ATM Tamil Romantic Novels

நெஞ்சில் வடித்த கவிதை

கவிதை 22

கவிதாவிற்கு பிரசவ வலி வந்து விட்டது. லோகேஷ் அனிதாவை கூட்டிக்கொண்டு வெளியே சென்றிருந்தான். அனிதாவுக்கு ஆப்ரேஷன் முடிந்து இன்றுதான் அவளை வெளியே கூட்டிச்சென்றிருக்கிறான் லோகேஷ்.

காஞ்சனாவோ “லோகேஷ் தம்பிக்கு கூப்பிடறேன் கவிமா” என்று போனை எடுத்தார்.

“அ.அ.அத்தைமா லோகேஷை கூப்பிட வேணாம் அவங்க ரெண்டு பேரும் முதல் முறையா வெளியே போயிருக்காங்க. அ.அவங்களுக்கு தொ.தொந்தரவு கொடுக்க வேணாம் கே.கேப் புக் பண்ணுங்க” என வலியுடன் இடுப்பை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

“அதுவும் சரிதான் கவிமா” என்று கேப் புக் பண்ணிவிட்டு காத்திருந்தனர் கவிதாவும் காஞ்சனாவும். கவிதாவுக்கோ வலி அதிகம் ஆகிக்கொண்டே சென்றது.

மருமகள் கதறுவதை கண்டு இனியும் தாமதிக்க கூடாதென அபிலாஷினிக்கு போன் போட்டு “அம்மாடி அபி கவிதாவுக்கு வலி வந்துடுச்சு பக்கத்துல லோகேஷ் தம்பியும் வெளியே போயிருக்காங்க நா.நான் கேப்புக்கு புக் பண்ணியிருந்தேன் இன்னும் வரல… புள்ள வலியில துடிக்குறா நீ உங்க ஹாஸ்பிட்டல் வண்டியை அனுப்பி வைமா” என்றார் காஞ்சனா பதட்டத்துடன்.

“சரிங்கத்தை நான் இப்பவே வண்டியை வரச்சொல்லுறேன் பயப்படாதீங்க” என்று ரிசப்ஷனுக்கு இன்டர்காமில் கவிதாவின் அபார்மெண்ட் அட்ரஸ் சொல்லி ஹாஸ்பிட்டல் வண்டியை அனுப்ப சொல்ல “டாக்டர் இப்போதான் ரெண்டு வண்டியும் வெளியே போயிருக்கு” என்றார் ரிசப்ஷனிஸ்ட் தயக்கமாக.

“ஓ.கே” என்று போனை வைத்தவள் அடுத்த நிமிடம் லோகேஷ்க்கு போன் போட்டு “கவிதாவுக்கு பெயின் வந்துடுச்சாம் எங்க இருக்க லோகேஷ்?”

“ட்ராஃப்பிக்ல மாட்டிக்கிட்டேன் அபி கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போயிடுவேன்” என்று போனை வைத்திருந்தான்.

அன்று மாலை கவிதாவின் வீட்டு பக்கம் இருக்கும் சூர்யாவை பார்க்கில் விளையாட அழைத்துச் சென்றிருந்தான் அசோக். ஒரு மணிநேரம் விளையாடி முடித்துவிட்டு “டாடி கவிதா ஆன்ட்டி வீட்டுக்கு போகலாம்” என்றான் சூர்யா.

“நாளைக்கு கூட்டிட்டு போறேன் உனக்கு பிடிச்ச பன்னீர் கிரேவியும் ரொட்டியும் செய்து தரேன் வா வீட்டுக்கு போகலாம்” என்று சூர்யாவை தூக்கிக்கொண்டான்.

சூர்யாவோ “டாடி எனக்கு கவிதா ஆன்ட்டியை பார்க்கணும் அவங்க பெரிய வயித்தை தொட்டு பார்க்கணும் போல இருக்கு நான் ஆன்ட்டி வயிற்றை தொட்டா குட்டி பாப்பா காலை அசைக்கும் ஆசையா இருக்குப்பா” என்று குட்டி கண்ணை உருட்டி தலையை சாய்த்து கேட்கும் மகனை மிரட்ட முடியாமல் பெரும்மூச்சு விட்டான் அசோக்.

அடிக்கடி கவிதாவை பார்க்க போவது அக்கம் பக்கம் இருப்பவர்கள் கண்ணிற்கு வேறு மாதிரி தோணுமென்று அதிகம் கவிதா வீட்டுக்கு போவதை தவிர்த்து வந்தான்.

