ஆசை-6
அன்று!! ஐந்து வருடங்களுக்கு முன்பு !!
பெட்டகத்திற்குள் இருக்கும் டிராகன் முட்டை உடைக்கப்பட்டு ,அதிலிருந்த அவனது உயிர் .. டிராகன் இளவரசனான அவனிடமே போய் சேர்ந்து விட்டிருந்த கணப் பொழுது அது.
நம் பூமி தாண்டி..வானம் தாண்டி..பால்வெளி வீதியில் உள்ள ,அவனது டிராகன் உலகத்தில்..!!
சட்டென்று கருமேகங்கள் வந்து சூழ்ந்து கொண்டன.கடும்மழை பெய்யப் போவது போல.. வானிலையும் மாறத் தொடங்கியது .
பெருந்திரள் மேகங்கள் இரண்டு உராய்ந்து கொண்டதில்..இதயமெல்லாம் கிடுகிடுத்து நடுங்கும் வண்ணம் பேரிடியும் இடித்தது.
அக்கணம் வீசிய சூறைக் காற்றுக்கு அவ்வுலகத்திலிருந்த சிவப்பு,நீலம்,மஞ்சள் போன்ற வண்ணத்தினாலான வண்ண வண்ண மரங்களும் கூட..அங்குமிங்கும் ஆடத் தொடங்கின.
இன்னும் சில தாவரங்களின் கிளைகளும் முறிந்து வீழ்ந்தன.
வானத்திலோ..தன் இராட்சத இறக்கைகளை அடித்து அடித்து பறந்து கொண்டிருந்த டிராகன் ஒன்று..அசம்பாவிதம் நேரப் போவதை முன்கூட்டியே உணர்ந்தது போலும்.
பெருங்குரலில்.. “ஆஆஆஆஆ!!”என்று கத்திக் கொண்டு ..தன் குகையை நோக்கி பறந்து..மறையத் துவங்கியது.
அக்கணம் அவ்விடத்தின் மத்தியில் விஸ்தாரமாக அமைக்கப்பட்ட மாளிகையின் ..தனியறை மண்டபம்!!
அங்கே நடுமையத்தில் அமைக்கப்பட்டிருந்த தன்னறையின் சிம்மாசனத்தில்.. அமர்ந்திருந்தான் ஓங்குதாங்காக வளர்ந்திருந்த ஒருவன்!!
அவன் தலையிலே..சிறிய, கரிய டிராகன் சுற்றுவது போல சிலை கொண்ட கிரீடம் அணிவிக்கப்பட்டிருந்தது.
பார்ப்பதற்கு.. டிராகன் உலகத்தினையே ஆளும் இராஜ க்ஷத்திரியனைப் போல இருந்தது..அவன் தோற்றம்.
காலநிலை மாறுவது கண்டு..இந்த பச்சை நிறத்திலிருந்த டிராகனான் அவன்..எழிலன்!!
இருக்கையில் நின்றும் பதறியெழுந்து..உப்பரிகை வழியாக வானத்தை விழிகள் விரிய பார்த்தான்.
அதேகணம் இரண்டாவது இளவரசே ஆசனத்திலிருந்து எழுந்தது கண்டு..தானும் தன்னாசனத்தில் நின்றும் பதறியெழுந்தார்..எழிலனின் ஆஸ்தான ராஜகுரு.
“அவன் விடுதலையாகிட்டான்.. விடுதலையாகிட்டான்!!!”என்று ராஜகுரு அருள் வந்தது போல தன் கண்மை அஞ்சனம் பூசப்பெற்ற கண்கள் விரித்துச் சொன்னார்.
டிராகனே ஆயினும் மனித உருவில் இருந்த இரண்டாவது இளவரசனான எழிலனோ..இடிக்கும் வானத்தை அச்சத்துடன் பார்த்த வண்ணம்.. ஆவேசத்தில் உழன்றான்.
ஓரெட்டில் திரும்பி.. தன் ராஜகுருவின் தோள்பற்றி உலுக்கலானான் ஆக்ரோஷத்துடன்.
“எப்டி.. எப்டீஈஈ.. ??அவன் உயிரை டிராகன் முட்டைக்குள்ள அடைச்சு.. மனுஷங்க வாழ்ற பூமியில புதைச்சா.. திரும்ப வர மாட்டான்னு சொன்னீங்களே?? இந்த அரியணையும்,அரசாட்சியும் எனக்கு தான்னு சொன்னீங்களே!! இ.. இது எப்படி சாத்தியம்? எப்டீஈஈ!!” என்று கேட்டான் எழிலன்!!
எழிலன்?? டிராகன் அரசரான தேவ்வர்மன் சக்கரவர்த்திக்கும்,டிராகன் அரசியான ஷீலாவுக்கும் பிறந்த இரண்டு ஆண்மகவுகளில் இரண்டாமவன்!!
எனில்,மூத்தவன்?? அவன் தான் ,நம் புதினத்தின் நாயகன் ஆதித்திய வர்தன்!! இந்த அரசாட்சிக்கு உரியவன்!!
