ATM Tamil Romantic Novels

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 10,11,12&13 (விஷ்ணுப்ரியா)

ஆசை-10

 

சரியாக இரண்டு வாரங்களில் ..அவன் வாக்குக் கொடுத்தது போல செந்தில் நாதன்,அவர் மனைவி காமாட்சி மற்றும் நாயகி நயன் ஆகிய மூவருக்கும் விசாவும் வந்து சேர்ந்தது. அனைத்து வேலையையும் அவனே தன் பணபலத்தை வைத்து கச்சிதமாக குறுகிய காலத்தில் செய்து முடித்திருந்தான் அந்த அசகாய சூரன்!!

 

நயன் குடும்பத்தினரும் தன் பெட்டி ,படுக்கையை எல்லாம் மூட்டைக் கட்டிக் கொண்டு..ஒரு நல்லநாளில் கனடாவின் டொரான்டோவில் போய் இறங்கினர்!!

 

விமானநிலையத்திலிருந்து ..அவனது வீடு நோக்கி அழைத்துச் செல்ல வந்த..ஹம்ரித்தின் காரே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருந்தது .

 

கடுஞ்சிவப்பு நிறத்தில்.. லேட்டஸ்ட்டாக தரையிறங்கிய ஃபெராரி காரினுள் ..ஜம்மென்று அமர்ந்து செல்வது ..நயனுக்கும்,அவளது பெற்றோர்களுக்கும் ஏதோ கனவு .

போல இருந்தது .

 

அங்கே அவனது கார் தரித்து நின்ற அவனது வீட்டைக் கண்டதும்..மூவரும் மூக்கின் மீது கைவைத்து நிற்காத குறை தான்!!

 

பிரித்தானியர்களின் மேன்ஷன்களைப் போல..அத்தனை கோலாகலமாக ..கோபுரத்தின் சாயையில் கட்டப்பட்டிருந்தது அவனது அரண்மனை!! 

 

பின்னே டிராகன் உலகத்திலேயே மாளிகையிலேயே பிறந்து மாளிகையிலேயே வாழ்ந்தவன் ஆயிற்றே?

 

நம் உலகில்.. சாதா வீடுகளில் இருப்பது சௌகரியத்தைக் கொடுக்கவே…இங்கு வந்து சேர்ந்ததும் அந்த மேன்ஷனை வாங்கியிருந்தான் அவன்.

 

அங்கே.. அவன் வீட்டில் நம் சென்னை பட்டாளம் இறங்கியதும்.. சென்னையிலிருந்து வந்திருப்பவர்களை..வரவேற்க வாசல் வரையும் ஓடி வந்திருந்தார் அவனது தாய். அவரது பெயர் கூட லக்ஷ்மியம்மாள் !!

 

நவீன ஆடைகளுடன் ..ஆனால் சற்றே மரியாதை கமழும் விதமாக..நீண்ட கவுனொன்றினை அணிந்திருந்தார் அவனது தாய்.

 

டிராகன் இளவரசனின் நிஜத் தாயாரா அது? இல்லவேயில்லை. டிராகன் உலகத்திலும் தனக்கு அடிமையாக இருந்த ஒரு பெண் டிராகனை..தாயுருவில் மாற்றி.. ‘கெஸ்ட் ரோல்’ செய்ய வைத்திருந்தான் அவன்!!

 

உபயம் – அவன் கனடாவுக்கு வந்த புதிதில்..பொழுதுபோக்கிற்காக,அவன் பார்க்க ஆரம்பித்திருந்த கொரியன் டிராமாக்கள்!!

 

அவற்றைப் பார்த்துப் பார்த்து ..கொரியன் டிராமா அட்டிக்ட்டாகவே மாறியிருந்த டிராகனோ..முன்பை விடவும் தற்போது..காதல் செய்வது எப்படி என்பதை நன்றாகவே கற்றுத் தேறியிருந்தான்.

 

அதன் விளைவாக காதல் மிகுதி அதிகமாகித் தான்..நம் நாயகி நயனையும் இங்கே அழைத்து காதல் செய்யும் எண்ணத்துடன் .. கூட்டி வந்திருந்தான் டிராகன்.

 

ஆதித்தியனை மனதில் கண்ணாளனாக வரித்திருப்பவள் ஒத்துக் கொள்வாளா ஹம்ரித்தை ??

 

டிராகன் போட்ட திட்டத்தை அறியாதவளோ.. தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த சொகுசான அறைக்கு விரைந்திருந்தாள் ,ஆடைகள் களைய;குட்டிக் குளியலொன்றை போட!!

 

அதே சமயம்..தங்களுக்கான அறைக்கு வந்து உடை மாற்றிக் கொண்ட நயனின் பெற்றோர்களோ வந்ததும் வராததுமாக.. கண்களில் பக்தி கமழ ,கனடாவில் தமிழன் கட்டிய கோயிலைப் பார்க்கப் போக தயாராகினர்.

 

ஆனால், நயனோ..கனடாவின் அதிசொகுசு குளியலறையில்..பாத்டப் முழுக்க ரோஜா இதழ்கள் போட்டு நீராடிக் கொண்டிருந்தாள் சாவதானமாக.

 

நிரம்பவும் தெய்வ நம்பிக்கை கொண்ட தாய்,தந்தையரின் அவசரம் நயனுக்கு புரியவில்லை.

 

பாத்டப்பில் அமிழ்ந்து மூழ்கியவளாக..ரோஜா இதழ்களின் சுகந்தம் இதம் தர.. ரசித்து நயந்து வியந்து..அந்தக்கால மகாராணி போல குளியல் எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் அறைக்கதவையே ஆயிரம் தடவை.. ‘இப்போது திறக்கும்..இப்போது திறக்கும்’ என்று பார்த்திருந்த செந்தில்நாதனுக்கோ.. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொறுமையும் பறந்து போனது.

 

செந்திலோ..தன் மனையாளைத் தான் சாடிக் கொண்டார்.

 

 “என்னடி காமாட்சி இது..ரெண்டு ஜக்கு தண்ணி மொண்டு தலையில ஊத்திட்டு வர இம்புட்டு நேரமா?எல்லாம் நீ கொடுக்கற செல்லம் தான்டி..”என்று மனைவியைப் பிடித்துக் காய்ந்தார்!!

 

அக்கணம் .. இடையில் வந்த டிராகன் இளவரசனின் போலி அம்மா கேரக்டரோ, “அண்ணா..நீங்க போய் வாங்கண்ணா..அவளுக்கு என்ன உபாதையோ..நான் அவளை நல்லா கேரெடுத்து பார்த்துக்கறேன்” என்று சொல்ல..காமாட்சிக்கும் அவர் சொல்வது சரியென்று பட்டது.

 

அவனது போலித் தாயாரிடம் அவளை விட்டு விட்டு..பெற்றோர்கள் இருவரும் அங்கிருந்தும் கிளம்பிச் செல்ல தயாராகினர்.

 

பெற்றவர்கள் இந்தப்பக்கம் கிளம்பிச் சென்றதும் தான்..தேகத்தில் பூந்துவாலையைச் சுற்றிக் கொண்டு .. குளியலறைவிட்டும் வெளியே வந்தாள் நயன்.

 

அக்கணமென்று பார்த்து கனடாவிலும்..நம்மூரைப் போல மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

 

சுற்றிலும் எங்கும் கும்மிருட்டு !! இருட்டறைக்குள் இருப்பது எண்ணி.. மனம் அச்சத்தில் பதைபதைக்கத் துவங்கிற்று அவளுக்கு.

 

அவனது இல்லம் வேறு..மாளிகை போல அல்லவா?அவளது ஒற்றை அறையே பெரிதாக இருக்க..அந்தத் தனிமை பயங்கரமாக இருந்தது அவளுக்கு.

 

இருட்டில்.. எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டவளோ, “யாராவது இருக்கீங்களா?” என்று மெல்ல குரல் கொடுத்தாள்.

 

அவள் குரல்..அவனது கூரிய காதுகளுக்குள் கேட்க மறுகணம்..அறைக்குள் திடீரென்று ஆஜரானான் அவன்!!

 

கையில் அவன் கொண்டுவந்த மெழுகுவர்த்தியில் ..தன் வாயிலிருந்து வெளிப்பட்ட வெற்றுக்காற்றை ஊதியிருப்பான் அவன்.

 

டிராகன் வாயிலிருந்து வந்த நெருப்பில்..பக்கென்று பற்றிக் கொண்டது மெழுகுவர்த்தி!!

 

அங்கே அறைக்குள் திடீரென பரவிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்..இவள் திரும்பிப் பார்த்த வேளை..அவன் திடுதிப்பென நின்றிருப்பது கண்டு.. “ஆஆஆஆ!!” என்று குட்டிநாக்கு வெளித்தெரிய கத்தினாள் நயன்.

 

அவள் தன் மார்பை உள்நோக்கி எக்கிக் கத்திய தினுசில்..அவளது தனங்களைச் சுற்றிப் பிடித்திருந்த டவலும் கூட சர்ரென்று நழுவி விழுந்திருந்தது தரையில்.

 

அதில் இவள் இன்னும் கொஞ்சம் , ‘ஆஆஆஆஆ!’ என்று கத்த..இவனோ விழிகளை முட்டை போல விரித்து தன்னவளின் அழகுகளை பார்த்திருந்தான்.

 

அவளது முன்னழகு ஜெல்லி கேக்குகளிலும்..அழகிய நாபிப் பள்ளத்தாக்கிலும்,தொடையிடுக்கில் பூத்த பெர்முடா மலரும் கண்டு..இவனுக்குள் மோகமுள் நீண்டு வளரலானது.

 

டிராகன்களுக்கு மோகம் முட்டும் கணமெல்லாம் காது செக்கச் செவேலென்று சிவந்து ,தலையில் கொம்பும் முளைப்பது இயல்பு!!

