மலர்தல்-21

தன் அன்புப் பாட்டி , ‘மீராவைக் கட்டிக்கொள்’ என்று சொன்ன பிற்பாடு ..அலுவலகம் வந்து சேர்ந்தவன்.. அவன் அவனாகவே இல்லை !!
எப்போதும் தன் அலுவலக ஊழியர்களின் ‘குட்மார்னிங்’குகளை சின்னத் தலையசைப்புடன் ஏற்றுக் கொள்பவன்..இன்று யாரையும் நிமிர்ந்து பார்த்தானில்லை.
கால்களில் சக்கரம் கட்டியது போல அப்படியொரு வேகம் அவனுக்குள். விறுவிறுவென்று சென்று நேரே..தன் அறைக்குள் புகுந்திருந்தான்.
அவனது அறை ஏழாம் மாடிக் கட்டிடத்தில் உண்டு. அறையின் ஒரு பக்கச்சுவர் முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருந்தது .
அதன் வழி பார்த்தால் சென்னையின் மெரீனா கடற்கரையும்,கடலில் நின்றும் கொஞ்சம் கொஞ்சமாக உதயமாகிக் கொண்டிருக்கும் தங்கநிறச் சூரியனும் புலப்படும்!!
இன்னும் ஏன் ..எறும்பு ஊர்வது போல வாகனங்களும் ,மாந்தர்களும் செல்வதையும் கூட பார்க்க இயலும்.
பரபரப்பு மிகுந்த இவன் வாழ்க்கையில் இவை யாவும் அவனை ஆசுவாசப்படுத்தும் காட்சிகள் !!
ஆனால் இன்று அவன் மனதில் சப்தமின்றி மையம் கொண்டிருந்தது ஒரு புயல்!!
ஏசியூட்டப்பெற்ற அறையிலும் புழுக்கம் தாங்க முடியாதவனாக..தன் டையைக் கழற்றி விட்டு.. இடுப்பில் கைவைத்து நின்றான் .
‘கல்யாணம்?அதுவும் அவள் கூட? பாட்டிம்மா எப்படி போயும்..போயும் ஊர்,உறவு பேர் தெரியாத ஒரு அநாத கூட என்னை முடிச்சு போடலாம்?’ என்று எண்ணிக் கொண்டவன்..அலைக்கழிப்பு தாங்கொணாமல்..தன் சிகையை அழுந்தக் கோதிக் கொண்டான்.
அலுவலகம் வரும் போது..உச்சாதி பாதம் வரை நேர்த்தியாக இருந்தவனின், இப்போதைய கோலம்??
கலைந்த கோலத்தில் நின்றபோதும் அர்ஜூன் மனோஹர் அழகனாகவே இருந்தான் .
இன்று காலை.. மஞ்சள் சுடிதாரில் கூந்தல் சுழல சுழல ..பேட்மிண்டன் விளையாடிவளின் பேரெழிலான மதி மயக்கும் வதனம் அவன் ஞாபகத்தில் வந்து போனது.
“விட்ச்ச்!!மாயக்காரி.. ஒற்றை பார்வைல ஆள எடை போடற பாட்டிம்மாவ எப்படியோ கைக்குள்ள போட்டுக்கிட்டேல்ல” என்று அவன் தனக்குத் தானே பற்களைக் கடித்தவண்ணம் சீற்றத்தில் சொல்லிக் கொண்டான்.
அவ் வேளை.. அவன் செல் சிணுங்கியது.
தன் பேன்ட் பாக்கெட்டில் நின்றும் செல்லை எடுத்தவன்..ஒளிர்ந்து கொண்டிருந்த திரையைப் பார்த்தான். பாட்டிம்மாவின் நாமத்தைத் தான் காட்டியது அது.
‘ஆபீஸ் வந்ததுக்கு அப்றமும் எதுக்கு கால்?’ என்றே தோன்றியது.
அவர் மீது வெஞ்சினத்தில் இருந்தவன்..திரையையே வெறித்துப் பார்த்தானே ஒழிய அழைப்பை ஏற்கவில்லை.
முதலாம் அழைப்பு;இரண்டாம் அழைப்பு ;மூன்றாம் அழைப்பு !! செல் ஓயாது சிணுங்கிக் கொண்டேயிருந்தது.
நான்காம் அழைப்பின் போது எரிச்சலின் உச்சத்தில் சலித்துக் கொண்டே அழைப்பை ஏற்றிருந்தான் அவன்.
மறுபுறத்திலிருந்தவரைப் பேசக் கூட விடாமல் ..காட்டுக்கத்தல் கத்தியிருந்தான் அவன்.
“வீட்டுல தான் நிம்மதியா இருக்க விடமாட்டீங்கன்னாஆஆ.ஆபீஸ்லயுமாஆஆஆ….இங்கேயும் என்னை நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா??இது நாள் வரை என்னை கைப்பொம்மை போல ஆட்டுவிச்சது போல இனியும் என்னை ஆட்டுவிக்க முடியாது. உங்க முடிவ நீங்க சொல்லிட்டீங்கள்ல..இப்போ என் முடிவை நான் சொல்றேன் .கேட்டுக்கங்க. ஐ வோன்ட் மேரி ஹர்.. நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..டாட்!!”என்று மூச்சு கூட விடாமல்..நீளமாகப் பேசி முடித்தவன்..மறுகணம் தன் செல்லை சுவற்றில் விட்டெறிந்தான்.
அந்தோ பரிதாபம் .அவனது கோபாவேசத்தைத் தாங்காத செல்லும்..சுக்குநூறாக உடைந்து போனது.
அவனது தோள்புஜங்கள் இரண்டும் சினத்தில் மேலும்,கீழும் ஏறியிறங்கிக் கொண்டிருந்தது.
அவனது அந்தரங்க காரியதரிசியான ஜனார்த்தனன் என்னும் ஜனாவும்..தன் எஜமானன் காலை வந்ததும் முதல் வேலையாக பருகும் ‘ப்ளாக் காபி’யுடன் உள்ளே நுழைந்திருப்பான்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்..உங்க காபி” என்ற வண்ணம்..உள்ளே நுழைந்தவனின் மேல் பறந்து வந்து விழுந்தது ஒரு ஃபைலொன்று.
தன் மீது ஃபைல் வந்து விழுந்ததில்..ஜனா சற்றே தட்டுத்தடுமாறிப் போனான்.அதில் அவன் கையிலிருந்த காபியும் கொஞ்சம் தரையில் சிந்தப்பட்டது.
“சார்?” என்று எதுவும் புரியாமல் தன் எஜமானனை நிமிர்ந்து பார்த்த நேரம்..அங்கே ஜனாவும் கண்டது??
கலைந்த சிகையுடன் ,கண்களில் கடுஞ்சிவப்புடன்..இராட்சசனைப் போல நின்றிருந்த அர்ஜூனையே!!
