அத்தியாயம் 20
கோபவிழிகளுடன் நின்றிருந்த ராயனை கண்டதும் நதியாவுக்கு பயப் பந்து உருண்டது. எச்சிலை விழுங்கிக்கொண்டு “அண்ணா எனக்கு இந்த கல்யாணம் வேணாம் ப்ளீஸ் இப்பவே மாப்பிள்ளை வீட்டுக்கு போன் போட்டு சொல்லிடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டு குலுங்கி அழுவதை அழுத்தமான பார்வையுடனே பார்த்துக்கொண்டு தங்கையின் அருகே வந்தவன் அவளது கையை பிடித்து அறையிலிருந்த சோபாவில் உட்கார வைத்து தானும் உட்கார்ந்து ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு முகத்தை கடுகடுவென வைத்து நதியாவை பார்த்தான்.
முல்லையோ “மச்சான்” என்று அறைக்குள் வர “நீ வெளியே இரு கொடி” என்ற அவன் உயர்ந்த குரலை கண்டு அரண்ட முல்லையோ மறுபேச்ச பேசாமல் அறையை விட்டு வெளியேச் சென்றுவிட்டாள்.
கோமளோ “ராயா அவளை என்கிட்ட விடு ரெண்டு கன்னத்துல விடறேன் தன்னால கல்யாணத்துக்கு சம்மதிச்சுடுவா” என்றார் ஆத்திரமாக.
ராயன் எழுந்து வந்து கதவை லாக் போட்டு மீண்டும் தங்கையின் அருகே வந்து அமர்ந்தவன் அவளது முகத்தில் தெரிந்த கலவரத்தில் அவள் யாரையாவது காதலிருக்கிறாளோவென்று சந்தேகம் எழவும் தனது கோபத்தை புறம் தள்ளி வைத்து நதியாவின் தோளைத்தொட்டு “பாப்பா நீ யாரையாவது லவ் பண்ணுறியா?” என்றான் நிதானமாக தங்கையின் கண்களை பார்த்தபடியே!
‘ஆமா அண்ணா நான் பாலாஜியை விரும்புறேன் எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க’ என்று அண்ணனின் நெஞ்சில் சாய்ந்து அழ துடித்தவள் சற்று முன் பாலாஜி போனில் தன் காதலுக்கு மூடுவிழா போட்டப்பட்டது அவள் முன்னே நிழலாடியது.
ராயன் “நதியாவின் அறைக் கதவை திற” என்று தட்டிக்கொண்டிருக்கும் சமயம் பாலாஜி நதியாவுக்கு போன் செய்திருந்தான்.
“ஹலோ பாலாஜி ராயன் அ.அண்ணா எனக்கு கல்யாணம் பண்ண முடிவு செய்துட்டாங்க நீங்க இப்பவாவது என் லவ்வை ஏத்துக்கோங்க நீ கட்டுற தாலிதான் என் கழுத்துல ஏறணும் வேற யார் தாலி கட்டினாலும் அடுத்த நிமிசம் நான் என் உயிரை விட்ட்டருவேன்” என்றாள் விசும்பிக்கொண்டே.
“பைத்தியக்காரி போல பேசாதே! நதியா உன் மேல எனக்கு லவ் வராது… உன் அண்ணாவோட நட்புக்கு முன்னால உன் காதலை என்னால ஏத்துக்க முடியாதுமா புரிஞ்சுக்கோ எந்த காலத்திலும் நான் உனக்கு கிடைக்கமாட்டேன். சின்ன வயசுல இருந்து உன் அண்ணா உனக்கு பெஸ்டாதான் எல்லாம் வாங்கி கொடுத்திருக்கான்! உனக்காக ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து பண்ணினவன் நீ காலம் பூரா சந்தோமா வாழணும்னு பலமுறை யோசித்துதான் பிரனேஷை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணியிருக்கான் கல்யாணம் வேணாம்னு அடம்பிடிக்காதே நதியா… நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலைனா நான் நாளைக்கே வெளிநாடு கிளம்பி போயிடுவேன். உன் கண்ணுல எப்பவும் முழிக்க மாட்டேன்? உன்னால எங்களோட பலவருச நட்பை கூட விட்டு பிரிஞ்சு போற சூழ்நிலையை உண்டு பண்ணிடாதே நதியா” என காட்டமாக பேசி அவளது காதலுக்கு அமிலத்தை ஊற்றி அவளை துடி துடிக்க வைத்துவிட்டான் பாலாஜி.
