ATM Tamil Romantic Novels

யாரார்கு யாரடி உறவு 10-11

அத்தியாயம் 10

 

“உன் கூட யாருமா வந்துருக்கா? அவங்களை வரச் சொல்லு.. சில விவரங்கள் அவங்ககிட்ட சொல்லணும்..” என்று மருத்துவர் கூற, மெல்லிய குரலில்,

 

“இல்ல டாக்டர்.. நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க.. நான் பார்த்துக்குறேன்..” என்றாள் திவ்ய பாரதி. 

 

“ஃபைன்.. நீ அம்மாவாகப் போற..”

 

“நான்.. நான்.. அம்மாவா?”

 

“எஸ்.. நீ ப்ரெக்னன்ட்டா இருக்க..”

 

“அது எப்படி டாக்டர்? ஒரே ஒரு தடவை தான்..”

 

“வாட்? என்ன சொல்ற நீ? சத்தமா சொல்லு..”

 

“அது வந்து.. ஒன்னுமில்ல டாக்டர்.. மாசமாயிருந்தா.. வாந்தி எல்லாம் வருமாமே?”

 

“ஆமா.. வரும்.. அதுக்கு தான் இந்த மாத்திரை எழுதிருக்கேன்.. இதை விடாம போட்டுட்டு வாம்மா.. நல்லா ஹெல்தியா சாப்பிடு.. அடுத்த வாரம் திரும்ப செக்கப் வரும் போது உன்னோட ஹஸ்பெண்டோட வா. அவரோட ப்ளட்டையும் டெஸ்ட் பண்ணணும்..” என்ற மருத்துவருக்கு நன்றி சொல்லி அந்த அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தாள் திவ்யபாரதி. வெளியே வந்த திவ்யபாரதியின் முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது. அதனை பார்த்த ராசாத்தியோ,

 

“என்னாச்சுபுள்ள? சந்தோஷப்பட வேண்டிய நேரத்துல, உன் முகம் ஏன் ஒருமாதிரியா இருக்கு?” என்று கேட்க, தன் வயிற்றை மெல்ல தொட்டு பார்த்தவள்,

 

“சந்தோஷமான விஷயம் தான்.. ஆனா, அது யாருக்கு சந்தோஷமான விஷயம்னு நினைக்குறீங்க? என் மாமாக்கு இந்த விஷயம் தெரிஞ்சா? சும்மா இருப்பாருன்னு நினைக்குறீங்களா? இல்ல.. வடிவழகியம்மாக்கு தெரிஞ்சா.. என்ன பண்ணுவாங்கன்னு நினைக்குறீங்க?” என்று விரக்தியாக புன்னகைக்க, ராசாத்திக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. பல மில்லியன் சொத்துக்கான ஒரே வாரிசு. இப்படி யாருமே இல்லாத அனாதையா இருக்குறதை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருந்தது. 

 

“அப்போ.. நீ என்ன பண்ணப் போறபுள்ள? இந்த விஷயத்தை சொல்ல மாட்டியா?”

 

“இல்லக்கா.. நான் சொல்றதா இல்ல.. என்புள்ள எனக்கு வேணும்.. இந்த உலகத்துல நான் வாழுறதுக்கான பிடிமானம்.. இந்த குழந்தை எனக்கு வேணும்.. அக்கா.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?”

 

“என்ன பண்ணணும் புள்ள? சொல்லு.. என்னால முடிஞ்ச உதவியை செய்யுறேன்..”

 

“அது.. அது வந்து.. நான் மாசமா இருக்குற விஷயத்தை நீங்க யார்க்கிட்டேயும் சொல்லாதீங்கக்கா ப்ளீஸ்..”

 

“ஏன் புள்ள? பெரியம்மாக்கு தெரிஞ்சா எவ்வளவு சந்தோஷப்படுவாங்கன்னு தெரியுமா? சின்னய்யா ரொம்ப சந்தோஷப்படுவாங்க..”