ஆனால் அரசாட்சிக்குரியவன்..டிராகன்களை வம்பிழுத்து பெரிதும் அட்டூழியம் செய்து திரிய.. அதற்கு தண்டனையாக, அவன் உயிரை முட்டைக்குள் அடைத்து பூமியில் புதைத்து விட்டிருந்தனர் இந்த ராஜகுருவும்,அவன் தம்பி எழிலனும்!!
ராஜகுருவோ.. தங்கள் இளவரசரை ஒரு கணம் பார்த்தவராக..மீண்டும் தரையில் பார்வை பதிக்கலானார்.
“அது தான் எனக்கும் புரியலை இளரசரே.. பூமின்றது மனுஷங்க வாழ்ற இடம் மட்டுமல.. பல அற்புத சக்திக்கள் நிறைந்த இடம்.. அப்டி ஏதோ ஒரு அற்புத சக்தி கைப்பட்டு.. டிராகன் முட்டை உடைந்திருக்கணும்”என்று தன் மாய சக்தி அறிவுக்கு எட்டியதைச் சொன்னார்.
அதைக் கேட்டு, டிராகன் எழிலனின் ஆக்ரோஷமும், கோபாவேசமும் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது.
“இல்ல.. இல்ல.. இல்ல.. விட மாட்டேன்.. அவன் திரும்ப டிராகன் உலகத்துக்கு வந்துரக்கூடாது ராஜகுரு.. வந்துரவே கூடாது” என்று தன் முகம் ரௌத்திரத்தில் சிவக்கக் கத்தினான் டிராகன்.
“பயப்படாதீங்க அரசரே.. முட்டைய திறந்த மானிடனுக்கு.. இப்போ ஆதித்திய வர்தன் அடிமை. ஆதியோட எஜமானன் மனசு வைச்சு.. போன்னு சொல்ற வரை ஆதித்திய வர்தனால் நம்ம உலகத்துக்கு வர முடியாது.. விடுதலையும் கிடையாது.. அவன் சக்தி அறிந்த யாரும்.. அவனை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுர மாட்டாங்க. நீங்க பதற்றப்படாம இருங்க அரசரே..அதுக்குள்ள ஏதாவது பண்ணி.. ஆதியை நிரந்தரமா அழிச்சிடலாம்” என்று சொல்லியும் அடங்கவில்லை எழிலனின் மனம் .
“அதுவரை என்னால காத்திருக்க முடியாது ..என் அடியாள் கருடன் எங்கே..கருடாஆஆஆ!!” என்று எழிலன்.. ஆக்ரோஷத்தில் கத்த மறுகணம்..பவ்யமாக தன் எஜமானனின் முன் தோன்றினான் கருடன் என்னும் அடிமை டிராகன்!!
“இதோ வந்துட்டேன் என் இளவரசே” என்று நெஞ்சில் கைவைத்து தலைதாழ்த்திக் குனிந்து..தன் எஜமானனை வணங்கி நின்றான் கருடன்!!
“ நீ என்ன பண்ணுவீயோ ஏது பண்ணுவீயோ தெரியாது.. ஆனா ஆதித்யன் கதைய முடிச்சுரணும்.. இனி அவன் திரும்ப டிராகன் உலகத்துக்கு வந்துரக்கூடாது..” என்று கொலைவெறி கண்களில் தெறிக்க கோபாவேசத்துடன்..கல்மண் தெரியாத ஆக்ரோஷத்துடன் விழிகள் சிவக்கச் சொன்னான் எழிலன்!!
ஆதியைக் கொல்ல இன்னொரு டிராகனை ஏவி விடலானான்..இந்த எழிலன்.
மீண்டும் நெஞ்சில் கைவைத்து ..தலை தாழ்த்திய கருடனோ.. “உங்கள் சித்தம் என் பாக்கியம்.அப்படியே ஆகட்டும் இளவரசே!!”என்று வணங்கியவன்..தன் மனித உருவில் நின்றும் டிராகன் உருவத்திற்கு மாறியவனாக,காற்றைக் கிழித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தான்,நம் பூமியை நோக்கி.
தன் சொந்த தமையனைக் கொல்ல அடியாள் அனுப்பிய பின்னும் கொஞ்சமும் வஞ்சம் தீராமல்.. வெஞ்சினத்தீயில் உழன்றவன்..ஒரு இருப்பில் இல்லாமல் ஆர்ப்பரித்தது.
“கூடாது..கூடாது ..ஆதித்தியன் இங்கே வந்துரவே கூடாது” என்று திரும்பத் திரும்ப அதையே சொல்லிய வண்ணம் அங்குமிங்கும் ஆக்ரோஷமாக வீரியத்துடன் நடந்து கொண்டேயிருந்தான் அவன் .
டிராகன் இளவரசனான எழிலனை..அமைதிப்படுத்தும் வழிவகை அறியாது உழன்றார்..மந்திர, தந்திரங்கள் தெரிந்த ராஜகுரு.