“என்னால நீங்க வெளிநாடு போக வேணாம் பாலா” என்றாள் உடைந்த போன குரலில்.
“அப்போ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு” என்றான் கடுப்பாக.
அவளால் அழுகையை கட்டுப்படுத்தி பேச முடியவில்லை “என்னால உங்களை மறக்க முடியாது பாலா” என்ற வார்த்தையை தேய்ந்து போன ரெக்கார்ட் போல பிதற்றவும் “சரி அப்போ நான் நாளைக்கு நைட் அமெரிக்கா ஃபிளைட் ஏறிடுவேன்” என்று உக்கிரமாக பேசி போனை வைக்க போன சமயம் “நீங்க வெளிநாடு போகவேணாம் பாலாஜி” என வலி நிறைந்த குரலுடன் பேசியவள் அவன் அடுத்த வார்த்தை பேசும் முன் போனை அணைத்திருந்தான்.
பாலாஜியால் பெரும்மூச்சு மட்டுமே விடமுடிந்தது.
“நா.நான் யாரையும் விரும்பல அண்ணா” என்ற சொல்லி முடிப்பதற்குள் பெண்ணவளின் மனது துடித்த வலி கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
“அப்புறம் ஏன் டா கல்யாணம் பிடிக்கலைனு சொல்லுற?” என்றான் தங்கையின் தலையை வருடியவாறே.
“அண்ணா அம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, முல்லை உங்களையெல்லலாம் விட்டு வேற வீட்டுக்கு போக எனக்கு விருப்பம் இல்லை” என்று சப்பைக் காரணம் கூறினாள் அண்ணனின் தோளில் சாய்நது விசும்பிக்கொண்டே நதியா.
இப்போது அவள் மனதில் உள்ள காதலை ராயனிடம் கூறியிருந்தால் கோமளம் எதிர்த்தாலும் சரி குடும்பமே நதியாவின் கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லியிருந்தாலும் அனைவரையும் எதிர்த்து தங்கையை பாலாஜிக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பான் ஆனால் விதி வலியதே என்ன செய்வது!
“எல்லா பொண்ணுகளுக்கும் பொறந்த வீட்டை போக மனசு இருக்காது அதுக்காக உனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம இருக்க முடியாது பாப்பா! அண்ணா உனக்கு சரியான வாழ்க்கையை கொடுப்பேன்னு நம்பிக்கை இல்லையா சொல்லு பாப்பா நீ இந்த வீட்டோட இளவரசிடா உன்னோட விருப்பம் இல்லாம அண்ணா எதையும் பண்ணமாட்டேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக.
நான் வெளிநாடு போயிடுவேன் என்று பாலாஜி கூறிய வார்த்தைகள் அவளது செவிகளில் மந்திர ஜெபம் போல ஒலிக்கவும்
“நா. நான் கல்யாணம் பண்ணிக்குறேன் அண்ணா” என்றாள் மனதை கல்லாக்கிக் கொண்டு.
தங்கை தடுமாற்றக்குரலில் ராயன் உசாராகிவிட்டான் ராயன். “அழுது! அழுது! கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு முகம் கழுவிட்டு வந்து ரெஸ்ட் எடு பாப்பா” என்று அவளது தோளைத்தட்டி அவள் அறையிலிருந்து வெளியே வந்துவிட்டான்.
