அத்தியாயம் 13
மருத்துவமனைக்குள் இருக்கும் சிறிய பூங்காவிற்கு மயூரியை அழைத்துச் சென்ற திவ்ய பாரதியின் மனதில் பல எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தன. ‘எதற்காக அங்கிள் என்னைய வெளிய அனுப்பிட்டு, அவரோட மட்டும் பேசுறாரு? இதுல என்னமோ இருக்கு? என்னது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் பின்னால்,
“மிஸஸ். ஆதித்யா..” என அவளை டேவிட் அழைக்க, மகளுக்கு ஊஞ்சல் ஆட்டிக் கொண்டிருந்தவள் திரும்பி பார்த்தாள்.
“டாக்டர்.. டேவிட்..”
“ஒரு குட் நியூஸ்..” என்றவளை புரியாது பார்த்தாள் திவ்யபாரதி.
“ப்ச்.. ரொம்ப யோசிக்காதே.. நாளைக்கு மயூரி குட்டிக்கு போன்மாரோ ட்ரான்ஸ்ஃபர் ஆப்ரேஷன் நடக்கப் போகுது..”
“வாட்? அப்போ டிஎன்ஏ?”
“அதெல்லாம் செக் பண்ணியாச்சு.. சோ, நாளைக்கு ஈவினிங் பாப்பாக்கு ஆப்ரேஷன்.. நீ ஹாப்பி..”
“அர்ஜுன் அங்கிள் தான் பண்ணப் போறாரா? டிஎன்ஏ ப்ளட் செல்ஸ் வேணும்னு சொன்னீங்களே?!”
“அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.. பாப்பா சீக்கிரமே குணமாகப் போறா.. நீ போய் பாப்பா பெயர்ல அர்ச்சனை பண்ணிடு..”
“டாக்டர்.. ஒரு சின்ன டவுட்.. போன்மாரோவிற்கும் மயூரி அப்பாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?”என்றவள் கேட்க, சற்று தடுமாறியவன்,
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லம்மா.. நீயா மனசை போட்டு குழம்பிக்காதே.. அப்புறம், ஒரு விஷயம் கேட்கணும்..” என்று கேட்க,
“சொல்லுங்க டாக்டர்..” என்றவள் தன் மகளின் ஊஞ்சலை நிறுத்தி, அவளை தன் கையில் தூக்கிக் கொண்டாள்.
“நீ ஏன் இப்போ எல்லாம் ஆதியை மாமான்னு கூப்பிடமாட்டேங்குற? அவன் மேல அப்படியென்ன கோபம்?”
“வெளியில இருந்து பார்க்குறவங்களுக்கு என்னோட கஷ்டம் எப்படி புரியும்? நாணயத்திற்கு ரெண்டு பக்கம் இருக்கு டாக்டர்.. அந்த நாணயம் மாதிரி எங்க ரெண்டு பேருக்கும் தனித்தனி பக்கங்கள் இருக்கு.. நீங்க ஒரு பக்கம் மட்டும் பார்த்தால், நான் குற்றவாளி.. ரெண்டு பக்கமும் பாருங்க.. அப்போ ஏன் நான் அவர்கிட்ட பேசமாட்டேங்குறேன்னு புரியும்!” என்றவள் அங்கிருந்து நகர்ந்து செல்ல, அதே நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டபடியே அங்கு வந்தான் ஆதித்யா கரிகாலன்.
“டேய் ஆதி.. நீ ஏன் உன்னோட வொய்ஃப்கிட்ட உண்மையை சொல்லக்கூடாது?”
“அவ ஒத்துக்கமாட்டா..”
“செகண்ட் பேபிக்கு ரெடியானவங்க.. இதுக்கு ஒத்துக்க மாட்டாங்களா? நீ சொல்றது நம்புற மாதிரியில்ல..”
“செகண்ட் பேபிக்கு ஒத்துக்கிட்டான்னா.. அதுக்கு அர்த்தம் அவ என்கூட சேர்ந்து வாழ்றதுக்காக இல்ல.. அவளோட ஒரு குழந்தை மூலமாக இன்னொரு குழந்தையை காப்பாத்துறதுக்காக.. அங்க நான் ஒரு கருவி மட்டும் தான்..”
“ஏன்டா இப்படி எல்லாம் யோசிக்குற? உன் மேல லவ் இல்லாமலா மயூரியை யாரோட உதவியும் இல்லாமல் தனியா பெற்று வளர்த்துருகா? முதல்ல உனக்கு அவ மேல லவ் இருக்கா?”
