அப்போ நாங்க கிளம்பறோம்” என்று கையெடுத்து கும்பிட்டு வெளியே வந்தனர்.
 
கண்ணனோ தீபாவிடம் அப்பார்ட்மெண்ட் போனதும் போன் பண்ணுறேன் என்று மேசேஜ் போட்டான் அவளும் ஓ.கே என்று மேசேஜ் தட்டிவிட்டாள்
 
ட்ராவல்ஸில் ஏறியதும் நதியா முகத்தை கையால் முகத்தை மறைத்து அமர்ந்திருந்தாள். 
 
“இன்னமும் புது பொண்ணுக்கு வெட்கம் போகலையா”  என்று அழகம்மை நதியாவை கிண்டல் செய்து அவளது பக்கத்தில் உட்கார்ந்தவர் நதியாவின் கையை எடுத்துவிட்டதும் அவளது கண்கள் அழுது சிவந்திருந்ததை கண்ட அழகம்மையோ பதறிவிட்டார்
 
“என்னாச்சு நதி கண்ணு சிவந்து கிடக்கு அழுதியா” என்று அழகம்மை பதட்டத்துடன் கேட்கவும்
 
“பாலாஜி வண்டிய எடு” என்றிருந்தான் ராயன். மாப்பிள்ளை வீட்டுக்கு 
 
பாலாஜிக்கோ எங்கே தன்னால இந்த குடும்பத்தில் பிரச்சனை வந்துவிடுமோ ராயனுக்கு என்னால தலைகுனிவு வரக்கூடாது நதியா வாய திறந்து என்னை லவ் பண்ணுறேனு சொல்லக்கூடாது என்று அச்சத்துடன் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான்
 
“சித்தி எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை” என்று விசும்பினாள்  
 
கோமளோ “ஏன் விருப்பம் இல்லைனு சொல்ற பையன் உன் அண்ணனை போல பிஸ்னஸ் பண்ணுறான் எனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு நீ கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்” என்றார் திட்டவட்டமாக
 
“எனக்குத்தான் மாப்பிள்ளை பிடிக்கலனு சொல்றேன்ல கல்யாணம் பண்ணிக்கோனா என்ன அர்த்தம்” என்றாள் அழுகையுடனே சண்டைக்கு நின்றாள் கோமளத்திடம் 
 
“நான் மாப்பிள்ளை வீட்டுக்கு வாக்கு கொடுத்திருக்கேன்  இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்” என்றிருந்தார் அதிகாரமாக கோமளம் 
 
“நான் பி.ஜி படிச்சு முடிச்சு கல்யாணம் பண்ணிக்குறேன்” என்றாள் மூக்கைஉறிஞ்சிக்கொண்டு 
 
பாலாஜியோ கண்ணாடி வழியாக நதியாவை பார்த்துக்கொண்டுத்தான் வந்தான் அவள் அவனை பார்க்கவும் அவனோ தலையை ஆட்டினான் உன்னை கல்யாணம் செய்துகொள்ளமாட்டேன் என்ற விதமாக
 
தன் காதல் பொய்யானது கிடையாது என் காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் இருமாப்போடு இருந்தவள் இப்போது பாலாஜியின் செய்கையில் உடைந்து விட்டாள் நதியா.
 
“பெரியம்மா நதியா எதுனால கல்யாணம் வேணாம்கிறானு காரணத்தை சொல்லட்டும் அமைதியாய் இருங்க” என்ற ராயனின் பேச்சில்  கோமளம் அமைதியானார்.
 
இரவு வீடு வந்ததும் வண்டியிலிருந்து வேகமாக இறங்கி அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள் நதியா 
 
ராயனுக்கு தங்கையின் நடவடிக்கையில் சந்தேகம் வலுத்தாலும் தங்கை அவசரத்தில் ஏதும் தவறான முடிவை எடுத்துவிடகூடாதென “நதி பாப்பா கதவைத்திற அண்ணன் உன் விருப்பத்துக்கு மாறா எதையும் பண்ணமாட்டேன்” என்று கதவை உடைத்து விடும் அளவிற்கு கதவைத்தட்டினான்
 
“இந்த கல்யாணத் நிறுத்துறேனு சொல்லுங்க நான் கதவை திறக்குறேன்” என்றாள் பிடிவாதமாக 
 
“அண்ணா சொல்லுறேன் கதவை திற பாப்பா”  என்ற ராயனின் பெரும் குரல் அதட்டலில் கதவை திறந்தாள் நதியா 
 
 
பிழை பார்க்கவில்லை பிரண்ட்ஸ் 

4 thoughts on “கடுவன் சூடிய பிச்சிப்பூ”

  1. Оптимизация сайта для лучших результатов.
    SEO продвижение частный специалист [url=https://onyx-style.ru/seo/]https://onyx-style.ru/seo/[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top