 

மனித உருவில் இருந்தாலும் இவனும் டிராகன் தான் அல்லவா ?

 

நயன் நின்றிருந்த நிர்வஸ்திர நிலை கண்டு..இவன் காதுகளும் செக்கச் செவேலென்று சிவந்து ,தலையில் கொம்பும் முளைக்கலானது.

 

நல்லவேளை,அடர்ந்த இருளின் காரணமாக, அவனது உடலியல் மாற்றங்கள் புரியவில்லை நயனுக்கு.

 

இவளோ சட்டென்று உணர்வு வரப்பெற்று..டவலை எடுத்து மறைக்க..இவனோ கண்ணு தெரியாதவன் போல ஆக்ட்டிங் கொடுக்கலானான் ,அவார்டே கொடுக்கலாம் என்பது போல.

 

“எ..என்னாச்சு நயன்..என்னாச்சு?? எவனாவது திருடன் உள்ளே வந்துட்டானா ஏன் கத்துற..? ஐயோ எனக்கு வேற மாலையான கண்ணு தெரியாதே ..மாலைக்கண் நோய்மா” என்று தட்டுத்தடுமாறி கைகள் நீட்ட.. முதலில் நம்பவில்லை அவள்.

 

அவனது விழிகள் முன் தன் கையை காத்தாடி போல அசைத்துப் பார்க்க..இமை கூட ஆடாமல்.. பார்வையற்றவன் போல சிற்பமாக நின்றான் வர்தன்.

 

இவளுக்குள்ளோ ஆறடி உயரத்தில் அழகாய் கண்கவரும் வகையில் வளர்ந்திருப்பவனுக்கும், இப்படி ஒரு வியாதியா? என்று அவன் மீது அதீதமாக சுரந்தது ,கழிவிரக்கம் .

 

’அவன் என்ன சொன்னாலும்’ சிறுபிள்ளை போல நம்பினாள் அவள்.

 

“யா..யாரும் வரல ஹம்ரித் நான் தான்..கேன்டில கொடுங்க கை சுட்டுக்கப் போகுது” என்று அவன் கையிலிருந்து வாங்கி வைத்தாள் மெழுகுவர்த்தியை.

 

உண்மையில்..அடிமைக்கு ஆசை அவள் மீது. ஆசை எப்போது மோகமானது என்ற கேள்விக்கு இப்போது விடையுமில்லை சுந்தரனுக்கு.

 

அவளிடம் , ‘ நான் தான் உன் வார்தா என்று உண்மையை சொல்லிவிட ஆசை தான்!’

 

ஆனால் மூன்று வருடம் கடின உழைப்பு உழைத்து முன்னேறி..தன் சாப்ட்வேர் நிறுவனத்தை நல்ல முறையில் நிலைநிறுத்திய பின்..தன் ஆள் அடையாளத்தை வெளிப்படுத்தி காதல் சொல்ல ஆசை அவனுக்கு.

 

டிராகனுக்கு கூடவா?மனிதர்களைப் போல ‘மனி யேர்னிங் ப்ராப்ளம்?’

 

ஆங் கண்ணு!!

 

 மனிதப்பதர்களோடு இருந்து இருந்து நாடி ,நரம்பெல்லாம் மனிதர்களின் மனநிலை ஊறி ஊறி..மனிதர்களைப் போலவே சிந்திக்க ஆரம்பித்திருந்தது டிராகன்.

 

டிராகனும் மனம் கலங்கி..நம்மைப் போல பணம் பின்னாடி ஓடிக் கொண்டிருக்கிறது ,இப்போதெல்லாம்.

 

அதற்கு முன் தாபம் வந்து கரையுடைத்தாலும் ..அவசரப்பட முடியவில்லை அவனால் .

 

இன்னும் கொஞ்ச நேரம் அங்கு நின்றிருந்தாலும்..தலைக்கு மேலாக வளரும் கொம்பினைக் கண்டு அவள் அலறக்கூடும் என்று அஞ்சினான் டிராகன்.

 

அலறி அடித்துக் கொண்டு அவ்விடத்திலிருந்தும் ஓடினான் அவன். .

 

ஆசை-11

 

“அடேங்கப்பா..கனடாவுல அதுவும் தலைநகர் டொரான்டோவுல முருகர் கோயிலா?? முருகருக்கு வந்த வாழ்வ பார்த்தீயா? ஏசியில சும்மா ஜம்முன்னு இருக்கார்டீ” என்று முருகரை சேவித்து விட்டு.. கையில் பிரசாதத்துடன்.. கோயில் பிரகாரத்தில் நடந்த வண்ணம் சொன்னார் நாயகியின் தந்தை செந்தில் நாதன். 

 

இங்கே பிரசாதத்தை.. வெற்றுக்கையில் தராமல், பேப்பர் பிளேட்டில் வைத்து நீட்ட.. அதை பொட்டுக்கடலை சாப்பிடுவது போல வாய்க்குள் அள்ளி அள்ளி போட்டுக் கொண்டே.. தன் இணையாளான காமாட்சியுடன் நடந்தார் அவர். 

 

இணையாள் காமாட்சியோ.. இருக்கும் விக்கிரகங்களைத் தொட்டு.. கன்னத்தில் போட்டுக் கொண்டே வந்தவரின் கண்களில் அத்தனை பக்தி!! 

 

நெற்றியில் விபூதியுடன் ..கோயிலைச் சுற்றி வந்து கொண்டிருந்த கணம் அது.

 

அவர்களைக் கடந்து நடுத்தர வயது பெண்கள் இருவர் பேசிக் கொண்டே செல்வது இவர்களின் காதுகளும் நன்றாகவே விழுந்தது .

 

“இளம் வயசுலயே நல்ல இளகின மனசு..யாருக்கும் இல்லைன்னு சொல்லாம உதவும் மனப்பான்மைப்பா அந்த தம்பிக்கு?”

 

“நீ யார சொல்ற?”

 

“எல்லாம் நம்ம சென்னை தம்பி..ஹம்ரித் அருள் ஜோதிய தான் சொல்றேன் ..”

 

“போனவாரம் கூட நம்ம ஹம்ரித் சாரு.. நூறு..சேலை ,வேட்டி,சட்டை, எடுத்து கொடுத்தாரு தெரியுமா ?கடல் கடந்து வந்து உதவி பண்ண யாருக்கு மனசு வரும்?” என்று பேசிக் கொண்டு போகலாயினர்,அப்பெண்மணிகள்.

 

இங்கே அதைக் கேட்டுக் கொண்டிருந்த செந்தில்- காமாட்சி தம்பதியினரோ..தாங்கள் கேட்டது நிஜம் தானா என்பது போல அதிர்ந்து நின்றனர் ஒரு கணம்.

 

ஆம்,அவர்கள் கேட்ட நாமம் சரி தான். ஹம்ரித் அருள் ஜோதியைத் தான் அப்பெண்களும் அவனது ஈகை குணம் கண்டு சிலாகித்து புகழ்ந்து பேசிக் கொண்டே போயினர்!! 

 

அதை புரிந்து கொண்டதும்.. ‘இந்த காலத்தில் இப்படியொரு பிள்ளையா?’ என்ற வியப்பு மேலோங்கவே செய்தது இரு முது தம்பதியினருக்கும்.

 

அப்பெண்மணிகள்..இவர்களின் கண்பார்வை வட்டத்தை விட்டும் சென்று மறைய அந்தப்பக்கமாக வந்தனர் கோயில் குருக்களும்,அவரது ஒற்றை சிஷ்யனும்!!

 

குருக்களோ. .தன் சிஷ்யனை நோக்கி.. “இந்தக்காலத்துல எவா . நூற்றியெட்டு குடம் பாலாபிஷேகம் ,நூற்றியெட்டு குடம் மஞ்சளாபிஷேகம் , குங்குமாபிஷேகம்னு பண்ணுவா.. எல்லா அந்தப் பிள்ளையாண்டா பண்ணினா” என்று சொல்லிக் கொண்டு போக.. அதைக் கேட்டு.. செந்தில் காதுகளும் கூர்மையானது.

 

செந்திலின் மனக்கேள்வியை புரிந்து கொண்ட சிஷ்யனும் “ஸ்வாமி.. யாரை சொல்றீங்கோ?”என்று கேட்டிருந்தான் .

 

“வேற யாரு..எல்லாம் அந்த அருள் ஜோதி பிள்ளையாண்டான் தான்.. கடவுளுக்கு குறை வைக்காம நிரப்பமா பண்ண பிள்ளைய..அந்த முருகன் தான் ஷேமமா வாழ வைக்கணும்?” என்று கூறிச் செல்ல..இதைக் கேட்டு காமுவின் உள்ளமோ பூரித்துப் போனது.

 

“என்னங்க..இவங்க நம்ம மாப்பிள்ளைய பத்தியா பேசிட்டு போறாங்க..மாப்ள தங்கம் போல இருக்கே” என்று பேசிக் கொண்டிருந்த வேளை.. இன்னும் இரு இளம்பெண்களின் சம்பாஷணை காதுக்குள் கேட்டது.

 

“ஹம்ரித் சார் ..நூறு ஜோடிகளுக்கு இதே கோயில்ல தான் போன வருஷம் இலவசமா கல்யாணம் பண்ணி வைச்சாரு.”

 

“நூறு ஜோடிகளுக்கா!!யாரு நம்ம ஹம்ரித் அருள் ஜோதி சாரா?”

 

‘ஆமாப்பு நூறு ஜோடிப்பு’ என்று இரு பெண்களும் பேசிக் கொண்டிருக்க..இதைக் கேட்டு செந்திலின் விழிகளும் விரிந்தது.

 

“பின்ன யாரு ..அருள் சாரே தான்.. ரொம்ப கருணை உள்ளம் படைச்சவரு தெரியுமா? அதில் ஒருத்தி தான் என் அக்காவும்.. இப்போ கையில் ஒரு மாச குழந்தை..கண்ணுக்கு அழகான கணவன்..மனதுக்கு நிறைவான வாழ்க்கைன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கா!! மாமாவுக்கு வேலை கூட அவர் கம்பெனியில தான் போட்டு கொடுத்திருக்காரு தெரியுமா?”