ஆசை-7
அதே சமயம் பூமியில்!!
முட்டை அவள் கையால் உடைக்கப்பட்டதும், உயிர்ப்பெற்று வந்து ..அவள் புறமுதுக்குப் பின்னால் முழு மானுடன் தோரணையில் நின்றிருந்தான் தலைவன்.
தன் பின்னால் ஆஜானுபாகுவான உடல் தோற்றம் கொண்ட ஓர் ஆடவன் நின்றிருப்பதை அறியாதவளோ..அக்கணம் எதிர்பாராத வகையில் இவளும் திரும்ப.. அவனது பரந்து விரிந்த மார்பில் எக்குத்தப்பாக தன் நெற்றியையும் மோதிக் கொண்டாள்.
மோதலுடன் நில்லாமல்..இவளும் விசை தடுமாறி கைகளை அந்தரத்தில் ஆட்டிக் கொண்டு ,விழ முனைய.. இவனும் அவளைக் காக்கும் ஆபத்பாந்தவனாக உருமாறிப் போனானோ??
தன்னை டிராகன் முட்டையில் நின்றும் விடுவித்தவளாயிற்றே இந்த பேரழகுப்பெண்??
அவள் விழுந்து விடாமல் இருக்க..அவளது மெல்லிய இடையூடு கையிட்டு, அணைக்கட்டுவது போல அழுத்திப் பிடித்திருந்தான் அவன்.
அவள் விழாமல் இவன் தடுத்துப் பிடித்திருக்க..நாணாக பின்னோக்கி வளைந்த பொன்மேனியாளின் கண்கள்.. அவனைத் தான் ஆராயலானது.
எங்கிருந்து வந்தான் திடீரென்று ஓர் ஆண்மகன்? வியப்பில் இவளது அழகு நயனங்களும் விரிந்தன.
அங்கே தேகம் நீரில் சொட்டச் சொட்டாக நனைந்திருக்க நின்றிருந்த ஆண்மகன்.. இப்போது தான் அருகிருந்த நீர்வீழ்ச்சியில் நீராடி வந்தானோ??
அவன்..அவளது நயனங்கள் முன்பு நிற்கும் இராக்ஷசன்..அழகன் என்றாலும் அழகன்!! எந்த பத்திரிக்கை, தொலைக்காட்சி விளம்பரங்களிலும் கூட காணாத பேரழகன்!!
உண்மையில், எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லாதிருப்பவன் போல,அவனது முரட்டு அதரங்கள் கூட இளஞ்சிவப்பு நிறத்தில் இயற்கையாகவே சிவந்திருந்தது.
முன்பின் பரிச்சயமற்ற ஆடவன்.. ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்ட போது.. ஏறியிறங்கிய தோள்புஜங்கள்.. அது எத்தனை வன்மையானது என்பதை காட்டியது.
அவன் தன் முன்னே இருந்த பெண்ணவளைப் பார்த்து.. ஒரு நிமிடம் பிரமித்தாற் போல நின்றான். அவனும் ஏதோ நடமாடும் அதிசயத்தைக் கண்டாற் போல ஒரு கணம் நயந்து நின்றான்.
பின்பு தன்னை சுதாரித்துக் கொண்டு சுயம் தெளிந்தவன் , அவளை விழாமல் நிமிர்த்தினான். அவளது விழிகளுக்குள் ஆழ ஊடுருவி இதயம் வரை போய் வேவு பார்ப்பது போல இமையாமல் அவன் நோக்க.. அப்பாவி வெள்ளந்திப் பெண்ணுக்குத் தான் அவன் எண்ணம் யாவும் புரியவில்லை.
அவள் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த கணம்..நிரம்பவும் ஆளுமையுடன் ஒலித்தது அவன் குரல்!!
“நீ.. தானே..என்.. டிராகன் முட்டை உடைச்சு என்னை விடுவித்தது??”
அவன் தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல்.. ‘டிராகன் முட்டை.. விடுவிப்பு” என்று பேச ஒன்றும் புரியவில்லை கமல நயனீக்கு!!
இன்னும் அதிர்ச்சி மாறாமல் நின்றிருந்தவள்.. ஓரெட்டு பின்னடைந்தாள் அச்சத்துடன். எப்போதும் பிசிறு தட்டாமல் பேசுபவளுக்கு இன்று என்னானது?? அவள் பேசும் கணம்..என்றுமில்லாதவாறு இன்று .. அவள் நாவும் தந்தியடித்தன.
திக்கித் திணறிய குரலில் நயனோ, “ய.. யார் நீ.. நீஈ.. நீ..? எங்கிருந்து வந்த.. தி.. திடீர்னு” என்று தன் சுட்டுவிரலை அவனை நோக்கிக் காட்டி பயத்துடன் கேட்டிருந்தாள்.
தனியான அடர்ந்த காட்டில்.. இப்படி ஒரு ஆடவனை சந்தித்ததே பேரதிர்ச்சி என்றால், அவன் பேசப் பேச.. இன்னும் அதிர்ச்சி.
