ATM Tamil Romantic Novels

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 9&10 (விஷ்ணுப்ரியா)

ஆசை-9

 

இன்று, ஐந்து வருடங்களுக்குப் பிறகு!! 

 

அவள் முன்னால்.. கனடா மாப்பிள்ளை ‘ஹம்ரித் அருள் ஜோதி’ என்னும் ஃபேக் ஐடியில் நின்றிருந்தான் அவளது டிராகன் காதலன் ‘ஆதித்திய வர்தன்’!!

 

ஹம்ரித்தும்,வர்தனும் இருவேறு நபரல்ல;ஒருவர் தான் என்பதையறியாமல்.. அவன் தான் ‘வர்தன்’ என்று அடையாளமே தெரியாமல்..தனிமையில் உழன்று தவித்துக் கொண்டிருந்தாள் அவள். 

 

அதீத அன்பும் கூட சீண்டிப் பார்க்கச் சொல்லி உந்துதலைக் கொடுக்கும் அல்லவா?. 

 

அந்த உந்துதலில் தான்.. ஐந்து வருடங்களுக்கு முன்பு அடிமையாக இருந்த டிராகன்.. இன்று அவளை காதலில் தன் அடிமையாக்க திரும்பி வந்திருந்தான். 

 

சற்றே உன்னிப்பாக, அவனை உற்றுப் பார்த்திருந்தாலும் போதும்.. கனடா மாப்பிள்ளையாக வந்திருப்பவன் தன் டிராகன் கண்ணாளன் தான் என்பது இக்கணமே புரிந்திருக்கும். 

 

ஆனால் இப்போதும், சிறு பிள்ளை புத்தி மாறாமல் இருப்பவள்.. ஹம்ரித் அருள் ஜோதி தான்.. சற்றே வேறு மாதிரியான ஹேர் ஸ்டைல் வைத்து வந்திருக்கும் தி கிரேட் டிராகன் இளவரசன் ‘ஆதித்திய வர்தன்’ என்று உணரவில்லை. 

 

ஆனால் அவனது அதே கழுகுப் பார்வையில்.. அதே உணர்வில்.. தன்.தோழனான.. ஆதியை நிரம்பவும் மிஸ் செய்யவாரம்பித்தாள் நயன்.

 

தன் முன்னே மரபெஞ்சில் அமர்ந்திருப்பவனைப் பார்த்தவள், மெல்ல வாய் திறந்தாள்.

 

அங்கே ஆதித்திய வர்தனுக்கும், தனக்குமிடையில் நடந்ததை அப்படியே கதையைத் திரித்துச் சொல்ல முன்வந்தாள் இந்த உல்டா ராணி!!

 

“என் ஆதி என்னை ரொம்ப வேலை வாங்குவான் தெரியுமா? ஒரு தடவை வியர்வை சிந்தி மூட்டைலாம் தூக்கி.. அவனுக்காக ஐஸ்க்ரீம்லாம் வாங்கி கொடுத்திருக்கேன் தெரியுமா.. ஹம்ரித்!!” என்று.. சோகத்துடன் அவன் இவளுக்காக செய்ததையெல்லாம்.. இவள் அவனுக்காக செய்ததாகக் கூறி.. பீலா விட்டாள் அவள். 

 

‘இந்த காலத்தில் இப்படியெல்லாம் காதலிக்கும் பெண்ணா?’ என்று வேறு யாருமாக இருந்திருந்தால்.. வியந்து மூக்கு மேல் கைவைத்திருக்கக்கூடும். 

 

ஆனால் இவன் தான்.. அவளது பழைய ஆதி டிராகன் ஆயிற்றே. இவன் அறியாததா அங்கு நடந்ததை!! 

 

“யாரு?? நீயி?.. காத்தடிச்சா எட்டு மைலுக்கு அங்கால போய் விழுறது போல ஒரு பாடிய வச்சிக்கிட்டு.. மூட்டை தூக்கின?”

 

விட்டேற்றியாக கேட்ட.. ஹம்ரித்தின் மீது.. நயனுக்கு.. படா படா கோபம்!! இருந்தாலும்.. இடக்கரடக்கல் கருதி.. பாவம் போல முகத்தை வைத்து தலையசைத்தாள். 

 

“ம்ம்..ஆமா ஹம்ரித்!!”

