அத்தியாயம் 18
தெளிந்த கடல் வானத்தை வெறித்த வண்ணம் இருந்தது அனாவின் கண்கள்…
ஜன்னலோரம் நின்றுக் கொண்டு எத்தனை நேரம் அந்த வெற்று காகிதம் போல் நீண்டிருந்த வெள்ளை மேகத்தை வெறித்து இருந்தாளோ தெரியாது அவள் எண்ணம் எல்லாம் அவள் மகனும் அவனை மீட்டு எடுக்கச் சென்ற பரத்தும் தான் ஆக்ரமித்து இருந்தனர்…
ஏர்போர்ட்டில் வைத்தே ரேயானை… மேரி மேடம் அதாவது அவளை வளர்த்த செவிலித் தாயிடம் ஒப்படைத்து விட… அரண்டு போனாள் தாயானவள்…
“கவலை படாத எல்லாம் கொஞ்சம் காலம் தான்… நிச்சயம் நாம அவனை திருப்பி கூட்டி வருவோம் அதுவரை அவன் அங்க இருக்கிறது தான் பாதுகாப்பு” என்று பரத் சொன்னதற்கு மேல் அவளால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் அல்லவா இருந்தாள்…
ரேயானை அனுப்பி வைத்தக் கையோடு அனாவை திலோவின் பாதுகாப்பில் விட்டு கிரிதரனும் பரத்தும் ஆலனுக்கு எதிராக ஆதாரங்களைத் தேடிச் சென்றனர்…
ஏன் எதற்கு எல்லாம் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை… பரத் தான் ரேயானின் தந்தை என்று நிரூபித்து விட்டால் மகன் தன்னோடு வந்து விட்டால் போதும் என்று அவள் இருக்க…
பரத்தோ இத்தனை நாள் தன் மனைவி மகன் பட்டத் துன்பத்திற்கு எல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற தீர்மானத்தோடு ஆலன் பார்க்கரின் இரும்பு கோட்டைக்குள் சென்று உள்ளான்…
பிரச்சனை வேண்டாம் தன் மகன் மட்டும் போதும் என்று தாயுள்ளம் நினைக்க… பழி வாங்கியே தீர வேண்டும் என்று தந்தையுள்ளம் ஆதாரத்தை தேடிச் சென்றது… இதில் யார் சரி யார் தவறு என்பதை உங்கள் கணிப்புக்கே விட்டு விடுகிறேன்…
****
ஆலனின் காற்றும் புக முடியாத இரும்பு கோட்டைக்குள்… நுழைந்தது அந்த மர்ம உருவங்கள்…பதுங்கி பதுங்கி வந்த அந்த உருவங்கள்… ஒரு கட்டத்திற்கு மேல் முன்னேறாமல் அங்கேயே நின்றது.
“டேய் மச்சான் உன்னை அவங்களுக்கு தெரியும்… நீ மாட்டினா பிரச்சனை பெருசா ஆகிடும்… என்னை அவங்களுக்கு தெரியாது அதுனால நான் மட்டும் போறேன் நீ இங்கையே இரு” என கிரிதரன் சொல்ல…
“அது எப்படி உன்னை மட்டும் தனியா அனுப்பிட்டு நான் மட்டும் இங்க நிம்மதியா இருக்க முடியும்… எதுவும் சொல்லாத போனா ரெண்டு பேரும் ஒன்னா போலாம்…” என பரத் சொல்ல…
“அது இல்லைடா” என இரண்டு பேரும் இடம், பொருள், ஏவல் தெரியாமல் சண்டை போட்டுக் கொள்ள…
உங்களுக்கு எதுக்கு ராசா வீண் சிரமம் உங்க ரெண்டு பேரையுமே ஒன்னா தூக்கிட்டா போச்சு என்று ஆலனின் ஆட்கள் கொத்தாக இருவரையும் தூக்கிச் சென்று விட்டனர்…
அடப்பாவிங்களா உங்களை வச்சி ஒரு ரொமான்ஸ் காட்சி தான் எழுத முடியலன்னு பார்த்தா உங்க ரெண்டு பேரை வச்சி ஒரு ஆக்ஷன் காட்சி கூட எழுத முடியலையே இருக்குறதுலே மகா தத்தி ஹீரோக்கள்னா அது நீங்க ரெண்டு பேர் தான்டா அப்பரசெண்டிகளா…
******
அன்றைய பொழுது பரத்தின் வரவுக்காக காத்திருந்து காத்திருந்து கழிந்து போனது தான் மிச்சம்…