காரில் சூர்யாவை ஏற்றிக்கொண்டு தன் வீட்டுப்பக்கம் காரை திருப்ப சூர்யாவோ “டாடி டாடி ப்ளீஸ் டாடி ஆன்ட்டி வீட்டுக்கு போகலாம்” என்று கண்ணை கசக்க ஆரம்பித்தான். அவன் ரொம்ப நேரம் அழுதால் மூச்சு முட்டும் மகன் கஷ்டப்படுவானே என்று கவலைப்பட்டவன் “வரவர நீ சொன்ன பேச்சு கேட்க மாட்டேங்குற சூர்யா குறும்பு ஓவரா பண்ணுற” என்று மகனை மிரட்டி கவிதாவின் வீட்டுக்கு அழைத்துச்சென்றான்.

கவிதாவின் வீட்டு கதவு திறந்திருக்கவும் கவிதா வலியில் அலறிக்கொண்டிருந்தாள். காஞ்சனாவுக்கு கேப் டிரைவர் போன் செய்தவர் “மேடம் என்னோட கேப் ப்ராப்ளம் வேற வண்டி உங்களுக்கு வரும்” என்றதும்

“சீக்கிரம் வேற வண்டி அனுப்புங்க இங்க என் பொண்ணு பிரசவ வலியில துடிக்குறா” என்று படபடத்தார் காஞ்சனா.

“ஆன்ட்டி என்னாச்சு?” என்று இடுப்பை பிடித்துக்கொண்டு உதடு கடித்து அழுகையை அடக்கி வலியை பொறுத்துக்கொண்டு நடந்துக் கொண்டிருந்த கவிதா அருகே சென்று அவளது கையை பிடித்துக்கொண்டான் சூர்யர்.

“ஆ.ஆன்ட்டி வயித்துக்குள்ள இருக்க பாப்பா வெளியே வரப்போறா அதான் ஆன்ட்டிக்கு வலிக்குது” என்றாள் குழந்தையின் தலையை வருடிவிட்டு.

அசோக் கவிதாவின் அருகே வந்ததும் “டா.டாடி ஆன்ட்டி அழறாங்க பாருங்க ஆன்ட்டியை காப்பாத்துங்க” என்று தன் தந்தை மருத்துவன் உடனே ஊசி போட்டு வலியை நிறுத்தி விடுவானென்று சிறு பாலகனின் நம்பிக்கை.

காஞ்சனாவோ போன் பேசி திரும்ப “சாரி கவிதா உன்னை நான் இப்ப தூக்கித்தான் ஆகணும் மன்னிச்சிடு” என்றவனோ கையில் அவளை ஏந்திக்கொண்டான். அவளுக்கு வலியில் ஏதும் பேசத்தோணவில்லை.

“அம்மா சூர்யாவை அழைச்சிட்டு வாங்க நான் கவிதாவை தூக்கிட்டு போறேன்” என்றவன் லிப்டிற்குள் சென்றான்.

“என்னால முடியல அசோக் ரொம்ப பெயினா இருக்கு” என்றவளை

“பனிக்குடம் உடைஞ்சிருச்சு எமோஷனல் ஆகாதே” என்று அவளிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே காரில் அவளை படுக்க வைத்தான்.

வலியோடு துடித்தவளின் கைகளை பிடித்து “சீக்கிரம் போயிடலாம்பா” என்று கவிதாவின் கையை பிடித்து தட்டிக் கொடுத்தவன் அவளை பார்த்துக்கொண்டே நகர்ந்து டிரைவர் சீட்டுக்கு உட்கார்ந்தான்.

காஞ்சனா சூர்யாவை அசோக் பக்கம் உட்கார வைத்து கவிதா பக்கத்தில் உட்கார்ந்ததும் காரை வேகமாக ஓட்டினான்.

லோகேஷ் அபார்ட்மெண்டுக்கு வந்ததும் கேட்டில் நின்ற செக்கியூரிட்டியோ “கவிதா பாப்பாக்கு பிரசவ வலி வந்துருச்சு குட்டி பையனோட ஒருத்தர் வந்து அவங்களை கார்ல கூட்டிட்டு போயிட்டாரு” என்றதும்

“ஓ தேங்க் காட் அசோக் வந்துட்டாரு போல” என்று யூகித்தவன்

“அம்மு நீ வீட்டுக்கு போ நான் கவிதாவை பார்த்துட்டு வந்துடறேன்”

“நானும் வரேன் மாமா”

“இப்பதான் உடம்பு கொஞ்சம் ஓ.கே வா இருக்க. அலைச்சல் வேணாம்டி அம்மு” என்று அவளை லிப்டில் போக சொல்லிவிட்டு காரை எடுத்திருந்தான் ஹாஸ்பிட்டலுக்கு.

வர்மன் வெளியே சென்றிருந்தான் அபிலாஷினி பிரசவ அறையை ரெடியாக வைத்திருந்தாள். கதறிக்கொண்டிருக்கும் கவிதாவை தூக்கிக்கொண்டு பிரசவ அறைக்குள் சென்று படுக்க வைத்ததும் அபிலாஷினியோ “அசோக் கொஞ்சம் நேரம் இருங்க வர்மன் வெளியே போயிருக்காரு லோகேஷும் இல்ல” என்று அசோக்கை நிற்க வைத்துவிட்டாள்.