 

என்னவெல்லாம் பொய் சொல்லி திருமணத்தை மறுக்க பார்க்கிறாள் இவள்?? இவன் தான் தற்போது டிராகன் உலகத்திற்கே ராஜாதி ராஜன் ஆயிற்றே! 

 

இப்படி இஷ்டத்திற்கு கதை பேசுபவளை.. எப்படியாவது கனடா அழைத்துச் சென்று தன்னருகேயே நிறுத்தி வைத்துக் கொள்ளும் எண்ணமும் பிறந்தது. 

 

‘கல்யாணத்துக்கா வேண்டாம் சொல்ற? இரு உன் ரூட்லயே வர்றேன்’ என்று தனக்குள் மனக்கணக்கு போட்டுக் கொண்டவனாக.. அவளிடம் பேசலானான். 

 

“சரி.. கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்குற.ஃபைன்.அது உன் இஷ்டம்..ஆனா…. கனடாவுக்கு என் கூட வர்றீயா? என் கம்பெனியை பார்த்துக்க.. கூடமாட ஒத்தாசைக்கு ஆள் வேணும்..தனியா எல்லா வேலையையும் பண்ணிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறேன்…உன்னை எனக்கு பிடிக்கலை..கல்யாணம்லாம் வேண்டாம். உதவிக்காக வேணா வா!!” என்று இவன் உள்ளுக்குள் மூண்ட சிரிப்பை மறைத்த வண்ணம்.. ‘அவளைப் பிடிக்கலை’ என்று முகத்திற்கு எதிராகவே சொன்னான் அவன். 

 

அவன் சொன்னதோ அப்பட்டமான பொய்!! எந்த சித்த சுவாதீனமுள்ள ஆடவனும்.. ‘நயன்’ போல ஒரு பெண்.. மனையாளாக வருவதற்கு, ‘நோ’ சொல்லவே மாட்டார்கள்.

 

ஆனால் இவன், ‘பிடிக்கல’ சொன்னது இவளது அழகின் மீதே இவளுக்கொரு தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணிப் போனது. 

 

சமயசந்தர்ப்பமே பாராது.. அவள் அப்பா நேற்றிரவு சொன்னது எல்லாம் இவளது ஞாபக அடுக்குகளில் வந்து போனது. 

 

“அவன் நல்ல ஓங்குதாங்கா மாடல் போல சூப்பரா இருக்கான்.. ஆனா நீ எலிக்குட்டி கணக்கா இருக்க.. நீ ரிஜெக்ட் பண்ற இடத்துல இல்லை. அவன் தான் இருக்கான்” என்று சொன்னது நினைவுக்கு வந்து அவளை ஆட்டங்காண வைத்தது. 

 

ஆனால் ஆதித்திய வர்தன்.. “உன்னைப் போல அழகிய நான் பார்த்ததேயில்லை.. நீ அவ்ளவு அழகு” என்று காதோரம் கிசுகிசுத்தது நினைவுகளில் பசுமையாக இருக்கின்றது. 

 

எனில், ஹம்ரித் ஏன் அழகில்லை என்கின்றான் என்று முகம் வாட நின்ற கணம்.. மீண்டும் ஒலித்தது ஹம்ரித்தின் குரல். 

 

“இப்ப தான் சின்ன சாப்ட்வேர் கம்பனி ஆரம்பிச்சிருக்கேன்.. 

நான் ரொம்ப கஷ்டப்பட்றேன்.நீங்க உதவிக்கு வாங்க..நீங்க ரொம்ப அறிவாளியாம்.எம். ஈ கோல்ட் மெடலிஸ்ட்டுன்னு அப்பா வேற சொன்னாரு.. உங்களை போல ஒரு அறிவாளிய நான் மிஸ் பண்ண விரும்பல”

 

அவன், ‘நீங்க. ரொம்ம்ப அறிவாளியா..ம்!” என்று அழுத்தி இழுத்துச் சொன்ன தினுசே இவளுக்குள் சந்தேகத்தைக் கொடுத்தது.

 

‘எதே நம்ம அறிவாளியா..?? ஏதோ வலை போடுறான்.. உஷார் நயன்.. உஷார்’ என்று இவள் தனக்குள் மைன்ட்வாய்ஸில் முணுமுணுவென்று பேசிக் கொண்டவளாக, உடனே தலை நிமிர்ந்தாள்.