 

காமுவின் வாயோ,அக்கணம்..ஒரு ஈயே உள்ளே நுழையும் அளவுக்கு திறந்தது.

 

அக்கணம் மறுபெண்ணோ..“ஹம்ரித் சார கல்யாணம் பண்ண போற பொண்ணு..கொடுத்து வைச்சவ.. இந்த மாதிரி ஒரு பையனை எந்த பொண்ணு வேண்டாம்னுவா.. குணத்துல தங்கம்..” என்று இன்னும் பல எக்ஸ்ட்ரா பிட்டுக்களை..செந்தில்- காமாட்சி தம்பதியினரின் காது படவே சொன்னார்கள் அவர்கள் .

 

இரு இளம்பெண்கள் பேசிவிட்டு.. அவர்களின் கண்ணில் நின்றும் மறைய.. இவர்களுக்கோ.. மறைந்த நடிகர் விஜயகாந்த்தே..மறுபிறப்பு எடுத்து வந்தது போல மனமெல்லாம் இளகி உருகிப் போயிற்று.

 

கண்களில் ஆனந்தக் கண்ணீருடன்.. “நம்ம மாப்ள..ஒரு நடமாடும் வள்ளல்டீ காமு” என்று சொல்லிக் கொண்டே.. இன்னும் சற்றே நகர்ந்தனர்.

 

அங்கே வாயிலில் பிச்சை எடுப்பதற்காக..தன் தலையிலிருந்த தொப்பியை கவிழ்த்திப் போட்டு அமர்ந்திருந்தான் ஒரு வெள்ளையன் ஒருவன்.

 

அவனைக் கண்டதும் கழிவிரக்கம் மிக ..காமுவோ , “ஐய்யோ பாவங்க.. அஞ்சோ பத்தோ இருந்தா போட்டுட்டு வாங்க” என்று சொல்ல.. இவரும் பழக்க தோஷத்தில் சட்டையில் தேடினார்.

 

ஒன்றும் தட்டுப்படாமலேயே போனது.

 

“என்ட்ட எங்கேடி காசு..?எல்லாமே இண்டியன் ருப்பீஸா தான் இருக்கு !” என்றுரைக்க அதைக் கேட்டிருந்த வெள்ளையனும் தமிழிலேயே வாய் திறந்தார்.

 

“சார் நீங்க டமிழா?ப்ரொம் இன்டியா சென்னை?ஹம்ரித் சார் நேட்டிவ் ப்ளேஸ்??”

 

“ம்..ஆமா!!” என்றார் செந்தில் தயங்கித் தயங்கி!!

 

“நீங்க கேஷ் போடழேன்னா கூட நோ ப்ராப்ளம்.. ஹம்ரித் சார் வண்டாலே..ஹீ கிவ்ஸ்..தவுசன்ட் டாலர்ஸ் .. அவர் ஊர் காரங்கள்ல..நீங்க நழ்ழாருப்பீங்க” என்று கையெடுத்துக் கும்பிட..

இதைக் கேட்டிருந்த செந்திலுக்கோ ஏக பெருமிதம்!!

 

 இங்கே கணவனும்,மனைவியும் தங்களுக்குள் அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக் கொள்ளலாயினர்.

 

“பார்த்தீயாடி மாப்ளைய.. கடல்ல கடைந்தெடுத்து தேடினாலும் இப்டியொரு மாப்ள கெடைப்பாரா நம்ம பொண்ணுக்கு”

 

“என்ன பண்றதுங்க..அவ ஒத்துக்கணுமே.. இவல்ல வேணாம்னு நிற்கறா?”என்று கவலையுடன் எண்ணிக் கொண்டு காமாட்சி சொல்லிக் கொண்டிருந்த கணம் அது .

 

அவர்களுக்கு கண்மறைவில் வந்த அந்த இரு முகம் தெரியாத பெண்களோ நேரே போய் நின்றனர்,கோயில் சுவற்றில் சாய்ந்த வண்ணம் நின்றிருந்த ஹம்ரித்தின் பிஏவிடம். அவன் பெயர் ஜனார்த்தனன்.

 

பெண்கள் மட்டுமா நின்றிருந்தனர் ?

 

வரிசையாக கோயில் குருக்கள்- சிஷ்யை வேஷமிட்டவர்கள்,இரு நடுத்தர வயது பெண்மணிகள்..அந்த உள்ளூர் ஆங்கில யாசகன் என எல்லாரும் வரிசையாக நின்றிருந்தனர் .

 

தன் பாஸ் கட்டளையிட்டதற்கு ஏற்ப ..இரண்டு மூன்று நபர்களைப் பிடித்து.. அவனைப் பற்றி.. “நல்லவன்..வல்லவன்..நாலுந் தெரிந்தவன்’ என்று அவளின் பெற்றோர்கள் காதுபட பேசச் சொல்லியிருந்தான் வர்தன் .

 

ஆக.. செந்தில்நாதனின் காதுபட அடித்து விட்டது அத்தனையும் கப்சாவே தான்.

 

ஜனா..நூறு டாலர் கற்றையை எடுத்து..ஆளுக்கு ஒவ்வொரு நூறு டாலராகக் கொடுக்க..அதை வாங்கிக் கொண்டவர்களோ.. “எம்மாம் பெரிய வேலை பண்ணியிருக்கோம்..நூறு டாலர் கொடுக்குறீயே?”என்று குறைப்பட்டுக் கொள்ளவும் செய்தனர் அவர்கள்.

 

“ஓசி சரக்குக்கு நூறு டாலரே ஜாஸ்தி..உங்க ஓவர் ஆக்ட்டிங்க் இது போதும்..மூடிக்கினு கெளம்புங்க” என்று அவர்களை அங்கிருந்தும் விரட்டியனுப்பி வைத்தான் ஜனா.

 

மிகுதி கற்றை நோட்டுக்களை தன் சட்டைப்பையில் அடக்கிக் கொண்டு .. நாயகியின் பெற்றோர்களை நாடி கார் தரிப்பிடம் வரை வந்திருந்தான் ஜனா.

 

செந்தில்நாதன் முன்பு ,பவ்யமாக குனிந்து நின்றவனோ, “சாமி கும்பிட்டுட்டீங்கன்னா.. கெளம்பலாமா?? ஹம்ரித் சாரோட அசிஸ்டென்ட் நானு.. அவர் கூடவே வலது கையா ஒட்டிட்டு இருப்பேன்..ஆனா இன்னிக்குன்னு பார்த்து என்ன தோனுச்சோ..உங்க பக்கத்துலயே நின்று..உங்க ரெண்டு பேருக்கும் தேவையானதை எல்லாம் கிட்ட நின்னு பார்த்து பார்த்து செய்யணும்ன்றது சாரோட உத்தரவு..காசு கொடுக்கற பாஸ் ..அவர் சொல் மீற முடியுமாங்க? நீங்க வாங்க..நான் நம்ம கார்ல கூட்டிட்டுப் போறேன்” என்று வெளியேறும் வழியைக் குனிந்து காட்டினான் ஜனா.

 

ஜனா காட்டிய மரியாதையில்.. நம் செந்திலோ..உள்ளுக்குள் ‘சென்னையில ..பெட்ரோல் பங்க் பையன் கூட மதிக்க மாட்டான்..ஆனா இங்கே..ஹம்ரித் சொன்ன சொல்லுக்கு..இப்டி மரியாதையா?’என்று பூரித்துப் போய்விட்டார்.

 

இருவரும் ஜனா சாலையில் ஓர் ஓரமாகத் தரித்து வைத்திருந்த இடத்திலிருந்த காரை நோக்கி நடந்தனர்.

 

செந்தில் நாதன்- காமாட்சி காரில் ஏறும் வண்ணம்..தானாகவே வண்டியை திறந்து இடைவரை குனிந்தும் நின்றான் ஜனா.

 

“எதுக்குப்பா இப்டி..நாமளே பண்ணிக்க மாட்டோமா?” என்று காமாட்சி கேட்க..

 

இவனோ.. “எல்லாம் பாஸோட ஆர்டர்” என்று சொல்லி ஒற்றை சொல்லில் பதில தந்தான், பவ்யத்திற்கே பிறந்த ஜனா.

 

காரின் சீட்டுக்களோ அத்தனை ஜம்மென்றிருக்க..காருக்குள் மினி பார் ,காக்டெயில் வசதிகள் எல்லாமும் இருக்கக் கண்டு ஒரே வியப்பு!!

 

அதிலொரு பீரை எடுத்துக்கொள்ள கைகள் படபடத்தாலும்.. “இப்போ தானே பக்தி மோடுக்கு போய் வந்தோம்..திரும்ப பரவச மோடு வேணாம்” என்று தன்னைத் தானே அடக்கிக் கொண்டு வர பெரும்பாடு பட்டுப் போனார் செந்தில்.

 

பேசிக்கொண்டே சாலையில் ஸ்மூத்தாக வண்டியை ஓட்டலானான் ஜனா.

 

“ஆமா..உங்களுக்காகவே ஸ்பெஷல் ஆபர் ஒண்ணு பாஸ் கொடுக்க சொல்லியிருக்காரு” என்று ஜனா பீடிகையுடன் தொடங்க..செந்திலுக்கோ வேறு எண்ணம்.

 

“என்ன ஆபர்ப்பா.. பாரிலிருந்து விஸ்கி ,ரம்,பிராந்தின்னு எது எடுத்தாலும் ப்ரீயா?” என்று இவர் முந்திரிக்கொட்டை போல முந்திக் கொண்டு சொல்ல..அவர் கைக்கு பட்டென்று ஓர் அடி போட்டார் காமாட்சி.

 

“என்ன காமு?”