மறுநாள் விடியல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி விடிந்தது…
அன்று அனாவின் சைல்ட் கஸ்டடி கேஸ் விசாரணை தினம்… பரத்தின் வருகைக்காக எதிர்பார்த்து இருக்க… திலோ அவளை சமாதானம் செய்து அவளது லாயரோடு அனுப்பி வைத்தாள்… போகும் வழி எங்கும் பரத் வந்து விடுவானா என்று எதிர்பார்த்தே வந்தவளுக்கு ஏமாற்றம்…
வழக்கு விசாரணை ஆரம்பிக்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையிலும் பரத்தின் வருகைக்காக கோர்ட் வாசலிலே அவனுக்காகவே காத்து கிடந்தாள்…
அவள் யாருக்காக காத்திருக்கிறாளோ அவள் எண்ணங்களின் நாயகனும் அவனின் உயிர் தோழனும் இருட்டு அறையில் முரட்டு கட்டுக்களுடன் மயங்கி கிடந்தனர்…
திரை வழியே அவர்களின் வேதனையை பார்த்து ரசித்த ஆலனோ…
“**** என் கோட்டைக்குள்ளே நுழைஞ்சி என்னையே வீழ்த்த போறீங்களா சின்னப் பசங்களா உங்களை மாதிரி எத்தனை பேரை பார்த்து இருப்பேன்… உங்க வயசு என் அனுபவம்…
பீட்டர் கோர்ட்ல தீர்ப்பு எப்படியும் எனக்கு சாதகமாக தான் வரும்… அப்படி தீர்ப்பு வந்த அடுத்த நிமிஷமே இவங்க இரண்டு பேரையும் நம்ம கெமிக்கல் ஃபேக்டரி கொண்டுப் போய் கொன்னு கரைச்சுடு…
அனா என்னை நீ எதிர்த்து ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட… இந்த ஆலனை எதிர்த்தா என்ன நடக்கும்னு உனக்கு புரிய வைக்கிறேன்… உன் காதலன் அஸ்தி கூட உனக்கு கிடைக்காமல் அவன் என்ன ஆனான் ஏது ஆனான்னு தெரியாம நீ பைத்தியம் புடிச்சி சாகணும்… என்னை ஏமாத்தலாம்னு நினைச்ச இல்லை… இப்போ என்னாச்சு பார்த்தியா இனி இந்த உலகத்துல உனக்குனு ஒரு நாதியும் இல்லை… இனி நீ எங்க போவ… உன்னை என் கால்ல விழ வச்சு உன் வாழ்க்கையை சூன்யமா மாத்தலை நான் ஆலன் பார்க்கர் இல்லை ஹாஹாஹா…” என காழ்ப்புணர்ச்சியுடன் கொக்கரித்தார்…
*****
கோர்ட் வாசலிலே காத்திருந்த அனாவை பரிகாச புன்னகையை சிந்தியப் படி பார்த்து உள்ளே சென்றார் ஆலன்…
அவரின் சிரிப்பின் அர்த்தம் அனாவிற்கு புரியவில்லை என்ற போதும் அவரது சிரிப்பு அவளது முதுகு தண்டுவடத்தை சில்லடைய செய்தது என்னவோ மெய்…
அவர் வந்த பிறகு எதோ ஒரு ஆகா உணர்வு அனாவை ஒட்டிக் கொள்ள முன்பை விட அவளது இதயதுடிப்பு அதிகரித்தது… பரத்தை நினைத்து தான் அவளது கவலையே… ஆலன் வந்து விட்டார் ஆனால் அவரிடம் இருந்து ஆதாரங்களை திரட்டச் சென்ற இருவரும் இன்னும் திரும்ப வரவில்லை… நேரம் ஆக ஆக அனாவை அறியாத இருள் மேகம் சூழ்ந்தது போல் உணர்ந்தாள்… அதிலிருந்து தப்பவே முடியாதது போல் பிரம்மை…
அவள் செய்வதறியாது தவித்துக் கொண்டு நிற்கையிலே அனாவை அழைக்க அவள் உள்ளே சென்று விட்டாள்… வழக்கு விசாரணைக்கு வந்தது… முதலில் அனாவை விசாரித்தனர்…
தன் மகன் இல்லாமல் தன் வாழ்வே இல்லை அவன் இன்றி ஒரு நாள் கூட அவளால் சிந்திக்க முடியாது என்று ஜூரியிடம் ஒரு தாயாக தன் நிலையை எடுத்து உரைத்தாள்…