 

அவள் அறிவை நாய், டிராகுலா, டிராகன் முதற்கொண்டு அத்தனையும் கலாய்க்கும். கலாய்க்காதிருந்தால் தான் ஆச்சரியமே!! அம்புட்டு லூசு நம்ம ஹீரோயின்!! 

 

இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல், “இங்கே பாருங்க.. என்னால ஏதும் பதில் சொல்ல முடியாது.. என் அப்பாக்கிட்ட வந்து கேளுங்க.. அவர் முடிவு தான் எல்லாம்” என்று பேசி அப்போதைக்கு அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல.. அத்தோடு விடுவானா அவன்? 

 

“சரி கேட்டுட்டா போச்சு” என்று வெகுவெகு சிம்பிளாகச் சொன்னவன்.. அவளை கையோடு அழைத்துக் கொண்டு.. நேரே போய் நின்றான் அவளது தந்தை செந்தில் நாதனிடம் தான். 

 

திடுதிப்பென்று காரில் ஏற்றிக் கொண்டு தன்னோடு வீடு வரை அவன் வருவான் என்று எதிர்பார்த்திராதவள்.. ஹம்ரித்தின் வேகத்தைக் கண்டு மலைத்துத் தான் போனாள். 

 

செந்தில் நாதனோ.. கனடா மாப்பிள்ளை வீடுவரை வரவும் கையும் ஓடாத.. காலும் ஓடாத நிலையில் பரபரப்புடன் நின்றிருந்தார். 

 

“வாங்.. வாங்க மாப்ள.. திடீர்னு வீட்டுக்கே வரவும்.. காலும் ஓடல.. கையும் ஓட மாட்டேங்குது..” என்று பரபரப்புடன் விசாரித்து.. ஹம்ரித்தை நடுக்கூடத்திலிருந்த சோபாவில் அமர வைத்தார் செந்தில் நாதன். 

 

அவன் சோபாவில் முதுகு சாய்த்து அமர்ந்தது கூட சிம்மாசனத்தில் அமரும் வேந்தர்களின் கம்பீரத்தை நினைவுபடுத்திப் போனது அங்கிருந்த யாவருக்குமே!! 

 

“என்ன சாப்பிட்றீங்க.. டீ, காபி ஏதாவது?” என்று செந்தில் கேட்க.. இவனோ அதை நாசூக்காக மறுத்தான் ஹம்ரித். 

 

“அங்கிள்.. அதுலாம் வேண்டாம்.இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.உங்க பொண்ணுக்கு கல்யாணத்தில இஷ்டமில்லையாம்” என்று இவன் சொல்ல.. செந்தில் நாதனோ திரும்பி தன் மகளைத் தான் லுக்கு விட்டார்.

 

‘படிச்சு படிச்சு சொல்லி அனுப்பியும் .. உன் புத்திய காமிச்சிட்டேல்ல?’ என்பது போல மகளைக் கண்டனப் பார்வை பார்த்து வைத்தார் அவர்.

 

இவளோ தன் கைகளைக் கோர்த்து விரல்களைப் பிசைந்த வண்ணம்..தலை கவிழ்ந்து கொள்ள.. இடையில் சமரசம் செய்யும் வகையில் இடையிட்டிருந்தான் நாயகன் ஹம்ரித்.

 

“இட்ஸ் பைன் அங்கிள். எல்லாருக்கும் விருப்பு ,வெறுப்பு இருக்கும்..இட்ஸ் ஓகே..லைஃப் பார்ட்னரா அவளை மிஸ் பண்ணாலும்..பிஸினஸ் பார்ட்னரா நான் உங்க பொண்ணை மிஸ் பண்ண விரும்பல!” என்று தன் திட்டத்தை பட்டவர்த்தனமாக சொல்லியிருந்தான் ஹம்ரித்.

 

“நீ..நீங்க என்ன சொல்ல வர்றீங்க மாப்ள..எனக்கு புரியலை” 

என்று தத்தி மகளின் தத்தி அப்பாவாகக் கேட்டிருந்தார் செந்தில்.

 

அமைதியாக இருவரையும் வேடிக்கைப் பார்த்திருந்தவளுக்கோ தந்தை உதிர்த்த ‘மாப்பிள்ளை’ என்னும் சொல்லில் ஏக கடுப்பு!!