 

“இல்லக்கா.. எனக்கு பயமாயிருக்கு.. இந்த குழந்தையை கலைச்சுட்டாங்கன்னா? என் அம்மாக்கு அப்புறம் எனக்குன்னு கிடைச்சுருக்குற ஒரே உறவு.. இதை இழக்க நான் விரும்பவில்லை.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க.. இந்த ஒரு ஹெல்ப் மட்டும் எனக்கு பண்ணுங்கக்கா..”

 

“சரி.. புள்ள.. நான் யார்கிட்டேயும் சொல்லல.. அதுக்கு எதுக்கு இத்தனை ப்ளீஸ் போடுற? ஆனா.. இதை எத்தனை நாளைக்கு மறைச்சு வைக்க முடியும்? கத்திரிக்காய் முத்தினா.. கடைத் தெருவுக்கு வந்து தானே ஆகணும்..”

 

“எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்னு எனக்கும் தெரியலை.. ஆனா.. இப்போ யாருக்கும் தெரியாம பார்த்துக்கணும்னு தோணுது..”

 

“சரி.. நானா சொல்லமாட்டேன்..”

 

“சத்தியமா?”

 

“சத்தியமா.. சொல்லமாட்டேன்.. போதுமா?” என்ற ராசாத்தியை புன்னகையோடு பார்த்தாள் திவ்யபாரதி. 

 

“உன் கல்யாணத்துக்கு அப்புறம்.. இப்ப தான் நீ தான் சிரிக்குறதை பார்க்குறேன்.. நீ சிரிச்சா ரொம்ப அழகா இருக்க புள்ள..” என்ற ராசாத்தியை தொடர்ந்து, அன்று நடந்த அனைத்தும் அவள் கண் முன்னே வந்து போக, துணி கொண்டு துடைத்தாற் போல், அவளது புன்னகை மறைந்து போனது. இதனை பார்த்த ராசாத்தி,

 

“அய்யோ.. உனக்கு பழசை எல்லாம் ஞாபகப்படுத்திட்டேனா? நான் ஒரு கிறுக்கி.. மன்னிச்சுக்கோ புள்ள.. இந்த மாதிரி நேரத்துல ரொம்ப சந்தோஷமா இருக்கணும்.. மனசுல வேற எதை பத்தியும் நினைக்காத..” என்று கூற, சரியென்று தலையாட்டியவாறு வீட்டுக்குள் வந்தவளின் கண்ணில் ஹாலில் அமர்ந்து வள்ளியம்மையோடு பேசிக் கொண்டிருக்கும் ஆதித்யா கரிகாலன் தென்பட, ஒரு நிமிடம் அவளது கண்கள் கலங்கின. அவனைப் பார்த்து எவ்வளவு நாளாயிற்று? எங்கு சென்றாலும் அவளிடம் பேசாமல் அவன் ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால், சிறிது காலமாக அவனை பார்க்காது, பேசாது, இருந்தவளுக்கு மனம் மரத்துப் போனது. மழையில்லாது காய்ந்து போன மரத்திற்கு ஒரு துளி மழை நீர் கிடைத்ததை போன்று, தன் முன் அமர்ந்திருந்தவனை பார்த்தவளுக்கு சந்தோஷ ஊற்று பொங்கியது. ஆனால் தன்னை பார்த்தும் பாராதது போல் அமர்ந்திருந்தவனை பார்க்கும் போது நெஞ்சில் சுருக்கென வலித்தது. அவன் தன்னோடு பேசுவான் என்று எதிர்பார்த்தவள், அவன் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை எனும் பொழுது, தன்னையுமறியாமல் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, அங்கிருந்து செல்ல முயன்றவளின் காதில்,

 

“இன்னும் இவளை இங்க எத்தனை நாளைக்கு வைச்சுருக்கப் போறீங்க? எப்பவோ இவளை இங்கிலாந்து அனுப்ப சொல்லிட்டேன்.. இன்னும் இங்கேயே தங்க வைச்சுருக்கீங்க..” என்றவன் கோபமாக கூற,

 

