முல்லையோ ராயனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தாள். “வயித்துல குழந்தையை சுமங்குற பொண்ணு நேரத்தோட சாப்பிடணும்” என்று அவள் மறுக்க மறுக்க சாப்பிட வைத்தார் தையல் நாயகி. சாப்பிட்ட அடுத்த நொடி குமட்டிக்கொண்டு வர வாயை பொத்திக்கொண்டு வாஷ்பேஷனுக்கு ஓடினாள்.
தையல்நாயகியோ பதறிக்கொண்டு முல்லையின் பின்னால் சென்றவர் அவளது தலையை பிடித்துக்கொண்டார் ஆதரவாக . சாப்பிட்டது ஒரு பருக்கை கூட இல்லாமல் வெளியே வந்துவிட்டது ஒரு முறை வாந்தி எடுத்ததற்கே துவண்டு போனவள் “அத்தை முடியல” என்று சோர்ந்து போய் தையல்நாயகியின் தோளில் சாய்ந்து விட்டாள்
மூணு மாசம் இப்படிதான் இருக்கும் கண்ணு சரியாய் ஆகிடும் என்று முல்லையை சோபாவில் உட்கார வைத்து அவரும்அவளுடன் உட்கார்ந்து விட்டார்
“அத்தை எனக்கு சாப்பாடு வேணாம் குமட்டிக்கிட்டே இருக்கு படுத்துக்கணும் போல” என்று முகம் வாடி சோபாவில் சாய்ந்து விட்டாள்.
“மாத்திரை போடணும்ல அத்தை ஜுஸ் போட்டு எடுத்துட்டு வரேன் குடிச்சிட்டு படுத்துக்கோமா” அவளின் தலையை ஆதுரமாக தடவிக்கொடுக்கவும் சோர்வில் கண்ணைமூடிக்கொண்டாள் முல்லை.
மகள் வாந்தி எடுத்ததுமே ஜுஸ் போட சென்றிருந்தார் அமுதா.
“முல்லை ஜுஸை குடிடி இந்த மாதிரி நேரத்துல வாந்தி வரும்தான் அதுக்குனு எதுவும் குடிக்காம இருக்க முடியாது” என்று அவள் கன்னத்தை மெதுவாக தட்டவும் “தண்ணி குடிச்சாலும் வாந்தி வருதுமா எனக்கு எதுவும் வேணாம்” என முகத்தை சுளித்து மீண்டும் தையல்நாயகியின் தோளில் படுத்துக்கொண்டாள் முல்லை
அங்கே வந்த கோமளமோ “ஒரு தடைவ வாந்தி எடுத்ததும் இப்படியோ சுணங்கி போவாங்க இன்னும் மாசம் கிடக்கு குழந்தை பெத்து எடுக்கறதுனா சும்மாவா! ரொம்ப தான் எடுப்பார் இருந்தா புள்ளை ஏங்கி ஏங்கி அழுக்குமாம் சும்மா அவளை சுத்தி நிற்காம எனக்கு வந்து இட்லியை வை அமுதா பசி உயிர் போகுது” என்று முகத்தை வெட்டிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தார்
“நான் முல்லையை பார்த்துக்குறேன் நீ போ ” என்று அமுதாவை கோமளத்திற்கு பறிமாற அனுப்பினார் நாயகி .
பூங்கொடியோ தியாவை அழகம்மையிடம் கொடுத்து விட்டு தீபாவிற்கு அலங்காரம் செய்து விட சென்றிருந்தாள்.
நைட் ட்ரஸுடன் நின்றிருந்த தீபா கண்டதும் அதிர்ச்சியுடன் கண்ணை விரித்தவள் “பர்ஸ்ட் நைட்க்கு புடவைதான் கட்டணும் தீபா நீ என்ன நைட் ட்ரஸ்ஸோட நிற்குற கோமளம் அத்தை மட்டும் உன்னை இந்த கோலத்துல பார்த்தாங்க சாமியாட்டம் ஆடிருவாங்க” என்றாள் சலித்துக்கொண்டு
“ஓ காட் என்ன பூங்கொடி நீங்க கல்யாணம் ஆனவங்க தானே இந்த சேலையெல்லாம் எவ்வளவு நேரம் என்கிட்ட இருக்கும்.. எதுக்கு வீணா பட்டுபுடவையை மடிப்பு எடுத்து கட்டி தலையில பூவு வச்சு இதெல்லாம் கொஞ்ச நேரத்துல தூக்கி போடப்போறோம் டைம் வேஸ்ட்.. கோமளம் அத்தை என்க்கிட்ட கேட்கணும் நான் பேசிக்குறேன் நான் கண்ணன்கிட்ட கொஞ்சம் பேசணும் நான் கிளம்பறேன் பை பூங்கொடி” என்று கோமளத்தின் அறையிலிருந்து வெளியே வந்தாள் தீபா
நீலகண்டனும் தெய்வநாயகமும் சாப்பிட்டு படுக்க சென்றிருந்தனர். பரமசிவம் மங்களம் பிரனேஷ் மூவரும் சாப்பிட்டு சென்னைக்கு கிளம்பியிருந்தனர்.