“லவ் இல்லாமலா இத்தனை வருஷமா அவளை தேடிட்டு இருக்கேன்?! அவ சின்ன பொண்ணு டா.. அவளை கட்டாயப்படுத்தி என்னோட மனைவியாக்க விரும்பவில்லை.. அதனால் தான் அவக்கிட்ட இருந்து தூரமா இருந்தேன்.. அவளைப் பிடிக்காம இல்ல..”
“இப்ப உன்னைய வெறுக்குறாளே.. என்ன பண்ணப் போற?”
“அவ தூரமா இருந்தப்போவே, அவளுக்காக இத்தனை வெயிட் பண்ணேன்.. இப்போ, பக்கத்துல தானே.. எனக்கு அதுவே போதும்.. என் பொண்டாட்டி.. பொண்ணுக்கூட, அவங்களை பார்த்துட்டு இருந்தாலே போதும்.. என்னைக்காவது ஒரு நாள் அவ என்னைய புரிஞ்சுப்பா.. அது வரைக்கும் நான் வெயிட் பண்ணுவேன்..” என்றவன் டேவிட்டுடன் மருத்துவமனைக்குள் சென்றான். கோயிலுக்கு சென்று மயூரியின் பெயரில் அர்ச்சனை செய்தவள், வீட்டிற்குள் நுழைய, ஹாலில் அமர்ந்திருந்த வள்ளியம்மையிடம் பிரசாதம் கொடுத்தவளின் காதில், ஹாலின் ஓரமாக இருக்கும் ஜன்னல்களை துடைத்தவாறு இருக்கும் சில பெண்களின் பேச்சுக் குரல் காதில் விழுந்தது.
“ஏன்க்கா.. நம்ம வீட்டுக்கு புதுசா வந்துருக்காங்களே.. ஒரு அம்மாவும் பொண்ணும்..”
“ஆமா.. அவங்களுக்கென்ன?”
“அவங்க நிஜமாவே சாரோட வொய்ஃப் தானா? அந்த சின்ன பொண்ணு.. சாரோட பொண்ணா?”
“ஆமா.. இப்போ எதுக்கு உனக்கு இவ்வளவு சந்தேகம் வருது?”
“இல்ல.. பார்க்க ரொம்ப சின்ன பொண்ணா தெரியுறாங்க.. இவங்களை சார் எப்படி கல்யாணம் பண்ணாரோ? அதுவும் இத்தனை வருஷங்கழிச்சு திரும்பி வந்துருக்காங்க.. இவ்வளவு நாள் எங்க இருந்தாங்க? சார்.. அவங்களை தேடி போகவேயில்லயா? நிஜமாவே அந்த பொண்ணு சாரோட பொண்ணு தானா?”
“இங்கப்பாரு.. இப்படியே கேள்வி கேட்டுட்டே இருந்த.. பாட்டியம்மா உன் சீட்டை கிழிச்சு வெளியே அனுப்பிடுவாங்க.. பேசாம வேலையை பாரு..” என்ற வேலைக்காரி பெண்மணி, மற்றொரு பெண்மணியிடம் கூற,
“என்னமோ.. நம்மளுக்கு தேவையில்லாத வேலை..” என்ற மற்றொரு பெண்மணியோ, அங்கிருந்து எழுந்து வீட்டின் பின்புறம் செல்ல, கண்ணில் வந்த கண்ணீரை உள்ளிழுத்தவாறே, தன்னறையை நோக்கி செல்ல முயன்றவளின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினார் வள்ளியம்மை.
“திவிக்கண்ணா.. அவங்க பேசுற எதையும் நீ எதுவும் மனசுல வைச்சுக்காத.. இப்போவே அவங்க ரெண்டு பேரையும் வேலையை விட்டு தூக்குறேன் பார்..”
“வேணாம் பாட்டி.. அவங்க என்ன நடக்காததையா பேசுறாங்க? நடந்ததைத் தானே பேசுறாங்க.. விடுங்க பாட்டி..”
“அவங்க உன்னோட கேரக்டரை பத்தி எப்படி பேசலாம்? அவங்க இனிமே இந்த வீட்டுல இருக்கக் கூடாது..”
“இந்த பாட்டியை மன்னிச்சுடுடா.. சூழ்நிலை.. பெத்தபுள்ள பாசம்.. அவன் மீதிருந்த நம்பிக்கை.. எல்லாம் சேர்ந்து, உன்னைய தப்பா நினைக்க வைச்சுடுச்சு.. தன்னந்தனியா பிள்ளையை பெத்தெடுக்க நீ எவ்வளவு கஷ்டப்பட்டியோ.. என்னை மன்னிச்சுடுத்தா.. உன்னைய நல்லா பார்த்துப்பேன்னு என் பொண்ணு வளர்மதிக்கு சத்தியம் பண்ணி கொடுத்தேன்.. ஆனா, அதை காப்பாற்ற தவறிட்டேன்.. என்னை மன்னிச்சுடுத்தா..”