 

“ இங்க வந்தும் உங்க புத்திய காண்பிக்காதீங்க..கொஞ்சம் அடக்கிவாசிங்க”

 

“பாரின் சரக்கோட மகிமை..உனக்கென்னடி தெரியும்..போடீ வெண்ணமவளே” என்று இவர் முணுமுணுப்பாக அங்கலாய்த்து.. மனைவியிடம் உச்சந்தலை மேலேயே கொட்டு வாங்கிக் கொண்டார் அவர்.

 

வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த ஜனா.. செந்தில் வலியில் கத்த முடியாமல் உச்சந்தலையை தேய்த்து விட்டுக் கொள்வதை..ரியர்வீவ் கண்ணாடி வழியாகப் பார்த்தான்.சிரிப்பு குபுக்கென்று முளைத்தாலும்..அதை கட்டுப்படுத்திக் கொண்டு..தான் பேச நாடியதை சொல்ல வாய் திறந்தான்.

 

“வேல்ர்ட் டூர் பேக்கேஜ் ஒண்ணு..லம்பா இருக்கு சார் நம்மக்கிட்ட.. முதல் மூணு வாரம் நெதர்லாந்து..அடுத்த மூணு வாரம் ஜெர்மனி ..இன்னும் மூணு வாரம்..பாரீஸ்னு.. எல்லாமே யூரோப்பியன் கன்ட்ரீஸ் டூர் சார்.. இரண்டு டிக்கெட்”.என்று பேசிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டிருந்தார் செந்தில்.

 

இரண்டு டிக்கெட் என்றானதும் ,தன் அருமந்தப் புத்திரியை விட்டு தாங்கள் மட்டும் போகப் போகும் டூர் என்று நினைத்துக் கொண்டார் போலும்!!

 

“நாங்க எப்படிப்பா பாப்பா விட்டு வர்றது ?பாப்பான்னா எங்களுக்கு.. உயிரு.. அவ எல்கேஜி போனப்ப கூட அவளை விட்டு பிரியல..கேட்டு வாசல்லயே தவம் கிடந்தோம் நாங்க..இல்லடீ” என்று பக்கத்திலிருந்த மனைவியையும் துணைக்கு அழைத்தார் செந்தில்.

 

உடனே அந்தம்மாவும்.. “ஆமாமா..பாப்பா விட்டு நாங்க வர மாட்டோம்.” என்று சொல்ல..ஜனாவுக்கோ..அவர்களின் மறுப்பை பதிலாக வாங்கிக் கொள்ள இஷ்டமில்லை .

 

டிராகன் பாஸிடம் போய் இதைச் சொன்னால் மிதி அல்லவா கிடைக்குமா? தன் வாய் திறந்து நெருப்பு உமிழ்ந்து .. தீயாலேயே கருக்கி விடக்கூடும் அல்லவா ஹம்ரித்தும்??

 

கூடவே ஹம்ரித் இன்று காலை சொன்னதெல்லாம் காதுக்குள் சமயசந்தர்ப்பமே பாராது ஒலித்து ஓய்ந்தது.

 

“நீ என்ன பண்ணுவீயோ..ஏது பண்ணுவீயோ ஐ டோன்ட் கேர்..கோயில்ல இருந்து நேரா வந்ததும்..மிஸ்டர் அன்ட் மிஸஸ் செந்தில் ரெண்டு பேரும்..இங்கே இருந்து கெளம்பி இருக்கணும்..மெய் சொல்வீயோ..பொய் சொல்வீயோ..அது உன்பாடு..ஆனா எனக்கும்,நயன்க்கும் நிறைய தனிமை வேணும்..ஏற்பாடு பண்ணு..” என்றது நினைவு வந்தது.

 

எப்படியாவது இருவரையும் கிளப்பிவிட எண்ணம் கொண்ட ஜனாவோ..இன்னும் இன்னும் பிட்டுக்களாக அவிழ்த்து விடலானான்.

 

“சரி விடுங்க..உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்ளவு தான்..என்ன பண்ண?? பேக்கேஜ் பூரா ஃபுல் ஆயிருச்சு. கடைசி நேரத்துல உங்கள போல ஒரு ஜோடி ..வரலைன்னு கேன்சல் பண்ணிட்டாங்க.. இந்த ரெண்டு டிக்கெட்..ப்ரீ..ஒத்த பைசா செலவழிக்க தேவையில்லை.. ஏன் துணிமணி காஸ்ட்யூம் ,காசு..உண்ண உறங்க எல்லாமே அந்த கம்பெனியே பார்த்துக்கும். உங்களுக்கு வாய்ச்சது அவ்வளவு தான்” என்றிட..செந்திலின் இரு கண்களும் அங்குமிங்கும் நகர்ந்தது.

 

காமாட்சியோ.. “ஏங்க உங்க அவசரக் குடுக்க வாய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா.. ஐரோப்பிய நாடுகள்ல ஒரு டூர்ன்றது நாம நினைச்சுப் பார்த்தாலும் கிடைக்குமா??இதுல எல்லாமே ஃப்ரீயாம்..அது போக நாங்க கொஞ்சம் மாப்ளையோட நம்ம பொண்ண பழக விட்டா தானே ரெண்டு பேரும் ஒருத்தரையரொருத்தர் புரிஞ்சுப்பாங்க..நாம பக்கத்துலயே இருந்தா எப்படி அந்த ஸ்பேஸ் கிடைக்கும்.நம்ம பொண்ணும் மனசு மாறி கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வாய்ப்பிருக்கு..தத்தி புருஷா..உங்க அவசரத்தனத்துல எல்லாமே போச்சு..”என்று குசுகுசுவென்று பேசலானார்.

 

“ஓ..இதுல இவ்ளவு விஷயம் இருக்கா ..இப்ப பாரு .. எப்படி இந்த டீல ஓகே பண்றேன்னு” என்று குசுகுசுவென இவரும் பதிலுக்கு பேசி விட்டு குரலை கனைத்துக் கொண்டு நிமிர்ந்தார்.

 

ரியர்வீவ் கண்ணாடி வழியாக அனைத்தையும் பார்த்திருந்தவனுக்கோ பாம்பு காது.எல்லாமும் டிராகன் அசிஸ்டென்ட்டும் கூட கேட்டிருந்தான்.

 

இருந்தாலும் முகத்தில் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிற்க..இவர் தான் இடையிட்டார்.

 

“ய்யேப்பா அது என்ன ஆபர்ப்பா??”

 

“என்ன ஆபர் சார்?”என்று ஜனாவும் அந்த விஷயத்தையே மறந்து விட்டது போல திரும்பக் கேட்டிருந்தான்.

 

“அதான் ஏதோ..ஜெர்மனி மூணு வாரம் ..நெதர்லாந்து மூணு வாரம் ..அப்டி இப்படின்னு ஏதோ சொன்னீயேப்பா அந்த ஆபர்?”

 

“அது தான் உங்களுக்கு பிடிக்கலையே அங்கிள்..விடுங்க ..இன்னாருக்கு இன்னதுன்னு எழுதி வைச்சது தானே நடக்கும்..உங்க தலையில எழுதலை போல இருக்கு..” என்று எரிந்து முடிந்த தணலில் தூபம் போட்டு..இன்னும் புகைய விட்டான் ஜனா.

 

உடனே நம் செந்திலோ.. நைச்சியமாக பேசி அந்த ஆஃபரை ஓகே செய்ய ஆவன செய்ய விழைந்தார்.

 

“நீ வேற ரொம்ப மனசுவருத்தப்படுற..கெஞ்சவும் செய்ற.. சரி போனா போகுது.. நானும்,காமுவும் வர்றோம்”

 

“இவ்வளவு கஷ்டப்பட்டுல்லாம் எங்கேயும் வர வேணாம் அங்கிள்…உங்க பொண்ணு கூடவே இருங்க”

 

“யேம்ப்பா..யேன்..ஒரு பெரிய மனுஷன் சொல்றேன்ல..காது குடுத்து கேட்கணும்னு பழக்கம் இல்ல..ஆமா நாங்க வர்றோம்..ரெண்டு டிக்கெட் எங்கள்து.புக்டு.. (booked)” என்றார் காட்டமான குரலில்.

 

“அதுலாம் முடிகிற காரியம் இல்ல அங்கிள்.. இப்போ மணி எட்டு.. பத்து மணிக்கு ஃப்ளைட்..நீங்க போயி..எல்லாத்தையும் பேக் பண்ணி வர்றதுக்கே மணி பன்னென்டு ஆகிரும்”

 

“நாங்க எங்கே வந்ததும் லக்கேஜ பிரிச்சோம்?..வந்ததும் கோயிலுக்கு போகணும்னு கட்டுன சேலைய கூட மாத்த விடாம ..அழைச்சுட்டு வந்துட்டாரு தம்பி.. அதெல்லாம் ஒரு லேட்டும் கிடையாது..எல்லாம் கெளம்பிரலாம்” என்று காமாட்சியும் களத்தில் உற்சாகமாக குதிக்க..டிராகன் அசிஸ்டென்டுக்கோ உள்ளுக்குள் ஒரே சிரிப்பும் கும்மாளமும்!!

 

ஆசை-12

 

நேரே காரும் வீட்டில் வந்து நிற்க..அந்த அரண்மனை போன்ற வீட்டிலோ எக்கச்சக்கமான உறவுகள்!!

 

காமாட்சியோ..தன் கணவன் காதில், “கோயிலுக்கு கெளம்பும் போது..அம்மாவும்,பையனும் மட்டும் தானே இருந்தாங்க ..இப்போ இத்தனை பேரு எங்கேயிருந்து வந்தாங்க ..நம்ம வேற வீட்டுக்கு வந்துட்டோமோ” என்று கேட்டார்.