நைட் ட்ரஸுடன் வெளியே வந்த தீபாவை பார்த்த கோளமத்திற்கு மயக்கம் வராத குறைதான். “என்ன ட்ரஸ் இது..! புடவையை கட்டி கட்டிட்டு தலை நிறைய மல்லிகை பூவை வச்சிட்டு வா” என்றார் அதிகாரமாக
“முதலிரவுக்கு பட்டுபுடவை தேவையா அத்தை! எப்படியும் பெட்ல மல்லிகை பூ தோரணமெல்லாம் போட்டு வச்சிருப்பாங்க தலையில எதுக்கு தேவையில்லாம” என்றாள் அசால்ட்டாக
“ஏய் காலம் காலமாக நம்ம குடும்பத்துல நடக்கற சம்பிரதாயத்தை மாத்தக்கூடாது தீபா..! உங்க வீட்ல உன் அம்மா உன்னை சரியா வளர்க்கல..! ஒழுங்கா போய் புடவையை கட்டிட்டு வா” என்றார் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு கண்டிப்பான குரலில்
“முதல் இரவுக்கு புடவை கட்டிட்டு போகணும்னு அவசியம் கிடையாது அத்தை..! நான் நைட் ட்ரஸோடதான் போவேன் தள்ளுங்க” என்று கோமளத்தின் கையை பிடிக்கப்போனவளின் கையை அழுத்தமாக பிடித்து கோமளத்தை விட்டு கொஞ்சம் தள்ளி வந்தவன் “ஹேய் முதல் ராத்திரியில பட்டுப்புடவை கட்டி மல்லிகைப்பூ வைக்காம இருந்தா எனக்கு ஏதோ ஆபத்து வரும்னு பெரியவங்க சொல்லுவாங்க அப்புறம் உன் விருப்பம்டி” என்றான் அவளது காதில் கிசுகிசுப்பாக
அவளோ “நிஜமாமா கண்ணா” என்றாள் அவன் கூறுவதை உண்மையென்று நினைத்து
“எங்க செத்து போன ஆயாமேல சத்தியமா நான் சொல்றது உண்மைடி” என்றான் முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு இப்போதைக்கு வீடு இருக்கும் நிலையில் மாமியார் மருமகள் சண்டை வரக்கூடாதென தீபாவை அமைதிப்படுத்த இப்படியொரு பொய்யை கூறினான் கண்ணன்
“உ.உனக்காக புடவை கட்டிட்டு வரேன் கண்ணா” என்றவளோ வேகமாக கோமளத்தின் அறைக்குள் சென்றவள் புடவையை கட்டி தலையில் மல்லிகைபூவை வைத்துக்கொண்டு வெளியே வந்ததும் “இப்போதான் பொண்ணா லட்சணமா இருக்க நாளையிலிருந்து பேண்ட் சர்ட் போடறதெல்லாம் உங்க பெட்ரூம்க்குள்ள வச்சிக்கோ வெளியில வரும்போது அடக்க ஒடுக்கமாக சேலையோ சுடிதாரோ முக்கியமா சுடிதார் மேல ஷால் போட்டுக்கிட்டுத்தான் வரணும்” என்றார் விரலை நீட்டி மிரட்டுதலாக
தீபாவோ கோளமத்தின் முன்னே போய் போக தீபாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்ற கண்ணனோ “என்னடி பஜாரி போல சண்டை போடுற பெரியவங்ககிட்ட அமைதியா பேச மாட்டியா! எ ங்க வீட்டு பொண்ணுங்க பெரியம்மாகிட்ட மரியாதை குறைவா நடந்துக்கமாட்டாங்க நீயும் கொஞ்சம் அசஸ்ட் பண்ணிப்போடி..! நாளைக்கு பிரச்சனை வந்துட்டா உன்னைதான் குற்றம் சொல்லுவாங்க என்னால உனக்கு சப்போர்ட் பண்ணி பேச முடியாது. உனக்கு சப்போர்ட் பண்ணினா பொண்டாட்டிதாசன் எனக்கு முத்திரை குத்திடுவாங்க பேசாம வந்து படுத்து தூங்கு எனக்கு இன்னிக்கு பர்ஸ்ட் நைட் முடு இல்ல.. நதியா பாப்பா என்ன பண்ணுறாளானோனு பக்குனு இருக்கு. அவளுக்கு சமைக்க எதுவும் தெரியாது சித்தியையும் அத்தையும் அவளை குழந்தை மாதிரி வச்சிருந்தாங்க இவ இப்படியொரு காரியத்தை விளையாட்டுத்தனமாய் பண்ணிட்ட போய்ட்டா” என்றான் பெரும்மூச்சு விட்டு வருத்தமாய்
“உங்க தங்கச்சி சந்தோசமாதானே பாலாஜி கையை பிடிச்சிகிட்டு போனா அவ கண்ணுல உங்களையெல்லாம் விட்டு போறேனு கொஞ்சம் கூட கவலையே தெரியலையே இந்தநேரம் அவங்களுக்கு பர்ஸ்ட் நடந்திட்டிருக்கும். நம்மளும் இந்த நாளை ரொம்ப எதிர்பார்த்துகிட்டிருந்தோம்ல” என்று அவனது தோளில் சாய்ந்தாள்
“சாரிடி அம்மு நதியா எங்க வீட்டு செல்லபிள்ளை தினம் தினம் ஒரு டிசைன் தோடு போடுவாடு அவளை காதுல கூட நகையில்லாம போறதை பார்த்து என் மனசு ஏதோ அழுத்தமாக இருந்துச்சு இன்னிக்கு என் மைண்ட் அப்செட் அப்புறம் ஏன் இந்த பட்டு வேஷ்டி சட்டையினு பார்க்குறியா பெரியவங்க உண்டாக்கிய சம்பராயத்தை நாம உடைக்க கூடாதுடி” என்று அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து “குட் நைட்” என்று படுத்துக்கொண்டான்
தீபாவோ பர்ஸ்ட் நைட் எதிர்பார்ப்போடு வந்திருந்தாலும் கண்ணனுக்கு விருப்பம் இல்லையென்றதும் அவள் அவனை மனநிலையை புரிந்து கொண்டு அவனை அணைத்துக்கொண்டதும் “சாரிடி” என்று அவள் இதழில் முத்தமிட்டான்.