“என். என்ன பேசற நீ.. பிராந்தனா நீ?”என்று மேலதிகமாக அவன் ‘பைத்தியமோ’ என்றெண்ணிக் கேட்டும் வைத்தாள் அவள்!!
அவனோ..அவளை அழுத்தமான ஓரெட்டு எடுத்து வைத்து ,நெருங்கி வர.. அவளது அழகிய சுட்டுவிரல் அவனது பரந்த நெஞ்சினில் முட்டி நின்றது.
அவன் இன்னும் தன்னை நெருங்கி வராமல் இருக்க.. சுட்டுவிரலால் அணை கட்டினாள் நயன். .
“அங்கேயே நில்லு..டோன்ட் கம் குளோஸ் டு மீ..குளோஸா வந்தா..குளோஸ் பண்ணிர்வேன்டா!!”
அவள் சொன்னதும் நகராமல் நின்றவன்..தன்னைத் தானே ..அறிமுகப்படுத்திக் கொள்ளலானான்.
“நான் ஆதித்ய வரதன். டிராகன்கின் உலகத்தோட இளவரசன். இத்தனை காலமா..நான் இந்த முட்டையில தான் அடைபட்டு கிடந்தேன்.. நீ தான் என்னை விடுவிச்ச. அதனால இப்போலயிருந்து நீ தான் என் பாஸ்.”
அவன் தொடர்ந்து பேசிக் கொண்டே போக.. நயனீக்கு தான் விழி பிதுங்கிப் போனது.
மானுடர்களுக்கு பெரும்பாலும் கருவிழி அல்லவா இருக்கும்? இவனுக்கோ இரு விழிகள் தங்கக் கண்களாக மிளிர்ந்திருப்பதை அவதானித்தாள் நயன்.
அவள் மனம் நடுங்கியது. டிராகன்கின் உலகமா? டிராகன் இளவரசனா??இவனை முட்டையிலிருந்து நான் விடுவித்தேனா..?இப்போ நான் அவன் பாஸா?
இதென்னடா புதுசா ?இது விளக்கு தேய்த்து ஜீனி பூதம் கிளம்பியது போல. டிராகன் முட்டை உடைத்து டிராகனும் வந்ததுவோ??
மனித உருவத்தில் இருப்பவன் எப்படி டிராகனாக இருக்க முடியும்??
ஆனா அவன் தங்க கண்ணு.. அதை பார்க்கும் போது அவன் மனிதன் மாதிரி தெரியலையே??
லென்ஸ் போட்டுருப்பானோ?’ இவளுக்குள் அடுக்கடுக்காக பல்லாயிரக்கணக்கான கேள்விகள்!! பற்பல பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள்.
“ என்னய்யா?? பினாத்துற? தண்ணி கிண்ணி போட்ருக்கீயா?? இல்லை நீயும் என்னை மாதிரி டிரெக்கிங் தான் வந்தீயா? வந்த இடத்துல தலைகிலைல அடிபட்டிருச்சோ?அதனால பழசெல்லாம் மறந்துட்டீயா?”
நயன் சற்றே எம்பி எம்பி , அவனது பின்னந்தலையில் அடிபட்ட தடங்கள் இருக்கின்றதா என்பது போல எட்டி எட்டிப் பார்த்து வைக்கலானாள்.
“இல்லை.. நான் டிராகன் இளவரசன் தான்.இன்னையிலிருந்து நான் உங்களுக்கு அடிமை.. என் பேரு ஆதித்திய வர்தன். உங்க பேரு?’ என்று பவ்யமாகக் கேட்டு வைத்தாள் ஆள் தின்னும் பேரழகு டிராகன் அசுரன்.
‘பார்க்கவேற அழகா வேற இருக்கானே?’ என்று அவனது அழகை எண்ணிக் கொண்டிருந்த வேளை.. அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னான்.
“என் பேரு கமல நயனீ..” என்று அவள் முகமனுக்காக கைகளை நீட்டியிருந்தாள் கைகுலுக்கலுக்காக.
“நயனி??”என்று தன் எஜமானியின் நாமத்தை தனக்குத் தானே ஒருமுறை அவன் சொல்லிப் பார்த்துக் கொள்ள..தமிழ் ஆசிரியை போல திருத்தம் சொன்னாள் நயன்
“னி’ன்னு குறில் இல்ல.. ‘னீ’.. நெடில் நெடில்!!”என்று தமிழ் பாடம் வேறு எடுத்தாள் இவள்.
இவனும் மடந்தை பருவத்து பெண்ணின் நீட்டப்பட்டகைகளின் மேல் தன் கையை வைத்தது மாத்திரம் தான்.
அவன் தேகத்தில் விர்ரென்று ஷாக் அடித்தது போல ஓர் எனர்ஜியை உணர்ந்தான் ஆதித்ய வர்தன். இவ்வளவு காலமும் குகைக்குள் அடைப்பட்டுக் கிடந்தவனுக்குள்.. பெரும் சக்தியை.. பரிசளிப்பது போல இருந்தது அவளுடனான சிறு கை தீண்டல்!!