“கல்யாணம் முடிஞ்ச உடனே அனுப்பினா.. நாலு பேரு நாலு விதமா பேசுவாங்களோன்னு அம்மா பயந்துருக்கலாம்? நீ ஏன் இப்படி குதிக்குற? அதான் நாங்க வந்துட்டோம்ல.. இன்னைக்கே அவளை இங்க இருந்து அனுப்பி வைச்சுடுறேன்..” என்றவாறே அவன் பேசியதற்கு பதில் அளித்தபடியே வைஷ்ணவியுடன் உள்ளே நுழைந்தார் வடிவழகி. அவர் பேசியதை கேட்டு அங்கு மேலும் நிற்க முடியாது, தனது அறையை ஓடினாள் திவ்யபாரதி. அவள் வேகமாக ஓடுவதை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா கரிகாலன்,

 

“நாளைக்கு காலைல அவ.. பெங்களூர்ல இருக்கணும்.. கண்டிப்பா க்ளாஸ் அட்டென்ட் பண்ணியே ஆகணும்.. எவ்வளவு கஷ்டப்பட்டு சீட்‌ வாங்கிருக்கேன்னு தெரியுமா? இப்படியே இருந்தா.. அவளோட எதிர்காலம் என்னாகுறது? என்ன தான் இருந்தாலும் அவளும் உங்க பேத்தி.. அவளை கொஞ்சம் பொறுப்பா கவனிச்சுக்கோங்க.. நாளைக்கு திரும்பும் பிஸ்னஸ் ட்ரிப் போறேன்.. அவளை பத்திரமா கூட்டிட்டு போய் விட்டுட்டு வாங்க..” என்றவனை,

 

“ஆமா.. அவ என்ன பச்சப்புள்ளயா.. யூனிஃபார்ம்.. சாப்பாடு கூடை.. எல்லாம் கொடுத்து.. டாட்டா காண்பிச்சு.. ஸ்கூல் பிள்ளையை விடுற மாதிரி காலேஜ் வாசல்ல கொண்டு போய் விடுமாக்கும்? இது உனக்கே ஒவரா தெரியலை?” என்று இடைமறித்து பேசிய வடிவழகியை கோபமாக முறைத்து பார்த்தவன்,

 

“நீ இதுல தலையிடாத.. ஏற்கனவே உன் மேல பயங்கர கோபத்துல இருக்கேன்.. என்கிட்ட பேசி வாங்கிக் கட்டிகாத.. அன்னைக்கு நடந்த அத்தனை பிரச்சனைக்கும் நீ தான் காரணம்னு எனக்கு நல்லா தெரியும்.. இருந்தும் ஏன் சும்மா இருக்கேன்னு நினைக்கிறியா? எல்லாம் அம்மாவுக்காக தான்.. ஏற்கனவே வளர்மதியக்காவை இழந்தவங்க.. உன்னையும் நான் இந்த வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிருவேங்குற பயத்துல இருக்குறவங்கவளுக்காக தான் பொறுமையா போறேன்.. ஆனா, திரும்பவும் என் வாழ்க்கைல எதையாவது குழப்பி விட்ட அப்புறம் நான் என்ன பண்ணீவேன்னே தெரியாது..” என்றவன் அங்கிருந்து செல்ல, அதிர்ந்து போய் நின்றிருந்தார் வடிவழகி. தான் செய்த யாவும் யாருக்கும் தெரியாது மறைத்து விட்டோம் என்ற இறுமாப்பில் இருந்தவருக்கு, ஆதித்யா கரிகாலனின் வார்த்தைகள் சாட்டையாக விழுந்தன. அதிர்ச்சியோடு வள்ளியம்மையை பார்க்க, அவரோ

 