கழுத்து நரம்புகள் புடைத்து வெளிவரும் வண்ணம்..அடக்கப்பட்ட சீற்றத்துடன் கத்தினான் அர்ஜூன்.
“இப்போ ப்ளாக் காபி வேணும்னு நான் கேட்டேனாஆஆ ..கெட்லாஸ்ட்!!” என்று அவன் கர்ஜித்த கர்ஜனையில் சர்வாங்கமும் ஆடிப் போய் வெளியே தலை தெறிக்க ஓடி வந்தான் ஜனா.
அவனுள் எழுந்த தாறுமாறான சீற்றத்தை அடக்கும் வழிவகை இன்னது என்று சத்தியமாக அவனுக்குத் தெரியவேயில்லை.
மேசை மீது உள்ளங்கைகள் இரண்டையும் அகல ஊன்றி..விட்டத்தை வெறித்தவாறே..நின்று கொண்டிருந்தான் அர்ஜூன்.
ஐந்தடி உயரமுள்ள சிறு பெண்ணால் ..அவனது அஸ்திவாரமே ஆட்டம் கண்டது.
அவனுக்கு இணையாளாக அவளா?
அவனுள் அவளால்,உருவாகிக் கொண்டிருந்தது ஒரு பூகம்பம் .

அக்கணம்.. இம்முறை அழைப்பு அவனது மேசையில் சிவனே என்றிருந்த தொலைபேசிக்கு வந்தது.
முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்றவன்..இழுத்துப் பிடித்தப் பொறுமையுடன் , “ஹலோ” என்றிருப்பான்.
மறுமுனையில் நின்றும் கேட்டது அவனது சித்தி மஞ்சரியின் குரல்!!
“அர்ஜூன் ..பாட்டி..” என்று பாட்டியைச் சொன்னதும் தான் தாமதம்.. பட்டென்று ரிசீவரைத் தூக்கி வைத்தான் அவன்.
அப்போதும் விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்புக்கள் தொலைபேசிக்கு வந்து கொண்டேயிருக்க..பொறுக்க மாட்டாது..ரிசீவரை மட்டும் எடுத்து மேசை மீது வைத்து விட்டான் அர்ஜூன் .
தங்கள் குடும்பத்தில் புது ஆளாக புகுந்து..அனைவரையும் மயக்கி ..கைக்குள் போட்டு..ஒட்டுண்ணியாக உறியத் துடிக்கும் அவள் நினைப்பில் நெஞ்சு காந்தியது அவனுக்கு.
அறையிலேயே கூண்டுக்குள் அடைப்பட்ட சிங்கம் போல அங்குமிங்கும் நடந்தவனின் இதயத்தினை ஆக்கிரமித்திருந்தாள் மீரா.
முதன்முறையாக அவளை..பூஜையின் போது பார்த்த ஞாபகம் வந்து போனது நாயகனுக்கு.
விழிகள் மூடி..முன்னுச்சிக் கூந்தல் காற்றில் பறக்க..கரம் கூப்பி சாமி கும்பிட்ட அவள் தோற்றம் அவனுள் எழுந்தது .
அவள் முகத்தை என்றும் அவனால் துளியேனும் மறக்க முடியாது. .
சாமி கும்பிட்டு விட்டு விழி திறந்த காரிகைப்பெண்ணின் கண்களில் தெரிந்த மென்மை??
அம் மென்மையாளினிக்கும்,கூண்டில் அடைப்பட்ட அசுரனாய் வளர்ந்த இந்த வன்மையாளனுக்கும் எப்படி பொருந்தும்?
அவன் மனதில் கடந்தகாலத்தின் ஆற்றாமையும்,நிகழ்காலத்தின் அழுத்தமும் சேர்ந்து இருதலைக்கொள்ளி எறும்பாக அமுக்கியது.
இனி ஒரு நிமிடம் கூட அங்கே நிற்கப் பிரியப்படாதவன்.. இராக்ஷசனைப் போல ..புயல்,மழையைத் தன்னகத்தே தேக்கிக் கொண்டு..வேகவேகமாக விரைந்தான் அலுவலகத்தை விட்டும்.
அவன்..வந்த வேகத்திலேயே அலுவலகத்தை விட்டும் வெளியேறுவது கண்டு..பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தான் பிஏ ஜனா.
“சார்..சார்..சார்..இன்னும் பத்து நிமிஷத்துல வேக்ஸ் கம்பெனியோட ஒரு மீட்டிங்க் இருக்கு சார் .” என்று அலறி அரண்டவனாக பின்னாடியே ஓடி வந்தவனாகச் சொன்னான் காரியதரிசி.
அவனோ..ஜனா சொல்வது அத்தனையும் கேட்டிருந்தாலும் கூட ஒரு நொடி கூட திரும்பவேயில்லை.
அதே வேகமான நடையுடன் முன்னோக்கி நடந்து கொண்டே போர்ட்டிக்கோ வரை வந்தே விட்டிருந்தான் அர்ஜூன் .
“கேன்சல் இட் !!” என்று அழுத்தமாகச் சொன்னவனாக அங்கிருந்த காரின் பிடியில் கைவைத்திருப்பான் நாயகன்.அவனைத் தடுக்கும் வகையில் கேட்டது ஜனாவின் குரல்.
“எதே..கேன்சல் பண்ணட்டுமா? சார் பைவ் ஹன்ட்ரன்ட் குரோர்ஸ் டீல் சார் இது?”என்று பதைபதைத்தவனாகச் சொல்ல..அவனைத் திரும்பி ஒரு பார்வை சுட்டெரிப்பது போலப் பார்த்தான் அர்ஜூன் .
“மிஸ்டர் .ஜனார்த்தனன் கிருஷ்ணமூர்த்தி” என்று தன் அந்தரங்க காரியதரிசியை அவன் முழு நாமம் சொல்லி அழைக்க ..அல்லு விட்டது ஜனாவுக்கு.
“சா..ர்?” என்று எச்சில் கூட்டி விழுங்கியவனாகச் சொன்னான் அவன்.
“இங்கே நான் உன் பாஸா??இல்லை நீ என் பாஸா?” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் சம அளவு இடைவெளிவிட்டு கூர் பார்வையுடன் கேட்டான் அர்ஜூன்.
“நீங்..நீங்க தான் சார் பாஸ்..நான் உங்க எம்ப்ளாயீ” என்று பணிவுடன் சொன்னவனை..மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வைப் பார்த்தான் அவன்.
“தென் டூ வாட் ஐ சே!!”என்று பெரும் ஆளுமையுடன்..தன் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை என்பது போல அமர்த்தலாகச் சொல்லி விட்டு காரில் ஏறிப் போனான் அவன்.
அவன் கைவன்மையில் கார் சீறிப் பாய்ந்து ஓடியது.இறுதியில் அவன் வந்து நின்றது ? சென்னையிலேயே உயர்தட்டு வர்க்கத்தினர் அதிகம் வந்து போகும் பார் ஒன்றிற்கு!!
