ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி

13

 

சில வருடங்களுக்கு முன்பு…

 

பாலன் இறந்த பிறகு வாசுகியின் உலகம் இருண்டு போனது… பாலன் இருந்தவரை கஷ்டம் என்றால் என்ன என்பதே தெரியாமல் வாழ்ந்து விட்டார்… அவர் போன பின்பே நிதர்சனம் அவர் முகத்தில் அறைந்தது… வாழ்க்கை மிகவும் கொடுமையானது அதுவும் இளம் வயதிலேயே துணையை இழந்த பெண்களுக்கு சொல்லவா வேண்டும்…

 

 பாலன் இருந்தவரை  அளவான வருமானம் அதற்கேற்ற வரவும் செலவும் என அவர்கள் வாழ்க்கை என்னும் வண்டி  சீராய் ஓடி கொண்டு இருந்தது… எப்பொழுது அவருக்கு அந்த பாழாப்போன நோய் வந்ததோ… அன்று தடம் மாற தொடங்கியது அவர்கள் வாழ்க்கை என்னும் வண்டி… கடன் மேல் கடன் வாங்கி கணவரை காப்பாற்ற போராடியவரை  ஏமாற்றி விட்டு இறுதியாக விண்ணுலகம் சென்று மறைந்தார் பாலன்…

 

கணவன் இறந்த துக்கத்தில் இருந்தவர் அதிலே முடங்கி போனார்… ஆனால் அவர் வாங்கி வைத்த கடன் சும்மா இருக்குமா??? குறுகிய காலத்திலே வாங்கிய கடன் வட்டி போட்டு அது குட்டி மேல் குட்டி போட்டு வளர்ந்து அவர் கழுத்தை நெறிக்க தொடங்கி விட்டது…

 

கந்து வட்டியின் அகோர பசிக்கு இரையாகி போனது அவர்கள் வாழ்ந்த அந்த பொன் குடில்… அது தான் திலோவின் பெற்றோர்  வாழ்ந்த வீட்டின் பெயர்…

 

காசு இருந்தால் கண்டவனும் சொந்தமே காசு இல்லா விட்டால் சொந்தம் இருந்தும் அனாதை தான்… வயசு பெண்ணை வைத்துக் கொண்டு போக்கிடம் இல்லாது தவித்த வாசுகியை தன் வீட்டுக்கு அழைத்து வந்தார் பஞ்சாட்சரம்…

 

தையல்நாயகியின் குணம் ஊர் அறிந்ததே… நெருங்கிய சொந்தங்களையே அண்ட விடாதவர்  தூரத்து  உறவை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வாரா என்ன… மறுத்த மனைவியிடம் பெரும் போராட்டத்திற்கு பிறகே உனக்கு முடியல சொன்ன இல்லை… ஒத்தாசையா உனக்கு   வீட்டு வேலை செஞ்சிகிட்டு இங்க ஒரு மூலையில் இருந்துட்டு போகட்டுமே… என்றதும் சரி என்று ஒப்பு கொண்டார் தையல் நாயகி…

“ஏற்கனவே எப்போ எப்போ என்று காத்து கிடந்தவர் வகை தொகையாக இவரிடம் வந்து சிக்கிக் கொண்டது கூண்டு கிளிகள் இரண்டும் அவர்களின் போதாத நேரமோ அல்லது தையல் நாயகியின் நல்ல நேரமோ வலிக்க வலிக்க அவர்கள் இறக்கையை பிச்சு எடுத்து விட்டார்…

 

நின்றால் குற்றம்!! உட்கார்ந்தால் குற்றம்?? நடந்தால் குற்றம்?? ஏன் மூச்சு விட்டால் கூட குற்றம் என்றே  படுத்தி எடுத்து விட்டார்… வளரும் குருத்து என்று பாராமல் திலோவை வார்த்தையாலே பொசுக்கி விட்டார் நாயகி… “அவள் வாசல் தெளித்து கூட்டினால் வயசு பொண்ணுக்கு வாசல்ல என்ன வேலைடி வரவன் போறவன் எவனையாவது வளைச்சு போட திட்டமா??என்று அவள் நடமாட்டத்தை குறுக்கி விட்டார்… வீட்டில் அவர் இருக்கும் நேரம் தவறி பத்திரம் விழுந்தாள் கூட இது என்ன உன் யப்பான் வீட்டு சொத்தாடி வக்கத்தவளே    என்று  கடித்து குதறி விடுவார்   …  தெரியாமல் சிரித்து விட்டால் கூட பொட்ட புள்ளைக்கு என்னடி சத்தம் வேண்டி கிடக்கு இப்படி சிரிச்சு சிரிச்சு எவனை மயக்கப் போற… என்று அவள் சத்தத்தையே அடக்கி விட்டார்… பொம்பள புள்ளைக்கு படிப்பு எதுக்குடி??? புருஷனுக்கு அடங்கி நடந்துக்கணும் அதுக்கு இந்த படிப்பு எல்லாம் சரிப்பட்டு வராது…???  அதையும் மீறி படிப்பை பற்றி பேசி… நீ படிக்க போறேன் படிக்க போறேன்னு  குதிக்கிறத பார்த்தா   அங்க போய் எவனயாவது வளைச்சு போட்டு  இருக்கியா?? என்றவரால் கேள்வி குறியானது  திலோத்தமாவின்  படிப்பு மட்டுமல்ல அவளது வாழ்க்கையும் தான்…