“எனக்கு நீ பண்ண எல்லாமே தெரியும்.. ஆனா, என் பொண்ணா போயிட்டியே.. அத்தனை பேருக்கு மத்தில உன்னைய விட்டுக் கொடுக்க மனசில்ல.. தவறு செய்யும் துரியோதனனை தட்டிக் கேட்க தயங்கிய துருதுராஷ்ரர் மாதிரி.. நானும் நீ செய்யுறதை எல்லாம் வேடிக்கை பார்த்துட்டுருக்கேன்.. ஆனா, பெண் பாவம் பொல்லாதது.. அடுத்த பொண்ணோட வாழ்க்கையை சமாதி கட்டிட்டு, அந்த சமாதி மேல உன் பொண்ணோட வாழ்க்கையை அமைச்சு கொடுக்க நினைக்காத.. திவ்யா தான் என்னோட மரும.. என் பையனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.. அவனுக்கு கல்யாணங்குறது பிறப்பு இறப்பு மாதிரி.. வாழ்க்கைல ஒரு தடவை நடக்குற விஷயம்.. அதுனால வைஷ்ணவிக்கு வேற நல்ல இடமாப் பாரு.. அதுவுமில்லாம அவ சின்னப் பொண்ணு.. அவ மனசுல விஷத்தை கலக்காத.. நான் சொல்வதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்.. நான் தோட்டத்துக் போறேன்.. நீயும் என்கூட வர்றதா இருந்தா வரலாம்..” என்று கூறிவிட்டு முன்னே செல்ல, வடிவழகியோ தன் தோல்வியை ஏற்க மனமில்லாது, வைஷ்ணவியை அழைத்து கொண்டு திவ்ய பாரதியை காணச் சென்றார். அறைக்குள் நுழைந்தவரது பார்வை, ஜன்னல் ஓரமாக நின்று, அதன் வழியே தெரியும் அந்திமாலை வானத்தையும் அதில் சுதந்திரமாக பறந்து செல்லும் பறவைக்கூட்டங்களையும் இலக்கின்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த திவ்ய பாரதியின் மீது படிந்தது. 

 

“ம்ஹூம்.. இனிமே உன்னைய எப்ப பார்ப்போமோ? எப்படி பார்ப்போமோ? எல்லாம் அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.. பாவம் வைஷு.. இந்த திவி.. இத்தனை சாமான்களையும்‌ அவ ஒரே ஆளாக.. எப்படி பேக் பண்ணுவா? இந்த ஆதி வேற.. நாளைக்கு காலைல இவ இங்க இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டான்.. எங்க போவா? எப்படி போவான்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தானா? சரி.. நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு பார்த்தா? உங்கப்பா இவளை நம்ம கூட பார்த்ததும், நம்மையும் இவளோடு சேர்த்து, வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டுடுவாரே?”

 

“இவ செஞ்சதுக்கு நாம என்ன பண்ண முடியும்மா? உப்பு தின்னவன், தண்ணீர் குடிச்சு தானே ஆகணும்.. தப்பு செஞ்சவன்.. தண்டனை அனுபவிச்சு தானே ஆகணும்.. இவளுக்காக நீங்க வருத்தப்படுறீங்களே?! யூ வார் க்ரேட்மா..”

 

“என்ன செய்யுறது.. என் அக்காக்கு.. இவளை பொறுப்பா வளர்ப்பேன்னு வாக்கு கொடுத்துட்டேனே? அதான் மனசு கிடந்து அடிச்சுக்குது..” என்று வைஷ்ணவியிடம் பேசியவர், திவ்யா பாரதியின் புறம் திரும்பி, அவளது கையில் நூறு‌ ரூபாயை வைத்தவர்,

 

“ம்ஹூம்.. என்ன பண்ணறது? என்னால் முடிந்த உதவி.. இவ்வளவு தான் தர முடிந்தது.. இதை வைச்சுக்கிட்டு, நீ எது வரைக்கும் போக முடியுமோ.. அது வரைக்கும் போ.. விதிவிட்ட வழி.. நாளைக்கு காலைல.. உன்னைய இங்க பார்த்தான்.. அப்புறம் அவனே, உன்னைய கழுத்தப் பிடிச்சு வெளியே தள்ளிடுவான்.. அய்யோ கடவுளே! வளர்மதியக்கா பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா.. ச்சு.. ச்சு.. ச்சு..” என்று கூறியதோடு வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். ஊருக்கு திரும்பி வந்த ஆதித்யா கரிகாலனோ, திவ்ய பாரதியின் முகத்தை குற்ற உணர்வு காரணமாக பார்க்க மறுக்க, அதனை அவன் தன் மீது கொண்ட வெறுப்பாக நினைத்துக் கொண்டாள் திவ்யபாரதி. விதியாடும் விளையாட்டிற்கு பழியாவாளா திவ்யபாரதி? ஆதித்யா கரிகாலனை விட்டு பிரிந்து செல்வாளா?