உள்ளே நுழைந்து சொகுசு சோபாவில் அமர்ந்து கொண்டவன்..தனக்காக ரம்மினை வரவழைத்தான்.
தன் முன் வைக்கப்பட்ட ரம்மினை குடித்தான்;குடித்தான்;குடித்துக் கொண்டேயிருந்தான் .
அவன் மனம் தன் கடந்தகாலத்தின் தாக்கத்தால்..என்றும் அணையாத தீயென கொழுந்து விட்டெறிந்தது.
யாரோ ஒரு சிறுவனின் அழுகுரல், “வி..விட்ருங்க..விட்ருங்க..நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன்..விட்ருங்க.” என்று ஓயாது கேட்டுக் கொண்டிருந்தது.
உள்ளங்கை,உள்ளங்கால் எங்கனும்..யாரோ பழுக்கக் காய்ச்சிய கம்பினால் சூடு போட்ட வலி இன்றும் ..ஆறாத ரணமாக அவனுள் எழுந்தது .
“வாழ்க்கையின் கசடுகள கொண்ட இழாக்ஷசனுக்கு..எப்டி மேழேஜ் ழைப் செட்டாகும்?” என்று குடிபோதையில் உளறத் தொடங்கினான் அவன் .
தன் முகத்தை உள்ளங்கையால் தேய்த்துக் கொண்டவன்..அவள் நாமம் சொல்லிப் பார்த்தான் வன்மையாக.
“மீரா..மீரா!!என் உலகம் வேற..அந்த உலகத்துல உன்னைப் போல ஒருத்தியால சர்வைவ் பண்ண முடியாது..###?”என்று சொல்லிக் கொண்டவன் கண்ணுக்குள் அவள் விம்பம் மலர்ந்தது.
என்றென்றும் அவன் நினைவலைகளில் அழியாத விம்பம் அது !!
முதல் சந்திப்பின் போது..கால் இடறி விழப் போனவள்..அவனை பற்றுக்கோலாக பற்றிக் கொள்ள முனைந்தது??
விழிகளால், ‘என்னைக் காப்பாற்று’ என்று இறைஞ்சியது??
எல்லாம் எல்லாமே இவனுள் எக்கணமும் நீங்காத சுவடுகளாய்!!
அவள் பற்றிய எண்ணங்களை பிடிவாதமாக ஒதுக்கித் தள்ளினாள் அர்ஜூன்.
“ என் வாழ்க்கையில எனக்கு ஒரு பெண் தேவையில்ல..மீரா நீ எனக்கு தேவையில்ல..வேண்டாம்..வேண்டவே வேண்டாம்”-
நேரம் நள்ளிரவு பன்னிரண்டு மணியைத் தாண்டிக் கொண்டிருந்தது.
அன்னம் தண்ணீர் ஆகாரம் எதுவுமே இன்றி ..முழுநாளும் மதுவே கதி என்று இருந்திருக்கிறான் அவன்.மொடாக்குடிகாரர்கள் போல.
சோபாவில் நின்றும் சிறிய போதைத் தள்ளாட்டத்துடன் அவன்..எழுந்து நுழைவாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
கோர்ட்டினை முதுகுக்குப் பின் போட்ட வண்ணம் சோர்வுடன் நகர்ந்தவன்.. நுழைவாயிலைக் கடந்து செல்லும்போது, அங்கிருந்த ஊழியர்கள் அவனைப் பற்றி கிசுகிசுப்பதைக் கேட்டான் அர்ஜூன்.
“ஹேய் இது..ஹிமாலயா என்டர்பிரைசஸ் சிஇஓ அர்ஜூன் மனோஹர் தானே?” என்று அவனை ஆரம்பத்தில் கண்டு கொண்டாலும் தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு..சக ஊழியனிடம் கேட்டிருந்தான் ஒருவன்.
மற்றையவனும் பதில் சொன்னான் ,தொடர்ந்து.
“ஆமா மச்சி அவன் தான்.. நல்லவன் வேஷம் ஊருக்கு தான் போல.சரியான மொடாக்குடிகாரனா இருப்பான் போலிருக்கு.காலையில உட்காந்தவன்..இப்ப தான் எந்திரிச்சு போறான்..” என்றான் .
“மொடாக்குடிகாரன்..நாள் முழுக்க இங்கேயே இருக்கான்” என்ற வார்த்தைகள் அவன் மனதில் எதிரொலித்தன.அவை அவனது இரத்தத்தை இன்னும் கொதிக்க வைத்தன.
அவர்களுக்கு என்ன தெரியும்? அவனைப் பற்றி!!! எப்போதும் குடிப்பவனா அவன்??
அவன் தோள்களை அழுத்தும் சுமை இவர்களையும் தொற்றிக் கொண்டால்? அவன் இவ்வுலகில் மிகவும் நேசிக்கும் ஓர் உறவு…அவனை இன்னொரு வாழ்வுக்கு வற்புறுத்தினால்??
அவற்றினால் எழும் வலியை ..அவனைப் பற்றி புறம் பேசுபவர்கள் அறியப் போவதில்லை.
கடைசியாக பாரை விட்டும் வெளியில் வந்தவனோ.. “நான் கல்யாணத்துக்கு தயாரா இல்ல. இன்னொருத்தி என் வாழ்க்கைக்குள்ள வர நான் அனுமதிக்க மாட்டேன் ..அனுமதிக்க மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டவன்…காரை எடுத்தான்.
எந்த போலீஸ் கெடுபிடிக்குள்ளும் சிக்காமல்… விபத்துக்கள் நேராமல் எப்படி முழுதாக வீடு வந்து சேர்ந்தானோ??
வீட்டு போர்ட்டிக்கோவில் காரைத் தரித்து விட்டு இறங்கியவனின் இதயம் புதுமையான உணர்வால் இறுகியது.அவனுக்குள் எழுந்த விரக்தியை அவனால் தடுக்க முடியவில்லை.
எல்லாரும் எப்போதோ தூங்கியிருப்பார்கள் என்று எண்ணியிருக்க..அது பொய்யானது.
வீட்டின் அத்தனை மின்விளக்குகளும் ஒளிர்ந்திருந்தது.கூடவே அவ்வீட்டின் மாந்தர்கள் முதற்கொண்டு கடைநிலைப் பணியாளர்கள் வரை அனைவரும் விழித்திருந்தனர்.
அவனோ யாரையும் பார்க்க விரும்பவில்லை. ஒரு போதும் இல்லாமல் குடித்து விட்டு வந்திருப்பவனை பாட்டியோ,சித்தப்பா,சித்தியோ பார்க்க நேரிட்டால்??
அது அவனுக்குள் தர்மசங்கடமான நிலையையே ஏற்படுத்தும்.