 

கணவனோ..ஒரு படி மேலே போய்.. “ஆமாடி..எனக்குமே இந்த டவுட்டு இருக்கு .இருடீ பார்த்துட்டு வர்றேன் .” என்று குடுகுடுவென ஓடிப் போய்..மேன்ஷனின் பெயர்ப்பலகையைப் பார்த்தார் செந்தில்.

 

“ஹம்..ரித் மேன்..ஷன்!! சரியா தான் வந்திருக்கோம்” என்று இவர் திரும்பவும் குடுகுடுவென ஓடி வர.. இங்கே தலையில் அடித்துக் கொண்டான் ஜனா.

 

“பாஸோட பீஸூ தான் லூசுன்னு பார்த்தா ..பாஸோட மாமனாரும் லூசு போலிருக்கே” என்று முணுமுணுத்துக் கொண்டான் மைன்ட் வாய்ஸிலே!!

 

“இருடீ..இன்னொரு தடவை..கண்ணாடிய துடைச்சு போட்டுட்டு போட்டு பார்த்து வர்றேன்” என்று ஓடப் போனவரை..கைகள் நீட்டிப் பிடித்துக் கொண்டான் ஜனா.

 

“அங்க..அங்கிள்..நீங்க சரியான மேன்ஷனுக்கு தான் வந்திருக்கீங்க..இது என் பாஸோட வீடு தான்.. உங்க பொண்ணபார்க்க..அதான் என் பாஸோட பியன்சிய பார்க்க.. கனடாவுல இருக்க அவரோட சொந்தக்காரங்கலாம் வந்திருக்காங்க .. வேறொண்ணுமில்ல..வாங்க உள்ளே போகலாம்” என்று தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளே அழைத்துச் செல்லலானான்.

 

உள்ளே போனதும்..அந்த பிரம்மாண்டமான வரவேற்பறையில்.. போடப்பட்டிருந்த ஆறேழு சோபாக்கள் நிறைய சொந்தங்கள்!!

 

ஒரு பக்கம் போலிப் பல்லு செட்டுப் போட்ட கிழவிகள் !!

 

மறுபக்கம் .. முடி நரைத்தாலும் டை போட்டு தங்களை அழகாக காட்ட எத்தனிக்கும்..ஆன்ட்டிகள்!!

 

அழகாய் பண்டிகைக்கு ஆடை அணிந்தது போல தாவணி அணிந்த இளங்குமரிகள்!!

 

இவர்களுக்கு நடுநாயகமாக..இளவரசி போல சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் அவள்!!

 

எப்போதும் சிங்கிளாக இருந்த தன் மகளைச் சூழ..இத்தனை சுற்றங்கள் சூழ்ந்திருப்பதும்,அதில் தன் மகள் மகிழ்ச்சியாக திளைத்திருப்பதும் கண்டு.. பெற்றோர்களுக்கும் கண்ணெல்லாம் ஆனந்தத்தில் கலங்கிப் போயிற்று.

 

“காமு.. கிரீடம் இல்லாதது ஒண்ணு மட்டும் தான்டி குறை.. இல்லேன்னா என் பொண்ணு மகாராணி மாதிரி இருப்பா”

 

“கிரீடம் இல்லேன்னாலும் அவ மகாராணி தாங்க..இவ்ளோ சந்தோஷமா அவள பார்த்ததேயில்லைங்க..எவ்ளோ ஹேப்பியா இருக்கா..இந்த வரன் தகையணும் முருகா” என்று வானம் பார்த்து எக்ஸ்ட்ரா வேண்டுதல் வேறு வைத்தாள் அவள்.

 

ஆனால் அங்கிருந்த அவனது அம்மாவும் ,அவன் வீட்டு சொந்தங்களும் அனைத்தும் மாயம்,மேஜிக்..அவன் செட் பண்ணியது என்றறியாமல்..அப்பாவி காமுவும்,செந்திலும் இஷ்டத்திற்கு உருகி ஊற்றிங்க் சென்ட்டிமன்ட்டை!!

 

தாய் மட்டும் இருக்கும் வீட்டில் வயசு பெண்ணை விட்டுச்செல்ல எந்த பெற்றோர்களும் சிறிது சிந்திப்பார்கள் இல்லையா?

 

அந்த மன முரண்டுதல் சிறிதும் அற்று.. ‘ பாதுகாப்பான இடத்தில் பிள்ளையை விட்டுச் செல்கிறோம்” என்ற முழு நம்பிக்கையுடன் அங்கிருந்தும் உலக நாடுகளுக்கான சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவனது அவா!!

 

தந்தையும்,தாயும் வாசற்பக்கம் உருகியவர்களாக பார்த்திருப்பது கண்டு,தன்னிடத்தில் நின்றும் விருட்டென்று எழுந்தாள் நயன்.

 

“அம்மா..அப்பா” என்று ஓடி வந்து..தன் தந்தையை அன்போடு கட்டிக் கொண்டாள் அவள்.

 

“அம்மா..நம்மள்த விட ..ஹம்ரித் குடும்பம் பெருசுப்பா..இதோ இது சித்தி..இது அவங்க மூணு பொண்ணுங்க ..இது பெரியம்மா..இது அத்தைங்க..இதுலாம் ஹம்ரித் கஸின்ஸ்.. எல்லாமே முறைப்பொண்ணுங்க”என்று ஒருவரை கூட விட்டு வைக்காமல் அத்தனை பேரையும் தன் தாய் ,தந்தையருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் அவள்.

 

எல்லாரும் தத்தம் பங்குக்கு இன்முகமாக வணக்கம் கூறி வரவேற்கலாயினர்.

 

“இத்தன முறைப்பொண்ணுங்க இருந்தும் உன்னை பொண்ணு கேட்டு வந்திருக்காருன்னா.. மாப்பிள்ளைக்கு என் பொண்ணை எவ்வளவு பிடிச்சிருக்கணும்” என்று செந்தில் வியந்து நின்ற கணம் அது.

 

அக்கணம்..அவர்களை நோக்கி..தன் அழுத்தமான எட்டுக்களுடன் கீழிறங்கி வந்தான் நாயகன் ஹம்ரித்!!

 

அவன் தன்னையே தின்னும் பார்வை பார்த்தவனாக இறங்கி வருவது கண்டு..இவளின் இதயமோ திக் திக் என்று அடித்துக் கொண்டது.

 

ஆனாலும்,அவன் தான்.. ‘மாலைக்கண் நோய் கொண்டவன் ஆயிற்றே..இந்தப் பார்வை அவளைப் பார்க்கும் பார்வை அல்ல’ என்று தனக்குத்தானே சொல்லி சமாதானப்படுத்திக் கொண்டு.. அதனை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமலிருக்க பிரம்மப் பிரயத்தனம் செய்து அவள் நின்றாள்.

 

செந்திலோ இவளை நாடி வந்து..சுற்றுலா பயணம் பற்றி அனைத்தையும் சொல்ல அவளுக்கும் தாய் ,தந்தையர் டூர் செல்வதில் சிறு மனக்குறை கூட இல்லை!!

 

“நான் பொறந்ததுல துணையா என்கூடவே இருந்திருக்கீங்க நீங்க..உங்களுக்குன்னு எதையும் அனுபவிச்சதில்லைப்பா நீங்க .இப்ப இயற்கையே உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் போது நான் குறுக்க நிற்க விரும்பலை..நீங்க போய் வாங்கப்பா.. லக்ஷ்மி அம்மா பார்த்துப்பாங்க” என்று ஹம்ரித்தின் தயாரைப் பார்த்து சொன்னவள், அவர்களுக்கு விடை கொடுக்க தயாரானாள்.

 

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மாய டிராகன் அம்மாவும், அவளது உச்சந்தலையை வருடியவராக, “ஆமாண்ணா..நீங்க சந்தோஷமா போய் வாங்க..இனி நயன் எங்க பொறுப்பு..நாங்க எல்லாரும் அவளை நல்லா பார்த்துப்போம்” என்று பேச.. மகள் பற்றி அத்தனை நம்பிக்கை இவர்களுக்கும்.

 

கிளம்பும் முன்..மகள் நெற்றியில் இதழ் ஒற்றி முத்தம் கொடுக்க..இவளுக்கும் தன் பெற்றவர்களைப் பிரிவதில் உள்ளூற பெரிதும் வருத்தம் தான் .

 

தாய்,தந்தையர் சந்தோஷமாக உலகச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளட்டும் என்ற எண்ணத்துடன் அங்கிருந்தும் ,அவர்களுக்கு விடை கொடுத்தாள் அவள்.

 

அவள் கண்கள் கலங்கி நிற்பது மனதுக்குள் கவலையைக் கொடுத்தது ஹம்ரித் என்னும் டிராகன் ஆதித்ய வர்தனுக்கு. அவளைத் தோளோடு அணைத்துத் தேற்றிட ஆசை தான்.

 

இருப்பினும்,இடம்,பொருள்,ஏவல் கருதி..தன் காதல் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தது டிராகன்.

 

ஆசை-12

 

மறுநாள் காலை.. அவளை தன் நவீனரக காரில் ராணி போல அழைத்துக் கொண்டு..தான் அவளுக்காகவென்றே உருவாக்கியிருந்த சாப்ட்வேர் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றிருந்தான் அவன் !!

 

கார்..அவனது அலுவலகக் கட்டிடத்தின் முன்பாக நின்றதும்.. இவனது காரின் கதவைத் திறந்துவிட ஓடி வந்தார் அலுவலகத்தின் காவலாளி .

 

அவரை வர வேண்டாமென்று ஒற்றைக் கையில் தடுத்தவன். ஸ்டைலாக ,அவனது கூலர்ஸை

கண்களில் மாட்டிக் கொண்டே காரை விட்டும் இறங்கினான் அவன் .

 

அக்கணம்..அவனது அந்த சின்ன மேனரிஸம் கூட..ஏனோ காரினுள் அமர்ந்திருந்த நயனுக்கு..அவனை..தன் டிராகன் காதலனை நினைவுறுத்தாட்டிப் போனது.