 

மாப்பிள்ளையாகப்பட்டவனோ , “இல்ல அங்கிள் ..உங்க பொண்ணோட அறிவ. .என் கம்பெனிக்காக யூஸ் பண்ணிக்கலாம்னு பார்க்கறேன்.எம்.ஈ என்ஜினீயரிங் படிப்பு படிச்சிருக்கா இல்லையா? இட் வில் பெனிபிட் போத் .ஹர் அன்ட் மீ!!என்கூட கனடா அனுப்பறீங்களா?” என்று அவளை கனடாவுக்கு அனுப்பச் சொல்லி தந்தையிடமே தைரியமாகக் கேட்டிருந்தாள்.

 

ஆனால் பெண்ணை கடல்கடந்து பல்லாயிரம் மைல் தொலைவில்..சரிவர பரிச்சயமற்ற ஆடவனை நம்பி தனிமையில் அனுப்ப உள்ளூர அச்சமும்,தயக்கமும் ஒருங்கே எழுந்தது செந்தில்நாதனுக்கு.

 

அதனை ஹம்ரித்திடமே வாய் விட்டு கேட்கவும் செய்தார் செந்தில்.

 

“பொண்ணு படிச்ச படிப்புக்கு கனடாவுல நல்ல உத்யோகம்ன்றது வாஸ்தவம் தான் தம்பி.. ஆனா அவ்ளவு தூரம் தனியா..எப்டி அனுப்…றது? அதான் யோசனையாக இருக்கு” என்று தயங்கித் தயங்கி செந்தில் கூற.. அதற்கும் அவனிடம் தனி யோசனை வைத்திருந்தான். 

 

அவர்கள் இதயம் இனிக்கும் வகையில் திகட்டத் திகட்ட பற்பல ஆபர்களையும் வாரி வாரி வழங்கினான் டிராகன் உலகத்தின் பாரி வள்ளல். 

 

“நீங்களும் ,ஆன்ட்டியும் கூடவே வந்துருங்க அங்கிள்..மகளை அங்கே அனுப்பிட்டு..நீங்க இங்கே..அவ அங்கேன்னு ஏன் கஷ்டப்படணும்??அங்கே சுத்திப் பார்க்க டூரிஸ்ட் ப்ளேஸஸ் நிறைய இருக்கு..விசா ,ப்ரோசீஜர்லாம் நான் பார்த்துக்கறேன்..ஜாலியா.. ஹனிமூன்னு நினைச்சுக்கங்க. என்ஜாய் பண்ணுங்க” என்று ஆசை வார்த்த காட்ட..அவன் வார்த்தைக்கும் மயங்காதோர் அவனியில் உள்ளனரோ??

 

‘நல்லா பேசுவான் மேம்..வாழைப்பழம் மாறி பேசுவான்’ என்பது போல கேரக்டர் நம் ஹம்ரித் டிராகன் .

 

அவன் தந்த வாய்ப்பை தவறவிடுவாரா செந்தில்? மனையாளை கரம்பிடித்த புதிதில் மூணாறிற்கு தேனிலவு போனது!!

 

இப்போது மீண்டும் ஐம்பத்தைந்து வயது கடந்த பின்னர்..கனடாவில் தேனிலவு கொண்டாடும் வாய்ப்பை இயற்கையாகவே அமைத்துக் கொடுக்க.. விடுவாரா??

 

அவர் தலையும் நாலாபுறமும் ஆடியது .அவன் விழிகளோ .. “இனி நொடிபொழுதும் உன்னை பிரியேன் நயன்..யூ ஆர் மைன்..ஒன்லி மைன்” என்று மோகம் சிந்தும் மந்தகாசப் பார்வையுடன் அவளோடு மானசீகமாக அளவளாவிக் கொண்டான் அவன்.

 

ஆசை-10

 

சரியாக இரண்டு வாரங்களில் ..அவன் வாக்குக் கொடுத்தது போல செந்தில் நாதன்,அவர் மனைவி காமாட்சி மற்றும் நாயகி நயன் ஆகிய மூவருக்கும் விசாவும் வந்து சேர்ந்தது. அனைத்து வேலையையும் அவனே தன் பணபலத்தை வைத்து கச்சிதமாக குறுகிய காலத்தில் செய்து முடித்திருந்தான் அந்த அசகாய சூரன்!!