மெல்ல அறையை நோக்கிச் செல்வதற்கு படியேற முற்பட்ட போது கேட்டது சித்தப்பா சிவராமனின் குரல்.
“அர்ஜூன்” என்று வழியிலேயே மறித்த சித்தப்பா..ஒருவகையில் அவனுக்கு தந்தை ஸ்தானம் அல்லவா?
அவரது விழியை ஏறிடாமல்..வேறுபக்கம் தலையைத் திருப்பிய வண்ணம் நின்ற போது..சாடியது அவனை சித்தப்பாவின் குரல்.
“ஏன்ப்பா..சித்தியும் ..நானும் அத்தனை கால் பண்ணோமே.. ஏன்ப்பா நீ எடுக்..கவேயில்ல.” என்று இறுதியில் பேசும்போது தழுதழுத்திருந்தது சிவராமனின் குரல்!!
“அது..அது வந்து சித்தப்பா” என்று இவனும் எதைச் சொல்வது என்று தெரியாமல்..தலைகுனிய..அவன் காதுகளை அடைந்தது அவனை உலுக்கிப் போடும் தகவல்.
“அ..அம்மாவுக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக்..” என்று சித்தப்பா சொன்னதும்..தலை தாழ்ந்திருந்த அவனது பார்வை பட்டென்று நிமிர்ந்தது.
“பாட்டிக்கு என்ன? எ..என்ன சொல்றீங்க?” என்று அதிர்ந்து கேட்டான் அர்ஜூன்.
அர்ஜூனுக்கோ அந்தத் தகவலே இதய அதிர்வை எகிறச் செய்யப் போதுமானதாக இருந்தது .
தொடர்ந்து சித்தப்பா கூறிய தகவலில் எதற்கும் அஞ்சா நெஞ்சனான அவன் விழிகளும் கலங்கியது.
“வலியில அம்மா..எனக்கு கூட . கால் பண்ணல..உனக்கு தான் பண்ணியிருக்காங்க..ஆனா..நீ!!”
சித்தப்பா சொன்னதைக் கேட்டதும்..அவனது இதயத்தை ஏதோ இறுக்கிப் பிடித்தது போல வலித்தது.
ஆயிரம்தான் பாட்டி விருப்பமில்லா வாழ்வுக்கு நிர்ப்பந்திப்பது குறித்து கோபம் இருந்தாலும்..பாட்டி அல்லவா?
அவரை தன் தவற்றால் இழந்திருப்போம் என்றானதும் குற்றவுணர்வு மேலோங்கியது.
சிறிதும் தாமதிக்காமல் பாட்டியின் அறையை நாடி ஓடப் போனவனின் முதுகுக்குப் பின் திரும்பவும் கேட்டது சித்தப்பாவின் குரல்.
“ஏதோ மீரா அந்த நேரம் பார்த்து அம்மா ரூமுக்கு வந்ததுனால சரியாப்போச்சு..சிபிஆர் பண்ணி அம்மாவ காப்பாத்திட்டா..இனியொரு தரம் கால் பண்ணா எடுக்காம விடுற உன் விளையாட்ட நிறுத்து” என்ற சித்தப்பாவின் அறிவுறுத்தலில் ஒரு கணம் நின்று தடைப்பட்டது அவன் நடை!!
அவன் தன் வாணாளில் செய்த ஒரு பிழை..அவனது பாட்டியின் உயிரையும் காவு வாங்கியிருந்தால்?
அதை நினைக்கும் போது நெஞ்சு துணுக்குற்றது அவனுக்கு. அவனை அவனே மன்னித்திருக்க மாட்டான்.
மலர்தல்-22

பாட்டிம்மாவின் அறையை நோக்கி நகர்ந்தவனின் இதயம் வழக்கத்தை விட வேகமாக துடித்தது.
அறைக்கதவினைத் திறந்து கொண்டு உள்நுழைந்தவனுக்கோ என்றுமில்லாதவாறு இன்று அவ்விடம் அமைதியாக இருப்பதைப் போலத் தோன்றியது.
மஞ்சத்தில்..முதுகினை தலையணையில் சாய்த்த வண்ணம் சோர்வே உருவாக அமர்ந்திருந்தார் பாட்டி.
அவரின் பக்கத்தில் அடக்கமாட்டாத கண்ணீருடன் அவனது தங்கை பூஜாவும்,சித்தி மஞ்சரியும் நிசப்தமாக நின்றிருப்பதைக் கண்டான் அவன்.
அவ்வறையில் யாரோ ஒருத்தியைத் தேடி அர்ஜூன் மனோஹரின் விழிகளும் மெல்ல சுழன்றன.
அவள்?பாட்டிம்மாவை முதலுதவி சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய மீரா?அவளும் எங்கே என்று கள்ளத்தனமாகத் தேடியது அவன் ஹிருதயம்!!
அவளது இல்லாமையை மனத்திற்குள் குறிப்பெடுத்துக் கொண்டான் அவன்.மெல்ல பாட்டியின் அருகே விரைந்தான் அர்ஜூன் .
“பா..ட்டி” என்று முற்றிலும் உடைந்து போன குரலில் இவனை அழைக்க..மெல்ல விழிகளைத் திறந்தார் பாட்டி.
அவனைக் கண்டதும்.. கண்கள் இரண்டும் சொல்ல முடியாத வலியில் குளம் கட்டியது.
அவரது கண்கள் அவனில் தீராது பதிந்திருந்தது.
அவர் ஒரு வார்த்தை கூட பேசாதபோதும் அவரது பார்வை மிகவும் கனமாக இருந்தது. அவர் அவனைப் பார்த்துச் சிரிக்கவில்லை;பேசவுமில்லை.
கண்களில் நீர் மல்க பொறுக்கவேயாது வாய் திறந்திருந்தாள் இளையவள் பூஜா.
“எத்தன வாட்டி கால் பண்ணோம்.நீ ஏன்ணா எடுக்கல..?? பாட்டிக்கு மைல்ட் அட்டாக்காம்..ஏதோ ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸாம்..எதுனால அவங்களுக்கு ஸ்ட்ரெஸ் ?உன்னால தான் அவங்களுக்கு ஸ்ட்ரெஸ்..உன்னால தான் பாட்டிக்கு இப்படி ஆயிருச்சு..?” என்று தழுதழுத்த குரலில் அழுது கொண்டே பொங்கியிருந்தாள் பூஜா.
அவன் வந்த கையோடு..தன் மகள் ஒட்டுமொத்தப் பழியையும் அவன் மீது போடுவது பிடிக்காமல் போனது மஞ்சரி சித்திக்கு.
‘அவனால் தான் பாட்டிக்கு இந்நிலைமை’ என்பது உண்மை என்றானாலும்..அதை இப்படி பட்டுக்கத்தரித்தாற் போல மகள்..அர்ஜூனின் முகத்திற்கே சொன்னது பிடிக்கவில்லை.