அவளுக்கு பிறகு வந்த ஆலனோ… என் வாழ்வின் ஜீவனே என் மகன் தான் அவன் இறந்த பின்பு ஒவ்வொரு நாளும் நரகத்தோடு போராடினேன்… தனிமை என்பது கொடுமை அதுவும் முதுமையில் மிக கொடுமை என உருக்கமாக பேசி ஜூரியின் பரிதாப ஓட்டுக்களை தன் வசமாக்கிக் கொள்ள…
திகைத்து போனாள் அனா… அவளது கடைசி ஆயுதமும் பிரம்மாஸ்திரமான ரேயான் நிக் பிள்ளை இல்லை பரத்தின் பிள்ளை என்பதை கூற… கோர்ட்டில் சிறு சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது… வேண்டுமென்றால் அதை நிரூபிக்க டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்கலாம்… என்று அனா தன் வாதத்தை முன் வைத்தாள்…
அதற்கெனும் ஆலன் அசைவார் என்று எதிர்பார்க்க பாவம் அங்கும் ஏமாந்து போனாள்…
இதெல்லாம் எனக்கு சப்ப மேட்டர் என்பது போல் “அதற்கு தேவையே இல்லை… ரேயானுக்கு என் மகன் தான் தகப்பன் என்பதற்கான சான்று இதோ” என்று அவர் போலியாக எடுத்த டி என் ஏ டெஸ்ட்டை கோர்ட்டிடம் சமர்ப்பித்தவர்…
“அனாவுக்கு ரேயானை தன்னிடம் ஒப்படைக்க மனம் இல்லாததால் இப்படிப்பட்ட பொய்யை சொல்லி திசை திருப்பப் பார்க்கிறாள்… தள்ளாடும் இந்த வயோதிகத்தில் எனக்கு இறுதி காரியம் செய்வதற்காகவாவது என் பேரன் எனக்கு தேவை… எனவே அவளிடமிருந்து என் பேரனை மீட்டு எனக்கான நியாயமான தீர்ப்புகளை வழங்குமாறு மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்…” என பொய்களை அள்ளி வீசி உண்மையை ஊமையாக்கி விட்டார்…
அவ்வளவு தான் இனி எல்லாம் முடிந்தது என்று அனாவின் நம்பிக்கை தகர்ந்து தளர்ந்து விழும் பொழுது…
அனாவின் வக்கீல் எழுந்து வாதிட்டார்…
ரேயான் பரத்தின் மகன் தான் என்பதற்கு சாட்சியாக அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் தங்கி இருந்த விடுதி ரெசிப்ட் மற்றும் அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் காட்டி வாதிட…
கோர்ட் அவரின் வாதங்களை ஏற்று பரத் தான் ரேயானின் தகப்பன் என்று நிரூபிக்க முடியுமா என்று கேட்க… என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்று அனைவருமே அவர்களை ஆர்வமாக பார்த்து இருக்க…ஆலன் மட்டும் அவர்களை நினைத்து எள்ளி நகைத்துக் கொண்டு இருந்தார்…
“சாட்சி இங்க இருக்கு” என்றப் படி உள்ளே வந்தனர்… பரத்தும் கிரிதரனும்…
ஆண்டிபட்டி கோர்ட்டோ இல்ல அமெரிக்கா கோர்ட்டோ… கடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுக்கிறது தானப்பா நம்ம கதையோட வழக்கம்… எப்படி கரெக்டா கடைசி நேரத்துல என்ட்ரி கொடுத்தானுங்க எல்லாம் நம்ம ஹீரோஸ்…
அடடா ஆமாம்பா இவனுங்க எப்படி இங்க வந்தாங்க என்பது அங்கிருந்த அனைவரின் ஒற்றை எண்ணமாய் இருந்தது… அவரவர் உணர்விற்கு ஏற்ப அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வியப்பாகவும் இருந்தது என்பதே மெய்…
ஆமா இவனுங்க எப்படி தப்பிச்சு வந்தானுங்க வரலாறு அடுத்த பகுதியில்.