“எதுக்கு சாரி எனக்குமே டயர்டா இருக்கு நீ எதிர்ப்பார்ப்போட இருப்பேனு உன் ஆசையை கெடுக்கக்கூடாது இருந்துச்சு அவ்ளோதான்” என்று கண்ணைச்சிமிட்டினாள். இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் உறங்கி விட்டனர்.
நான் நடுமுதுகில் குத்திவிட்டோம்னு நினைப்பானோ ராயனன் என்று விட்டத்தை பார்த்துக்கொண்டு படுத்திருந்தான் பாலாஜி. அவனுக்கு தூக்கம் ஒரு பொட்டுக்கூட வரவில்லை. ஆனால் அழுதுகொண்டே சென்ற நதியாவோ கொஞ்ச நேரத்தில் உறங்கியிருந்தாள். இடையில் எழுந்து அவள் உறங்கிகிறாளா என்று எழுத்து பார்த்துவிட்டுத்தான் வந்திருந்தான் பாலாஜி.
ராயன் பதினொரு மணி வாக்கில் வீட்டுக்கு சென்றான் அனைவரும் தூக்கியிருந்தனர். தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து வீட்டுக்குள் சென்றான். ஹாலில் நீலகண்டன் உறக்கம் வராமல் கண்ணை மூடி அமர்ந்திருந்தார்.
ராயன் சோபா அருகே வந்தததும் தன் முன்னே நிழலாட மெல்ல கண்திறந்தவரை “என்ன மாமா இன்னும் தூங்காம உட்கார்ந்திருக்கீங்க” என்றபடியே நீலகண்டன் பக்கம் உட்கார்ந்தவன் முகத்தை சுளித்தான்
“கொஞ்சம் மனசு சரியில்லப்பா அதான் ரொம்ப வருசம் கழிச்சு உங்கத்தை தூங்கினதும் கொஞ்சம் இந்த கருமத்தை குடிக்க வேண்டியதா போச்சு” என்றவரின் குரல் கரகரப்பாக வந்தது.
“அப்படி என்ன பெரிய கவலை உங்களுக்கு மனசு சரியில்லாம போறதுக்கு பூங்கொடி தென்னரசுவும் பிரிஞ்சு இருக்காங்கனு நினைச்சு கவலைப்படுறீங்களா..! தென்னரசு தினமும் நம்ம வீட்டுக்கு வந்துடறானே அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துடுவாங்க மாமா கவலைப்படாதீங்க” என்றான் அவரது தோளை தொட்டு ஆதரவாக
” பொண்ணு மாப்பிள்ளை வீட்டுல இருக்கணும். மாப்பிள்ளை மாமியார் வீட்ல இருக்கக்கூடாது நான் இந்த வீட்டுல இருக்கேனா தெய்வநாயகம் மாமா உங்கத்தை கழுத்துல தாலி முன்னே நீ எங்க வீட்டுலதான் இருக்கணும்னு சத்தியம் வாங்கிட்டாரு.! இன்ன வரைக்கும் என்னை மரியாதை குறைவா நடத்துல ஆனா தென்னரசு அப்படியில்லையே அவரு ஆத்துல ஒரு காலு சேத்துல ஒரு காலுனு வச்சிருக்கான். கெட்ட புத்தியுள்ள அப்பனையும் விடமுடியாம என் மக கூட ஒண்ணா இருக்க முடியாம இருக்காரு.!! நான் போன ஜென்மத்துல பாவம் நிறைய பண்ணியிருப்பேன் போல ராயா” என்று வயதான மனிதன் சின்னவனிடம் முகத்தை முடிக்கொண்டு குலுங்கினார்
“மாமா உங்க மனசு கவலை எனக்கு புரியது நான் முல்லையை வெறுத்துடுவேனு நினைச்சுதானே இப்ப குடிச்சிட்டு வந்து என்கிட்ட அழறீங்க!” என்றதும் விழுக்கென்று நிமிர்ந்தார். நீலகண்டன்.
“எனக்கு எல்லாம் தெரியும் மாமா அப்பாவும் நீங்களும் பேசிகிட்டிருந்ததை நான் கேட்டுட்டேன் நீங்க மனசரிஞ்சு அத்தைக்கு துரோகம் பண்ணலயே எல்லாம் கடவுள் விதித்த விதி மாமா விடுங்க பேசாம படுத்து தூங்குங்க நான் போர்வை எடுத்துட்டு வரேன் அத்தை இந்த கோலத்துல பார்த்தாங்கனா மனசு வருத்தப்படுவாங்க” என்றான் வருத்தத்துடன்
“உட்காரு மாப்பிள்ளை என் மனசுல உள்ளதை உன்கிட்ட சொல்லியே ஆகணும்” என்று ராயனின் கையை பிடித்து உட்கார வைத்தார் நீலகண்டன்
“நம்ம ஊரு கோவில் திருவிழாவுல அந்த குடும்பத்தை கெடுத்த சகுனி ராஜமாணிக்கம் நான் குடிக்கற சாக்குல எனக்கு போதை மருந்தை கலக்கி கொடுத்துட்டான் எனக்கு குடிக்கும்போது வித்தியாசம் தெரியலை. கொஞ்ச நேரத்துல எங்க இருந்த வந்தானோ அந்த படுபாவி உனக்கு போதை மருந்தை கொடுத்துட்டேன் நீலகண்டா இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த ஊர் முழுக்க இருக்க இடத்துல நீ போதை மருந்து எடுத்திருக்கேனு உன் மானத்தை வாங்கப்போறேன் ஊர் முன்னால தெய்வநாயகம் குடும்பம் உன்னால சந்தி சிரிக்க போறாங்க எனக்கு ஒரே கொண்டாட்டம்” என்று தொடையை தட்டி சிரித்தான்.