கவிதா “ஆஆ அம்மா முடியல அபி” என்று அவள் படுத்திருந்த பெட்டை இறுக்கிபிடித்தாள்.

“கொஞ்சம் கோப்ஆப்ரேட் பண்ணு கவி” என்று அவளது காலை தடவிக்கொடுத்தாள்.

“நோ! நோ! எ.என்னால முடியல சிசேரியன் ப.பண்ணிடலாம்… வர்மன் அண்ணா எங்க போனாரு?” என்றாள் வலி தாங்க முடியாமல்.

“வர்மன் … ஹாஸ்பிட்டலுக்கு கிரிட்டிக்கல் கேஸ் அட்டன்ட் பண்ண போயிருக்காரு கவி நான் இருக்கேன்ல புஷ் பண்ணுடி”

“ஆஆ முடியலடியே கடவுளே முருகா காப்பாத்து அம்மாஆஆ” என்று அவளது கைகள் அவள் படுத்திருந்த மெத்தையை இறுக்கி பிடிக்க போக கவிதாவின் கையை இறுக்கி பிடித்துக்கொண்டான் அசோக் ஆதரவாக.

“தலை வெளியே வந்துடுச்சு கவி இன்னும் கொஞ்சம் புஷ் பண்ணு அவ்ளோ தான்” என்ற நேரம் கவிதா அசோக் கையை இறுக்கி பிடித்து “முருகாஆஆஆ” என்று கத்த அவளது மகள் வீல் வீல் என்று அபிலாஷியின் கையில் வந்துவிட்டாள்.

“வெல்கம் பேபி” என்று புன்னகை அரும்பிய முகத்தோடு அபிலாஷினி தொப்புள் கொடியை கட் செய்து முடித்தவுடன் அவளது கையிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்ட அசோக் “வெல்கம் ஏஞ்சல்” என இதழ் விரிக்கா வண்ணம் சிரிப்பவன் இதழ் விரித்து சிரித்தான். குழந்தையோ குட்டி கண்ணை போட்டு அசோக்கை பார்த்தது. “பே.பேபியை கா.காட்டுங்க” என்று சுச்சர் போடும் வலியெல்லாம் பொறுத்துக்கொண்டு குழந்தையை பார்க்க ஆசைப்பட்டாள் கவிதா.

“பாப்பா உங்களை உரிச்சு இருக்கா கவிதா” என்றான் வாய் நிறைய சிரிப்புடன்.

கவிதாவோ அப்பாடா அந்த அயோக்கியனை போல என் புள்ள இல்ல என்று நிம்மதியாகி குழந்தையை பார்த்தவளுக்கு கண்ணில் கண்ணீர் கடகடவென வந்தது.

சூச்சர் போட்டு முடித்த அபியோ “ஏய் அசடு அழாதடி குழந்தையை கீளின் பண்ணிக்கொடுத்ததும் ஃபீட் பண்ணனும் தெரியும்ல” என நண்பியை செல்லமாக அதட்டினாள்.

அவளோ “தெரியும் அபி ஆனாலும் நீ ரொம்ப மிரட்டுற” என்று போலிக்கோபத்தோடு முறைத்தாள்.

காஞ்சனாவிடம் குழந்தையை கொடுத்து கவிதாவை நார்மல் வார்ட்டுக்கு மாற்றியதும் “குழந்தைக்கு ஃபீட் பண்ண சொல்லுங்க” என்ற நேரம்

வர்மன் வேகமாக ஆப்ரேஷன் தியேட்டருக்குச் செல்வதையும் அவன் பின்னே லோகேஷும் வேக எட்டு வைத்துச் செல்வதையும் பார்த்தவன் காஞ்சானா பக்கம் நின்ற சூர்யாவை தூக்கிக்கொண்டு ஆப்ரேஷன் தியேட்டர் பக்கம் சென்றவன் ஏதோ கிரிட்டிக்கல் கேஸ் என்று உறுதிப்படுத்திக்கொண்டு ஓபி ரிசப்ஷனிற்குச் சென்றவன் சூர்யாவை சாந்தியிடம் பார்த்துக்க சொல்லிவிட்டு ஆப்ரேஷன் தியேட்டருக்கு விரைந்தான் .

அங்கே அவனின் மனைவி அம்பிகாவுக்கு ஆப்ரேசன் நடந்துக் கொண்டிருந்தது. கண்களை மூடித்திறந்துவிட்டு திரும்பி நின்றவன் நினைவில் அம்பிகா பேசியது அவனது காதில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது.