அதனால்..அதிகாரத் தோரணையில் அதட்டினார் மகளை.
“பூஜா ஷூ..பெரியவங்க கிட்ட எப்படி பேசணும்னு தெரியாது?” என்று அடக்க முனைய..பொங்கும் எரிமலையும் ஆனாள் பூஜா.
“நீ சும்மா இரும்மா..காலையில் தான் பாட்டி எங்ககூட எவ்ளோ சந்தோஷமா ஓடியாடி ஷட்..டில் விளையாண்டாங்க..ஆனா இப்போ..ஓய்ந்து போய் படுத்திருக்கும் போது மனசு ஆறல” என்று தேம்பித் தேம்பிச் சொன்னவளின் மனமும் தமையனின் செயலால் புண்பட்டிருந்தது.
பூஜா கூறுவதும் உண்மை தான். பாட்டி மீதுள்ள கோபத்தில் அலைபேசியை விட்டெறிந்தான் .சரி.ஆயினும் தொலைபேசிக்கு வந்த சித்தியின் அழைப்பை ஏற்றாவது பேசியிருக்கலாமே?
பூஜா ..தன் பேராண்டியை வைவதைத் தாங்க முடியாத சாரதா பாட்டி..இயலாத நிலையிலும் .. குரலைச் செருமிக் கொண்டு பேசலானான்.
“அவன்..நான் கால் பண்ணி எடுக்கலேன்னா அதுக்கு பின்னாடி ஆயிரம் காரணம் இருக்கும். அதுக்காக என் பேரனை நிற்க வைச்சு கேள்வி கேட்கறதை நான் பார்த்துட்டிருக்க மாட்டேன்..” என்று பொதுப்படையாக விட்டத்தைப் பார்த்த வண்ணம் சொன்னவரின் த்வனியிலும் தொக்கியிருந்தது அதீத அன்பு.
அதைக் கேட்டு பூஜாவோ, ‘ஆமா ஊருலகத்தில இல்லாத பேரன்..உங்க பொல்லாத பேரன்’ என்று திட்டிக் கொண்டாலும்..வெளியில் முறுக்கிக் கொண்டு நின்றாள் .
தன் இளைய மருமகளைப் பார்த்த பாட்டியோ, “மஞ்சரி..சின்னவள அழைச்சுட்டுப் போ…நான் மனோ கூட கொஞ்சம் பேசணும்..” என்று சொன்னதும்..அதை மீறத் தான் முடியுமா ?.
ஏனென்றால் இங்குள்ள அனைத்தும் அவருடையது அன்றோ?. அவரது கடின உழைப்பால் உருவானது.
இந்த வீடு; குடும்பம்;இமயம் போன்ற வளர்ச்சி கொண்ட ஹிமாலயா தொழிலகங்கள்??அனைத்தும் அவருடையது.
இந்த வீட்டிலுள்ள ஒவ்வொரு செங்கல்லும் கூட..அவரது கடின உழைப்பைச் சொல்லும்!!
மஞ்சரி சித்தியும் ,இளையவள் பூஜாவும் அங்கிருந்து வெளியேறியதும்..அறை அவனும்,அவருமெனத் தனிமைப்பட்டுப் போனது.
அப்பேர்ப்பட்டவரின் மீது வீட்டிலுள்ள அனைவருக்கும் தனிப்பாசமும்,இன்னும் ஏன் மரியாதையும் கூட உண்டு.
இருப்பினும், அத்தனையையும் ஒற்றை விரல் நுனியில் ஆண்டவருக்கு..தன் பேரனை ஆள முடியவில்லையே ?
சோர்ந்து போய் கண்ணயர்ந்திருந்த சாரதா பாட்டியைக் கண்டு ..அவனது மார்பின் ஆழத்தில் விசித்திரமான சித்திரவதை தோன்றியது .அது அவனை இறுக்கிக் கொண்டே இருந்தது.
அது என்னவென்று அவனுக்குமே சரியாகச் சொல்லத் தெரியவில்லை.
“மனோப்பா” என்று அழைத்தவரின் குரலில்..வாஞ்சையுடன் தன் அன்புப் பாட்டியை நோக்கி நிமிர்ந்தான் அவன்.
“எனக்கு இருந்ததெல்லாம் ஒரே ஆசை தான்ப்பா..உன் கல்யாணத்தை இந்த கட்டை சாயுறதுக்கு முதல் கண்ணால பார்க்கணும்ன்றது தான்..ஆனா அதுக்கு முன்னாடியே கண் மூடிடுவேன் போல” என்று சொன்ன பாட்டியின் கூற்றில் இதயத்தில் எரி அமிலம் ஊற்றினாற் போல வலியை உணர்ந்தான் அர்ஜூன்.
“இல்ல..நீங்க இன்னும் நூறு வருஷம் நல்லா இருப்பீங்க ..” என்று மனோத்துயர் தாங்காமல் சொல்ல..பாட்டியில் நமுட்டுச் சிரிப்பு அரும்பியது .
“நீயும் காதலிக்க மாட்டேங்குற..? நானே உனக்கு பொண்ணு பார்த்தாலும் வேணாங்குற?? அப்றம் எ..எப்படி என்னால நல்லா இருக்க முடியும் சொல்லு?” என்று கேட்க..அர்ஜூன் மனோஹரிடம் பதிலில்லை!!
நடுநிசி கடந்த நேரத்தில்..சாளரம் தாண்டி வந்த கூதல்க்காற்றும்.. அவனது மனதில் சுழன்றடிக்கும் வெம்மையை தணிக்கவேயில்லை.
அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்?இப்போது அவன் சம்மதம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா??
ஆனால் பாட்டியோ..இப்போது அவனை வற்புறுத்தும் நிலைமையை கடந்துவிட்டிருந்தார்.
“இனியும் நான் உன்னை வற்புறுத்துறதா இல்ல..இனி உன் வாழ்க்க..உன் இஷ்ட்..” என்று நொந்து போன குரலில் சொல்லிக் கொண்டிருந்த கணம் இடையிட்டான் நாயகன்.
“மீராவுக்கு..இதில் சம்மதம்னா..எனக்கும் சம்மதம் பாட்டி!” என்றிருந்தான் அவன்.
ஒரு சில கணங்கள் தன் பேரன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதை நம்பமாட்டாமல் விழிகள் விரிய நின்றார் பாட்டி.
“என்னப்பா சொல்ற?நா..கே..ட்டத் உண்மை தானா?” என்பது போலத் திகைத்துக் கேட்க..மீண்டும் அதையே சற்று உரத்த குரலில் சொன்னான் அவன்!!
“மீராவுக்கு.. இதில் சம்மதம்னா..எனக்கும் சம்மதம் பாட்டி!!”