 

நயன் குடும்பத்தினரும் தன் பெட்டி ,படுக்கையை எல்லாம் மூட்டைக் கட்டிக் கொண்டு..ஒரு நல்லநாளில் கனடாவின் டொரான்டோவில் போய் இறங்கினர்!!

 

விமானநிலையத்திலிருந்து ..அவனது வீடு நோக்கி அழைத்துச் செல்ல வந்த..ஹம்ரித்தின் காரே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருந்தது .

 

கடுஞ்சிவப்பு நிறத்தில்.. லேட்டஸ்ட்டாக தரையிறங்கிய ஃபெராரி காரினுள் ..ஜம்மென்று அமர்ந்து செல்வது ..நயனுக்கும்,அவளது பெற்றோர்களுக்கும் ஏதோ கனவு .

போல இருந்தது .

 

அங்கே அவனது கார் தரித்து நின்ற அவனது வீட்டைக் கண்டதும்..மூவரும் மூக்கின் மீது கைவைத்து நிற்காத குறை தான்!!

 

பிரித்தானியர்களின் மேன்ஷன்களைப் போல..அத்தனை கோலாகலமாக ..கோபுரத்தின் சாயையில் கட்டப்பட்டிருந்தது அவனது அரண்மனை!! 

 

பின்னே டிராகன் உலகத்திலேயே மாளிகையிலேயே பிறந்து மாளிகையிலேயே வாழ்ந்தவன் ஆயிற்றே?

 

நம் உலகில்.. சாதா வீடுகளில் இருப்பது சௌகரியத்தைக் கொடுக்கவே…இங்கு வந்து சேர்ந்ததும் அந்த மேன்ஷனை வாங்கியிருந்தான் அவன்.

 

அங்கே.. அவன் வீட்டில் நம் சென்னை பட்டாளம் இறங்கியதும்.. சென்னையிலிருந்து வந்திருப்பவர்களை..வரவேற்க வாசல் வரையும் ஓடி வந்திருந்தார் அவனது தாய். அவரது பெயர் கூட லக்ஷ்மியம்மாள் !!

 

நவீன ஆடைகளுடன் ..ஆனால் சற்றே மரியாதை கமழும் விதமாக..நீண்ட கவுனொன்றினை அணிந்திருந்தார் அவனது தாய்.

 

டிராகன் இளவரசனின் நிஜத் தாயாரா அது? இல்லவேயில்லை. டிராகன் உலகத்திலும் தனக்கு அடிமையாக இருந்த ஒரு பெண் டிராகனை..தாயுருவில் மாற்றி.. ‘கெஸ்ட் ரோல்’ செய்ய வைத்திருந்தான் அவன்!!

 

உபயம் – அவன் கனடாவுக்கு வந்த புதிதில்..பொழுதுபோக்கிற்காக,அவன் பார்க்க ஆரம்பித்திருந்த கொரியன் டிராமாக்கள்!!

 

அவற்றைப் பார்த்துப் பார்த்து ..கொரியன் டிராமா அட்டிக்ட்டாகவே மாறியிருந்த டிராகனோ..முன்பை விடவும் தற்போது..காதல் செய்வது எப்படி என்பதை நன்றாகவே கற்றுத் தேறியிருந்தான்.

 

அதன் விளைவாக காதல் மிகுதி அதிகமாகித் தான்..நம் நாயகி நயனையும் இங்கே அழைத்து காதல் செய்யும் எண்ணத்துடன் .. கூட்டி வந்திருந்தான் டிராகன்.

 

ஆதித்தியனை மனதில் கண்ணாளனாக வரித்திருப்பவள் ஒத்துக் கொள்வாளா ஹம்ரித்தை ??

 

டிராகன் போட்ட திட்டத்தை அறியாதவளோ.. தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த சொகுசான அறைக்கு விரைந்திருந்தாள் ,ஆடைகள் களைய;குட்டிக் குளியலொன்றை போட!!

 

அதே சமயம்..தங்களுக்கான அறைக்கு வந்து உடை மாற்றிக் கொண்ட நயனின் பெற்றோர்களோ வந்ததும் வராததுமாக.. கண்களில் பக்தி கமழ ,கனடாவில் தமிழன் கட்டிய கோயிலைப் பார்க்கப் போக தயாராகினர்.