“நீ எனக்கு வேணாம் அசோக் எப்போவும் ஹாஸ்பிட்டல்னு கதியேனு கிடக்குற என்னை வெளியே அழைச்சிட்டு போகவே இல்லை. என் பர்த்டே அன்னிக்கு 5 மணிக்கு வந்துடறேன் என்னையும் பையனையும் சினிமாவுக்கு கூட்டிட்டு போறேனு சொன்ன வந்தியா இல்லையே ஏதோ அவசர ஆப்ரேஷன் இருக்குனு போன் பண்ணிட்டு நான் அடுத்த வார்த்தை பேசும் முன் போனை வச்சிடற எனக்கு ஆசை நிறைய இருக்கு அசோக் உன்னால என் ஆசையை நிறைவேத்த முடியாது என் பழைய லவ்வர்கூட போறேன் நீ இல்லாத போது ஒருநாள் ஆகாஷை பார்த்தேன் மீண்டும் மீண்டும் அவன் என்கிட்ட வந்து பேசினான் ஆரம்பத்துல நானும் மறுத்தேன் உன்னால எனக்கு எந்த பிரயோஜனும் இல்லை நான் எதிர்பார்த்த கணவனாய் நீ இல்ல அ.அதனால நான் ஆகாஷ் கூட போறேன் என்னை இப்படியே விடு” என்றாள் அசால்ட்டாய் கொஞ்சம் கூட மனக்கசப்பு இல்லாமல் நான்கு வருட தாம்பத்தியத்தை தூக்கியெறிந்து விட்டுச் செல்கிறேன் என்பவளை என்ன சொல்லி நிறுத்துவான் அசோக்.

அவன் இதய மருத்துவன் போன உயிரை இழுத்தி பிடித்து நிறுத்தி திரும்ப உலகத்துக்கு கொண்டு வருபவனின் அருமை அம்பிகாவுக்கு கிடையாது போலும் அற்ப ஐஞ்சு நிமிச சுகமா பெருசு அவளுக்கு… அவன் ஆப்ரேஷன் முடித்து முகம் கூட கழுவாமல் தூக்க கலக்கத்தோடு “அம்பி சாப்பிட்டியா?” என்று காதலோடு கேட்கும் கணவனுக்கு “சாப்பிட்டேன் சாப்பிட்டேன்” என்று ஒட்டாத குரலோடு போனை வைப்பாள் அம்பிகா.

சூர்யாவை பெற்றதோடு சரி இரவு நேரம் எப்படியும் வீட்டுக்குச் சென்றுவிடுவான் குழந்தையை விடிய விடிய தன் பக்கம் போட்டுக்கொள்வான். பால் கொடுக்காமல் பால் வத்தி போச்சு என்று பொய் உரைப்பாள் மருத்துவனுக்கு தெரியாமல் போகுமா என்ன?

அன்றைக்கு முதல் சண்டை ஆரம்பித்தது. “குழந்தைக்கு பால் கொடுத்தா உன் அழகு போய்டும்னு பால் கொடுக்க மாட்டேங்கிறாயாடி?” என்று அவளது கன்னத்தில் மெதுவாய் அடித்துவிட்டான்.

“என் அப்பாவை வரச்சொல்லுறேன் என்னை அடிச்சிட்டல்ல உன் ஹாஸ்பிட்டலுக்கு வந்து உன் மானத்தை வாங்குறேன் உன்கிட்ட ஒரு நோயாளி கூட வரவிடாது பண்ணிடுவேன் குழந்தைக்கு என்னால பால் கொடுக்க முடியாது” என்று திட்டவட்டமாக மறுத்தவளை கட்டாயப்படுத்தவில்லை அசோக்.

சூர்யாவுக்கு புட்டிபால்தான் பாவம் குழந்தை தாயை தூக்கச் சொல்லி அழும் அந்த பாதகத்தி போனை பார்த்துக்கொண்டு இருப்பாள். குழந்தையை ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துச் சென்றுவிடுவான் அசோக். அவனது குடும்பத்தார் ஆசையாய் பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள் ஆனால் அம்பிகாவோ எந்நேரமும் போனும் கையுமாகவே இருந்தாள். சின்னப் பெண் விட்டு பிடிப்போம் என்று அவளை நம்பி விட்டான் அசோக்.

அம்பிகாவுக்கு பர்த்டே சர்பிரைசாக இருக்கட்டும் என்று நகைக்கடைக்கு சூர்யாவுடன் சென்றவன் அவளுக்கு டைமண்ட் ரிங் வாங்கிக் கொண்டு வெளியே வர அம்பிகா அவளின் முதல் காதலன் ஆகாஷின் கையை கோர்த்துக்கொண்டு நகைக்கடைக்குள் வந்ததை பார்த்ததும் அசோக்கிற்கு தேகம் முழுவதும் தீ சுவாலையாக எரிந்தது.

