ATM Tamil Romantic Novels

காதல் கண்ணாளனே

மணவறையின் நடுவே மஞ்சள் மற்றும் பல வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பந்தல். சங்கீதம் மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது. அனைவரின் கண்களும் மேடையை நோக்கி இருந்தன.

மாப்பிள்ளையாக மேடையில் கேசவன் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் சோர்வும் அமைதியும் கலந்த ஒரு தோற்றம். கேசவன் என்ற அவனது பெயரை, அங்கு இருந்த ஒவ்வொருவரும் மரியாதையுடன் கிசுகிசுத்தார்கள். ஆனால் அந்த மரியாதையின் பின்னால், மறுமணம் என்ற சொல்லின் கனத்த குரல் நிழலாகவே படர்ந்தது

கேசவனின் மடியில், அவன் மகள் மூன்று வயது தியா அமர்ந்திருந்தாள். தந்தையின் நெஞ்சில் சாய்ந்து, சின்ன கை விரலால் அவன் அங்கியை விளையாட்டாகச் சுழற்றிக்கொண்டிருந்தாள். மெல்லிய சிரிப்போடு அவள் முகம் மலர்ந்தது. தந்தையின் அன்பில் அவளுக்கு எந்தக் கவலையும் இல்லாது மகிழ்ச்சி உலகில் உலவிக்கொண்டிருந்தது குழந்தை

மணமகள் மலர்விழி கேசவன் அருகே தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவளுக்குமே இது இரண்டாவது திருமணம். . அதுவும் நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலைனா நான் இந்த உலகத்தை விட்டு போயிடுவேன் என்று அவளை கத்தி முனையில் நிற்க வைத்து அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்திருந்தார் அவள் அன்னை காமாட்சி

அதே நேரம் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துவிட்டோம் என்ற மனநிறைவோடு ஆனத்த கண்ணீருடன் நின்றிருந்தார் மகேஷ்வரி கேசவனின் தாய்

ஆனால், அந்த நிறைவு சுமுகமாக இருக்கவில்லை. கண்களின் ஓரத்தில் சேமித்து வைத்த கண்ணீர் துளிகள் சிதறி விழுந்தன. கடந்த காலத்தின் வலி இன்னும் அவரது உள்ளத்தில் அழிந்துவிடவில்லை.

மாப்பிள்ளையும் பொண்ணும் இருவரும் ஒருவரையொருவர் முகத்தை பார்த்து கொள்ளவில்லை
அவர்களுக்குள் எதுவும் பரிமாறப்படாத அமைதியே, அந்த மணவறையின் சூழ்நிலையை நிரப்பி இருந்தது.

அலங்கரிக்கப்பட்ட மேடையின் முன் கண்ணியமாக அமர்ந்திருந்தாலும், கேசவனின் உள்ளம் மட்டும் கலக்கம் அடைந்திருந்தது. “இது சரியா? தியாவுக்கு ஏற்றதாக இருக்குமா? இந்தப் பெண் என் வாழ்க்கையில் ஏற்றவளாக இருப்பாளா தியாவை கவனித்து கொள்வாளா?” என்ற கேள்விகள் அவன் மனதை கரையான் போல அரித்து கொண்டிருந்தது

தன் நெஞ்சில் சாய்ந்திருந்த தியாவின் குட்டி முகம் விகல்பமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தது. குழந்தையின் சிரிப்பு தான் அவனை இந்த உலகில் வாழ வைத்து கொண்டிருக்கிறது

“மகளுக்காகத்தான் இந்த கல்யாணம் . மகள் தனிமையில் வளரக் கூடாது.” என்று உள்ளம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருந்தது.

அதே சமயம் மலர்விழியின் தலை குனிந்து அமர்ந்திருந்தாலும், உள்ளத்தில் பல எண்ணங்கள் பரபரப்பாக ஓடி கொண்டிருந்தது

இது என்னுடைய வாழ்க்கை தான் ஆனால் இது முழுமையாக என்னுடைய தேர்வு அல்ல. இந்தக் குடும்பத்தில் நான் நுழைந்தால், என்னை ஏற்றுக் கொள்வார்களா? அதுவும் இந்தச் சின்ன குட்டி என்னை அம்மா என்று கூப்பிடுவாளா …” என்று தன் மெல்லிய பார்வையால் தியாவை ஓரக் கண்ணால் பார்த்தாள். தந்தையின் மடியில் சாய்ந்திருந்த அந்தக் குழந்தையின் முகத்தில் இருந்த சிரிப்பு , அவளுக்குள் நிம்மதியை கொடுத்தது

மண பந்தலின் வெளிப்புறம் கூட்டம் சப்தமடைந்தது.

“மறுமணமா இது? சரியா தவறா?” என்று சிலர் கிசுகிசுத்தனர்.

“குழந்தை இருக்கிறதே… அவனுக்குப் பொண்டாட்டி வேண்டாமா?” என்று சிலர் பேசிக்கொண்டனர்.