 

ஆனால், நயனோ..கனடாவின் அதிசொகுசு குளியலறையில்..பாத்டப் முழுக்க ரோஜா இதழ்கள் போட்டு நீராடிக் கொண்டிருந்தாள் சாவதானமாக.

 

நிரம்பவும் தெய்வ நம்பிக்கை கொண்ட தாய்,தந்தையரின் அவசரம் நயனுக்கு புரியவில்லை.

 

பாத்டப்பில் அமிழ்ந்து மூழ்கியவளாக..ரோஜா இதழ்களின் சுகந்தம் இதம் தர.. ரசித்து நயந்து வியந்து..அந்தக்கால மகாராணி போல குளியல் எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் அறைக்கதவையே ஆயிரம் தடவை.. ‘இப்போது திறக்கும்..இப்போது திறக்கும்’ என்று பார்த்திருந்த செந்தில்நாதனுக்கோ.. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொறுமையும் பறந்து போனது.

 

செந்திலோ..தன் மனையாளைத் தான் சாடிக் கொண்டார்.

 

 “என்னடி காமாட்சி இது..ரெண்டு ஜக்கு தண்ணி மொண்டு தலையில ஊத்திட்டு வர இம்புட்டு நேரமா?எல்லாம் நீ கொடுக்கற செல்லம் தான்டி..”என்று மனைவியைப் பிடித்துக் காய்ந்தார்!!

 

அக்கணம் .. இடையில் வந்த டிராகன் இளவரசனின் போலி அம்மா கேரக்டரோ, “அண்ணா..நீங்க போய் வாங்கண்ணா..அவளுக்கு என்ன உபாதையோ..நான் அவளை நல்லா கேரெடுத்து பார்த்துக்கறேன்” என்று சொல்ல..காமாட்சிக்கும் அவர் சொல்வது சரியென்று பட்டது.

 

அவனது போலித் தாயாரிடம் அவளை விட்டு விட்டு..பெற்றோர்கள் இருவரும் அங்கிருந்தும் கிளம்பிச் செல்ல தயாராகினர்.

 

பெற்றவர்கள் இந்தப்பக்கம் கிளம்பிச் சென்றதும் தான்..தேகத்தில் பூந்துவாலையைச் சுற்றிக் கொண்டு .. குளியலறைவிட்டும் வெளியே வந்தாள் நயன்.

 

அக்கணமென்று பார்த்து கனடாவிலும்..நம்மூரைப் போல மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

 

சுற்றிலும் எங்கும் கும்மிருட்டு !! இருட்டறைக்குள் இருப்பது எண்ணி.. மனம் அச்சத்தில் பதைபதைக்கத் துவங்கிற்று அவளுக்கு.

 

அவனது இல்லம் வேறு..மாளிகை போல அல்லவா?அவளது ஒற்றை அறையே பெரிதாக இருக்க..அந்தத் தனிமை பயங்கரமாக இருந்தது அவளுக்கு.

 

இருட்டில்.. எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டவளோ, “யாராவது இருக்கீங்களா?” என்று மெல்ல குரல் கொடுத்தாள்.

 

அவள் குரல்..அவனது கூரிய காதுகளுக்குள் கேட்க மறுகணம்..அறைக்குள் திடீரென்று ஆஜரானான் அவன்!!

 

கையில் அவன் கொண்டுவந்த மெழுகுவர்த்தியில் ..தன் வாயிலிருந்து வெளிப்பட்ட வெற்றுக்காற்றை ஊதியிருப்பான் அவன்.

 

டிராகன் வாயிலிருந்து வந்த நெருப்பில்..பக்கென்று பற்றிக் கொண்டது மெழுகுவர்த்தி!!

 

அங்கே அறைக்குள் திடீரென பரவிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்..இவள் திரும்பிப் பார்த்த வேளை..அவன் திடுதிப்பென நின்றிருப்பது கண்டு.. “ஆஆஆஆ!!” என்று குட்டிநாக்கு வெளித்தெரிய கத்தினாள் நயன்.

 

அவள் தன் மார்பை உள்நோக்கி எக்கிக் கத்திய தினுசில்..அவளது தனங்களைச் சுற்றிப் பிடித்திருந்த டவலும் கூட சர்ரென்று நழுவி விழுந்திருந்தது தரையில்.