 

அத்தியாயம் 11

 

தனது உடைகளை எடுத்து பேக்கில் அடுக்கியவள் தனக்காகவென ஆதித்யா கரிகாலன் கொடுத்து வைத்திருந்த தொகையில் இருந்து குறுப்பிட்ட தொகையை எடுத்துக் கொண்டவள், தனக்காக வெளியே ட்ராக்டரில் காத்துக்கொண்டிருந்த ராசாத்தியை நோக்கிச் சென்றாள். வீட்டை விட்டு வெளியேறும் பொழுது, திரும்பி அந்த வீட்டை பார்த்தவளுக்கு நெஞ்சடைத்தது. ஆனால், மேலும் இங்கே தங்கியிருந்தால், தன் குழந்தையை பற்றி அறிந்து கொள்வார்கள் என்ற பயத்தில், போக வேண்டிய கட்டாயத்தினால் வீட்டை விட்டு வெளியேறினாள் திவ்யபாரதி. தனது தம்பியின் துணையோடு திவ்ய பாரதியை சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டிருந்தார் ராசாத்தி. யாருக்கும் தெரியாமல் நடு இரவில் வீட்டை விட்டு, இப்படி அனாதையாக ஓடுவாள் என்று திவ்யபாரதி கனவிலும் நினைத்து பார்த்ததில்லை. திவ்ய பாரதியை பார்க்க முடியாது, அவளுடன் பேச முடியாது குற்ற உணர்வில் தவித்து கொண்டிருந்த கரிகாலன், தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாத நிலையில் அவளைத் தேடி, அவளது அறைக்கு சென்றான். கட்டிலில் முழுவதுமாக தலையைப் போர்த்திக் கொண்டு உறங்குவது போன்ற அமைப்பிற்கு அருகில் சென்ற ஆதித்யா கரிகாலன், சட்டென சந்தேகம் அடைந்தவனாய் போர்வையை விலக்கிய பார்க்க, போர்வைக்குள் தலையணையை மறைத்து வைத்து, ஓடிவிட்டாள் என்பதை புரிந்து கொண்டான். 

 

“திவிஇஇஇ.. திவிஇஇஇஇ..” என்று கத்தியவாறு, அறையெங்கும் தேடியவன், வெளியே இருக்கும் தனது ஆட்களை அழைத்து, வீட்டின் மூலை முடுக்கில் எல்லாம் சல்லடையாக சலிப்பதை போல் தேட சொன்னான். அந்தோ பரிதாபம்! அவள் தான் கிடைக்கவில்லை. யாருடைய உதவியும் இன்றி, அவளால் நிச்சயமாக இங்கிருந்து வெளியேறி இருக்க முடியாது. கண்டிப்பா வீட்டில் இருக்கும் யாரோ ஒருவர் தான் அவளுக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தவன், பாதி உறக்கத்தில் இருக்கும் வடிவழகி மற்றும் வைஷ்ணவியை எழுப்பி திவ்ய பாரதியைப் பற்றி கேட்க, அவர்களது முகமோ, சந்தோஷத்தில் ஜொலித்தது. இருவரும் கண்களால் தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள, அவனோ அதனை கண்டு எரிச்சலுற்றான். தனது வீட்டு வேலையாட்கள் அனைவரையும் ஒன்று கூட்டி, விசாரணை செய்தவன், ராசாத்தி தம்பியின் வாயிலாக திவ்யபாரதி செல்லும் முகவரியை அறிந்து கொண்டவன், வேகமாக அவளை அழைத்து வரக் கிளம்பினான். ஆனால் சிறிது நேரத்தில் அவனுக்கு கிடைத்த தகவலால் அப்படியே இடிந்து போய் அமர்ந்து விட்டான். ஆனால், தன் தோல்வியை ஒப்புக் கொள்பவன் ஆதித்யா கரிகாலன் இல்லையே! தகவல் வந்த இடத்தினை நோக்கி விரைந்தானவன்.. 