ராயன் நதியா அறையிலிருந்து வெளியே வரவும் “ராயா உன் தங்கச்சி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாளா என்ன?” என்றார் அடக்கப்பட்ட கோபத்தில்.
“பெரியம்மா இப்போதைக்கு கல்யாணத்தை தள்ளிப்போடலாம்” என்றான் பொறுமையாக.
“நாம பரமசிவம் குடும்பத்துக்கு நம்ம வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்குறோம்னு வாக்கு கொடுத்துட்டு வந்திருக்கோம் இப்ப கல்யாணத்துல என் பொண்ணுக்கு இஷ்டம் இல்லனு சொன்னா அவங்க நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க ராயா எல்லாம் நீ கொடுக்குற செல்லத்துல தான் அவ இந்த அளவு பேசுறா” என்றார் காரமாய்.
“கொஞ்சம் நிதானமா இருங்க பெரியம்மா கண்ணன் கல்யாணத்து அன்னிக்கு நதியாவுக்கும் ப்ரனேஷ் மாப்பிள்ளைக்கும் உறுதி வார்த்தை மட்டும் பேசிவைப்போம் ஆறுமாசம் கழிச்சி கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்றான் பொறுமையாக.
“மாப்பிள்ளை வீட்டுல என்னால பேசமுடியாது பேசமாட்டேன் நீயே பேசிடு ராயா” என்றார் கோமளம்.
“நான் பேசிக்குறேன் பெரியம்மா” என்றவனோ அடுத்த நொடி பரமசிவத்திற்கு போன் செய்ததும் “சொல்லுங்க மாப்பிள்ளை” என்று உரிமையாக பேசியவரிடம் ஒரு நொடி அமைதியாக இருந்தவன் “மாமா எங்களை மன்னிச்சிடுங்க எங்க வீட்டு பொண்ணுக்கு இப்போதைக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல அதுக்காக நீங்க வருத்தப்படவேணாம் கண்ணன் கல்யாணத்துல ஒப்பு வார்த்தை பேசிப்போம் அடுத்து ஆறுமாசத்துல கல்யாணத்தை வச்சுக்கலாம் எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் வேணும் மாமா” என்றான் நிதானமாக.
பரமசிவமோ “இது சின்ன விசயம் மாப்பிள்ளை இதுக்கு எதுக்கு என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்குறீங்க நான் தவறா நினைக்கல” என்றார் கல்யாணத்தை ஒத்தி வைத்து விட்டானே என்று மனதிற்குள் கோபம் தணியாத ஊற்றாக இருந்தாலும் மேற்பூச்சாக சிரித்து வைத்தார் ராயனிடம்.
“ரொம்ப நன்றிங்க மாமா கண்ணன் தீபா கல்யாணத்தை ஏற்பாட்டை கவனிப்போம்” என்று போனை வைத்துவிட்டான் ராயன்.
“தீபா உன் தம்பி கல்யாணத்தை போஸ்ட் பார்ன் பண்ணியிருக்காரு ராயன் அந்த பொண்ணு யாரையாவது லவ் பண்ணியிருக்காளோ என்னவோ நான் போட்ட ப்ளான் சொதப்பிருச்சேடா” என்று வருத்தமே பட்டார் பரமசிவம்.
“நீங்க ஃபீல் பண்ணாதீங்க டாடி என் மேரேஜ்க்கப்புறம் ராயன் வீட்டு பாதி சொத்தை பிரிச்சு வாங்கிட்டு வந்துடறேன்” என்றாள் இறுமாப்பு சிரிப்போடு.
“தட்ஸ் குட் தீபா நீ என்னோட பொண்ணுனு நிரூபிச்சுட்ட” என்றார் ராயன் வீட்டு சொத்தை அபேஸ் பண்ணும் மமதை சிரிப்புடன்.
“நதியா சின்ன அத்தை உன்னை சாப்பிட கூட்டிட்டு வரச்சொன்னாங்கடி” என்று ஜன்னல் வழியாக தோட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த நதியாவின் தோளை தொட்டாள் முல்லை.