“எனக்கு என் பேரு கெடும்னு கவலை இல்லை. என்னால உன் அப்பா தலைகுனிஞ்சு நிற்க கூடாது நினைச்சு அவனை தள்ளி விட்டு நடக்க ஆரம்பிச்சேன் என்னால முடியல தலை கிறுக்க நடந்து வந்தேன். போதை தலைக்கு ஏறி நான் என்ன பண்ணுறேனு எனக்கு தெரியாம போச்சு எப்பிடியோ நடந்து வீட்டுக்கு வந்துட்டேன் நம்ம வீட்டுல அப்பாவுக்கு கணக்கு பிள்iளா வேலைபார்த்த மாரிமுத்துவோட பேத்தி அமுதாவை திருவிழா பார்க்க கூட்டிட்டு வந்திருந்தாரு மாரிமுத்து திருவிழாவுக்கு போன சமயத்துல நான் தள்ளாடி கேட்டுக்குள்ள நுழைச்சவன் பின்னாடி கிணத்துல தண்ணியை ஊத்திட்டு போலாம்னு போனேன்..! வீட்ல இருந்தவங்க எல்லாரும் திருவிழாவுக்கு போயிருந்தாங்க உங்கத்தை கட்டியிருந்த சேலையை போலவே அமுதாவும் கட்டியிருந்தா நான் போதை மயக்கத்துல நிதானம் இழந்து அமுதாகிட்ட தப்பு நடந்துகிட்டேன் ராயா என நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார் நீலகண்டன்.
அமுதா பாவம் அவளால முடிச்ச வரை என்னை தடுத்து பார்த்திருக்கா நான் போதை மாத்திரை விரியத்துல மிருகமாமாறிட்டேன்..! எனக்கு ஒண்ணுமே தெரியாம மாரிமுத்து வீட்டிலேயே படுத்துகிடந்திருக்கேன் அமுதா தான் மோசம் போயிட்டோம்னு தாங்க முடியாம கிணத்துல குதிக்க போயிருக்கா.. அப்பா வீட்டுக்கு வந்தவரு அமுதாவை காப்பாத்தி ஏன் இப்படி பண்ணுன கேட்க அமுதா அழுதுகிட்டே நான் இப்படி நடந்துகிட்டேன் எங்க கிராமத்துல என்னை சேர்க்கமாட்டாங்க தாத்தாவுக்கு நான் மோசம் போனது தெரிஞ்சுனா அவரு உயிரோட இருக்கமாட்டாருனு என்னை ஏன் காப்பாத்தீனிங்கனு அழுதிருக்கா..! ஆனா அப்பா அமுதாவிடம் மன்னிப்பு கேட்டு இந்த உண்மையை யார்கிட்டயும் சொல்லாதம்மா எங்க வீட்டு பொண்ணா உன்னை பார்த்துக்குறேன் நீ எங்கயும் போக வேணாம் என்று அமுதாவை கிராமத்துக்கு அனுப்பாம மாரிமுத்து வீட்டிலேயே தங்க வச்சுட்டாரு. போதை தெளிஞ்சு எழுந்ததும் தான் இருந்த கோலம் எனக்கு உயிரோடவே இருக்க பிடிக்கல நானும் மரத்துக்கு அடிக்க வச்சிருந்த மருத்தை எடுத்துக்குடிக்கபோனேன் உன் அத்தையோட முகம் பூங்கொடியோட முகம்தான் முன்ன வந்துச்சு என்னால சாகவும் முடியல உயிரோட இருக்கவும் முடியல ரெண்டுகட்டாங் நிலைமை தப்பு பண்ணிட்டோம்கிற உருத்தல் இருக்க மருந்தை குடிக்க போன அப்பா வந்து மருந்தை தட்டிவிட்டு என்னை கன்னத்துல ரெண்டு கொடுத்து என் தங்கச்சியை விதவையா பார்க்க என்னால முடியாதுடா இதோ இந்த பொண்ணுக்கிடட நடந்துகிட்டியே நாளைக்கு வயித்துல புள்ள தங்குச்சுனா யாருடா பொறுப்பு இந்த பொண்ணு கழுத்துல இப்பவே தாலி கட்டு படிச்சு படிச்சு உன்கிட்ட சொல்லியிருக்கேன் குடிக்காதேனு ஆனா அந்த கருமத்தை குடிச்சு இப்போ ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையில விளையாடி இருக்க இந்த பொண்ணுக்கு வேற வாழ்க்கையை அமைச்சு தரேனு சொன்னாலும் இந்த பொண்ணு நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லுது குடியால குடும்பமே போச்சுடா எனக்கு வர ஆத்திரத்துக்கு உன்னை கொன்னு போட்டிருப்பேன் ரெண்டு பொண்ணுங்க விதவையா இருக்கணும் உன் குழந்தைக்கு அப்பா இல்லாம வளருவாங்கனு காரணத்துக்காக உன்னை உயிரோட விடறேன்! எந்த அண்ணனும் பண்ணாத காரியத்தை பண்ணுறேன் இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டு என்றார் அந்த விடியற்காலை நேரத்தில்.