அதை உணர்ந்ததும்.. அவளது பொசுபொசுவென்று பஞ்சுப்பொதி போன்ற மிருதுவான கையை.. நித்தமும் கைகளில் பொத்தி வைத்திருக்கும் பெரும் வெறி எழுந்தது.
அவன் வெகுநேரமாகியும் தன் கையை விடுவிக்காமல் வருடிக் கொண்டிருப்பது போலத் தோன்ற..விசுக்கென்று வலிய இழுத்துக் கொண்டாள் அவனிடம் அகப்பட்ட தன் கையை.
இந்த இளம்பெண் தன் கைகளை அந்நியனுக்கு அதுவும் டிராகனுக்கு தருவாளா?? ஏக்கத்துடன் அவள் கைகளையே பார்த்திருந்தான் ஆதித்தியன் டிராகன்.
இவளோ அவன் தன்னால் ஃபுல் எனர்ஜி மோடுக்கு மாறியது அறியாமல்.. வளவளத்துக் கொண்டேயிருந்தாள்.
“என்னை எல்லாரும் நயன்னு கூப்டுவாங்க.. நீயும் என்னை அப்படியே கூப்பிடலாம்.. உன்னைப் பார்க்கும் போது என்னை விட பெரியவனாட்டம் தெரியுது. அதுனால இந்த வாங்க, போங்க பார்மாலிட்டீஸ்லாம் வேண்டாம்.. சும்மா வா, போன்னே கூப்பிடு என்ன?”
வளர்ந்த குழந்தை போல இவள் பேசப் பேச.. டிராகன் இளவரசனின் விழிகளும் சுவாரஸ்யத்தில் மிளிர்ந்தன.
அவனது டிராகன் உலகத்தில்.. அத்தனைவிதமான டிராகன்களும் கூட இவனைக் கண்டால் அஞ்சி நடுங்கும். அதிலும், டிராகன் முட்டையிலிருந்து வெளிப்படாத குட்டி டிராகன் கூட அலறும்.
ஆனால், இந்த மானுடப்பெண்.. இவனது விழிகளுடன் விழி சேர்த்து உரையாடுவது புது மாதிரியான உணர்வைக் கொடுத்தது.
அதிலும் அவளது மெல்லிய கை தீண்டலுக்காக.. அவளிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து ,காலம் பூராக அவளுடனேயே இருந்திடவும் ஆசை முகிழ்த்தது டிராகனுக்கு.
“ஆமா டிராகன்ன்னு சொல்ற?அதிலும் இளவரசன்னு பீத்தல் வேற? ஆனா..எங்கே இறக்கை கூட இல்லாம சாதா மனுஷனாட்டம் இருக்க..அட்லீஸ்ட் எங்கே உன் வாலு..?” என்று கேட்டபடி, கிரிவலம் வருவது போல.. டிராகன் இளவரசனையே ஒரு ரவுண்டு அடித்து வந்தாள் நயன்.
பின்னாடி இவன் பிருட்டத்தில் வால் எதுவும் இல்லை.ஆனால் ஓர் கன்னிப்பெண் சுற்றிச் சுற்றிப் பார்ப்பதில் தான்.. அதுக்கு ஏக சங்கடம்!!
விழிகள் மூடி.. நிதானத்தை இழுத்துப் பிடித்த வண்ணம் நின்றான் ஆதித்யன்.
“நான் இப்போ உங்க உலகத்துல இருக்கேன்.. மனித உருவுல இருக்கேன் .. அதனால என் சிந்தனை, செயல், பழக்கவழக்கங்கள், உணர்வுகள் எல்லாமே மனுஷங்க போலத் தான் இருக்கும்..இன்னையிலிருந்து நான் உன் அடிமை நயன்.. என்னை வைச்சுக்க”
டிராகன் சொன்னதோ.. ஒற்றை அர்த்தத்தில்.. இந்தம்மாவுக்கு தான்.. ‘இது க்ரீன் க்ரீனா டபிள் மீனிங்கில் பேசுதோ’ என்று ஒரே சந்தேகம்!!
‘ச்சேச்சே இருக்காது.. இந்த டிராகன் கண்கள்ல சபலம் தெரியல’ என்று தனக்குத் தானே மைன்ட் வாய்ஸில் பேசி முடிவுக்கும் வந்தாள்.
“பார்க்க அழகனா வேற இருக்க.. நடுக்காட்டுல விட்டுட்டு போகவும் ஒரு மாதிரி ஃபீலா தான் இருக்கு.. சரி போனா போகுது.. உன்னை என் அசிஸ்டென்ட்டா வைச்சுக்கறேன்.” என்று பெரிய மனது பண்ணி சம்மதித்து போல.. அல்டாப்பு பண்ணி ஒத்துக் கொண்டாள் அந்த டிராகன் அடிமையை.