******************************************

சிறு துளிகளாக சிதறும் மழைத்துளியை ரசிக்க மறந்த விழிகள், இலக்கின்றி எங்கோ வெறித்துப் பார்க்க, தடதடக்கும் ரயில் தண்டவாளத்தின் சத்தமோ.. காதினில் ஒலிக்க, எங்கும் தெரியும் இருட்டில், சிறுஒளியைத் தரும் நிலவின் குளுமையை அனுபவிக்க முடியாது, வற்றாத ஜீவநதியாய் கண்ணில் நீர் ஆறாக வழிய, அதனை துடைக்க நினைக்காது, திருச்சி செல்லும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தாள் திவ்யபாரதி. ஆம், ராசாத்தியிடம் சென்னை செல்வதாக கூறியிருந்தவள், தன்னை தேடி வடிவழகியோ அல்லது ஆதித்யாவோ வரக்கூடும் என்று நினைத்தவள், தன் வயிற்றில் வளரும் குழந்தையை காப்பாற்றிக் கொள்ள எண்ணியவளாய் திருச்சி செல்லும் ரயிலில் பயணச்சீட்டை பதிவு செய்திருந்தாள். 

 

“ஹலோ! நீங்க இந்த ஊரா?”

 

“ம்ஹும்..”

 

“அப்போ.. வெளியூரா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?” என்று தன் எதிரே அமர்ந்தபடி, கேள்விக் கொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணியை ஆழ்ந்து பார்த்தாள் திவ்யபாரதி. எளிமையான காட்டன் புடவையில், எந்தவிதமான ஒப்பனையுமின்றி, கழுத்திலும்‌ கையிலும் ஆடம்பரமில்லாத எளிமையான நகைகள் என்றிருந்தவரை பார்க்கும் போது தன்னையுமறியாது, ஏதோ தோன்ற திவ்ய பாரதியின் கண்கள் கலங்கின. 

 

“அய்யோ.. எதுக்கு அழுகுறம்மா? நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?” என்ற பெண்மணி பதறிப் போக,

 

“போச்சு.. போச்சு.. பயமுறுத்திட்டியா?” என்று கேட்டவாறே அப்பெண்ணிற்கு அருகில் வந்து அமர்ந்தவனை நிமிர்ந்து பார்த்தவள்,

 

“அர்ஜுன் அங்கிள்..” என்று முணுமுணுக்க, அப்போது தான் வெளிச்சத்தில் இருந்தவளை கூர்ந்து நோக்கியவன், அதிர்ந்து போனான். 

 

“நீ.. நீ.. திவ்யா தானே?! நீ எப்படி இங்க? என்னாச்சுமா?” 

 

“அங்கிள்..” என்று அவனிடம் உடைந்து அழுதவள் நடந்த அனைத்தையும் அவனிடம் கூற, கொதித்து போனான் அர்ஜுன்.. 

 

“அவனா? இப்படியெல்லாம் பண்ணான்?! அவனை சும்மா விடமாட்டேன்.. கேட்க ஆளில்லைன்னு நினைச்சுட்டானா?” என்று கேட்ட அர்ஜுன், ஆதித்யா கரிகாலனின் குடும்பநல மருத்துவர் மற்றும் நண்பனாவார். திவ்ய பாரதியை அவள் பிறந்ததில் இருந்து நன்கு தெரிந்து கொண்டிருப்பவர். அதனால் அவளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை நினைத்து மிகுந்த கோபம் கொண்டான். 