“இப்ப எதுக்கு பாட்டி பழசையெல்லாம் பேசிக்கிட்டு? நான்.. உங்களை என்னைக்கும் தப்பா நினைச்சதேயில்ல.. அனாதையா வந்த என்னை உங்க பொண்ணை விட, அதிகமா.. பாசமா தானே பார்த்துக்கிட்டீங்க.. அதை என்னைக்கும் நான் மறக்கமாட்டேன் பாட்டி..”
“நீ அனாதையா? எம்மாடி, அப்படி சொல்லாதேடா கண்ணா.. குத்துக்கல்லு மாதிரி பாட்டி இருக்கும் போது, நீ அனாதையாக விட்டுடுவேனா? இதுக்கு முன்னாடி எப்படியோ.. இப்போ இருந்து நீ என்கூட தான் இருக்கணும்.. உன்னைய யாராவது ஏதாவது சொன்னா.. பாட்டின்னு ஒரு குரல் கொடு போதும்.. அது மாமனாவே இருந்தாலும் ரெண்டுல ஒன்னு பார்த்துடுறேன்.. நாளைக்கு காலைல குட்டிம்மாக்கு சர்ஜரின்னு டேவிட் சொன்னான்.. நீ ஹாஸ்பிடலுக்கு கிளம்பு.. நான் இவளுங்களை ஒரு கை பார்த்துட்டு வந்துடுறேன்..”
“இல்ல.. பாட்டி வேணாம்.. நீங்க வீட்டுல ரெஸ்ட் எடுங்க.. உங்க பையன் ஆஃபிஸ் விஷயமா பிஸ்னஸ் ட்டூர் போறாராம்.. உங்கக்கிட்ட சொல்ல சொன்னாங்க..”
“யாரு? ஆதித்யாவா?”
“இல்ல.. அவரோட பிஏ..”
“இருக்காதேமா.. மயூரிக்காக போன்மாரோ பண்ண போறேன்னு தானே என்கிட்ட சொன்னான்..”
“என்னது போன்மாரோ.. ப்ளட் செல்ஸ் அவரா கொடுக்கப் போறாரு?”
“அப்படி தான் டேவிட் சொன்னான்.. நான் தான் உன்கிட்ட உலறிட்டேன்னு நினைக்குறேன்.. நான் சொன்னதை மனசுல இருந்து அழிச்சுடுமா.. நான் தான் இதைப் பற்றி உன்கிட்ட சொன்னேன்னு தெரிஞ்சா.. ஆதி கொன்னே போட்டுடுவான்..” என்ற வள்ளியம்மை திகைத்து போய்
நிற்பவளைப் பார்த்து,
“மயூரிக்குட்டிக்கு ஒன்னும் ஆகாது.. அவ நல்லாகிடுவா.. நீ ஒன்னும் கவலைப்படாத.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. வளர்மதி சாமியா நின்னு காப்பாத்துவா.. மயூரியோட சர்ஜரி முடிஞ்சதும், நீ திரும்பவும் காலேஜ் போகணும்னு ஆசைபட்டா.. காலேஜ் போ.. இல்ல, வேலை பார்க்கணும்னு நினைச்சா.. வேலைக்கு போ.. ஏதுவாக இருந்தாலும் உன் இஷ்டம் தான்.. மயூரியைப் பற்றி நீ கவலைப்படாத.. அவளைப் பார்த்துக்க நானிருக்கேன்.. அவளை என்கிட்ட விட்டுட்டு, நீ உனக்கு பிடிச்சதை பண்ணு.. பாட்டி எப்பவுமே உன்கூட தான் இருப்பேன்.. என்னைய மீறி தான் யாரும் உன்னைய எதுவும் சொல்ல முடியும்.. நீ இனிமே ராணியாத் தான் இருக்கணும்..” என்றவர் திவ்யபாரதியைப் பற்றி தவறாக பேசிய இரு வேலைக்காரப் பெண்களையும் கூப்பிட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவதாக மிரட்ட, அவர்கள் இருவரும் அதன்பிறகு திவ்ய பாரதியிடம் எந்த வம்பு வழக்கும் வைத்துக் கொள்ளவில்லை.
வள்ளியம்மை பேசிய அனைத்தும் திவ்ய பாரதிக்கு ஆச்சரியத்தை அளித்தது. முன்று வருடங்களுக்கு முன்பு, தனக்காக ஒரு விரலைக் கூட அசைக்காதவர், இப்போதும் தான் வந்த போது கூட, தன்னிடம் முகம் கொடுத்து பேசாதவர் திடீரென மாறக் காரணம் என்ன? மனதில் பல கேள்விகள் எழுந்தாலும், தன் மகளை நினைத்தவாறு மருத்துவமனைக்கு கிளம்பினாள் திவ்யபாரதி.