ஆசை-8
ஒருவாறு இருவரும் காட்டின் ஒற்றையடிப் பாதையில் பேசியவாறே.. காட்டை விட்டும் இறங்கி.. அந்த ஊரின் பிரதான சாலைக்கு வந்து விட்டிருந்தனர்.
கண்களில் விரிந்தது.. தெருவின் இருமருங்கிலும்.. தொடர் வரிசையாக சென்றிருந்த கடைக்கண்ணிகள்!
சந்தையின் மூட்டைகளை, லோடுகளை ஏற்றிச் செல்வதற்காக வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டிருந்தன லாரிகள்!!
காட்டுப்பாதையை விட்டும் இறங்கி வந்தவளுக்கு.. நெடுந்தூரம் நடந்து வந்ததால் இதழ்கள் வறண்டு தாகமெடுக்கத் தொடங்கிற்று.
ஏற்கனவே அவள் கையிருப்பிலிருந்த தண்ணீர் பாட்டிலும் காலி. மெல்ல தலை உயர்த்தி கடைக்கண்ணியை பார்த்த போது அங்கே ஐஸ்க்ரீம் கடை இருப்பது பார்த்து நயனுக்கு ஏக சந்தோஷம்!!
திரும்பி தன் அசிஸ்டெண்ட் டிராகனைப் பார்த்தவளோ.. “வார்தா” என்று ‘ஆதித்திய வர்தன்’ என்னும் அவன் நாமத்தின் பின் பாதியை ‘வர்தா’என்பதை நீட்டி நெடிலில் ‘வார்தா’ அழைத்திருந்தாள் நயன்.
அதிலும் அவள்.. நடுவிலிருந்த “ர்”ரை சற்றே ஆங்கில பாணியில் மறைத்து.. “வா(ர்)த்தா” என்று அழைக்க.. ஏதோ கெட்டவார்த்தை பேசுவது போல எஃபெக்ட் தந்தது அது.
இவனோ பாவம். மனித நடைமுறைகள் அறியாத சூதுவாது தெரியாத டிராகன் வேறா? குழந்தை போல.அவனுக்கு அவள் அழைப்பது கூட.. இனிமை கொடுத்தது.
டிராகன் உலகத்தில் ஆண் டிராகனோ, பெண்டிராகனோ.. ‘புர்புர்’ என்று உருமிக் கொண்டு.. தீயையும், புகையையும் கக்கிக் கொண்டும் திரிய, இங்கே மானுடப்பெண்ணின் குரல் ‘இன்பத் தேன் வந்து பாய்ச்சியது காதினிலே!!’
‘என்னேவொரு மனம் மயக்கும் குரல்!!’என்று மதிமயங்கி சிலாகித்துக் கொண்டது அவன் மனம்.
இவன் திரும்பி.. “நயன்.. கூப்ட்டீயா?” என்று கேட்க.. இவள் தலையும் ஆடியது.
“ஆமா.. எனக்கு தாகமா இருக்கு.. அதோ ஐஸ்க்ரீம் கடை இருக்குல்ல..அங்கே போய் ஒரு ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வா உன் நயனுக்கு” என்று உரிமையாய் கட்டளையிட்டாள் தன் டிராகன் அடிமைக்கு.
“ஐஸ்க்ரீம் கடையா ?எங்கே இருக்கு..??” தன்னை முட்டையிலிருந்து விடுவித்தவள் எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடும் உத்வேகத்துடன் அங்கிருந்து கடைகளில் தன் விழிகளை துரிதகதியில் ஓட்டினான் அவன்.
ஆனால், முன்பின் ஐஸ்க்ரீம் பற்றி அறியாத டிராகன் எப்படி ஐஸ்க்ரீம் பற்றி அறியும்?
“அதோஓஓ. அங்க.. ஐ.. சி.. ஈ.. சி ஆர் ஈ ஏ எம் ன்னு இங்கிலிஷ்ல எழுதியிருக்குல்ல.. அந்த ஷாப் தான்..” என்று தூர கைக்காட்டி ஒரு கடையை காட்ட.. இவள் சொன்ன எழுத்துக்கள் புரியாமல்.. வெள்ளந்தியாக விழித்தான் டிராகன்.
“வார்த்தா!!! என்ன முழிக்கற?? ஓ.. ஏபிசிடி கூட தெரியாதா.. ச்சு ச்சு பாவம்.. நான் கத்துத் தர்றேன்.. டிராகனுக்கு..” என்று சொல்லி அங்கே தரையிலேயே அமர வைத்து… மண்ணில் மரக்குச்சியால் கோடிழுத்தாள்.
தன் உரிமையாளினி அமர்ந்ததும்.. டிராகனும் குந்தக்காலிட்டு மண் தரையோரம் குந்தியது.
டிராகனுக்கே ஆங்கில வாத்தியாரினியாக மாறிப் போனாள் நயன்.
“எங்கே சொல்லு.. இது ஏ…ஏ பார் ஆப்பிள் இது பீ..பால் இது சீ..கேட்” என்று மனித உருவில் இருக்கும் டிராகனை வைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு ஒரே ரகளை தான் பி. ஈ பட்டதாரி.