ஆனால் அந்த கிசுகிசுக்களுக்கு இடையே, சிலர் மனதார இந்தச் பாப்பாவுக்கு தாயாக வந்திருக்க பொண்ணு நல்ல மனசுக்காரி இருக்கணும் என்றனர்

திருமண மேடையில் சடங்குகள் தொடங்கின. பந்தலின் நடுவே, தீபங்களின் ஒளி மணமகளின் முகத்தில் பிரதிபலித்தது. அந்த நேரத்தில் தான் கேசவனின் பார்வை அவளிடம் சென்றது

அவன் இருதயம் அந்த நொடி நின்று விட்டது “இவளா…?!” கேசவன் உள்ளுக்குள் அதிர்ந்தான்.

அவன் முன்னாள் காதலி… ஒருகாலத்தில் அவன் வாழ்வை கனவுகளால் நிரப்பியவள்… அவள்தான் இப்போது அவனுக்கு மணமகளாக முன் அமர்ந்திருந்தாள்.

அவளது கண்களும் ஒரு கணம் அவனை நோக்கியது . அந்தக் கண்களில் இருந்த ஆச்சரியம், மறைக்கப்பட்ட துக்கம் அனைத்தும் ஒரே நேரத்தில் அவனது உள்ளத்தில் புயலை கிளப்பின.

“விதி இப்படி விளையாடுமா?” என்று கேசவனின் மனம் உடைத்து போனது .

புரோஹிதர் மந்திரம் உச்சரித்து கொண்டிருந்தார்.

மகன் மடியில் இருந்த தியாவை சாரதா எடுத்து வைத்து கொண்டார்

“மாப்பிள்ளை, மணமகளின் நெற்றியில் குங்குமத்தை வையுங்கள்…” என்று அவர் கூறியதும், கேசவன் கையில் இருந்த சின்ன தட்டையை எடுத்து மெதுவாக முன்னே வந்தான்.

அந்தச் சிறு தருணத்தில் அவன் கண்களில் எரியும் கோபம் பளிச்சென தெரிந்தது.

“ இன்றோடு உன் வாழ்க்கையில் நான் இல்லை கேசவ், நாம பிரிச்சுடலாம் எனக்கு அப்பா தான் முக்கியம் என்று என்னை துச்சமாக ஒதுக்கி மறுத்தவள்… இன்று என் மனைவியாக என் முன்னே நிற்கிறாளா?”
அவளது நெற்றியை நோக்கி குங்குமத்தை வைக்கும்போது, யாரும் அறியாத அளவுக்கு அவன் உள்ளத்தில் மன கசப்பும் கோபமும் அவள் மீது ஈட்டி போல பாய்ந்தன.

அவளோ அவன் வைத்த குங்குமத்தை ஏற்றுக்கொண்டு கண்களை மூடி திறந்து , தலையை சற்று குனிந்துகொண்டாள். அந்த தருணத்தில் அவளது மூச்சு காற்று நெஞ்சை அடைத்தது

சாரதா மட்டும், மகனின் முகத்தில் தெரிந்த அந்தக் கோபத்தை அவதானித்து விட்டார்
.
“இந்தக் கல்யாணம் மகனுக்கு நிம்மதியைக் கொடுக்குமா ? அல்லது பழைய காயங்களை இன்னும் ஆழமாக்குமா?” என்ற பயம் அவரது உள்ளத்தில் கடல் அலை போல அலைபாய்ந்தது.

மலர்விழியின் நினைவுகள் பத்து வருடங்கள் பின்திரும்பின.

தன்னை கேசவனிடமிருந்து பிரிக்க வைத்த சூழ்நிலை தன் குடும்பத்தின் அழுத்தம், அப்பாவின் கடுமையான எதிர்ப்பு… அந்தக் நேரத்தில் அவளை வாயடைத்துப் போய் கையறுபட்ட நிலையில் நிற்க வைத்து விட்டார்கள்

என் அப்பா தான் எல்லாம்னு நெனச்சேன்… கேசவனோட காதலை விடக் குடும்பத்தையே நான் பெரியதாக நினைத்தேன் அதனால அவன் மனசை காயப்படுத்தினேன். இன்று அந்தக் காயம் இன்னும் அவன் உள்ளத்தில் பசை போல ஒட்டி வைத்து இருக்கிறானே! அவன் முகத்தைக் காணவே தெள்ள தெளிவாக தெரிந்தது .. அவன் பார்வை… அவன் சுவாசம்… அவனுக்கு நான் செய்த துரோகம் இன்னும் அவன் மனது தன் மீது எரிச்சலா இருப்பதாய் அப்பட்டமாக காட்டியது.

கண்களை சற்றே மூடிக்கொண்டாள். கண்ணீர் வழியாமலே, மனதில் வேண்டிக்கொண்டாள்:
“கேசவா… நான் தவறு செய்ததுக்கு என்னை மன்னிச்சிரு. இந்த திருமணத்துக்குப் பிறகு, நான் உனக்காகவும், உன் மகளுக்காகவும், ஒரு நல்ல மனைவியாகவும், தாயாகவும் இருப்பேன். ஆனா, உன் கோபம் குறையுமா? உன் மனசு என்னை ஏற்றுக்கொள்ளுமா ?” அவள் தலையை இன்னும் கீழே குனிந்துகொண்டு தன் மனதில் பல கேள்விகளை கேட்டு கொண்டிருந்தாள். அந்தக் தலை குனிவு, நாணம் காரணமல்ல மனக் குற்ற உணர்ச்சியால்தான்

திருமண சடங்குகள் முடிந்தன. வீட்டுக்குள் வந்து மணமக்கள் அறையில் அமர்ந்திருந்தனர். வெளியே உறவினர்களின் சிரிப்பும் கூச்சலும் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அந்த அறைக்குள் ஒரு கனமான அமைதிதான் நிலவியது.