அம்பிகாவோ அசோக்கை முதலில் பார்த்ததும் பதட்டப்பட்டாலும் அடுத்த நொடி ஆகாஷின் கையை பிடித்துக்கொண்டு நின்றாள் நான் இவனுடன் தான் வாழ்வேன் என்ற விதமாக.

ஆகாஷோ அசோக்கை பார்த்து ஏளனமாக சிரித்தான் அக்கணமே அவளை இழுத்துப்போட்டு அடிக்க தோன்றியது. சூர்யாவோ “அம்மா” என்று தாவினான்.

“போடா” என்று குழந்தையின் கையை தட்டிவிட்டதும் அந்த இடத்திலேயே அம்பிகாவுக்கு அறைவிட்டதும் ஆகாஷ் அவளது கையை விட்டு ஓடிவிட்டான். அந்த கணமாவது ஆகாஷை நம்பி போகாமல் இருந்திருக்கலாம். விதி வலியது.

அம்பிகாவை வீட்டிற்கு கூட்டிச் சென்றவன் “நீயெல்லாம் குடும்ப பொம்பளையாடி தாலிகட்டிய கணவன் முன்னே அடுத்தவன் கையை பிடிச்சிட்டு நிற்குற” என்று அவளை ஒரு அறை விட்டிருந்தான்.

“நீ என்னை கவனிக்கல” என்ற அவள் அடுத்த வார்த்தை பேசவில்லை அம்பிகாவின் தந்தை மாடசாமி அவளது கன்னத்தில் அறைந்திருந்தார்.

அன்றிரவு மகளுக்கு புத்திமதி சொல்லியும் அவள் பிடிவாதமாக இருந்தாள். அடுத்த நாள் காலையில் நான் ஆகாஷோடுதான் வாழ்வேன் என்று பெட்டியோடு நின்றவளை யாராலும் தடுக்க முடியவில்லை.

“சீரழிஞ்சு வரட்டும் விடுங்க மாப்பிள்ளை நான் உங்களுக்கு நல்ல குணமான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்குறேன்” என்றார் மகள் மாப்பிள்ளை வாழ்க்கையை வீணாக்கி விட்டாளே என்று.

சூர்யா அழுதுக் கொண்டு அவளது முந்தானையை பிடித்து இழுக்க அவளோ முந்தானையை குழந்தையின் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு பெட்டியுடன் வெளியே சென்றாள். இத்தனை அழகான மகனையும் காதலாக பார்த்துக்கொள்ளும் கணவனையும் விட்டுச் சென்றாள்.

சூர்யாவை தூக்கிக்கொண்டு “அப்பா இருக்கேன் தங்கம் உனக்கு” என்று அழும் குழந்தைக்கு தாயாய் மாறியிருந்தான்.

அழகான குருவிக் கூட்டுக்குள் வாழாமல் செங்குளவியிருக்கும் இடத்திற்குத்தான் போவேனென்று சென்றவளுக்கு காலம் தண்டனை தராமல் இருக்குமா. ஆகாஷோடு சென்ற அடுத்த நாள் அவளிடமிருந்த நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.

தான் ஏமாந்து விட்டோம் தந்தையின் சாபம் தன்னை விடவில்லை என்று நொறுங்கி அமர்ந்தாள். மீண்டும் அசோக்கிடம் சென்றால் தன்னை ஏற்றுக்கொள்ளமாட்டானென்று தெரிந்தவள் தான் செய்த காரியத்திற்கு தண்டனையாக தனியாக வாழ ஆரம்பித்தாள். கிடைக்கும் வேலைகளை செய்து வந்தாள்.

ஒருநாள் மயங்கி விழுந்தவளை அங்கே வேலை செய்பவர்கள் அவளை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்தார்கள் இந்த பொண்ணு மாசமாய் இருக்கு என்றவுடன் அவளது முகத்தில் புன்னகை. இந்த நேரம் கணவன் வீட்டில் இருந்தால் தன்னை தலையில் வைத்து தாங்கியிருப்பான். ஆம் இவளின் வயிற்றில் வளர்வது அசோக்கின் குழந்தைதான்.

ஆகாஷ் அம்பிகாவிடம் இருக்கும் பணத்தின் மேல் ஆசைப்பட்டும் அவள் தன்னை ஏமாற்றிவிட்டு அசோக்கை கல்யாணம் செய்துவிட்டாள் என்ற ஆத்திரத்தில் அவளை பழிவாங்க திட்டம்போட்டு அவளை ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்தி விட்டுச் சென்றிருந்தான்.