அவன் அளித்த ஒற்றை சம்மதத்தில் அழுந்த மூடியிருந்த அவரது இதழ்களும் பூங்கொத்தைப் போல அழகாக விரிந்து மலர்ந்தது.
இருபது வயது இளமையானது போல உணர்ந்தார் பாட்டி. தான் இறப்பதற்கு முன் ,அவர் கண்டெடுத்த பொன்மானான மீராவுடன் ..அவனை இணை சேர்ப்பதில் காயகல்பம் உண்டது போல தேஜஸ் கூடியதாக உணர்ந்தார் பாட்டி!!
மலர்தல்-23

அந்நேரம் பார்த்து.. அறைக்குள் இலேசாகத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த மீரா.. அவன் தன் பாட்டிம்மா அருகில் அமர்ந்திருக்கக்கூடும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
சற்றே புருவங்கள் மேலுயர நின்றவள்..அங்கே அவனொருவன் இருப்பதைக் கண்டுகொள்ளாமல் நேரே பாட்டிம்மாவிடம் தான் விரைந்தாள்.
அவனருகே செல்லச் செல்ல அவனில் நின்றும் வீசிக் கொண்டிருந்த சாராயநெடியைக் கண்டு முகம் சுளிக்கவும் செய்தாள் .
“பாட்டிமா.. டேப்லெட்ஸ்லாம் போட்டுக்கிட்டீங்களா..கொஞ்சம் ப்ரஷர் செக் பண்ணிடலாமா?” என்றபடி வந்தவள்..பாட்டியின் அருகே அமர்ந்து இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கவும் முனைந்தாள்.
மீராவுக்கும் கூட தன் அன்பான பாட்டிம்மாவின் இந்நிலைமைக்கு அவன் காரணம் என்ற ஆற்றாமையும் ,சீற்றமும் இருக்கத் தான் செய்தது.
காதில் நின்றும் ஸ்டெதஸ்கோப்பை கழற்றியவள் முகமும் பெரிதும் கலங்கியிருப்பதை அவனும் அவதானித்தேயிருந்தான்.
அவளது முகத்தில் கலக்கமும் ஏன்??பாட்டிம்மாவை எண்ணியா கலங்குகின்றாள்?
அவர் மீது நிஜமாலுமே ஆழியிலும் ஆழம் கொண்ட பாசம் வைத்திருக்கிறாளா?என்று உள்ளுக்குள் வியப்புடன் எண்ணிக் கொண்டவன்..அவளையே பார்த்திருந்தான்.
“ப்ரஷர் நார்மல் தான் பாட்டிம்மா” என்று கருவியை மடித்த வண்ணம் கிளம்ப ஆயத்தமானவளை .. விடாமல் கையைப் பற்றிக் கொண்டார் பாட்டி.
“எங்கே போற..இப்டி வா..உட்காரு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்று அவளைப் பற்றி தன்னருகே அமர வைத்தார் பாட்டி.
அவருக்கு இடது பக்கத்தில் அவன்!! வலதுபக்கத்தில் அவள் என இருவரும் இரு துருவங்களாக உட்கார்ந்திருந்தனர்.
அவளுக்கோ அவனை வைத்துக் கொண்டு என்ன விஷயம் பேச வேண்டியிருக்கிறது என்று உள்ளம் முழுவதும் தயக்கம்;நாணம்;சங்கடம்.
அவருடைய கை டாக்டர் பெண்ணின் கையை வருடியது.அவருடைய கண்கள் அவளையே ஆதுரத்துடன் நோக்கின.வார்த்தைகள் பாசத்தோடு வெளிவந்தன.
பாட்டிம்மா அவள் மீது பூண்டிருக்கும் அன்பை கண்கூடாகப் பார்த்திருந்தவனுக்கோ உள்ளுக்குள் சிறு பொறாமைத்தீயும் கனன்றது.
“மீரா.. நான் கண்ணை மூட முதல் ஒரு ஆசை .அது நிறைவேறாம போயிருமோன்னு பயமா இருக்கு”
“என்ன ஆச பாட்டி..தாராளமா சொல்லுங்க”
பாட்டிம்மா தன் தலையை அடமானம் வைக்கக் கேட்பது தெரியாமல்.. கேட்டிருந்தாள்.
“மீரா..நீயும் என் குடும்பத்துல ஒருத்தரா ஆகணும்..மகளா இல்ல..மருமகளா. இது தான் ஆசை. என் பேரனை கட்டிக்கறீயாமா?” என்று பாட்டி கேட்ட தினுசில்..மீரா மூச்சுப் பேச்சற்று உறைந்து போனாள்.
தன்னை அருகிருத்தி..தலை தடவிய பாட்டி..இப்படி கேட்பார் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஆகையால், பாட்டியின் கேள்விக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது கூட தெரியவில்லை .
பாட்டி ஏதோ விளையாட்டுக்கு கேட்கிறார் என்று எண்ணிக் கொண்டவள்..வலிய வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் அவரைப் பார்க்க..அவளது உள்ளம் அச்சொட்டாகப் படித்தார் பாட்டி.
“நான் சீரியஸா கேட்கறேன் மீரா..என் பேரனை கட்டிக்கிட்டு..இந்த வீட்டு மருமகளா வந்துட்றீயாம்மா?” என்று மீண்டும் அவர் கேட்க..அவளாலும் என்ன பதில் கொடுக்க இயலும்??
பாட்டியின் தீர்க்கமான விழிகள் அவளையே பார்த்திருந்தன.இதற்கு முன்பு யாருமே அவளைப் பார்த்திராத பார்வை அது.
தாயிடம் மிட்டாய் கேட்கும் குழந்தை..தாய் மிட்டாய் நிச்சயம் தருவாள் என்று பார்க்குமே ஒரு பார்வை!!
நம்பிக்கையும் ,அன்புமாய்!!அப்படியொரு அர்த்தபுஷ்டியான பார்வை அது !
அவளையே பலவிதமான உணர்வுகளுடன்..அமைதியாக வேடிக்கைப் பார்த்திருந்தான் அர்ஜூன் .
பாட்டிம்மாவின் இந்த உறுதியான நம்பிக்கைக்கு தகுதியானவள் தானா இவள்?
அவரது அன்புக்கு முழுமுதல் பாத்திரமானவள் தானா இவள்??
அவர் சொன்ன அற்புதங்கள் நிகழ்த்தப் போவதற்கு தகுதியானவளும் இவள் தானா?
பல்லாயிரம் கேள்விகள் அவனுள்
அவள் தாய்,தந்தை ,சகோதரர்கள் என்னும் உறவுகள் அற்று ..கோயம்புத்தூரின் ஓர் மூலையில் வளர்ந்த ஓர் அநாதை.
அரச சலுகையில் டாக்டர் பட்டம் பெற்றவள்!!அதைத் தவிர அவளிடம் சொல்லிக் கொள்ள வேறெந்த தகுதியும் இல்லை .