 

கையால் அடித்தால் தான் வலியா…?? தேள் கொடுக்கை போன்ற நாக்கால் கொட்டி கொட்டி பேசினாலும் வலியும் வேதனையும் அதை விட பன்மடங்காகுமே… தையல் நாயகியின் கொடுக்கு பேச்சால் ஆறாத ரணமாக திலோத்தமாவின்   நெஞ்சில் விழுந்து போனது… பசுமரத்து ஆணி போல…

 

இது ஒரு புறம் இருக்க…மறுபுறமோ   தையல் நாயகி  தன் ஒரே செல்வ மகனான கிரிதரன் மீது அதீத  பாசத்தை  கொட்டி வளர்த்தார்… அவன் சொல்லே மந்திரம் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஆடும் பொம்மையாகி போனார்… நினைத்ததை உடனே அடைந்து விடும்  பிடிவாத குணத்தோடும்… மற்றவர்களை மதிக்காத இருமாப்போடும்… தான் என்கிற செருக்கோடும் வளர்ந்து நின்றான்… இதே சலுகை மேனகைக்கு உண்டா என்றால் நிச்சயம் இல்லை… அது என்னவோ பெண் பிள்ளைகள் என்றால் தையல்நாயகிக்கு பாகற்காயின் கசப்பு தான் போலும்…

 

தையல் நாயகியை பின்பற்றி திலோத்தமாவை ஓட ஓட விரட்டுவான் கிரிதரன்… அவளை கண்டாலே ஒரு இளக்காரம் வந்து விடும் அவன் முகத்தில்… அவளை நிற்க விடாமல் வேலை ஏவி விட்டு அவள் செய்ய முடியாமல் தவிக்கையில் அதை கண்டு ரசிக்கும் மனபான்மையைக் கொண்டவன்…  

 

அன்னை அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் அன்பை தந்து வளர்த்தார் என்றால்… மறுபக்கம் பள்ளி தலைமை ஆசிரியரான தந்தையோ கிரிதரனை கெடுபிடியாக ஒழுக்கமாக  வளர்க்க நினைத்தார்…

 

வளரும் பயிர் முலையில் தெரியும் என்பது போல்… தையல்நாயகியின் பாசத்தால் நிச்சயம் மகன் ஒழுக்க சீலனாக வளர மாட்டான் என்பதை அவர் உறுதியாக நம்பினார்… அதன் விளைவு அவன் எது செய்தாலும் அதில் குறை கண்டு பிடித்து குட்டியே வளர்த்தார்…  மற்றவர்களோடு ஒப்பிட்டு இவனை மட்டம் தட்டுவதில் இவருக்கு நிகர் இவரே…

 

பரத்தும் கிரியும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒரே வகுப்பில் தான் பன்னிரண்டு வரை படித்தது… பரத் படிப்பில் படு சுட்டி… அதனாலே பஞ்சாட்சரத்துக்கு பரத்தை பிடிக்கும் என்றால்… பெரும் செல்வந்தர் வீட்டு மகன் சாதாரணப் பள்ளியில் படித்து சக மாணவர்களோடு சமத்துவமாக பழகுவதே அவனை அதீதமாக பிடிக்க காரணம் எனலாம்… அதுவும் தன் சொந்த மகனை விட என்றால் பார்த்து கொள்ளுங்களேன்… இது கிரிதரன் மனதில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது   என்றால் பரத்தோடு எல்லாவற்றிலும் ஒப்பிட்டு ஒப்பிட்டு இவனை மட்டும் தட்டுவதோடு அல்லாமல்… அவனை வைத்து கொண்டே மற்றவர்களிடம் இவனது சேட்டைகளை சொல்லி அவமானம் படுத்துவதை வழக்காமக கொள்ளும் அளவுக்கு…  