அம்பிகா 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தாள். மதுபோதையில் பைக்கை ஓட்டிவந்தவன் வேலை செய்துக் கொண்டிருந்த அம்பிகாவின் மேல் விட்டான். வர்மன்தான் அம்பிகாவை தன் காரில் தூக்கி போட்டு ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வந்திருந்தான். எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்றுதான் ஆப்ரேஷன் செய்தான். ஆனால் குழந்தையை மட்டும்தான் அவனால் காப்பாற்ற முடிந்தது அதிக அளவு இரத்தப்போக்கினால் அம்பிகாவை காப்பாற்ற முடியாது போனது.

அம்பிகா தன் பக்கம் வந்து திரும்பி நிற்கும் அசோக்கை கண்டவள் எங்கே உங்களை பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று நினைத்திருந்தேன் என்று கடவுள் என்மேல இரக்கப்பட்டு உங்களை காட்டிவிட்டார் அவர்கிட்ட அவர் குழந்தையை ஒப்படைக்கும் வரை என் உயிர் போயிடக்கூடாதென்று கடவுளை ஒவ்வொரு நொடியும் வேண்டிக்கொண்டிருந்தாள்.

குழந்தையை எடுத்ததும் “பாய் பேபி” என்றதும் அசோக் கண்ணீரை துடைத்துக்கொண்டு திரும்பியவன் “என் கையில கொடுங்க வர்மன்” என்றான் பிசிறு தட்டும் குரலில்.

“அ.அசோக் எ.என்னை மன்னிச்சிடுங்க உங்களுக்கு நான் து.துரோகம் செய்துட்டேன் இ.இது உங்க குழந்தைதான் உ.உங்க கையை பிடிக்கணும்” என்று கடைசி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தாள் அம்பிகா.

அவனோ “உ.உனக்கு ஒண்ணும் ஆகாது வர்மன் அ.அம்பிகாவை பாருங்க அ.அவ எ.என் வொய்ஃப்” என்று அம்பிகாவின் கையை பிடித்ததும் அவனது கையை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டவளோ
“எ.என்னை மன்னிச்சிடுங்க மாமா இது சத்தியமா உங்க குழந்தைதான்” என்று கூறிய அடுத்த நொடி அம்பிகா கண் அப்படியே நிலைகுத்தி நின்றது.

குழந்தையின் அழுகுரலை தவிர எந்த சத்தமும் கேட்கவில்லை.

வர்மன் ஓரளவு விசயம் புரிந்துக் கொண்டான். “வர்மன் என் வொய்ஃப்பை காப்பாத்தி இருக்கலாம்ல” என்றான் உதடுகள் துடிக்க.

“ப்ளீட் நிற்கவே இல்லை அசோக் நானும் என்னால முடிஞ்ச ட்ரீட்மெண்ட் கொடுத்தேன் பட் காப்பாத்த முடியாது போச்சு. இதுதான் என் முதல் ஃபெயிலியர் கேஸ்” என்று இதழ் பிதுக்கி கை உறைகளை கழட்டி விட்டு கைகளை சுத்தம் செய்துக் கொண்டு அசோக் குழந்தையை வாங்கி சாந்தியிடம் கொடுத்து “சுத்தம் செய்து கொண்டு வாங்க” என்றான்.

சாந்தியோ குழந்தையை சுத்தம் செய்து வந்தவள் அசோக்கிடம் கொடுக்க குழந்தை பசியால் விரலை சப்பியது.

“வர்மன் என் குழந்தையை கொஞ்ச பார்த்துக்கோங்க எனக்கு கடமை இருக்கு நான் முடிச்சிட்டு வந்து என் குழந்தையை வாங்கிக்குறேன்” என்று அம்பிகாவிற்கான இறுதி காரியங்களை பார்க்க தொடங்கினான் அம்பிகாவின் தந்தை என் பொண்ணை நான் தலைமுழுகிட்டேன் என்று கூறுவிட்டார். அசோக்கின் தாயும் தந்தையும் வரவில்லை. தன் மகனை ஆண்மகன் இல்லையென்று தூக்கி எறிந்துச் சென்றவள் மீது இரக்கம் வரவில்லை. தாலி கட்டியாச்சு கடைசி காரியத்தை தான் செய்து முடித்துவிடவேண்டுமென்று அம்பிகாவுக்கு காரியங்களை முடித்து குளித்து முடித்து இரவுதான் ஹாஸ்பிட்டலுக்குச் சென்றான்.

“குழந்தை கவிதா டாக்டர் அறையில் இருக்கு” என்று சாந்தி கூறவும்

கவிதா இருக்கும் லேபர் வார்டுக்குச் சென்றான் அசோக்.

வர்மனும் லோகேஷும் அறைக்கு வெளியே பேசிக்கொண்டிருந்தனர்.

அசோக்கோ குழந்தையை பார்க்கும் ஆசையில் கவிதா இருந்த அறைக்குள் சென்றுவிட்டான்.