 

டிராகன் இளவரசன் ஆதித்ய வர்தனைப் போல நடை,உடை ,பாவனை என எல்லாமே..இவனிலும் இருக்கக் கண்டாள் அவள்.

 

ஆனால் ,என்ன டிராகன் வர்தாவின் கண்கள்..தங்கநிறத்தில் பார்த்ததும் இவன் அமானுஷ்யன் என்று கட்டியம் கூறும் வகையில் மிளிரும்!!

 

ஆயினும்,தன் முன்னே நடமாடும் கனடாகாரனின் விழிகளோ..கருகருவென மனித விழிகளாட்டம் இருக்கவே இவளும் கூட சற்றே யோசிக்கலானாள்.

 

உண்மையில் நம் டிராகனோ.. அவளிடம் ஒன்றுமறியாத அப்பாவியாக விடுதலையான கணம்.. நன்கே க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட முகத்துடன்..மீசையுடன் இருந்தான்.இப்போது விண்ணுலகிலுள்ள தன் உலகத்திற்கு போய் வந்ததன் பிற்பாடு.. இங்கோ புது மனிதனாக தாடி வைத்து..தன் ஹேர்ஸ்டைலை மாற்றி ஆளே தெரியாதவனாக மாறிப் போயிருந்தான் அவன்.

 

‘மரு வைத்தால் மாறு வேஷமா? மாறு வேஷத்துக்கான மரியாதையே போச்சேப்பா’ என்பது போலத் தான்.. இருந்தது அவனது அவதாரம்.

 

ஆனால் நம் நாயகி நயன் தான்..டிராகனே கலாய்த்த உலகமகா அறிவாளியாயிற்றே??

 

‘குழந்தாய் இன்னுமா என்னை தெரியவில்லை..என் கண்களை சற்றே உற்றுப்பார்’ என்று பக்தி படத்தில் வரும் சாமியே சொல்வது போல..இவனே சொன்னாலே ஒழிய

 தெரியவே தெரியாது போல.

 

தன் காரை விட்டு இறங்கியவன்..இவள் புறமாக ஓடி வந்து கதவினைத் திறந்து அவளுக்காக கைகளையும் நீட்டியிருந்தான் ஹம்ரித் .

 

அவனது கைகளோடு தன் கைகளைப் பதித்து இறக்கிய கணம்..இதோ இருவர் கைகளும் தீண்டிப் போனதில்..இவனுள்ளும் அடித்தது ஷாக்!!

 

கண்கள் இரண்டும் காதலில் சிவப்பு நிறத்தில் பரிமளிக்க..அவள் கைகளை நித்தமும் பற்றிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது போல வெறியே வந்தது அவனுக்கு.

 

இருந்தாலும் சிவப்பு நிறத்தில் மின்னிய தன் விழிகளை..கருமையாக்க படாதபாடு பட்டுப் போனான் டிராகன்!!

 

அவள் இறங்கியதும்..தன் ஆபீஸ் கண்ணாடிக்கதவுகளைக் காட்டி.. “போலாமா?” என்று சொல்ல..இவளும் இன்முகமாகத் தலையாட்டினாள்.

 

உள்ளே அவனது அலுவலகத்தின் முதல்நிலை ஊழியர்கள் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை.. அங்கே மலர்க்கொத்துக்களுடனும் பூச்செண்டுகளுடனும் ஆஜராகி இருந்தனர்.

 

வீட்டிலே இருந்த இவனது உறவுகள் யாவரும் வேண்டுமானால் மாயமந்திரத்தில் உருவானவர்களாக இருந்த போதிலும்..இங்கே ஒவ்வொரு டீம்களில் உள்ளவர்கள் கடினமான நேர்முகப் பரீட்சைகளுக்குப் பிறகு .மிக மிக திறமையுள்ளவர்களை மாத்திரம் கடைந்தெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே!!

 

அப்படியாப்பட்ட திறமைசாலிகளை..நம் அராத்து எம்.ஈ என்ஜினீயரிங் பெண்ணை வரவேற்க வரிசையாக நிறுத்தியிருந்தான் அவன்.

 

உள்ளே நுழைந்ததும் அவள் மீது மலர்மாரி பொழிய .. ‘ப்ரின்சஸ் டீரிட்மென்ட்’ என்பார்களே .அது போல..வரவேற்கப்பட்டாள் அவள்.

 

“திஸ் இஸ் மை நியூ பிஏ அன்ட் பியான்சி..” என்று அவள் இன்னும் திருமணத்திற்கு ஒத்துக்காத போதும் கூட இவள் தன்னவள் என்ற உரிமையில் அறிமுகப்படுத்தியும் வைத்தான் அவன்.

 

அவர்களும் பெரும் கரகோஷங்களை எழுப்பி.. ‘வெல்கம் மேம்..வெல்கம் டூ அவர் கம்பெனி’ என்று மலர்க்கொத்துக்களைக் கொடுத்து வரவேற்றனர்.

 

முத்துப்பற்கள் விகசிக்க சிரித்தபடி..தன் கன்னம் மறைத்து விழுந்த கார்க்குழல் கற்றையை ஒதுக்கியவளாக.. “தேங்க் யூங்க தேங்க் யூ சோ மச்”என்ற வண்ணம் மலர்ச்செண்டு பற்றியவளை..விழிகள் நயந்து பார்த்திருந்தான்.

 

அக்கணம் ஆபீசின் லிப்ட் திறக்க.. சடுகுடுவென அரக்கப் பறக்க ஓடி வந்திருந்தான் அவனது ஒரிஜினல் அசிஸ்டெண்ட் ஜனா.

 

இந்தம்மா டூப்பு அசிஸ்டென்ட்!! 

 

கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளாதவளை..தன் கூடவே இருத்தி வைக்க அவன் போட்ட ப்ளானுக்காக..ஒரிஜினல் பிஏ ஜனா.. நிழல் மந்திரி போல செயற்படவேண்டியதாகிப் போனது.

 

ஜனாவின் கைகளில் மலர்வளையம் இருப்பது கண்டு..அதிர்ச்சியாகிப் போனான் நம் டிராகன்.

 

பெண்ணவளோ..டிராகனுக்கு புறமுதுகிட்டு நின்று..அங்கிருக்கும் ஊழியர்களோடு பேசிக் கொண்டிருக்க ..இவன் பார்வை மலர்வளையத்தின் மீது திரும்பியது.

 

சட்டென ஓரெட்டில் தன் பழைய பிஏ ஜனாவை அணுகியவன்.. “என்ன இது??மலர்வளையம்??என் ஆள் முன்னாடி ..என்னை இன்சல்ட் பண்ண பார்க்கறீயா?” என்று அடிக்குரலில் பற்களை நறுநறுத்த வண்ணம் கேட்டான்.

 

“ஐயோ பாஸ் நீங்க வேற?நம்ம ஆபீஸ் பக்கத்துல இருக்க பொக்கே ஷாப்ல..பொக்கே கிடைக்கலை.. அது மதியம் பன்னென்டு மணிக்கு மேலே தான் புதுப் பூ வருமாம்?? பூரா நம்ம ஆபீஸ்காரங்களா வாங்கிட்டானுங்க போலிருக்கு..சரி அப்ப வெறுங்கையா போனா நல்லாருக்காதுன்னு.. மலர்வளையமாச்சும் கொடுங்கன்னு வாங்கிட்டு வந்துட்டேன் பாஸ்” என்று விட்டு..தடதடவென நயனை நோக்கி முன்னேறிப் போனான் ஜனா.

 

தலையில் அடித்துக் கொண்டு நின்றவனோ சலிப்பான சன்னமான குரலில் , “ஒண்ணு ரெண்டு லூசா இருந்தா பரவாயில்லை . நமக்கு வாய்க்கறது பூரா லூசா இருக்குதுங்களே” என்றவனாக நிமிர..ஜனா ..நயனின் பின் நெருங்கி விட்டிருந்தான்.

 

‘நோ..கூடவே கூடாது’ என்று எண்ணிக் கொண்டவன் தன் நீளக்கைகள் நீட்டி..அவனது கோர்ட் காலரைப் பற்றி..இமைக்கும் நேரத்தில் பின்னாடி இழுத்திருந்தான்.

 

“என்ன பாஸ்..கரெக்ட் டைமுல எதுக்கு பிடிச்சு இழுக்கறீங்க..அப்றம் டைமிங் மிஸ்ஸாகும்ல பாஸ்!!” என்று விட்டு மீண்டும் நயனை நோக்கி நடக்க சித்தமானான் ஜனா.

 

“டேய் இர்றா..இர்றா..” என்று தடுத்து நிறுத்தியவன்..அந்த பொக்கேயை நோக்கி..தன் இரு விரல்கள் இணைத்து ஏதோ காற்றில் அசைத்தான்.

 

அழகான இளநாவல் நிறத்தில் மினுமினுக்கும் துகள்கள் போல காற்றில் பறந்து வந்து மலர்வளையத்தைத் தொட்டது மட்டும் தான் தாமதம்.

 

ஆறடி மலர்வளையமும் ஆனது.ஆறடி நாவல் நிற ஆக்கிட் மற்றும் ரோஜா கொண்ட மலர்க்கொத்தாக!!

 

இவனோ..தன் பாஸின் திறமையைக் கண்டு.. “பாஸ் உங்க மகிமையோ மகிமை பாஸ்” என்று சொல்ல.. இவனும் புன்னகைத்தான் சற்றே பெருமிதத்ததுடன்.

 

“ம்ஹூம்..எனக்குத் தான் புகழ்ச்சி பிடிக்காதுன்னு தெரியும்ல .ம்ம்..போய் கொடு” என்று அனுப்பி வைத்தான் அவன்.

 

இங்கே இவளின் முன் நின்றவன்.. “வாழ்த்துக்கள் மேடம் ..” என்றவன் முணுமுணுப்பாக மைன்ட் வாய்சிலும் பேசலானான்.

