காதல் கண்ணாளனே
uuyyyy
குளித்து முடித்து நெற்றியில் வீபூதியை பூசிக்கொண்டு நின்ற மகேஷ்வரியின் முன்னே சென்ற குட்டி பெண் தியாவோ “குட் மார்னிங் பாட்டி இன்னிக்கு நான் உங்களுக்கு முன்ன எழுந்துட்டேன் பார்த்திங்களா!” என்று துள்ளி குதித்தது மகிழ்ச்சியில். தியாவை வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிளே ஸ்கூலில் சேர்த்துவிட்டிருந்தான் கேசவன். காலையில் குட்டி வாண்டுவை எழுப்புவதற்குள் கேசவனும் மகேஷ்வரியும் தலை கீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டும்.. அப்படியே அவள் எழுந்து உட்கார்ந்தாலும் அவளை குளிக்க வைப்பதற்கும், சாப்பிட வைப்பதற்கும் பிறந்த
கதவு திறந்து விட்டது மலர்விழிதான். கதவின் வாசலில் தள்ளாடி நின்ற கேசவனை பார்த்ததும், அவளது மார்பு கூட்டுக்குள் இருந்த இதயம் சுக்கு நூறாய் உடைந்து போனதை போல வலி உண்டானது . அவள் கை விரல்கள் நடுங்கியது . அவன் கண்கள் சிவந்து, தலைமுடி கலைந்து . மதுவின் அறிந்திருந்த மதுவின் வாசம் அவனது நாசியிலிருந்து வெளி வந்தது. மலர்விழி அசையாமல் நின்றாள். அவளது கண்களில் மெல்ல மெல்ல கண்ணீர் வழிந்தது. அவள் முன்னே தள்ளாடி நின்றவன்
“கேசவா” என்று அவன் உயிர் நண்பன் பாலாவின் குரல் தன் அறைக்கு வெளியே கேட்டதும் “வரேன் இருடா” கால் வழிய விட்டிருந்த பட்டு வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வெளியே வந்தான். அவன் பின்னே மெதுவாய் நடந்து வந்தாள் மலர்விழி “வாடா என் உயிர் நண்பா! நீதானே இந்த சீமாட்டியை தேடி பிடிச்சு எனக்கு பொண்டாட்டி ஆக்கியிருக்க” என்ற நெருப்பு குமிழாய் விழுந்தான் “அடேய் இப்ப எதுக்கு வானத்துக்கும் பூமிக்குமாய் தாம் தூம்னு குதிக்குற. ஆமான்டா நான்தான் மலர்விழியை தேடிப்பிடிச்சு
மணவறையின் நடுவே மஞ்சள் மற்றும் பல வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பந்தல். சங்கீதம் மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது. அனைவரின் கண்களும் மேடையை நோக்கி இருந்தன. மாப்பிள்ளையாக மேடையில் கேசவன் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் சோர்வும் அமைதியும் கலந்த ஒரு தோற்றம். கேசவன் என்ற அவனது பெயரை, அங்கு இருந்த ஒவ்வொருவரும் மரியாதையுடன் கிசுகிசுத்தார்கள். ஆனால் அந்த மரியாதையின் பின்னால், மறுமணம் என்ற சொல்லின் கனத்த குரல் நிழலாகவே படர்ந்தது கேசவனின் மடியில், அவன் மகள் மூன்று