அத்தியாயம் 19
எவரும் எதிர்பார்க்காத நேரத்தில் வருகை தந்த பரத்தும் கிரிதரனும், தாங்கள் கொண்டு வந்த ஆதாரத்தை கோர்ட்டில் ஒப்படைத்தனர்…
திடீரென்று அவர்கள் வந்ததை ஆலனால் நம்ப முடியாமல் திகைத்து நிற்க… போதாது என்று அவருக்கு எதிராக சாட்சிகளையும் ஆதாரங்களையும் ஒப்படைத்தது எல்லாம் பிரம்மை போலவே இருந்தது…
ரேயான் பரத்தின் குழந்தை தான் என்று நிரூபிக்கப்பட்டு அனாவிடமே அவள் மகனை ஒப்படைத்தனர்… அது கூடவே எரிக்கையும் கொலை செய்தது மேகனை மனநல ரீதியாக துன்புறுத்தியது… மற்றும் ஜோசப்பின் சொத்துக்களை சட்ட விரோதமாக கையகப்படுத்தியது போன்ற குற்றங்களுக்கு ஆதாரங்களும் சாட்சியமும் இருப்பதால் அவரை கைது செய்து அந்த வழக்குகளை தீர விசாரிக்கும் படி கோர்ட் உத்தரவிட்டது… கூடவே எரிக்குடைய தாயின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஏற்கனவே கொடுத்த வழக்கையும் மீண்டும் விசாரிக்கும்படியும் உத்தரவிட்டது…
இப்படி தனக்கு எதிராக எல்லாம் திரும்பியதை நம்ப முடியாத ஆலன் “நோ நோ இப்படி நடக்க முடியாது… நான் நடக்க விடமாட்டேன்… நான் நம்பமாட்டேன்… இதெல்லாம் பொய் வெறும் கனவு… யாராவது சொல்லுங்க இது நிஜம் இல்ல கனவு தான்னு…” என்று நிஜமாகவே பித்து பிடித்த நிலைக்குச் சென்றார்…
செய்த பாவங்களுக்கு தண்டனையை இனி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்து அனுபவிப்பார்…
ஒரு வழியாக கோர்ட் நடைமுறை எல்லாம் முடித்துக் கொண்டு ரேயானை அழைத்துக் கொண்டு தாங்கள் தங்கி இருந்த தற்காலிக வீட்டிற்கு திரும்பினர் அனைவரும்…
நடந்தது எல்லாம் நம்ப முடியாத ஒரு மாயை போல இருந்தது அனாவுக்கு…
“ஆமாம் நீங்க ரெண்டு பேரும் எங்க போயிருந்தீங்க ஏன் இவ்வளவு தாமதமா வந்தீங்க… உங்களை காணாம நாங்க எவ்வளவு பயந்துவிட்டோம் தெரியுமா…??“ என அனா கேட்க நினைத்த கேள்வியை திலோத்தமா கேட்க அவளும் ஆமோதிப்பாக நின்றாள்…