 

அதில் இவள் இன்னும் கொஞ்சம் , ‘ஆஆஆஆஆ!’ என்று கத்த..இவனோ விழிகளை முட்டை போல விரித்து தன்னவளின் அழகுகளை பார்த்திருந்தான்.

 

அவளது முன்னழகு ஜெல்லி கேக்குகளிலும்..அழகிய நாபிப் பள்ளத்தாக்கிலும்,தொடையிடுக்கில் பூத்த பெர்முடா மலரும் கண்டு..இவனுக்குள் மோகமுள் நீண்டு வளரலானது.

 

டிராகன்களுக்கு மோகம் முட்டும் கணமெல்லாம் காது செக்கச் செவேலென்று சிவந்து ,தலையில் கொம்பும் முளைப்பது இயல்பு!!

 

மனித உருவில் இருந்தாலும் இவனும் டிராகன் தான் அல்லவா ?

 

நயன் நின்றிருந்த நிர்வஸ்திர நிலை கண்டு..இவன் காதுகளும் செக்கச் செவேலென்று சிவந்து ,தலையில் கொம்பும் முளைக்கலானது.

 

நல்லவேளை,அடர்ந்த இருளின் காரணமாக, அவனது உடலியல் மாற்றங்கள் புரியவில்லை நயனுக்கு.

 

இவளோ சட்டென்று உணர்வு வரப்பெற்று..டவலை எடுத்து மறைக்க..இவனோ கண்ணு தெரியாதவன் போல ஆக்ட்டிங் கொடுக்கலானான் ,அவார்டே கொடுக்கலாம் என்பது போல.

 

“எ..என்னாச்சு நயன்..என்னாச்சு?? எவனாவது திருடன் உள்ளே வந்துட்டானா ஏன் கத்துற..? ஐயோ எனக்கு வேற மாலையான கண்ணு தெரியாதே ..மாலைக்கண் நோய்மா” என்று தட்டுத்தடுமாறி கைகள் நீட்ட.. முதலில் நம்பவில்லை அவள்.

 

அவனது விழிகள் முன் தன் கையை காத்தாடி போல அசைத்துப் பார்க்க..இமை கூட ஆடாமல்.. பார்வையற்றவன் போல சிற்பமாக நின்றான் வர்தன்.

 

இவளுக்குள்ளோ ஆறடி உயரத்தில் அழகாய் கண்கவரும் வகையில் வளர்ந்திருப்பவனுக்கும், இப்படி ஒரு வியாதியா? என்று அவன் மீது அதீதமாக சுரந்தது ,கழிவிரக்கம் .

 

’அவன் என்ன சொன்னாலும்’ சிறுபிள்ளை போல நம்பினாள் அவள்.

 

“யா..யாரும் வரல ஹம்ரித் நான் தான்..கேன்டில கொடுங்க கை சுட்டுக்கப் போகுது” என்று அவன் கையிலிருந்து வாங்கி வைத்தாள் மெழுகுவர்த்தியை.

 

உண்மையில்..அடிமைக்கு ஆசை அவள் மீது. ஆசை எப்போது மோகமானது என்ற கேள்விக்கு இப்போது விடையுமில்லை சுந்தரனுக்கு.

 

அவளிடம் , ‘ நான் தான் உன் வார்தா என்று உண்மையை சொல்லிவிட ஆசை தான்!’

 

ஆனால் மூன்று வருடம் கடின உழைப்பு உழைத்து முன்னேறி..தன் சாப்ட்வேர் நிறுவனத்தை நல்ல முறையில் நிலைநிறுத்திய பின்..தன் ஆள் அடையாளத்தை வெளிப்படுத்தி காதல் சொல்ல ஆசை அவனுக்கு.

 

டிராகனுக்கு கூடவா?மனிதர்களைப் போல ‘மனி யேர்னிங் ப்ராப்ளம்?’

 

ஆங் கண்ணு!!

 

 மனிதப்பதர்களோடு இருந்து இருந்து நாடி ,நரம்பெல்லாம் மனிதர்களின் மனநிலை ஊறி ஊறி..மனிதர்களைப் போலவே சிந்திக்க ஆரம்பித்திருந்தது டிராகன்.