“எனக்கு சாப்பாடும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் போடி என்னை நிம்மதியா இருக்க விடுங்க” என்று தன் காதல் நிறைவேறாத ஆற்றாமையில் எரிந்து விழுந்தாள் முல்லையிடம்.
“என்கிட்ட எரிஞ்சு விழுந்து நான் என்னடி பண்ணட்டும் உன் லவ்வை அண்ணாகிட்ட சொல்ல வேண்டியதுதானே உன் அண்ணா காதலுக்கு எதிரி கிடையாதுனு உனக்கு தெரியும்தானே” என்று முல்லையும் நதியாவிடம் சுள்லென்று கோபத்தில் வெடித்தாள்.
“என் காதலை அண்ணாகிட்ட சொல்லமுடியாதுடி” என்று கண்ணீர் விட்டவள் பாலாஜி போனில் பேசியதை கூறி நண்பியின் தோளில் சாய்ந்து அழுதாள்.
“நா.நான் வேணா நீ பாலாஜி அண்ணாவை லவ் பண்ணுறேன்னு உன் அண்ணாகிட்ட சொல்லட்டுமாடி” என்றாள் நதியா மனது வருந்துவதை பார்க்கமுடியாமல்.
“ஒண்னும் வேணாம்டி” என்றாள் கண்ணீரை துடைத்துக்கொண்டே.
“நான் சொல்லத்தான் போறேன்” என்று முல்லை பேசிய நேரம் கோமளம் அறைக்குள் வந்தவர் “யார்கிட்ட என்ன சொல்லப்போற?” என்றார் முல்லையை முறைத்துக்கொண்டே.
“அ.அது நான் சாப்பிடலைனு சொன்னேம்மா உங்ககிட்ட சொல்லுவேன் சொன்னாங்க அண்ணி” என்றாள் தயங்கியபடியே.
“வயித்தை காயப்போடாம எழுந்து சாப்பிட போடி உன்னை வெண்ணெய் வைக்க முடியாது” என்று எரிந்து விழுந்தார் கோமளம்
வேறு வழியில்லாமல் நதியா முல்லையுடன் சாப்பிடச் சென்றாள். ஒரு தோசையே போதுமென்று சாப்பிட்டு முடித்து அறைக்குள் வந்து படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை அழுது அழுது தலையணை நனைந்ததுதான் மிச்சம்.
தீபாவோ “கண்ணா உன் தங்கச்சி இப்போ கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாளேமே என் தம்பி ராஜாவாட்டம் இருக்கான் அவனை அவாய்ட் பண்ணுறது போல இருக்கு. உங்க அண்ணா இப்போதைக்கு கல்யாணத்தை தள்ளிப்போடலாம்னு சொல்லுறாரு இது முறையா” என்று அவள் குறைப் பட்டுக்கொண்டாள்.
“ஏய் நிறுத்து நிறுத்து நீ என் தங்கச்சியை உன் தம்பிக்கு பொண்ணு கேட்குறோம்கிற விசயத்தை என்கிட்ட சொன்னியாடி கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க குடும்பத்தை பத்தி குறைச்சு பேசுற இது நல்லா இல்ல பார்த்துக்கோடி” என்று கண்ணன் அவள் மேல் காய்ந்து விழுந்தான்.
“நதியாவை பொண்ணுகேட்டது பத்தி அப்பா என்கிட்ட டிஸ்கஸ் பண்ணல கண்ணன் எனக்கு தெரிஞ்சிருந்தா உன்கிட்ட சொல்லாம இருப்பேனா” என்று கண்ணன் கோப பேச்சில் அந்தர் பல்டி அடித்து விட்டாள்.