இவளோ.. மண்தரையில் அமர வைத்தது மாத்திரம் அல்லாமல்.. அவன் கையைப் பற்றி, “என் கையைப் பிடிச்சிக்க வார்தா.. இதோ.. பின்னாலேயே வா.. ஏ.. சொல்லு”என்று சொல்ல.. இவனுக்குள் ஜிவ்வென்று ஏறியது சார்ஜ்!!
அவள் கைப்பற்றினால் தான்.. கூடல் கொள்ளாமலேயே உச்சம் ஏகியது போல.. டிராகனுக்கும் எனர்ஜி ஏறுமே!!
இப்போது அவளே கையைப் பற்றியிருக்க.. கேட்கவும் வேண்டுமோ? நம் டிராகனோ.. சிட்டி ரோபோ போல ரொம்ப ரொம்ப ஸ்மார்ட்!!
ஒரு தடவை சொல்லிக் கொடுத்ததை.. சர்ரென்று தன் அக்னி ஜூவாலையினாலான மூளையில் சேமித்துக் கொண்டது.
கடைகளின் பதாகையில்.. பேனர்களில் எழுதியிருக்கும் ஆங்கிலத்தையெல்லாம் அதனால் இம் என்னும் முன்னம்.. கடகடவென வாசிக்க முடியுமானளவுக்கு தேறியிருந்தது.
நயனுக்கோ.. ‘என் ஸ்டூடண்ட்’ என்பதில் மார்தட்டிக் கொள்ளாத பெருமை!!
இவனோ தற்சமயம்.. அவள் கைக்காட்டிய ஐஸ்க்ரீம் கடையை.. சரளமாக வாசிக்கலானான்.
“ஐஸ்க்ரீம்.. அந்த ஷாப் தானே.. உனக்காக வாங்கிட்டு வரேன் நயன்” என்று செல்லப் போக..மீண்டும் ,அவனது வலிமையான முன்னங்கைப் பற்றி தடுத்திருந்தாள் நயன்.
“ஹேய் நில்லு.. நில்லு.. எங்கே போற டிராகன்?? உங்கிட்ட காசு இருக்கா?? வைச்சிருக்கீயா?” என்று கேட்க.. ஆதித்ய வர்தன் விழிகள் நிர்மலமானது.
அவனது விழிகளே.. அவனிடம் நயா பைசா இல்லை என்பதை தெளிவுபடுத்தலானது.
“காசில்லாம எப்டி ஐஸ்க்ரீம் வாங்குவ?” என்று பேசிக் கொண்டே தன் சட்டைப்பையை ஆராய.. இப்போதைக்கு கையிருப்பில் ஒற்றைப்பைசா இல்லை என்பது புரிந்தது.
‘விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பது போல.. தன் கையில் பணம் இல்லாதது பற்றி காட்டிக் கொள்ளவேயில்லை அவள்.
“நாம நேர்மையா கஷ்டப்பட்டு உழைச்சா தான் அந்த காசு நம்ம உடம்புல ஒட்டும். போ..மூட்டை தூக்கி சம்பாதி.. அந்த காசுல நான் கேட்டது வாங்கித் தா.. அப்ப தான் எடுத்துப்பேன்” என்று ஒற்றைக்காலில் நின்று.. ‘நேர்மை, உழைப்பு’ என்று சொல்லி.. ஒரே ரவுசு பண்ணினாள் நயன்.
டிராகனுக்கா மந்திர, தந்திரங்கள் தெரியாது?? அவனிடம் கேட்டிருந்தால் அவள் கண்ணிமைக்க முன்னம்.. பொன்னும்,பொருளும் அவள் காலடியில் வந்து மூட்டை மூட்டையாகக் கொட்டியிருப்பான்.
இதை அறியாதவளோ.. சூட்சுமமாக,டிராகன் இளவரசனையே நம்மூரில் மூட்டைத் தூக்க வைத்தாள்.
டிராகன் இளவரசன்.. நம்மூரில் வந்து மூட்டைத் தூக்குவதை மட்டும்.. டிராகன்கள் பார்த்திருந்தால்.. கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்திருக்கும் யுத்தத்திற்கு!!
ஒன்றுமே அறியாத டிராகனைக் கூட ஆசை கொள்ள வைக்கும் அன்பான குழந்தை இவள்!!
அவனை வைத்து அத்தனை காரியங்கள் பண்ணியவள்.. மகாராணி போல.. அங்கிருந்த குத்துக்கல்லில் அமர்ந்து கொள்ள.. இவன் தான்.. மூட்டை ஏற்றும் லாரி நாடி போனான்.
அங்கிருந்த கண்காணியிடம் என்ன பேசினானோ? மறுவிநாடி சில மணித்தியாலங்களுக்கு மூட்டைத் தூக்கும் தற்காலிக வேலையும் கிடைத்தது.