“மாமா என்னால முடியாது” என்று கதறினேன் ராயா
இந்த புத்தி நீ குடிக்கறதுக்கு முன்னால இருந்துருக்கணும்டா என்று கன்னத்துல ஓங்க அறைவிட்டு என்னை அமுதா கழுத்துல தாலி கட்டச் வச்சிட்டாரு ஆனா அமுதா பெரிய குடும்பத்துல பிரச்சனை வரக்கூடாதுனு அவங்க ஊருக்கு போய்ட்டா மாரிமுத்து பேத்தியை பார்க்க போனவரு அவ கர்ப்பம் ஆனது தெரிஞ்ச நெஞ்சை பிடிச்சுகிட்டு உயிரை மாய்ச்சுகிட்டாரு எல்லாம் என்னாலதான் மாப்பிள்ளை நான் உயிரோடவே இருந்திருக்ககூடாது என்று கதறி அழுதவரை தோளில் தட்டி மேல பேச வைத்தான் ராயன்
அப்பா மாரிமுத்து இறப்புக்கு போய்ட்டு கர்ப்பமா இருந்த அமுதாவை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாரு அவகிட்ட நான் மன்னிப்பு கேட்டேன் இந்த குழந்தை என்னோடது நம்ம குடும்பத்துக்கிட்ட சொல்ல முடிவெடுத்து அப்பாகிட்டயும் பேசிட்டேன் அப்பாவும் அதுதான் சரினு சொல்லிட்டாரு ஆனா அமுதா எங்க ரெண்டு பேரையும் உண்மையை சொல்ல விடலை! அழகம்மை அக்கா என்கிட்ட பாசமா பழகுறாங்க நான் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டது தெரிஞ்சா அவங்களால நிம்மதியா இருக்க முடியாது நான் போறேன் என்று ஊருக்கு கிளம்ப உங்க அப்பா எங்க வீட்டு வாரிசு உன் வயித்துல வளரும்போது உன்னை விடமாட்டேனு நம்ம வீட்டுலதங்க வச்சிகிட்டாங்க.. கோமளம் அக்காவை தவிர வீட்டில் உள்ள அனைவரும் அமுதாவை வேலைக்காரியாக பார்க்கல. ஒருநாள் கூட என்னை அவ கணவனாக பார்க்கல ராயா நானும் அவ கழுத்துல தாலி கட்டினேனே தவிர பொண்டாட்டியா அவளுக்கு எதுவும் பண்ணலை எல்லாம் உங்க அப்பாதான் அமுதாவுக்கு தேவையானதை வாங்கி கொடுத்து பார்த்துக்குறாரு.. நான் பண்ணின பாவம் தான் என் ரெண்டு பொண்ணுங்களும் இப்போ கஷ்டப்படுறாங்க என்று ராயனின் தோளில் சாய்ந்து கதறினார்
“இந்த உலகத்துல யாரும் உத்தமன் கிடையாது சந்தர்ப்பம் சூழ்நிலை உங்களை அப்படி நடக்கவச்சிருக்கு நீங்க வேணும்னு எந்த தவறும் பண்ணல அந்த ராஜமாணிக்கத்துக்கு என்கையால ஒரு முறை சுளுக்கு எடுக்கப்போறேன் அந்த நாதாரியோட குட்டு தென்னரசுவுக்கு தெரியப்படுத்துறேன் அப்புறம் அவனுக்கு இருக்கு என்கிட்ட மேளதாளம் கச்சேரி எல்லாம் நம்ம குடும்பத்தோட வாழ்க்கை பாதையை திசைமாற்றின அவனை சும்மா விடமாட்டேன் மாமா நீங்க பேசாம அமைதியா படுங்க” என்றவனோ கெஸ்ட் ரூமிற்கு சென்று போர்வையும் தலையணையும் எடுத்து வந்து அவரை படுக்க வைத்தான்
“நீலகண்டனோ எழுந்தவர் பூங்கொடியை தேடி தென்னரசு மாப்பிள்ளை வந்துட்டாரு. ஆனா நீ என் சின்னபொண்ணு முல்லை மேல கோபமா இருக்கீயே நீ பேசலனு அவ அழறாடா அவ செய்தது தவறுதான் அதுக்காக மாசமா இருக்க பொண்ணை என் கண்ணு முன்னாடி நீ அடிக்குற” என்று மருமகனிடம் உரிமையில் சண்டை போட்டார் நீலகண்டன்
“அவ என் மாமா பொண்ணுனு தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணினேன்..! என்கிட்டே உண்மையை மறைச்சது தப்பு இல்லையா! உங்க பொண்ணு” என்ற வரையில் மேல மாடியில் நின்று தந்தையும் கணவனும் பேசியதை கேட்டவள் ஓ மாமா பொண்ணுனு கரிசனையிலதான என்னை கல்யாணம் பண்ணியிருக்காரு அதான வேலைக்காரியை யாராவது கல்யாணம் பண்ணியிருப்பாங்களா? என்று அறைக்குள் ஓடியவள் மேல ஷாலை எடுத்து போட்டுக்கொண்டு கீழ மாடிப்படிகளில் இறங்கினாள்
“உங்க ரெண்டு பொண்ணுங்களும் சந்தோசமாத்தான் இருப்பாங்க! இனி அடுத்த தடைவ குடிச்சா நானே உங்க மேல கெட்ட கோபம் வரும் பார்த்துக்கோங்க.. முல்லையை எனக்கு சின்னவயசுல இருந்து பிடிக்கும் ஆனா அத்தை பூங்கொடியை கல்யாணம் பண்ணிக்கோனு சொல்ல நானும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருந்தேன். பூங்கொடி தென்னரசுவை விரும்புறானு தெரிஞ்சதும் என்னால அவளை பொண்டாட்டியா முடியாது மாமா அதான் தென்னரசுவிற்கு நம்ம பூங்கொடியை கல்யாணம் பண்ணி வச்சேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் நேரம் முல்லை அவர்கள் பக்கம் வந்துவிட்டாள்
ராயனோ முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு நின்றான். ராயனை பார்க்காமல் “அப்பா” என்றதும் நீலகண்டனுக்கு அடித்த போதையெல்லாம் தெளிந்து விட்டது “கண்ணு நீ எப்போ அப்பானு உரிமையா கூப்பிடுவேனு தவமா தவம் இருந்தேன்” என்று மகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.