 

“எல்லா கம்பெனியிலும் பிஏ தான் பாஸை வரவேற்பாங்க..இங்கே என்னடான்னா பாஸே பிஏவ வரவேற்கறாரு..எல்லாம் லவ்வு போட்டு படுத்துது பாஸ.. யம்மா..என் பாஸ் லவ்வ உணர்ந்து பெருசு பண்ணி லவ் பண்ணி விடுமா?” என்று தன் மனப்புலம்பலையெல்லாம் இவன் புலம்ப ..ஒன்றுமே புரியவில்லை நம் நயனுக்கு.

 

“பார்டன்??” என்று நிஜமாலுமே நம்ம நயன்தாரா போல இந்த நயனும் கேட்க..இவனோ சத்தமாக, “எங்க பாஸ்க்கு.. கண்டிப்பா உங்க திறமையாலும்,அறிவாற்றலாலும் ஹெல்ப் பண்ணனும்னு ரிக்குவெஸ்ட் பண்ணேன் மேம்” என்று சொல்லி சமாளித்தான் அவன் 

 

கனடாவில் இருக்கும் அவனது அலுவலகத்தைச் சுற்றிப் பார்த்தவளோ..விழிகள் விரிந்து வியப்பில் நின்றாள்.

 

அந்த அலுவலகத்தில் என்ன தான் இல்லை? ஜிம்,பூட் கோர்ட்,வாலிபால் கோர்ட்,பேட்மின்டன் கோர்ட்,வீடியோ கேம் ரூம் உட்பட தூக்கம் வந்தால் படுத்துறங்கக்கூட தனியறை!!

 

உள்ளே ..எந்நேரமும் கணினியில் பணிபுரியும் ஊழியர்கள் உடற்சோர்வோ,மனச்சோர்வோ கொண்டிரக்கூடாது என்பதற்காக ..ஆபீஸின் அத்தனை தளத்தினை இணைக்கும் வகையில் ,நடுமையத்தில் உச்சியில் ஓடிக் கொண்டிருந்தது ஒரு நீர்வீழ்ச்சியொன்று!!

 

‘இந்த கம்பெனியையையா?சின்ன சாப்ட்வேர் கம்பெனி என்றான்?? இவனா ஐந்தாறு வருஷத்தில் கோடீஸ்வரன்??இப்படியே போனால் ஐந்தாறு வருஷத்தில் உலகக் கோடீஸ்வரன்களுள் ஒருவனாக அல்லவா இவன் வரக்கூடும்?’ என்று ஏகப்பட்ட எண்ணங்கள் இவளுக்குள்!!

 

அதைக் கேட்கும் எண்ணத்தில் இவள் திரும்ப ..இவளது மனவோட்டத்தினை படித்தது போல பொய் சொன்னான் டிராகன்.

 

மனிதப்பதர்களோடு சேர்ந்து சேர்ந்து..நன்றாகவே பொய் சொல்லக் கற்றுக் கொண்டிருந்தது டிராகன்.

 

“என்ன சின்ன கம்பெனின்னு சொல்லி கூட்டி வந்து இங்க சூப்பர் லக்ஷூரியஸ் கம்பெனி காட்றேன்னு பார்க்கறீயா?”

 

இவள் தலையோ.. “ஆமா” என்பது போல தானாக ஆட..பின்பு.. குழப்பத்துடன் ,“இல்லை” என்பது போல ஆட்டினாள் அதனை மறுத்து.

 

இவனோ அவளது செய்கையைப் பார்த்து குபீரென்று சிரித்து விட்டிருந்தான் கலகலவென்று.

அத்தனை ஆண்மையாக கரகரத்த டெஸ்டெஸ்டரான் குரலில் சிரித்தவனை..இமையாமல் பார்த்திருந்தாள் அவள்.

 

பின்பு சற்றே குரலை தாழ்த்தி.. “இது எல்லாமே ரென்ட்டு தான்மா.. இங்கே எந்த இன்டீரியல் டிசைன்ல வேணாலும் ஆபீஸ் கிடைக்கும்.எல்லாமே வாடகை தான்.. சம்பளம் பத்தாம பாதி பேர் பேப்பர் போட்டுட்டு போய்ட்டானுங்க..சோ சேட்” என்று தன்னிலைக்காக போலியாக வருத்தப்பட்டது டிராகன்.

 

அவன்படும் வருத்தம் தாளாமல் கையைப் பற்றி வருடிக் கொடுக்க..தன்னுணர்ச்சி மாற்றத்தைக் காட்டும் விழிகளை மறைக்க அரும்பாடு பட்டான் அவன்.

 

இவளோ.. “கவலைப்படாதீங்க ஹம்ரித்..அதான் நான் வந்துட்டேன்ல..ராத்திரி பூரா கண்ணு முழிச்சு உழைச்சு..இந்த கம்பெனிய நம்பர் ஒன்னுக்கு கொண்டு வர்றோம் .வாங்க தீயா வேலை பார்க்கலாம்” என்றாள் உறுதி மிளிரும் குரலில்.

 

அதைப் பார்த்திருந்த ஜனாவோ, ‘எல்லா கம்பெனியிலும் பாஸ் தானே ஸ்டாப்ஸ மோட்டிவேட் பண்ணி வேலை வாங்குவாரு..இங்கே என்னடான்னா..பாஸை மோட்டிவேட் பண்றா பிஏ’ என்று குழம்பிப் போய் திரிந்தான்.

 

அங்கே அவளுக்காக பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட கேபினைச் சுற்றிக் காட்டினான் அவன்.

 

எல்லாமே இளஞ்சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்து அவனது ஒட்டுமொத்த கேபினுமே. அதில் ஆங்காங்கே குவளைகளில் இளஞ்சிவப்பு நிற ரோஜா மலர்ச்செண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கூடவே, வெள்ளையும்,இளஞ்சிவப்பு நிறத்திலும் கட்டி வைக்கப்பட்டிருந்தன பலூன்கள்!!

 

பெரிய ரிப்பன்கள் கட்டி வைக்கப்பட்டிருக்க.. இளஞ்சிவப்பு நிறத்தில் கரடி பொம்மைகள் கூட தொங்கின.

 

‘இவனெப்படி எனக்கு இளஞ்சிவப்பு நிறம் பிடிக்கும் என்று அறிந்தான்?’என்று கேள்வி ஓடியது .

 

அப்போதைக்கு அக்கேள்வியைப் புறக்கணித்த நயனோ.. கன்னங்கள் மேல் இரு கைவைத்து பூரித்துப் போக..இவனுக்கோ அவளைக் கண்டு மனசெல்லாம் மத்தாப்பூ.

 

“வாவ்..பியூட்டிபுல் டெக்கரேஷன்..சோ ஸ்வீட்!!” என்று தன்னையும் மீறி டிராகனின் கன்னம் கிள்ளியவாறு கொஞ்சி விட்டு..கரடி பொம்மையைக் கட்டிப் பிடிக்க நகர்ந்தாள் நயன்.

 

இவனுக்கோ..அவள் கன்னம் கொஞ்சி போனதில்.. இறக்கையில்லாமல் வானத்தில் பறக்கும் போது குளுகுளுவென்று தோன்றும் உணர்வு!!

 

இவன் விழிகள் மூடித் திறக்க..அவளோ கரடி பொம்மையைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சியபடி நின்றாள் அவள்.

 

அந்தக் கரடி பொம்மையாக தானிருக்கக் கூடாதா என்று ஏங்கிப் போனது டிராகன்!!

 

இவன் விழிகளில் காதலாட..மூச்சு விடைக்க..ஏங்கி நிற்பது கண்டு.. ஜர்க்காகி நின்று போனான் ஜனா.

 

“பாஸ்.. ஒரு டிராகனே ஜொள்ஸ் விட்றது இன்னிக்கு தான் பார்க்கறேன்..கன்ட்ரோல் கன்ட்ரோல்” என்று சொன்னதும் தான் தன் பழைய விறைப்புடன்..குரலை செருமிக் கொண்டு நின்றான் ஹம்ரித்!!

 

அதே விறைப்பான குரலில் , “மிஸ் கமலநயனீ..?” என்று அவன் அழைத்த தினுசில்..இவள் தன் கார்க்குழல் கற்றை பம்பரமாகச் சுழல திரும்பினாள் அவள்.

 

“ம்ம்” என்று கேட்ட தன்னவளின் இதழ்களை..அப்படியே இரு கன்னம் பிடித்து ..இச் இச் கொடுத்து இம்சிக்க பேராசை!!

 

“பாஸ்!!கனவுல டூயட் பாடினது போதும்..இப்போ நடப்புலகுக்கு வாங்க” என்று உலுக்கிய தன் ஜனாவின் குரலில் தான் மீண்டும் சுயம் தெளிந்தான் அவன்.

 

மீண்டும் விறைப்பாய் முகத்தை மாற்றியவனோ , “மிஸ்.நயனீ.. உங்க சிஸ்டத்துல நீங்க டீ -பக் (debug) பண்ண வேண்டிய கோடிங்க்ஸ் இருக்கும் ..பார்த்துட்டு..எதுனா இருந்தாலும் ..ஜனாவுக்கு அனுப்புங்க..அவன் பார்த்துப்பான்” என்று சொல்ல..இவள் தலையும் ஆடியது.

 

இவளும் தீவிரமாக வேலைப் பார்ப்பது போல தலையை ஆட்டினாலும்,இவளாவது ,அவளுக்கு இட்ட வேலையை செய்து முடிப்பதாவது!!

 

டிராகனும்,ஜனாவும் அங்கிருந்து அகன்றபின்..கணினியை ஆன் செய்தவள் எங்கே சின்ஸியராக வேலை செய்தாள் தானே ?

 

டீபக் கோடிங்க்கை எல்லாம் ஏஐ இடம் கொடுத்து.. விட்டு ஆள் ஒற்றே தூக்கம்!!