அதற்காக கிரிதரன் ஒன்றும் தத்தியும் இல்லை படிப்பில் ஆவரேஜ் ஸ்டுடென்ட்  என்றாலும் விளையாட்டில் அவனை ஜெயிக்க அவ்வளவு எளிதில் யாராலும் முடியாது… ஃபுட்பால் என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம்… ஒரு முறை பரீட்சையை கட்டடித்துவிட்டு   உள்ளூர் மேட்ச் ஒன்றிற்கு சென்று வந்ததை பரத் பஞ்சாட்சரத்திடம் போட்டுக் கொடுத்திருக்க அடி விலாசி விட்டார்…  ஏன்டா படிப்பை விட உனக்கு அந்த வேலையத்த விளையாட்டு முக்கியமா போச்சா… படிப்பு தாண்டா உனக்கு சோறு போடும்… பரீட்சை எழுதாம  விளையாட போனதுக்கு தண்டனையாய் ஒரு வாரம்  இந்த ரூம்க்குள்ளயே கிட நாயே… இப்பதான் உனக்கு கொழுப்பு அடங்கும்… செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து உங்க அம்மா உன்னை ரொம்ப கெடுத்துட்டாள்… இங்கையே கிடந்து  சாகு என்று பெல்ட்டால் அடித்து மயங்கி கிடந்த மகனை அம்போ என்று அறைக்குள் விட்டு பூட்டி விட்டு சென்றார்…

 

அதன் பிறகு பரத்தை தன் விரோதியாக  பார்க்க தொடங்கி விட்டான் கிரிதரன்… 

 

எப்பொழுதும் அவனோடு முட்டி கொண்டே நிப்பான்… இதே போல் ஒருமுறை இருவருக்கும் சண்டை வந்தது… அதில் கிரிதரனும் பரத்தும் மாய்ந்துக்கொள்ள அவர்களை விளக்கி வைத்த பஞ்சாட்சரம்… இருவரையும் நண்பர்களாக இருக்க அறிவுறுத்த… பரத் தன் ஆசான் சொல் கேட்டு அப்படியே நடக்கும் மாணவன் என்பதால் கிரிதரனிடம் நட்பு கரம் நீட்டினான்… ஆனால் கிரியோ என் அப்பா உன்னால தான்டா என்னை திட்டி கிட்டே இருக்காரு… நான் உருப்படாதவனாம் அப்போ இந்த உருப்படாதவன் கூட சேர்ந்து நீயும் உருப்புடாம போ…என்று மனசுக்குள் வஞ்சம் வைத்து வெளியே புன்னகைத்தப் படி நட்பு கரம் நீட்டினான்…

 

அது தொடக்கம்  ஊரில் உள்ள அத்தனை கெட்ட பழக்கங்களை தானும் கற்று கெட்டு அடுத்தவனையும் கெடுத்த பெருமை கிரிதரனையே சாறும்…

 

 அடித்து அடித்து பார்த்து விட்டு சீ போ என்று விட்டு விட்டார் பஞ்சாட்சரம்… ஆனால் மகன் வீணா போனதை எண்ணி மருகாத நாள் இல்லை…

உங்க  மகனை அங்க பார்த்தேன் இங்க வச்சி பார்த்தேன் என்று யாராவது வந்து சொல்லும் போது எல்லாம்… ஊர்ல உள்ள பிள்ளைகள் எல்லாம் நான் பார்த்து ஆளாக்கி  விட்டேன்… ஆனால் என் சொந்த மகன் விஷயத்துல கோட்டை விட்டுட்டேனே… எந்த இடத்தில் தவறு செய்தேன்… என யோசித்தவருக்கு தெரியவில்லை…

 பிள்ளைகள் கெட அதிக செல்லத்தால் மட்டுமல்ல… அதிக கண்டிப்பினாலும்  கெடுவார்கள் என்று… அதுவும் கிரிதரனின் இந்த நிலைமைக்கு காரணம் அவனை மட்டம் தட்டி வளர்த்தது என்றோ அல்லது அதற்கான பெரிய விலையை அவர் கொடுக்க போகிறார் என்பதையோ அவர் அறிந்து இருந்தால்…??? அந்த விலை தான் திலோவின் வாழ்வா…??

1 thought on “உயிர்வரை பாயாதே பைங்கிளி”

  1. Лучшие предложения электромонтажных услуг в Москве
    Мастер электрик на дом [url=elektrik-master-msk.ru]elektrik-master-msk.ru[/url] .

Leave a Reply to Vyzvat_nrMt Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top