ராயனோ புன்சிரிப்போடு இருவரையும் பார்த்திருந்தவன் “க்க்கும்” என்று தொண்டையை செரும அவளோ ராயனை ஒரு பார்த்தவள் நீலகண்டன் பக்கம் திரும்பி “அப்பா அம்மாகிட்ட அப்பானு பேச்செடுத்தாலே என்கிட்ட பேசமாட்டாங்க நான் அழுது கேட்டிருக்கேன் ஒரு வார்த்தை கூட நீங்கதான் என் அப்பானு சொல்லல அவங்க நானும் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்ப்பா..! அழகு அம்மா என்னை அவங்க பொண்ணு போல பார்த்துக்குறாங்க நானும் அவங்களை அம்மாவாதான் பார்க்குறேன் இனிமே குடிக்காதீங்கப்பா எங்கனால குடும்பத்துல பிரச்சனை வர விடமாட்டோம் பா என்று ஏக்கத்துடன் தந்தையின் நெஞ்சில் சாய்ந்து குலுக்கி அழுதாள்
“நா.நான் இனிமே குடிக்கமாட்டேன் கண்ணு. நான் இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன் இனிமே ராயன் கிட்ட எதையும் மறைக்க கூடாது சரியா” என்று மகளின் கண்ணீரை துடைத்து விட்டார்
“நான் வேணும்னு மறைக்கலங்கப்பா” என்று மீண்டும் அவள் இதழ் பிதுக்கி அழத்தயாராக
“மாமா நேரமாச்சு அத்தை முழிச்சுச்ச போறாங்க” என்று ராயன் அழுத்திக்கூறியதும்
“சரி கண்ணு நீ போய் தூங்கு” என்று மகளுக்கு உச்சி முத்தம் கொடுத்தார்
அவளுமே “அப்பா” என்று ஒரு முறை அணைத்துக்கொண்டு மெல்ல விலகினாள்.
ராயன் படிக்கட்டில் ஏற “ம.மச்சான் சாப்பீட்டிங்களா” என்றாள் தயங்கியவாறே
“ம்ம் சாப்டேன்” என்றவனோ வேஷ்யின் நுனியை பிடித்துக்கொண்டு மடமடவென ஏறிவிட்டான்
மகளும் மருமகனையும் பார்த்துக்கொண்டிருந்த நீலகண்டனோ ஏதோ மனப்பாரம் இறங்கியது போல கண்மூடிப்படுத்தார்
ராயன் துண்டை எடுத்துக்குளிக்கச் சென்றுவிட்டான். வழக்கம்போல அவனுக்காக காத்திருந்தவள் அவன் வெளியே வந்ததும் “மச்சான்” என்று அவனருகே நின்றதும் “நீ சாப்பிட்டியா, மாத்திரை போட்டியா” என்று எதோ ஒட்டாத்தன்மையாய் கடமைக்கு கேட்டவன் டீசர்ட்டை எடுத்து போட்டுக்கொண்டான்
“ம்ம் சாப்டேன் ஆனா வாமிட் வந்துருச்சு” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் நேரம் கட்டிலில் படுத்துவிட்டான் ராயன் .
அவ்ளோதானோ “மச்சான் நான் பேசணும்” என்றாள் அவன் பக்கம் நெருக்கி படுத்து
“எனக்கு தூக்கம் வருது” என்று கண்ணை மூடி படுத்துக்கொண்டான்
முல்லைக்கு ராயனின் தன்னை உதாசீனம் பண்ணியதும் கத்தியால் குத்தியதை விட வலியை கொடுத்தது. அழுதுகொண்டே அவனை அணைக்க போக அவனோ அப்படியேதான் படுத்திருந்தான் அணைக்காமல்.
அவள் சும்மா நெருங்கிப்படுத்தாலோ அவளை தன் மார்பில் தூக்கி போட்டுக்கொள்வான் ராயன் இன்று அவள் அவனை அணைத்தபோதும் அவன் அவளை அணைக்காமல் இருந்தது அவளுக்கு அழுகையே வந்தது.
அழுமையை அடக்கிக்கொண்டு திரும்பி படுக்க அவனோ அவளது கையை பிடித்துக்கொண்டான். இது போதும் மச்சான் என்று உதடு கடித்து அழுகையை அடக்கி உறங்கி விட்டாள்.
நடுஜாமத்தில் கரண்ட் கட் ஆனதும் “அச்சோ அம்மா இருட்டு ஆகிடுச்சு எனக்கு பயமா இருக்கு” என்று அடித்து எழுந்து ஓடிவந்து சோபா இருக்கிறதென்று தெரியாமல் பாலாஜியின் மேல் விழுந்து விட்டாள்
“அடச்சீ தள்ளிப்போடி” என்று அவன் தள்ளிவிட்டதில் அவள் “அச்சோ அம்மா என் இடுப்பு போச்சு” என்று தள்ளாடி எழுந்து உட்கார கரண்ட் வந்துவிட்டது
“என்னடி மாடுகணக்கா என் மேல வந்து விழ அறிவுகெட்டவளே” என்று எரிந்து விழுந்தான்
“க.கரண்ட் போயிடுச்சு எ.எனக்கு இருட்டுனா பயம் அதான் எழுந்து ஓடி வந்துட்டேன் நா. இங்கயே ஓரமா படுத்துக்குறேன் உ.உங்களை தொந்தரவு பண்ணமாட்டேன்ங்க” என்றாள் அழும் குரலில் கெஞ்சினாள்
“இம்சை இம்சை என் உயிரை வாங்குறதுக்குனு வந்திருக்க படுத்துத்தொலை” என்றான் முகத்தை அஷ் டகோணலாக்கி
நதியாவோ நீ என்ன அவமானப்படுத்தினாலும் நான் உன்னை விட்டு போகமாட்டேன் ராஜா வேதாளம் போல உன் முதுகுல ஒட்டிகிட்டே இருப்பேன் என்று மனதில் நினைத்தவள் பாயை விரித்து படுத்துக்கொண்டாள்.