 

“இரு.. அவனை என்னன்னு கேட்குறேன்? பொம்பளப்புள்ள வாழ்க்கை என்ன பொம்மலாட்டமா? இப்படி தான் விளையாடுவாங்களா?” என்றவன் தனது அழைப்பேசியை எடுத்து வள்ளியம்மைக்கு அழைக்க முயல, அதனை தடுத்த திவ்ய பாரதியோ,

 

“அங்கிள்.. வேணாம்.. நான் எங்க இருக்கேன்னு தெரிஞ்சா? என் பேபியை அழிச்சுடுவாங்க.. ஏற்கனவே, நான் மாமாவை கல்யாணம் பண்ணியிருக்குறதுனால ஏதாவது ஜெனிட்டிக் குறையோட தான் புள்ள பிறக்கும்னு வடிவு சித்தி சொல்லிட்டுருக்காங்க.. இப்போ இந்த பேபியைப் பத்தி தெரிஞ்சா.. ஏதாவது பேசி, என் பேபியை வயித்துலயே கொன்னுடுவாங்க.. ப்ளீஸ் அங்கிள்.. அவருக்கு என்னைய பத்தி எதுவும் தெரியக்கூடாது..” என்று கதற,

 

“அவ தான் அவ்வளவு கெஞ்சுறாளே.. வேணாம் போனை கட் பண்ணுங்க..” என்ற மலர்கொடியோ, அர்ஜுனிடம் இருந்த போனை பிடிங்கி தன் கையில் வைத்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து, கோபம் குறைந்தவன்,

 

“நீ பேசாம.. பெங்களூருக்கு எங்கக்கூட வந்துடு.. நாங்க உன்னைய நல்லா பார்த்துக்குறோம்..” என்றவன் கூற, 

 

“இல்லை அங்கிள்.. அவர் யோசிக்க முடியாத இடத்துக்கு போயிடணும்.. அதான் திருச்சிக்கு போறேன்..” என்றவளை ஆதுரத்துடன் பார்த்தவன்,

 

“திருச்சில உனக்கு யாரைத் தெரியும்? அங்க போய் எங்க தங்குவ? சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ? குழந்தை பெத்தெடுக்குறது, மறு ஜென்மம் எடுக்குற மாதிரி.. எல்லா சொந்த பந்தத்தோட இருக்குறவங்களே, பலவீனமாகிடுவாங்க.. நீ சின்ன பொண்ணு.. உன்னால் எப்படி பிரசவ வலியை யாரும் துணையில்லாம தாங்க முடியும்? நான் சொல்வதை கொஞ்சம் கேளேன்.. நீ.. எங்கக்கூட எங்க அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்துடு.. அங்க நான், மலர் அப்புறம் ராகுல் உன்னைய நல்லா பார்த்துக்குவோம்..” என்று பொறுமையாக எடுத்துக் கூற, அவளோ அவன் கூறும் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை. அவளை மேலும் வற்புறுத்த மனமில்லாதவன், மலர்கொடியை பார்க்க, அவளோ அர்ஜுனிடம் அர்த்தம் பொதிந்த பார்வையொன்றை பார்த்தவாறே,

 

“அப்போ.. நான் சொல்ற இடத்துல தங்குவியா? அங்க உன்னைய யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க..” என்ற மலர்கொடியை பெருமையாக பார்த்தான் அர்ஜுன். தன் மனைவியை நினைத்து பெருமிதம் கொண்டான். மலர்க்கொடி கூறியதை கேட்டு சிறிது நேரம் யோசனை செய்த திவ்ய பாரதி, சரியென தலையசைக்க, சற்று மனமாரம் தளர்ந்தாற் போல் உணர்ந்தனர் இருவரும். திவ்ய பாரதியை தனது தோழியின் தாயார் வீட்டில் தங்க வைத்த மலர்க்கொடி, அவளுக்கு நடன ஆசிரியருக்கான பணியையும் வாங்கிக் கொடுத்தார். அங்கு‌ தான் அவளுக்கு சந்தியா பரிச்சயமானாள். திவ்ய பாரதியின் பிரசவம் வரை உடனிருந்த மலர்க்கொடி மற்றும் அர்ஜுன், தனது மகள்களின் பிரசவத்திற்கென வெளிநாடு‌ சென்றிருக்க, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக கைக்குழந்தையோடு அர்ஜுன் மற்றும் மலர்கொடியிடம் கூட கூறாது சந்தியாவின் துணையோடு வேறு இடம் சென்று விட்டாள். இப்போது கூட அதை நினைத்தால் திவ்யபாரதியின் உடலில் நடுக்கம் ஏற்படும். இப்படியே யாருக்கும் தெரியாது, அவள் போட்ட கணக்கை ஆதித்யா கரிகாலன் எளிதாக கண்டு கொள்வான் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. அதைவிட மயூரியை காப்பாற்றவென மீண்டும் அவனது உதவியை பாடுவார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. நடந்தவை அனைத்தும் மேகம் மேல் வந்து போகும் பனிக்காற்றைப் போல் வந்து போக, தன் தலையை உலுக்கி கொண்டு, டேவிட்டின் அறையை நோக்கிச் சென்றாள். 