கவிதா தன் குழந்தைக்கும் அசோக்கின் குழந்தைக்கும் பசியாத்திக்கொண்டிருந்தாள்.

சட்டென திரும்பி நின்ற அசோக்கிற்கு கடகடவென கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அந்த கணமே வெளியே வந்துவிட்டான்.

வர்மனோ “குழந்தை பசியில அழுதான் அசோக் குழந்தைக்கு நான் ஃபீட் பண்ணுறேன்னு சொல்லிட்டா கவிதா” என்றதும் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான்.

வர்மனோ “நான் சொல்றது தவறா தோணலாம் என்னை உன் குடும்பத்துல ஒருத்தனா நினைச்சுக்கோ” என்றவனோ கவிதாவின் வாழ்க்கையில் நடந்ததை கூறியவன் “பிரதாப் கூட அவளால வாழ முடியாது அவளுக்கு விருப்பம் இருந்தா நீங்க ரெண்டு பேரும் லைப்ஃபை இணைஞ்சு வாழ முடியுமானு பாருங்க இப்போ கைக்குழந்தையை வச்சிக்கிட்டு உங்களாலயும் எதுவும் பண்ண முடியாது. குழந்தைக்கு தாய் வேணும். நீங்க சொல்லலாம் ஆள் போட்டு பார்த்துக்கலாம்னு எல்லாரும் நல்ல மனிதர்களாய் கிடைக்கமாட்டாங்க அசோக் எல்லாமே இப்பவே நடக்கணும்னு கிடையாது. என்னடா என் பொண்டாட்டிக்கு காரியம் பண்ணிட்டு இப்போதான் வந்திருக்கேன் அதுக்குள்ள என்கிட்ட இப்படி பேசுறானேனு நினைக்காதே நான் பிராக்ட்டிக்கல் லைஃப்பை பத்தி பேசுறேன். இதுல கவிதாவுக்கு விருப்பம் இருக்கணும் அவகிட்ட நானும் அபியும் பேசுறோம் உங்க விருப்பம்தான்” என்றான் பெரும்மூச்சு விட்டு.

அசோக் யோசனையாக நின்றவன் “கொஞ்சநாள் போகட்டும் வர்மன் குழந்தைகளை கவனிக்க தாய் வேணும் அம்மா இல்லாம என் பெரிய மகன் சூர்யா கஷ்டப்பட்டதை என்னால பார்க்க முடியாத அழுதிருக்கேன்” என்று தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான் அவனால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. கணவன் மனைவி என்னும் பந்தத்தைவிட புனிதமான உறவு வேறொன்று இருக்க முடியாது. ஒளிவு மறைவு இருக்க கூடாது. விட்டுக்கொடுத்து வாழவேண்டும். அனுசரிப்பு நீ நான் என்று போட்டி போடாமல் வேலை செய்து கலைத்து வரும் கணவனுக்கு காபி போட்டு கொடுத்து உதட்டில் புன்னைகையோட இருந்தால் கணவன் அவளை தலையில் வைத்து கொண்டாடுவான்.

கவிதா தனியாக வாழ்வது அவனுக்கு கவலையாக இருந்தது. இப்போது அந்த கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அசோக் வந்துவிட்டான் என்று லோகேஷ் நிம்மதி பெரும்மூச்சு விட்டான்.

பால் குடிக்கும் குழந்தையை பிடுங்கிக் கொண்டு போக அசோக் நினைக்கவில்லை. சூர்யாவோ “எனக்கு ஒரு பாப்பா ஒரு தம்பி” என்று துள்ளிக்குதித்தான். லோகேஷின் அபார்ட்மெண்ட்டில் ஒரு வீடு காலியாக அந்த வீட்டிற்கு குடியேறி விட்டான் அசோக். குழந்தையை இரவு நேரம் மட்டும் தூக்கி வைத்து விட்டு கொஞ்சி விட்டு திரும்ப கவிதாவிடம் கொடுக்கும்போது “ரொம்ப தேங்க்ஸ் கவிதா உனக்கு நான் கடமைப் பட்டு இருக்கேன்” என்பான் ஆத்மார்த்தமான வார்த்தைகளுடன் நல்ல நண்பர்களாக பழகி விட்டனர்.

சாந்தியிடம் அபிலாஷினிக்கு ஓபி கூட்டம் அதிகம் இருந்தால் தனக்கு போன் போடச் சொல்லியிருந்தான் வர்மன். இன்று வார முதல் நாளாக இருக்க அபிலாஷினி எழுந்து போக கூட நேரம் இல்லாமல் பிஸியாக இருந்தாள். ஐந்து மாத இரட்டை கருவை சுமந்துக் கொண்டிருந்தாலும் இன்னும் சுறுசுறுப்பாக ஹாஸ்பிட்டலுக்குள் சுற்றிக்கொண்டிருப்பாள்.