“அட நீ வேற… நாங்க எங்க போனோம் ஆதாரத்தை எடுக்க போன எங்களை புடிச்சி அடைச்சு வச்சி தடயமே இல்லாம காலி பண்ண பார்த்தான் அந்த ஆலன் பரதேசி…”
“அச்சச்சோ என்ன அத்தான் சொல்றீங்க அப்புறம் எப்படி அவன் கிட்ட இருந்து தப்பிச்சீங்க…?” என பதறியப் படி வினவ…
“என்ன இப்படி கேக்குற நாங்க எவ்ளோ பெரிய ஹீரோஸ் அவ்வளவு சீக்கிரம் எவனாலும் எங்களை எதுவும் செய்ய முடியாது தெரியும்ல” என கிரிதரன் பெருமை பீத்த…
“டேய் ஒழுங்கா உண்மைய சொல்லு” என பரத் அவனை முறைக்க…
“என்ன உண்மை பரத்?” என திலோ கேட்க…
“கொஞ்சம் ஹீரோ பில்ட்அப் பண்ணிட்டேனாம் அது உன் அண்ணனுக்கு பொறுக்காதே… அதான்” என கிரி சடைத்துக் கொள்ள சந்தடி சாக்கில் பரத்தை திலோவின் அண்ணன் என்று ரெஜிஸ்டர் செய்து விட்டான் கிரிதரன்…
“பில்ட்அப் கொடுக்கிறது தப்பில்ல ராசா ஆனால் நாமதான் அங்க ஒண்ணுமே செய்யலையே…” என பரத் கேலி செய்ய…
“ம்க்கும் கொஞ்சம் பில்ட்அப் கொடுத்து நம்ம பொண்டாட்டிங்க கிட்ட பேர் வாங்கலாம்னு நினைச்சேன் அது பொறுக்கலையா உனக்கு…”
“எதுக்குடா உனக்கு இந்த வெட்டி விளம்பரம் நமக்கு இதெல்லாம் தேவைதானா…?” பரத் கலாய்க்க
“ஐயோ என்னதான் நடந்துச்சு கொஞ்சம் யாராவது சொல்றீங்களா…?” என திலோ கடுப்பாகி கத்தியே விட
“அது சரியான நேரத்துல எங்களை காப்பாத்தினது” என பரத் சொல்லத் தொடங்க…
“அட இருடா நானே சொல்லித் தொலையுறேன் அப்புறம் செகண்ட் ஹீரோவுக்குனு ஒரு மரியாதை இல்லாம போயிடும்…”
“அது சரி யார் இங்க செகண்ட் ஹீரோ…நீயா…?? நானா…??”
“இதில் என்னடா சந்தேகம் என்னோட கதையில நீ செகண்ட் ஹீரோ…உன்னோட கதையில நான் செகண்ட் ஹீரோ… அவ்வளவு தான்”
“உங்க அறுவைய நிறுத்திட்டு காப்பாற்றியது யாருன்னு சொல்றீங்களா…?” என திலோ பல்லை கடிக்க…
“அட ஏன் மா நீ வேற இவ்வளவு பில்டப் கொடுக்கும் போதே தெரியல..?”
“ம்ஹும்..!!”