தன் மேலங்கியை கழற்றி வைத்து விட்டு, அவன் தன் தோள்களில் மூட்டை தூக்கி.. விசுக் விசுக்கென்று.. லாரிக்கும், மூட்டைப்பொதி இறக்கும் இடத்துக்குமாக நடந்து கொண்டிருந்தான்.
‘வாம்மா மின்னல்’ என்பது போல விருட்டென்று போயி.. சரட்டென்று வரும் வேகம் டிராகன் ஆதித்ய வர்தனிடம்!!
சொற்ப விநாடிகளில் மூட்டைகள் முழுவதும் ஏற்றப்பட்டதும்.. லாரியும் அவ்விடத்தை விட்டும் நகர்ந்து மறைந்தது.
பூமிக்கு வந்து அவன் சம்பாதித்த முதல் ஊதியத்தில் அவள் கேட்ட ஐஸ்க்ரீமை வாங்கிக் கொண்டு.. அவளிடம் வந்தான்.
தனக்காக இத்தனை வேலை செய்து அலுத்துக் களைத்து வந்திருப்பவனுக்கு நன்றி கூட சொல்லாமல் கையை நீட்டினாள் நயன் ஐஸ்க்ரீமை எடுப்பதற்காக.
அவன் அவள் கையில் ஐஸ்க்ரீம் திணிக்காமல் அமைதியாய் இருக்க.. குத்துக்கல்லில் அமர்ந்திருந்தவள்.. அண்ணார்ந்து அந்த தங்கவிழியானைப் பார்த்தாள்.
“உன் கைய கொடு.. நயன்!! உன் கையப் பிடிச்சிக்கிட்டா.. சார்ஜ் ஏர்றது போல எனர்ஜி வைபா இருக்கு.. ஐஸ்க்ரீம் வேணுமா..கைய கொடு” என்று புது டீலிங் பேசினான்.
‘போனா போகுது.. கை தானே” என்று இவளும் சாதாரணமாக எண்ணி கொடுக்க.. அந்த சிறு ஸ்பரிசம் டிராகனுக்குள் உண்டாக்கும் மாற்றங்களை அவள் அறிந்தாளில்லை.
அவளும் இந்தக் கையில் ஐஸ்க்ரீமை வாங்கிக் கொண்டு ..மறுகையை அவனுக்காக நீட்ட..அவளது பட்டுப் போன்ற மிருதுவான கையைப் பற்றிக் கொண்டான் டிராகன்.
இதோ மறுகணம்..சார்ஜ் சர்ரென்று ஏற்றியது போல அவன் கண்கள் அடர் மஞ்சள் நிறத்தில் மிளிரத் தொடங்க..விழிகள் மூடி அவள் ஸ்பரிசத்தை தன் இதயத்தால் ஏற்று நின்றான் வர்தன்.
ஆனால் அவளோ, அத்தோடு தன் குறும்புகளை நிறுத்திக் கொள்ளவேயில்லை. மாறாக, டிராகன் அடிமைக்கு தன் கை மீதுள்ள காதலை அறிந்தவள்.. தான் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள , அவ்வப்போது தன் கையை வைத்தே பேரம் பேசலானாள் வில்லாதி வில்லி!!
“இருநூறு கொடுத்தா கைய தர்றேன்.!!”
“ஐநூர் ரூபா.. பக்கெட் ப்ரியாணி வாங்கி குடு.. தர்றேன்”
“.ஆயிரம் ரூபா பிரியாணி வாங்கி குடு தர்றேன்” என்று ஆனானப்பட்ட டிராகனையே ஒரு ஆட்டு ஆட்டுவித்துக் கொண்டிருந்தாள் அவள்.
தனக்கு வாய்த்த டிராகன் அடிமையுடனான சம்பவங்களை எல்லாம் எண்ணி.. இன்று அவன் நினைவுகளில்.. பிச்சியைப் போல இதழ் மலர்ந்தாள் நயன்.
அவளுக்காக கடலில் மூழ்கி முத்துக்குளித்து முத்தெடுத்து வரக்கூடியளவுக்கு அவள் மீது அளவிறந்த காதல் வைத்திருந்தவன் அல்லவா அவன்?
“திரும்ப வந்துருவேன்.. எனக்காக காத்திரு”என்று சொல்லிச் சென்றவன்.. இதோ ஐந்து வருடங்கள் ஆன பின்னும் வரவேயில்லையே??
அவன் நினைவில் இதயம் வாட..கண்களில் துளிர்த்த கண்ணீரை அடக்க பெரும்பாடு பட்டுப் போனாள் நயன்.

Ну,оправдалась моя нелюбовь к аське,ибо история не хранится и происходит всякая фигня.У меня произошел не самый забавный случай.
http://www.pageorama.com/?p=igihucuih
Здесь буду отписываться, чтобы все РЕАЛЬНО понимали сколько времени длится весь процесс
அருமையான பதிவு
службу спрс давным давно забросить необходимо..
https://e73051cc214179c260d6dbf3a8.doorkeeper.jp/
ты давай вася тут провокации не сей)))