மீராவுக்கும் என்ன தோன்றியதோ?விழிகளைத் திருப்பி வெடுக்கென்று அவனைத் தான் பார்த்தாள்.
‘அர்ஜூன் மனோஹர்!’.இதுவரை அவளிடம் ஏதும் பெரிதாக வாய் விட்டுப் பேசியதில்லை.அரிதாகவே அவன் அவளை நிமிர்ந்து பார்ப்பதும் உண்டு.அதேசமயம் கொடூரமானவனாகவும் தெரியவில்லை .
ஆனால் ஏதோ..’என் அகம் தாண்டிப் பார்க்காதே’ என்பது போல இரும்புத்திரைப் போட்டது போல இறுக்கமான தோற்றம் அவளுள் உறுத்தியது.
அவள் எப்படி… அவனைப் போன்ற ஒருவனை திருமணம் செய்து கொள்ள முடியும்?
“நா..நான் ..எப்டி?” என்று திக்கித் திணறி உரைத்தவளின் இதயம் ‘சாரதா பாட்டி ஏன் என்னை தேர்ந்தெடுத்தார்?’என்று குழப்பமடைந்தது.
அவர் வீட்டு மருமகளாவது என்பது ஒரு வரமா?சாபமா? தெரியவில்லை அவளுக்கு .
சொற்ப விநாடிகளுக்குள் அவள் இதயத்தில் ஆயிரமாயிரம் குழப்பங்கள் முகிழ்க்க..அவள் கண்களில் எட்டிப்பார்த்தது உவர்நீர்.
தாய்க்கு நிகராக தன்னில் பாசம் செலுத்தியவரின் மொழிகளை எங்ஙனம் தட்ட முடியும் ?
கோவை கிராமத்தில் நின்றும் வந்தவளின் விதி இது தான் என்று முன்னரேயே எழுதப்பட்டு விட்டதா?
அவளுக்கு ஒன்றே ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்திருந்தது.அது பாட்டிம்மாவின் இந்த செயல்பாடுகளுக்குப் பின் கண்டிப்பாக எந்தவிதமான சுயநலங்களும் இல்லை என்று மாத்திரம் ஆணித்தரமாகப் புரிந்தது.
கண்கள் கலங்க ஏறிட்டவளோ, “எ..என்னை பாசக்கூண்டில் நிறுத்தி வைச்சு சம்மதம் கேக்குறீங்க பாட்டி?நான் என்ன பதில் சொல்லட்..டும்?” என்று தழுதழுத்தாள்.
அவர் கை அவள் உச்சந்தலையை ஆயாசமாக வருடியது.
“அப்படியில்லைம்மா.உன்னைப் போல ஒருத்தி என் பேரனுக்கு மனைவியா வரணும்னு நினைக்கறேன்.” என்றவர்.. அத்தோடு விட்டு விடவில்லை.
“நான் வேணும்னா..என் பேரனைக் கட்டிக்கிட்டா இந்த மாளிகை போல வீடு ..உன்னதாகும் சொல்லலாம்..பட்டு ,வைரம் ,வைடூரியம் எல்லாம் கிடைக்கும்னு ஆசைகாட்டி உன்னை மருமகளா வான்னு கேட்கலாம்” என்று அவர் சரியாகத் தொடங்கி முடிக்கக்கூட இல்லை.
அவரின் பேச்சில் புருவமத்தியில் முடிச்சு விழ.. “அதுக்கெல்லாம் ஆசைப்படுவேன்னு நீங்க நினைக்கறீங்களா பாட்டி?” என்று அவர் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்ற வருத்தத்துடன் கேட்டாள்.
இவனோ..அவள் அரங்கேற்றுவது யாவும் நாடகம் என்பது போல தன் பரந்து விரிந்த மார்புக்குக் குறுக்காக இருகைகள் கட்டிய வண்ணம் அனைத்தையும் பார்த்திருந்தான் ,குறுக்கிடாது.
அவனைக் கட்டிக் கொண்டால் இந்த சொத்து விரும்பியோ,விரும்பாமலோ அவளதும் ஆகும் அல்லவா?அதுக்குப் பிறகும் எதற்கு இந்த நாடக வார்த்தைகள் என்ற எண்ணம் அவனுக்கு.
பாட்டிம்மா பேரனின் மனவோட்டம் அறியாது பேசினார் .அவளை இதயத்தில் நின்றும் உய்த்தறிந்தவராகப் பேசினார்.
“உன் குணம் புடம் போட்ட சுத்த தங்கம்னு தெரியும்மா .. அதனால தான் பசப்பு வார்த்தைகள் பேசாம நேரடியா கேட்கறேன்.நீ என் வீட்டு மருமகளா வரணும் கேட்கறேன்.சொத்த பெருசா நினைக்கற மருமகள் எனக்கு வேண்டாம்..மனித மனங்களை..அன்பை ..காருண்யத்தை பெருசா நினைக்கற உன் போல பொண்ணு தான் வேணும்..நீ தான் வேணும்”
பாட்டிம்மாவின் வார்த்தைகள் அவளது காதுகளில் ஒரு மந்திரம் போல எதிரொலித்தது
அர்ஜூன் மனோஹரின் பாரியாளாக அவள்!!அவனுடன் ஒரு திருமணம்.!!
அவள் பெருமூச்சு விட்டாள். எவ்வழியிலேனும் தன் சம்மத்தை வாங்காமல் பாட்டி விட மாட்டாள் என்றும் புரிந்துகொண்டாள்.
“மீரா.. எல்லாமே ஃபாஸ்ட்டா நடக்கறது போல உனக்கு தோணலாம்..ஆனா உன்னை சந்திச்ச முதல்நாளே முடிவு பண்ணது தான் இது..ஆனா உன் சம்மதம் கேட்க நாழியாயிருச்சு..உன்கிட்ட ஏதோ இருக்கு.. அது கண்டிப்பா என் பேரனை பூரணப்படுத்தும்.. அதுதான் இந்தக் குடும்பத்திற்கும் தேவை.”
பாட்டி சந்தித்த முதல்நாளே மருமகள் என்று முடிவெடுத்து விட்டதாகக் கூறுவதன் அர்த்தம் யாதோ ?
எனில், இங்கே அழைத்து வந்தது கூட இந்தக் காரணத்திற்காகத் தானா?
ஏதோ தொண்டையில் வந்து அடைக்க ,எச்சில் கூட்டி விழுங்கினாள் மீரா.
அவன் தன்னையே துளைக்கும் பார்வை பார்த்திருப்பது புரிந்தாலும் ,மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை அவள்.
“ஆனால் பா..பாட்டி… நான்… நான் இங்கே எப்படி இருக்க முடியும்..இங்கே என்னால பொருந்திப் போக முடியுமா ?எ.. எனக்குத் தெரியல.”
இளையவளின் பதற்றத்தை உணர்ந்தாற் போல..பாட்டி மீராவின் கன்னத்தை மெதுவாகத் தட்டினார்.