“வேற யாரு எல்லாம் இந்த கதையோட ரைட்டர் யது நந்தினி தான்…”
“என்னது யது நந்தினியா…???” எனக் கோராசாக குரல்கள் ஒலிக்க…
“ஆமா ஆமா எல்லாக் கதைளையும் நான் கெஸ்ட் ரோல் பண்ணுவேன் அப்படி இந்த கதைளையும் கெஸ்ட் ரோல் பண்ணனும்னு ஆசை பட்டுச்சு கழுதை அது ஆசைய நிறைவேத்தி பூடுவோமேன்னு எங்களை காப்பாத்தி போ விட்டுட்டேன்” என கிரிதரன் சொல்ல சொல்ல அருகில் பரத் தன் வாயில் கை வைத்து அடப்பாவி இப்படி அப்பட்டமா புழுகுறியேடா என்பது போல் பார்த்தவன் நிஜமாக அங்கு நடந்தவற்றை நினைத்து பார்த்தான்…
ஆலன் பரத் மற்றும் கிரியை கட்டி வைத்து கதையை முடிக்க சொல்லி விட்டுச் சென்ற பின்பு…
“டேய் மச்சான் கேட்டியா நம்மள உயிரோட கொல்லப் போறாங்களாம்டா ஐயோ நான் பாட்டுக்கு சிவனேனு இருந்தேன் என்னை கூட்டி வந்து இப்படி கொலைகார பாவிங்க கிட்ட மாட்டி விட்டுட்டானே இந்த சண்டாளன் சதிகாரன் டேய் பரத் இருக்கியாடா… ?? ஐயோ என்ன சத்தத்தை காணோம் மச்சான் செத்துட்டியாடா அடுத்து நான் தானா நீ முன்னாலே போனா மச்சான் நான் பின்னாலே வாரேன்… ஆமாம் நாம செத்தா நமக்கு சொர்க்கமா…?? நரகமா…??” கிரிதரன்.
“உளறாதடா நான் இன்னும் சாகல உயிரோட தான்டா இருக்கேன்…” பரத்…
“நாயே எதுக்குடா இப்படி புலம்பி சாவுற கொஞ்சம் நேரம் அமைதியா இரு தப்பிக்க ஏதாவது வழி இருக்கா யோசிப்போம்…” என பரத் சொல்ல
“உனக்கு என்ன ராசா நீ பேச மாட்ட… உன் ஆஸ்திக்கு ஒரு வாரிசு உருவாக்கி வச்சிட்ட நான் இப்போதான்டா வம்சக் கொடியை விதைச்சு இருக்கேன் அது இன்னும் பூவாகி காயாகி கனியாகி இன்னும் எவ்ளோவோ இருக்குடா அதுக்குள்ள சாவ வேண்டிய வயசாடா… ஐயோ எனக்கா இப்படி ஒரு நிலைமை வரணும்…” மீண்டும் அழுது புலம்ப
“டேய் நீ இப்ப வாய மூடுறியா இல்லை இவனுங்க கிட்ட உன்னை கோர்த்து விட்டு நான் மட்டும் தப்பிச்சு போகவா?” என பரத் அதட்ட…
“அடேய் கொலைகார பாவி நீ உயிர் நண்பன்னு உன்னை நம்பி வந்ததுக்கு… என் உசுருக்கு உலை வைக்க பார்க்கிறியேடா பாவி… இந்த இடத்துல உங்களுக்கு எல்லாம் டிஸ்களைமர் மட்டும் சொல்லிக்குறேன் மக்களே எவனாச்சு உயிர் நண்பன்னு உதவி கேட்டான் நம்பி போய் உதவி மட்டும் செஞ்சிடாதீங்க அப்புறம் உங்க உசுருக்கு உத்தரவாதம் இல்லை அம்புட்டு தான் சொல்லுவேன் அப்புறம் உங்க சாமர்த்தியம்…” என கிரி பயத்தில் உளறி கொட்ட அந்நேரம்
அவர்களை கட்டி வைத்திருந்த அறைக்குள் மர்ம உருவம் ஒன்று அமைதியாக நுழைந்தது…
அதன் காலடி ஓசை அவர்கள் அருகில் கேட்க கேட்க இருவரின் இதயமும் எகிறி குதித்தது… வந்த கையோடு அவர்கள் மேல் கை வைக்க இத்தோடு அவர்கள் கதை முடிந்தது என்று பயந்து நடுங்க…
அந்நேரம் அவர்களே எதிர்பாரா வண்ணம் அவர்கள் கட்டுகள் விடுவிக்கப் பட்டு அவர்கள் கண் திறந்து எதிரே பார்க்க…