“நீ சொல்றதை நான் நம்பமாட்டேன் உன் அப்பா உன்கிட்ட கேட்காம நதியாவை பொண்ணு கேட்டிருக்கமாட்டாருனு நான் அடிச்சு சொல்வேன் உன் மேல நான் கடுப்பா இருக்கேன் போனை வை நாளைக்கு ஆபிஸ்ல பேசிப்போம்” என்று போனை அணைத்துவிட்டான் கண்ணன்.
தீபாவோ “டேய் ஆம்பிள்ளை வீரத்தை காட்டுறியா நான் யாருனு கல்யாணத்துக்கப்புறம் காட்டுறேன்டா” என்றாள் கோபத்தோடு.
ட்ராவல்ஸ் சாவியை கூட ராயனிடம் கொடுக்காமல் பால்பண்ணை குவாட்டர்ஸ்க்குச் சென்றுவிட்டான் பாலாஜி. குளித்து விட்டு வந்தவன் கேண்டீலிருந்து வந்த இட்லி பார்சலை வெறித்த படியே பார்த்துக்கொண்டிருந்தான்.
தன்னை துரத்தி துரத்தி லவ் பண்ணும் பொண்ணை விரட்டி விரட்டி எத்தனை நாள் அடிக்க முடியும் இதுவே ராயனின் தங்கச்சியாக இல்லாமல் இருந்தால் இந்த நேரம் பாலாஜியின் குழந்தை நதியாவின் இடுப்பில் இருந்திருக்கும். வெறும் தண்ணீரை மட்டும் எடுத்து குடித்த நேரம் ராயன் போனில் வந்தான்
“என்னடா வீட்டுக்குள் வராம போய்ட்ட?” என்றவன் குரல் பிசிறிதட்டவும்
“என்னடா உன் குரல் சரியில்லையே ராயன் குரல் கம்பீராமா இருக்குமே” என்றான் பெரும்மூச்சுடன்.
“எனக்கு ஒரு உதவி வேணும் நம்ம நதியா யாரையோ லவ் பண்ணுறானு எனக்கு சந்தேகமா கண்டுபிடிச்சு சொல்லணும்” என்றான் சந்தேகக்குரலுடன்.
பாலாஜிக்கு புரையேறி விட்டது திருடனிடம் சாவியை கேட்பது போல கேட்டு வைத்தான் ராயன்.
“டேய் பார்த்துடா” என்று இந்தபக்கம் பதறினான் ராயன்.
இந்த பாசம் தான்டா எனக்கு பாசக்கயிறா இருக்கு என்று மனம் கலங்கிய பாலாஜியோ ஒருநிமிடம் தலையை தட்டி நிதானம் ஆன பிறகு “சரிடா நான் கவனிக்குறேன் எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு” என்று ராயனிடம் மேற்கொண்டு பேச முடியாமல் போனை வைத்திருந்தான்.
கையில் பாலோடு வந்த முல்லையோ மச்சான்கிட்ட சொல்லிடலாமா என்று தைரியத்தோடுதான் ராயன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“என்ன புள்ள என்கிட்ட ஏதாச்சும் சொல்லணுமா?” என்றபடியே அவள் கையிலிருந்த பாலை வாங்கி ஒரு மிடறு குடித்து விட்டு முல்லையை பார்த்தான்.
அவன் பார்வையில் தடுமாறி தான் ஏதோ உண்மையை சொல்ல போய் பாலாஜி அண்ணாவுக்கு பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்வது? பெரியம்மா நதியாவை வார்த்தையால கொன்னுடுவாங்க நதியா ஏதாவது தவறான முடிவு எடுத்துட்டா அவசரப்பட்டு மச்சான்கிட்ட சொல்லவேணாம் என்று கணவனிடம் உண்மையை கூற முடியாமல் இருதலைக்கொள்ளி எறுப்பாக தவித்தாள் பெண்ணவள்
“கொடி எந்த கோட்டையை பிடிக்க சிந்தனையா இருக்க” என்று அவளின் கையில பால் டளம்ரை வைத்தான்.