மலர்விழியின் உள்ளத்தில் ஓடிய கலக்கம், குற்ற உணர்ச்சி, பயம் அவளை அமைதியாக அமர விடவில்லை. கேசவனோ சாளரத்தருகில் நின்று, வெளியில் இரவின் இருண்ட வானத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.

சில நொடிகள் அந்த அறையில் எந்தச் சப்தமும் இல்லை.

“விதி எப்படி விளையாடுதுனு பாரு மலர்விழி … ஒருகாலத்தில் என்னை நீ வேணாம்னு விலகி போனவ இப்போ என் வாழ்க்கைக்குள் மனைவியா வந்திருக்க” என்று கேசவனின் குரல் சற்றே கடினமாக வந்தது

“கேசவா… நான் உன்னைக் காயப்படுத்தினது உண்மை. ஆனா, அது என் மனசார இல்ல… சூழ்நிலையால். அந்த நேரத்தில் என் குடும்பத்தை எதிர்க்கக்கூடிய தைரியம் எனக்கு இல்லை.” என்றாள் கண்ணில் வடிந்த நீரை துடைத்து கொண்டு

கேசவன் மெல்ல அவளை நோக்கி திரும்பினான். அவன் கண்களில் இன்னும் அந்தக் கசப்பும் எரிச்சலும் இருந்தது.

“சூழ்நிலையா? அப்படியென்றால் என்னோட காதல் உனக்குச் சூழ்நிலை முன்னாடி ஒன்றுமில்லைன்னு அர்த்தமா?” சொல்லுடி என்னை நம்ப வைத்து கழுத்து அறுத்து போட்டு என்னை துடிக்க வைச்சு போனவ மறுபடியும் எப்படி என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன” என்று அவளது தோளை அழுத்தமாக பிடித்தான்

அவள் விரல்கள் நடுங்கின. அவள் அழுத்தம் கொடுத்த வழியை பொறுத்து கொண்டு
“உண்மையை சொல்றேன் கேசவா… என் அப்பா தான் என் உலகம்னு நெனச்சேன். நான் உன்னை விட்டுப் போனது தவறு உன் வாழ்நாளில் பெரிய காயத்தை உண்டு பண்ணி போயிருந்தேன் . நீ என்னை மன்னிக்க மாட்டேன் என்று எனக்குத் தெரியும். உன்னை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் எனக்கு சத்தியமா தெரியாது. உன் குழந்தைக்கு தாயாக இருக்கணும் என்று தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்”

கேசவன் சில நொடிகள் அமைதியாக மலர்விழியை பார்த்தான். அந்த அமைதியிலே அவன் உள்ளத்தில் புயல் போல் நினைவுகள் எழுந்தன.

“நீ ஈஸியா மன்னிப்பு கேட்டுட்ட . ஆனா நீ உண்டு பண்ணிய காயம் இன்னும் ஆறாம வடுவா என் நெஞ்சுக்குள்ள இருக்குடி .. உன்னை நான் ஒரு காலமும் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டேன்டி . இந்த கல்யாணம் என் மக தியாவுக்காக மட்டும் தான் அவளுக்குத் தாயாக மட்டும் இரு .. என் பக்கம் வந்திடாதே நான் மனுசனா இருக்க மாட்டேன் ஜாக்கிரதை ” என்று கோபத்தை கக்கினான்

17 thoughts on “காதல் கண்ணாளனே”

  1. It¦s actually a nice and helpful piece of info. I am glad that you just shared this helpful information with us. Please keep us up to date like this. Thank you for sharing.

  2. Hello, i believe that i saw you visited my site thus i got here to “return the favor”.I’m attempting to to find things to enhance my website!I guess its ok to make use of a few of your ideas!!

  3. I have not checked in here for a while as I thought it was getting boring, but the last few posts are good quality so I guess I will add you back to my daily bloglist. You deserve it my friend 🙂

  4. Please let me know if you’re looking for a article author for your site. You have some really great posts and I think I would be a good asset. If you ever want to take some of the load off, I’d absolutely love to write some articles for your blog in exchange for a link back to mine. Please shoot me an email if interested. Kudos!

  5. I have to show my appreciation for your kindness supporting men who should have guidance on this one idea. Your very own dedication to passing the solution all over turned out to be rather important and has all the time made guys like me to achieve their dreams. Your amazing helpful guide denotes this much to me and further more to my office workers. With thanks; from all of us.

  6. Once I originally commented I clicked the -Notify me when new feedback are added- checkbox and now every time a remark is added I get four emails with the same comment. Is there any approach you’ll be able to remove me from that service? Thanks!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top