அவனோ “காலையில நேரமே எழுந்து குளிச்சு வாசல் தெளிச்சு கோலம்போட்டு விளக்கேத்தி பாலை காய்ச்சி காபி போட்டு கொடுத்துட்டு சமைக்கணும் நீ சமைச்ச சாப்பாட்டை நீதான் முதல் சாப்பிடணும்” என்றான் ஒவ்வொரு வேலையாக அடுக்கி வைத்தான் அவளது தலையில்
“நீங்க சொன்னதுல எனக்கு ஒண்ணும் தெரியாது” என்றாள் மெல்லிய குரலில்
“எல்லாரும் பொறந்ததுலயிருந்து கத்துகிட்டா வந்தாங்க உங்கம்மா வாய் மட்டும் காது வரைக்கும் பேசுவாங்க உனக்கு ஒரு மண்ணும் சொல்லிக்கொடுக்காம வளர்ந்திருக்காங்க நீயும் மண்ணுமாறி இருக்க ஒரு வேலையும் தெரியாம” என்றான் சலித்தபடியே
“சொ.சொல்லிக்கொடுத்தா க.கத்துகிடறேன்” என்றாள் தலையை தூக்கி பார்த்து
“ஐஞ்சுல வளையாதது ஐம்பதுல வளையுமாடி மக்கு பண்டாரம் தூங்குடி காலையில நாலு மணிக்கு எழும்பி விடுவேன் எழுந்து எல்லா வேலையும் பார்க்கணும்” என்றான் மிரட்டலாக
“ம்ம் எழுந்துங்குறேன்” என்று தலையை ஆட்டி உறங்கினாள். ஆனால் காலையில் நான்கு மணிக்கு அலாரம் அடித்து பாலாஜி எழுந்த போது போர்வையை தலையிலிருந்து காலை வரை போர்த்திக்கொண்டு
உறங்கியவளை கண்டு கோபம் கொண்டவன் வெளியே சென்றவன் தொட்டிலிருந்த தண்ணியை பக்கெட்டில் எடுத்து வந்து அவள் மீது ஊற்றியதும் “அச்சோ அம்மா வீட்டுக்குள்ள மழை வருது” என்று வெடத்துபோய் எழுந்து உட்கார்ந்தாள்
“மழை வரலைடி நான் உன்மேல தண்ணி ஊத்தின நைட் நேரமே எழுந்துக்க சொன்னேன்ல எழும்பி குளிச்சிட்டு வந்து வாசல் தெளி” என்று அவளை விரட்டினான்
“போறேன் போறேன் மெதுவா சொல்லுங்க” என்று குளிக்கப்போனவளின் கையை பிடித்து இழுத்தவன் “நீ படுத்திருந்த பாயை யாருடி எடுத்து மடிச்சு வைப்பாங்க படுக்கை மடித்து கூட உனக்கு தெரியாத சோம்பேறி கழுதை” என்று அவன் வாய்க்கு வந்தபடி நதியாவை திட்டிக்கொண்டிருந்தான்
“மடிச்சு வைக்குறேன்ங்க” என்று அப்பாவியாய் விழித்துக்கொண்டு வேகமாய் பாயை சுருட்டி பெட்ரூம்க்கு கொண்டு சென்றவளை பெரும்மூச்சு விட்டான் பாலாஜி
குளித்து முடித்து வந்தவள் தலையை துவட்டி கிளிப்போட்டு வாசலை கூட்டணுமே விளக்குமாறு எங்க இருக்கு என்று தேடினாள்
“இந்தா வாசலை கூட்டு” என்று அவள் கையில் விளக்குமாரை கொடுத்துவிட்டு வேப்பங்குச்சியால் பல்லை விளக்கிக்கொண்டு அங்கிருந்த திண்ணையில் உட்கார்ந்து விட்டான்.