“நதியா கல்யாணம் வேணாம்னு சொன்னதுக்கு காரணம்” என்று அவள் பேச ஆரம்பிக்கும் முன்னே “எனக்கும் சந்தேகம் இருக்கு புள்ள பாலாஜிகிட்ட நதியாவை கண்காணிக்க சொல்லியிருக்கேன்” என்றான் வருத்தமான குரலில்.
“பாலாஜி அண்ணா ஏதாவது சொன்னாங்களா?” என்று அவள் பதறிவிட்டாள் அவசரத்தில்.
“பாலாஜி என்ன சொல்லணும் நீ ஏன் பதட்டம் ஆகுற?” என்றவன் புருவம் சுருக்கி குரல் வேகமாக வந்ததும் முல்லை பயந்து விட்டாள்.
ராயன் வேகமாக பேசியதும் முல்லையின் கண்ணீர் முணுக்கென்று வந்தது.
“எதுக்கு கண்ணுல தண்ணீ வருது உனக்கு உன்னை என்ன கேட்டுட்டேன்” என்று அவளது கண்ணீரை துடைத்து விட்டவனின் போன் அடித்தது.
“ராயா மாட்டுப்பண்ணையில ஃபயர் ஆகிடுச்சாம் நான் கிளம்பிவந்துட்டிருக்கேன்டா வெளியே வா” என்று பாலாஜி பதட்டத்துடன் பேசவும் அடுத்த நொடி சட்டையை போட்டவன் “மாட்டு பண்ணையில தீ பிடிச்சிருச்சாம் கொடி நான் போய்ட்டு வந்துடறேன்” என்று அவசரமாக கிளம்பிவிட்டான்.
ராயன் மாட்டுபண்ணைக்குச் சென்ற நேரம் தீயை அங்கே வேலை செய்தவர்கள் அணைத்துக்கொண்டிருந்தனர். ராயனும் பாலாஜியும் மாடுகளை காப்பாற்றி வெளியே கொண்டு வந்து விட்டுக்கொண்டிருந்தனர். ஒரு மாடு மட்டும் மாட்டுக்கொட்டகைக்குள் சிக்கிக் கொள்ள ராயன் ஓடிச்சென்று தீக்கங்குகளுக்கிடையே மாட்டைக்காப்பாற்றி கூட்டி வெளியே அழைத்து வந்தான் அவனது கையில் லேசான தீக்காயம் பட்டுவிட்டது.
அங்கே வேலைபார்க்கும் மூக்காயி “அச்சோ என் சாமிக்கு தீகாயம் பட்டிருச்சா” என்று பதறியவர் அவரது வீட்டுக்குள் சென்று தீக்காயத்துக்கு போட வேண்டிய ஆயிண்ட்மெண்டை எடுத்து வந்து ராயனின் கையில் போட்டு விட்டார்.
மாடுகளுக்கு காவல் இருந்த முனியப்பன் ராயன் முன்னே கையை கட்டி நின்றிருந்தான்.
“மாட்டுக்கொட்டகையில எப்படி தீ விபத்து ஏற்பட்டுச்சு சொல்லு முனியா?” என்றான் சிம்மக்குரலில் கர்ஜனையாக ராயன்.
“அ.அது வந்து வயறு சரியில்லைனு காட்டுப்பக்கம் போயிருந்தேன் சாமி அந்த சமயத்துல களவாணி பயலுக வந்து வச்சுப்புட்டானுங்க சாமி எனக்கு ஒன்னும் தெரியாது” என்று ராயனின் காலில் விழுந்து விட்டான்.
முனியனின் சட்டையை பிடித்து தூக்கிய ராயனோ “மாடு எங்க குல சாமியை போலடா மாட்டு கொட்டகைக்கு நெருப்பு வைக்க எவ்வளவு பணம் வாங்கின எனக்கு எல்லாம் சொல்லிடு உன்னை விட்டுடறேன் என்னை ஏமாத்த நினைச்சா தண்டனை பெருசா இருக்கும்” என்று முனியனின் குரல்வளையை அலேக்காக பிடித்து தூக்கிவிட்டான்.