வீட்டிற்குச் சென்றவுடன் “கால் வலிக்குது ஹாட் சாக்லேட்” என்று உட்காரும் மனைவிக்கு ஹாட் பேக் வைத்து விட்டு விரல் சொடுக்கு எடுத்து அவளுக்கு பணிவிடை பார்ப்பான் வர்மன். அபியை விழுந்து விழுந்து கவனிக்கும் மாமியார் வசந்தி… நீ வீட்டுல ரெஸ்ட் எடு அபி என்று அக்கறையை பேசும் மணிமாறன் அவளை சுற்றி அன்பு கூட்டம் அலைபாய்ந்தது.

“ஐ லவ் யுடா டார்க் சாக்லேட்” என்று அவனை அணைத்துக்கொண்டு மூக்கோடு மூக்கை உரசுவாள்.

“ஐ லவ் யுடி” என்று அவளது இதழில் முத்தமிட்டு இருவரும் மோககடலில் மூழ்கி முத்தெடுப்பார்கள். எப்படி இருவரும் இணைவதென்று இருவருமே அறிந்தது தானே. மூச்சு முட்ட முத்தம் கொடுக்காமலும் தன்னவளுக்கு அழுத்தம் கொடுக்காமல் பூவில் தேன் எடுக்கும் வித்தையை கற்று வைத்திருந்தான் நம் மருத்துவ நாயகன்
ஐவிஎஃப் பிரான்ஞ்சில் லோகேஷை தனக்கு உதவியாக வைத்துக்கொண்டான். அபிலாஷினிக்கு ஓபி அதிகம் இருப்பதாக அவனுக்கு போன் வந்துவிட்டால் அடுத்த நிமிடம் அபிக்கு இருக்கும் ஓபி பேஷண்டை தனக்கு அனுப்புமாறு சாந்தியிடம் சொல்லி அபிலாஷினிக்கு ஓய்வு கொடுத்துவிடுவான் வர்மன்.

அபிலாஷினியின் அறைக்கு மாதுளை ஜுஸ் கொண்டுச் சென்றான் வர்மன்.

“நீங்க எதுக்கு கொண்டு வந்தீங்க ஆயாமா என்ன பண்ணுறாங்க… உங்களுக்கு ஓபி பேஷண்ட் இல்லையா என்னையே சுத்தி சுத்தி வர்றீங்க?” என்று ஹாஸ்பிட்டல் எம்டியாக பேசும் மனைவியை முறைத்தவன் “இப்போ எனக்கு பேஷண்ட் இல்லீங்க எம்டி மேடம்… எனக்கு என்னோட பேஷண்ட்டும் முக்கியம் என் பொண்டாட்டி குழந்தைகளும் முக்கியம் ரெண்டும் எனக்கு கண்ணு போல ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் இன்னொரு கண்ணுக்கு வெண்ணெய்யும் வைக்க முடியாது” என்று நீளமாக வசனம் பேசினான்.

அபியோ அவனது பேச்சை இரசித்துக்கொண்டே ஜுஸை வாங்கிக்குடித்தாள்.

வர்மன் இப்போதும் காலை மாலை இரவு வீட்டுக்கு போகும் முன் நியூரோ வார்ட்டுக்கு ரவுண்ட்ஸ் சென்று அங்கிருக்கும் நோயாளிகளுக்கு மருந்துகளை பரிசோதித்து விட்டுத்தான் செல்வான். இப்போது எந்த நோயாளிகளையும் அதிக நாட்கள் தங்க வைப்பதில்லை.

வர்மன் தான் பண்ணும் நாச வேலைகளை கண்டுபிடித்து அவர்கள் குணமடைய மணிமாறனிடம் மருந்துகளை கேட்டு நோயாளிகளுக்கு கொடுத்து குணமடைய வைத்திருக்கிறான் இவனை விட்டு வைக்க கூடாது இந்த ஹாஸ்பிட்டலை விட்டு விரட்ட வேண்டும் என்று மணிமாறனை கண்டுபிடித்து உன் மகனை அழித்து விடுவேன் என்று மிரட்டதான் கங்கணம் கட்டி அமெரிக்கா சென்றிருக்கிறார் அன்புக்கனி.

4 thoughts on “நெஞ்சில் வடித்த கவிதை”

  1. Наш агрегатор – beautyplaces.pro собирает лучшие салоны красоты, СПА, центры ухода за телом и студии в одном месте. Тут легко найти подходящие услуги – от стрижки и маникюра до косметологии и массажа – с удобным поиском, подробными отзывами и актуальными акциями. Забронируйте визит за пару кликов https://beautyplaces.pro/

  2. I’m curious to find out what blog platform you are using? I’m having some small security issues with my latest website and I’d like to find something more secure. Do you have any recommendations?

Leave a Reply to Vithya.V Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top