பேரனுக்கு சொன்னதையே மாறாமல் இவளுக்கும் சொன்னார் பாட்டி.
“மனமுண்டானால் மார்க்கமுண்டு மீரா..அதுலாம் அழகா பொருந்தும்.ஆனா நான் உன்னை வற்புறுத்தல..உன் மனசுக்கு பட்டத சொல்லு”
பாட்டிம்மா பேசினாலும்..அர்ஜூனின் கண்கள் அவளையன்றி பிறிதொன்றும் அவ்வறையில் இல்லை என்பது போலப் பார்த்திருந்தது.
அவளது கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது.இருந்தாலும் நீர் கண் இமைகளைத் தாண்டி வழிந்து விடாத வண்ணம் கண்களைச் சிமிட்டிக் கொண்டாள் அவள்.
பேரனோ.. உள்ளுக்குள் பாட்டியிடம், “வற்புறுத்தல வற்புறுத்தல சொல்லி சொல்லி காய்நகர்த்தி செக்மேட் வைக்க எண்ணமா பாட்டி’ என்று எண்ணிக் கொள்ளலானது .
அந்த நேரத்தில், முதல் முறையாக, அவளுக்குள் ஏதோ கிளர்ந்தெழுவதை உணர்ந்தாள் மீரா.
ஏதோ ஒரு உத்வேகம்!! அவருக்காக அவர் முகத்தில் ஆனந்தத்தைக் காண்பதற்காக எதையும் செய்யும் உத்வேகம் !!
மனதுக்குள் உறுதியான முடிவு எடுத்துக் கொண்டவளோ.. “ அதில் தான் உங்க சந்தோஷம் இருக்குன்னா..உங்க இஷ்டம் பாட்டி” என்று சம்மதத்தைத் தெரிவித்திருந்தாள்.
அவர் வதனத்தில் ஆனந்தம் காண..இவள் இதயத்தில் தன் ஒட்டுமொத்த ஆனந்தத்தையும் இழக்கப் போவதறியாமல் சம்மதம் தெரிவித்திருந்தாள் அவள்.
அதைக் கேட்ட பாட்டி.. மகிழ்ச்சிக் கூத்தாடியவராக.. “என் கண்ணு” என்று அவளை வாஞ்சையுடன் அணைத்து ..மீராவின் நெற்றியில் முத்தம் வைக்கவும் செய்தார்.
ஆனால்,அர்ஜூன் மாத்திரம்..இதழ்களில் ஏளனப்புன்னகை ததும்ப நின்றிருந்தான்.
‘மாய்மாலக்காரி..நீ எப்படியும் நோ சொல்ல மாட்டேன்னு எனக்குத் தெரியும்டீ.. இருக்குடீ உனக்கு’ என்று மனதிற்குள்ளேயே கங்கணம் கட்டிக் கொண்டான்.
பாட்டிக்காக திருமணத்துக்கு சரியென்ற அவள் மனமும், ‘சொத்து சுகத்துக்காக ஓகே சொன்னாள்’ என்று அவள் மீது தவறெண்ணம் பூண்ட அவன் மனமும் எப்புள்ளியில் இணையும்?
உரசி மலர்த்த வருவான் .

(இதோ அடுத்தடுத்த யூடிக்களுடன் ஓடி வந்துட்டேன்.❤️❤️இதே போல நிறைய கமெண்ட்ஸ் வந்தால்..சத்தியமா மின்னல் வேகத்தில் யூடிக்கள் வரும்.ஓகே 😘😘)

battery bet.
Your way of writing is too good. Waiting for your next episode
What’s up to every one, the contents present at this web page are really remarkable for people knowledge, well, keep up the good work fellows.
Ремкомплекты FINI
Nice
Pictures are good
ремонт телевизора тошиба сервисный центр [url=https://remont-toshiba-tv-moskva.ru/]ремонт телевизоров toshiba[/url] – профессиональный ремонт с гарантией качества.
Nice.next udi pls
Interesting next epi pleassssss
Sister yesterday i saw 40 more episodes, but today I am not seeing that episode,
Please help me, 🙏 how to read these episodes
Sister yen intha story la update ethume illa…Delete pannitingala .Na romba wait panna novel ithu……..Pls thirumba update pannunga pls
Today I am sharing the link of Tamil Aunty Whatsapp Group Link with all of you, if you were searching for these Group Link for a long time but have not found it yet, then today I am going to share these Group Link with all of you. So go quickly and check all the group links and use them as per your need.
If you all want Tamil Aunty Whatsapp Group Links then you will find all the groups below, in which you will also find very cute and beautiful Auntys who will talk to you and remove your loneliness. In this group, you will find many Aunty to whom you can tell about the problems coming in your life and they will also try to solve your problems and will also teach you how you can talk to the Aunty of Tamil properly.
Tamil Aunty Whatsapp Group Links
Latest Tamil Aunty Group Link
Tamil Aunty Latest Pics Group
Join Tamil Aunty Group Link
Tamil Aunty Contact Group Link
School Girl Whatsapp Group Links
Tamil Aunty Whatsapp Group
Tamil Aunty Best Group Link
Tamil Aunty News Group Link
College Girl Whatsapp Group Links
Tamil Aunty Photo Gallery Group
Tamil Aunty Number Group
Tamil Aunty Discussion Group
natural anabolic steroids
References:
md.swk-web.com
References:
New york casino las vegas
References:
https://www.pethouse.sk/produkt/hydratacny-kondicioner-tpl-pure-nature-5v1-pre-psy-a-macky-400-ml/
References:
What are steroids used for in the body
References:
https://www.tuttogossipnews.it/2025/04/20/fiorello-indagato-per-diffamazione-cose-successo/
References:
Ripper fair go casino slots verification process
References:
Online funny games
References:
https://casino-online-for-free.online-spielhallen.de/
References:
Krefeld
References:
https://vip-online-casino.online-spielhallen.de/
References:
Potsdam
References:
https://pragmatic-casino.online-spielhallen.de/
References:
Remscheid
References:
https://magnum-casino.online-spielhallen.de/
References:
Osnabrück
References:
https://n1-bet-casino.online-spielhallen.de/
References:
Hialeah casino
References:
https://graph.org/Crown-Perth-Poker-Rake-04-27
References:
Pink floyd live in pompeii
References:
https://graph.org/What-Casino-Pays-Out-Immediately-04-27
References:
Dice odds cgi.www5b.biglobe.ne.jp
References:
Trump casino winesandjobs.com
References:
Ruby fortune casino syq.im
References:
Pinnacle casino git.apextoaster.com
References:
Tropicana laughlin online casino Rooli Casino
References:
Verde Casino Freispiele vulkan vegas freispiele
References:
Novoline Slots online bestes casino ohne 5 sekunden regel
References:
Beste online casino casino ohne einzahlung