“ஐயா சாமி என்னை விட்டிருங்க ராஜமாணிக்கம் தான் என்னை மாட்டுக்கொட்டகைக்கு நெருப்பு வைக்க சொன்னாரு காசுக்கு ஆசைப்பட்டு பண்ணிபுட்டேன் என்னை மன்னிச்சிடுங்க சாமி” என்று கதறிவிட்டான்.
முனியனின் குரல்வளையை கீழே விட்டது அவன் நிலத்தில் தொப்பென்று விழுந்துவிட்டான். “என் கண்ணு முன்னாடி நீ நிற்க கூடாது உயிர் பிச்சை கொடுக்குறேன் ஓடிப்போயிடு” என்றான் ரௌத்திரக்குரலில்.
பாலாஜியோ “இவனை போலீஸ்ல ஒப்படைக்கலாம் ராயா” என்று முனியனின் கையை பிடித்து வைத்துக் கொண்டான்.
“அதெல்லாம் வேணாம்டா நம்ம மாடுகளுக்கு காயம் பட்டிருக்கும் டாக்டரை வரச்சொல்லி போன் போடு” என்றிருந்தான்.
மருத்துவர்கள் நாலைந்து பேர் வந்தவர்கள் சிறு காயம் பட்ட மாடுகளுக்கு மருத்துவம் பார்த்தனர்.
மாடுகளை பாதுகாப்பாக கட்டி விட்டு “நாளைக்கு காலையில புது மாட்டுக்கொட்டகை போட ஆரம்பிச்சிடுங்க” என்று அங்கிருந்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு “பாலாஜி நீ இங்க இருந்து பார்த்துக்கோ எனக்கு வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்” என்று வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு காரை எடுத்தவன் ராஜமாணிக்கம் வீட்டு முன்னால் சரென்று நிறுத்தினான்.
காரை விட்டு வேகமாய் இறங்கியவன் ராஜமாணிக்கம் வீட்டு கதவை தட்டினான்.
கதவை திறந்தது பூங்கொடிதான்.
“என்ன மாமா இந்த நேரம் வந்து இருக்கீங்க என்னாச்சு?” என்றாள் படத்துடன்.
தென்னரசுவோ “என்ன பங்காளி இந்த பக்கம் காத்து வீசுது?” என்று நக்கலாக வேஷ்டியை மடித்து கட்டி கொண்டு வந்தான்.
“ஏன்டா என்னோட மோதணும்னா நேரடியா மோத வேண்டியதுதான் வாய் இல்லா ஜீவன்களை அழிக்க பார்த்துருக்கீங்க உங்க முகத்துல மீசை வேறு ஒரு கேடு” என்று மாடுகளை கொல்ல பார்த்து விட்டார்கள் என்று ஆத்திரத்துடன் வெடித்து சிதறி விட்டான்.
ராஜமாணிக்கமோ கொட்டாவி விட்டபடி வந்தவர் “நான் தான் உன் மாட்டு கொட்டகைக்கு நெருப்பு வைக்க சொன்னேன் ராயா உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்றார் இறுமாப்போடு.
“பசுக்ககளை நாம தெய்வமாக கும்பிடுறோம் நீ எப்படி யா கொல்ல பார்த்த உன்னை சும்மா விட மாட்டேன்” என்று அங்கே இருந்த கட்டையை தூக்கிக் கொண்டு அடிக்கச் சென்று விட்டான் ராயன்.
பாலாஜி ராயன் கோபமாய் செல்வதை கண்டு அவனை அடக்க தெய்வநாயத்துக்கு போன் பண்ணி சொல்லிவிட்டான்.
“ராயா நிறுத்துப்பா” என்று மகனின் கையை பிடித்துக் கொண்டார் தெய்வநாயகம்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