 

“இங்கப்பாரு.. எனக்கு அவ உயிரோட வேணும்.. நீ என்ன பண்ணுவியோ? ஏது பண்ணுவியோ? எனக்கு தெரியாது, இந்த வாரத்துக்குள்ள பட்சி நாடு தாண்டணும்.. இல்ல.. ஆர்டர் கொடுத்தவன், நம்ம உயிரை வாங்கிருவான்.. சீக்கிரம் தேடுங்க..” என்று தனக்கு பின்னால் கேட்ட குரலை திரும்பிப் பார்க்க தைரியம் இல்லாது, விரல் நடுங்க தனக்கு அருகில் இருந்த கழிவறைக்குள் நுழைந்து கொண்டாள் திவ்யபாரதி. 

 

“அய்யோ.. அந்த பாவி நட்ராஜ்.. இங்க எங்க வந்தான்? இவன்கிட்ட இருந்து தப்பிச்சுட்டேன்னு நினைச்சேன்.. இப்படி வந்து நிற்குறான்? ஒருவேளை நான்.. நான்.. இங்க இருக்கேன்னு தெரிஞ்சுருக்குமோ? இப்போ, யார்கிட்ட சொல்றது? சும்மாவே இங்க யாரும் என்னைய நம்பமாட்டாங்க.. அர்ஜுன் அங்கிள்கிட்ட சொல்வோமா? வேணாம், அவரோட நிம்மதியை எதுக்கு கெடுக்கணும்? பேசாம போலீஸ் கம்ப்ளைட் கொடுத்துருவோமா? முதல்ல அவன் இருக்கானா? போயிட்டானான்னு பார்ப்போம்..” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவள், கதவின் ஓரம் காதை வைத்து பேச்சுக் குரல் கேட்கிறதா? என்று கேட்க, யாரும் இல்லை என்பதை உறுதி கொண்ட பிறகே கதவை திறந்து வெளியே வந்தாள். வெளியே வந்தவளின் மேலும் மேலும் படபடவென அடித்துக் கொண்டது. யாரவன்? எதற்காக திவ்யபாரதி அவனது குரலை கேட்டதும் இப்படி நடுங்க வேண்டும்? அப்படி அவளது வாழ்க்கையில் என்ன நடந்தது? இவளுக்கும் அவனுக்கும் இடையே என்ன நடந்தது? இங்கே இவள் பயந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவளது கெட்ட நேரமோ அல்லது அவனது நல்ல நேரமோ, அவனது கையில் இருந்தது அவளது புகைப்படமே! அவன் கையில் திவ்ய பாரதியின் புகைப்படம் எப்படி வந்தது? அவனுக்கு அப்புகைப்படத்தை அனுப்பி வைத்த பெண் யாரோ? நட்ராஜிடம் இருந்து திவ்ய பார

தியை காப்பானா ஆதித்யா கரிகாலன்? திவ்ய பாரதியை தேடி ரயில் நிலையத்திற்கு சென்றவனுக்கு கிடைத்த அதிர்ச்சி யாது? 

3 thoughts on “யாரார்கு யாரடி உறவு 10-11”

Leave a Reply to Suthaaa Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top