“அர்ஜுன் சார்.. இது வேலை செய்யுமா? ஏன்னா.. மயூரிக்கு வந்துருக்குறது லுக்கீமியா..”
“தந்தையின் bone marrow (மூளைஎலும்பு) மாற்றம் மூலம் சில சந்தர்ப்பங்களில் குணப்படுத்த முடியும். இதை போன்மாரோ ட்ரான்ஸ்ஃபளனேசன் (BMT) அல்லது ஸ்டெம் செல் ட்ரான்ஸ்ஃப்ளனேசன்னு சொல்லுவாங்க.. லுக்கீமியாவால் பாதிக்கப்பட்டவரின் தனது பாதிக்கப்பட்ட போன் மாரோ மூலமாக முற்றிலும் அழிக்கப்பட்டு, பின் ஆதியோட (HLA match) செல்கள் மயூரிக்கு செலுத்துவோம். அப்புறம் புதிய செல்கள் உடலுக்குள்ள போய் நல்ல ரத்த அணுக்களை உருவாக்க தொடங்கும்..”
“இது சாத்தியமா? ஏன் கேட்குறேன்னா.. ஹெச்எல்ஏ மேட்ச்சாகணும்.. அது ரொம்ப முக்கியம். அதே சமயம், ஆதியோட செல்கள் மயூரிக்கு பொருந்தணும்.. இப்போ மயூரி ரொம்ப வீக்கா இருக்கா.. இதை விட செல்கள் பொருந்தணும்.. அது ரொம்ப முக்கியம்.. பொதுவாக கூட பிறந்தவங்க தானே நல்ல மேட்ச் ஆவாங்க?”
“எஸ்.. யு ஆர் கரெக்ட் டேவிட்.. பட் இதுல பாதிக்கு பாதி குணமாக வாய்ப்பிருக்கு.. அதுவுமில்லாம, திவ்யா அடுத்து கர்ப்பமாகுற வரைக்கும் கேன்சர் செல்ஸ் டெவலப் ஆகாம கட்டுக்குள்ள வைச்சுருக்கலாம்.. எப்படியும் நமக்கு இதுல லாபம் தான்..”
“அப்போ, திவ்யா கர்ப்பமாகணுங்குறது?”
“கண்டிப்பா நடக்க வேண்டிய ஒன்று.. நம்மால் முடிஞ்சதை நாம் பண்ணுவோம்.. மீதி எல்லாத்தையும் கடவுள்கிட்ட விட்டுருவோம்..” என்றவாறே அர்ஜுன் டேவிட்டுடன் ஆதித்யா கரிகாலன் இருக்கும் அறையை நோக்கிச் செல்ல, அறையின் ஜன்னல் வழியாக, அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த திவ்யபாரதியோ சிலையாக நின்றிருந்தாள். ஆதித்யா கரிகாலனின் செல்கள்
மயூரியுடன் சேருமா? அப்படி சேரவிட்டால் ஆதித்யா கரிகாலன் மற்றும் திவ்ய பாரதியின் நிலையென்ன?

👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Unga name pottu stories upload pannunga. Ungaloda ella storiesum access panna easya irrukum. Apram romba aarvama irrukku konjam neraya episodes upload pannunga
Ipadiku, யாரார்கு யாரடி உறவு ரசிகன்
rainbow casino wendover
References:
pad.karuka.tech
References:
Anabolic compounds
References:
http://39.171.252.63:3000/julissalemmone/jobplacementsguyana.com1998/wiki/British-Dispensary-Dianabol-to-buy
References:
Bulking steroid
References:
http://119.91.35.154:3000/laurenestrader
did the rock take steroids
References:
ricetteclara.com
References:
Premier new online casinos australia casinos
References:
Cherokee casino west siloam springs
References:
https://graph.org/Royal-Reels-Casino-Review–Bonuses-04-20
References:
Aachen
References:
https://casino-candy.online-spielhallen.de/
References:
Erlangen
References:
https://live-roulette-casino.online-spielhallen.de/
References:
Wiesbaden
References:
https://spielhalle-casino.online-spielhallen.de/
References:
Freiburg im Breisgau
References:
https://bitstarz-casino-no-deposit-bonus.online-spielhallen.de/
References:
Casinoer med højeste tilbagebetalingsprocent
References:
https://git.van-peeren.de/lachlansamuel1
References:
Casino san manuel
References:
https://jobsathealthcare.com/employer/payid-casino-australia-2026-complete-aussie-players-guide/
References:
London casinos gitea.zachl.tech