 

அவள் வேலைகளை சேர்த்து 

இரண்டாம் முறையாக டீபக் பார்க்கும் படி அத்தனையும் அனுப்பி வைக்கப்பட்டது ஜனாவுக்கு.

 

ஏற்கனவே இருக்கும் வேலை போதாதென்று .. இப்போது இந்த வேலையும் சேர்ந்து கொள்ள..தத்தளித்தான் ஜனா.

 

இது போதாதென்று அடிக்கடி அவன் இன்டர்காமுக்கு அழைத்து , “மேடம்க்கு ஜூஸ் குடு..”

 

 “மேடம்க்கு காபி குடு” , 

 

“மேடம்க்கு நம்ம கேபிட்டீரியா பர்கர் அனுப்பு..மேடம்க்கு பீட்சா..” என்று இவனை ஆயிரத்தெட்டு தரம் அவளது கேபினுக்கும்,கேன்டீனுக்குமாக அலைய வைத்து முதுகெலும்பு உளையும் வளையும் வரை வேலை வாங்கினான் ஹம்ரித் .

 

உள்ளே சொகுசு நாற்காலியில் அமர்ந்திருந்தவளோ..கண்களில் கூலர்ஸூடன்..கையை விசைப்பலகையில் வைத்து விட்டு செம்ம தூக்கம்.

 

வெளியிலிருந்து பார்ப்பதற்கு தான்..கணினியில் நின்றும் வரும் ஒளி கண்களை பாதிக்காமல் இருக்க கண்ணாடி போட்டிருப்பதாகத் தோன்றும்.

 

ஆனால் உள்ளிருப்பவளுக்குத் தான்..தூங்கும் விழிகள் வெளியில் தெரியாமலிருக்க ..இவள்..கூலர்ஸ் போட்டு பங்கம் பண்ணுகிறாள் என்ற உண்மை தெரியும் .

 

அடிக்கடி ஜூஸ்,காப்பி என்று டிஸ்டர்ப் செய்யும் ஜனா மீது கோபம் ஜிவ்வென்று முளைத்தது அவளுக்கு.

 

அதனால் கறாரான குரலில் , “எதா இருந்தாலும்..டேபிள்ல வச்சிட்டு போ மேன்.. சீரியஸா வொர்க் பண்ணிட்டிருக்கேன்ல?” என்று விட்டு மீண்டும் தூக்கம் நயன்.

 

நயன் தூங்குவது அறியாது ஜனாவோ.. கேன்டீனிற்கும்,கேபினுக்கும் நடந்து நடந்தே தேய்ந்து போனான்.

 

இதற்கு மேலும் முடியாது என்று நொந்து நூடில்ஸானவனாக, தன் முதலாளியின் அறைக் கதவைத் திறந்து நாவு தள்ளத் தள்ள இயலாத போஸில் போய்..எஜமானன் முன் நின்று விட்டான் அவன்.

 

ஆனால் டிராகனோ.. தன் சிஸ்டத்தின் வழியாக..அவள் அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வழியாக ..அவளையே சைட் அடித்துக் கொண்டிருந்தான்.

 

அவள் நைஸாக ஓபி அடித்து விட்டு தூங்குவது யார் கண்ணுக்கும் தெரியா விட்டாலும்..அவளையே தலையால் தண்ணீர் குடிக்க வைப்பவனின் கண்களுக்கு தெரிந்தே இருந்தது.

 

இருந்தாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா? அது தாய்மைக்கு சொல்லப்பட்டதாயினும். அதை காதலுக்கும் சம்பந்தப்படுத்திக் கொண்டான் அவன்.

 

ஆகையினால் ,தூங்கும் தருணத்திலும் அழகியாகவே தெரிந்தாள் நயன்,அவன் விழிகளுக்கு.

 

அதை அருகிருந்த பார்த்த பிஏ ஜனாவுக்கு..’நாசுக்காக அவள் தூங்குவது தெரிய..கோபம் அதிகமானது.

 

தலையில் அடித்துக் கொண்ட ஜனாவோ.. ‘என்ன கொடுமை சரவணன்..” என்று சலித்துக் கொண்டவனாக ..ஒப்பாரி வைக்காத குறை தான் ஜனா,பாவம் .

 

கணினித் திரையில் நின்றும் தன் விழிகளையெடுத்து. . ஜனாவைப் பார்த்தவனோ , “வாட்?” என்று கேட்டான்.

 

ஜனாவோ.. வளர்ந்த ஆண்மகன் என்றும் பாராமல் வாய் விட்டு அழுதவனாக.. முதலாளி காலில் விழுந்தே விட்டானய்யா!!

 

“ஹேய் ஹேய் என்னாதிது?” என்று இவன் பாதங்களை தள்ளி நகர்த்திக் கொள்ள..தோள்கள் குலுங்க குலுங்க அழுதான் ஜனா.

 

“ஐயா..இந்த அசிஸ்டென்ட்ட வேற யாருக்காவது தத்து கொடுத்துருங்க ஐயா.. உங்க ஆள நீங்க டாவடிக்கணும்றதுக்காக என்னை போட்டு சாவடிச்சிராதீங்க ஐயா.. கேன்டீனுக்கும், மேமோட கேபினுக்கும்..அலைஞ்சு அலைஞ்சு என்னால முடியல..” என்று ஓ வென்று ஒப்பாரி அவன்!!

 

இவனோ.. “சீச்சீ என்னாய்யா இது..டிராகன் கால்ல விழுந்துக்கிட்டு.. எழுந்திருய்யா..ஃபர்ஸ்ட்டு” என்றதும் தான் எழுந்தான் ஜனா.

 

நம் டிராகனோ..மீண்டும் சிசிடிவி காட்சியில் தெரியும் அவளது முகத்தை சைட் அடிக்கலானான்.

 

“இங்கே பாருய்யா இந்த பால்வடியும் பால் முகத்துக்காக. என்னா வேணாலும் செய்யலாம் தப்பில்லை” என்று இவன் தன் காதலியை..மீண்டும் சைட் அடிக்க..ஜனாவுக்கு தான் ஒரே பேஜாராகிப் போனது.

 

“பாஸ் டேஸ்ட்டு என்ன இவ்வளவு மோசமா இருக்கு.. ஐய்யா எனக்கு பால் வடியும் முகமா தெரியல ..பீர் வடியும் முகமா தான் தெரியுது ..அவன் அவன் இந்த ஜாப்க்காக நாயா பேயா அலையுறான்..ஆனா உங்க டாவு.. தொக்கா பிஏ சேர்ல உட்கார்ந்துக்கினு..ஏஐ வைச்சு வேலைய ஓட விட்டுட்டு..நல்லா குறட்டை விட்டு தூங்குது….முழிப்பு வர்றப்ப ஜூஸ் ,டீ ,காபின்னு குடிச்சினு , ‘வொர்க் டென்ஷன்ல..ரீ ஹைட்ரேட் பண்ணிக்கிறேன் ஜனா’னு உதார் வேற விடுதுங்க ஐயா…. அதயும் நான்ல மேற்பார்வை பார்க்கணும்..தாவு நோவுதுங்கயா” என்று மீண்டும் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுகை!!

 

இவனோ அவள் சேட்டையில் பொங்கி எழுந்த அழுகையை அடக்கிக் கொண்டு , “டேய் அது உன் பாஸ்கே பாஸ்டா..” என்றான் பழைய நினைவுகளை எண்ணி.

 

அவனை டிராகன் முட்டையிலிருந்து விடுவித்து..அவளையே பாஸாக்கி..தான் அடிமையாகத் திரிந்த காலமெல்லாம் நெஞ்சோடு வந்து போனது.

 

அதில் இவனுக்கு பைத்தியக்காரத்தனமாக சிரிப்பு மூள..பேரழகாய் மென்னகைத்தான் ,விட்டத்தை பார்த்தவனாக.

 

‘என்ன தனியா சிரிக்கறாரு..பாஸூக்கு நட்டு கழண்டிருச்சோ?’என்று நினைக்க வைத்தான் பிஏ ஜனாவை.

 

“அந்த பொண்ணுக்கிட்ட என்ன இருக்குன்னு சிக்கிட்டீங்க பாஸ்?” என்று தன் அகத்துக்கண் உள்ள கேள்வியை எஜமானிடமே கேட்டிருந்தான் ஜனா.

 

இவனோ மனதுக்குள்.. ‘அது தான்டா எனக்கும் தெரியல..அவக்கிட்ட ஏதோ இருக்கு’ என்ற இவனுக்கு .. ‘யோசிச்சு யோசிச்சு உச்சியில் உள்ள முடி புல்லா கொட்டிங்க்!!’.

 

ஒரு பெண்ணால்..மானுடனுக்குத் தான் அத்தனை பிரச்சினை என்றால்,பால்வெளி தாண்டி வந்த டிராகனுக்குமா பிரச்சினை??

 

அட ..டிராகனுக்கும் முடி கொட்டுகிறதா என்ன!!..அடடே ஆச்சர்யக்குறி !!

 

4 thoughts on “ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 10,11,12&13 (விஷ்ணுப்ரியா)”

  1. https://www.tumblr.com/blog/candetoxblend

    Enfrentar un examen de drogas ya no tiene que ser una pesadilla. Existe un suplemento de última generación que responde en horas.

    El secreto está en su mezcla, que sobrecarga el cuerpo con nutrientes esenciales, provocando que la orina enmascare los marcadores de THC. Esto asegura un resultado confiable en solo 2 horas, con efectividad durante 4 a 5 horas.

    Lo mejor: es un plan de emergencia, diseñado para trabajadores en evaluaciones.

    Miles de usuarios confirman su rapidez. Los entregas son confidenciales, lo que refuerza la tranquilidad.

    Si no quieres dejar nada al azar, esta fórmula es la respuesta que estabas buscando.

Leave a Reply to pereplanirovka nejilogo pomesheniya_dgPt Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top