வந்தது வில்லன் குரூப் இல்ல வேற யாரு நான் தான்… எஸ் ரைட்டர் யது நந்தினி நேரடியாக களத்தில் குதித்து விட்டார்…
“இத்தனை வருஷமா நான் ஹீரோயின் கேங் லீடரா இருந்தேன் என்னை இப்படி ஹீரோ கேங்க்கு அண்டர் கிரௌண்ட் லெவல்க்கு இறங்கி வேலை பண்ண வச்சிட்டடீங்களேடா அரை மெண்டல் பீஸ்களா” என திட்டிக் கொண்டே இருவரையும் விடுவித்து வெளியே ரகசியமாக அழைத்துப் போக…
“ஏன்மா ரைட்டரே வந்தது தான் வந்த கொஞ்சம் முன்னாடியே வர கூடாதா பாரு எப்படி அடிச்சி வச்சி இருக்கானுங்க… முன்னாடியே வந்து தடுத்து இருக்கலாம் இல்லை எங்க மூஞ்சி தான் எங்க மார்க்கெட்டே அது கெட்டு போனா எவன் எங்களை ஹீரோன்னு நம்புவான் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு…”
“நான் என்ன கேட்டுக்கிட்டு இருக்கேன் இப்படி உன் பாட்டுக்கு சந்து சந்தா கூட்டிப் போனா என்ன அர்த்தம்… ஆமா இது என்ன இடம் அப்புறம் உனக்கு எப்படி இந்த இடமெல்லாம் தெரியும் புளூ பிரிண்ட் ஏதாவது வாங்கி வச்சி இருக்கியா… இருந்தா எனக்கும் ஒன்னு கொடேன் அப்போ அப்போ வந்து போக யூஸ் ஆகும்” எனத் தொணத் தொணத்துக் கொண்டே பின்னால் வர…
கடுப்பாக்கி போனார் ரைட்டர் “கொஞ்ச நேரம் உன் ஓட்ட வாய மூடி வச்சிட்டு வர மாட்டியா நான் என்ன உங்க ரெண்டு பேரையும் பிக்னிக்குக்கா கூட்டி போறேன் வில்லன் கிட்ட இருந்து காப்பாற்றி கூட்டி போறேன்டா… புரிஞ்சுக்கோ மாட்டுனா நாம எல்லாம் சேர்ந்து கூண்டோட கைலாசா போக வேண்டியது தான்… நானே ரிஸ்க் எடுத்து உங்க ரெண்டு பேரையும் காப்பாத்துறேன் அடுத்து கதை எழுத இந்த ஆசிரியர் வேணும்டா ராசா புரிஞ்சிக்க பிளீஸ் கோ ஆபரேஷன் பண்ணுடா” என கெஞ்சியும் வாயை மூடாது வந்த கிரிதரனால் கவலை கிடமாகி போனது ரைட்டர் நிலை …
“டேய் எப்பா இதுக்கு மேல என்னால உங்க கூட வர முடியாதுடா நான் பித்த உடம்புக்காரி இவன் கூட வரதுக்கு பதில் வில்லன் கிட்ட மாட்டி சாவுறதே மேல் ஆளை விடுங்கடா சாமி” என்று தலை மறைவாகி விட்டக் கதையை நினைத்து பரத் விழுந்து விழுந்து சிரிக்க அவன் எதற்கு அப்படி சிரிக்கிறான் என்பதை அறிந்த கிரியோ
“டேய் மச்சான் ஐ அம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட் ப்ளீஸ்” என அவனை அடக்க…
“த்தூ பொழைச்சி போ” என்று விட்டு அவன் மீண்டும் சிரிக்க ஏன் என்று தெரியாவிட்டாலும் அவனோடு சேர்ந்து மற்றவர்களும் சிரிக்க இறுதியாக கிரிதரனும் அவர்களோடு இணைந்து சிரித்தான்…
எல்லாம் நல்லப் படியாக முடிந்து விட்டது என்று நினைத்த நேரத்தில் அனாவும் ரேயானும் காணாமல் போயினர்…
மீண்டும் மீண்டுமா இப்படி லூப் மோட்ல போயிட்டே இருந்தா இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு…