பைப்பில் தண்ணீரை பிடித்து அவளால் தூக்கவும் முடியவில்லை எப்படியோ தூக்கி வந்து வைத்து விட்டு வாசலை கூட்டி பெருக்கி முடித்து ‘ப்பா கையெல்லாம் வலிக்குதுப்பா தண்ணீர் பக்கெட்டை தூக்கினாள்.. மாட்டு சாணத்தை கூடையில் கொண்டு வந்தவன் “மாட்டுசாணத்தை கறைச்சு வாசல் தெளி அப்போதுதான் மகாலட்சுமி வீட்டுக்குள்ள வருவாங்க” என்றான் பாலாஜி
“மாட்டுசாணம் வாசம் அடிக்கும்” என்று முகத்தை சுருக்கவும் “இப்போ கரைக்கிறயா இல்லையா சாணம் கிருமி நாசினி ” என்று அவன் கண்ணை உருட்டவும்
“இதோ கரைக்குறேன் கரைக்குறேன்” என்று சாணத்தை தண்ணீரில் கரைத்து வாசல் தெளிக்க தெரியாமல் சொட்டையாக சொட்டையாக தெளித்தாள்
“ஒரு வாசல் கூட தெளிக்க தெரியலை நீ பன்னி மேய்க்க கூட ஆகமாட்டா” என்று அவளது கையிலிருந்து பக்கெட்டை வாங்கியவன் சாணியை கட்டி இல்லாமல் கரைத்து விட்டு ஒரு இடம் விடாமல் வாசலில் தெளித்து இப்படி தெளிக்கணும் “நாளையிலிருந்து சரியாய் செய்யணும் இல்லைனா நங்குனு இதுபோல ஒரு கொட்டு வைப்பேன்” என்று தலையிலும் ஒரு நங்கென்று கொட்டு வைத்தான்
“அம்மே” என்று இதழ் பிதுக்கியவளை “மூச்” என்று வாயில் விரல்வைத்து அடக்கிவிட்டு கையை கழுவிட்டு கோலம் போடு என்றான்
“எ.எனக்கு கோலம் போடத் தெரியாது” கண்ணை உருட்டினாள்
“சரியா விளங்கிடும்டி கோலம் போடத்தெரியாம ஒரு பொண்ணு இருப்பாங்களா” என்று நெற்றியில் அடித்துக்கொண்டவன்
“ஒரு ஸ்டார் போல ஏதோ ஒண்ணு போடுடி யூடிப் பார்த்து கோலம் போடறது எப்படினு கத்துக்கோ” என்றான் அவளை முறைத்தபடியே
“எ.என்கிட் போன் இல்லிங்க மண்டபத்துல வைச்சுட்டு வந்துட்டேன் போன் வாங்கிக்கொடுங்க நேத்துல இருந்து ரீல்ஸ் பார்க்கல என்றாள் முகத்தை அப்பாவி போல வைத்துக்கொண்டு
“ஒழுங்கா கோலத்தை போட்டு வந்து பாலை காய்ச்சு காபி போடு என்று நான் குளிச்சிட்டு வரேன்” என்று அதட்டிச் சென்றான் பாலாஜி
“அப்பா சரியான முசுட்டுக்காரன் என் தலையில கொட்டிட்டான் வலிக்குது என்னை யாருமே அடிச்சதில்லை” என்று தலையை தேய்த்துக்கொண்டு ஸ்டார் கோலத்தை போட்டு விட்டு வீட்டுக்குள் வந்தவள் எப்படியோ காபியை போட்டு கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
பாலாஜி டீசர்ட்டுடன் குளித்து வந்ததும் “மா.மாமா காபி போட்டிருக்கேன்” என்றாள் புன்னகையுடன்
“வாங்க போங்கனு சொல்லு மாமா மச்சானு கூப்பிடாதே கடுப்பா வருது ” என்றான்
“இந்தாங்க காபி” என்றாள் இதழ் சுளித்து
“வாயை சுளிக்குற வேலை வச்சிகிட்ட ஒடைச்சிருவேன்” என்று காய்ந்து விழுந்தவன் அவள் போட்ட காபியை வாங்கி ஒரு மிடறு குடித்துவிட்டு “தூஉஉ” என்று துப்பிவிட்டு “என்னடி காபியா இல்ல கழுநீர்த்த்ண்ணியா ஒரு காபி கூட வைக்கத்தெரியாத மக்கு மக்கு” என்று காபி டம்ளரை அவள் மீது விசற போக அவளோ “அச்சோ அம்மா” முகத்துக்கு நேறாக கையை வைத்து மறைத்ததும் காபி டம்ளரை தூக்கி சுவற்றில் அடித்தான்.
“எ.எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க சொல்லிக்கொடுங்க ரொம்ப ஹர்டா திட்டாதீங்க” என்று அழுக ஆரம்பித்தாள்.
“ஓ காட் வாடி நான் காபி போட சொல்லிக்கொடுக்குறேன்” என்று அவளது கையை பிடித்து கொண்டு சமையல்கட்டுக்கு கூட்டிச்சென்றவன் காபி போடும் முறையை சொல்லிக்கொடுத்தான். காபியை கப்பில் ஊற்றியதும் “எனக்கும் காபி வேணும் பசிக்குது” என்றாள்
“சாமிக்கு விளக்கேத்த சொன்னேனே விளக்கேத்தினியாடி” என்றான் காபியை குடித்துக்கொண்டே
“அச்சோ மறந்துட்டேன்” என்றாள் தலையை சாய்த்து
“போடி விளக்கேத்திட்டு வந்து பால்காய்ச்சி காபி போடணும்னுகிற அறிவு கூட இல்லை மடச்சாம்பிராணி” என்று அவளது முதுகை பிடித்து தள்ளினான் ஹாலில் இருக்கும் ரேக்கில்தான் சாமி படத்தை வைத்திருந்தான் பாலாஜி
இரவே பூ வாங்கி வந்திருந்தான் பூவைப்போட்டு விளக்கேற்றியவள் “முருகா என்னை எங்க வீட்டுக்காரர் திட்டக்கூடாது” என்று வேண்டியது காபி குடித்துக்கொண்டிருந்தவனுக்கு புரை ஏறியது
“ஏன்டி வேலை செய்ய கத்துக்கிடணும்னு சாமி கிட்ட வேண்டல ஆனால நான் திட்டக்கூடாது வேண்டுறியா” என்று அதற்கும் திட்டு வாங்கினாள்
மைண்ட்வாய்ஸ் நினைச்சு சத்தமா பேசிட்டோம் போல என்றவளோ “சாரிங்க இப்போ காபி குடிக்கலாமா” என்றதும் “குடிச்சு தொலை “கடைக்கு போய்ட்டு வரேன்” என்று வெளியே சென்றான்.
ராஜமாணிக்கம் காலையில் தனக்கு காபி போட்டு வந்த வேலைக்காரியின் கையை பிடித்து “இன்னிக்கு நைட்டு தோட்டத்துப்பக்கம் வந்துடு” என்ற நேரம் கதவு திறந்து வந்தான் தென்னரசு
பிழை பார்க்கவில்லை பிரண்ட்ஸ்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
graduated from Elizabeth’s St. Mary of the Assumption [url=https://en.wikipedia.org/wiki/Chuck_Feeney/]https://en.wikipedia.org/wiki/Chuck_Feeney/[/url] .