 

டிராகனும் மனம் கலங்கி..நம்மைப் போல பணம் பின்னாடி ஓடிக் கொண்டிருக்கிறது ,இப்போதெல்லாம்.

 

அதற்கு முன் தாபம் வந்து கரையுடைத்தாலும் ..அவசரப்பட முடியவில்லை அவனால் .

 

இன்னும் கொஞ்ச நேரம் அங்கு நின்றிருந்தாலும்..தலைக்கு மேலாக வளரும் கொம்பினைக் கண்டு அவள் அலறக்கூடும் என்று அஞ்சினான் டிராகன்.

 

அலறி அடித்துக் கொண்டு அவ்விடத்திலிருந்தும் ஓடினான் அவன். 

 

 

16 thoughts on “ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 9&10 (விஷ்ணுப்ரியா)”

  1. hey there and thank you for your information – I’ve certainly picked up anything new from right here. I did however expertise several technical issues using this web site, since I experienced to reload the site many times previous to I could get it to load properly. I had been wondering if your hosting is OK? Not that I’m complaining, but slow loading instances times will often affect your placement in google and could damage your high-quality score if ads and marketing with Adwords. Well I am adding this RSS to my email and can look out for much more of your respective fascinating content. Make sure you update this again soon.

  2. It’s a pity you don’t have a donate button! I’d most certainly donate to this brilliant blog! I guess for now i’ll settle for book-marking and adding your RSS feed to my Google account. I look forward to new updates and will share this blog with my Facebook group. Talk soon!

  3. Классный магаз, почитал отзывы, нам в киров бы не помешал такой движ. Ассортимент огонь, давайте в наш славный город. Всем щастья!
    https://linkin.bio/eckertyyxhans
    “ДОБРА ТЕБЕ ЭСКИМОСИК”

  4. Наверно так же как и джив. попробуй минимальные пропорции сделать 0,1 к 1
    https://beteiligung.stadtlindau.de/profile/%D0%9A%D1%83%D0%BF%D0%B8%D1%82%D1%8C%20%D0%9A%D0%BE%D0%BA%D0%B0%D0%B8%D0%BD%20%D0%9C%D0%B5%D1%84%D0%B5%D0%B4%D1%80%D0%BE%D0%BD%20%D0%9C%D0%B0%D1%80%D0%B8%D1%85%D1%83%D0%B0%D0%BD%D1%83%20%D0%9C%D1%83%D0%BC%D0%B1%D0%B0%D0%B8/
    еще раз решил воспользоваться магазом ))) уже 2 года только у них покупаю))) и пока доволен

  5. Горы Кавказа зовут в путешествие круглый год: треккинги к бирюзовым озёрам, рассветы на плато, купания в термах и джип-туры по самым живописным маршрутам. Мы организуем индивидуальные и групповые поездки, встречаем в аэропорту, берём на себя проживание и питание, даём снаряжение и опытных гидов. Подробнее смотрите на https://edemvgory.ru/ — выбирайте уровень сложности и даты, а мы подберём оптимальную программу, чтобы горы поселились в вашем сердце.

  6. https://web.facebook.com/CANDETOXBLEND

    Prepararse un test preocupacional ya no tiene que ser un problema. Existe una alternativa científica que funciona en el momento crítico.

    El secreto está en su combinación, que ajusta el cuerpo con creatina, provocando que la orina enmascare los marcadores de THC. Esto asegura una muestra limpia en solo 2 horas, con efectividad durante 4 a 5 horas.

    Lo mejor: no se requieren procesos eternos, diseñado para candidatos en entrevistas laborales.

    Miles de usuarios confirman su seguridad. Los entregas son confidenciales, lo que refuerza la seguridad.

    Si no quieres dejar nada al azar, esta alternativa es la respuesta que estabas buscando.

  7. Выездные наркологические услуги становятся незаменимыми. Они включают диагностику зависимостейлечение наркотической зависимости и поддержку в борьбе с алкоголизмом. Выездной нарколог предоставляет индивидуальный подход к каждому пациенту и семьям, обеспечивая психологическую поддержку и сопровождение. На сайте vivod-iz-zapoya-tula010.ru можно найти информация о detox программе и домашней реабилитации. Профессиональная консультация нарколога анонимные услуги и меры по профилактике наркомании также доступны. Это обеспечивает удобные условия для лечения и реабилитации.

Leave a Reply to ScottMoums Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top